வரணி மத்திய கல்லூரி
வரணி மத்திய கல்லூரி கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் வரணி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தரம் 1 முதல் உயர்தரம் வரையான வகுப்புக்கள் உள்ளன. உயர்தரத்தில் கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து ஆண்டு தோறும் குறிப்பிடத்தக்க மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகிறார்கள். எம்.டி.பண்டா என்பவரால் 11-01-1954 இல் திறந்துவைக்கப்பட்டது. இப்பாடசாலையில் 1963 ஆம் ஆண்டு முதல் க.பொ.த.உயர்தர வகுப்பில் விஞ்ஞானக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1967 ஆம் ஆண்டு கல்வியமைச்சு ஒரு விளையாட்டு மைதானத்தை அமைத்துக்கொடுத்தது. உடையார் சிவா நல்லமாப்பாணர் இப்பாடசாலைக்கு வணக்க மண்டபம் ஒன்றை அமைத்துக்கொடுத்தார். இப் பாடசாலையில் 500 க்கு மேற்பட்ட மாணவர்களும் 50 ற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றார்கள் இப் பாடசாலையின் தற்போதய அதிபர் திரு.ப. செல்லநாயகம் ஆவார்
|
Portal di Ensiklopedia Dunia