வாவில்லா ராமசுவாமி சாத்திரிவாவில்லா ராமசுவாமி சாத்திரி (Vavilla Ramaswamy Sastrulu) (1812-1891) ஓர் தெலுங்கு பண்டிதரும், சரசுவதி முத்ராலயமு என்ற தெலுங்கு பதிப்பகத்தின் உரிமையாளராகவும் இருந்தார். இது பின்னர் வாவில்லா அச்சகம் என மறுபெயரிடப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வாவில்லா குடும்பம், அச்சகத்தை வைத்திருக்கும் முதன்மையான பதிப்பகமாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. [1] சுயசரிதைஇராமசுவாமி, நெல்லூர் மாவட்டம், அல்லூருக்கு அருகிலுள்ள வாவில்லா என்ற கிராமத்தில் திராவிடப் பிராமணக் குடும்பத்தில்[2][3]பிறந்தார். தெலுங்கில் முதல் அச்சகம்வாவில்லா ராமசுவாமி சாத்திரி, 1854 ஆம் ஆண்டு சென்னையில் இந்து பாஷா சஞ்சீவினி என்ற பெயரில் தெலுங்கு பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் ஆதி சரசுவதி நிலையத்தை நிறுவினார். 1891 வரை தான் வாழ்ந்த காலத்தில், தெலுங்கு மற்றும் சமசுகிருத மொழிகளில் சுமார் 50 முக்கியமான புத்தகங்களை வெளியிட்டார். ஆந்திரப் பிரதேசத்தில் பணிபுரிந்து வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரியும் தெலுங்கு மொழி இலக்கியத்தில் ஒரு முக்கியமான அறிஞருமான சி. பி. பிரவுன் "மக்கள் கையால் எழுதப்பட்ட புத்தகங்களைப் படிக்க வேண்டியிருந்த நாட்களில், வி. ராமசுவாமி சாத்திரி ஒரு அச்சகத்தைத் தொடங்கி அவர்களின் சிரமங்களை நீக்கினார்" என இவரது முயற்சிகளைப் பாராட்டினார். [4] இது பின்னர் இவரது மகன் வாவில்லா வெங்கடேசுவர சாத்திரியால் கையாளப்பட்டது. அவர் அதை பெரிதும் மேம்படுத்தினார். தெலுங்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 900 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் அச்சிட்டார். சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia