வால்மிளகு
![]() வால்மிளகு (தாவர வகைப்பாடு : Piper cubeba ) என்பது பைப்பர் கியூபெபா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட பிப்பரேசி என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இருவித்திலைத் தாவரம் ஆகும். இது மரத்தில் படர்ந்து வளரும் பலபருவக் கொடித் தாவரமாகும். பசுமைமாறாக் கொடியாக ஆதாரத்தைப் பற்றி ஏறும் தாவரத்தின் கனிகள் மிளகை ஒத்திருப்பதோடு வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால்மிளகு என்னும் பெயர் பெற்றது. கிழக்கிந்திய பகுதி சுமாத்ரா, போர்னியோ, மலேயா ஆகிய இடங்களில் பரவலாகக் காணப்படும் இதனை ஜாவா, தாய்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுப் பகுதிகளில் பயிர் செய்கின்றனர். பயன்கள்இது சற்றுக் காரமும் சிறிது கசப்பும், நறுமணமும் கொண்டது. இதன் மணமும் சுவையும் நாவிலும், வாயிலும் நெடுநேரம் நிலைத்திருக்கும். இதனை தாம்பூலத்தோடு வாசனைப் பொருளாக பயன்படுத்துவதுண்டு. வால்மிளகு சித்த மருத்துவத்தில் பயனாகிறது. மூலக் கடுப்பு, வயிற்றுக் கடுப்பு முதலான நோய்களுக்குச் சித்த மருத்துவ மருந்துகளின் சேர்க்கைகளில் வால்மிளகு முக்கிய இடத்தை வகிக்கின்றது. பசி மிகுத்தல், உடல் வெப்பத்தையும், நாடிநடையையும் அதிகரித்தல் முதலிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.[1] இது காசநோய், நாட்பட்ட தொண்டை வேக்காடு ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகிறது. ஈரல், மண்ணீரல் மற்றும் இரைப்பையில் உண்டாகும் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. தலைவலி, வாந்தி, வாயுவை மட்டுப்படுத்தும், குன்மம், வெட்டை நோயைப் போக்கும், பசியை உண்டாக்கும், குரல் ஓசையை சுத்தப்படுத்தும், வாய் துர்நாற்றம், வாய் வேக்காடு ஆகியவற்றைப் போக்குவதுடன் பல் ஈற்றில் ஏற்படும் வலியை நீக்கும், கோழையை அகற்றும் தன்மை கொண்டது.[2] சிறப்புகள்திருஊறல் (தக்கோலம்) திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது வால்மிளகு ஆகும்.[3] மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia