வாட்டாறு

வாட்டாறு என்னும் ஊரில் சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல் எழினியாதன். இவனை வாட்டாற்று எழினியாதன் என்பர். இவன் பெயர் எழினி மகன் ஆதன் என்பதாகலாம். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். [1]

ஊர் வளம்
வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர் மலர் தருகிறதாம். விளைவயலெங்கும் பறவைகள். பறையொலி கேட்டு அவை பறந்தோடும் அழகு.
மக்கள்
கோசர் குடிமக்கள் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் தேறல் உண்டு திளைத்துக் குரவை ஆடுவர்.

வாட்டாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊர். கி.பி. எட்டாம் நூற்றாண்டு நம்மாழ்வார் வாட்டாற்றுப் பெருமாளைப் பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது. [2] [3] [4]

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 396
  2. [வாட்டாறு இருப்பிடம்|[1]
  3. திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
    திகழ்கின்ற திருமாலார் சேர்விடம்தண் வாட்டாறு
    புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம்கெடுத்தான்
    இகழ்வின்றி என்னெஞ்சத் தெப்பொழுதும் பிரியானே (திவ்வியப் பிரபந்தம் பாடல் எண் 3954)
  4. பாடல் விளக்கம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya