வலையட்டூர் வெங்கையா
வலையட்டூர் வெங்கையா (சூலை 1, 1864 - நவம்பர் 21, 1912) என்பவர் இந்தியக் கல்வெட்டாய்வாளர் மற்றும் வரலாற்றாளர் ஆவார். 1908 ஆம் ஆண்டு முதல் 1912 ஆண்டு வரை இந்தியக் கல்வெட்டுத் துறைத் தலைமை ஆய்வாளராகப் பணி செய்தவர்.[1] வாழ்க்கைக்குறிப்புதமிழ்நாடு வடஆர்க்காடு மாவட்டம் ஆரணிக்கு அண்மையில் உள்ள வலையட்டூர் என்ற ஊரில் வெங்கையா பிறந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தெரியியலில் பட்டம் பெற்றார் பணிகள்வெங்கையா தென்னிந்திய மொழிகளிலும் அவற்றின் வரி வடிவங்களிலும் புலமை பெற்றிருந்தார். ஈ.ஹலட்ஸ் என்ற கல்வெட்டாய்வாளர் வெங்கையாவைத் தமது துறையில் சேர்த்துக்கொண்டார். ஹலட்ஸ் ஒய்வு பெற்ற பிறகு வெங்கையா கல்வெட்டுத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகள், பல்லவக் கோவில் கல்வெட்டுகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்தார்.[2][3] எபிகிராபிக்கா இண்டிகா என்ற 11 ஆம் தொகுப்பு நூலைப் பதிப்பித்தார். வெங்கையா காலமான பின்னர் அது வெளியிடப்பட்டது. அது போலவே ஹலட்சுக்கும் வெங்கையாவுக்கும் நிகழ்ந்த மடல் தொடர்புகளைத் தொகுத்து ஒரு நூலாக அவர் இறப்புக்குப் பின் வெளியிட்டனர். மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia