1971 – சோவியத்தின் செவ்வாயை நோக்கி ஏவப்பட்ட மார்ஸ் 2 விண்கலம் தரையிறங்கி ஒன்றை அங்கு இறக்கியது. இது வெற்றிகரமாகத் தரையிறங்கினாலும், தொடர்புகளை இழந்தது.
1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.
1984 – போபால் பேரழிவு (படம்): இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
1957 – வங்கார்ட் (படம்) விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
2005 – ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.
1541 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் மனைவியும் அரசியுமான கேத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், பிரான்சிசு டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1655 – யாழ்ப்பாணத்தின் போர்த்துக்கேய ஆளுநர் அன்டோனியோ டி மெனேசா மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் டச்சுப் படைகளினால் சிறைப் பிடிக்கப்பட்டார்.
1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.
1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய மறைப்பு (படம்) அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
1937 – நாங்கிங் படுகொலைகள்: சீனாவின் நாஞ்சிங் நகரம் சப்பானிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர் (படம்).
1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
1982 – தென்மேற்கு ஏமனை 6.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 2,800 பேர் உயிரிழந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர்.
1960 – அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திரான்சு-வர்ல்ட் ஏர்லைன்சு விமானம் ஒன்றுடன் நியூ யோர்க், இசுட்டேட்டன் தீவின் மேலாக ஒன்றுடன் ஒன்று இரண்டு விமானங்களிலும் இருந்த அனைத்து 128 பேரும், தரையில் 6 பேரும் உயிரிழந்தனர்.
1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (படம்) மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
1991 – கசக்ஸ்தானில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி திசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1974 – பிரான்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.
2003 – மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
1825 – முதலாம் நிக்கலாசு மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான உருசியத்தாராண்மைவாதிகள்சென் பீட்டர்ஸ்பேர்க் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.
1930 – அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் (படம்) முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஐக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இசுலாமிய மதகுருக்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து 190 பணயக்கைதிகளையும் விடுவித்துவிட்டு விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.