வாட்நகர்
மக்கள் வகைப்பாடு2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வாட் நகர மக்கள் தொகை 25,041 ஆகும்.[2] அதில் ஆண்கள் 51%; பெண்கள் 49% உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 65% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், வாட் நகர மொத்த மக்கட்தொகையில் 13%ஆக உள்ளனர். வரலாறுமகாபாரத காலத்தில் வாட்நகரை ஆனர்த்தபூர் என்று கூறிப்பிடப்பட்டுள்ளது. குருச்சேத்திரப் போரில் வாட்நகரப் போர்வீரர்கள் பாண்டவர் மற்றும் கௌரவர் அணியில் இணைந்து போரிட்டனர். சமீபத்திய தொல்லியல் ஆய்வில், கி. பி., முதல் நூற்றாண்டிலேயே வாட்நகர், சமயம் மற்றும் கலைகளில் சிறந்து விளங்கி இருந்தது என அறியப்பட்டுள்ளது.[3] கி. மு., மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டின் புத்தரின் சிலைகளும் ஒரு புத்த மடாலயமும் இந்நகரில் காணப்படுகிறது. இதனை சீன யாத்திரீகர் யுவான் சுவாங் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.[4] வாட்நகர் தொடருந்து நிலையம்வாட்நகர் தொடருந்து நிலையம் இரண்டு நடைமேடைகளுடன் கூடியது. இத்தொடருந்து வழியாக நாள் ஒன்றிற்கு ஆறு தொடருந்துகள் செல்கிறது.[5] சிறுவயதில் நரேந்திர மோடி இத்தொடருந்து நிலையத்தில் தேனீர் விற்றுக் கொண்டிருந்தார். இத்தொடருந்து நிலையத்தின் மேம்பாட்டிற்கு இந்திய அரசு எட்டு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.[6][7] ஆன்மிகத் தலங்கள்வாட்நகர் தொடருந்து நிலையத்திலிருந்து 40 கி மீ தொலைவில் புகழ் பெற்ற தரங்கா சமணர் கோயில் உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia