வசூல்
வசூல் (Vasool) 2008 ஆம் ஆண்டு வி. ரிஷிராஜ் நடித்து இயக்கி தயாரித்த தமிழ் திரைப்படம். ஹேமந்த் குமார் மற்றும் கிரண் ராத்தோட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். விஜய் சங்கர் இசையமைத்தார். இப்படம் தெலுங்கில் வசூல் ராணி என்ற பெயரில் மொழிமாற்றப்பட்டு வெளியானது.[1][2][3][4] கதைச்சுருக்கம்ஜீவா (ஹேமந்த் குமார்) நடிகை கிரணின் (கிரண் ராத்தோட்) நிதி ஆலோசகராக இருக்கிறான். ஜீவாவும் கிரணும் காதலிக்கின்றனர். கிரணைக் காதலிக்கும் ஜீவா அதற்காக தன் கிராமத்தைவிட்டு வந்து கிரணின் நிதி ஆலோசகராகப் பணியாற்றுகிறான். ஜீவாவின் நண்பன் ஜிந்தா (ரிஷிராஜ்). தன் நண்பன் ஜீவாவுக்காக எதையும் செய்பவன். கிரண் தன்னுடைய திரைப்படத் தொழில் பாதிக்கும் என்பதால் தங்கள் காதலை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஜீவாவிடம் கேட்டுக்கொள்வதால் அவன் யாரிடமும் தன் காதலி பற்றி சொல்லாமல் இருக்கிறான். ஜிந்தா பலமுறை கேட்டும் தன் காதலி குறித்து சொல்வதைத் தவிர்க்கிறான். ஜீவா காதலிப்பது கிரண் என்று ஜிந்தாவிற்குத் தெரியவரும்போது ஜிந்தா அதிர்ச்சியடைகிறான். கிரண் பணம், புகழுக்காக எதையும் செய்யத் தயங்காதவள், எனவே அவளை மறந்துவிடுமாறு ஜிந்தா எச்சரிக்கிறான். முதலில் அதை நம்பாத ஜீவா, கிரணிடம் அதுகுறித்துக் கேட்கும்போது, அவள் தனக்கு வாழ்க்கையில் பணமும் புகழுமே முக்கியம் என்று கூறுவதைக் கேட்டு மனமுடைகிறான். கிரணை நம்பி ஏமாந்த ஜீவா மதுவிற்கு அடிமையாகிறான். தன் நண்பனுக்காக ஜிந்தா என்ன செய்தான்? அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை. நடிகர்கள்
இசைபடத்தின் இசையமைப்பாளர் விஜய் சங்கர். பாடலாசிரியர்கள் சினேகன், விவேகா, ஜி.பி. மற்றும் விஜய்சங்கர்.[5][6][7]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia