இங்கு நடந்த உரையாடலுக்கேற்ப, கீழ்காணும் புதிய அணுக்கங்களை உருவாக்க பரிந்துரைக்கிறேன்.
சுற்றுக்காவலர் (Patroller)
Have one's own edits automatically marked as patrolled (autopatrol)
Mark others' edits as patrolled (patrol)
View detailed abuse log entries (abusefilter-log-detail)
முன்னிலையாக்குநர் (Rollbacker)
Quickly rollback the edits of the last user who edited a particular page (rollback)
தற்காவலர் (autopatrolled)
Have one's own edits automatically marked as patrolled (autopatrol)
ஆதரவு இதன் மூலம் இன்னும் சிறப்பாக தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கண்காணிக்க பலருக்கும் இவ்வணுக்கங்களைத் தரலாம். தற்போது உள்ள நிருவாகிகளின் பணிச்சுமையைக் குறைக்கலாம். வருங்கால நிருவாகிகளுக்கு பராமரிப்புப் பணிகளில் உள்ள ஆர்வம், முனைப்பு, திறத்தை அறியவும் இவ்வணுக்கங்கள் உதவும்.--இரவி (பேச்சு) 18:01, 1 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
இப்புதிய அணுக்கங்களுடன் வார்ப்புரு தொகுப்பாளர் / வார்ப்புரு தொகுநர் (Template editor) என்ற அணுக்கத்தையும் சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். முதற்பக்கப் பராமரிப்பு, காக்கப்பட்ட சிக்கலான வார்ப்புருக்கள் தொடர்பான மேம்பாடுகள் என்பவற்றை நிர்வாகி அல்லாத ஆனால் வார்ப்புரு தொடர்பாக சிறந்த அறிவுடைய பயனர்கள் மேற்கொள்வதற்கு இலகுவாக அமையும்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}07:43, 2 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
ஆதரவு. இதற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் மீண்டும் ஒரு முறை இங்கு ஆதரவு தெரிவித்தால், வாக்கெடுப்பை இற்றைப்படுத்தலாம்.--இரவி (பேச்சு) 13:36, 2 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
எதிர்ப்பு. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 3 அணுக்கங்கள் குறித்த உரையாடல் முன்னமே நடைபெற்று அதற்கேற்பவே இவ்வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதற்குள் இடைச் சொருகல் வேண்டாம். "Template editor" அணுக்கத்திற்கு த.வி.யில் தேவை உள்ளதா? முதற்பக்கப் பராமரிப்புக்கும் இதற்கும் தொடர்பில்லை. முதற்பக்கப் பராமரிப்பைச் செய்ய முன் வராமைதான் காரணம். தற்போதைய சூழலில் யாரும் செய்யலாம். சிக்கலான வார்ப்புருக்களில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை உள்ளதா? அப்படியிருப்பின், அதன் காப்பை தற்காலிகமாக மாற்றுவதில் எச்சிக்கலும் இல்லை. இது தொடர்பில் நிருவாகிகளுடன் (அல்லது நிருவாகிகளின் அறிவிப்புப் பலகையில்) உரையாடலாம். --AntonTalk13:50, 2 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
அன்டன், தேவையென்றால் இதற்கு இன்னொரு கருத்தெடுப்பு / வாக்கெடுப்பு தனியாக நடத்தி முடிவெடுக்கலாம். Phabricatorஇல் மேல் உள்ள வாக்கெடுப்போடு சேர்த்து ஒரே கோரிக்கையாக வைக்கலாம். விசமிகளிடம் இருந்து காப்பதற்காகவே முக்கியமான வார்ப்புருக்களைப் பூட்டி வைத்திருக்கிறோம். சிறீகர்சன் போன்று நுட்பத்தில் ஆர்வமும் தொடர் பங்களிப்புகளும் மிக்க எந்த ஒரு பயனரும் அவற்றை அணுகி வடிவமைப்புகளை மாற்றி மேம்படுத்த, கற்றுக் கொள்ளத் தடை இருக்கத் தேவையில்லை. இவற்றுக்காக ஒவ்வொரு முறை நிருவாகிகளிடம் வேண்டுகோள் விடுத்துக் காத்திருக்கவும் தேவை இல்லை. ஒருவருக்கு இந்த அணுக்கதைத் தருவதாலேயே அவர் இங்கேயோ வேறு எங்குமோ தொடர் பங்களிப்புகளைத் தர வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. இயன்ற போது பங்களிப்பதும் நேரடியாக கற்றலும் திற மூல தத்துவத்துக்கு உட்பட்டதே. நன்றி. --இரவி (பேச்சு) 12:44, 3 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கியில் "Template editor" அணுக்கத்திற்கான தேவை உள்ளதா? என்ன தேவைகள் என்பதைக் குறிப்பிட முடியுமா? X என்ற பயனர் நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர், தொடர் பங்களிப்பாளர், பிற தகுதிகளும் உள்ளவர். அவருக்கு sysop அல்லது Bureaucrat அணுக்கம் தேவைப்படுகிறது. தமிழ் விக்கி வழங்க அதை அவருக்கு அளிக்க முடியுமா? மேல் உள்ள வாக்கெடுப்போடு சேர்த்து ஒரே கோரிக்கையாக வைக்க முடியாது. இங்கு ஆதரவளித்தது குறித்த 3 அணுக்கங்களுக்கு மாத்திரமே. --AntonTalk16:06, 3 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
அன்டன், நுட்பத் திறனுள்ள பயனருக்கு இவ்வார்ப்புருக்களைத் தொகுத்துப் பார்த்து மேம்படுத்த, கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் போதும். இதில் உடனடித் தேவை முக்கியமாகப் படவில்லை. ஆயிரக்கணக்கான கட்டுரைகள், வார்ப்புருக்கள் எப்போதும் திறந்த நிலையில் இருப்பது போல கூடுதலாக சில வார்ப்புருக்களுக்கான அணுக்கமும் ஒரு சில நம்பகமான பயனர்களுக்குத் திறந்திருப்பதில் எந்த விதத் தீங்கும் இல்லை. மாறாக, இவ்வாறான இறுக்கமான நிலைப்பாடு வளரும் விக்கி தலைமுறையினரைச் சோர்வடையச் செய்யலாம். நிருவாகிகள், அதிகாரிகளுக்கான அணுக்கங்களைத் தர கூடுதல் பொறிமுறைகள் வேண்டும் என்ற பொது உடன்பாட்டின் அடிப்படையில் தான் இந்த புதிய அணுக்கங்களைத் தர முனைகிறோம். எனவே, இவற்றைத் தர வேண்டும் கோரிக்கைக்கு மீண்டும் நிருவாகிள் தேர்தலையே ஒப்பிடுவது பொருத்தம் அற்றது. மேலே உள்ள வாக்குகள் குறிப்பிட்ட 3 அணுக்கங்களுக்காகவே இருக்கட்டும். பேப்ரிக்கேட்டரில் வழு பதியும் வேலைப்பளு கூட்ட வேண்டாம் என்று தான் நான்காவது அணுக்கத்தையும் சேர்த்து மொத்தமாக ஒரே வழு அறிக்கையாக பதியலாம் என்று பரிந்துரைத்தேன். இதற்காக தனியாக ஒரு வாக்கெடுப்பு நடத்தி அதில் இணக்க முடிவு வந்தால் அதையும் சேர்த்து பரிந்துரைப்போம். நன்றி.--இரவி (பேச்சு) 18:28, 3 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
நன்றி, சண்முகம். முதலில், தற்காவல் அணுக்கம் தொடர்பான உரையாடலை இங்கு தொடங்கியுள்ளேன். அனைவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். அதன் பிறகு, மற்ற இரு அணுக்கங்களுக்கான வழிகாட்டல்களை உருவாக்குவோம். நன்றி.--இரவி (பேச்சு) 10:03, 14 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா குறித்து நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை...
கட்டுரையாளரும் ஒரு விக்கிப்பீடியரே. அவர் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: As long as the core team ensures fairness and stays true to its democratic principles, Wikipedia will continue to thrive. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 3 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
Hello, I made a proposal on Meta to change the rules for the steward confirmations. Currently consensus to remove is required for a steward to lose his status, however I think it's fairer to the community if every steward needed the consensus to keep. As this is an issue that affects all WMF wikis, I'm sending this notification to let people know & be able to participate. Best regards, --MF-W16:12, 10 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
இந்திய உணவுகள் தொடர்பான ஒளிப்படப் போட்டி
வணக்கம். விக்கி விரும்புதே உணவை (Wiki Loves Food) என்ற பெயரில் ஒரு ஒளிப்படப் போட்டி நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு இந்திய துணைக்கண்ட உணவுகள் குறித்த ஒளிப்படங்களைப் பதிவேற்றலாம். இதன் முதற்கட்டமாக சிறு அளவில் சோதனை ஓட்டம் நடத்துகிறோம். இதில் கலந்து கொள்ள ஒவ்வொரு மொழி விக்கிப்பீடியா சமூகத்தில் இருந்தும் இரண்டு போட்டியாளர்களை அனுப்பி வைக்கக் கோரி வருகிறோம். இதில் வெல்பவர்களுக்கு சிறு பரிசுகள் வழங்கப்படும். தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடக்கும் முழுமையான போட்டியில் இவர்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளலாம். இலங்கை, மற்ற நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் பங்கு பெறலாம். ஆனால், நடைமுறைக் காரணங்களை முன்னிட்டு போட்டியில் வெல்வோருக்கான பரிசுத் தொகை இந்தியாவுக்குள் மட்டும் அனுப்பி வைக்கப்படும். இந்தியாவில் உள்ள நண்பர் யாரேனும் உங்கள் சார்பாக பரிசைப் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி, அன்டன். தமிழ் விக்கிப்பீடியா சார்பாக இன்னும் ஒருவர் தேவை. இது தொடர்பாக பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன். பொதுவான முதற்கட்டப் போட்டியும் துவங்கி உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைவரும் இங்கு பதிவு செய்யலாம். முதற்கட்டப் போட்டியில் 50 பேர் அளவிலேயே கலந்து கொள்ளலாம் என்பதால் பந்திக்கு முந்த வேண்டுகிறேன் :) --இரவி (பேச்சு) 05:24, 15 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
நன்றி, தமிழ்ப்பரிதி மாரி. நீங்களும் அன்டனும் முதற்கட்டப் போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள். மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். தமிழ் விக்கிப்பீடியர்கள் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம். முதற்கட்டச் சோதனைப் போட்டியில் 50 பேர் மட்டுமே இடம்பெறலாம் என்பால், எந்த விக்கிப்பீடியா சமூகமும் விட்டுப் போகக் கூடாது என்பதற்காகவே அலுவல் முறையில் இரண்டு பேரைப் பரிந்துரைக்கிறோம். மற்றபடி, இந்த 50 பேரில் யார் வேண்டுமானாலும் முந்திப் பதிவு செய்யலாம். ஒளிப்படக் கலையில் ஆர்வம் உள்ள உங்கள் நண்பர்கள், உறவுகளை இங்கு பதியச் சொல்லுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 06:26, 16 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
I am pleased to announce that nominations are now being accepted for the 2015 Wikimedia Foundation Elections. This year the Board and the FDC Staff are looking for a diverse set of candidates from regions and projects that are traditionally under-represented on the board and in the movement as well as candidates with experience in technology, product or finance. To this end they have published letters describing what they think is needed and, recognizing that those who know the community the best are the community themselves, the election committee is accepting nominations for community members you think should run and will reach out to those nominated to provide them with information about the job and the election process.
This year, elections are being held for the following roles:
Board of Trustees
The Board of Trustees is the decision-making body that is ultimately responsible for the long term sustainability of the Foundation, so we value wide input into its selection. There are three positions being filled. More information about this role can be found at the board elections page.
Funds Dissemination Committee (FDC)
The Funds Dissemination Committee (FDC) makes recommendations about how to allocate Wikimedia movement funds to eligible entities. There are five positions being filled. More information about this role can be found at the FDC elections page.
Funds Dissemination Committee (FDC) Ombud
The FDC Ombud receives complaints and feedback about the FDC process, investigates complaints at the request of the Board of Trustees, and summarizes the investigations and feedback for the Board of Trustees on an annual basis. One position is being filled. More information about this role can be found at the FDC Ombudsperson elections page.
The candidacy submission phase lasts from 00:00 UTC April 20 to 23:59 UTC May 5 for the Board and from 00:00 UTCApril 20 to 23:59 UTC April 30 for the FDC and FDC Ombudsperson. This year, we are accepting both self-nominations and nominations of others. More information on this election and the nomination process can be found on the 2015 Wikimedia elections page on Meta-Wiki.
Please feel free to post a note about the election on your project's village pump. Any questions related to the election can be posted on the talk page on Meta, or sent to the election committee's mailing list, board-elections -at- wikimedia.org
வணக்கம் பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள் என்ற பகுப்பில் உள்ள கட்டுரைகள் மேலும் விரித்தெடுக்க முடியாதவை.ஏனெனில் தல வரலாறு, அவதார விவரங்கள் போன்ற விடங்கள் இருப்பின் அவற்றை இணைக்க முடியும். ஆனால் தேடலில் அவை கிடைக்கவில்லை எனவே அவைகளை ஒரே கட்டுரையில் இணைக்கும் அளவிற்கே விபரங்கள் உள்ளன. இவை கட்டுரையின் எண்ணிக்கையைக் கூட்டுமே ஒழிய வேறு பலனில்லை. தனித்தனிக் கட்டுரைகள் தேவையில்லை. எனவே நீக்கி ஒரே கட்டுரையில் இவைகளை பதிவிட விழைகிறேன். கருத்துகளை தெரிவிக்கவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:04, 21 ஏப்ரல் 2015 (UTC)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:04, 21 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
பார்வதி, 32 திருவுருவங்களையும் இணைத்து ஒரு கட்டுரை ஆக்கலாம். இவற்றுள் சில கட்டுரைகளின் நீளம் பரவாயில்லை. அவற்றை நீக்காதிருப்பது நல்லது. மற்றத் திருவுருவங்களுக்கும் பின்னர் தகவல்கள் கிடைக்கும்போது தனிக்கட்டுரைகள் ஆக்க முடியும். படிமவியல் நூல்களில் இத்திருமேனிகள் பற்றிய தகவல்கள் இருக்கக்கூடும். என்னிடமும் சில நூல்கள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போது தேடிப்பார்க்கிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 17:03, 21 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
இப்பட்டியலில் உள்ளவர்கள் பலர் தானாக உருவாக்கப்பட்டவை. ஏனைய இந்திய மொழி விக்கிப் பயனர்கள் என நினைக்கிறேன். இவர்கள் தமிழ் விக்கியில் பங்களித்தால் மட்டுமே வரவேற்பளிப்பது நல்லது. இது எனது அபிப்பிராயம் மட்டுமே.--Kanags\உரையாடுக07:27, 24 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
இப்பட்டியலில் பெரும்பாலனாவர்கள் தமிழ் பெயர்களையும், தமிழில் பெயரையும் உருவாக்கியுள்ளார்கள், சில பிற மொழி விக்கிப்பயனர்களும் இருக்கக்கூடும். பங்களிக்க தெரியாத பயனர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கும் வரவேற்பு செய்தால் அவர்களுக்கு வழிகாட்டுவது போலிருக்கும். பிற மொழிகளில் நான் பயனர் பக்கம் உருவாக்கியபோது, அவர்கள் என்னை அன்புடன் வரவேற்றுள்ளனர்; அதன் பிறகு அவர்களுடைய உதவியுடன் சில கட்டுரைகளில் திருத்தமும் செய்துள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:12, 24 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
சரி, அண்மைய மாற்றங்களில் இவை தெரியாமல் இருக்குமாறு, தானியங்கி அணுக்கம் உள்ளவர்களைக் கொண்டு இவர்களை வரவேற்கலாம். ஆனால், தமிழ் விக்கியில் பயனர் கணக்கை ஆரம்பிப்பவர்களுக்கு தானியங்கி பயன்படுத்தாமல் வரவேற்பதே நல்லது.--Kanags\உரையாடுக11:25, 24 ஏப்ரல் 2015 (UTC)விருப்பம்[பதிலளி]
சண்முகம், இக்கணக்குகள் எப்படி உருவாகின்றன? ஆங்கிலம் அல்லது பிற மொழித் திட்டங்களில் கணக்கு உருவாக்கி புகுபதிந்தவர்கள் முதல் முறை தமிழ் விக்கிப்பீடியாவில் உலாவும் போது இக்கணக்குகள் தாமே உருவாகின்றனவா? இங்குள்ள புள்ளிவிவரங்களை புதுப்பயனர் உருவாக்கப் பதிகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தானாக உருவாகும் கணக்குகள் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்த பயனர்கள் கணக்கில் வருவது போலத் தெரிகிறது. --இரவி (பேச்சு) 18:22, 24 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
ஆம், நீங்கள் கூறுவது சரியே. வேறு ஏதாவது விக்கியில் கணக்கு உருவாக்கியவர் தமிழ் விக்கியில் உலாவும் போது இங்கேயும் தானாக கணக்கு உருவாக்கப்படும். மேலும் அந்தப் புள்ளிவிவரம் தானாக உருவாக்கும் கணக்கு மற்றும் தமிழ்விக்கியில் உருவாக்கப்படும் கணக்கு ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையே. தனியாக பிரிக்க இயலுமா என தெரியவில்லை. முயன்று பார்க்கலாம்.--சண்முகம்ப7(பேச்சு) 05:31, 26 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
தனியாக பிரிக்க வேண்டிய கட்டாயமில்லை. எந்த புதுப்பயனரின் பேச்சுப்பக்கம் உருவாக்கப்படவில்லையோ அவற்றில் வரவேற்பு செய்தி இட்டுவிடலாம். பயனர் உருவாக்கப்பட்டு 10 நிமிட கால தாமதம் கொடுக்கலாம்? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:00, 28 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
உடனடியாக இவற்றை தானியங்கி கொண்டு செய்ய மீண்டும் வலியுறுத்துகிறேன். தற்போதுள்ள புதுப்பயனர் வரவேற்பு செய்தியையும் எளிமைப்படுத்த வேண்டுகிறேன். ஆலமரத்தடி, மணல்தொட்டி போன்றவை புதுப்பயனர்களுக்கு புரியாமல் போய்விடுமோ என்ற அச்சமெழுந்துள்ளது. ஏதேனுமொரு தகவலுக்காகவே ஏற்கனவே புதுபதிகை செய்யப்பட்ட பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருகின்றனர். தானியங்கி கொண்டு ஒரு பயனர் தமிழ் விக்கியில் பார்வையிடும் பொழுதே அவருக்கு பேச்சுப்பக்கத்தில் தகவலிட வேண்டும். தற்போதுள்ள விக்கிப்பீடியாவில், புதிய பயனருக்கு இடைமுகப்பில் ஒரு செய்தி உள்ளதென காட்டும். ஒருசில நொடிகள் மட்டுமே தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருபவர்கள் இந்த செய்தியின் காரனமாக அவர்கள் தமிழ் விக்கியிலும் பங்கெடுக்க வாய்ப்புகள் அதிகம். இது தானியங்கி கொண்டு செய்வதால் மிகப்பெரிய மனித உழைப்பு சேமிக்கப்படும். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கியால் செய்ய இயலாத பல பணிகள் உள்ளது. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:02, 6 மே 2015 (UTC)[பதிலளி]
சண்முகம், குறிப்பிட்ட பயனர்களின் கையொப்பம் பயன்படுத்துவது குறித்து: ஒரு வரவேற்புக் குழு பக்கம் அமைத்து அதில் உள்ள உறுப்பினர்களின் சுழற்சி முறையிலோ அல்லது ஒரு மாதத்துக்கு ஒருவர் என்ற வகையிலோ மாற்றி மாற்றி பயன்படுத்த முடியுமா? தானியங்கி பயன்படுத்துவது என்று முடிவானால், அதற்கு முன்பு தற்போது உள்ள வரவேற்பு வார்ப்புருவை மீண்டும் எளிமையாக திருத்தி எழுதி, எந்த வகையான வரவேற்பு கூடுதல் பயனளிக்கிறது என்று சிறு சோதனைகள் செய்து பார்த்து, அதன் பிறகு ஒட்டு மொத்தமாக வரவேற்பை இடலாம்.--இரவி (பேச்சு) 14:25, 7 மே 2015 (UTC)[பதிலளி]
நீட்சி தொடர்பான மீடியாவிக்கி பக்கங்களை உரியவாறு மாற்றியுள்ளேன். நீட்சியை நிறுவுவதற்கு முன் பதிந்த ஆயிரக்கணக்கான பழைய பயனர் கணக்குகளிலும் புதுப்பயர் அறிவிப்பு சேர்க்கப்பட்டுள்ளதா? இல்லையெனில், சற்று காலம் தாருங்கள். வரவேற்பு வார்ப்புருவில் சிறிய மாற்றங்கள் செய்த பிறகு பழைய கணக்குகளில் வார்ப்புரு இடலாம்.--இரவி (பேச்சு) 14:36, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]
விருப்பம்--த♥உழவன்(உரை)12:43, 7 மே 2015 (UTC) குறைந்த பங்களிப்பாளர்கள் இருக்கும் நமது திட்டத்தில் இன்னும் பல பணிகளை செய்யத் திட்டமிடுங்கள். எ. கா. பரணிடல்[பதிலளி]
ஆதரவு. விக்கிப்பீடியா ஒரு வலைத்தளம் மட்டுமன்று, ஒரு சமூகத் திட்டமும் கூட. இத்திட்டத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் இத்தன்மை எதிரொளிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பயனர் பக்கங்களில் தானியங்கி வரவேற்பு வேண்டாம் என்று இது நாள் வரை கூறி வந்தேன். ஒரு திருமணத்துக்கு நூறு பேர் வந்தாலும் ஆயிரம் பேர் வந்தாலும் மணமக்கள் வீட்டாரே முன்னின்று வரவேற்பது தானே நமக்கு மகிழ்ச்சி அளிக்கும்? ஆனால், இது வரை பதிந்துள்ள 81,200+ பயனர்களில் கணிசமானவரைகளை வரவேற்கத் தவறி இருக்கிறோம் என்பது ஒரு வாய்ப்பு இழப்பே. இதற்காக வருந்துகிறேன். விட்டுப் போன ஆயிரக்கணக்கான பேர்களுக்கு உடனடியாக நாமே கைப்பட வரவேற்பு அளிப்பதில் செலவிடும் உழைப்பு, நேரத்தை நியாயப்படுத்துவது சிரமமாக உள்ளது. அத்துடன், தினேசு சுட்டிக்காட்டுவது போல, பயனர்கள் நமது தளத்துக்கு வருகை தரும் அதே வேளையில் வரவேற்பு இடுவதே சிறப்பாக இருக்கும். ஏனெனில், இன்றைய இணையப் பயனர்கள் மிகச் சிறிய கால அளவே கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். அவர்களின் கவனம் இருக்கும் போதே, தானியங்கி மூலம் செய்தியைச் சொல்ல முடியும் என்பதால் வரவேற்கிறேன். .ஒரு அனுபவம் வாய்ந்த விக்கிப் பயனராக, பிற தளங்களில் இவ்வாறு தானியங்கி வரவேற்புகள் வரும் போது, நான் அவற்றைப் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், புதிய விக்கிப்பயனர்களுக்கு இவை உதவிகரமாக இருக்கக்கூடும் என்பது உண்மையே. தானியங்கியை ஏவினாலும் அதிலும் பயனர்கள் பெயரைக் குறிப்பிட்டு ஒரு வரவேற்புக் குழு சார்பாக வரவேற்பது நன்று. இந்த வரவேற்புக் குழுவில் உள்ள பயனர்கள் புதிய பயனர்களின் தொகுப்புகளைக் கவனித்து உரிய உதவிகளைச் செய்யவும் முன்வருவது நன்று. நீட்சியை நிறுவிய உடனேயே தானியங்கியை ஏவாமல், தள்போது இருக்கும் புதுப்பயனர் வரவேற்பு வார்ப்புருவை எளிமையாக்கி பொதுக்கருத்து அறிந்து புதிய வரவேற்பு வார்ப்புருவை இட வேண்டும். இந்த விசயத்தைக் கவனித்து முயற்சி எடுக்கும் தினேசைப் பாராட்டுகிறேன். நன்றி. பி. கு. பயனர் பக்கங்களில் தானியங்கிச் செய்திகள் இடுவது இதே போல் ஒவ்வொரு பொருளாக உரையாடி செயற்படுத்துவது நன்று. ஒட்டு மொத்தமாக எல்லா விதமான தொடர்பாடல்கள், அறிவித்தல்களுக்கும் தானியங்கிகளைப் பயன்படுத்த வேண்டாம். நன்றி.--இரவி (பேச்சு) 09:46, 11 மே 2015 (UTC)[பதிலளி]
எதிர்ப்பு --Surya Prakash.S.A. (பேச்சு) 07:46, 8 மே 2015 (UTC) - நாமும் மற்ற திட்டங்களைப் போல் இருக்க வேண்டாம். வேண்டுமெனில், யாரேனும் ஒரு பயனரின் பெயரை தானியங்கி வரவேற்பில் பயன்படுத்தலாம். அந்தப் பயனர் வரவேற்றது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாமே தவிர, வரவேற்பின் கீழ் WelcomeBot என்ற பெயரை நான் எதிர்க்கிறேன்.[பதிலளி]
-Surya Prakash.S.A., welcomebot என்ற குறிப்பைத் தவிர்க்க முடிந்தால் தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாவிட்டால், தமிழ் விக்கிப்பீடியா வரவேற்புக் குழு சார்பாக welcomebot பயன்படுத்தி random user name இடும் வரவேற்புச் செய்தி என்று குறிப்பிடலாம்.--இரவி (பேச்சு) 09:50, 11 மே 2015 (UTC) விருப்பம் --மணியன் (பேச்சு) 04:56, 17 மே 2015 (UTC)[பதிலளி]
புதுப்பயனர் உள்நுழைந்து 2 நாட்கள் யாரும் வரவேற்பு அழைக்கவில்லை எனில் தானியங்கி தானாக வரவேற்கும் மாதிரி செய்ய வேண்டும். வேறோரு இடத்தில் இரவி(?) புதுப்பயனர்களாக உள் நுழையும் போது அவரை வரவேற்றவரை நெடுநாள் கழித்து இவர் தான் என்னை வரவேற்றார் எனச் சொல்வதும் மகிழ்வதும் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதை கவனத்தில் கொள்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:35, 7 மே 2015 (UTC)[பதிலளி]
இரண்டு நாட்கள்??? தங்களுக்கு தற்போதைய இணையத்தலைமுறை (இளையதலைமுறையல்ல) பற்றி நன்குதெரிந்திருக்க வாய்ப்புள்ளது, ஒரு பயனர் ஏதேனும் ஒரு கருத்தை தேடி வரும்போது அவருக்கு வரவேற்பு இடுவதை தவிர்த்து, இரண்டு நாட்களுக்குப்பிறகு இட்டு என்ன பயன்? இடைமுகப்புகள் இன்றை தலைமுறையில் மிக அதிக இடத்தை பிடித்திருப்பது தாங்கள் அறிந்ததே. காலதாமதம் செய்ய செய்ய அவர்கள் மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வரும் காலத்தை அதிகரிக்கும். உடனடியாக பேச்சுப் பக்கத்தில் தகவலிடும் பொழுது அவர்கள் தனக்கு ஏதோ ஒரு செய்தி வந்ததாக உணர்வார்கள் அது தானியங்கியா அல்லது பயனரா என அவருக்கு தெரியவே சில காலம் ஆகும் என்பதே என் கருத்து. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:52, 9 மே 2015 (UTC)[பதிலளி]
தென்காசி சுப்பிரமணியனின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன். பெயர் தெரிந்த பயனர் ஒருவர் வரவேற்பதுதான் சிறப்பானது. இது ஒரு வகையான பிணைப்பைக் கொடுக்கவல்லது. தான் வந்ததை மற்றப் பயனர்கள் கவனிக்கிறார்கள், தனது பங்களிப்பை எதிர்பார்க்கிறார்கள் என்ற உணர்வைக் கொடுக்கவல்லது. இதற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. ஆனால், பல நாட்களாக எவருமே கவனிக்க முடியாத நிலை இருக்குமானால், தானியங்கியால் வரவேற்பது ஒரு தீர்வாக இருக்கலாம். எனவே குறிப்பிட்ட நாட்களுக்குள் எவராவது வரவேற்காவிட்டால், தானியங்கி செயற்படுமாறு செய்வது நல்ல தீர்வாக இருக்கும். -- மயூரநாதன் (பேச்சு) 04:56, 8 மே 2015 (UTC)[பதிலளி]
பெரும்பாலான இணையதளங்களில் தானியங்கி கொண்டு எப்படி பயன்படுத்துவது என்ற செய்தி கொடுக்கப்படுகிறது. ஆயினும் பயனர்கள் தங்களுடைய வரவேற்பை ஏதாவது பங்களிப்பிற்காக கொடுக்கலாம். அதாவது முதல் தொகுப்பு அல்லது முதல் பக்க உருவாக்கம் போன்றவை செய்யலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:52, 9 மே 2015 (UTC)[பதிலளி]
தானியங்கி வரவேற்பு என்பது பொதுவாகவே இணையவெளியில் எங்கும் எந்த தளத்திலும் கையாளப்படும் யுத்தியாகிவிட்டது. தான் வந்ததை மற்றப் பயனர்கள் கவனிக்கிறார்கள், தனது பங்களிப்பை எதிர்பார்க்கிறார்கள் என்ற உணர்வுதான் மேலும் உற்சாகப்படுத்தும் (இதை நான் அனுபவித்திருக்கிறேன்). கால இடைவெளியில் தானியங்கி வரவேற்பு என்பது ஏதோ ஒன்று குறைவது போல் உள்ளது. இங்கே காலம் தாழ்த்தி வரவேற்பதற்கு பதில் தானியங்கியை வரவேற்பை தாண்டி வேறு ஏதாவது ஒரு செய்தியை இடுமாறு மாற்றலாம். பாராட்டோ அல்லது தொடர்ச்சியை வலியுறுத்தும் வகையில் வேறு எதாவதுமாகவோ இருக்குமாறு அமைக்கலாம். --எஸ்ஸார் (பேச்சு) 05:54, 8 மே 2015 (UTC)[பதிலளி]
எனக்குத் தொழில்நுட்ப அறிவு குறைவு. எனது கேள்வி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பயனரோ, அல்லது சில பயனர்களோ, தானியங்கி(கள்) மூலம் பயனர் வரவேற்பைச் செய்வதுபோல் அமைக்க முடியாதா?--கலை (பேச்சு) 09:40, 8 மே 2015 (UTC)[பதிலளி]
தென்காசியாரின் கருத்தை வரவேற்கிறேன். 2 நாட்கள் அதிகம் என்றால் (எனக்கும் அது அதிக காலம் என்று தோன்றுகிறது) 1 நாள் அல்லது குறிப்பிட்ட காலம் (6 மணி நேரம்) வரை தானியங்கி வரவேற்பு கூடாது. அதற்குள் யாரும் வரவேற்பு இடவில்லை என்றால் தானியங்கி மூலம் இடலாம். புதுப்பயனர் 1 நாள் அ 6 மணி நேரத்திற்குள் மீண்டும் உள்நுழையும் வாய்ப்பு குறைவு --குறும்பன் (பேச்சு) 15:30, 9 மே 2015 (UTC)[பதிலளி]
இது குறித்து நான் ஏற்கவே கூறியுள்ளேன். ஒரு பயனர் ஒரு நாளுக்கு பிறகு அல்லது ஆறு மணி நேரத்திற்கு பிறகு வரவேற்பது ஏற்புடையதல்ல, ஏனெனில் அவருக்கு ஒரு செய்தி வந்துள்ளதையே அவர் அறியாமல் போகலாம்! ஆறு மணி நேரம் கழித்து அவர் விக்கிப்பீடியாவிற்கு வருவாரா என்பது கணிப்புக்கு அப்பாற்பட்ட ஒன்றே! இடைமுகப்பில் ஏற்படும் மாற்றம் மட்டுமே அவரை செய்தியை கவணிக்க வைக்கும். அவருடைய பேச்சுப்பக்க செய்தியை சில மணிநேரமோ அல்லது சில நாட்களோ கழித்து பார்த்தால் அவருக்கு அப்போது அவருக்கான வரவேற்பு தான் என்று புரியுமா எனத்தெரியவில்லை.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:33, 9 மே 2015 (UTC)[பதிலளி]
:தினேஷ்குமார் பொன்னுசாமி அன்னாரின் கருத்துக்கள் எல்லோரும் தங்கள் எண்ணங்களில் சிறிது நேரம் உலவ விட வேண்டிய கருத்துக்கள் என எண்ணுகின்றேன்.நன்றிகள் --நேர்நேர்தேமா (பேச்சு) 07:26, 13 மே 2015 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா பங்களிப்பாளருக்கு புகைப்படக்கருவி வாங்க நன்கொடை தேவை???
இங்கும் (விக்கிப்பீடியர் ஒருவருக்குப் பயன்பட்டது, ஆனால் அதனை முன்வைத்து உதவி கோரவில்லை) இங்கும் (விக்கிப்பீடியா பங்களிப்புகள் அவரது ஒளிப்படக்கலைத்திறன், பங்களிப்புகளை விளக்க உதவியுள்ளன) முற்காட்டுகள் உள்ளன. இது போன்ற தேவைகளுக்கு விக்கிமீடியா இந்தியா சார்பாக உதவித் தொகைத் திட்டம் ஒன்றும் உள்ளது. முதலில் இத்திட்டம் மூலம் உதவ இயலுமா என்று சீனியும் ஏற்காடு இளங்கோவும் வினவினார்கள். இவரது தேவைக்கு இத்திட்டம் மூலம் உடனடியாக உதவுவதில் சில சிக்கல்கள் இருந்ததால், மேற்கண்ட எடுத்துக்காட்டுகளை முன்வைத்து சமூக ஊடகங்களில் நேரடி நன்கொடை கோரலாம் என்ற வாய்ப்பைச் சுட்டினேன். எனினும், மாகிர் சுட்டியுள்ளது கவனிக்கத்தக்கது. விக்கிப்பீடியாவுக்குத் தொடர்பற்றவர்கள் யாரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாமல் கவனித்து வந்தால் போதுமானது.--இரவி (பேச்சு) 18:15, 24 ஏப்ரல் 2015 (UTC)[பதிலளி]
விக்கியோடு விளையாடு
விக்கியோடு விளையாடு, The Wikipedia Adventure என்ற ஆங்கில விக்கியில் உள்ள ஒரு சாகசம் போன்று விக்கிப்பீடியாவில் புதுப்பயனர்களை ஈர்ப்பதற்கான திட்டமாகும். இவற்றில் பல நிலைகள் உள்ளது, விக்கியின் ஒவ்வொரு அங்கமும் ஒரு நிலையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
The Funds Dissemination Committee (FDC) makes recommendations about how to allocate Wikimedia movement funds to eligible entities. There are five positions on the committee being filled.
The FDC Ombudsperson receives complaints and feedback about the FDC process, investigates complaints at the request of the Board of Trustees, and summarizes the investigations and feedback for the Board of Trustees on an annual basis. One position is being filled.
New Wikipedia Library Accounts Available Now (May 2015)
Apologies for writing in English, please help translate this into your local language.
Hello Wikimedians!
The TWL OWL says sign up today!
Today The Wikipedia Library announces signups for more free, full-access accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for new accounts and research materials from:
MIT Press Journals — scholarly journals in the humanities, sciences, and social sciences (200 accounts)
Loeb Classical Library — Harvard University Press versions of Classical Greek and Latin literature with commentary and annotation (25 accounts)
RIPM — music periodicals published between 1760 and 1966 (20 accounts)
Sage Stats — social science data for geographies within the United States (10 accounts)
HeinOnline — an extensive legal research database, including 2000 law-related journals as well as international legal history materials (25 accounts)
We need your help! Help coordinate Wikipedia Library's account distribution and global development! Please join our team at Global our new coordinator signup.
தமிழ் விக்கியில் ஐகாரத்துக்குப் பகரமாக "அய்" என்று தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காண்கிறேன். அப்படியானால் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு என்பது பிழையோ? பின்வரும் உதாரணங்களைப் பாருங்கள்:
இத்தகைய வழக்கு பிழையானதே. இது சரியானதாயின் தமிழிலிருந்து ஐகாரத்தை நீக்கிவிட்டு உயிரெழுத்துக்கள் 11 என்றும் உயிர்மெய் 198 என்றும் மொத்தம் 228 என்றும் ஆகும். சரிதானா?--பாஹிம் (பேச்சு) 12:39, 16 மே 2015 (UTC)[பதிலளி]
உத்தியோகபூர்வப் பெயர்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது (உ.ம்-1) இங்கே சொடுக்குங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் வட்டத்தில் உள்ள 61 வது கிராமம் அய்யலூர்- புகைவண்டி நிலையம் கூட உள்ளது.(உ.ம்-2) இங்குசொடுக்குங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி வட்டத்தில் உள்ள 99 வது கிராமம் அய்யம்பாளையம். இந்த அய்யம்பாளையம் கிராமத்தில் புகழ் பெற்ற ஆயிரை மலை (ஐவர் மலை) சமணர் பள்ளிகள், குகைகள் உள்ளது.--Yokishivam (பேச்சு00:35, 26 மே 2015 (UTC)[பதிலளி]
நீங்கள் கொடுத்த தொடுப்புக்களில் பெயர்கள் ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன. நான் இங்கே கேட்பது ஐகாரத்துக்குப் பகரமாக அய் என்று எழுதுவதற்கு ஆதாரம். தொல்காப்பியம், நன்னூல் போன்றவை அத்தகைய வழக்கத்தை ஆதரிப்பதில்லை. வேறேதாவது ஆதாரம் இருக்கிறதா அல்லது தமிழிலிலிருந்து ஐகாரத்தை நீக்கி விட வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 17:37, 25 மே 2015 (UTC)[பதிலளி]
ஊர்களின் பெயர்கள் காலப்போக்கில் உருமாறுவது இயற்கை. இப்போது எவ்வாறு அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். எனக்குத் தெரிய அய்யா வைகுண்டர் அப்படியே தான் எழுதப்படுகின்றது. ஒன்றிரண்டு இவ்வாறான எடுத்துக்காட்டுகளுக்காக ஐகாரத்தையே நீக்க வேண்டுமா?--Kanags\உரையாடுக21:12, 25 மே 2015 (UTC)[பதிலளி]
தமிழ் செம்மொழி
தமிழ் மற்ற மொழிகளைப்போன்று ஒலியையோ!! வரிவடிவத்தையோ இரவல் பெற்றுக்கொண்டதல்ல என்பது எனது பணிவான கருத்து அதே சமயத்தில் மொழி உச்சரிப்புக்களையும், எழுதும் வரிவடிவத்தையும் அமைத்து அதற்கு விதி ( இலக்கணம்) வகுத்தது தொல்காப்பியம். தொல்காப்பியம் தந்துள்ள விதிகளை மீறுவது நேர்த்தியான அழகை சிதைப்பதற்கு சமம் என எண்ணுகிறேன். நான் கொடுத்த தொடுப்புகள் ஆங்கிலத்தில்தான் உள்ளது. அவற்றுக்கு மாற்றாக தமிழில் உண்டு அவற்றை வருவாய்த்துறை இணையத்தில் தேடி இணைக்க முயற்ச்சிக்கிறேன். மேற்கண்ட ஊர்களை நான் நன்கு அறிவேன் திண்டுக்கல் மாவட்டத்தில் நில அளவைத் துறையில் பணியாற்றியதால் உ.ம் ஆக பதிவு செய்தேன். மேலும் இவ்வூர்களின் பெயர்கள் தமிழ்நாடு அரசிதழில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது அரசிதழ் கிடைத்தால் நகல் எடுத்து பதிவேற்றுகிறேன்.
ஐகாரத்துக்குப் பகரமாக "அய்" என்று எழுதிட காரணம் எழுத்து சீர்திருத்தம் செய்த போதும், (தி.மு.க ஆட்சியின் போதும் பெரியார் ஈ.வே.ரா அவர்கள் வடமொழி கலப்பை கைவிடவும், சமஸ்கிருத எழுத்துக்களை தவிர்ப்பதற்காகவும் லை போன்ற மெல் வலைத்து எழுதுகிற எழுத்துக்களை மாற்றி எழுதினார்கள். கனக்ஸ் அவர்களின் கூற்றுப்போல காலப்போக்கில் உருமாறுவது இயற்கை தான் அதற்காக தொல்காப்பியம் தந்துள்ள விதிகளை மீறுவது நேர்த்தியான அழகை சிதைப்பதற்கு சமமாகும் என்பது எமது பணிவான கருத்து--Yokishivam (பேச்சு00:35, 26 மே 2015 (UTC)[பதிலளி]
The Wikimedia Foundation Board of Trustees is the ultimate governing authority of the Wikimedia Foundation, a 501(c)(3) non-profit organization registered in the United States. The Wikimedia Foundation manages many diverse projects such as Wikipedia and Commons.
The voting phase lasts from 00:00 UTC May 17 to 23:59 UTC May 31. Click here to vote. More information on the candidates and the elections can be found on the 2015 Board election page on Meta-Wiki.
விக்கி விரும்புதே உணவை - ஒளிப்படப் போட்டி இரண்டாம் சுற்று நடைபெறுகிறது. 50,000 இந்திய உரூபாய் மதிப்புள்ள மொத்தப் பரிசுகளைத் தரும் போட்டியில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்தியத் துணைக்கண்ட உணவு வகைகள் குறித்த படங்கள் வரவேற்கப்படுகின்றன.--இரவி (பேச்சு) 11:21, 24 மே 2015 (UTC)[பதிலளி]
மனக்குறைகள்
விக்கிப்பீடியாவைப் பற்றிய மனக்குறைகள் விக்கிப்பீடியர் பலருக்கும் இருக்கலாம். அவற்றை எங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்? பகிர்ந்து கொண்டால் தானே தீர்வு கிடைக்கும்?--பாஹிம் (பேச்சு) 06:41, 28 மே 2015 (UTC)[பதிலளி]
ஒரு செய்தியை பலரிடம் தெரிவிக்கவே இப்பகுதியுள்ளது. எனவே, இதைவிடப் பொருத்தமான இடம் வேண்டுமா என்ன? அனைவருக்கும் பொதுவாகத் தெரிவிக்க வேண்டியனவற்றை இங்கேயும், குறிப்பானவற்றை அந்தந்த பகுதியின் உரையாடற்பகுதியிலும் தெரிவிப்பதே சிறப்பாகும். ஏற்கனவே, பல கிளைப்பகுதிகள் உள்ளன. எனவே, புதிய பகுதி வேண்டாமென்பது எனது எண்ணம். அதனால் புதியவருக்குக் குழப்பம் வர வாய்ப்புள்ளது. ஆலமரத்தடியில் தேடு வசதியிருப்பதால், பின்னாளில் தேடிப்படித்தலும் எளிமையன்றோ.ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாட்களன்று, தமிழ் விக்கிமீடியாவினைப் பற்றிய கருத்தினை பிறரிடன் கேட்டுப் பெறலாம். --த♥உழவன்(உரை)01:01, 29 மே 2015 (UTC)[பதிலளி]
விக்கிமீடிய நிறுவன பொறுப்பாளர் வாக்கெடுப்பு விவரம்
m:Wikimedia_Foundation_elections/Board_elections/2015 என்பதில் பங்கெடுக்கவும். இதுவரை மொத்த வாக்குகளில் 7 % வாக்குகளே பதிவாகியுள்ளன. இறுதிநாள் இம்மாதம் 31ந்தேதி வரை. இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. வாக்கிடுதலின் மேன்மையை, நாம் அனைவரும் நிலைநாட்டுவோம்.
இவ்வாக்கிடலில் நம் நிலைப்பாடு குறித்து பிறிரின் கருத்தறிய ஆவல். உங்களின் எண்ணம் வாக்கிடலுக்கு உதவும் என எண்ணுகிறேன். வணக்கம்.--த♥உழவன்(உரை)01:28, 29 மே 2015 (UTC)[பதிலளி]