வால்மீகர் ஞானம்

சித்தர்களில் ஒருவரான வால்மீகர் [1][2] என்பவர் பாடிய நூல் வால்மீகர் ஞானம் [3] என்றும், வால்மீகர் சூத்திர ஞானம் [4] என்றும் குறிப்பிடப்படுகிறது. நூலின் காலம் 16 ஆம் நூற்றாண்டு. இதில் 16 விருத்தப் பாடல்கள்

பாடல் - எடுத்துக்காட்டு [5]

வந்ததுவும் போனதுவும் வாசி ஆகும்

வானில் வரும் ரவி மதிழும் வாசி ஆகும்

சிந்தை தெளிந்து இருப்பவனாம் அவனே சித்தன்

செகமெல்லாம் சிவம் என்றே அறிந்தோன் சித்தன்

நந்தி என்ற வாகனமே தூல தேகம்

நான்முகனே கண் மூக்கு செவி நாக்கு ஆகும்

தந்திமுகன் சிவசக்தி திருமூச்சு ஆகும்

தந்தை தாய் ரவி மதி என்று அறிந்து கொள்ளே.[6]
இப்பாடலில் சொல்லப்பட்ட செய்தி
உடல் தெய்வம்
வாசி [7] வருவது, போவது
வானில் வந்து போகும் சூரியனும் சந்திரனும்
சித்தன் சிந்தை தெளிந்திருப்பவன்
உலகமும் அண்டவெளியும் ஆகிய செகம் அனைத்தும் சிவம்
நம் உடல் சிவத்தைச் சிமக்கும் நந்தி என்னும் வாகனம்
கண், மூக்கு, செவி, நாக்கு நான்முகன்
திருமூச்சு [8] ஆனைமுகன்
சிவசத்தி
நம் தந்தை தாய் சூரியனும் சந்திரனும்

வான்மீகர் கூறும் ஞானக் கருத்துகளில் சில

  • சிவம் இருள்வெளி. அது அருவம். சூரியனும் சந்திரனும் திருமால் [9] அவன் முகம் சிவசத்தி.[10]
  • சரியை என்பது பூரகம் [11]. கிரியை என்பது கும்பகம் [12] யோகம் என்பது பிரிந்து வெளியேறும் மூச்சு. இதனால் உடலுக்குள் புகுகின்ற பிராணவாயு சிவசத்தி அடங்கும் வீடு. இவற்றை உணர்ந்தவன் சித்தன்.[13]
  • கல் செம்பைப் பூசிப்பவர்களும், காய் கனி தின்று காட்டில் திரிவோரும் பித்தர்.[14]
  • குரு, சீடன் என வேடம் அணிந்து திரிபவர் கசடர்.[15]
  • புலித்தோல், கசாயம் அணிந்துகொண்டு யோகி, ஞானி என்று காட்டில் அலைய வேண்டா.[16]
  • வேதம் 4, சாத்திரம் 6, புராணம் 18 என அவரவர் பிழைப்புக்காகப் படைத்துக்கொண்டனர்.[17]
  • பாடை வேணும் [18][19]
  • பாடையில் சிவம் இல்லை. வாசியில் [20] சிவன், நான்முகன், திருமால் உள்ளனர்.[21]
  • சிவசிவா பாடல் 18-க்குத் திறவுகோல் வான்மீகன் பதினாறு [22]
  • மௌனமாக மூச்சோட்டத்தில் மனம் வைத்து, பின் அதனையும் மறந்து தாயாரை நினை.[23]
  • சிவசத்தி என்பது திருமூச்சு. இந்தச் சூக்குமத்தை மூடருக்குக் காட்டாதே.[24]
  • உன் விழியை நீயே காண்பது போல் ஆனந்தக் கூத்தைக் காண்.[25]
  • நித்திய கருமங்களைச் செய்பவர்களுக்குச் சித்தி கிட்டும்.[26]
  • உடலுக்குப் பதி மூலி [27][28]

அடிக்குறிப்பு

  1. வால்மீகி முனிவரின் பெயரை இட்டுக்கொண்டவர்
  2. [ல்] எழுத்தை அடுத்து [ம] எழுத்து வருவதால் தமிழ் நெறிப்படி இப் பெயரை 'வான்மீகர்' எனவும் எழுதுவர்
  3. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 216. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  4. அரு. இராமநாதன், பதிப்பாசிரியர் (முதல் பதிப்பு 1957, ஆறாம் பதிப்பு 1957). சித்தர் பாடல்கள் முதல் பாகம், இரண்டாம் பாகம். சேன்னை 14: பிரேமா பிரசுரம்,. p. 316. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: location (link) CS1 maint: year (link)
  5. பொருள் நோக்கில் சொற்கிரிப்பு செய்யப்பட்டது
  6. பாடல் 2
  7. வசிப்பதாகிய வாழ்வு வாசி எனப்பட்டது
  8. நமக்குள்ளே ஓடும் மூச்சு
  9. கையிலுள்ள சங்கு சக்கரம்
  10. பாடல் 1
  11. உள்ளுக்குள் ஓடும் மூச்சு
  12. மூச்சை அடக்குதல்
  13. பாடல் 3
  14. பாடல் 4
  15. பாடல் 5
  16. பாடல் 6
  17. பாடல் 8
  18. மொழி வேண்டும்
  19. பாடல் 9
  20. மூச்சில்
  21. பாடல் 10
  22. பாடல் 11
  23. பாடல் 12
  24. பாடல் 13
  25. பாடல் 14
  26. பாடல் 15
  27. துரியம்
  28. அறிவியல் நோக்கில் மூளை
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya