வாடைக்காற்று (திரைப்படம்)
வாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற புகழ் பெற்ற புதினம் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது. இத்திரைப்படத்தில் ஏ. இ. மனோகரன், கே. எஸ். பாலச்சந்திரன், கலாநிதி கே. இந்திரகுமார், எஸ். ஜேசுரட்னம், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் முதலானோர் நடித்திருந்தனர். பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள். கதைச் சுருக்கம்கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. ![]() வாடைக்காற்று காலத்தில் வெளியிடங்களிலிருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, நட்பு, கோபம் என்பனவற்றை அடிநாதமாகக் கொண்டது இக்கதை. முந்திய வருடத்தில் அங்கு வந்து வாடி போட்டுத் தொழில் செயத சம்மாட்டி செமியோன் (மனோகரன்) உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா (சந்திரகலா)வுடன் கொண்ட உறவு அவளது தந்தை (பிரான்சிஸ்), தமையன் (கந்தசாமி) ஆகியோருடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது. உள்ளூர்க்காரரான பொன்னுக் கிழவர் (ஜேசுரட்னம்) பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை (ஆனந்தராணி) கண்போல வளர்த்து வருகிறார். முயல் வேட்டையாடிக் கொண்டு திரியும் அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலத்துக்கு (பாலச்சந்திரன்) அவளை திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு. மீண்டும் அடுத்த பருவகாலம் வருகிறது. வெளியூர் மீனவர்கள் வருகிறார்கள். வெகு தூரத்திலிருந்து கூழக்கடாக்கள் என்ற் பறவைகளும் வருகின்றன. ஆனால் இந்தமுறை புதிதாக மரியதாஸ் (இந்திரகுமார்) என்ற சம்மாட்டி வந்து சேர்கிறான். அவனோடு பிரச்சினைகளும் வருகின்றன. செமியோன் சம்மாட்டி வழக்கமாக வாடி போடும் இடத்திலே தான் வாடி போட்டுத் தொழில் செய்கிறான். பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்கிறான். போதாதற்கு நாகம்மாவையும் மனம் மாற்றி தன்னுடன் அழைத்துப் போய் விடுகிறான். இதனால் விருத்தாசலமும், பொன்னுக்கிழவரும் வேதனையினால் வெந்து போகிறார்கள். செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே வெற்றி கிடைக்கிறது. முறைப்பெண்ணான நாகம்மாவை எங்கிருந்தோ வந்தவனுக்கு பறிகொடுத்த விருத்தாசலத்தை, சுடலைச் சண்முகம் (ஜவாஹர்) கிண்டல் செய்கிறான். ஊர்த் திருவிழா நடக்கிறது. செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிறான். இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட்டார்கள். அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடுகிறான். நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்கிறான். விருத்தாசலமும், செமியோனும் தங்கள் இழப்பினால் வருந்த, மரியதாஸும், நாகம்மாவும் ஊரை விட்டுப் போகிறார்கள். மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது. சில குறிப்புகள்
வெளி இணப்புக்கள்
|
Portal di Ensiklopedia Dunia