வகுப்பறை![]() ![]() ![]() வகுப்பறை என்பது பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்களில், கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய செயல்கள் நடைபெறும் அறைகளைக் குறிக்கும். மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே வகுப்பறை அமைப்பின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக, உகந்த தளவாடப் பரவமைப்புக்கான (layout) இடவசதி, சிறந்த உள்ளக ஒலிப் பண்பு, ஆசிரியர் கற்பிப்பதைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய வடிவமைப்பு, பொருத்தமான ஒளியமைப்பு என்பன வகுப்பறைகளில் இருக்கவேண்டிய சில முக்கிய அம்சங்களாகும். வகுப்பறைச் சாதனங்கள்பொதுவாக வகுப்பறைகளில் கரும்பலகை இருக்கும் இதில் ஆசிரியர்கள் சுண்ணாம்புக்கட்டியினால் எழுதி மாணவர்களுக்குக் கற்பிப்பர். வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள வகுப்பறைகளில் இக் கரும்பலகைகளின் இடத்தை வெண்பலகைகள், ஊடாடு வெண்பலகைகள் போன்றவை பிடித்துக்கொண்டன. சில வகுப்பறைகளில் தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, படமெறிகருவி போன்ற வசதிகளும் உள்ளன. இவை தவிரப் பெரும்பாலான வகுப்பறைகளில் தேசப்படங்கள், பல்வேறு வகையான அட்டவணைகள், விளக்கப்படங்கள் போன்றவையும் இடம்பெறுகின்றன. வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia