வண்ணந்தீட்டியக் கவுதாரி
வர்ணக் கவுதாரி (Painted Francolin) இப்பறவை வான்கோழியைப் போன்ற தோற்றம் உடைய தென்கிழக்கு இலங்கை, மத்திய மற்றும் தெற்கு இந்தியப் பகுதிகளில் வாழும் கவுதாரிப் பறவையாகும். இப்பறவையை இதன் இனப்பெருக்க காலங்களில் சத்தமிடும் ஓசையை வைத்து எளிதாக இனம் கண்டுகொள்ளலாம். இப்பறவையை தாமஸ் சி. ஜெர்டன் என்பவர் வடக்கு சர்க்கார் மாவட்டங்கள், சோட்டா நாக்பூர் மேட்டுநிலம், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், நருமதை ஆற்றுப்படுகை, மற்றும் மத்திய இந்தியப்பகுதி போன்ற இடங்களில் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார்.[3] இப்பறவையை கருப்புக் கவுதாரியுடன் வித்தியாசப்படுத்துவது கொஞ்சம் கடினம். இவை அதிகமான தூவலுடன் கலப்பினம் போல் காட்சி கொடுக்கிறது. இதன் மேல் காணப்படும் தூவல்கள் கருப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடன் காணப்படுகிறது. இதன் முகம் சிவந்தும், கண்களின் மேல் பகுதியில் மூடும் விதமாக கருப்பு தோல் காணப்படுகிறது. இப்பறவை இலங்கையில் 4.50 பைசா அஞ்சல் தலையாக வெளிவந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia