வாசிங்டன் கடற்படைத் தள துப்பாக்கிச் சூடு![]() வாசிங்டன் கடற்படைத் தள துப்பாக்கிச் சூடு நிகழ்வு செப்டம்பர் 16 , 2013 ஆம் ஆண்டு காலை 08:15 மணியளவில் வாசிங்டன் கடற்படைத் தளத்தில் நடந்தது. இதில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். அதில் மர்ம நபர் ஒருவரும் அடக்கம்.மேலும் 14 பேர் காயமடைந்தனர்..[1][2] இறந்தவர் விவரம்
மர்ம நபர்மர்ம நபர்கள் ராணுவ உடை அணிந்திருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் ஆரோன் அலெக்ஸிஸ் (மே 9, 1979 – செப்டம்பர் 16, 2013) [3] என்ற மர்ம நபர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் இத்துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். இவர் முன்பொரு முறை 2004 ஆம் ஆண்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்நிலவரம்இப்பகுதியில் அமைந்திருக்கும் 8 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் தற்காலிகமாக போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.[4] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia