லூ சுன்
லு ஷுந் அல்லது லு ஹ்சுன் (Lu Xun, எளிய சீனம்: 鲁迅; மரபுவழிச் சீனம்: 魯迅; பின்யின்: Lǔ Xùn அல்லது Lu Hsün) என்ற புனைப்பெயருடன் எழுதிய சௌ ஷுறேன் (Zhou Shuren), செப்டம்பர் 25, 1881 – அக்டோபர் 19, 1936) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சீன எழுத்தாளர் ஆவார். நவீன சீன இலக்கியத்தை நிறுவியவராக கருதப்பட்ட இவர், பைஹு (வட்டார மொழி) மற்றும் மரபு சீன மொழியில் எழுதினார் . இவர் சிறுகதை எழுத்தாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் கவிஞர் ஆவார். மே நான்கு இயக்கத்துக்கு பின் லு ஷுநிந் எழுத்துக்களால் ஒரு மாப்பெரும் தாக்கம் ஏற்பட்ட காரணத்தால், 1949-ஆம் ஆண்டுக்கு பின் கம்யூனிச ஆட்சி அவரை கௌரவபடுத்தியது. லு ஷுநிந் படைப்புகளை தன் வாழ்நாள் முழுதும் ரசித்தவர் மா சே துங். இருப்பினும், சீன கம்யூனிச கட்சியில் லு ஷுந் சேரவில்லை. யாங் ஹ்ஸியெந்-யி மற்றும் கிளாடிஸ் யாங் மொழிபெயர்த்த "லு ஹ்சுனின் கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை" போன்ற மொழிபெயர்ப்புகளால் லு ஷுநிந் படைப்புகள் பல ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகம் ஆனது. ஆரம்ப வாழ்க்கைசெஜியாங் மாகாணத்தின் ஷாவசிங் என்ற ஊரில் பிறந்த லு ஹ்சுன், முதலில் சௌ ஸ்ஹந்ஸௌ என்று பெயரிடப்பட்டு ,பின்பு சௌ யுசை என்று மாற்றப்பட்டு , கடைசியாக ஷுறேன்(அர்த்தம்:கல்வி கற்றவர்) என்று தாமாகவே பெயர் சூட்டி கொண்டார். காச நோயால் ஏற்பட்ட தன் தந்தையின் அகால மரணம் , லு ஷுநை மருத்துவம் படிக்க வற்புறுத்தியது.பாரம்பரிய சீன மருத்துவத்தின் மேல் உள்ள அவநம்பிக்கையால் (தன் தந்தையை குணப்படுத்த முடியாத) , அவர் மேற்கத்திய மருத்துவம் படிக்க ஜப்பானில்(1904-ஆம் ஆண்டு) உள்ள சென்டாய் என்ற இடத்தில் அமைந்துள்ள சென்டாய் மருத்துவ கல்லூரி(தற்பொழுது தொஹொகு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளி)க்கு சென்றார். ![]() படிப்புஜியான்க்ணன் கடற்படை கல்லூரியில் (1898-99) பயின்ற லு ஹ்சுன்,பின்பு ஜியான்க்ணன் ராணுவ கல்லூரியின் , சுரங்கம் மற்றும் ரயில்வே பள்ளிக்கு மாற்றப்பட்டார். இங்கு தான் மேற்கத்திய மொழிகளின் அறிமுகம் லு ஹ்சுன்க்கு கிட்டியது; சில மொழிமாற்றப்பட்ட புத்தகங்கள் படித்தார்,சில ஜெர்மானிய மற்றும் ஆங்கில புத்தகங்கள். 1902-ஆம் ஆண்டு க்விந்க் அரசின் ஊக்கத்தொகையில் ஜப்பான் சென்றார்.ஜப்பானிய பல்கலைகழகத்துக்கு சேரும் சீன மாணவர்களுக்கான மொழி கல்வி அளிக்கும் கொபுன் ககுஇன் என்ற இடத்தில் சேர்ந்தார். இங்கு தான் அவரது பழைய கட்டுரைகள் எழுதப்பட்டது. 1903-ஆம் ஆண்டு லு வீடு திரும்பினார். 22 வயதே ஆன லு, சு என்னும் செல்வந்த பெண்ணுடன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு வற்புறுத்தப்பட்டார். படிப்பறிவில்லாத சு-வை தன தாய் தேர்ந்தெடுத்தார். லு ஹ்சுன் தன திருமணத்தை என்றும் ஆதரிக்காதபோழுதும், அவளின் பொருட் தேவையை தன வாழ்நாள் முழுதும் பூர்த்தி செய்தார். கடைசி நாட்கள் மற்றும் மரணம்1936-ஆம் ஆண்டு காச நோயால் லு ஹ்சுனின் நுரையீரல் பெரிதும் பழுதானது. அவ்வருடம் மார்ச் மாதம் அவரை கடும் காய்ச்சல் தாக்கியது. ஜூநிளிர்ந்து ஆகஸ்ட் வரை அவர் மிகவும் உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டார். இதிலிருந்து மீண்டு மரணம மற்றும் இதுவும் கூட தான் வாழ்க்கை போன்ற சாவை பற்றிய கட்டுரைகள் எழுதினார் . அக்டோபர் பதினெட்டாம் தேதி , விடியற்காலை மூன்றரை மணிக்கு கடும் மூச்சு திணறலால் விழித்து கொண்டார். மருத்துவ சிகிச்சை பின்பும், அடுத்த நாள் காலை ஐந்து மணியளவில் அவரது நாடி துடிப்பு அடங்கியது,[1]. அவரது சாம்பல் லு ஹ்சுன் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஹையிங் என்றொரு மகன் . படைப்புகள்சொற்பொழிவுநோரா தன் வீட்டை விட்டு சென்றப்பின் என்னவாகிறது? டிசம்பர் 26,1923 அன்று பெயிஜிங் பெண்கள் கல்லூரியில் வழங்கப்பட்ட பேச்சு. கதைகள்
கட்டுரைகள்
தொகுப்புகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: லூ சுன்
மொழிபெயர்ப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia