லூயிசு அமிலங்களும் காரங்களும்லூயிசு அமிலம் (Lewis acid) என்பது ஒரு வேதியியல் இனம் ஆகும். இது லூயிசு காரத்துடன் வினை புரிந்து லுாயிஸ் கூட்டுப்பொருளைத் தருகிறது. லூயிசு காரம் அல்லது வேறு இனங்கள் பகிரப்படாத இலத்திரன் இணையை லுாயிசு அமிலத்திற்கு வழங்கி லுாயிஸ் கூட்டுப்பொருளை உருவாக்குகிறது.[1] உதாரணமாக OH− மற்றும் NH3 ஆகியவை லுாயிஸ் அமிலமாகும். ஏனெனில் இவை தனித்த இணை இலத்திரன்களை வழங்குகின்றன. உதாரணமாக Me3B மற்றும் NH3 இரண்டும் வினை புரிந்து Me3BNH3 உருவாகும் வினையில் Me3B லுாயிஸ் அமிலமாகவும் NH3 லுாயிஸ் காரமாகவும் செயல்படுகிறது. Me3BNH3 என்பது ஒரு லுாயிஸ் கூட்டுப்பொருளாகும். எளிய லுாயிஸ் அமிலம்போரான் ட்ரைஅலைடு, ஆர்கனோபோரான்கள் ஆகியவை எளிய லுாயிசு அமிலத்திற்கு உதாரணமாக காட்டப்டுகிறது.
BF4−, BF3OMe2 ஆகியன போரான் ட்ரைஅலைடின் லூயிசு காரக் கூட்டுப்பொருட்கள் ஆகும். கூட்டு லுாயிஸ் அமிலம்இதற்கு உதாரணம் அலுமினியம் ட்ரைஅலைடுகள் ஆகும்.[2] பல உலோக அணைவுச்சேர்மங்கள் லுாயிசு அமிலங்களாக செயல்படுகின்றன.
பயன்கள்லூயிசு அமிலம் பிரீடல்-கிராப்ட்சு வினையில் பங்குபெறுகின்றது.[3]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia