வாழும் கலை அறக்கட்டளை
வாழும் கலை அறக்கட்டளை, ஒரு தன்னார்வ அடிப்படையிலான, மனிதாபிமான மற்றும் அரசு சார்பற்ற அமைப்பு ஆகும்.[1] இது 1981ல் சிறீ சிறீ ரவிசங்கரால் நிறுவப்பட்டது.[2] வாழும் கலை அறக்கட்டளை 180 நாடுகளில் மையங்களைக் கொண்டுள்ளது.[3] இது முக்கியமாக கிரியா யோகம் மற்றும் சுதர்சன யோகம் போன்ற தியானங்களை கற்றுத்தருகிறது. இதன் தலைமையிடம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் நகரம் ஆகும். அமைப்பு1989ம் ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்காவில் வாழும் கலை அறக்கட்டளை ஒரு கல்வி மற்றும் மனிதாபிமான அமைப்பாக இருந்து வருகிறது.[4] 1996ல் ஐக்கிய நாடுகள் அவையால் அரசு சாரா அமைப்பாக அங்கீகாரம் பெற்றது. இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்திற்கு சிறப்பு ஆலோசனை வழங்கும் தகுதியுடன் செயல்படுகிறது.[5] இவ்வமைப்பின் பெரும்பாலான அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தன்னார்வலர்களாக உள்ளனர்.[6] அதன் பல திட்டங்கள் மனித மதிப்புகளுக்கான சர்வதேச சங்கம் (IAHV) மூலம் அல்லது ஒரு கூட்டாளர் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.[7] இது அத்வைத வேதாந்த மரபுகள் மற்றும் நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறது.[8] அறக்கட்டளை ஒரு தொண்டு அல்லது இலாப நோக்கற்ற அமைப்பாக உலகின் பல பகுதிகளில் இயங்குகிறது..[9] திட்டங்கள் மற்றும் படிப்புகள்மன அழுத்தத்தை நீக்குதல் மற்றும் சுய-வளர்ச்சி திட்டங்கள், நுட்பமான சுதர்சன் கிரியா, தியானம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்டவை.[9] இந்த நுட்பம் வாழும் கலை படிப்புகளின் முக்கிய பகுதியாகும்.[10][11] இந்த படிப்புகள் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள்,[[12] காவல் துறையினர் மற்ரும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் முன்னாள் போராளிக் கைதிகளுக்காக நடத்தப்படுகின்றன.[13] and prisoners.[14] சமூக சேவைஇந்த அறக்கட்டளையின் பணிகள் பேரிடர் நிவாரணம், வறுமை ஒழிப்பு, முன்னாள் சிறைவாசிகளின் மறுவாழ்வு[14] பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண் சிசுக்கொலைக்கு எதிரான பிரச்சாரங்கள்,[15] மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.[16] விதர்பா திட்டம்2007ம் ஆண்டில், மாநில அரசாங்கத்தின் ஆதரவுடன், அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மகாராட்டிரா மாநிலத்தில் வறண்ட விதர்பா பிரதேசத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் உள்ள வேளாண்குடிகளுக்கு இயற்கை விவசாயம், மழைநீர் சேகரிப்பு மற்றும் பல பயிர்கள் ஆகியவற்றில் பயிற்சி அளித்தனர். 2008ம் ஆண்டில், ரவிசங்கர் ஆந்திரப் பிரதேசத்தில் நிதி அழுத்தத்தால் விவசாயிகள் தற்கொலைகளை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை விரிவுபடுத்துவதாக அறிவித்தார்.[17] பசுமை பூமி இயக்கம்2008ல், அறக்கட்டளையானது புவி வெப்பமடைவதைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும் வகையில் 100 மில்லியன் மரங்களை நடுவதற்கு மிஷன் கிரீன் எர்த் ஸ்டாண்ட் அப் டேக் எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியது.[16][18][19] நதி மறுசீரமைப்பு திட்டங்கள்பிப்ரவரி 2013ல், அறக்கட்டளையானது குமுதாவதி நதியை (பெங்களூரு) புத்துயிர் அளிப்பதற்காக அதன் 'சிறந்த இந்தியாவிற்கான தன்னார்வலர்' பிரச்சாரத்தின் கீழ் குடிமை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைகளை தீர்க்க மூன்று ஆண்டு திட்டத்தைத் தொடங்கியது [20][21][22][23][24] இரவிசங்கர் தலைமையில் நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பெங்களூரில் நடைப்பயிற்சி நடத்தப்பட்டது. இந்தத் திட்டமானது ஐந்து உறை கிணறுகளுக்கு புத்துயிர் அளித்தது. கிணறுகள் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் சூன் 2014க்குள் ஏழு கிராமங்களில் 2,350 மரக்கன்றுகள் நடப்பட்டது.[27] ஆந்திரப் பிரதேசத்தில் பள்ளர் ஆறு, மகாராஷ்டிராவில் மஞ்சிரா ஆறு, மற்றும் கர்நாடகாவில் வேதவதி ஆறு போன்றவற்றைப் புதுப்பிக்க இதேபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறந்த இந்தியாவிற்கு தன்னார்வலர்கள் அமைப்புவாழும் கலை அறக்கட்டளை, ஐக்கிய நாடுகள் அவையின் முகமைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குடிமக்களுடன் இணைந்து 5 டிசம்பர் 2012 அன்று சிறந்த இந்தியாவுக்கான தன்னார்வலர்காள்கள் அமைப்பை (VFABI) நிறுவியது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia