வடக்கு பச்சையாறு அணை
![]() பச்சையாறு அணை பச்சையாறு அணை என்பது திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு அருகே, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை 2004ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவு 50 அடியாகும், மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது அதிகப்படியான நீரளவு கிடைக்கிறது. அணைக்கு செல்லும் வழிகள்:
அமைப்பு மற்றும் கொள்ளளவு
இந்த அணை, 2009, 2014, 2015, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தனது 50 அடியளவைக் எட்டியது. நீரியல் விவரங்கள்
பாசனவசதிஇந்த அணை மூலம் களக்காடு முதல் நாங்குநேரி வரை 100க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. நீர்வரத்துஇந்த அணைக்கு நீர் தலையணை தேங்காய் உருளி ஊட்டுக்கால்வாய் மற்றும் கீரைக்காரன் கால்வாய் மூலமாக நேரடியாக வருகிறது. அருகிலுள்ள கிராமங்கள்
பச்சையாறு அணை, இதன் அமைப்பு மற்றும் திறப்புகளுடன், பாசன தேவைகளைச் பூர்த்தி செய்ய மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளை சமாளிக்க முக்கிய பங்காற்றுகிறது. |
Portal di Ensiklopedia Dunia