வாழ்வில் ஒரு திருநாள் – நாடகம் (நூல்)

வாழ்வில் ஒரு திருநாள்
நூல் பெயர்:வாழ்வில் ஒரு திருநாள்
ஆசிரியர்(கள்):ந. முத்து விஜயன்
வகை:நாடகம்
துறை:குடும்பக் கட்டுப்பாடு
இலக்கியம்
காதல்
மதுவிலக்கு
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:80
பதிப்பகர்:தாமரை பதிப்பகம்,
6 சிவஞானம் தெரு,
தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
பதிப்பு:மு.பதிப்பு திசம்பர் 2009

வாழ்வில் ஒரு திருநாள் என்னும் நூல் நான்கு சிறு நாடகங்களைக் கொண்ட ஒரு நூலாகும்.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் ந. முத்து விஜயன் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரிலுள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் மதுரையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் நாடகக் கலைஞராகவும் வினையாற்றி வருகிறார்.

வாழ்த்துரை

இந்நூலிற்கு நூலாசிரியர் பணியாற்றும் பள்ளிக்கான ஜமீன்தாரிணி காமூலம்மாள் நினைவு அறக்கட்டளையின் தலைவர் சி. ராஜகோபால், செயலாளர் எசு. அய்யப்பன், தலைமையாசிரியர் எசு. ராஜேந்திரன், உதவித் தலைமையாசிரியர்களான பி. சௌந்திரராஜன், எம். சோமசுந்தரம் ஆகியோர் நூலிற்கு வாழ்த்துரைகள் வழங்கி உள்ளனர்.

பொருளடக்கம்

இந்நூலில் வாழ்வில் ஒரு திருநாள், ஆபுத்திரன், காதல் புதிது, வானவில் எனும் தலைப்பில் நாடகங்கள் உள்ளன. இவற்றுள் வாழ்வில் ஒரு திருநாள் என்னும் நாடகம் அகில இந்திய வானொலியின் திருச்சி நிலையத்திலும் ஆபுத்திரன், காதல் புதிது என்னும் நாடகங்கள் மதுரை நிலையத்திலும் ஒலிபரப்பப்பட்டவை.வானவில் என்னும் நாடகம் இந்நூலிற்காக எழுதப்பட்டது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya