வழிப்படுத்தல் நெறிமுறை

வழிப்படுத்தல் நெறிமுறை (routing protocol) என்பது வழிப்படுத்திகள் எவ்வாறு ஒன்றை ஒன்று தொடர்பு கொள்கின்றன என்பதை குறிக்கும் ஒரு நெறிமுறை. கணினி வலையமைப்பில் இரண்டு கணுக்களுக்கு இடையில் பரவவிடப்பட்ட தகவலானது எந்த வழியை வழிப்படுத்தி நெறிமுறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கிறது என்பதை இது தீர்மானிக்கிறது. ஒவ்வொரு வழிப்படுத்தியும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள வலையமைப்புடன் மட்டும் முன்னதான அறிவைப் பெற்றிருக்கும். ஒரு வழிப்படுத்தி தனக்கு அடுத்துள்ளதுடன் முதலாவதாக தகவலை பரிமாறிக் கொள்ளும், பிறகு வலையமைப்பிற்குப் பரிமாறும். இவ்வாறு வழிப்படுத்திகள் வலையமைப்பின் இடவியல் பற்றி அறிவை பெற்றுக் கொள்கின்றன.

இணைய நெறிமுறை பாவனையில் (பல இருந்தாலும்) மூன்று வகைகளை பெரியளசில் பயன்படுத்தப்படுகின்றன:

  • உள்ளக வாயில் நெறிமுறை வகை 1, தொடர்பு நிலமை வழிப்படுத்தல் நெறிமுறைகள், எ.கா: மிகக்குறுகிய பாதையை முதலில் திறத்தல் (OSPF), இடைப்பட்ட முறையிலிருந்து இடைப்பட்ட முறைக்கு (IS-IS)
  • உள்ளக வாயில் நெறிமுறை வகை 2, தொலை இயக்கு வழிப்படுத்தல் நெறிமுறைகள், எ.கா: வழிப்படுத்தல் தகவல் நெறிமுறை, உள்ளக வாயில் வழிப்படுத்தல் நெறிமுறை.
  • வெளியக வாயில் நெறிமுறைகள் வழிப்படுத்தல் நெறிமுறைகளாக இணையத்தில் வழிப்படுத்தல் தகவலைப் பரிமாற பயன்படுத்தப்படுகிறது.

பல வழிப்படுத்தல் நெறிமுறைகள் கருத்துக்கான வேண்டுகோள் (Request for Comments) என வரையறுக்கப்பட்டுள்ளன.[1][2][3][4]

மேற்குறிப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya