வட மத்திய மண்டல கலாச்சார மையம்வட மத்திய மண்டல கலாச்சார மையம் (North-Central Zone Cultural Centre) என்பது இந்தியாவின் ஏழு மண்டல கலாச்சார மையங்களில் ஒன்று ஆகும் வரலாறுவட மத்திய மண்டல கலாச்சார மையம என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில்[1] அமைந்துள்ள இந்தியாவில் உள்ள ஏழு மண்டல கலாச்சார மையங்களில் ஒன்று. 1986-ல் இம்மையம் நிறுவப்பட்டது. இது உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், அரியானா, உத்தாரகண்டம், மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் நாட்டுப்புற, பழங்குடியினர், நுண்கலைகள் மற்றும் கைவினைகளின் வளமான மரபுகளைக் கொண்டுள்ளது. இந்த மரபுகளைச் செழுமைப்படுத்தவும், மேம்படுத்தவும் மற்றும் வலுப்படுத்தவும் இந்த மையம் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த மையம் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இந்த மையத்தின் தலைவராக உத்தரப்பிரதேச ஆளுஞர் உள்ளார்.[2] நோக்கம் மற்றும் குறிக்கோள்
இந்தியாவின் பிற பிராந்திய கலாச்சார மையங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia