வட மாகாண விவசாய திணைக்களம்
வடக்கு மாகாணசபையின் ஒரு திணைக்களமாகக் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு மாகாண சபையிலுருந்து பிரிந்து 01.01.2007 ம் திகதி தொடக்கம் செயற்பட்டு வரும் வட மாகாண சபையின் விவசாய அமைச்சின் கீழ் இது காணப்படுகின்றது. இதன் செயற்படு பரப்பு வட மாகாண எல்லையாகும். இதன் தற்போதய பணிப்பாளராக திரு.கே.சுப்பிரமணியம் அவர்கள் வட மாகாண சபை உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் பணியாற்றிவருகின்றார். உப அலுவலகங்கள்இவ் திணைக்களமானது மாவட்ட மட்டத்தில் ஒவ்வொரு உப அலுவலகத்தை கொண்டு காணப்படுகின்றது. இவ் உப அலுவலகங்கள் பிரதி விவசாயப் பணிப்பாளர்(விரி)அலுவலகம் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பொறுப்பாக பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் காணப்படுவார்கள். இவர்களினால் மாவட்டத்தின் விரிவாக்கச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். இவ் உப அலுவலகங்களில் உதவி விவசாயப் பணிப்பாளர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், பாட விதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரயர்கள் மற்றும் நிர்வாகங்களினை மேற்கொள்ளும் இணைந்த சேவையினை கொண்ட உத்தியோகத்தர்ளும் தொழிலாளிகளும் காணப்படுகின்றனர். பிரதி விவசாயப் பணிப்பாளர்கள்
பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் காணப்படும் அலுவலகங்கள்வவுனியா செயற்பாடுகள்நிர்வாக ரீதியான செயற்பாடுகளை தலைமையலுவலகம் செயற்படுத்துவதுடன் உப அலுவலகங்களின் செயற்பாடுகளை நேரடியாகவும் நெறிப்படுத்துகின்றது. அத்துடன் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து வட மாகாண விவசாய செயற்பாட்டுக்கு பேருதவி புரிகின்றது. |
Portal di Ensiklopedia Dunia