லோவ்ராஜ் குமார்லோவ்ராஜ் குமார் (Lovraj Kumar, 1926 - 1994) ஓர் இந்திய அரசு குடிமை பணியாளார் ஆவார். இவர் 1950களின் பிற்பகுதியிலிருந்து 1980களின் முற்பகுதி வரை இந்திய பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதில் பங்கு வகித்தார். [1] குமார் 1926 இல் நைனிடாலில் பிறந்தார். டெஹ்ராடூனின் டூன் பள்ளியில் கல்வி பயின்றார். இவர் 1947 இல் இந்தியாவின் முதல் ரோட்ஸ் அறிஞரானார் [2] மற்றும் ஆக்சுபோர்டில் உள்ள மாக்டலென் கல்லூரியில் வேதியியல் படிக்கச் சென்றார். இந்தியா திரும்பியதும் பர்மா ஆயில் நிறுவனத்தில் சேர்ந்து பணி செய்தார். இந்திய ஆட்சி பணியாளராக, இவரது மிக முக்கியமான பதவி பெட்ரோலிய அமைச்சின் செயலாளராகும். இவரது கடைசி பணியில் உருக்கு அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார். இதிலிருந்து 1984 இல் ஓய்வு பெற்றார். இவர் பொருளாதார நிபுணரான தர்மா குமாரை 1951 இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ராதா குமார் என்ற மகள் இருக்கிறார். ஓய்வுபெற்றபோது, டூன் பள்ளியின் ஆளுநர்கள், இந்திய வனவிலங்கு நிதியம் மற்றும் பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் உள்ளிட்ட பல குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இவர் தலைமை தாங்கினார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia