விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு08உரிமைகள் பற்றிய சொல்லாடல்கள் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.Creative Commons, Wikipedia Commons, Copyleft, GNU GPL, PL, Copyrighted, etc... தமிழ்படுத்தப்பட்டு நியமப்படுத்தப்பட வேண்டும். (standard = தரம் ?, நியமம் ?, சீர் ???) --Natkeeran 19:01, 29 ஜனவரி 2007 (UTC)
--Ravidreams 06:55, 3 பெப்ரவரி 2007 (UTC) Jimbo in ChennaiJimbo Wales is visiting Chennai to attend a Wikicamp, an unconference to discuss Wikipedia and Wikis in general. The event is scheduled for the 25th of February, and will take place at the Tidel Park, in Chennai. Here is a blog post from the person organizing it. I am on a vacation to India around that time and am planning to attend this one. Interested? Please do register as a participant. Regards, Ganeshk 01:08, 4 பெப்ரவரி 2007 (UTC) சென்னை விக்கிபீடியர்கள் srinivasan, vinodh ஆகியோர் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இதில் மாநில மொழி விக்கிபீடியாக்கள் பற்றியும் கலந்துரையாடல் இருக்கிறது. அதில் தமிழ் விக்கிபீடியா சார்பாக சிறப்பாக பிரதிநிதிப்படுத்துவது நலம். இது தொடர்பாக தனி ஒரு விக்கிபீடியா திட்டப் பக்கத்தில் அறிக்கை போல் ஒன்றை உருவாக்கலாம். இதற்கு முன் தமிழ் விக்கிபீடியா தரக்கண்காணிப்பு, வளர்ச்சி, போக்குகள், பிரச்சினைகள் குறித்த உரையாடல்களை அந்த அறிக்கையில் தொகுத்தும், சுருக்கியும் தர முயலலாம்--Ravidreams 09:58, 7 பெப்ரவரி 2007 (UTC)
மகிழ்ச்சி மாஹிர். உங்களை போன்றவர்கள் தமிழ் விக்கிபீடியாவை நல்ல முறையில் முன்வைப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழூற்று போன்ற கருவிகள் வருவது தமிழ் இணையம், தமிழ் விக்கிபீடியா வளர்ச்சி நிலைகளை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. --Ravidreams 14:02, 9 பெப்ரவரி 2007 (UTC) விக்கிபீடியா logo காப்புரிமை பற்றிவிக்கிபீடியா கட்டுரைகளுக்கு துறை சார் வல்லுநர்களை/பங்களிப்பாளர்களை கவருவதற்காக தமிழூற்று logo வை கலராக்கி அதிலிருந்து விக்கிபீடியாவிற்கு பகடையாக தொடுப்பு கொடுக்க விரும்புகிறேன். இதில் விக்கிபீடியா logo வையும் சிறிதாக்கி சேர்த்திருக்கிறேன். விக்கிபீடியா logo வை இதுபோன்ற வகையில் பயன்படுத்துவதால் விக்கிபீடியா கொள்கைகளுக்கு எதிரானதா? தயவு செய்து விளக்கவும். நன்றி
நன்றி ரவி, அப்படியே ஆகட்டும் --மாஹிர் 7 பெப்ரவரி 2007
Creative Commons - மொழிபெயர்ப்பு தேவை
--Natkeeran 17:19, 11 பெப்ரவரி 2007 (UTC)
கோப்பு பதிவேற்று பக்கத்தை எப்படி தொகுப்பது?--Natkeeran 17:20, 11 பெப்ரவரி 2007 (UTC) நீங்கள் கேட்டது சிறப்புப் பக்கத்தை அல்லவா? :-) தவறாக விளங்கிக் கொண்டேன். --கோபி 17:33, 11 பெப்ரவரி 2007 (UTC) ஆமாம், அந்த சிறப்பு பக்கத்தை எப்படி தொகுப்பது?--Natkeeran 18:13, 11 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி. --Natkeeran 18:51, 11 பெப்ரவரி 2007 (UTC) தமிழ் விக்கிபீடியா வலைப்பதிவுதமிழ் விக்கிபீடியாவுக்கான வலைப்பதிவு ஒன்று தொங்கப்பட்டிருக்கிறது. தற்போது நானும் நற்கீரனும் பங்களிப்பாளர்களாக இணைய இருக்கிறோம். தமிழ் விக்கிபீடியா பிறருக்கு அறிவிக்க விரும்பும் செய்திகளை தெரிவிப்பதற்கான அதிகாரப்பூர்வமான ஒரு கருவியாக இது திகழ வேண்டும் என்று கருதுகிறோம். தமிழ் விக்கிபீடியா குறித்து அறிய விரும்புபவர்கள் இது குறித்து யாரிடம் கேட்பது, விக்கிபீடியாவில் எந்த பக்கத்தில் கேட்பது போன்ற குழப்பத்துக்கு ஆளாகின்றனர். புதியவர்களுக்கு மீடியாவிக்கி மென்பொருள் அறிமுகம் இல்லாமல் இருப்பதால் சரியான பக்கத்துக்கு வந்தாலும் தொகுக்க முடியாது இருக்கின்றனர். இது போக தமிழ் விக்கிபீடியா பற்றிய தவறான புரிதல்கள் (குறைவான கட்டுரை எண்ணிக்கை, மொழிநடை, முக்கிய கட்டுரைகள் இல்லாதது) சிலவற்றையும் நீக்க வேண்டியது தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு அவசியம். இவற்றை செய்வதற்கு, தமிழ் இணைய அன்பர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான வலைப்பதிவு ஊடகம் உதவக்கூடும். இந்த வலைப்பதிவில் விக்கிபீடியா குறித்த கட்டுரைகள், அறிக்கைகள், விளக்கங்கள், உதவிக்குறிப்புகள், வழிகாட்டிப் பதிவுகள், மயூரனின் விக்கிபீடியா அறிமுகம் போன்ற தொடர்கள், தமிழ் விக்கிபீடியாவின் சிறப்புக் கட்டுரைகள், புள்ளிவிவரங்கள், புள்ளிவிவரப் பகுப்பாய்வுகள் ஆகியவற்றை வெளியிட எண்ணம். இவற்றை பதிப்பிப்பதற்கு முன் விக்கிபீடியா:வலைப்பதிவு இடுகைகள் என்ற பக்கத்தில் விக்கிபீடியர்களின் பார்வைக்கு வைத்து திருத்தங்களை பெற்று பின்னர் வெளியிடலாம் என்று நினைக்கிறேன். நன்றி.--Ravidreams 15:24, 12 பெப்ரவரி 2007 (UTC)
படிமங்கள் தொடர்பாகஇனிவருங் காலங்களில் படிமங்களைப் பதிவேற்றும்போது அதன் மூலம் மற்றும் அதற்கான பொருத்தமான உரிமம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் பதிவேற்றப்படும் படிமங்களை கால அவகாசம் கொடுத்து நீக்கப் பரிந்துரைக்கிறேன். இது தொடர்பான அறிவுறுத்தல் கோப்பைப் பதிவேற்றும் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் பிற விக்கிகளில் இருந்து பெற்றுப் பதிவேற்று முன் அதே அல்லது ஒத்த படிமங்கள் விக்கி பொதுவில் இருக்கின்றனவா என்பதைச் சோதித்து அவ்வாறு இருப்பின் பொதுப்படிமத்தை இணைப்பது பொருத்தமானது. மேலும் இப்பொழுது பாவனையிலுள்ள படிமங்களையும் முடிந்தால் பொதுப்படிமங்களாற் பிரதியீடு செய்வது நல்லது. தமிழ்ச்சூழலுக்குரிய fairuse படிமங்களும் தமிழ்ச்சூழலுக்குப் பிரத்தியேகமான பொருத்தமான உரிமங்களுடைய படிமங்களும் மாத்திரமே த.வி.யில் இருப்பது ஆரோக்கியமானது. நன்றி. கோபி 17:40, 12 பெப்ரவரி 2007 (UTC)
கூகிள் சாட்டில் தமிழ் விக்கிபீடியா suggestions
தமிழூற்று கூகிள் சாட் கட்டளைகள் (/help): ![]()
தமிழூற்று கூகிள் சாட் விக்கிபீடியா கட்டளை (/wiki [text in tanglish]): ![]() மாஹிர், இதை பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் அருமை. suggestionகளை வினவ தமிழிலேயே தட்டச்சுவது போல் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்--Ravidreams 12:01, 13 பெப்ரவரி 2007 (UTC)
ஒரு நல்ல வாசிப்பு--Natkeeran 22:47, 15 பெப்ரவரி 2007 (UTC) தொகுப்புக்கள்தொகுப்புக்கள் பற்று சுருக்கம் தருதல் நன்று. வெறுமே 1,2,3,4 என்று உறியில் கட்டி வைப்பது நல்ல தகவல்கள் கவனம்பெற வாய்ப்புக்களைக் குறைக்கின்றது. --Natkeeran 18:07, 16 பெப்ரவரி 2007 (UTC) நற்கீரன், இப்பொழுது பெரும்பாலும் தொகுப்புகளை கால வரிசைப்படி தொகுத்து வைக்கிறோம். எல்லா விசயங்களையும் கருப்பொருள் படி தொகுப்பது சிரமமான நேரம் பிடிக்கும் வேலை. ஆனால், நல்ல யோசனை. ஆங்கில விக்கியில் நுட்பம், செய்திகள், கொள்கைகள் போன்ற தலைப்புகளில் தொகுத்து வைக்கிறார்கள். சொற் தேர்வுப் பக்கத்தில் நீங்கள் செய்திருந்த தொகுப்பு நன்று. (உறியில் கட்டி வைப்பது என்று உவமை நன்று :) எங்க இருந்து பிடிக்கிறீங்க, இது போன்ற உவமைகளை ;))--Ravidreams 20:40, 16 பெப்ரவரி 2007 (UTC) AVG, JVP போன்ற சுருக்கங்களைத் தமிழில் எழுதுதல்AVG, JVP போன்ற சுருக்கங்களைத் தமிழில் எழுதும்போது ஏ.வி.ஜி., ஜே.வி.பி. என்றவாறாக அதாவது முற்றுப்புள்ளியிட்டு ஆனால் இடைவெளிவிடாது எழுதினால் என்ன? முற்றுப்புள்ளியில்லாமல் எழுதும்போது அவற்றை இணைத்து வாசிக்க நேரிடலாம். --கோபி 17:03, 17 பெப்ரவரி 2007 (UTC) தமிழில் பெயர்ச் சுருக்கங்கள் (:en:Abbreviation) தருவது பற்றி நாம் இன்னும் தெளிவு இல்லாம்தான் இருக்கின்றோம். ஒரு நபரின் பெயருக்கு முன்னால் என்றால் வெளி விட்டு தருவது வழக்கம். எடுத்துக் காட்டாக கா. சிவத்தம்பி. வேறு சுருக்கங்களுக்கு புள்ளி போட்டு தருவதே நன்று. ஏன் என்றால் ஆங்கிலத்தில் அவர்கள் capitalization முறையை பயன்படுத்துவதால் இலகுவில் வேறுபடுத்த முடிகின்றது. ஆனால் தமிழில் அப்படி இல்லை. எனவே நீங்கள் சுட்டிய படி ஜே.வி.பி., த.வி. என்று எழுதலாம். இதில் கடைசி எழுத்திலும் ஒரு புள்ளி போட வேண்டுமா என்பது குறித்து மற்ற பயனர்களின் கருத்து அறிய ஆவல். அதாவது ஜே.வி.பி, த.வி என்று எழுதுவது நன்றா அல்லது ஜே.வி.பி., த.வி. என்று எழுதுவது நன்றா? --Natkeeran 17:15, 17 பெப்ரவரி 2007 (UTC) ஆம், ஆட்கள் பெயருக்கு முற்றுப்புள்ளிக்கு அடுத்து இடைவெளி விட்டும், பிறப் பெயர்களுக்கு இடைவெளி இல்லாமலும் எழுதலாம். தமிழ்நாட்டில் தி.மு.க - அ.தி.மு.க என்று எழுதுவது வழக்கம் என்று நினைக்கிறேன். கடைசி எழுத்துக்கு அடுத்து புள்ளி வைக்க மாட்டார்கள்--Ravidreams 19:11, 17 பெப்ரவரி 2007 (UTC)
வெளி இணைப்புக்கள் தொடர்பாகஇப்போது பல பக்கங்களிலும் வெளி இணைப்புக்கள் பெருமளவில் ஆங்கிலப் பக்கங்களுக்குச் செல்பவை. இது ஆரோக்கியமானதா? ஆங்கில வெளி இணைப்புக்களைத் தேடும் ஒருவருக்கு ஆங்கில விக்கிபீடியாவுக்குப் போனால் போதுமானது. த.வியில் எதற்கு? உத்தியோகபூர்வ வலைத்தளம் போன்ற ஓரிரண்டுக்கு மேல் ஆங்கில வெளியிணைப்புக்கள் வழங்குவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றினால் என்ன? தமிழ் இணைப்புக்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கத்தைத் தூண்டி நிற்பதாக இருக்குமல்லவா? கோபி 09:12, 18 பெப்ரவரி 2007 (UTC)
ரவி, இவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். நான் இவ்வாறு எண்ணுவது விஜயின் உரையாடல்களை வாசித்த பின்னரே. ஓரிடத்தில் ஜாதி என்று இருந்தால் அதனை சாதியாக்கி விடுவதில் தீவிரம் காட்டும் நாம் பெருமளவு பக்கங்களில் ஆங்கில உள்ளடக்கமிருப்பது தொடர்பில் எந்த குழப்பமுமின்றியிருக்கிறோம். எத்தனை வெளியிணைப்புக்கள் ஆங்கிலப் பக்கங்களுக்குச் சென்றாலும் சரியாகவே படுகிறது. ஒரு காலத்தில் வடமொழியும் தமிழில் இதே செல்வாக்கையே செலுத்தியது. இனியொரு காலத்தில் சீனர் பொருளாதார வல்லமை பெற்று அதனால் சீன மொழி முக்கியமானதொன்றாக வளர்ந்தால் நாம் எந்த வெட்கமுமின்றி சீன இணைப்புக்களக் கொடுப்போம். ஏனென்றால் தமிழரது மனநிலை அப்படி. இத்தனை காலம் இந்த மொழி தப்பிப் பிழைத்திருப்பது அதன் சிறப்பேயன்றி அதனைப் பேசுவோரால் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஒரு சீன நகரத்தைப் பற்றிய அல்லது பிரெஞ்சு எழுத்தாளரைப் பற்றிய அல்லது அரபிக் கவிஞரைப் பற்றிய வெளியிணைப்புக்கள் நிச்சயம் அந்தந்த மொழிகளில் சிறப்பாக இருக்கும். ஆனால் நாம் ஆங்கில வெளியிணைப்புக்களை அடுக்கி வைப்போம். இதன் மூலம் ஆங்கிலத்தில் வாசிக்கச் சொல்லி விக்கிபீடியாவைப் பயன்படுத்துவோர் மீது திணிப்போம். அதையிட்டு எந்த மனச் சஞ்சலமும் எமக்கு இருப்பதில்லை... ஆங்கில வெளியிணைப்புக்கள் இருக்கத்தான் வேண்டுமானால் நாம் ஆங்கில விக்கிபீடியாவுக்கே பங்களிக்கலாமே. த.வி.க்கு வருமொருவர் தமிழில் தகவலறியத் தானே வருகிறார்? பொருத்தமான ஆங்கில விக்கியிணைப்புக்கு மேலதிகமாக மற்றைய இணைப்புக்கள் எதற்கு? ஆங்கில இணைப்புக்களே வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் முக்கியமான ஓரிரு இணைப்புக்கள் போதும் என்கிறேன். தமிழின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு இணையத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும். தமிழில் உள்ளடக்க உருவாக்கம் ஊக்குவிக்கப்படல் வேண்டும். வலைப்பதிவுகள், இணையத்தளங்களில் எழுதுவோரெல்லாம் த.வி.க்கு வர வாய்ப்பில்லை. ஆனால் அவர்களில் தரமான உளடக்கத்தை உருவாக்குவோருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களது பக்கங்களுக்கு இணைப்புக் கொடுப்பது அவர்களை மேலும் பங்களிக்கத் தூண்டக்கூடும். தமிழில் இன்னொரு இணையக் கலைக்களஞ்சியம் உருவாவதும் உடனடிச் சாத்தியமில்லை. அவ்வாறிருக்கையில் த.வி.யை ஒரு கட்டுக்கோப்பான கலைக்களஞ்சியமாகத் துப்புரவாக்கிச் சீரமைப்பது எங்கள் கைகளிற்தான் இருக்கிறது. கோபி 13:22, 18 பெப்ரவரி 2007 (UTC) கோபி, அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள், படத்தளங்கள், நிகழ்படத்தளங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இருந்தாலும் இணைப்பு தரலாம். இத்தளங்கள் தமிழில் அமையும் வழக்கம் இன்னும் வராத வேளையில் இவற்றை ஒதுக்கி விடவும் முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டும். ஆங்கில இணைப்புகளை பெரிதளவும் குவிக்கும் போக்கை தவிர்க்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். எனினும், தமிழர், தமிழ் தொடர்புடைய பல தகவல்களுக்கு கூட இணைப்புகள், உசாத்துணைகள் ஆங்கிலத்திலேயே கிடைக்கின்றன. இந்த கட்டுரைகள் ஆங்கில விக்கிபீடியாவில் இருக்குமென்றோ இல்லை இந்த இணைப்பை இடுவதற்காக ஒரு கட்டுரையை அங்கு தொடங்க வேண்டுமென்றோ எதிர்ப்பார்க்க முடியாது. அப்படிப்பட்ட வேளைகளில் ஆங்கில இணைப்புகளை பொருத்தமானவற்றை அளவோடு அனுமதிக்க வேண்டும். முழுக்க ஆங்கில இணைப்பு கூடாது என்ற இறுக்கமான கொள்கையில் உடன்பாடு இல்லை. இதை நீங்கள் பரிந்துரைப்பதற்கான நோக்கோடு உணர்வளவில், கொள்கை அளவில் உடன்படும் வேளை, இதை ஒரு பெரிதும் விரும்பத்தக்க ஒரு விக்கி நடைமுறையாகவோ வழிகாட்டுதலாகவோ தான் சுட்ட முடியும். கண்டிப்பான விதியாக அல்ல.--Ravidreams 18:10, 18 பெப்ரவரி 2007 (UTC)
அறிவைப் பெற எம்மொழிக் கட்டுரைகளி வாசிப்பதும் நல்லதுதான். நான் இங்கு குறிப்பிட்டது ஆங்கில இணைப்புக்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தொடர்பானது. ஆங்கிலத்தில்தான் தேடவேண்டியிருப்பின் இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைக்குப் போனால் போதுமே. ஆங்கில விக்கியிலிருந்து வெளி இணைப்புக்களைப் பிரதியெடுத்துவந்து த.வி.யில் நிரப்பி வைப்பதால் ஆகப்போவது என்ன? கோபி 19:38, 18 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா, பெருமளவு கட்டுரைகளில் வெளி இணைப்பு விளக்கங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன. இது வெறுமனே ஆங்கில விக்கியிலிருந்து பிரதி செய்ததன் விளைவு. அவ்விணைப்புக்கள் தமிழ்ச் சூழலுக்குத் தேவையானவையா என்பது கவனத்திலெடுக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புக்கள் இல்லை. வெளி இணைப்பு எம்மொழியிலிருப்பினும் அம்மொழி என்ன என்பதைத் தெரிவிப்பதோடு இணைப்பை விளக்கும் தலைப்பு தமிழாக்கப்பட்டே இருக்க வேண்டும் என்பதை கொள்கையாக்கினால் என்ன? கோபி 19:53, 18 பெப்ரவரி 2007 (UTC) அறிவைப் பெற எம்மொழிக்கும் செல்லலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. வெளி இணைப்புக்களுக்காக ஆங்கில் அல்லது பிற மொழி விக்கிபீடியாக்களுக்குப் போக வேண்டியிருக்காமல் தமிழிலேயே இருப்பது பொருத்தப்பாடானது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சில பக்கங்களைப் பார்க்கும்போது இது தமிழ் விக்கிபீடியா என்பதே மறந்து போய்விடுகிறது. ஆதலால் கொடுக்கப்படும் வெளி இணைப்பு விளக்கங்கள் தமிழில் இருப்பதே பொருத்தமானது. இல்லையா? கோபி 19:56, 18 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா, நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை. த.வி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் திட்டம். ஆனால் பாருங்கள் translate வார்ப்புரு இட்ட கட்டுரைகள் ஆண்டுக் கணக்கில் அப்படியே கிடக்கின்றன. இவ்வாறேதான் ஆங்கில இணைப்புக்களும். கொள்கை என்று உருவாக்கி ஆங்கிலத்தில் உள்ளவை எல்லாவற்றையும் நீக்க வேண்டும் என்பதல்ல என் வேண்டுகோள். இனிப் புதிதாக உருவாகும்போது நாம் கவனமாகச் செய்ய வேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் போன்று கட்டுரைகள் உருவாவதோ உரிமங்கள் தரப்படாமல் படிமங்கள் பதிவேற்றப்படுவதோ தொடர்ந்தால் அது த.வி.யின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் பாதிக்கும். ஒரு நம்பகமான தரமான கலைக்களஞ்சியமாக இது வளர்த்தெடுக்கப்படல் வேண்டுமென்றால் ஓரளவு இறுக்க்மான நிலைப்படு எடுக்கப்பட வேண்டும் என்பது என் நிலைப்பாடு. இப்போதுள்ளநிலையே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் துப்புரவுப் பணியென்பதே சாத்தியமற்றதாகி விடும். கோபி 20:20, 18 பெப்ரவரி 2007 (UTC) கோபி, மேற்கண்ட உரையாடலை அடுத்து பின்வரும் பரிந்துரைகளை தெரிவிக்கிறேன். அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
--Ravidreams 22:52, 18 பெப்ரவரி 2007 (UTC)
ஆனால் இந்த நிலையை இட்டு கவலைப்படலாம். இந்த நிலையை மாற்றுவதற்கான புறச்சூழல்களை எவ்வாறு உருவாக்கலம என்பதுபற்றி ஆக்கபூர்வமாக சிந்திக்கலாம். ஆனால், சட்டங்கள், ஒழுக்காற்று உருவாக்கம் போன்றவற்றின் மூலம் இச்சூழலை மாற்ற முடியும் என்று நன நம்பவில்லை. இதை விக்கிபிடியாவுக்கு வெளியே நின்று தான் பார்க்கமுடியும் இது ஒரு வரலாற்றுக்காலகட்டம். நாம் இன்னமும் மேற்கின் மேலாதிக்கத்தின்கீழ் அடிமையாகத்தான் இருக்கிறோம். இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒருகாலத்தில் சுதந்திரம் சாத்தியப்படுமானால் ஏதாவது செய்யலாம். அடிமைச்சமூகம் தனது இந்த தலைவிதி காரணமாக இப்படி வெளியிணைப்புக்களை வேறு வழியின்றி கொடுக்கிறது. இதை சட்டம்போட்டு தடுக்க முனைவது வ்ரலாற்று ஓட்டத்தை வேலிபோட்டு தடுப்பது போன்றது. பாசிசம் என்று சொல்லலாமா? இந்த அடிமைத்தனம் தொடர்பான பிரக்ஞை கொண்டவர்கள் மேற்கு மொழி இணைப்புக்களை தவிர்க்கலாம். தரமான உள்ளடக்கங்களைத் தமிழில் உருவாக்கலாம். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாம். ஆனால் இந்த மனமாற்றங்கள் எல்லாம் பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை. அரசியற் புறச்சூழல் மாறும்வரை. --மு.மயூரன் 11:17, 19 பெப்ரவரி 2007 (UTC) தமிழர்களுக்கு தமிழ் மட்டும்தான் தெரிய வேண்டும் என்று நினைப்பது குறுகிய பார்வை. இன்று நாம் குறைந்தது இரண்டு மொழிகள்ளூடாக பயணிக்கின்றோம். இது ஒரு வரலாற்று நிர்ப்பந்தம்தான். பல்லினப்பண்பாட்டை மறுக்க முடியாமல் ஏற்றவர்கள் நாங்கள் என்று ஆசிஸ் நாண்டி குறிப்பிடுவார். தாய் மொழியில் கல்வி நன்றுதான். ஆனால் ஆங்கிலமும், பிற மொழி அறிவும் எமக்கு அவசியம். சிங்களம், இந்தி, பிற ஐரோப்பிய மொழிகளிலும் வெளி இணைப்புகளைத் தரலாம். --Natkeeran 12:34, 19 பெப்ரவரி 2007 (UTC) நற்கீரன், சிங்களம், இந்தி, சீன மொழிகளிலும் வெளி இணைப்புக்கள் தரலாம் என்ற கூற்று தன்னளவிலேயே தோற்று தன்னைப்பார்த்து சிரிக்கிறது ;-) பேரினவாதத்தின் இப்படியான ஆயிரம் கூற்றுக்களை நம கேட்டிருக்கிறோம். உலகமயமாதலை நியாயப்படுத்தும்போது அமெரிக்க ரசு கூறும், நீங்கள் இங்குவந்தும் வியாபாரம் செய்யலாம், முதலிடலாம் என்று. ஒரு பெரிய சக்கரத்தின் சுழற்சியில் ஒத்துச்சுழலும் சின்னஞ்சிறிய வெளிப்பாடுதான் இந்த வெளியிணைப்பு விவகாரம். விக்கி ஒழுக்காறுகள் என்ன சொல்கின்றன என்று பார்த்து அதன்படி செய்வதுதான் இதற்கு ஒரேயொரு தீர்வு. 1. ஆங்கில விக்கிபீடியாவில் பிரேஞ்சு, சீன, தமிழ் பக்கங்களுக்கு இணைப்பு தரலாமா? அப்படி தரலாம் என்றால் இங்கேயும் ஆங்கில பக்கங்களுக்கு இணைப்பு தரப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். விக்கி சட்டதிட்டங்களுக்கு மாறாக செயற்படத்தேவையில்லை. எனவே நற்கீரன், ஆங்கில விக்கிபீடியாவில் ஏனைய மொழி வலைப்பகக்ங்களுக்கு கட்டுரைகளுக்கு இணைப்பு தரலாமா என்பதை ஆராய்ந்து சொல்லுங்கள். --மு.மயூரன் 13:21, 19 பெப்ரவரி 2007 (UTC)
ஆ.வி.யில் யப்பானிய மொழி பற்றிய கட்டுரையைப் பார்வையிட்டேன். அதனை எழுதுவது தொடர்பான pdf கோப்பொன்று மட்டுமே யப்பானிய வெளி இணைப்பென்ற கொள்ளக் கூடியதாக இருக்கிறது. த.வி.யில் தமிழ் பற்றிய கட்டுரையைப் பார்த்தேன். அது translate வார்ப்புருவுடன் இருக்கிறது. என்னத்தைச் சொல்ல? --கோபி 16:07, 19 பெப்ரவரி 2007 (UTC)
ஆங்கில இணைப்புக்களை நீக்க வேண்டியதில்லை. ஆனால் ஆங்கில இணைப்புக்களைக் கொடுக்கும்போது பொறுப்புணர்வுடன் நாம் செயற்பட வேண்டும் என்பதையே வலியுறுத்திகிறேன். ஆங்கிலம் என்பதற்காக அப்படியே எடுத்தாளப்பட்ட இணைப்புக்களே இங்கு அதிகம் தேவை தானா என்பது தொடர்பில் சிந்திக்கப்படுவதில்லை. நான் தமிழ் கட்டுரையில் சுட்டிக் காட்டியது சிறியதொரு உதாரணம். மிகப்பெருமளவில் பார்வைய்டப்படும் ஒரு கட்டுரைய் தொடர்பில் எவ்வளவு கவனக் குறைவாக இருக்கிறோம்? வேலை மினக்கெட்டு மொழிபெயர்த்து வேறு வைத்திருக்கிறோம் :-( ஆரம்பத்தில் நான் கூறிய கருத்துக்களை விடுத்து இப்பொழுது வலியுறுத்துவது யாதெனில் இனிக் கொடுக்கப்படும் வெளி இணைப்புக்கள் எம்மொழியாயினும் அம்மொழி எதுவென்பது குறிப்பிடப்பட்டு இணைப்பு விளக்கமும் தமிழில் இருக்க வேண்டும். இதுவரை அவ்வாறில்லாதவற்றைப் படிப்படியாகத் திருத்தலாம். ஆனால் இனியும் அவ்வாறு உருவாக்கப்படுவது அனுமதிக்கபடுவது ஆரோக்கியமானதல்ல. கோபி 16:36, 19 பெப்ரவரி 2007 (UTC)
இதைத்தான் //ஆனால் இந்த நிலையை இட்டு கவலைப்படலாம். இந்த நிலையை மாற்றுவதற்கான புறச்சூழல்களை எவ்வாறு உருவாக்கலம என்பதுபற்றி ஆக்கபூர்வமாக சிந்திக்கலாம். ஆனால், சட்டங்கள், ஒழுக்காற்று உருவாக்கம் போன்றவற்றின் மூலம் இச்சூழலை மாற்ற முடியும் என்று நன நம்பவில்லை. // // ஒரு பெரிய சக்கரத்தின் சுழற்சியில் ஒத்துச்சுழலும் சின்னஞ்சிறிய வெளிப்பாடுதான் இந்த வெளியிணைப்பு விவகாரம். விக்கி ஒழுக்காறுகள் என்ன சொல்கின்றன என்று பார்த்து அதன்படி செய்வதுதான் இதற்கு ஒரேயொரு தீர்வு. // என்று சொன்னேன். சட்டம் போட்டு வரலாற்று இயங்கியலை மாற்ற முடியாது. --மு.மயூரன் 00:25, 20 பெப்ரவரி 2007 (UTC) தமிழர் அறிவியல் இயல்கள்தமிழர்கள் உலகின் இயல்பை நோக்கி எப்படிப்பட்ட ஒரு வகைப்படுத்தலையும் கண்ணோட்டத்தையும் கொண்டிருந்தார்கள், கொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் உலகப் பார்வை எவ்வாறு எவ்வளவு அமைகின்றது, வேறுபடுகின்றது போன்ற தகவல்கள் தந்தால் நன்று. இலக்கியம், சமயம் ஆகிய களங்களில் மட்டுப்படுத்தாமல், வேறு களங்களில் வெளிப்படும் தகவல்களை சுட்டினாலும் நன்று. குறிப்பாக வாய்வழி, வாழ்வியல், தொழிற்கலை, செயல்பாட்டு களங்களில் இருந்து. மேலும், இன்று இத்தகவல்கள் பயன்படக்கூடியவையா? பேணத்தக்க வேண்டியவையா? மீட்டெக்கப்படவேண்டியவையா? மீளுருவாக்கம் செய்யப்படவேண்டியவையா? எவ்வாறு பொது அறிவியலுடன் ஒத்துப் போகும்? எப்படி தமிழர் அறிவியல் அணுகுமுறை இன்று இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில், இவற்றைப் பற்றி எழுதுவதே ஒருவிதத்தில் வேண்டா வேலை போன்றே தோன்றியது. ஏன் என்றால் அறிவியல் என்பது ஒன்றுதானே, அதிலென்ன தமிழர் அறிவியல் - ethnic science என்று தோன்றியது. அதிக பட்சம் local knowlege என்று சிறுமைப்படுத்தி விடுவர். ஏற்கனவே எல்ல அறிவியலும் வேததில் இருந்துதான் வந்தது போன்ற ஒரு போலி தோற்றத்தைபோல தமிழர் அறிவியல் என்ற கருத்துரு தோன்றிவிடுமா என்ற அச்சமும் இருந்தது. தமிழர் அறிவியலில் இருந்து புது தொழில்நுட்பங்கள் சாத்தியம் என்பதற்கு சில நல்ல உதாரணங்கள் உண்டு. எ.கா biological pestacides, medicinal plants போன்றவை. இங்கு நான் இயற்கை அறிவியல் - natural sciences கவனம் தருகின்றேன். இவற்றை பற்றி ஏன் கவனம் தேவையென்று எண்ணினால், ஒரு பாடத்தை படிக்கும் பொழுத் எல்லாமே ஐரோப்பிய மையப் பார்வையில் இருந்தே வருகின்றது. அறிவியல் அணுகுமுறையும், அறிவியலை முறையாக தொழில்நுட்ப ஆக்கத்துக்கு பயன்படுத்தியதும் ஐரோப்பியரின் அரிய பங்களிப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தமிழில் அறிவியல் எழுதும் பொழுது எமக்கான சூழமைவு (context), பின்புலம் (background), சிந்தனையூற்று (roots), சிந்தனைவளம் ஒன்று அவசியமாகின்றது. நாம் வெறும் empty minds, always borrowing போன்ற தோற்றப்பாடு தவிர்த்தல் நலம். இவை பற்றி பயனர்களின் கருத்துக்கள் பரிந்துரைகள் அறிய ஆவல். நன்றி. Science: a window open on culture Elena Caovilla, Stefano Girola Can ancient knowledge efficiently answer modern problems? http://www.scientificambitalia.org/bulletin/assets/f97.pdf
7000 கட்டுரை மகிழ்ச்சிதொடர்ந்து நிகழும் சில இறுக்கமான உரையாடல்களுக்கு இடையே, 7000 கட்டுரைகள் எண்ணிக்கையை தமிழ் விக்கிபீடியா அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு கட்டுரையாவது வருமா என்று 2005 தொடக்கத்தில் நான் அண்மைய மாற்றங்களை பார்த்துக்கொண்டிருந்த காலம் போய் இப்பொழுது மாதம் 500 கட்டுரைகள் என்ற வேகத்தில் தமிழ் விக்கி வளர்ந்து வருகிறது. வரும் நவம்பருக்குள் 10,000 கட்டுரை இலக்கை அடைவோம் என்று நம்புகிறேன். இந்த நேரத்தில் மொத்தத் தொகுப்புகள் எண்ணிக்கையில் 1,00,000 என்ற எண்ணிக்கையை தொட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. மொத்தத் தொகுப்புகள் எண்ணிக்கையும் தர அளவுகோள்களில் ஒரு பங்கு வகிக்கிறது. 1,000 கட்டுரைகளை அடைந்தபோது 10,000 கட்டுரைகள் என்ற இலக்கை சுந்தர் வைத்தார். அந்த இலக்கை அடையும் நாள் நெருங்குகையில், அப்பொழுது நினைத்துப் பார்த்திராத தர அளவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் நாம் முனைய வேண்டும். பெரிதும் கவனிக்கப்படாத அதே வேளை முக்கியமான துப்புரவு மற்றும் பகுப்புச் சீர்மை பணிகளில் ஈடுபடும் கோபி, நற்கீரன் ஆகியோருக்கு இந்த நேரத்தில் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்..(இதுக்கு மேல எழுதினா அரசியல் அறிக்கை மாதிரி ஆகிடுமோ :)) --Ravidreams 23:08, 18 பெப்ரவரி 2007 (UTC)
1000 கட்டுரைகள் - பெப்ரவரி 22, 2007 முதல் மார்ச் 19, 2007 க்குள் !!என் பேச்சுப் பக்கம் பார்க்கவும். இன்று இப்பொழுது 8232 கட்டுரைகள்--செல்வா 00:25, 24 மார்ச் 2007 (UTC) தமிழில் இல்லாத தமிழ் தொடர்பான தளங்கள்தமிழ் நாட்டு பல்கலைக்கழக தளங்கள் தமிழில் இல்லை--Natkeeran 07:57, 20 பெப்ரவரி 2007 (UTC) செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் தளம் தமிழில் இல்லை--Natkeeran 07:57, 20 பெப்ரவரி 2007 (UTC) ஆம், நற்கீரன் தமிழ் தொடர்பில் கூட எதுவும் தமிழிலில்லை. அதனாற்தானே விக்கிபீடியா போன்றவற்றை நாம் மிகவும் கவனத்துடன் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. சுற்றி வளர்க்காமல் சொல்ல வருவதை நேரடியாகச் சொல்லலாமே :-) கோபி 12:33, 20 பெப்ரவரி 2007 (UTC) செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் இணையத்தள வடிவமைப்பாளருக்கு கடிதம் எழுதி உள்ளேன். மறுமொழியோ மாற்றமோ வந்தால் சொல்கிறேன் :) :(--Ravidreams 13:32, 20 பெப்ரவரி 2007 (UTC) இவ்வளவு எதற்கு, தமிழை செல்லரிக்காமல், கடல்கொள்ளாமல் காப்பாற்றப்போகும் மதுரைத்திட்டத்தின் மடலாடல் ஏதாவது தமிழில் நிகழ்ந்திருக்கிறதா? சிவத்தம்பி சொன்னதாயு ஒரு கூற்று பிரபலம் "தொன்மையில் இல்லை தொடர்ச்சியில்". தொன்மையிலும் இல்லை, தொடர்ச்சியைப்பற்றியும் தெரியாது. நிகழ்காலத்தில் அன்றாடம் தமிழை பயன்படுத்துவதில் தான் இந்த பாவப்பட்ட மொழிக்கு வாழ்வு இருக்கிறது. --மு.மயூரன் 15:48, 20 பெப்ரவரி 2007 (UTC) //செல்லரிக்காமல், கடல்கொள்ளாமல்//
--கோபி 15:57, 20 பெப்ரவரி 2007 (UTC) ஆமாம், மயூரன் - தமிழை காக்கிறோம் வளர்க்கிறோம் என்று செயல்படுகிறோம் என்ற திட்டங்கள் பலவற்றிலும் ஆங்கில வழி செயற்படுத்தலே இருக்கிறது. தமிழ் விக்கிபீடியாவிலும் தொடக்கத்தில் நான் உட்பட பலர் ஆங்கிலத்தில் மறுமொழி இட்டு வந்தோம். இப்பொழுது அது அறவே ஒழிந்திருப்பது ஒரு முன்மாதிரியான செயற்பாடு.--Ravidreams 15:59, 20 பெப்ரவரி 2007 (UTC) செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் தள வடிவமைப்பாளரிடம் இருந்து வந்த மறுமொழி கீழே:--Ravidreams 11:35, 22 பெப்ரவரி 2007 (UTC) Dear Sir, Thank you very much for your valuable feedback.Our focus is on Projecting Classical Tamil to the International Community.But at the same time we had already prepared our website in Tamil Unicode also.Its under the Validation and Testing process.Tamil version of Our website will be available Shortly.We will notify you about it immediately. Regards, Web development Team,Centre of Excellence for Classical Tamil,Central Institute of Indian Languages,Manasagangotri, Mysore - 570006,India
தொகுத்தல் வழுஎந்த ஒரு பக்கத்தின் தொடக்கத்திலும் முதல்பத்தியில் வலப்பக்கம் அமைந்துள்ள தொகு இணைப்பை அழுத்தினால் முதற்பக்க தொகுப்புப் பார்வைக்குப் போகிறது?? இதை எப்படி சரி செய்வது? ருசியப் பயனர் எட்வர்டின் ஆலோசனைப்படி சுந்தர் இந்த மாற்றத்தை monobook.jsல் செய்தார் என்று நினைக்கிறேன்--Ravidreams 11:00, 21 பெப்ரவரி 2007 (UTC) Google reader வழியாக அண்மைய மாற்றங்கள்Google readerல் அண்மைய மாற்றங்கள் பக்கத்தின் ஓடையை பெற்று கண்காணிக்க முடியும். இதன் மூலம் பல மாற்றங்களை தாமதமின்றி பார்த்து வாசிக்க முடிகிறது. பல சமயங்களில் விக்கிபீடியாவில் அண்மைய மாற்றங்கள் பக்கத்தை கண்காணிக்கையில் ஒவ்வொரு பக்கமாய் செல்வது நேர விரயம் ஆகிறது. விக்கிபீடியா வழங்கியும் அவ்வளவு வேகமாய் இல்லை. Google readerல் ஏற்கனவே உள்ள தொகுப்பலிருந்து உள்ள வேறுபாடு மட்டும் எடுப்பாக காட்டப்படுவது சிறப்பு. என்ன குறை என்றால் விக்கி markupகள் கூகுள் ரீடரில் வேலை செய்யாது. அதனால் படிப்பதில் சிரமம் இருக்கும். ஆனால், ஒரு பக்கத்தில் என்ன மாற்றம் என்பதை மேலோட்டமாக பார்க்க உதவும். தவிர, தமிழ் விக்கிபீடியா அண்மைய மாற்றங்கள் பக்க சிறப்புப் பார்வையில் ஒரு பக்கத்திற்கான தொகுப்புகளை ஒரே வரியில் காட்டும். ஆனால் கூகுள் ரீடர் ஒவ்வொன்றாக காட்டுகிறது. அவரவர் வசதிக்கேற்ப சோதித்துப் பார்த்து கூகுள் ரீடரிலோ தளத்திலோ அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பார்க்கலாம். அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்கு சிறப்புப் பார்வை ஒன்று உள்ளது என்பதை இங்கே பயனர்கள் கவனத்துக்கு தருகிறேன். இதன் மூலம் பதிகைகள், மற்றும் ஒரே பக்கத்தில் ஏற்படும் பல மாற்றங்களையும் சிரமமின்றி ஒரே வரியில் படிக்கலாம். --Ravidreams 13:02, 21 பெப்ரவரி 2007 (UTC) நற்கீரன் - பிளாக்குகள் (Blogs)/வலைப்பதிவுநாம் தனிநபர் பிளாக்குகளை கட்டுரைக்கு பயன்படுத்த வேண்டாம். பிளாக்குகள் 1. அனாமதேயமாக எழுதப்படலாம் 2. பிளக்கு எழுத்துனர்களுக்கு ஒரு அறிவுத்தறம் வைப்பதில் ஒரு நிர்பந்தமும் இல்லை. தாங்கள் உணர்சிகளையும், மனத்திற்க்கு தோன்றியவற்றையும் எழுதாலாம். 3.உண்மையைத்தான் சொல்லவேண்டும் என்று கட்டாயமே இல்லை. 4.பிளாக்குகளின் குறியே, ஒரு நபர் எந்த விஷயத்தை ப்ற்றியும் தன் பெயர் கொடுக்காமல் எழுதலாம் 5.இதெல்லாம் பிளாக்குகள் பற்றி விமரிசனம் இல்லை. பிளாக்குகளின் நோக்கமே, தனிநபர் சுதந்திரமாக கட்டுப்பாடின்றி எழுதுவ்துதான் 6. பிளாக்குகளின் நிலைமை அப்படியிருக்கும் போது, அவைகளை விக்கி கட்டுரைக்கும், உரையாடலுக்கும் சுட்டிக் காடுவது தரமானது இல்லை --விஜயராகவன் 20:33, 21 பெப்ரவரி 2007 (UTC)
ரவி, once we allow something, we are on a slippery path to allow all sorts of blogs, which can be cleverly written with part facts, part trolling, part flaming,with all kinds of sexist, racist and casteist inflammatory language. Tamil Wiki should not allow itself to become transmitters of such language.--விஜயராகவன் 21:27, 21 பெப்ரவரி 2007 (UTC) விஜயராகவன், விக்கிபீடியாவில் அனைத்து உரையாடல்களையும் தமிழில் தான் மேற்கொள்கிறோம். தயவு செய்து தமிழில் தொடரவும். எதையும் பொத்தாம் பொதுவாக ஒதுக்க முடியாது. ஏதேனும் இணைப்புகள் part trolling, part flaming,with all kinds of sexist, racist and casteist inflammatory language ஆக இருந்தால் அந்தந்த பேச்சுப் பக்கங்களில் சுட்டிக் காட்டுங்கள்.--Ravidreams 21:52, 21 பெப்ரவரி 2007 (UTC)
//அத்தோடு, நீங்கள் தரமான தகவல்கள் செறிந்த 5 தமிழ் இணையத் தளங்களை சுட்டினால், இனி அவற்றில் இருக்கும் தக்வல்களுக்கு முக்கியம் தருவேன். திருவள்ளுவரை ஒருக்கா கூப்பிட தோன்றுகின்றது :-) //
ரவி, எல்லா உரையாடலும் தமிழிலிருக்க் வேண்டியது என சொன்னபின், ஏன் ஆங்கிலப் பகுதி வருகிரது? அதற்கு தமிழ் எழுதமுடியவில்லையா?. அது இருக்க , கட்டுப்பாடு என்று போட்டால் அது எல்லோராலும் எளிதாக பின்பற்றுவதாக இருக்க வேண்டும்.அதனால் நீங்கள் சுட்டிக்காட்டும் வளைத்தடங்கள் 'நல்லவை' , மற்றவர்கள் சுட்ட்க் காட்டுபவை 'தறமற்றவை' என சொல்ல முடியாது. நற்கீறன், இராம.கி. என்பவர் எந்த துறையில் நிபுணர்? அவர் பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு சொல்லித்தரும் போல் புத்தகம் எழுதிவிட்டாரா? அல்லது அந்த துறையில் உள்ள பேராசிரியர்கள் புகழும்படி புத்தகம்/ஆய்வு ஏடுகளை எழுதிவிட்டாரா? அப்படியானல் அவர் புத்தகங்களையே சுட்டிக் காட்டலாமே, பிளாக்கை தவிற? பிளக்குகளை சுட்டிக்காட்ட ஆரம்பித்தால், ஒரு கட்டுரையாசியருக்கு வேண்டிய எல்லா பிளாக்குகளையும் அனுமதிக்க வேண்டும். ஏன் சிலருக்கு மட்டும் சலுகை காட்ட வேண்டும்?--விஜயராகவன் 00:06, 22 பெப்ரவரி 2007 (UTC) தமிழ்த் தளங்களில் விக்கியின் பயனர் வருகை நிலவரம்அலெக்சா நிறுவனத் தகவல்படி தமிழ்த் தளங்களில் பயனர் வருகை நிலவரப்படி தமிழ் விக்கிபீடியா 30வது இடத்தில் உள்ளது. 20வது இடத்தில் தமிழ்மணம் உள்ளது. ஏனையவை அனைத்தும் தினமலர் போன்று செய்தித் தாள்களின் தளங்கள் அல்லது sify tamil போன்று செய்தியை முக்கியமாகத் தரும் வலைவாசல்கள். விக்கி போன்று தகவல் தளம் ஏதும் இல்லை. விக்கியின் வளர்ந்து வரும் தன்மையை முன்னிட்டு வருங்காலத்தில் இந்த வருகை நிலவரத் தர வரிசை இன்னும் முன்னேறும் என்று எதிர்ப்பார்க்கலாம். தவிர, இணையத் தமிழ் வாசகர்கள் செய்திகளை அதிகம் எதிர்ப்பார்ப்பதை கருத்தில் கொண்டு நடப்பு நிகழ்வுகள் குறித்த கட்டுரைகளை எழுதுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். விக்கியிலும் முதற்பக்கத்துக்கு அடுத்து நடப்பு நிகழ்வுகள் பக்கமே அதிகம் பார்க்கப்படுவது கவனிக்கத்தக்கது.--Ravidreams 21:58, 21 பெப்ரவரி 2007 (UTC) த.வி பற்றி மயூரனனின் அருமையான கட்டுரை ஒன்று
--Natkeeran 01:59, 25 பெப்ரவரி 2007 (UTC) விக்கிமுகாம்நானும் கணேசும் விக்கிமுகாமில் உள்ளோம். அவ்வப்போது தகவல்களை இற்றைப்படுத்துகிறேன். -- Sundar \பேச்சு 04:02, 25 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி நற்கீரன். நீங்கள் மேலே சுட்டியுள்ள கூட்டறிக்கையிலிருந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஊடகங்களுக்கு இந்த அறிக்கையைச் சுட்டி விடுகிறேன். மாகிரைக் கண்டிப்பாகச் சந்திக்கிறேன். - Sundar \பேச்சு 04:36, 25 பெப்ரவரி 2007 (UTC) A quick update on the Wikicamp. The camp was a success in promoting Tamil Wikipedia. Sundar made a presentation on the Tamil wiki and it was well received. Press had questions regarding the Tamil wikipedia. The plan is to publish the the press release link on the Wikicamp website and send it to press too. Sundar will work on it once he gets back to Madurai. Regards, Ganeshk 15:16, 26 பெப்ரவரி 2007 (UTC) விக்கிமுகாமில் தமிழூற்று demonstration கொடுத்தேன். குறிப்பாக ஜிமெயில் அரட்டையில் தமிழ் விக்கிபீடியா/விக்சனரி பற்றி விளக்கும் பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது. தங்கிலிஷ் முறையில் விக்கிபீடியா தொடுப்புகள் பெறுவதை சொன்னபோது ஏன் தமிழில் இல்லையா என்றனர். (இன்று அதையும் சரி செய்து விட்டேன் eg. /wiki தமிழ்நாடு). ஒருவர் மொழிமாற்றி (translation service) இருக்கிறதா என்று வினவினார். சுந்தர், கணேஷ் இருவரையும் சந்தித்தது மகிழ்ச்சியாயிருந்தது. -மாஹிர் 28 பெப்ரவரி 2007 (IST) ஆர்வலர்கள் த.வி. தொகுக்க நுட்ப உதவி தேவை
இவர்கள் த.வி. தொகுப்பதற்கு ஆர்வமாயுள்ளார்கள். ஆழ்ந்த அனுபவமும் புலமையும் உள்ளவர்கள். ஆனால் நுட்பம் இன்னும் தடையாக உள்ளது. பார்க்க Comments: http://classroom2007.blogspot.com/2007/02/3.html சில வழிகாட்டல்களை இட்டுள்ளேன். அவர்களை பின்தொடர்ந்து த.வி விற்கு பங்களிக்க பிற பயனர்களும் உதவ வேண்டும். நன்றி. --Natkeeran 17:09, 25 பெப்ரவரி 2007 (UTC) நினை தொடர்கள் - Mnemonics (தமிழ் சொல் என்ன?)
--Natkeeran 06:54, 28 பெப்ரவரி 2007 (UTC)
No Orginal Research vs Research for Contentஇங்கு ஒரு விடயத்தை தெளிவு படுத்த விரும்புகின்றேன். ஆ.வி விலும் சரி, த.வி விலும் சரி ஆதாரபூர்வமான தகவல்களே சேர்க்கப்படவேண்டும். அவை மெய்யறிதன்மையை கொண்டிருக்க வேண்டும். ஆ.வி No Original Research என்ற ஒரு கொள்கை உண்டு. அதாவது உறிதிப்படுத்தப்படாத தகவல்களை அல்லது கட்டுரைகளை அது சேர்ப்பது இல்லை. அதற்கு அர்த்த ஆய்வு இல்லாமல் கட்டுரை எழுதுவது இல்லை என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும்.
தற்கால தொழில்நுட்பம்--Natkeeran 18:14, 28 பெப்ரவரி 2007 (UTC) தமிழில் இயல் தலைப்புகள் பட்டியல் தேவை
--Natkeeran 17:30, 1 மார்ச் 2007 (UTC) தமிழில் இணையத்தில் மாணவர்களுக்கான இலவச பாடங்கள்
--Natkeeran 04:31, 6 மார்ச் 2007 (UTC) கட்டற்றது எதிர் கட்டற்றவைஎது நன்றாக உள்ளது. --Natkeeran 04:04, 8 மார்ச் 2007 (UTC) கட்டற்றது - ஒருமை; கட்டற்றவை - பன்மை !!--Ravidreams 15:50, 8 மார்ச் 2007 (UTC) உரை திருத்தத் தேவை.அனைவரும் 10, 000 கட்டுரை இலக்கை நோக்கி நகர்கையில், ஏற்கனவே உள்ள பல கட்டுரைகளுக்கு உரை திருத்த தேவை இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பல கட்டுரைகளில் மிகுதியான எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் உள்ளன. குறைந்தபட்சம் எளிதில் தவிர்க்கப்படக்கூடிய இச்சிறு பிழைகளை களைய அனைவரும் கவனம் எடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். கட்டுரை உருவாக்கம் ஒரு பக்கமும் உரை திருத்தம் இன்னொரு பக்கமும் நடைபெற வேண்டும். குறிப்பில்வழிப் பக்க வசதியைப் பயன்படுத்தி இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம். 10, 000 கட்டுரை இலக்கை அடைந்த பின் ஓரளவாவது தமிழ் விக்கியை விளம்பரப்படுத்த முனைய வேண்டும். அப்பொழுது வந்து பார்ப்பவர்களுக்கு தமிழ் விக்கியில் எழுத்துப் பிழைகள் மலிந்திருந்தால் நம் மீது உள்ள நம்பகத் தன்மை குறையும். உரை திருத்தும் போது நான் மிகவும் கவனிக்கும் இரண்டு: 1. தேவையற்ற இடங்களில் சொற்களை பிழையாக சேர்த்து எழுதுவது. எடுத்துக்காட்டுக்கள் - வந்துசென்றான், முதலாவதுபெயர். 2. தேவையற்று சொற்களை மிகுதியாக இணைத்து எழுதுவது. எடுத்துக்காட்டுக்கள் - சொல்லலாமென்றாலும்கூட. இப்படி எழுதுவது பள்ளிக் குழந்தைகள் உட்பட்ட பலருக்கு கட்டுரைகளை வாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இயன்ற அளவு, சொற்களை பிரித்து எழுதுவது நன்று என்று தோன்றுகிறது. இவை என் ஆலோசனைகளே. நன்றி. நன்றிஒரு மாத விடுமுறையை முடித்துவிட்டு இன்று இலங்கையிலிருந்து யப்பான் திரும்பிவிட்டேன். எனக்கு நிர்வாக அணுக்கத்துக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாக்களிப்பில் வாக்களித்து கருத்து கூறிய அனைவருக்கும் நன்றிகள். உங்கள்து எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் எனது பணியை தொடர முயற்சிக்கிறேன். எனது இலன்கை பயணம் பற்றிய கருத்துக்களை தனி இ-கடித்ததில் தருகிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 09:21, 10 மார்ச் 2007 (UTC) Discussion for deletion on English WikipediaThere is a discussion on [[1]] about whether en:Category:Tamil Americans should be deleted. The nomination was made by a Tamil. His argument, and that of those who support him, is that it is wrong to elevate a linguistic group to the level of national and religious immigration. He's been strongly opposed by other editors who argue that Tamils are a single transnational ethnic group just like the Basques, Irish and others who have their own categories, but others have challenged this. At the moment the discussion's been going around in circles, and I think it would be useful to have a wider range of views. If any of you are also contributors to the English Wikipedia, could you please consider making your views and arguments for either side known. Sorry for typing this in English, and I hope I've come to the right place! -- 66.199.252.58 10:53, 15 மார்ச் 2007 (UTC) பாராட்டுப் பதக்கங்கள்பாராட்டுப் பதக்கங்களை பேச்சுப்பக்கத்தில் இடுவதை விட பயனர் பக்கத்திலேயே இட்டால் நன்றாக இருக்கும். ஆ. விக்கியில் இவ்வாறே செய்கின்றனர். --Sivakumar \பேச்சு 16:01, 16 மார்ச் 2007 (UTC) த.வி அடிப்படைக் கட்டமைப்பு - எங்கே இருக்கின்றோம், என்ன செய்ய வேண்டும் - மேலோட்ட அலசல்ஆக்கம்10 000 இலக்கு அண்மையில் தெரிகின்றது. த.வி தரத்தைப் பேணிய வண்ணம் இந்த இலக்கை அடைய பலரும் பல்வேறுவழிகளில் பங்களித்துவருகின்றார்கள். மெய்ப்பார்த்தல், தரம் பிரித்தல் ஆகிய செயற்பாடுளிலும் இனி கூடிய கவனம் செலுத்தலாம். எப்படி ஆதாரங்களை, மேற்கோள்களை, அடிக்குறிப்புகளை சேர்ப்பது பற்றிய கையேடும் விரிவாக்கப்படவேண்டும். நுட்பம்இங்கு நாம் சற்று பின் தங்கியே இருக்கின்றோம். இன்றைப்படுத்தவில்லை. தமிழை நேரடியாக உள்ளிட த.வி வில் வசதிகளை ஏதுவாக்கலாம்...நுட்பம் உண்டு. ஆனால் செயலாக்கப்படவில்லை. சுந்தர், கணேஸ் போன்றவர்களின் தொழிற்பாடு இங்கு தேவைப்படுகின்றது. நுட்பம் தொடர்பான பரந்துபட்ட அறிவை நாம் ஆவணப்படுத்த வேண்டும். அது இவர்களை அவர்களின் பணிச்சுமையின் நடுவே நாம் இடையூறு செய்யாமல் இருக்க உதவும். இடைமுகம் தமிழ்ப்படுத்தல் முதல் பல்வேறு நிலைகளில் இந்த ஆவணப்படுத்தல் செய்யப்பட வேண்டும். சமூகம்இங்கு நாம் ஒரு சில முனைகளில் தேக்கம் கண்டாலும், நல்ல ஆரோக்கியமான சூழலையே தொடர்ந்து பேணி வருகின்றோம். குறிப்பாக புதுப் பயனர்களை தமிழ் விக்கிபீடியாவின் நடையையும், பரந்துபட்ட (அறிவியல்) நோக்கையும் புரிந்து செயல்பட வேண்டும் என்று த.வி எடுக்கும் முயற்சிகள் நன்று. கொள்கைWikipedia:மெய்யறிதன்மை மற்றும் No Orginal Research vs Research for Content இன்னும் விபரிக்கப்படவேண்டும். அத்தோடு எளிய முறையில் நல்ல தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி எழுதல் நன்று என்பதை ஒரு அடிப்படை கொள்கையாக ஏற்று, அதற்குரிய வழிகாட்டல்களையும் ஏற்படுத்தல் வேண்டும். படிமங்கள்பல பயனர்கள் முன்வைத்த கருத்துகளை உள்வாங்கி, கோபி படிமங்களை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். உரிமமும் மூலமும் தரப்படவேண்டு; இதுவே தாரக மந்திரம். கட்டற்ற படிமங்களை இயன்றவரையில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். உதவிஇது தான் இப்பொழுது எமக்கு முன் இருக்கும் ஒரு முக்கிய பணி. பல உதவி பக்கங்கள் இருந்தாலும், அவை ஒரு பூரண தன்மையை அடையவில்லை. எல்லாம் எங்கோ அங்கோ இருக்கு என்ற நிலைதான். இதில் கூடிய தெளிவு வேண்டும். ரவி/மயூரன் ஒரு பக்கத்தில் உதவி போன்றவை நன்று. களை எடுப்பதுபொருத்தமற்ற பக்கங்களை நீக்குவது, விக்கியாக்கம், வகைப்படுத்தல் போன்றவை த.வி தொடர்ந்து தேவை. இன்றைப்படுத்தல்பொறுப்பை சவாலக ஏற்று, சுமையை முன்கூட்டியே பிரித்து முயன்று பார்க்கலாமா. சிக்கல் என்னவென்றால் அவரவர் முன்வரவேண்டும். இதை நீங்கள் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. முன்பக்கத்தில் இரு புதிய கட்டுரைகள் ஒவ்வொரு நாளும்...இதை ஒருவரே தொடர்ந்து செய்வது சாத்தியமில்லை. அலுப்புத்தரக் கூடியது. (இந்த விடயத்தில் கனக்ஸ், ரவி ஆகியோருக்கு மிக்க நன்றி.) எனவே ஒரு சுழற்சி முறை தேவை. ஒருவர் ஒரு கிழமைக்கு என்ற மாதிரி... இது வரை நான் கண்டதில் வாரத்துக்கு ஒருவர் என்று பொறுப்பு எடுத்துச் செய்வது போன்றவை, தற்போது உள்ள சூழலில் தொடர்ந்து செய்யகூடியதாகத் தோன்றவில்லை. எனினும் தமிழ் விக்கிபீடியாவின் பல பணிகளிலும் அனைவரும் கூடிய முனைப்புடன் செயல்பட வலியுறுத்த வேண்டும். புதியவர்கள் கட்டுரை ஆக்கப் பணிகளில் ஈடுபட, பழைய பயனர்கள் கட்டமைப்பை மேம்படுத்தல், உதவிப் பக்கங்கள், உரை திருத்தம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். --ரவி 17:42, 17 மார்ச் 2007 (UTC) காட்சிப்படுத்தல்பயனர் தெரிவுக் கட்டுரைகள் - தொகுப்பு 03 போன்று பிறரும் தெரிவு செய்தால் நன்று. முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தாத கட்டுரைகளை தெரிதல் நன்று. இதன் நோக்கம் ஓரளவு பூர்த்தியான நல்ல கட்டுரைகளை அடையாளம் காண்பதே. பொதுப் பயனர்களை மனத்தில் நிறுத்தி. வரைபடங்களும்/அழகியலும்தமிழில் வரைபடங்கள் சேர்த்தல் நன்று. த.வி தனித்துவமான icons உருவாக்க வேண்டும். தொடர்புகள்நூலகம் பங்களிப்பார்களுடான இணைச்செற்பாடு மிகச்சிறப்பாக இருக்கின்றது. அங்கு இருக்கும் ஒவ்வொரு நூலுக்கும் இங்கும் ஒரு பக்கம் இருத்தல் நன்று. அதே போல் உபுண்டு, லினக்ஸ், கட்டற்ற இயக்கம் ஆகியவர்களின் பங்களிப்பும் த.வி வலு சேர்க்கும். பல தமிழ் எழுத்தாளர்கள் தங்களை ஆக்கங்களை த.வி அனுப்பி வைத்துள்ளார்கள், அவர்களின் ஆக்கங்களும் விரைவாக சேர்க்கப்படவேண்டும். மருத்துவம், சட்டம் போன்று துறைகளில் இயங்குபவர்களை இங்கு அழைத்து வருவது முக்கியம். மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா ஆகிய தமிழர் புலங்களில் இருந்தும் ஆக்கர்களை இங்கு அழைத்து வருதல் வேண்டும். --Natkeeran 21:42, 16 மார்ச் 2007 (UTC)
பகுப்பு:தமிழர் என்ற பகுப்பை தாய்ப் பகுப்பு ஆக்கலாமா? த.வி பொறுத்தவரையில் இங்கு வருபவர்களுக்கு அது ஒரு முக்கிய தலைப்பாக/பகுப்பாக அமையும். அந்தப் பகுப்புக்குள் உள்ளடக்கமும் ஓரளவு கனதியானது. இதை நோக்கி பிற பயனர்களும் கருத்துக்கள் முன்வைத்தால் நன்று. இரண்டு நிலைய்யில், தாய்ப் பகுப்பு ஆக்கலமா, இப்ப - அல்லது பின்னர். --Natkeeran 21:42, 16 மார்ச் 2007 (UTC)
தமிழர் பகுப்புக்கு பதில் தமிழ் பகுப்பை முதன்மைப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். இலக்கியப் பகுப்பின் பெரும்பகுதி கட்டுரைகள் தமிழிலக்கியத்தில் வரக்கூடும் என்பதால் தமிழ்ப் பகுப்பு மட்டும் முதற்பக்கத்தில் வைத்தால் போதுமானதாக இருக்கும். இலக்கியப் பகுப்பை நீக்கி விடலாம்--ரவி 17:44, 17 மார்ச் 2007 (UTC) விக்சனரி என்று ஒன்று !!அண்மைக் காலங்களில் விக்கிபீடியாவுக்கு ஈடாக தமிழ் விக்சனரி மீதான கவனமும் கூடி வருகிறது. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக புதிதாக 100 சொற்கள் கூடச் சேர்க்கப்படாமல் ஈயோடிக் கொண்டிருக்கிறது தமிழ் விக்சனரி. இருக்கும் ஒன்றிரண்டுப் பயனர்களுக்கும் துப்புரவுப் பணிக்கே நேரம் சரியாக இருக்கிறது. தமிழ் விக்கிபீடியா தொடர்ந்து 70வது இடத்தில் இருக்கையில் தமிழ் விக்சனரி ஒரு வருடமாக 30வது இடத்தைத் தக்க வைத்திருப்பதுடன் இந்திய மொழி விக்சனரிகளில் முதலாவதாகத் தொடர்ந்து இருக்கிறது. விக்கிபீடியா 10,000 கட்டுரை இலக்கை நோக்கி நகர்கையில் விக்சனரியையும் மேம்படுத்த அனைவரையும் அழைக்கிறேன். நாளுக்கு 5 சொற்கள் என்று ஒருவர் சேர்த்தால் கூட நன்றாக இருக்கும். அங்கு துப்புரவுப் பணிகள் நிறைய இருப்பதால் இங்கிருந்து விக்கி அனுபவம் உடையோர் வருவதும் அவசியம்.--ரவி 18:57, 23 மார்ச் 2007 (UTC)
மயூரனாதன், செல்வா - நீங்கள் சொல்லும் அனைத்தும் செய்யப்படக்கூடியவை. செய்யப்பட வேண்டியவை. உங்களைப் போன்று ஆர்வமும் திறமும் உள்ளவர்கள் பலரும் இன்னும் வர வேண்டி இருப்பதால் இவை தாமதப்படுகின்றன. மயூரனாதன், சில தமிழ்ச் சொற்களுக்கு ஏற்கனவே சில வார்ப்புருக்கள் செய்துள்ளார். ஒரு சில கட்டுரைகளுக்கு ஏற்கனவே படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கிக்கும் இணைப்பு தரப்பட்டுள்ளன. பலப் பயனர்களும் வந்தால் இது போல் விக்கியாக்கப் பணிகள் செய்யலாம். நானும் சிவாவும் இயன்றவரை தளத்தைப் பராமரித்துக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு அடிப்படைச் சொற்களுக்கு பொருள் சேர்க்க முடியுமோ அவ்வளவையும் சேர்ப்பது என்ற நோக்கில் தற்போது செயல்படுவதால் ஒரு அகராதிக்கான கட்டமைப்பில் ஈடுபட முடியவில்லை. தமிழ் விக்கிபீடியாவிலும் தொடக்கத்தில் இப்படித் தான் இருந்தது. 2006க்குப் பிறகு பல பங்களிப்பாளர்கள் வர வர இங்கு ஒரு ஒழுங்கு, நேர்த்தி வந்திருக்கிறது. அது போல் பிறரும் விக்சனரியில் கூடிய விரைவில் (இங்கு 10,000 கட்டுரைகள் வந்த பிறகாவது) இணைவதை எதிர்ப்பார்க்கிறோம்.--ரவி 23:48, 23 மார்ச் 2007 (UTC) Tamil Language Under Reviewen:Tamil language in Wikipedia is under review. Please help edit and keep the a FA. --Natkeeran 05:54, 26 மார்ச் 2007 (UTC) The above article is clearly under attack from vandals. I can assure that the quality of the article was much better before. But, now it be being down graded little by little. Ravi, Sundar, etc. Please look into this. --Natkeeran 06:43, 26 மார்ச் 2007 (UTC)
இந்து தத்துவ, கர்நாடக தீவரபோக்காளர்களால் ஆங்கிலத் தமிழ் கட்டுரை சிதைவுசென்று பார்க்க. எங்கே முதன்மைக் கட்டுரை ஆக்காளர்கள் என்று தெரியவில்லை. சுந்தர், கணேஸ் போன்றோரும் தற்போது இல்லை. தனியே மல்லு கட்டுதல் முடியாது. தீவர போக்காளர்கள் அதிகம். --Natkeeran 18:37, 26 மார்ச் 2007 (UTC)
நற்கீரன், எக்கச்சக்கமாக பொய்ப் பரப்பு வேலைகள் நடந்திருக்கிறது. இதைக் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி. ஆதாரங்களைத் திரட்டிப் போக வேண்டி இருக்கிறது. --ரவி 20:43, 26 மார்ச் 2007 (UTC) I primarily contribute to Tamil Wikipedia. There we are working on a Language Article Prototype. We have discussed the following structure.
--Natkeeran 21:50, 26 மார்ச் 2007 (UTC) http://en.citizendium.org/wiki/Main_Page --Natkeeran 14:05, 27 மார்ச் 2007 (UTC) ஆங்கில விக்கியில் ஒரு ஆள்மாறாட்டம்பார்க்க - http://nanbanshaji.blogspot.com/2007/03/blog-post_16.html பிற்காலத்தில் தமிழ் விக்கிக்கு இது ஒரு முன்னெச்சரிக்கை பாடமாக இருக்கலாம். நம் விக்கி வளர வளர பொய்த் தகுதிகளுடன் சிலர் பங்களிக்க வருவதற்கு வாய்ப்புண்டு--ரவி 12:20, 28 மார்ச் 2007 (UTC) கட்டுரைகளில் நேரடி ஆதாரங்களைத் சேர்த்தல் அவசியமாகின்றதுஅண்மைக் காலத்தில் ஆங்கிலத்தில் தமிழ் பற்றிய கட்டுரை ஆதாரங்கள் அற்ற தன்மைக்காக மிகவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு காரணம், எழுதியவர்கள் நேரடியாக ஆதாரங்களைத் தராமல் விட்டதாகும். இங்கும் இனிவரும் காலங்களில் நேரடியான ஆதாரங்களைத் தருவதை வழக்கத்தில் கொண்டுவந்தால், எதிர்வரும் காலங்களில் பல இழுப்பறிகளை தவிர்க்க முடியும். --Natkeeran 18:07, 28 மார்ச் 2007 (UTC) depthஅனைத்து விக்கிபீடியா புள்ளிவிவரப் பக்கத்தில் depth என்ற ஒரு அளவுகோல் இருக்கிறது. இது குத்துமதிப்பாக, ஒரு விக்கிபீடியா எந்த அளவு இற்றைப்படுத்தப்படுகிறது, தரமுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. கட்டுரைகளின் அளவை கணக்கில் கொள்ளமால் தொகுப்புகள் எண்ணிக்கை, கட்டுரை எண்ணிக்கை, மொத்தப் பக்கங்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. ஆங்கில விக்கியின் ஆழம் 200க்கும் மேல். தமிழ் விக்கியின் ஆழம் ஒரு காலத்தில் 30ஐ ஒட்டி இருந்து இப்போது 20க்கு கீழ் வந்திருக்கிறது. கட்டுரை எண்ணிக்கை கூடுதலுக்கு ஏற்ப ஏற்கனவே உள்ள கட்டுரைகள் இற்றைப்படுத்தப்படாவிட்டால் இந்த ஆழம் இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. 10,000 கட்டுரை அளவைத் தொடும்போது குறைந்தபட்ச ஆழமாக 15ஆவது இருக்கும்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல், 10, 000 எண்ணிக்கைக்கு அடுத்து தொடர்ந்து 25,000 - 50,000 - 1,00, 000 என்று எண்ணிக்கையை குறியாக வைத்து ஓடிக் கொண்டிருப்பதில் பொருள் இருக்காது. 10, 000 கட்டுரை எண்ணிக்கைக்குப் பிறகு கட்டுரைத் தரத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குவது, உரை திருத்துவது, ஆதாரங்கள் சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். நாடு, மொழி, இனம் போன்று கலைக்களஞ்சிய முக்கியத்துவம் உள்ள தலைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து சேர்க்க வேண்டும். 2008 தொடக்கத்துக்குள் எய்தத்தக்க உயர்ந்தபட்ச ஆழமாக 35ஆவது இருக்கும்படி நாம் கவனித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி--ரவி 11:01, 30 மார்ச் 2007 (UTC) Embalam Knowledge centre Indiaமுடியுமானால், எல்லாரும் ஒருக்காலவது பார்க்கவும்.
--Natkeeran 04:14, 5 ஏப்ரல் 2007 (UTC) ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து SVG படிமம்ஓப்பிண் ஆபிஸ் கட்டுரைக்காக ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து SVG கோப்பைத் தமிழ் விக்கிபீடியாவில் பதிவேற்றமுயன்றேன் அங்கே படிமத்தில் ஒன்றும் தெரியவில்லை. நாம் பயர்பாக்ஸ் பாவிக்கின்றேன். யாராவது சரிசெய்துவிடவும். ஆங்கில இணைப்பு http://en.wikipedia.org/wiki/Image:OpenOffice.org_Logo.svg த --Umapathy 13:11, 5 ஏப்ரல் 2007 (UTC) தானியங்கி கட்டுரைகளுக்கு பொருத்தமான கட்டுரைப் புலங்கள்பரிந்துரைகள் வேண்டப்படுகின்றது. --Natkeeran 01:45, 6 ஏப்ரல் 2007 (UTC)
dictionary.com கடவுச்சொல்பல சமயங்களில் ஆங்கிலச் சொற்களின் துல்லியமான பலுக்கல் அறிய வேண்டியிருக்கிறது. என்னிடம் dictionary.com கட்டணச்சேவைக்கான கடவுச்சொல் இருக்கிறது. இதில் பலுக்கல்களைக் கேட்கலாம். யாருக்காவது தேவையென்றால் ravidreams_03 at yahoo dot com க்கு எழுதுங்கள்--ரவி 09:39, 6 ஏப்ரல் 2007 (UTC)
--செல்வா 12:29, 6 ஏப்ரல் 2007 (UTC) FARCTamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language --Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)
உறவுமுறைகள்தமிழ்_முஸ்லிம்கள்_அன்றாடம்_பயன்படுத்தும்_வார்த்தைகள் என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்று (முதன்முதலாய்) தொடங்கியிருக்கிறேன். அதில் முஸ்லிம்களின் உறவுமுறைகள் என்கிற வகையில் இன்னும் நீண்டுகொண்டே செல்லும் என்று எண்ணுகிறேன். இவற்றை (உறவு முறைகள்) பொதுவான வேறொரு பக்கத்திற்கு மாற்றினால் என்ன? இதில் ஊர் வாரியாக பிரிக்க வேண்டும் என்பது என் அவா.. --மாஹிர் 10 ஏப்ரல் 2007 போதிய அளவு தகவல்கள் இருக்குமானால் தனித்தனிக் கட்டுரைகளாக எழுதலாம். Mayooranathan 18:16, 10 ஏப்ரல் 2007 (UTC) 9,000 கட்டுரைகள்; 10,000 எப்போது?இன்று த.வி கட்டுரை எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை எட்டியிருக்கிறது. செல்வா முன்மொழிந்தபடி முடிந்தளவு விரைவாக பத்தாயிரத்தை எட்ட நாம் இணைந்து செயலாற்ற வேண்டும். பத்தாயிரம் வரைக்குமாக என்று எல்லோருமிணைந்து தினம் 50 கட்டுரைகள் இணைத்தால் இம்மாத முடிவிலேயே பத்தாயிரத்தை எட்டலாம். வழக்கமான மித வேகத்தில் சென்றால் மேலும் ஒரு மாதம் எடுக்கும். தெலுங்கு விக்கிபீடியா மீண்டும் வேகம் எடுக்கிறது. தமிழைத் தாண்டி முதலிற் பத்தாயிரத்தைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தி விக்கிபீடியா பத்தாயிரத்தை தாண்டிய பின் சற்று நின்று நிதானித்துப் பல கட்டுரைகளை நீக்கி முன்னேறுவதாகத் தெரிகிறது. --கோபி 17:37, 10 ஏப்ரல் 2007 (UTC) கோபி, தெலுங்கில் ஏற்கனவே 20,000+ கட்டுரைகள் உள்ளன. மராட்டி மொழியை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழ் விக்கிபீடியா துவக்க காலத்தில் நம்முடன் இணையான வேகத்தில் வளர்ந்த கன்னட விக்கிபீடியா இப்பொழுதும் 5000க்கு குறைவான கட்டுரைகளுடன் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. எவ்வளவு விரைவாக 10, 000 கட்டுரை இலக்கை அடைந்தாலும் நன்று தான். ஆனால், ஒரு நாளைக்கு இவ்வளவு என்று எண்ணிக்கை இலக்குடன் கூடிய பங்களிப்பில் எனக்கு உடன்பாடில்லை. இது குறித்து செல்வா அவர்களின் பக்கத்திலும் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். எண்ணிக்கை உயர்வு ஒரு by product and coincidenceஆக இருப்பதே நல்லது. அதை இலக்காக வைத்தால் தரத்தைக் கோட்டை விட்டு விடுவோம் என்பது என் கவலை.--ரவி 17:55, 10 ஏப்ரல் 2007 (UTC) நாம் இன்னும் ஒரு மாதத்திற்குள் 10,000 அடைவோம் என்பது என் கணிப்பு. என் கணிப்பு தவறாக இருக்கலாம். மே மாதம் 10 நாளுக்குள் அடைய முற்படவேண்டும். பங்குகொள்வோர் எண்ணிக்கையை வரும் மாதங்களில் குறைந்தது 50% பெருக்க வேண்டும், ஏற்கனவே பங்களிப்பவர்கள் 10% கட்டுரை எண்ணிக்கை கூட்ட வேண்டும் (3 நாளில் 9 கட்டுரை எழுதுவோர் 10 கட்டுரை எழுதலாம்). இவை எல்லாம் எவ்வளவு நடக்க கூடும் என்பது நம் கையில் தான் உள்ளது. நாம் இரண்டு இடம் பின் தள்ளப்பட்டுள்ளோம். இப்பொழுது 62 -> 64. இன்னும் சுறுசுறுப்பாக எழுத வில்லை என்றால் மீண்டும் 70க்கு மிக எளிதாக தள்ளப்படுவோம். நாடுகள் பற்றி, தனிமங்கள் பற்றி, பறவைகள் பற்றி, என்று ஆயிரக்கணக்கில் தலைப்புகள் உள்ளன எழுத. 9,000 கட்டுரை அடைவதற்கு பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!--செல்வா 19:23, 10 ஏப்ரல் 2007 (UTC) தமிழ் விக்கிமூலம்தமிழ் விக்கிமூலத்துக்கான கோரிக்கை மீண்டும் வேறொரு இடத்தில்... கோபி 20:12, 10 ஏப்ரல் 2007 (UTC)
புத்தாண்டு வாழ்த்துக்கள்அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் இன்று கொழும்பு வருகின்றேன். வேண்டுமென்றால் விக்கிபீடியர்களின் ஒன்றுகூடல் கூட நிகழ்த்தலாம்.--Umapathy 05:39, 12 ஏப்ரல் 2007 (UTC) புத்தாண்டைக் கொண்டாடும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். --டெரன்ஸ் \பேச்சு 05:41, 12 ஏப்ரல் 2007 (UTC) இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். --Natkeeran 05:44, 12 ஏப்ரல் 2007 (UTC) அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். --Sivakumar \பேச்சு 06:25, 12 ஏப்ரல் 2007 (UTC) அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்--mahir அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.--கலாநிதி 17:23, 12 ஏப்ரல் 2007 (UTC) வரும் புத்தாண்டு எல்லோருக்கும், தமிழ் விக்கிபீடியாவுக்கும் சிறந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள். Mayooranathan 17:36, 13 ஏப்ரல் 2007 (UTC) Phonetic typing on the edit windowHello all, I am back after a long break. Belated Tamil New Year wishes. I found an exciting feature on Bengali wiki that might useful here. On their edit windows, they have this check box that says "Phonetic Bangla Typing. Check/Uncheck box or use Esc as a toggle key to activate/deactivate. Go to WP:Typing for help". The edit window lets the user type in english and the text gets translated to Bengali. This is similar to how E-kalappai works except there is no need for a install. It works for everyone even IP addresses. I asked Ragib Hassan on how they implemented this. To make this work, I need help translating something. Please see பயனர்:Ganeshk/translate. The text in Bengali needs to be translate. I think it is all the keystrokes that are possible. Lot of people find it difficult to start typing in tamil and so hesitate to join. It would be great if this works here. And sorry for the English. :) Regards, Ganeshk 21:52, 16 ஏப்ரல் 2007 (UTC) தமிழ் விக்கிப்பீடியா இயல் சின்னங்கள்தமிழ் விக்கிபீடியாவிற்கு தனித்துவமான சில இயல் சின்னங்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இது தொடர்பாக பிற பயனர்களின் கருத்துக்களை brainstrom செய்தால் நன்றாக இருக்கும். நன்றி. --Natkeeran 21:13, 21 ஏப்ரல் 2007 (UTC) கட்டற்ற முறையில் தமிழ் சூழமைவுக்கு ஏற்ற மாதிரி cliparts ஆக்குதல், அதற்கான வழிகளை ஆராய்தல் நன்று. இத்துறையில் இருப்போர் இதற்கு உதவ முன்வர வேண்டும். தமிழ் சூழமைவை என்ன சின்னங்கள் பிரதிபலிக்கின்றன என்று பட்டியலிட்டு, பின்னர் வரைகலை கலைஞர்களின் உதவியுடன் வடிவமைக்கப்படவேண்டும். --Natkeeran 15:40, 12 மே 2007 (UTC) வழிமாற்றுப் பொத்தான்தொகுப்புச் சட்டத்தில் உள்ள பொத்தான்களில் #REDIRECT பொத்தானை இணைக்க முடியுமா? ஆங்கில விக்கியில் உள்ளது போல்.--Sivakumar \பேச்சு 17:04, 24 ஏப்ரல் 2007 (UTC) பேச்சுப் பக்க வார்ப்புருடெரன்ஸ், அழகி பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள வார்ப்புருவின் தேவை என்ன? இது போல் அனைத்துப் பக்கங்களிலும் சேர்க்க எண்ணமா?--ரவி 09:54, 25 ஏப்ரல் 2007 (UTC).
இவ்வாறு எல்லாப் பேச்சுப் பக்கங்களிலும் இடுவது அவசியம்தானா என்பது எனக்கும் விளங்கவில்லை. depth அதிகரிக்க வேண்டுமென்பதற்காக இடத் தேவையில்லை. --கோபி 12:23, 25 ஏப்ரல் 2007 (UTC) 10,000 கட்டுரைகள்பத்தாயிரம் கட்டுரைகள் அளவைத் தாண்டி விட்டோம். எதிர் பார்த்ததை விட விரைவாகவே இது நடைபெற்றதற்கு கணேஷ், நிரோஜன் ஆகிய இருவரதும் பங்களிப்பு முக்கியமானது. இவர்களுக்கு எனது நன்றிகள். அடுத்தது என்ன? கட்டுரை எண்ணிக்கையைக் கூட்டுவதைத் தொடர வேண்டும் எனினும், ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். புதிய கட்டுரைகளைப் பல்வேறு துறைகளையும் சார்ந்தவையாக விரிவாக்கம் செய்யவேண்டும். அறிவியல், கணினியியல் போன்ற பல்வேறு நவீன துறைகளில் இடம் பெறுகின்ற வளர்ச்சிகளை உடனுக்குடன் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் செய்வது மிகவும் அவசியமானது. தமிழ் விக்கிபீடியாவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய தலைப்புக்கள் தொடர்பிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகின்றது. கணிதம், வேதியியல், இயல்பியல், பொறியியல், மருத்துவம், பொருளியல், புவியியல், சூழலியல், மேலாண்மை, கல்வியியல் போன்ற பல்வேறு துறைகளிலுமுள்ள அடிப்படையான கருத்துருக்கள் அனைத்தையும் பற்றிய கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் இருக்க வேண்டும். தமிழ் விக்கிபீடியாவின் ஆழம் (Depth) ஒவ்வொரு கட்டுரை அதிகரிப்புப் பாய்ச்சலின் போதும் கீழ் நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாதது எனினும் இதனை மேம்படுத்த முயற்சிகள் தேவை. இதற்காகச் செயற்கையான முறைகளைக் கைக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆழத்தை அதிகரிப்பது தொடர்பில் நியாயமான தேவைகள் பல உண்டு அவற்றை இனங்கண்டு அவை தொடர்பில் முயற்சிகள் செய்யலாம். எடுத்துக்காட்டாக, நிறைய வழிமாற்றுப் பக்கங்கள், Disambiguiation பக்கங்கள் என்பவற்றுக்கான தேவை உள்ளது. பல கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் உள்ளன இவற்றைத் திருத்துவதன் மூலம் ஆழம் அதிகரிக்கும். இவற்றைவிடக் கட்டுரைகளுக்கு வெளியிணைப்புக்களைச் சேர்த்தல், உள்ளிணைப்புக்களை உருவாக்குதல், புதிய தகவல்களைச் சேர்த்தல், கட்டுரைகளை விரிவாக்கல், படிமங்கள் குறைவாக உள்ள கட்டுரைகளுக்குப் படிமங்களைச் சேர்த்தல், போன்ற பல நடவடிக்கைகள் ஆழம் அதிகரிக்க உதவக்கூடியன. கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிப்புத் தேடு பொறிகளில் தமிழ் விக்கி அகப்படுவதற்கான வாய்ப்புக்களைக் கூட்டும் என்பதிலும், இதனால் தமிழ் விக்கி மக்களுக்குக் கூடுதலாக அறிமுகமாகும் என்பதிலும் ஐயம் இல்லை. ஆனால் இவ்வாறு அறிமுகமாகுபவர்களை மீண்டும் மீண்டும் வரத் தூண்டுவதற்கும், தொடர்புகளை நீண்டகாலம் தக்கவைத்துக் கொள்வதற்கும் கட்டுரைகளின் தரமும், அவற்றின் பல்வகைமையும் மிக மிக அவசியம். இதன் மூலமே தமிழ் விக்கி தொடர்பான நல்லெண்ணத்தை வளர்க்கமுடியும். எனவே வருங்காலத்தில் தரத்தைக் கூட்டுவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுவோம். Mayooranathan 07:52, 27 ஏப்ரல் 2007 (UTC)
மயூரநாதன் சொன்ன அத்தனைக் கருத்துக்களும் எண்ணி, முனைப்புடன் செயல்படுத்த வேண்டியவை. உண்மையிலேயே எழுத ஆயிரக்கணக்கான தலைப்புகள் உள்ளன. பங்களிபாளர்கள் வரிசை இன்னும் பன்மடங்கு கூடவேண்டும். கூட்ட இயலும். அண்மையில் Profvk போன்ற பட்டறிவுமிக்கவர்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கின்றது. காயத்திரி, அரசன், மது போன்ற நல்ல எழுத்தாளர்கள் இன்னும் பலரும் வந்து தொடர்ந்து பங்களிக்க வேண்டும். நம் வருங்கால வளர்ச்சியின் அடிப்படையான கூறுகளில் ஒன்றானது நல்ல அறிவும் திறமும் கொண்ட பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதில் உள்ளது. நாம் 10-15 பேராக உழைத்தால் மிக மிக மெதுவாகவே நகர இயலும் (வெறும் கட்டுரை எண்ணிக்கையைக் கொண்டு கூறவில்லை). ஏன் நம்மால் ஒரு 100 பங்களிப்பளர்களைக் கூட பெற முடியவில்லை என்று, திருத்தும் முகமாக சிந்த்தித்தல் வேண்டும். பயனர்கள் 1,600 இருக்கலாம், ஆனால் வந்து தொடர்ந்து பங்களிப்பவர்கள் அதில் 100 கூட இல்லாதது வியப்பாக உள்ளது. மயூரநாதன் எத்தனை கடுமையாக உழைத்துள்ளார் எனினும் அவர் ஏறத்தாழ 600-650 நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளார் நான் வந்து இன்னும் ஓராண்டு ஆகவில்லை (ஆண்டு நிறைவு நெருங்குகிறது), என்னாலும் 300-350 கட்டுரைகள்தான் எழுத இயன்றது. டெரன்ஸ் ஏறத்தாழ 400 கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆக பெரும்பாலும் ஆர்வம் உடையவர்கள் குறுங்கட்டுரையாக எழுதினாலும் ஆண்டொன்றுக்கு 200-400 தான் எழுத இயலும். நிரோ, கோபி போன்றோர் இதற்கு விதி விலக்கு (முறையும் வேறானது). எனவே 10 பேர் உழைத்தால் ஆண்டொன்றுக்கு 2000-3000 தான் எட்ட முடியும். எனவே நல்ல பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது மிக மிகத் தேவையானது. கட்டுரை எண்ணிக்கை ஒரு புறம் இருக்க ஆழப்படுத்துவதிலும், ஒழுங்குப்படுத்துவத்லும் ஏராளமான உழைப்பு தேவைப்படுகின்றது. நமக்கு நிறைய உதவி தேவை, நிறைய பங்களிப்பாளர்கள் தேவை, நல்ல எழுத்தாளர்கள் தேவை. நிரோ போன்றவர்கள் இவ்வளவு அதிகமாக உழைக்கத்தான் வேண்டுமா? உழைப்பை பகிர்ந்து கொண்டால் இன்பமும் பயனும் பெருகும் அல்லவா?--செல்வா 14:25, 27 ஏப்ரல் 2007 (UTC)
Nayanar
இந்தியாவின் அதிகாரப் பூர்வ மொழிகள்இந்தியாவின் அதிகாரப் பூர்வமொழிகள் 15ஆ 23ஆ தயவு செய்து யாராவது சரிபார்க்கவும். Official languages of India ஆங்கில் விக்கிபீடியாவில் 23 மொழிகள் என்றுள்ளது. இவற்றைச் சரிசெய்யவேண்டும். தவிர யாராவது மொழிகளைத் தெரிந்தவர்கள் ஆகக்குறைந்தது ஒரு சில உரையாடல்களைக் குறிப்பிட்டால் நன்று. எடுத்துக்காட்டாக மலையாளம் கட்டுரையைப் பார்க்க. --Umapathy 14:02, 28 ஏப்ரல் 2007 (UTC) மேற்கோள்கள்தற்போது இணையத்திலும் இணையத்திற்கு அப்பாலும் தமிழ் பதிப்புகள் பெருகுவது போன்று தோன்றுகிறது. அவற்றை மேற்கோள்களாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் நம்தளத்தின் நம்பகத்தண்மை கூடும் மற்றும் சொந்தக் கருத்துக்களைப் புகுத்துவதைத் தடுக்கலாம். இதன் பக்கவிளைவாக நாம் மேற்கோள் சுட்டும் பதிப்புகளின் நுகர்வும் கூட வாய்ப்புள்ளது. செய்திகளுக்கு பிபிசி தமிழ் ஒரு மேற்கோளாக இருந்து வந்துள்ளது. தற்போது சிஃபி, யாஹூ, எம்.எஸ்.என். போன்ற வலைவாசல்களும் தமிழ் கட்டுரைகளைத் தொகுத்தளிக்கத் துவங்கியுள்ளன. கிழக்கு பதிப்பகம் போன்றவை ஆளுமைகளைப் பற்றியும் பல தரப்பட்ட விடயங்கள் மீதும் வாங்கத்தக்க விலைகளில் புத்தகங்களை வெளியிடத் துவங்கியுள்ளன. இவையனைத்தையும் காட்டியும் பெரிய அளவில் பிரிட்டானிகாவின் தமிழ் பதிப்பை விகடன் பதிப்பகம் வெளியிட உள்ளது. இவற்றையும் ஏற்கெனவே உள்ள பழம்பெரும் பதிப்புகளையும் நாம் இனி மேற்கோள்களாகப் பயன்படுத்தத் துவங்க வேண்டும். -- Sundar \பேச்சு 07:24, 30 ஏப்ரல் 2007 (UTC) VolkovBotபயனர்:VolkovBot-க்கு 'பாட் தகுதி வழங்கலாம். கடந்த சில நாட்களாகவே இதன் பணி நன்றாகவே உள்ளது.--Sivakumar \பேச்சு 18:23, 3 மே 2007 (UTC) en:History of Tamil Nadu ஆங்கில விக்கிப்பிடியாவின் இன்றைய முதற்பக்கத்தில், சிறப்புக் கட்டுரையாக. ஆக்கர்களுக்கு வாழ்த்துக்கள். --Natkeeran 14:45, 5 மே 2007 (UTC) விக்கிமூலம்கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இழுத்தடித்து இப்போது விக்கிமூலம் உருவாக்கப்பட்டுள்ளது நிறைவு அளிக்கிறது. ஏற்கனவே, விக்கி நூல்களில் உள்ள பொருத்தமான பக்கங்களை இங்கு நகர்த்தப் பார்ப்போம். இதற்குத் தானியங்கி முறை ஏதும் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு விக்கி திட்டித்திலும் மீடியா விக்கி தகவல்களை மொழிபெயர்ப்பது வேலைப்பளுவை அதிகரிக்கிறது. தற்போது தமிழ் விக்கிபீடியாவில் உள்ள மீடியாவிக்கி தகவல்களை po கோப்பாக மாற்றி அங்கு இற்றைப்படுத்த முடியுமா? சுந்தர், கணேஷ் இது குறித்து விளக்கினால் நன்று. விக்கி மூலம் என்ற பெயரைப் பயன்படுத்துவோமா? இல்லை, வேறு பொருத்தமான பெயர்கள் இருக்கின்றனவா? விக்கி ஊற்று என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா? மூலம் தமிழ்ச் சொல் தான் என்று உறுதிப்படுத்திக் கொள்ள இயன்றால் நன்றாக இருக்கும். விக்கி மூலத்தில் இடப்படும் பக்கங்களை விசம வேலை, தவறான தொகுப்புகளில் இருந்து காக்க பூட்டி வைக்க வேண்டியது அவசியம். இது குறித்த அணுக்க உரிமைகளைப் பெற விரைவில் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். விக்கி மூலத்தில் பெரிதும் ஆர்வம் காட்டி வரும் கோபி, நற்கீரன் இதற்குப் பொருத்தமானவர்கள்.--ரவி 11:30, 10 மே 2007 (UTC)
சுந்தர், தானியங்கி எழுதுவது வரவேற்கக்கக்கூடிய தற்காலிகத் தீர்வு. ஆனால், அனைத்து மீடியாவிக்கித் தளங்களுக்கும் உதவும் வகையில் இத்தமிழாக்கங்களை ஒரு கோப்பாகப் பதிவிறக்கி நிறுவ வழி இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள். விக்கி நூலகம் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டு தமிழ் wikisource தள ஆலமரத்தடியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் அங்கு வந்து கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்--ரவி 16:27, 11 மே 2007 (UTC)
இந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப்பெயர்ப்பு கருவிஇனியன் என்பவரின் இப்பக்கத்தில் பல இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு எழுத்துப் பெயர்ப்பு செய்ய வசதியுள்ளது. பிற மாநில ஊர்ப்பெயர்கள், மற்ற பெயர்ச்சொற்கள் எவ்வாறு பலுக்கப் படுகின்றன என அறிய உதவலாம். எடுத்துக்காட்டாக Jog Falls என்பது ஜாக் அருவியா ஜோக் அருவியா என ஆங்கிலத்தில் இருந்து அறிதல் இயலாது. ಜೋಗ - இதனை அப்பக்கத்தில் கொடுக்கையில் தெரிந்தது.--Sivakumar \பேச்சு 16:00, 15 மே 2007 (UTC) ஆமா சிவா, இந்த ஊர்ப்பெயர் பயன்பாட்டைக் குறித்து நான் யோசித்துப் பார்க்கவில்லை. அப்புறம், அந்தக் கருவியின் பெயர் தான் இனியன். அதை உருவாக்கியவர் ஜெகத். இனியன் அவரது மகனின் பெயர்.--ரவி 03:51, 16 மே 2007 (UTC) இது ஒரு பயனுடைய மென்பொருட்கருவி. குறிப்பாக திராவிட மொழிக்கட்டுரைகளை (கன்னடம், தெலுங்கு, மலையாளம்) எழுத்துப் பெயர்ப்புச் செய்து பார்த்தால் 40-80% புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இக்கருவி மிகச் சிறப்பாக இயங்குகின்றது. ஊர்ப்பெயர், பெயர்சொற்கள் மட்டும் இல்லாமல் கட்டுரை முழுவதையுமே, ஓரளவிற்குப் படித்துப் பொருள் கொள்ள உதவுவது. நல்ல முயற்சி. யூனிக்கோட்டில் இருப்பதால் எழுத்துப் பெயர்ப்புச் செய்வதும் எளிதாகவே இருந்திருக்கும். எடுத்துக்காட்டிய சிவாவுக்கு நன்றி.--செல்வா 03:59, 16 மே 2007 (UTC) தமிழ் விக்கிபீடியா நிரல் பற்றியும் சில விளக்கங்களும்தமிழ் விக்கிபீடியா சமீபத்தில் 10000 தலைப்புகளை தாண்டி சாதனைப் படைத்து வரும் வேளையில் என்னால் இயன்ற அளவிலான சிறிய பங்களிப்பு. இதில் தமிழ் விக்கிபீடியா பகடை தொடுப்பு நிரலியும் மற்றும் 12552 தலைப்புகளுக்கான sql table, php source codes சேர்த்து க்னூ உரிமையின் கீழ் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். விளக்கம் தேவை: இந்த sql query க்கு காப்புரிமை அல்லது என்னுடைய பெயரை போடுவதில் ஏதாவது விக்கிபீடியாவின் காப்புரிமை பிரச்சினை வருமா என்பதை அறியத்தரவும். பதிவிறக்கம் செய்ய: http://techtamil.in/wikipedia/wikipedia.zip <iframe src="http://techtamil.in/wikipedia/wikipedia.php" width="250px" height="250px" vspace="0" hspace="0" allowtransparency="true" frameborder="0"></iframe> மாஹிர்
--Natkeeran 18:54, 20 மே 2007 (UTC) நன்றி Natkeeran... --மாஹிர் 21 மே 2007(IST) நகர்பேசியில் தமிழ் விக்கிபீடியாhttp://wapedia.mobi/ta/ - இந்தத் தளத்தை நிறுவியுள்ளவர் இங்குள்ள தலைப்புக்களுக்கான மொழிபெயர்ப்பைக் கேட்டிருக்கிறார். பல்லூடகங்களுக்கும் தமிழ் விக்கிபீடியாவை எடுத்துச் செல்ல நாம் உதவ வேண்டும். -- Sundar \பேச்சு 09:21, 16 மே 2007 (UTC) தமிழியல் மாநாடு 2007: இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்தொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற இரண்டாவது தமிழியல் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2007ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெறும். வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்னாசியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழியல் புலமையாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்கிறது. மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது சுகாதாரம், சமயம், சமூகவியல், அரங்கக் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் கட்டுரைகள் படைக்கின்றனர். http://www.chass.utoronto.ca/~tamils/ இந்த தளத்தில் த.வி. அறிமுகப்படுத்தல் ஆக்க பூர்வமாக இருக்கும். |
Portal di Ensiklopedia Dunia