வாசுதேவன் பாஸ்கரன்
வாசுதேவன் பாஸ்கரன் (Vasudevan Baskaran) (பிறப்பு ஆகஸ்ட் 17, 1950) ஒரு சிறந்த வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் மாஸ்கோவில் நடந்த 1980- ஒலிம்பிக் விளையாட்டில் இந்திய தேசிய அணியின் தலைவராக விளையாடினார். இந்த அணி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. 1979-80 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதைப் பெற்றார். வாழ்க்கையும்,கல்வியும்இவர் பிறந்த ஊர் ஆரணி. தந்தை வாசுதேவன் தாய் பத்மாவதி. படித்தது வெஸ்லி பள்ளி, மற்றும் லயோலா கல்லூரி விளையாட்டு11 வயதில் வளைத்தடிப் பந்தாட்டத்தை விளையாட ஆரம்பித்தார். அகில இந்திய பள்ளி அணியில் இடம்பெற்றார். கல்லூரி நாளில் பல்கலைக்கழக அணிக்காக ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயணம் செய்து இந்திய பல்கலைக்கழக அணிக்காக விளையாடினார். இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடினார். 2 உலகப் போட்டிகள், 2 ஒலிம்பிக் போட்டிகள், 2 ஆசிய போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். 1980இல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அணிக்கு தலைமை வகித்து, தங்கப் பதக்கம் பெற்று தாயகம் திரும்பினார். விருதுகள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia