வார்ப்புரு:Climate chart/infoதட்பவெப்பநிலை வரைபடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதன் தட்ப வெப்பநிலை பற்றிய பொதுவான தகவல்களைத் தருகிறது. தட்பவெப்பநிலை வரைபடத்தை Template:Climate chart என்ற வார்ப்புருவை உபயோகித்து வரையலாம். தட்பவெப்பநிலை வரைபடத்தை எப்படி வாசிப்பதுமேல் கிடைவரிசை (row)வில் உள்ள எழுத்துக்கள் மாதங்களின் முதலெழுத்துகள் ஆகும்: சனவரி, பெப்ரவரி... பட்டைகளும் எண்களும் கீழ்வருமாறு தகவல் அளிக்கின்றன: நீலப்பட்டைகள் ஒவ்வொரு மாதத்தின் மொத்த மழை/பனிபொழிவின் அளவை குறிக்கின்றன.நீல வண்ண எண்கள் அந்த அளவை ச.மீக்கு மிமீ அல்லது லிட்டர் கணக்கில் குறிப்பிடுகிறது. சிவப்பு பட்டைகள் ஒவ்வொரு மாதத்திலும் நாளின் சராசரி வெப்பநிலை வீச்சைக் குறிக்கிறது. சிவப்பு வண்ண எண்கள் ஒவ்வொரு மாதத்தின் நாளின் சராசரி மிகக்கூடிய மற்றும் மிகக் குறைந்த வெப்ப அளவைக் குறிப்பிடுகிறது. ஒப்பீட்டிற்காக, மெல்லிய சிவப்புக்கோடு நீரின் உறைநிலை வெப்பமான 0 °C ஐக் காட்டுகிறது. காட்டுகள்
மேலுள்ள வரைபடத்தில் காண்பதுபோல, டோக்கியோ வெப்பமான வேனிற்காலத்தையும் சற்றே குளிர்ந்த குளிர்காலத்தையும் கொண்டுள்ளது.புவியின் வடகோளத்தில் உள்ளதால், சூலை,ஆகத்து மாதங்களில் வெப்பம் கூடிக் காண்கிறது. அதேநேரம் புவிநடுக்கோட்டின் அண்மையில் உள்ள லபுவானில் வெப்பம் ஆண்டு முழுவதும் ஒரே சீராக உள்ளது. வேனில்/குளிர்காலங்கள் என்று இல்லாமல் அதேநேரம் ஆண்டின் துவக்கத்தில் மழை குறைவாகவும் பின்னர் மிகுந்த மழைப்பொழிவுடனும் உள்ளது. குசுகோவைப் பொருத்தவரை,நிலநடுக்கோட்டின் அண்மையில் இருப்பினும், உயரமான மலைப்பகுதியில் இருப்பதால் மழை குறைவாக உள்ளது. லபுவான் போன்றே வெப்பநிலையில் கூடிய மாற்றங்கள் இல்லையெனினும் உயரம் காரணமாக,சிறப்பாக சூன்,சூலை மாதங்களில் இரவுகள் குளிர்ந்து காணப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia