வடக்கு கசக்கிசுத்தான் பிராந்தியம்
வடக்கு கஜகஸ்தான் பிராந்தியம் (North Kazakhstan Region, காசாக்கு: Солтүстік Қазақстан облысы, romanized: Soltüstik Qazaqstan oblysy ) என்பது கஜகஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் பெட்ரோபாவ்ல் ஆகும், இந்த நகரத்தின் மக்கள் தொகை 193,300 என்றும், மாகாணத்தின் மக்கள் தொகை 558 700 என்றும் உள்ளது. இப்பிராந்தியம் வடக்கே உருசியாவை ( ஓம்ஸ்க் ஒப்லாஸ்ட், குர்கன் ஒப்லாஸ்ட் மற்றும் தியுமென் ஒப்லாஸ்ட் ) எல்லையாக கொண்டுள்ளது. பிற திசைசகளில் கஜகஸ்தானின் மூன்று பிராந்தியங்களை எல்லையாகக் கொண்டுள்ளது: இதன் தெற்கே அக்மோலா பிராந்தியமும், கிழக்கில் பாவ்லோடர் பிராந்தியமும், மேற்கில் கொஸ்தானே பிராந்தியத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இப்பிராந்தியபத்தின் பரப்பளவு 98,040 km2 (37,850 sq mi) ஆகும், இது கஜகஸ்தானின் பிராந்தியங்களில் நான்காவது சிறிய பிராந்தியம் ஆகும். இர்டிஷ் ஆற்றின் துணை ஆறான இஷிம் (எசில்) ஆறு கராகண்டி பிராந்தியத்திலிருந்து உருசியாவுக்கு வடக்கு கஜகஸ்தான் பிராந்தியம் வழியாக பாய்கிறது. மக்கள் வகைப்பாடு![]()
தேசிய கட்டமைப்பானது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையில் கணிசமாக வேறுபடுகிறது. நகர்ப்புறமான பெட்ரோபாவ்லோவ்ஸ்கின் மக்கள் தொகையில் உருசியர்கள் 60.40% ஆகவும், உலிஹானோவ்ஸ்கியில், கசாக் மக்கள் தொகையானது 86.04% ஆகவும் உள்ளது. கஜகஸ்தானில் இப்பகுதியில் தான் போலந்து மக்கள் பெருமளவு வாழ்கின்றனர். இனக்குழுக்கள் (2020): [5]
மேலும், வடக்கு கஜகஸ்தான் பகுதி கஜகஸ்தானில் ஒரு தனித்துவமான பகுதியாக உள்ளது. இப்பிராந்தியத்தின் மக்கள்தொகையில் இயற்கையான சரிவு ஏற்பட்டு வந்தது. என்றாலும், 2008 முதல், இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி இருந்ததுவருகிறது. நிர்வாக பிரிவுகள்இப்பகுதி நிர்வாக ரீதியாக பதின்மூன்று மாவட்டங்களாகவும் பெட்ரோபாவ்ல் நகரமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. [6]
வடக்கு கஜகஸ்தான் பிராந்தியத்தில் பின்வரும் ஐந்து வட்டாரங்கள் நகர அந்தஸ்தைக் கொண்டுள்ளன. [6] அவை பெட்ரோபாவ்ல், புலாயெவோ, மம்லியுட்கா, செர்ஜியேவ்கா, தைன்ஷா என்பனவாகும். விளையாட்டுஇப்பிராந்தியத்தின் பாண்டி அணி 2016 இல் நடந்த தேசிய வாகையர்சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றது. [1] வெளி இணைப்புகள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia