விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு03தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பப்படு திட்டமிட்டபடி நெல்லை அறுவடை செய்துள்ளார்; நானும் என் பங்கிற்கு புதுப்பானை செய்துள்ளேன். எவரேனும், கரும்பு வெட்டினால் பொங்கல் சமைத்து பொங்கல் திருநாளைக் கொண்டாடலாம். :-) -- Sundar \பேச்சு 08:51, 13 ஜனவரி 2006 (UTC)
இலங்கை தமிழ் இலக்கியம் பகுப்பை நூலக திட்டத்துடன் இணைந்து வகைப்படுத்தல்நற்கீரன், விக்கிபீடியாவுடன் தொடர்புடைய ஏனைய உறுப்பினர்கள் கவனத்திற்கு.. எமது நூலகம் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈழத்து எழுத்தாளர்கள், ஈழத்து இலக்கியம் பற்றிய ஆவணப்படுத்தல்களை விக்கிபீடியாவில் பங்களிப்பாக ஆவணப்படுத்துவதாக முடிவெடுத்திருந்தோம். அதன்படி நூலகம் திட்டத்தில் இதற்கான தனிப்பக்கமும் ஆரம்பிக்கப்பட்டது. விக்கிபீடியாவின் ஒவ்வொரு இற்றைப்படுத்தலுக்கும் எமது பக்கத்தை இற்றைப்படுத்திக்கொண்டிருப்பது சாத்தியமற்றதென உணர்கிறேன். எனவே இதற்கான ஒழுங்குமுறை ஒன்றினை கண்டறிய வேண்டியுள்ளது. விக்கிபீடியாவில் பக்கங்கள் பகுக்கப்படுகின்றன. இவ்வாறு பகுக்கப்படும்போது குறிப்பிட்ட பகுப்புக்குரிய பக்கத்திற்கு செல்லும்போது அதற்கு கீழ்வரும் அத்தனை தலைப்புக்களையும் பார்வையிடக்கூடியதாக இருக்கும். இதனை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என நம்புகிறேன். ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பு இப்போது விக்கிபீடியாவில் இல்லை. இவ்வாறனதொரு பகுப்பை உருவாக்கி அதன்கீழ் கட்டுரைகளை ஒழுங்குபடுத்தினால், ஈழத்து இலக்கியம் பகுப்பு பக்கத்தையே எமது விக்கிபீடியாவுக்கான பங்களிப்பு பக்கமாக கருதிக்கொள்ளலாம். இதுபற்றிய ஆலோசனையை இங்கே வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது இந்த விடயம் தொடர்பாக விக்கிபீடியாவ்ல் உள்ள கட்டுரைகளை ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பின் கீழ் கொண்டுவர நற்கீரன் தயவு செய்து உதவவும். அதற்காக கட்டுரைகளில் சேர்க்கவேண்டிய பகுப்பு விபரத்தை, syntax ஐ இங்கே அனுப்பினால் நன்றாக இருக்கும். -மு.மயூரன்.
மயூரன் மற்றும் நூலக திட்ட ஆர்வலர்களுக்கு: பகுப்புக்களை யாரும், எப்பொழுதும் விக்கிபீடியாவில் ஏற்படுத்தலாம், அது ஒரு பிரச்சினை இல்லை. நீங்களே [[பகுப்பு:ஈழ இலக்கியம்]] என்று உங்கள் கட்டுரையின் இறுதியில் சேர்த்து விட்டு, பின்னர் அப்பகுப்பிற்கு சென்று, நீங்கள் தேர்ந்த மேற் பகுப்புக்களுடன் சேர்த்து கொள்ளலாம். உதாரணமாக ஈழத்து இலக்கியத்தை [[பகுப்பு: இலக்கியம்]], [[பகுப்பு:தமிழ் இலக்கியம்]], [[பகுப்பு:இலங்கை]] ஆகிய பொருத்தமான மேற்பகுப்புக்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். ஈழத்து இலக்கியத்தின் கீழ் என்ன என்ன பகுப்புக்கள் தேவை என்பதை நீங்கள் சற்று ஒழுங்கே தந்தீர்களானால், அப்பகுப்புக்களை உருவாக்கி கொள்ளலாம். தற்சமயம் துணைப்பகுப்பாக ஈழத்து எழுத்தாளர்கள் என்ற பகுப்பு ஒன்று மட்டுமே உண்டு. எனது கணிப்பில் மேலும் சில துணைப்பகுப்புக்களையும் உருவாக்கலாம். அவையானவை: (குறிப்பு: ஈழ இலக்கியம் என்னும் பொழுது ஈழ தமிழ் இலக்கியத்தையே குறிப்பிடுகின்றேன். ஈழ தமிழ் இலக்கியத்தில் மலைய தமிழ் இலக்கியம், முஸ்லீம் தமிழ் இலக்கியம், புலம் பெயர் ஈழ தமிழ் இலக்கியம் அடங்குமா என்பதில் தெளிவு இல்லை. இலங்கை தமிழ் இலக்கியம் என்று பொது பெயர் தருவது நன்று. மேலும், இலக்கியம் என்னும் பொழுது சமூக விஞ்ஞானம், மற்றும் தமிழில் எழும் விஞ்ஞான படைப்புக்களையும் சார்ந்தே நீங்கள் குறிக்கிறீர்களோ என்றும் எண்ண தோன்றுகின்றது. அப்படி ஆகினும் அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை.)
நாடுகளை துணை பகுப்புகளாக கொன்டிருக்கலாம். உ+ம்: கனேடிய தமிழ் இலக்கியம்) நாங்கள் கலந்துரையாடி ஒரு ஒழுங்கிய, விரிவான வகைப்படுத்தலை ஏற்படுத்திய பின்னர் அதை விக்கிபீடியாவில் இடுவது சிரமம்மற்ற ஒரு வேலை. விக்கிபீடியாவிலும் வேறு ஒரு தளத்திலும் சேர்ந்து ஒரேதகவலை ஒருங்கமைக்க முடியுமா? அப்படி முடிந்தாலும் அதை செயல்படுத்த வேண்டிய நுட்ப அறிவை எங்கு பெறுவது? முக்கியமாக இது தேவையா? அகிய கேள்விகள் இன்னும் விடை காண வேண்டும். என் கணிப்பில் நீங்கள் பகுப்புக்களுக்கு நூலக தளத்தில் சுட்டிகள் நல்கினால் தொகுத்தலை விக்கி தரவு தளத்தில் மேற்கொள்ளுதல் நன்று, தற்போதைக்கு நல்ல இடைக்கால தீர்வு என்று கருதுகின்றேன். அதற்கு நீங்கள் சுட்டியது போல ஒரு ஒழுங்கிய வகைப்படுத்தல் தேவை. மேலும், விக்கிபீடியாவில் இப்படிப்பட்ட தகவல்களை சேர்பது உங்கள் வழங்கியின் சேமிப்பு தேவைகளையும் மட்டுப்படுத்தும். இப்படிக்கு, நற்கீரன் --Natkeeran 20:55, 15 ஜனவரி 2006 (UTC) Interwikiநான் English Wikipedia உலாவிய போது interwiki இணைப்புகளை மொழிகளுக்கிடையில் அளவிட ஓரு கருவி இருந்தது. ஆயினும் அதில் தமிழ் மொழி இருக்கவில்லை. அங்கு இருந்த இணைப்பின் மூலம் அங்கு ஓரு செய்தியை விட்டு வந்தேன். அச்செய்திக்குப்பதிலும் கிடைத்தது. அதில் இக்கருவியை குறைந்தது ஐந்து பேர் பயன்படுத்துவதாயின் தமிழ் மொழியையும் உத்புகுத்துவதாக உள்ளது. இது முக்கியமான தேவையாயின் நக்கீரன்,சுந்தர்,ரவி அல்லது யாராவது கவனம் ஏடுக்கவும். If it is must leave a message using the link in that page. Thanks --ஜெ.மயூரேசன் 10:04, 22 ஜனவரி 2006 (UTC)
TWpedia Recent Changes page is very CLUTTERED.TWpedia Recent Changes page is very cluttered (at the top, not the listing). That may off put some readers. Perhaps, someone could re word it more effectively, and reformat with an aim for clarity and aesthetic presentation. Of course, all the details need to be included. --Natkeeran 00:46, 4 பெப்ரவரி 2006 (UTC)
விக்கி மூலம் தமிழ் படுத்தப்பட்டு, பழந்தமிழ் நூல்கள் அங்கு இடப்படவேண்டும்அன்புடன் நற்கீரன், நான் விக்கி செயற்றிட்டத்துடன் அதிகம் பரிச்சயமானவனல்ல. என்னிடம் நிரந்தர இணைய இணைப்பு இல்லாததால் விக்கிக்கு எந்தப் பங்களிப்பும் செய்தவனுமல்ல. நூலகம் திட்டத்தில் நூல்களை வெளியிடுயும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன் என்பது மட்டும் தான் இணையத் தமிழுக்கு என்னாலான சிறு பங்களிப்பு . ஆயினும் விக்கித் திட்டம் தொடர்பான பிரமிப்பு ஆர்வமும் என்னிடம் சில காலமாக இருந்து வருகிறது. விக்கிபீடியா , விக்சனரி, விக்கிபுக்ஸ் மற்றும் விக்கிசோஸ் ஆகிய நான்கையும் தமிழில் நன்கு வளர்த்தெடுப்பது மிகவும் பயனுடையதாக இருக்கும் என்றே கருதுகிறேன் . இவ்விடத்தில் எனக்கு ஒரு பெரும் குழப்பம் இருக்கிறது. அது விக்கிபுக்ஸ் இல் பழந்தமிழ் நூல்கள் தொகுக்கப்படுவது . நேற்று மதுரைத்திட்டத்துக்கு வந்திருந்த மடல் என் குழப்பத்தை மேலும் அதிகமாக்குகிறது. மதுரைத் திட்ட நூல்களை விக்கிபுக்ஸ் உடன் இணைக்கலாமா என்று மதுரைத்திட்டத்தின் கல்யாணசுந்தரத்தை கேட்டிருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழ் நூல்கள் இணைக்கப்பட வேண்டிய சரியான இடம் விக்கிசோஸ் தானே ? அங்கு தானே மூல ஆவணங்கள் தொகுக்கப்படுவது பொருத்தமானது? ஆங்கில விக்கித் திட்டங்களை பார்க்கும் போது நான் நினைப்பது சரியெனவே எனக்குப் படுகிறது. விக்கிபுக்ஸ் பகுதியில் நாம் உருவாக்க வேண்டியவை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் edit செய்யக்கூடிய கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள் அல்லவா? திருக்குறளில் மாற்றங்கள் செய்வது எவ்விதம் பொருத்தமானது ? விக்கிசோஸ் மற்றும் விக்கிபுக்ஸ் ஆகியவை தமிழைப் பொறுத்தவரை மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன. ஆரம்பத்திலேயே தவறான பாதையில் செல்வது பொருத்தமானதல்ல் . விக்கிப்பீடியாவுக்கு தொடர்ந்து பங்களிப்பவராக அறிந்தே உங்களுக்கு இந்தமடலை எழுதுகிறேன் . இம்மடலை மயூரானந்தம், ரவி, சிவகுமார், சுந்தர் ஆகியோருக்கும் forward செய்து விடுங்கள். விக்கிபுக்ஸ் பகுதியில் தமிழுக்குத் தேவையான நிறையக் கையேடுகள் மற்றும் நூல்களை உருவாக்கிக் கொள்ள முயல வேண்டும் . கணினித் தொழினுட்பம் நன்கு தெரிந்தவர்களுக்கு தமிழ்மொழியில் போதிய பரிச்சயம் இல்லாமையால் யுனிக்கோட்டில் உள்ள குழப்பங்கள் மற்றும் ர் க்கு கால் காணாமற் போனது போன்றவை ஏலவே ஏற்பட்டுள்ளன . இத்தகைய மோசமான விபத்து விக்கிச் செயற்றிட்டத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த மடலை எழுதுகிறேன். விக்கித் திட்டத்தில் தொடர்ந்து விவாதிக்க தேவையான இணைய இணைப்பு என்னிடமில்லை. இதே காரணத்தால் விக்கிசோஸ் மற்றும் விக்கிபுக்ஸ் என்பன பற்றி நான் முழுமையாகத் தவறாக விளங்கிக் கொண்டும் இம்மடலை எழுதியிருக்கக்கூடும் . ஆதலால் உஙகளிடமிருந்து சிறு பதில் ஒன்றைப் பெற ஆவலாயுள்ளேன். தோழமையுடன், கோபி அன்புடன் கோபிக்கு: மடலகுக்கும் ஆர்வத்துக்கும் நன்றிகள். நூலகம் திட்டத்தில் உங்களின் அமைதியான, பொறுமையான பணியை நான் நன்கு அறிவேன். நன்றிகள். நான்கு விக்கி ஆக்க மார்கங்களை வளர்ப்பது மிகவும் பயனுடையது என்பதே என் கருத்தும்.
இறுதியாக, நூலகத்தின் பல புத்தகங்களை அவ்வப்பொழுது படிப்பேன். புத்தக தெரிவு நன்று. பல தகவல் சார் நூல்கள் இருக்கின்றன. மேலும், உங்கள் மடலின் பிரத்யோக, கருத்து சரியே, பிறரின் கவனத்துக்கு கொண்டு வர முயற்சிப்பேன். விக்கி மூலத்தின் தமிழ் பிரிவை ஆரம்பித்து, அங்கு பழந்தமிழ் நூல்களை இடுவதுவே மிகவும் பொருந்தும். நன்றி.
விக்கிநூல்கள் புதிய பாடப் புத்தகங்களை (Text Books) உருவாக்குவதற்கான இடம் என்றுதான் வாசித்ததாக ஞாபகம். பழந்தமிழ் நூல்களுக்கு உரிய இடம் விக்கிமூலம்தான். ஆரம்பத்தில் எல்லாமொழிகளுக்கும் உரிய விக்கிமூலப் பக்கங்களும் தனித்தனியான முதல் பக்கங்களுடன் ஒரே தளத்தில், ஆங்கில இடைமுகங்களுடன்தான் இருந்தன. அதனால் தான் தமிழுக்கும் 2004 ஆம் ஆண்டில் அவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது சில மொழிகளுக்குத் தனி domains உள்ளன. தமிழுக்கும் தனி domain கோர முடியும். இந்தப் பக்கத்துக்குப் போய் இதற்கான கோரிக்கையை வைக்கலாம். அதற்கும் ஆதரவு எதிர்ப்பு வாக்குகள் பதியப்படுவதற்காகக் காலம் ஒதுக்கப்படுகிறது. இதனால் தனி domain கிடைப்பதற்குச் சிறிது காலம் ஆகும்போல் தெரிகிறது. ஸ்ரீஹரி, உங்களுக்கு விக்கிமூலம், விக்கிநூல்கள் போன்றவற்றுக்கான நிர்வாகிதரம் பெறுவதில் ஆர்வம் இருந்தால் இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள். விக்கிமூலத்தைப் பொறுத்தவரை தனித் தளம் தொடங்கப்பட்டபின்பே இதனைச் செய்யமுடியும். தனி domain கோரிக்கை வைக்குமுன் சில வேலைகளும் செய்யவேண்டும் போல் தெரிகிறது. இதை வாசித்துப் பர்க்கவும்.Mayooranathan 17:10, 14 பெப்ரவரி 2006 (UTC)
ஸ்ரீஹரி தமிழ் விக்கிமூலம் திட்டத்துக்கான அதிகாரி தரத்தைத் தான் கோரப்போவதாக எண்ணியிருந்தேன். விக்கிநூல்கள் பக்கங்களில் தற்போது நிகழும் நடவடிக்கைகள் எல்லாமே அநேகமாக விக்கிமூலம் பக்கங்களுக்குச் செல்ல வேண்டியவைதான். எனவேதான் மூல நூல்களின் பதிவுகளில் ஆர்வம் காட்டும் ஸ்ரீஹரி விக்கிமூலத்துக்குத்தான் அதிகாரி தரம் பெற விரும்புகிறார் என எண்ணியிருந்தேன். நிற்க, மீட்டா விக்கியில் நிர்வாகி அல்லது அதிகாரி தரங்களுக்கு விண்ணப்பிக்குமுன் சில பணிகளைச் செய்யவேண்டியிருக்கும். ஸ்ரீஹரி விண்ணப்பித்த பக்கத்திலேயே விபரங்களைத் தந்திருக்கிறார்கள். வாசித்து அதன்படி செய்யவும். தமிழ் விக்கிபீடியாவிலும் ஆரம்பத்தில் இவ்வாறுதான் செய்தோம். தமிழ் விக்கிபீடியாவில் நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தைப் பார்க்கவும் இதைப் போன்ற ஒரு பக்கத்தைத்தான் நீங்கள் அங்கே உருவாக்கவேண்டும். மீட்டா பக்கத்தில் இதற்கு ஒரு இணைப்பும் கொடுக்க வேண்டும். தமிழ் விக்கிபீடியாவில் காணும் பக்கத்தையே நீங்கள் அங்கே பிரதிசெய்து தேவையான மாற்றங்களைச் செய்யலாம். நற்கீரன் என்னுடைய பயனர் பக்கத்தில் இது தொடர்பாகச் சில குறிப்புக்களை விட்டிருந்தார். விக்கிமூலத்துக்கு தனி Domain கோருவதில் தாமதம் (wait) செய்யுமாறு நான் குறிப்பிடவில்லை. நிதானமாக ஆரம்பிக்குமாறுதான் கூறுகிறேன். இப்போது ஸ்ரீஹரியின் விண்ணப்பத்துக்குக் கிடைத்த பதில் போன்ற பதில்களைத் தவிர்ப்பதற்காகத் தான் அவ்வாறு கூறினேன். விக்கிமூலம் விடயத்தில் தனி domain கிடைக்கக் காலம் ஆகும்போல் தெரிகிறது. எட்டு மாதங்களுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களும் அப்படியே இருப்பதைக் காண முடிகிறது. தொகுதி தொகுதியாகத் தான் தனி Domain கள் வழங்கப்படுகிறது போல் தெரிகிறது. ஆரம்பத்தில் சில மொழிகளுக்குக் கொடுத்தபின் ஒரேயொரு தடவை இன்னும் சில மொழிகளுக்குக் கொடுத்துள்ளார்கள். எனவே ஒரு முறை reject செய்தால் மீண்டும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால்தான் உரிய பக்கங்களில் தரப்பட்டுள்ள எல்லா நிபந்தனைகளையும் வாசித்து அவற்றைப் பூர்த்தி செய்த பின்னர் கோரிக்கையை முன்வைக்கலாம் என்று கூறுகிறேன். இதை விரைவாகச் செய்யவேண்டும். அக் கோரிக்கையிலேயே அதிகாரி தரத்துக்கான பெயரையும் கொடுக்கவேண்டும். நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் தமிழ் விக்கிசோர்ஸ் முதற்பக்கத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். இன்னும் செய்யவேண்டும். சில பக்கங்களையும் சேர்த்துள்ளேன். விக்கிமூலத்துக்கான அதிகாரி தரத்தை யார் பெறவிரும்புகிறீர்கள்? அவ்வாறு விரும்புபவர்கள் தங்கள் முகத்தை அங்கேயும் அடிக்கடி காட்டவும். அதிகாரி தரம் கோருவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகளுக்கான நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள் என்பதை நிச்சயம் செய்து கொள்ளுங்கள். என்னுடைய ஆதரவு என்றும் உண்டு. Mayooranathan 07:28, 17 பெப்ரவரி 2006 (UTC)
சிறப்பு கட்டுரைப் படைப்பாளர்சில நாட்கள் முன்பு பெர்கிளி தமிழ் அன்பர் (ஏற்கெனவே எனக்கு அறிமுகமானவர் தான்) ஒருவர் கேண்டரின் குறுக்குக்கோடு சார்பின்மாறியைப் பற்றிய என்னுடைய வலைப்பதிவைப் பார்த்துவிட்டு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டார். பேராசிரியர். ஹார்ட் போன்ற பல தமிழறிஞர்கள் மற்றும் அறிஞர் குழுக்களுடன் அவருக்கு நல்ல அறிமுகம் உண்டு. அவர் தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கும், ஆங்கில விக்கிபீடியாவில் தமிழைப் பற்றிய கட்டுரைகளின் வளர்ச்சிக்கும் என்ன உதவி தேவை என்று கேட்டார். அப்பொழுது எண்ணிப் பார்க்கையில், மேலும் பயனர்கள் வர வேண்டும்; அதிலும் குறிப்பாக துறை வல்லுநர்கள் முதலில் வந்து பங்களித்து ஒரு நல்ல அடித்தளம் அமைத்துத் தந்தால், பொதுப் பயனர்கள் அவற்றின் மீது ஒரு நல்ல கலைக்களஞ்சியத்தை உருவாக்க முடியும் என்று தோன்றியது. இதற்கு வகை செய்ய, துறை வல்லுநர்களில் இருந்து வாரம் ஒருவரை அழைத்து சில கட்டுரைகளைப் பதியுமாறு கோரலாம். அவர்களின் கட்டுரைகளை விக்கிப்படுத்த நாம் உதவலாம். இதன் மூலம் பல துறைகளிலும் நல்ல கட்டுரைகள் வருவது மட்டுமின்றி தமிழ் விக்கிபீடியாவைப் பற்றிய செய்தி அறிஞர்களிடையே பரவவும் வழி ஏற்படும். இவ்வல்லுநர்கள் இணைய அறிமுகம் இல்லாதவராயின், கையெழுத்தாக வாங்கி நம்மில் எவரேனும் பதிவேற்றம் செய்யலாம். இந்த சிறப்பு விருந்தினர்களைப் பற்றிய சிறு குறிப்பை கட்டுரைப் பெயர்வெளியில் அல்லாமல் [[விக்கிபீடியா:]] பெயர்வெளியில் ஒரு சிறப்புப் பக்கத்தில் தரலாம். மற்றபடி அவர்களின் பங்களிப்பு காப்புரிமை விலக்கப்பட்டதாகவும், எவர் வேண்டுமானாலும் தொகுக்கப்படக்கூடியதாகவும் விக்கிபீடியாவின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை அவர்களிடம் முன்கூட்டியே தெளிவு படுத்திவிடலாம். இந்தத் திட்டத்தைப் பற்றி மற்ற பயனர்களும் தங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள். -- Sundar \பேச்சு 08:13, 23 பெப்ரவரி 2006 (UTC)
திட்டம் மிகவும் நன்று. நம்பகத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்க செய்யும். விக்கி நடைபற்றி சற்று முன்கூட்டியே தெரிவித்து விட்டீர்கள் என்றால் அவர்கள் அதற்கு ஏற்ற மாதிரி எழுதி தர முடியும். மேலும், மருத்துவ சமூகத்தையும் நாம் அணுகவேண்டும். மருத்துவ துறை தமிழின் ஒரு மரபு சார்ந்த துறை. தமிழில் அத்துறையில் பல்கலைக்கழக கல்வியே கற்கலாம் என்ற நிலையில் ஒரு சமயம் இருந்த துறை. பல நல்ல பழைய புதிய நூல்கள் தமிழில் உள்ளன. எனவே, அச்சமூகத்தையும் நாம் நாட வேண்டும். --Natkeeran 14:14, 23 பெப்ரவரி 2006 (UTC)
இந்த திட்டத்திற்குத் தேவையான கோட்பாடுகளை எவரேனும் உருவாக்குங்கள். விரைவில் செயல்படுத்தலாம். -- Sundar \பேச்சு 11:30, 1 மே 2006 (UTC)
சில கூறுகள்
(எளிமையாக ஆரம்பிக்கலாம், தேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பை விரிவாக்கி கொள்ளலாம்)--Natkeeran 13:06, 2 மே 2006 (UTC)
Tamil Wikipedia Country ProjectWe are all aware that unlike any other Indian language and most other languages of the world Tamil does have a global spread. We must take advantage of that fact in developing information about Geographic regions, cultures, literature and other information. This will provide truly first hand, direct, tacit and local information that would be otherwise hard to amaze in Tamil. Also, original photographs can be added without license worries. Information that of special interest to Tamils about Tamil people, Tamil organizations, temples, and Tamil media and literature from those countries can be collected. We can start with already committed members who live world wide. For instance, பயனர்:Kanags about Australia, பயனர்:Chandravathanaa about Germany, பயனர்:Ravidreams about Netherlands, பயனர்:Mayooranathan about UAE, பயனர்:Natkeeran about Canada, Eelanathan about Singapore etc. Most of us can also contribute to developing articles about India, Tamil Nadu, and Sri Lanka, the traditional home lands. I am sure this has been in the mind of many Tamil Wikipedians, and I thought this would be of natural consequence of we all living world wide. But, I think we can accelerate this process, and develop fully if we actively purse this in a focused manner. I propose this as a research project of sorts. This project is comparable to http://www.tamilnation.org/diaspora/, but the direct participation and open forum for contribution makes this project different, dynamic, and wider in scope. Further, the information will be available in Tamil, and will adhere to neutral point of view. All comments regarding this initiative are welcomed. (I will post the Tamil version later). --Natkeeran 02:48, 23 ஏப்ரல் 2006 (UTC)
Thank you for your comments Ravi. I will formulate a minimum common list of items that we may want to include. The following is just a start: Some items to include: Tamil Related Info:
Original GPL, PD Photography I really would like to encourage some original photography, released under GPL or PD to be added. This would add tremendous value and interest. Country Portal --Natkeeran 21:28, 24 ஏப்ரல் 2006 (UTC)
Regular things to do listAlong the lines of suggestion made by natkeeran in main page talk page, we need to have an idea about the frequency of doing some things in administering tamil wikipedia. I feel its important to have regular downloads of tamil wikipedia files. anyone can do this whenever they wish but the admin members can take care and share the responsibilty to do it often (once in 2 weeks atleast) to see that the hard work done by the wiki editors is not lost at any time due to technical faults, server crashes. Next, with increasing article counts and the temptation to do it, i feel we sometimes overlook the need to wikify, expnad, improve the existing articles. I suggest that all the active editors / admins set aside two months in a year just to improve the existing articles and check the correctness of the info. This can be done once in 6 months, say in June and december. Improving can be of any sort, namely, killing the stub and translate templates (there are alarmingly growing number of stubs and translate notices even for important article topics), wikifying, adding credible source, images etc.,However this is just a suggestion in good spirit and may not go down well with the wiki spirit of the freedom to do anything u want the way u like. We may just invite volunteers to do this task in selected two months, so those volunteers will resist the temptation to create new articles and instead focus on improving the quality of already existing ones, either created by them or others. I look forward to others opinions regarding this and any other suggestion to keep a watch on Tamil wikipedia quality--ரவி 13:27, 27 ஏப்ரல் 2006 (UTC)
(விரியும்) விக்கிபீடியா தமிழ் பக்கங்களைப் பதிவிறக்கி வைப்பது பற்றி நானும் யோசனை செய்துதான் வந்தேன். செய்யத்தான் வேண்டும். ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளை விரிவாக்குதல், படிமங்கள் முதலியவற்றைச் சேர்த்துக் கட்டுரைகளின் தரத்தைக் கூட்டுதல் போன்றவை மிகவும் முக்கியமானவை. இது விடயத்தில் ரவியின் கருத்துக்களோடு நான் உடன்படுகின்றேன். தமிழ் விக்கிபீடியாவைக் கட்டுப்பாடாக வளர்க்க முற்படுதல் விக்கிபீடியாவின் அடிப்படைடைகளுக்கு எவ்வகையிலும் முரணானது அல்ல. ஓரளவு கட்டுப்பாடும் தரப்படுத்தலும் நிச்சயம் தேவை என்பதே எனது கருத்து. இருக்கும் கட்டுரைகளைத் தரம் உயர்த்துவதற்கு நேரம் ஒதுக்குவது பற்றிய ரவியின் கருத்துப்பற்றி ஆராயலாம். Mayooranathan 17:41, 27 ஏப்ரல் 2006 (UTC)
I don oppose creation of stubs. Many times, it seems nice to see new articles coming up and it keeps the community motivated. I just propose that we should take care not to let them stubs for ever. Atleast on imporatant topics like countries we should kill the stubs and should work to kill the translate stubs. The current manual of style touches many aspects of layout design. Still the separate guide u have mentioned could be worked on.--ரவி 18:48, 27 ஏப்ரல் 2006 (UTC) banyan tree image removal?Sundar, can we remove the banyan tree image in this picture or atleast keep it as a thumb. I feel it hinders the readability of the page and takes time to download. Sorry, just a trivial question--ரவி 18:48, 27 ஏப்ரல் 2006 (UTC)
கலைச்சொற்கள்துறைசார்ந்த கலைச்சொற்களைப் பொறுத்தவரை www.tamilvu.org தளத்தின் நூலகத்தில் கிடைக்கும் கலைச்சொல் அகராதிகளைப் பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன்.குறிப்பாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக அகராதியைப் பயன்படுத்தினால் தமிழ் வழியில் பயின்றோர்க்கு துறைசார்ந்த கட்டுரைகளைப் படிக்கும்போது ஒரு தொடர்ச்சி இருக்கும். புரிதல் எளிதாகும்.விக்கியில் எதைப் பின்பற்றி வருகிறீர்கள் என்பது குறித்து என்னை ஆற்றுப்படுத்தவும். Paramatamil 17:27, 30 ஏப்ரல் 2006 (UTC)
தமிழ் கலைச்சொற்களைப் பொறுத்தவரை இணையத்திலுள்ள அகராதிகளில் சிறந்ததும், விரிவானதும் www.tamilvu.org இல் உள்ள அகராதியே என்பதில் சந்தேகம் கிடையாது. நானும் இதையே கூடிய அளவுக்குப் பயன்படுத்தி வருகிறேன். ஆனாலும் புதிய சொற்கள் இதில் சேர்க்கப்படுவதாகத் தெரியவில்லை. அடிக்கடி இற்றைப்படுத்தப்படக்கூடிய கலைச்சொல் அகராதியொன்று தமிழில் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. விக்கி திட்டங்களில் ஒன்றில் இதனைச் செய்வது இலகுவானது என்பது எனது கருத்து. ஆனால், விக்கிபீடியாவில் சொற்பட்டியல்களைச் சேர்ப்பது அவ்வளவு நல்லதாக எனக்குப் படவில்லை. விக்சனரியில் இதனைச் செய்யலாம். (இங்கே_பார்க்கவும்)அதுதான் பொருத்தமானது. தேவைப்படும்போது விக்கிபீடியாவிலிருந்து விக்சனரிக்கு இணைப்புக் கொடுக்கமுடியும். Mayooranathan 18:12, 1 மே 2006 (UTC)
ஆங்கில விக்சனரி ஒரு பன்மொழி அகரமுதலி போலவே கட்டமைக்கப்பட்டுள்ளது. என்னுடைய கருத்துப்படி ஆங்கில விக்சனரிகூட அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் இன்னும் முதிர்வு நிலையை அடையவில்லை என்றே கூறுவேன். எனவே தமிழ் விக்சனரியின் கட்டமைப்பில் விளக்கம் போதாமல் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனாலும், தமிழ் விக்சனரியின் கட்டமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவ்வளவு சிரமமானதாக இருக்காது என்றே நான் கருதுகிறேன். தமிழ் விக்சனரியின் கட்டமைப்பில் அடிப்படையாக இருக்கவேண்டியது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய தனித்தனிப் பக்கங்கள். ஒவ்வொரு பக்கமும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்குரிய பொருள்களையும், அவற்றின் பல்வேறு பயன்பாடுகளுக்குரிய இலக்கண விதிகள், எடுத்துக்காட்டுகள் மற்றும் வேறு விபரங்களையும் கொண்டிருக்கும். இச் சொற்களைத் தேடுவதற்காக இரண்டு வகையான வழிகள் இருக்கும்.
இதில் விடயம் சார்ந்த தேடலுக்காகப் பல்வேறு சொற் பட்டியல்கள் பின்னிணைப்புகள் என்ற தலைப்பில் இருக்கும். தற்போதைய தமிழ் விக்சனரியின் அமைப்பு ஏறத்தாள இவ்வாறுதான் உள்ளது. எனினும் தனித்தனிச் சொற்களுக்கான பக்கங்கள் விரிவான வளர்ச்சி அடையவில்லை என்பதுடன், இதன் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதிலும் அவற்றில் அடங்கவேண்டிய விபரங்கள் பற்றியும் தெளிவான தீர்மானத்துக்கு நாம் இன்னும் வரவில்லை. கலைச் சொற்கள் தொடர்பில், சில துறைகள் சார்ந்த தேடல் பட்டியல்கள்தான் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லுக்குமான தனித்தனிப் பக்கங்கள் இனிமேல்தான் உருவாகவேண்டும். கலைச் சொற்களைப் பொறுத்தவரை இப் பக்கங்கள் தமிழில் ஒரு புதிய முயற்சியாக இருக்கும். ஏனெனில் கலைச்சொற்கள் தொடர்பில், தமிழில் இப்போது பட்டியல்கள் தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் மேற் குறிப்பிட்ட தனித்தனியான விபரப் பக்கங்கள் பல பயனுள்ள விபரங்களை உள்ளடக்கியிருக்கலாம். சில எடுத்துக்காட்டுகள்:
மேலே குறிப்பிட்டவாறு பல வகையான மாதிரிப் பக்கங்களை உருவாக்கவேண்டும். இதன் மூலம் இது பற்றிய புரிதலையும் அதிகரித்துக்கொள்ளலாம். Mayooranathan 18:47, 3 மே 2006 (UTC)
BugThere is a bug in மீடியாவிக்கி:Nogomatch --சிவகுமார் 10:40, 29 மே 2006 (UTC).
வார்ப்புருக்கள்
--Natkeeran 01:55, 31 மே 2006 (UTC)
Manual of style proposalsPlease read the recent proposals for manual of style at Wikipedia பேச்சு:நடைக் கையேடு and give ur comments. Based on consensus within a week, let them be made official and included in the MOS main page. I also recomment viewing the MOS page onregular intervals to update oneself with the current MOS--ரவி 15:40, 1 ஜூன் 2006 (UTC)
ஜூன் எதிர் யூன்ஜூன் எதிர் யூன், எது நன்றாக படுகின்றது? --Natkeeran 16:49, 2 ஜூன் 2006 (UTC)
??--Natkeeran 00:16, 17 ஜூன் 2006 (UTC) தமிழில் நூல் வடிவில் விரிவான தமிழ் கலைக்களஞ்சியங்கள் உண்டு.1)Vaazhiviyar Kalanjiyam ( Encyclopedia )published by Tamil University It is in 13 volumes and it costs Rs 700/= each.( Rs 9100/=.) 2)Ariviyar Kalai Kalanjiyam also published by Tamil University. This is also in 13 volumes and costs Rs Rs 5700/=. --Natkeeran 14:19, 23 ஜூன் 2006 (UTC) |
Portal di Ensiklopedia Dunia