லிம்பு மக்கள்
லிம்பு அல்லது யக்துங் (Limbu people) என்பவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலையின் லிம்புவன் பகுதிக்கு சொந்தமான உள்ளூர் மற்றும் பூர்வகுடி மக்கள் ஆவர். இந்தப் பகுதி இன்று நவீன கிழக்கு நேபாளம், வடக்கு சிக்கிம் மற்றும் மேற்கு பூட்டான் ஆகியற்றில் அடங்கியுள்ளது.</ref>[3][4][5][6] லிம்பு என்பதின் அசல் பெயர் யக்துங் என்பாதாகும். லிம்பு ஆண்கள் மற்றும் பெண்கள் "யக்தும்மா" அல்லது "யக்துங்மா" என்று அழைக்கப்படுகின்றனர். பண்டைய நூல்களில், "யக்துங்" அல்லது "யகுதம்" என்பது சீனாவில் இருந்த ஒரு மக்கள் வகைப்பாடு ஆகும், மேலும் அதன் பொருள் ‘யக்ஷா’ - ‘வென்றவர்’ என சிலர் புரிந்து கொள்கின்றனர்.[7] ஆனால் லிம்பு மொழியில் இது “மலைகளின் நாயகர்கள்” (யக் - மலை, துங் அல்லது தம் - நாயகர்கள் அல்லது வலிமைமிக்க வீரர்கள்) என்று பொருள்படும், இவர்கள் பண்டைய கிரட்டாஸ் மக்களுடன் தொடர்பு கொண்டவர்கள்.[8][9][10] ஷா கிங்ஸ் லிம்பூ என்பது கிராமத் தலைவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்ட ஒரு சிறப்புப் பெயராகும். சுபா என்ற சொல் பழங்கால யாக்தங் சொற்களல்ல, ஆனால் இப்போது அவை கிட்டத்தட்ட ஒன்றுக்கொன்று மாற்றத்தக்கவை.[11] அவர்களது வரலாறு போங்சோலி என்றும் வனிசாவலி என்றும் அழைக்கப்படும் ஒரு புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது, அதில் பெரும்பாலானவை பழமையான குடும்பங்களின் அமைப்பைப் பற்றிச் சொல்கிறது.[12] நூற்றுக்கணக்கான லிம்பு வாரிசுகளும் பழங்குடியினரும் உள்ளனர். ஒவ்வொரு லிம்பு வாரிசுகளின் கீழ் அவர்களின் கோட்பாடு மற்றும் அவர்களின் தோற்றம் ஆகியவற்றை வைத்து வகைப்படுத்தப்படுகிறது.[13][14] மொழி20 ஆம் நூற்றாண்டின் முந்தைய நூற்றாண்டு எழுத்துகளை வைத்திருக்கும் மத்திய இமயமலையின் சில சீன-திபெத்திய மொழிகளில் லிம்புவும் ஒன்று.(ஸ்ப்ரிக் 1959: 590) , (ஸ்ப்ரிக் 1959: 591-592 & எம்: 1-4) உயிர் மற்றும் மெய்ʌ, ɑ, I, u, E, ɑi, o, ɑu, ɛ, ɔ மெய்யெழுத்துகள்: k, kh, G, gh, ŋ, c/ts, ch/tsh, j/dz, jh/dz, T, th, D, dh, n, p, ph, B, bh, m, j, R, L, w, sh, s, h, tr கலாச்சாரம்![]() அவர்களது சொந்த வாழ்க்கையில் பல சடங்குகள் லிம்பஸ் மக்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள். அவர்கள் பரம்பரை பரவலாக இல்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். மாறாக, ஒரு பெண் தன் தாயின் தெய்வங்களை சுவீகரிதுக் கொள்கிறாள், அவள் திருமணம் செய்து கொண்டு கணவன் வீடு வரும்போது, அவள் தன் தெய்வங்களையும் உடன் கொண்டு வருகிறாள். லிம்பு மக்கள் அவர்களது இறந்தவர்களை அடக்கம் செய்த பின்னர், இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை சடங்குகள் செய்வார்கள். இச்சடங்குகளில், இறந்தவர்களின் தலையின் முன் பக்கத்தில் ஒரு நாணயத்தை வைக்கின்றனர். மூக்கையும், காதுகளையும் மூடி, உதடுகளில் மதுவினை ஊற்றுகிறார்கள். வீதிகளை சுத்தப்படுத்த ஒரு சடங்கினை மேற்கொள்கின்றனர். உறவினர்கள், மற்றும் பார்வையாளர்கள் பணம் மற்றும் மதிப்புமிக்க ஒரு பொருளை இறந்த உடலின் மேல் ஒரு பிரசாதம் போல இடுகிறார்கள். இறந்தவரின் மகன்கள் தலை மற்றும் புருவங்களை மழித்துக் கொள்கின்றனர். மரத்தாலான பெட்டியில் வெள்ளை துணி கொண்டு உடலை மூடி புதைக்கின்றனர். இறந்தவரின் பாலினத்தை பொறுத்து துக்க காலத்தின் நீளம் மாறுபடும். ஆடை மற்றும் ஆபரணங்கள்லிம்பஸின் பாரம்பரிய உடை மெக்லி மற்றும் டாகா என்பதாகும். மாங்க்சே என்ற ஒரு நிகழ்ச்சியில் (கடவுள் + வழிபாடு), யக்தூங் மக்கள் வெள்ளி நிறத்தில் மெக்லி மற்றும் டாகாவை அணிந்துகொள்கிறார்கள், அது தூய்மையை அடையாளப்படுத்துகிறது. பாரம்பரிய துணியில் வடிவியல் வடிவங்களில் கைத்தறியில் நெசவு செய்தவையே டாக்கா என்பதாகும்.[15] லிம்பு ஆண் எப்போதும் ஒரு தாக்கா தொப்பி மற்றும் ஸ்கார்ஃப் அணிதிருப்பார்கள். லிம்பு பெண்கள் தாக்கா புடவை, மெக்லி, ரவிக்கை மற்றும் மேல்துண்டு அணிந்து காணப்படுவார்கள் பழமையான நாட்களில், லிம்பஸ் மக்கள் பட்டுப் நெசவில் திறமையானவர்களாக இருந்துள்ளனர். கிரட்டிஸ்கள் பட்டு வர்த்தகர்களாகவும் அறியப்பட்டனர். ஜே. பி. சுபா மற்றும் இமன் ஜின் செம்ஜாங் ஆகியோரின் கூற்றுப்படி, க்ரிட் என்பது கேரடா (பட்டுப் புழு)என்ற வடிவத்திலிருந்து வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. பெண் ஆடைகள் மற்றும் ஆபரணம்
லிம்பு பெண்கள் தங்க நகைகளை உபயோகிக்கவும், அன்றாடம் அவர்கள் பெருமையுடன் அனியவும் செய்கின்றனர். தங்கம் தவிர வெள்ளி, கண்ணாடி கற்கள், பவளம் / அம்பர்), மற்றும் ரத்தின ஆபரணங்களையும் அணிவர். பெரும்பாலான லிம்பு ஆபரணங்கள் இயற்கை வடிவானவை. இப்போதெல்லாம், பாரம்பரிய லிம்பு ஆபரணங்களை பல்வேறு இன குழுக்களால் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் நேபாள் போன்ற பகுதிகளில் இந்த வகைகளை காணலாம். நேபாளி ந்கைகள் என்று குறிப்பிட்டு வெவ்வேறு நகைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கொடிலிம்பு மக்கள் தங்களுக்கென ஒரு கொடியை கொண்டுள்ளனர் .நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்துடன் காணப்படும் இதில் நீல நிறம் நீர் மற்றும் வானத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வெள்ளை சமாதானத்தை பிரதிபலிக்கிறது, மற்றும் சிவப்பு லிம்பு மக்கள் பூமி மற்றும் சுத்தமான இரத்தத்தை குறிக்கிறது. லிம்பு மக்களின் தினசரி வாழ்க்கையிலும், பல்வேறு ஆன்மீக நடைமுறைகளிலும் சூரியனை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. கோர்கா படையெடுப்பு சமயத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் கொடி பயன்படுத்துவது முடிவுக்கு வந்தது. வாழ்க்கைலிம்பஸ் மக்கள் மரபுவழியாக விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். அரிசி மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களை முதன்மையாக விவசாயம் செய்கின்றனர். விவசாய நிலங்கள் ஏராளமாக இருந்தாலும், போதிய தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் உற்பத்தித்திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. பயிர்கள் வளர்க்க முடியாததால் இப்பகுதியில் உணவிற்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். லிம்பு பெண்கள் மூங்கிலைக் கொண்டு பாரம்பரியமான டாக்கா துணியை நெய்கின்றனர்.[16] பாரம்பரிய உணவுமது லிம்பு கலாச்சாரத்தில் மது மிகவும் முக்கியமானது.[17] லிம்பஸ் வழக்கமாக மாட்டு இறைச்சி, ஆட்டுக்குட்டி, ஆட்டுக்கறி, கோழி, பன்றி இறைச்சி, மீன் மற்றும் வீட்டு வளர்ப்பு கால்நடையிலிருந்து அவர்களின் பாரம்பரிய உணவு தயாரிக்கப்படுகிறது. கால்நடைகள் மத நோக்கத்திற்காக வளர்க்கப்படுகின்றன. பொதுவாக, அவர்கள் ஊறுகாய் கொண்டு தால் பாட் தர்காரி என்ற உணவை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தால் (பீன்ஸ் சூப்), பாட் (அரிசி), தர்க்காரி (கறி) இறைச்சி மற்றும் பல்வேறு வகையான அக்கேர் (ஊறுகாய்). லிம்பு மக்கள் எப்போதும் இறைச்சியை தயார் செய்ய குக்கரியை பயன்படுத்தி புகழ்பெற்ற லிம்பூ உணவு வகைகளை தயாரிக்கின்றனர். ![]() மேலும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia