லித்தர் பள்ளத்தாக்கு33°46′35″N 75°12′48″E / 33.77639°N 75.21333°E
லித்தர் பள்ளத்தாக்கு (Lidder Valley or Liddar Valley) [2] இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், அனந்தநாக் மாவட்டத்தில், பகல்கம் வருவாய் வட்டத்தில் இமயமலையில் அமைந்துள்ள சிறு நகரம்.[3] லித்தர் பள்ளத்தாக்கில் லித்தர் ஆறு பாய்கிறது.[4]அனந்தநாக் நகரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், காஷ்மீர் நகரத்திலிருந்து தென் கிழக்கில் 62 கிலோ மீட்டர் தொலைவிலும் லித்தர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. லித்தர் சமவெளி இமயமலையில் 40 கிலோ மீட்டர் நீளமும், ஐந்து கிலோ மீட்டர் அகலம் கொண்ட லித்தர் பள்ளத்தாக்கில் மலையருவிகள் அதிகம் கொண்டது.[5] [6] [7][8] லித்தர் பள்ளத்தாக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். அமர்நாத் குகைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் லித்தர் பள்ளத்தாக்க்கில் உள்ள, சந்தன்வாரி, பிசு டாப், சேஷ்நாக் மற்றும் பஞ்சதரணி வழியாக பயணிக்க வேண்டும்.[9] ![]() சூழியல்இப்பள்ளத்தாக்கில் லித்தர் ஆறும், ஓடைகளும், பனி படர்ந்த கொடுமுடிகளும் கொண்டுள்ளது. லித்தர் பள்ளத்தாக்கில் இமாலயக் கருங்கரடி, பழுப்புக் கரடி, பனிச் சிறுத்தை, பனி மான்கள் காணப்படுகிறது. லித்தர் பள்ளத்தாக்கில் தாட்சிகாம் தேசியப் பூங்கா அமைந்துள்ளது (Dachigam National Park). தேவதாரு மரங்கள் அதிகம் கொண்டுள்ளது.[10] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia