வடக்கு லக்கீம்பூர்
வடக்கு லக்கீம்பூர் (North Lakhimpur) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் லக்கீம்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரம் கவுகாத்திக்கு வடகிழக்கில் 394 கி.மீ. தொலைவில் வடக்கு லக்கீம்பூர் நகரம் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 14 வார்டுகளும், 13,993 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 59,814 ஆகும். அதில் 30,847 ஆண்கள் மற்றும் 28,967 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6950 (11.62%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 939 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.67% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 68.12%, முஸ்லீம்கள் 30.65%, கிறித்தவர்கள் 0.57% மற்றும் பிறர் 0.66% ஆகவுள்ளனர்.[4] போக்குவரத்துலக்கீம்பூர் நகரம் அருணாச்சலப் பிரதேசத்தின் நுழைவாயில் என பெருமையாக அழைக்கப்படுகிறது. வானூர்தி நிலையம்வடக்கு லக்கீம்பூர் நகரத்திற்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள லீலாபாரி வானூர்தி நிலையம, கொல்கத்தா, கவுகாத்தி நகரங்களை இணைக்கிறது.[5] தொடருந்து நிலையம்வடக்கு லக்கீம்பூரின் தொடருந்து நிலையம் நகரி பகுதியில் உள்ள்து. ராங்கியா இரயில்வே கோட்டத்தின், ராங்கியா-மூர்கோன்செலெக் இருப்புப் பாதை வழித்தடத்தில் அமைந்த லக்கீம்பூர் தொடருந்து நிலையம், கவுகாத்தி, பிஸ்வநாத், தின்சுகியா நகரங்களை இணைக்கிறது.[6][7] சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 52 வடக்கு லக்கீம்பூர் வழியாகச் செல்கிறத். தட்பவெப்பம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia