வாசுகி பாஸ்கர்
வாசுகி பாஸ்கர் ஒரு இந்திய பாணியிலான ஆடை வடிவமைப்பாளராகத் , தமிழகத் திரைப்படத் துறையில் பணிபுரிகிறார்.[1] அவர் தயாரிப்பாளர் ஆர்.டி பாஸ்கரின் மகளாவார். பாவலர் கிரியேஷன்ஸ் இவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமாகும். தொழில்வாசுகி, புகழ்பெற்ற இசையமைப்பாளரான இளையராஜா வின் சகோதரர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.டி பாஸ்கரின் ஒரே மகளாவார். இவரது சகோதரர்கள் திரைப்பட இயக்குநர் பரிதி பாஸ்கர் மற்றும் பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் ஹரி பாஸ்கர் ஆவார். இவரது சகோதரர் ஹரி பாஸ்கர் "காஞ்சி கவுலுக்கு எதிரே வியூகம் என்ற பெயரில் முடிக்கப்படாத திரைப்படத்தில் நடித்துள்ளார்.[2] கார்த்திக் ராஜா , யுவன் சங்கர் ராஜா , பாடகர் பவதாரிணி , திரைப்பட இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு, நகைச்சுவை நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் ஆகியோர் இவரது உறவினர்கள் ஆவர். லயோலா கல்லூரியில் வடிவமைப்புத் துறையில் வாசுகி படித்துக்கொண்டிருந்த போது, இயக்குநர் பாரதிராஜா கண்களால் கைது செய் என்கிற படத்திற்கு ஆடைகளை வடிவமைப்பதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கினார்.[3] வெங்கட் பிரபுவின் படங்களில் ஆடைகளை அவர் வடிவமைத்தார், நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.[4] மங்காத்தா திரைப்படத்தில் அஜித் குமாரின் தோற்றத்திற்கேற்ப ஆடை வடிவமைத்துக் கொடுத்தார். இது பற்றி அதிகம் பேசப்பட்டது.[5][6][7] பிரசன்னா மற்றும் சிபிராஜ் நடித்த நாணயம் திரைப்படத்தில் ஆடைகளை வடிவமைத்துப் பணியாற்றியுள்ளார்.[8][9] அவர் இயக்குநர் பிரபு தேவாவுடன் வில்லு மற்றும் பாலாவின் ''அவன் இவன்'' திரைப்படத்தில் பணியாற்றினார். .[10] மேலும், இவர் ஆங்கிலத் திரைப்படமான எனிதிங் ஃபார் யூ வில் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தார். இப்படம் தோல்வியடைந்தது.[11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia