தமிழ்க்கணிமை என்பது தமிழில் கணினியுடன் ஊடாடுவதையோ அல்லது பயனர்கள் தமிழ் மொழியில் கணினியுடன் ஊடாடுவதற்கு ஏதுவாக மனிதருக்கும் கணினிகளுக்கும் இடையேயான இடைமுகங்களை (Interface) விருத்தி செய்வதையோ குறிக்கிறது.
தமிழில் கணனியில் படிப்பது, எழுதுவது இதுவே தமிழ் கணிமையின் முதல் கட்டம். ஒரு பொதுவான வழிமுறை இல்லாவிட்டாலும், உதவி செயலிகள் கொண்டோ, யுனிக்கோட் முறை மூலமாகவோ இன்று தமிழில் எழுதலாம் படிக்கலாம்.
தமிழ் கணிமையின் இரண்டாம் கட்டமாக கருதப்படுவது தமிழ் இடைமுகமாக்கல். பல தன்னாவலர்களின் பங்களிப்பின் மூலமும், மென்பொருள்களின் பன்மொழியாக்கல் வசதிகள் மூலமும் தமிழ் இடைமுகமாக்கல் தரப்படுத்தப்பட்ட தீர்வுகளை கண்டுள்ளது. காசியின் கட்டுரையில் [1] இதை பற்றிய பல அடிப்படை தகவகள் கிடைக்கின்றன.
தமிழ்க்கணிமையின் அடுத்த கட்டமாக இயற்கை மொழி கணினியியல் அமையலாம்.
தமிழ்க்கணிமை நிகழ்வுகள்
தமிழ் கணிமை பட்டறை - Feb/25/2006 [2] - Meenakshi Sundararajan Engineering College
Gift Siromoney ("Devising the first teleprinter keyboard in Tamil", Pioneering work in statistical analysis of Tamil alphabet frequencies.) [2]
Naa Govindasamy (Brought Tamil to be "the first Indian language to go on Internet on 27th October, 1994"; Instrumental Summary Paper - Towards a Total Solution for the Tamil Language through Singapore Research) [3]
Kuppusamy Kalyanasundaram (Architect of TADILNET; project coordinator of Project Madurai; Tamil Electronic Library; Developed Mayli font; TSCII)