லீல்லீல் (பிரெஞ்சு: Lille) பிரான்சில் உள்ள ஒரு நகரம். இது பிரான்சின் வடபகுதியில் தேல் ஆற்றங்கரையோரமாக பெல்ஜிய எல்லையருகே அமைந்துள்ளது. இது பிரான்சின் நான்காவது பெரிய நகரமாகும். 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி லீல் அதன் நிர்வாக வரம்புகளுக்குள் 232,741 மக்கட் தொகையைக் கொண்டிருந்தது.[1][2] உலகப் போர்களில்முதலாம் உலகப் போர்1914 அக்டோபர் 13 ஆம் தேதி ஜேர்மனியர்களால் லீல் ஆக்கிரமிப்பு தொடங்கியது. பத்து நாள் முற்றுகை மற்றும் கடுமையான எறிகணை தாக்குதலுக்குப் பிறகு 882 அடுக்குமாடிகள், அலுவகத் தொகுதிகள் மற்றும் 1,500 வீடுகளை அழிக்கப்பட்டன. அக்டோபர் மாத இறுதியில் இந்த நகரம் செருமன் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. லீல் போர்க்களத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் இருந்ததால் லீல் காயமடைந்த வீரர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்குமான ஒரு இடமாகவும், படையினரின் தளர்வு மற்றும் பொழுதுபோக்குகளுக்கான இடமாகவும் மாறியது.[3] லீல் நகரம் 1718 அக்டோபர் 17 அன்று நேச நாடுகளால் விடுவிக்கப்பட்டது பிரித்தானிய தளபதியான சர் வில்லியம் பேர்ட்வுட் மற்றும் அவரது படைகளால் மக்களால் வரவேற்கப்பட்டனர். தளபதி அந்த ஆண்டு அக்டோபர் 28 அன்று லீல் நகரத்தின் கௌரவ குடிமகனாக நியமிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர்லீல் பிரான்ஸ் போரின்போது பல நாட்கள் செருமனிய படைகளால் முற்றுகையிடப்பட்டது. லீல் குடிமக்கள் நகரத்தை விட்டு பெருமளவில் வெளியேறத் தொடங்கினர். 1940 ஆம் ஆண்டு மே 31 அன்று லீல் செருமானியர்களால் கைப்பற்றப்பட்டது. பிரஸ்ஸல்ஸில் செருமனிய தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்த மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பிரித்தானிய, கனேடிய மற்றும் போலந்து படைகளால் ந1944 செப்டம்பர் 1-5 முதல் ஐந்து நாட்களில் விடுவிக்கப்பட்டன. செப்டம்பர் 3 ஆம் தேதி பிரஸ்ஸல்ஸில் இருந்து புறப்பட்ட ஆங்கிலேயருக்கு பயந்த செருமானிய படைகள் லீல் நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர். 1948 ஆம் ஆண்டளவில் லீல் இயல்பு நிலைக்கு திரும்பியது.[4] காலநிலைலீல் நகரம் மிதமான சமுத்திர காலநிலையை கொண்டதாக விவரிக்கப்படுகின்றது. பொதுவாக கோடைகாலங்களின் சராசரி வெப்பநிலை அதிகமாகாது. ஆனால் குளிர்காலங்களில் உறைபனி வெப்பநிலைக்கும் கீழே வெப்பநிலை குறையக்கூடும். ஆனால் குளிர்கால சராசரி வெப்பநிலை உறைபனி வெப்பநிலை குறிக்கு சற்று மேலே காணப்படும். ஆண்டு முழுவதும் மழைவீழ்ச்சி ஏராளமாக உள்ளது. சுற்றுச்சூழல்லில் நகரம் வளி மாசுபாடால் அறியப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டின் ஆய்வொன்றில் லீல் நகரில் ஆண்டுக்கு 1,700 மரணங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. லீல் 2018 ஆம் ஆண்டில் பிரான்சின் அதிக வளி மாசபாடு கொண்ட நகராகும்.[5] பொருளாதாரம்லீல் முந்தைய காலத்தில் உணவுத் துறை, மற்றும் நெசவுத் தொழிலின் மையமாகும். தற்போது இது நகரங்களின் வலையமைப்பைப் போல கட்டப்பட்டுள்ளது. லீல், ரூபாய்க்ஸ் , டூர்கோயிங் மற்றும் வில்லெனுவே டி ஆஸ்க் ஆகிய நகரங்கள் இணைந்து மெட்ரோபோல் யூரோபீன் டி லில்லேவை உருவாக்குகிறது. இது பிரான்சின் 4 வது பெரிய நகர்ப்புற கூட்டமைப்பாகும். இந்த நகர்புற கூட்டமைப்பு 2016 ஆம் ஆண்டில் 1.15 மில்லியனுக்கும் அதிகமான மக்கட்தொகையை கொண்டிருந்தது. கல்விலீல் பெருநகர்ப் பகுதி 110,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பிரான்சின் சிறந்த மாணவர் நகரங்களில் ஒன்றாகும். ஊடகங்களும், விளையாட்டுகளும்உள்ளூர் செய்தித்தாள்களில் நோர்ட் க்ளேர் மற்றும் லா வோக்ஸ் டு நோர்ட் என்பன அடங்கும் . பிரான்சின் தேசிய பொது தொலைக்காட்சி நெட்வொர்க்கில் உள்ளூர் பகுதியை மையமாகக் கொண்ட பிரான்ஸ் 3 நோர்ட்-பாஸ்-டி-கலாய்ஸ் என்ற தொலைக்காட்சி அலைவரிசை செயற்படுகின்றது. நகரத்தின் மிகப் பெரிய கால்பந்து கழகமான லில் ஓ.எஸ்.சி தற்போது பிரான்சில் கால்பந்தின் மிக உயர்ந்த மட்டமான லிகு 1 இல் விளையாடுகிறது. இந்த கழகம் எட்டு பெரிய தேசிய கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் மற்றும் யுஇஎஃப்ஏ யூரோபா லீக்கில் தொடர்ந்து இடம்பெறுகிறது. லீலியின் ஸ்டேட் பியர்-மவ்ராய் மைதானத்தில் பிபா (FIBA) யூரோ பாஸ்கெட் 2015 இன் இறுதி கட்டங்களுக்கான விளையாட்டு நடைப்பெற்றது. இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia