விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு02Suggestions for wikipedia developmentArticle developmentஇன்று ஒரு தகவல்தமிழ் விக்கிபீடியாவில் கவனிக்கப்படாமல் புதைந்திருக்கும் கட்டுரைகளை பங்களிப்பாளர்கள் மற்றும் பயனர்களின் பார்வைக்கு கொண்டுவரும் வகையில் முதற் பக்கத்தில் இன்று ஒரு தகவல் என்று ஒரு பகுதியைக் கொண்டு வரலாம். ஆங்கில விக்கியில் உள்ள en:Wikipedia:Did you know போலவே ஆனால், புதிய மற்றும் பழைய கட்டுரைகளில் இருந்தும் தகவல்களைத் தரலாம். தகவல் ஏதேனும் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே தேவை, அது ஆர்வமூட்டுவதாக இருந்தால் கூடுதல் நலமே ஒழிய இன்றியமையாதது இல்லை. இதற்கென விக்கிபீடியா:தகவல் காத்திருப்பு வரிசை ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் எவர் வேண்டுமானாலும் தகவல்களை வரிசையின் இறுதியில் இணைக்கலாம். ஒவ்வொரு நாளும் யாராவது வரிசையின் முதலில் இருக்கும் தகவலை முதற்பக்கத்திலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்ட ஒரு வார்ப்புருவில் (வார்ப்புரு:இன்று ஒரு தகவல்) இற்றைப்படுத்தலாம். இந்த திட்டத்தைப் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். -- Sundar \பேச்சு 12:41, 4 அக்டோபர் 2005 (UTC)
மறைந்து, மறந்து இருக்கின்ற கட்டுரைகளைப் பயனர்கள் கவனத்துக்குக் கொண்டுவர இந்தத் திட்டம் உதவும். ரவி குறிப்பிட்டதுபோல் தினமும் இற்றைப்படுத்த முடியாவிட்டால்கூடப் பரவாயில்லை. அவசரப்பட்டு மாற்றினாலும் போதியளவு கவனத்தைப் பெறாமல் போய்விடக்கூடும். நல்ல திட்டம். Mayooranathan 13:48, 5 அக்டோபர் 2005 (UTC) wikipedia maintenanceநான் சில தகவல்களை மாற்றி மாற்றி கொடுத்திருப்பேன் கூடிய விரைவில் சரி செய்கிறேன் அல்லது தாங்ளே செய்து விடுங்கள் என்னார் AnnouncementsTranslate category namesஆங்கில விக்கிபீடியாவில் இருந்து கட்டுரைகளை இங்கு paste செய்யும்போது, குறைந்த பட்சம் முதலில் பக்கவகைகளை மொழிபெயர்க்க முயலலாம். இல்லாவிட்டால், பக்கவகைகள் அட்டவணை பக்கத்தில் ஏகப்பட்ட சிகப்பு இணைப்புகள் உருவாகின்றன. பின்னர், அவற்றை அழிப்பது ஒரு தனி வேலையாகிவிடக் கூடும் :( மொழிபெயர்க்க இயலாத பக்கவகைகளைப் பற்றி உரையாடல் பக்கத்தில் ஆலோசனை கேட்கலாம். --ரவி (பேச்சு) 15:49, 27 மே 2005 (UTC) Technical issues(suggestions from previous discussions added in appropriate help pages) Software upgradeI find that the mediawiki software that we use here is at least two versions behind that of the English 'pedia. Mayooranathan, how to do software upgrade etc? Talk to Brian or Angela? Also, when we do the software upgrade, we can include the Javascript editor as an opt-in feature. Before that, we need to test it out thoroughly. -- Sundar 08:45, 8 ஏப் 2005 (UTC)
உள்வரும் இணைப்புகளைப் பற்றிய புள்ளி விவரங்கள்இந்த இணைய வசதியைக் கொண்டு தமிழ் விக்கிபீடியாவிற்கு வரும் இணைப்புகளைப் பார்த்தேன். பெரும்பாலும் பிறமொழி விக்கிபீடியாக்களிலிருந்தே இணைப்புகள் வந்தாலும், பல வலைப்பதிவுகளிலிருந்து இணைப்பு வருதல் கண்டு மகிழ்ச்சி. இதில் சந்தோஷ்குருவின் முயற்சி ஒரு மையப் பணி ஆற்றியிருக்கிறது. மொத்த பக்கங்கள் 43,489 என்று கண்டு அதிர்ந்தேன். பின்னர் தான் சிவப்பு இணைப்புகளையும் சேர்த்து என்று புரிந்தது. நமக்கு இன்னும் எவ்வளவு பணியிருக்கிறது என்பதை இது உணர்த்தும். இந்த பயணியில் நம் தளத்திலிலுள்ள அனைத்து பக்கங்களையும் பட்டியலிடச் செய்து ஒவ்வொரு தனிக் கட்டுரைக்கு அருகிலும் உள்ள இணைப்பினூடே சென்றால் அந்த கட்டுரைக்கு மட்டுமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம். அதன்மூலம் அந்த கட்டுரைக்கு யாரேனும் இணைப்பு தந்திருக்கிறார்களா எனவும் அறியலாம். இதன் மூலமும் நாம் ஒவ்வொரு பக்கத்திற்கும் உள்ளிணைப்புகளைப் பார்க்கலாம், ஆனால் மொத்த தளத்திற்கும் பார்ப்பது எப்படி எனத் தெரியவில்லை. -- Sundar \பேச்சு 04:59, 30 செப்டெம்பர் 2005 (UTC) மீடியாவிக்கி தொழில்நுட்ப விபரம் - பக்க வரலாறை வெட்டி ஒட்டும் நகர்த்தல் வசதிமுதன் முறையாக பக்க வரலாறை வெட்டி ஒட்டும் நகர்த்தல் வசதியை பயன்படுத்திப் பார்த்துள்ளேன். பார்க்க: [1], en:Wikipedia:How to fix cut and paste moves. -- Sundar \பேச்சு 05:21, 17 நவம்பர் 2005 (UTC) மீயுரைத் துண்டுகளை உட்புகுத்துவது எப்படிகட்டுரையை தொகுக்கும்போது html code-களை எழுத வேண்டும். இதனை விக்கிக்கு தொந்தரவில்லாமல் இணைப்பது எப்படி? --முஃப்தி 20:01, 6 டிசம்பர் 2005 (UTC)
<html> <b>Hai</b> </html>
தமிழ் விக்கிபீடியா மேன்படுத்தல் - சில சிந்தனைகள்நான் இங்கு பலர் உரையாடுவதை பற்றி கவனித்துகொண்டுதான் வருகின்றேன். சில சிந்தனைகளை குவியவைத்து பகிரலாம் என்று இருந்தேன், எனினும் சில பகிர்வுகள்.
எல்லோரும் கணக்கு ஏற்படுத்தி பங்களிக்கமாட்டார்கள். சிலர் தமது உண்மை அடையாளங்களை தர விரும்ப மாட்டினர். அவை விக்கிக்கு உடன்பாடான செய்ல்பாடுகளே என்பதையும் தெரியபடுத்தலாம்.
தமிழில் பல் துறை தகவல் சேமிப்புக்கு, பகிர்வுக்கு என முன்னெடுக்கப்பட்ட பல முயற்சியகளின் பின்னடைவில்தான் தமிழ் விக்கிபீடியா கட்டமைக்கப்படுகின்றது என்பது தெளிவு படுத்தப்படவேண்டும். இது ஒரு கூட்டு செயல்பாடு, கூட்டு மதிநுட்ப உருவாக்கம், பகிர்வு, பாதுகாப்பு என்பது தெளிவுபடுத்தபட வேண்டும்.
சுந்தர், ரவி கருத்துக்களுக்கு நன்றி. எனது பதில் கருத்துக்களை பின்னர் பகிர்கின்றேன். --Natkeeran 21:04, 4 செப்டெம்பர் 2005 (UTC)
கொள்கைப் பக்கங்கள்நான் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து சில கொள்கைப் பக்கங்களை இங்கு பதிவேற்றியுள்ளேன். அவற்றை நாம் மொழிபெயர்க்கவும் தெளிவாக்கவும் வேண்டும். அதே நேரம்,
-- Sundar \பேச்சு 10:02, 12 செப்டெம்பர் 2005 (UTC) விக்கிபீடியா கொள்கைகள் - உறுதியான சில உண்டு
--Natkeeran 18:35, 13 செப்டெம்பர் 2005 (UTC)
நற்கீரனுடைய அவதானிப்புகள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. அவற்றை நாங்கள் செயல் படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமென்பதிலும் ஐயம் இல்லை. சுந்தர் முன்னர் குறிப்பிட்டபடி ஆங்கில விக்கிபீடியாவின் எல்லாக் கொள்கைகளும் தமிழ் விக்கிபீடியாவுக்கு அச்சொட்டாகப் பொருந்தா என்பதும் சரிதான். அத்தகையவற்றையும் இனங்கண்டு எங்களுடைய நிலைமைகளுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ளவும் வேண்டும். Mayooranathan 18:08, 14 செப்டெம்பர் 2005 (UTC) தன்னிச்சையான கட்டுரைத் தலைப்பு மாற்றங்கள்அண்மைக் காலங்களில் சில கட்டுரைகளின் தலைப்புகள் தன்னிச்சையாக மாற்றப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாண அரசு என்ற கட்டுரையின் தலைப்பு, யாழ்ப்பாண இராஜதானி என்றும், இலங்கை வம்சாவழித் தமிழர் என்ற கட்டுரை இலங்கை தமிழர் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது உரிய முறையில் செய்யாததால், கட்டுரையின் பழைய வரலாறு எதுவும் புதிய பக்கத்துக்கு மாற்றப்படாமல் பெயர்மாற்றம் செய்தவர் இக்கட்டுரையைப் புதிதாக எழுதியது போல் உள்ளது. இவ்வாறு பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கருத்து உடையவர்கள் ஒரு முறையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். கட்டுரைகளின் தலைப்புப் பிழையானது அல்லது வேறு தலைப்புப் பொருத்தமானது என்று கருதினால், தயவுசெய்து அதைப் பேச்சுப் பக்கத்தில் கலந்துரையாடுங்கள். ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிர்வாகி தரத்திலுள்ளவர்கள் அதை உரிய முறையில் வரலாற்றுடன் சேர்த்து மாற்றுவார்கள். யாழ்ப்பாண அரசு என்ற தலைப்பு காரணத்துடன் தான் கொடுக்கப்பட்டது. இராஜதானி என்பது தமிழ்ச் சொல் அல்ல. வேறு தமிழ்ச் சொல் இருக்கும்போது பிறமொழிச் சொற்களைத் தவிர்த்தல் என்ற தமிழ் விக்கிபீடியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையில்தான் அரசு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இது போலவே இலங்கையில் குடியுரிமை உள்ள அனைத்துத் தமிழரும் இலங்கைத் தமிழரே. ஆனால், இலங்கையில் வம்சாவழியாக வாழும் தமிழருடையதும், பதிவுமூலம் குடியுரிமை பெற்ற தமிழர்களினதும், வரலாறு, பிரச்சினைகள், வாழிடம் போன்ற பல அம்சங்களில் வேறுபாடுகள் இருப்பதனால் இரண்டு பிரிவினரைப் பற்றியும் தனித்தனி கட்டுரைகள் எழுதப்படவேண்டும் என்பதனாலேயே அதிகாரபூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப் படுகின்றபடி வம்சாவழி என்னும் சொல் சேர்க்கப்பட்டது. எனவே இனி மேல் இவ்வாறு செய்யுமுன் உரிய முறையைக் கடைப்பிடிக்கவும். Mayooranathan 18:58, 14 செப்டெம்பர் 2005 (UTC) மயூரநாதன் உங்களுடைய அவதானிப்புகள் சரி. லைடன் தீவு ஏன் உபயோகிக்கப்பட்டது என்பது உரையாடல் பக்கத்தில் விளக்கப்பட்டிருந்தும், யாரோ வேலணைத்தீவு என்று விளக்கம் தரமால் மாற்றி விட்டனர். உத்தியோக பூர்வமாக அவ்வாறு வழங்கப்படுவதால், அதைப்பற்றி நான் எதுவும் கூறவில்லை. ஆனால், அந்த உரையாடல் பகுதிகள் விக்கியின் நினைவகத்தில் சிக்கி விட்டது. தகுந்த விளக்கம் தந்து மாற்றுவதில் ஆட்சோபனை இல்லை. தமிழ் விக்கிபீடியா நற்பண்புகளில் ஒன்றாக இதை முன் நிறுத்த வேண்டும். --Natkeeran 20:05, 14 செப்டெம்பர் 2005 (UTC)
Thoughts on Co-Intelligence“In a species equipped with language, an intuitive psychology, and a willingness to cooperate, a group can pool the hard-won discoveries of members present and past and end up far smarter than a race of hermits. Hunter-gathers accumulate the know-how to make tools, control fire, outsmart prey, and detoxify plants, and can live by this collective ingenuity even if no member could re-create it all from scratch. Also, by coordinating their behavior (say, in driving game or taking turns watching children while others forge), they can act like a big multi-headed, multi-limbed beast and accomplish feats that a die-hard individual could not. And an array of interconnected eyes, ears, and heads is more robust than a single set with all its shortcomings and idiosyncrasies. There is a Yiddish expression offered as a reality check to malcontents and conspiracy theorists: The whole world isn’t crazy.” Steven Pinker – “The Blank Slate” (page 63) Tamil Wikipedia is “multi-headed, multi-limbed beast”, with “an array of interconnected eyes, ears, and heads.” Still, you might wonder what is the need for Tamil Wikipedia when there is the Wikipedia. I believe Tamil Wikipedia offers a Tamil World View which has its unique set of perspectives, experiences, knowledge and history that to loose it would be a loss to humanity. --Natkeeran 23:26, 19 செப்டெம்பர் 2005 (UTC) வார்ப்புரு-நகரம்நகரங்களுக்கு என்று ஒரு வார்ப்புரு உள்ளதா? இருப்பின் தெரியப்படுத்துங்கள்.--சிவகுமார் 16:17, 28 செப்டெம்பர் 2005 (UTC)
விக்சனரிக்கு வாருங்கள்விக்கிபீடியா நல்ல முறையில் உரு பெற்று வருவதை மகிழ்வுடன் கவனிக்கும் வேளையில் உங்கள் அனைவரையும் தமிழ் விக்சனரிக்கும் வந்து பங்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தற்பொழுது அங்கு புதுப் பக்கங்களை உருவாக்குவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு நீங்கள் 5 நிமிடம் செலவிட்டாலே குறைந்தது 15 பக்கங்களை உருவாக்கிவிடலாம். இந்தப் பக்கத்தை பார்த்தால் நம்புவீர்கள் :) தற்பொழுது ஆங்கிலம்-தமிழ் அகராதி உருவாக்குவதில் நானும் சிவக்குமாரும் முனைந்துள்ளோம். காலப் போக்கில் பிற மொழி அகராதிகளும் உருவாக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கிறேன். அங்குள்ள இடைமுகத்தை இங்குள்ளது போல் இற்றைப்படுத்திய பின் விக்சனரி தளத்தையும் விக்கிபீடியாவை போல aggressiveஆக promote செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். விக்கிபீடியாவை விட விக்சனரி அதிக பங்களிப்பாளர்களை ஈர்க்கும் என்பது என் கணிப்பு. ஏனெனில் அங்கு பின்பற்றப்பட வேண்டிய நடை நெறிகள் மிகவும் குறைவு. குறைந்த பட்ச பக்க அளவுகளும் கிடையாது.--ரவி (பேச்சு) 20:31, 12 அக்டோபர் 2005 (UTC) ஆம், விக்சனரியும் மிகவும் முக்கியமான ஒன்றுதான். புதிய புதிய பொருட்களும், கருத்துருக்களும், மிக வேகமாக நாளாந்தம் உருவாகிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் அவற்றுக்குரிய தமிழ்ச் சொற்கள் உருவாவதில்லை. அவற்றுக்குரிய பிற மொழிச் சொற்களையே நாங்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுகிறோம். தமிழிலே புழங்கும் பிற மொழிச் சொற்களின் எண்ணிக்கை கன வேகத்தில் அதிகரித்து வருகிறது. விரைவில் நாங்கள் பேசும், எழுதும் தமிழில் 5%, 10% தமிழ்ச் சொற்களே இடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆகவே நிறையத் தமிழ்ச் சொற்கள் புதிதாக உருவாக வேண்டும். சொல்லாக்கத்துக்கான அடிப்படைகளையும் உருவாக்கவேண்டும். விக்சனரி இதற்கான தளமாக உருவாவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. ஆரம்பத்தில் தமிழ் விக்சனரியைத் தொடங்கி அதன் முதற்பக்க இடைமுகத்தை உருவாக்கியது நான் தான். என்னாலியன்றளவு சில சொற்களையும் சேர்த்திருக்கிறேன். அத்துடள் தமிழ் இணயப் பல்கலைக் கழகத்தின் (TVU) கலைச் சொல் அகராதி இல்லாதிருந்த அல்லது என்னால் அறியப்படாதிருந்த காலத்தில் விக்சனரியில் கலைச் சொல் அகராதி ஒன்றைத் தொடங்க எண்ணி சில ஆரம்ப நடவடிக்கைகளையும் எடுத்தேன். ஆனால் பின்னர் தமிழ் விக்கிபீடியாவில் அதிக நேரம் செலவு செய்ததால் விக்சனரியை அதிகம் கவனிக்க முடியவில்லை. இப்பொழுதும் தமிழ் விக்கிபீடியாவுக்காகக் கலைச் சொற்கள் தேடும் போதெல்லாம் விக்சனரியைப் பற்றி எண்ணுவதுண்டு. வரும் நாட்களில் அங்கும் சிறிது நேரம் ஒதுக்கலாம் என எண்ணியுள்ளேன். பார்ப்போம். Mayooranathan 08:43, 13 அக்டோபர் 2005 (UTC) Firefox- விக்கிபீடியர்களுக்கான உலாவி....!!!!இன்றைக்கு மிக முக்கியமான ஒரு firefox நீட்சியினை கண்டுபிடித்தேன். இவ்வளவுகாலமும் விக்கிபீடியாவின் தொகுத்தலை இலகுவாக மேற்கொள்வதற்கு எதாவது மென்பொருள் கிடைக்குமா என தேடிவந்தேன். இன்றைக்குதான் அவ்வாறானதொரு மென்பொருள் firefox நீட்சியாக கிடைத்திருக்கிறது. எவ்வாறு நீங்கள் உரைச்செயலி ஒன்றில் இலகுவாக வடிவமைப்புக்குக்களை தொகுக்கிறீர்களோ அவ்வளவு இலகுவாக இந்த நீட்சியினை பயன்படுத்தி விக்கிபீடியாவின் தொகுத்தல்களை செய்யலாம். தமிழ் விக்கிபீடியாவுக்கும் இது அநுசரணை வழங்குகின்றது. விக்கிபீடியா தொகுத்தலை மேலும் வினைத்திறன்மிக்கதாக்க அனைவருக்கும் இந்த நீட்சியினை பரிந்துரைக்கிறேன். --மு.மயூரன் 12:40, 22 அக்டோபர் 2005 (UTC)
வகைப்படுத்தப்படாத பக்கங்கள்வகைப்படுத்தப்படாத பக்கங்கள் சமீபத்தில் இன்றைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை குறைந்திருக்கின்றன, நல்ல முன்னேற்றம் என்றே கருதுகின்றேன். எனினும், நன்கு அனுபவப்பட்ட பயனர்கள்கூட சில சமயங்களில் தங்கள் பதிப்புக்களை வகுக்க தவறிவிடுகின்றனர். இயன்றவரை சரியான பகுப்பில் சேர்க்க முனைவது வரவேற்கபடவேண்டியதொன்று. பகுப்புக்கள் இல்லாத சமயம் அவற்றை தகுந்தவாறு ஏற்படுத்தி கொள்ள் வேண்டும். குறைந்த பட்சம் ஒரு பொது பகுப்பில் சேர்பதும் நன்று. --Natkeeran 02:20, 23 அக்டோபர் 2005 (UTC) 300 பயனர்கள்தற்போது தமிழ் விக்கிபீடியாவில் மொத்தம் 300 பயனர்கள் உள்ளனர். :-) -- சிவகுமார் 07:37, 14 டிசம்பர் 2005 (UTC)
யாரும் கலண்டர்களை தமிழ் படுத்த முடியுமெனின் முயற்சித்து பார்க்கலாம்!நான் மொழி பெயர்த்துள்ளேன். டிசம்பரை மட்டும் எழுத்துப்பெயர்ப்பு செய்துள்ளேன். ஏனெனில், 21 டிசம்பர், 2005 என்பதும் 21 மார்கழி, 2005 என்பதும் இருவேறு தேதிகளைக் குறிக்கும் அல்லவா? -- Sundar \பேச்சு 08:29, 21 டிசம்பர் 2005 (UTC) சிறந்த விக்கிபீடியா வடிவமைப்பு எடுத்துகாட்டுகள்
எழுத்து தமிழ் பிளவுபட கூடுமா? - ரவிக்கு விரிவான பதில்
இணையத்தில் துறைசார் தமிழ் புத்தகங்கள்
எழில்நிலா தளத்தில் விக்கிபீடியா கட்டுரைகள்எழில்நிலா தள முதற் பக்ககத்தில் யுனிக்கோடு குறித்த தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள் பிரதானமாய் தரப்பட்டுள்ளன. தமிழ் விக்கிபீடியா (த.வி) வளர வளர அது ஒரு நம்பகத் தன்மை கொண்ட தமிழ் மொழி மூலமான reference sourceஆக இருக்க வேண்டும் என்ற நம் விருப்பத்தையும் நோக்கையும் இங்கு கண்கூடாக காண இயல்கிறது. த.வி அதன் பிறப்பு நிலையில் இருந்து முன்னேறி அனைவரும் கவனிக்கவல்ல வளர்நிலையை எட்டியுள்ளதை உணர்ந்து அவரவர் துறை சார் கட்டுரைகளை உருவாக்குவதுடன் அவற்றின் தரத்தையும் பேண வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகிறது. வருங்காலத்தில் அறிவு புகட்டும் பல்வேறு தமிழ் ஊடகங்களுக்கும் த.வி ஓர் அறிவூற்றாக விளங்கும் என்ற நம்பிக்கையை இது பலப்படுத்துகிறது.--ரவி 14:46, 7 ஜனவரி 2006 (UTC) தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பப்படு திட்டமிட்டபடி நெல்லை அறுவடை செய்துள்ளார்; நானும் என் பங்கிற்கு புதுப்பானை செய்துள்ளேன். எவரேனும், கரும்பு வெட்டினால் பொங்கல் சமைத்து பொங்கல் திருநாளைக் கொண்டாடலாம். :-) -- Sundar \பேச்சு 08:51, 13 ஜனவரி 2006 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia