விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை (proportional representation) என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகளில், வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு அமைய வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தல் முறையாகும். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவது, கட்சிகள் நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது போன்றவையே அதிகம் பேசப்படுகின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் அவசியமானவைதாம். அதேவேளையில் நேரடி தேர்தல் முறைக்கு மாற்றான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை (விபி) (Proportional Representation-PR) குறித்து இங்கு காணலாம்.

நோக்கங்கள்

அளிக்கப்படும் வாக்குகளில் அதிகமான வாக்குகளைப் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் ஒற்றை உறுப்பினர் தொகுதித் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த முறையாகும். இம்முறை, பல்வேறு நாடுகளிலும் வேறுபட்ட முறைகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பின்வரும் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றுபட்டுள்ளன.

  1. எல்லா வாக்காளர்களும் நீதியான பிரதிநிதித்துவத்துக்கு உரிமையானவர்கள் என்பது.
  2. எல்லாக் கருத்துக்களும் அவற்றுக்குள்ள ஆதரவுக்கு விகிதாசாரமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட உரிமை உடையவை என்பது.

இவற்றையும் பார்க்கவும்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya