லிமெரிக்லிமெரிக் (Limerick) என்பது ஆங்கில மொழியில் உள்ள ஒரு பாவகை ஆகும்[1]. புதினம், குறும்புதினம், சிறுகதை, புதுக்கவிதை, ஐக்கூ போல லிமெரிக் என்பது ஒரு புதிய வகை கவிதை ஆகும். 18ஆம் நூற்றாண்டில் லிமெரிக் அறிமுகமாகி செல்வாக்குப் பெறத் தொடங்கியது.[2][3] பெயர்க் காரணம்அயர்லாந்து நாட்டில் முன்சுடர் மாநிலத்தில் லிமெரிக் என்பது ஒரு சிறு நகரம். 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு போர் முடிந்து இந்த நகரத்திற்குத் திரும்பிய படை வீரர்கள் கூடி மகிழ்ந்து பாடுவார்கள். ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு வீரர் பாடுவர். ஒருவர் ஒரு அடியைப் பாடியதும் மற்றொருவர் தொடர்ந்து பாடுவார். அதில் இறுதிச் சொல் ஒலி ஒற்றுமையுடன் இருக்கும். லிமெரிக் என்னும் ஊரில் தோன்றியதால் இந்தக் கவிதைக்கு லிமெரிக் எனப் பெயர் ஏற்பட்டது[4][5]. லிமெரிக்கின் அமைப்புஇந்தக் கவிதை ஐந்து அடிகளைக் கொண்டிருக்கும். முதலடியிலும் இரண்டாம் அடியிலும் கடைசி அடியிலும் உள்ள கடைசி சொற்கள் தம்முள் ஒலி ஒற்றுமை கொண்டிருக்கும். சில வினாடிகளில் எளிதாக மனப்பாடம் ஆகிவிடும் தன்மையும் ஓசை இனிமையும் கொண்டது. மழலையர் பாடல்கள் போல் இருக்கும். நகைச்சுவை கேலி, கிண்டல், பரிகசித்தல், ஆண் பெண் உறவுகள் ஆகியன நிறைந்திருக்கும். மனித வாழ்க்கையின் தத்துவங்களும் லிமெரிக் பாடல்களில் அண்மைக் காலத்தில் இடம் பெறுகின்றன. [6] எட்வர்ட் லியர் என்பவர் லிமெரிக் பாடல்களைப் படைத்த முதல் கவிஞராகக் கருதப்படுகிறார். இவரைத் தொடர்ந்து பல ஆங்கிலக் கவிஞர்கள் லிமெரிக் பாடல்களைப் பாடியுள்ளனர். உசாத்துணை
வெளியிணைப்புகள்
Limerick bibliographies:
|
Portal di Ensiklopedia Dunia