உத்தமத்தின் சார்பில் மே 30 முதல் யூன் 1 வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ள தமிழ் இணைய மாநாட்டில் மே 31 ஆம் தேதி காலை 9.00 - 10.30 வரை விக்கிப்பீடியா குறித்த எனது பேச்சு இடம்பெற உள்ளது. மே 30 ஆம் தேதி 14.00 தொடக்கம் 17.00 வரை ஒன்றும் பின்னர் யூன் முதலாம் தேதி காலை 9.00 தொடக்கம் 12.00 வரை இன்னொரு பயிலரங்கமும் இடம்பெற உள்ளன. இதிலும் நான் பங்குபெற உள்ளேன்.
வாழ்த்துக்கள் தெரிவித்த எல்லோருக்கும் நன்றி. நேற்று எல்லோருக்குமான அமர்வில் எனது விக்கிப்பீடியா குறித்த பேச்சு இடம்பெற்றது. ஓரளவுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் விக்கிப்பீடியாவை ஆசிரியர், மானவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கக்கூடிய சிலர் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க விருப்பம் தெரிவித்தனர். தமிழ்க் கணிமையில் முன்னோடியான ஒருவர், தனக்கு விக்கிப்பீடியாவில் ஆர்வம் உண்டு எனினும், இவ்வளவு வாய்ப்புக்களும், sophistication உம் இருப்பது பற்றித் தான் உணர்ந்துகொள்ளவில்லை என்று கூறினார். நான் சொல்ல விரும்பிய செய்தி சிலரையாவது சென்று அடைந்திருக்கும் என்று தோன்றுகிறது. --மயூரநாதன் (பேச்சு) 02:02, 1 சூன் 2015 (UTC)[பதிலளி]
14 ஆவது உலக இணைய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த எனது பேச்சை இந்த இணைப்பில் பார்க்கலாம். இதில் ஏறத்தாழ அரைப்பகுதிக்குப் பின்னர்தான் என்னுடைய பேச்சு உள்ளது. ஒலி போதிய உரப்பாக இல்லை. Ear Phone பயன்படுத்தினால் தெளிவாக உள்ளது. இப்பேச்சின் போது பெருமளவில் பேராளர்கள் சமுகமளிக்கவில்லை எனினும் வந்திருந்தவர்கள் மிகவும் உற்சாகமாகப் பங்குபற்றினர். நல்ல பின்னூட்டங்களும் கிடைத்தன. மூன்றாம் நாள் நிறைவு விழாவில் பேசிய பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் இந்தப் பேச்சையும் குறிப்பிட்டுப் பேசினார். இவரது பேச்சை நாளை யூடியூபில் பார்க்க முடியும் என எண்ணுகிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 16:31, 1 சூன் 2015 (UTC)[பதிலளி]
நன்றி மயூரநாதன். தமிழ் விக்கிக்கு, தமிழ்க் கணிமைக்கு ஒரு முக்கியமான தளத்தில் உங்கள் நேரத்தை செலவளித்து பங்களித்ததுக்கு நன்றிகள். --Natkeeran (பேச்சு) 17:16, 1 சூன் 2015 (UTC)[பதிலளி]
Pywikibot compat will no longer be supported - Please migrate to pywikibot core
Sorry for English, I hope someone translates this. Pywikibot (then "Pywikipediabot") was started back in 2002. In 2007 a new branch (formerly known as "rewrite", now called "core") was started from scratch using the MediaWiki API. The developers of Pywikibot have decided to stop supporting the compat version of Pywikibot due to bad performance and architectural errors that make it hard to update, compared to core. If you are using pywikibot compat it is likely your code will break due to upcoming MediaWiki API changes (e.g. T101524). It is highly recommended you migrate to the core framework. There is a migration guide, and please contact us if you have any problem.
There is an upcoming MediaWiki API breaking change that compat will not be updated for. If your bot's name is in this list, your bot will most likely break.
Thank you,
The Pywikibot development team, 19:30, 5 June 2015 (UTC)
புள்ளிவிபரங்கள்
தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகள் தொடர்பில் கடைசியாக வெளிவந்துள்ள புள்ளிவிபரங்கள் பல அம்சங்களில் ஊக்கப்படுத்தும் தேவை இருப்பதைக் காட்டுகின்றன. 2015 சனவரிக்குப் பின்னர் பல செயற்பாடுகள் தொடர்பான அளவீடுகள் குறைந்து வருவது தெரிகிறது. 2015 மே மாதத்துக்கான புள்ளிவிபரங்களில், பல முக்கியமான அளவீடுகள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மிகக் குறைவான அளவை எட்டியுள்ளன. இதன் காரணங்களை அறிந்து நிலைமையைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். --மயூரநாதன் (பேச்சு) 03:35, 10 சூன் 2015 (UTC)[பதிலளி]
சிவகுரு சொல்வது சரி. இடையறாமல் தொடர் பங்களிப்பு அளிப்பவர்கள் விதிவிலக்கே. தமிழ் விக்கிப்பீடியாவின் நல்வினைப்பயனாக நாம் நிறைய விதிவிலக்கான சிறந்த பயனர்களைக் கொண்டிருப்பதால் தான் இவ்வளவு காலம் சீர்குலையாத புள்ளிவிவரங்களைக் கொண்டிருக்கிறோம். தேர்ந்த பங்களிப்பாளர்கள் முதல் இரு ஆண்டுகளில் மிக முனைப்பாகவும் பிறகு நேரம் கிடைக்கும் போது அவ்வப்போதும் பங்களிப்பதைக் கவனிக்கிறேன். அவ்வப்போது, சிறு சிறு திட்டங்களை முன்வைத்துச் செயற்படுவதன் மூலம் இவ்வாறு ஓய்வில் இருப்பவர்களை மீண்டும் பங்களிக்க வைக்க முடியும். சண்முகம், அன்டன், த.உழவன் போன்ற சிறந்த பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கி வெளிக்கு வெளியிலும் கணிசமான நேரத்தைச் செலவிடுவதைக் கவனிக்க முடிகிறது. சண்டை, சச்சரவுகள் இல்லாமல் அவ்வப்போது ஓய்வின் காரணமாக இது போன்ற தொய்வுகள் ஏற்படுவதைச் சமாளித்து மீண்டும் புத்துணர்வுடன் செயல்படும் திறம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உண்டு என்று உறுதியாக நம்புகிறேன். நான் அடிக்கடி விக்கி நண்பர்களிடம் சொல்வது: "தமிழ் விக்கிப்பீடியா வேர் பிடித்து விட்டது. இனி, எவரொருவர் பங்களிப்பையும் சார்ந்திராமல் தானாக வளரும் திறம் அதற்கு உண்டு". மார்ச்சு மாதம் தள அறிவிப்பில் பெண் பங்களிப்பாளர்கள் அறிமுகங்களைத் தந்த போது மாதாந்த பங்களிப்பாளர் எண்ணிக்கை 350ஐத் தொட்டது. இது போன்ற பரப்புரை முயற்சிகளைத் தொடர வேண்டும். கட்டுரைகள் எழுதுவதோடு புதுப்பயனர்களை அரவணைத்து மெருகேற்றிச் சிறந்த பங்களிப்பாளர்கள் ஆக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். நன்றி.--இரவி (பேச்சு) 07:04, 10 சூன் 2015 (UTC)[பதிலளி]
இரவியின் கருத்துகளோடு உடன்படுகிறேன். புதிய புதிய திட்டங்கள் மூலம் அதிகமான பயனர்களை ஈர்க்க முடியும். பழைய பயனர்கள் ஓய்வில் இருக்கும் போது புதிய பயனர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் திட்டத்தினை முன்வைத்திடலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:37, 11 சூன் 2015 (UTC)[பதிலளி]
பல பயனர்கள் குறிப்பிட்ட காலம் முனைப்பாக இயங்கியபின் தங்கள் செயற்பாட்டின் அளவைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், புதிய பயனர்கள் சேர்க்கை இந்த இழப்புக்களை ஈடுசெய்வதுடன், விக்கிப்பீடியாவின் தொடர்ந்த வளர்ச்சிக்குத் தேவையான மேலதிக வளங்களையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். புதிய பயனர்களைப் பெருமளவில் ஈர்க்கக்கூடிய வழிமுறைகளை நாம் இன்னும் கண்டறியவில்லை என்றுதான் தோன்றுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடர்ச்சியாகச் சமுதாயத்தின் கண்களுக்குப் புலப்படும்படியாக வைத்திருப்பதன் மூலமே இது சாத்தியமாகும். மேலும், சமுதாயத்தின் பல்வேறு மட்டங்களின் அறிவுத் தேவைகளையும், இது தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சிகளையும், கற்றலிலும் கற்பித்தலிலும் காணப்படும் புதிய போக்குகளையும் சரியாகப் புரிந்துகொண்டு செயற்படவேண்டியது அவசியம். -- மயூரநாதன் (பேச்சு) 20:16, 11 சூன் 2015 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாவுக்கு நான் புதியவனாக அறிமுகமானபோது, மொழியார்வம் எனக்கு இருந்தாலும் என்னை வரவேற்று ஊக்கப்படுத்தியவை முனைப்பான பங்களிப்பாளார்கள் அல்லது விக்கி நிர்வாகிகள் எனது பேச்சுப் பக்கத்திற்கு வந்து கொடுத்த பாராட்டுகளும் பதக்கங்களும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். தற்செயலாக விக்கிக்குள் வந்த என்னை விரல்பிடித்து அழைத்து வந்து குடியமர்தியவை அவைகளே. புதுப்பயனர்களுக்கு வழிகாட்டும் திட்டங்கள் சிலவற்றையாவது திட்டமிடவேண்டும். --கி.மூர்த்தி 03:31, 12 சூன் 2015 (UTC)
நிச்சயமாக. புதிய பயனர்களுக்கு மட்டுமல்ல, நீண்டகாலப் பயனர்களுக்குக்கூடப் பாராட்டுக்கள் ஊக்கம் அளிப்பவைதான். ஒருவருக்கொருவர் தரும் அங்கீகாரம் தான் விக்கிப்பீடியாவின் வெற்றிக்கான உயிர்நாடி. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு இளம் பயனர், ஒருவரை ஒருவர் ஊக்குவிப்பது இப்போது குறைந்துவிட்டதாகக் குறைப்பட்டுக்கொண்டது ஞாபகம் இருக்கிறது. கட்டுரைகளை விரிவாக்குவதற்கு அண்மையில் நடத்தப்பட்ட போட்டி போன்றவை கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி ஒருவர் மற்றப் பயனர்களுடைய பங்களிப்புக்களையும் கவனிப்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. இக்கட்டுரைப் போட்டிக் காலத்தில் போட்டியின் பேச்சுப் பக்கங்களின் உரையாடல்களைப் பார்க்கும்போது இது புரியும். எனவே இது போன்ற பழைய செயற்பாடுகளின் அனுபவங்களையும், பிற மொழி விக்கிகளின் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை உருவாக்கிச் செயற்படுத்துவது நலம். ---மயூரநாதன் (பேச்சு) 08:50, 12 சூன் 2015 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியா புள்ளிவிவரங்கள் தொய்வு கண்டதை பிற மொழி விக்கிப்பீடியர்கள் சிலரும் சுட்டிக்காட்டினர். அத்தகைய ஒரு விக்கிப்பீடியரிடம், "நீங்கள் உழவர் குடும்பத்தில் இருந்து வருபவர் தானே?" என்றேன். "ஆம்" என்றார். "நீங்கள் ஆண்டு முழுதும் 12 மாதங்களும் நிலத்தை உழுது ஏதாவது பயிரிட்டுக் காய்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று முயல்வீர்களா?" என்றேன். நான் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டு புன்னகைத்தார் :) இவ்வுரையாடல் தொடங்கிய சில நாட்களிலேயே பங்களிப்பாளர்கள் தாமாகவே மீண்டும் முனைப்புடன் செயற்படத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இயல்பான ஓய்வுகளுக்குப் பிறகு அடுத்த முனைப்பான திட்டத்தில் முழு மூச்சுடன் இறங்கும் திறம் தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்துக்கு உண்டு என்று உறுதியாக நம்புகிறேன் :)--இரவி (பேச்சு) 06:44, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]
Wikimania 2015 - India Booth
Hi Wikimedians,
Apologies for posting this text in English.
As you people might be aware, Wikimania 2015 which is going to be held in Mexico from July 14th to 19th. We, the Indian attendees at Wikimania, would like to represent Wiki Indic Community booth in the same. We are creating Leaflets and Posters for the community village at Wikimania 2015 to display in Wikimania 2015. We would like to invite you to gather the content and design(optional) for posters (Sample) and leaflets (Sample) about the Indic language project of your choice. We will take care of printing and displaying the posters/leaflets.
The maximum dimensions for your poster are 36 x 48 in (91.44 x 121.92 cm). We suggest using the A0 paper size, which is 33.11 x 46.81 in (~84 x 118 cm). The contents of the poster has to be in English. Posters and leaflets based on all Indic language Wikimedia projects are welcome. The design should be a media file uploaded to Wikimedia Commons. Please post the link to your content/design file on http://wiki.wikimedia.in/Wikimania_2015/Booth/Posters_Leaflets before 25th of June. In case if you face any issues please reachout to Dineshkumar Ponnusamy or Netha Hussain.
We look forward to receiving your posters/leaflets and displaying them while at Wikimania 2015! Note: This is not a competition or contest, we expect at most 1 poster and 1 leaflet from each Community.
Click on the blue button to create a new translation.
A dialog will be displayed. In the From section select the language of the original article and the article name, and the language you would like to translate to. Also add the title of the new article (or the original title will be inserted) and click on Translate to begin. Your language preferences will be remembered for the next time.
You will see a screen consisting of three columns. The left column contains the text of the source language and the middle column is for the translated text. Using the right column you can perform several actions such as insert source text, remove the inserted text source text, add or remove links etc.
After you translate the article, you can publish it directly as a new page on the Tamil Wikipedia by using the publish button that appears. In case the article gets created by another user while you were translating, you will see an option to save the newly published translation under your user namespace.
Since, this is the first time we have installed the tool on this Wikipedia, there are chances that there may be some problems or service disruptions which we are not yet aware of. We will be monitoring the usage to check for any failures or issues, but please do let us know on the Content Translation talk page or through Phabricator if you spot any problems that prevent you from using the tool. For more information, please read the information available in the User Guide. You can also view a short screencast on how to use Content Translation. Our announcement is written only in English, and we would really appreciate if this message can be translated to reach more users of this Wikipedia. Thank you.--Runab WMF (பேச்சு) 17:26, 11 சூன் 2015 (UTC)[பதிலளி]
New Wikipedia Library Accounts Available Now (June 2015)
Hello Wikimedians!
The TWL OWL says sign up today!
Today The Wikipedia Library announces signups for more free, full-access accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for new accounts and research materials from:
Taylor & Francis — academic publisher of journals. The pilot includes two subject collections: Arts & Humanities and Biological, Environment & Earth Sciences. (30 accounts)
World Bank eLibrary — digital platform containing all books, working papers, and journal articles published by the World Bank from the 1990s to the present. (100 accounts)
AAAS — general interest science publisher, who publishes the journal Science among other sources (50 accounts)
New French-Language Branch!
Érudit (en Francais) — Érudit is a French-Canadian scholarly aggregator primarily, humanities and social sciences, and contains sources in both English and French. Signups on both English and French Wikipedia (50 accounts).
Cairn.info (en Francais) — Cairn.info is a Switzerland based online web portal of scholarly materials in the humanities and social sciences. Most sources are in French, but some also in English. Signups on both English and French Wikipedia (100 accounts).
L'Harmattan — French language publisher across a wide range of non-fiction and fiction, with a strong selection of francophone African materials (1000 accounts).
We need your help! Help coordinate Wikipedia Library's account distribution and global development! Please join our team at our new coordinator signup.
Over the last few years, the Wikimedia Foundation has been working towards enabling HTTPS by default for all users, including unregistered ones, for better privacy and security for both readers and editors. This has taken a long time, as there were different aspects to take into account. Our servers haven't been ready to handle it. The Wikimedia Foundation has had to balance sometimes conflicting goals.
Forced HTTPS has just been implemented on all Wikimedia projects. Some of you might already be aware of this, as a few Wikipedia language versions were converted to HTTPS last week and the then affected communities were notified.
Most of Wikimedia editors shouldn't be affected at all. If you edit as registered user, you've probably already had to log in through HTTPS. We'll keep an eye on this to make sure everything is working as it should. Do get in touch with us if you have any problems after this change or contact me if you have any other questions.
நாளை மாலை முதல் நான்கு நாட்களுக்கு மீடியாவிக்கி பயிற்சிப் பட்டறை ஒன்று பெங்களூரில் நடைபெறுகிறது. மீடியாவிக்கி நுட்பப் பணிகளில் ஆர்வம், திறம் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் இதில் பங்கு கொள்ளலாம். புதிய நுட்பங்களை அறிந்து கொள்வதுடன் நீங்கள் ஏற்கனவே அறிந்தவற்றையும் மற்றோருக்குக் கற்பிக்கலாம். சில புது முயற்சிகளில் கூட்டாக இறங்கலாம். போக்குவரத்து, உணவு, தங்கும் செலவை நிகழ்வு ஏற்பாட்டாளர்களே கவனித்துக் கொள்வார்கள் .மேலும் விவரங்கள், முன்பதிவுக்கு என்னை 9986 99 3336 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். குறுகிய கால இடைவெளியிலான இவ்வறிவிப்புக்கு வருந்துகிறேன். --இரவி (பேச்சு) 15:18, 22 சூன் 2015 (UTC)[பதிலளி]
விக்கிமூலத்திற்கு பங்களிக்க விரும்பியமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். காப்புரிமையற்ற அனைத்து மூலங்களையும் பங்களிக்கலாம். உசாத்துணைகள் மற்றும் மேற்கோள் இருந்தால் இணைக்கலாம். ஒரு மாதிரிக்காக, குர் ஆன் பற்றிய விக்கிமூலத்தினை பார்க்கவும். உங்களுக்கு உதவித்தேவைப்படுமாயின், என்னுடைய விக்கிமூலம் பேச்சுப்பக்கத்தில் தெரிவிக்கவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:37, 25 சூன் 2015 (UTC)[பதிலளி]
ஆண்டு அறிக்கைகள் நமது செயற்பாடுகளைத் திரும்பிப் பார்ப்பதற்கான ஒரு ஆவணமாகவும், நமது வளர்ச்சிகள், தொய்வுகள் போன்றவற்றைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவும் கருவியாகவும் செயற்படக்கூடும். எனவே இவற்றை ஒழுங்காக உருவாக்குவது அவசியமே. 2015 ஆம் ஆண்டின் அறிக்கைக்கு இன்னும் காலம் இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு அறிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கலாம். --மயூரநாதன் (பேச்சு) 11:01, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]
ஒரு சிறு யோசனை
தமிழ் விக்கிப்பீடியாவில் அண்மைய காலங்களில் பயனர் பங்களிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது நாம் அறிந்த ஒன்றே, இதனை ஈடுகட்டும் வகையில் விக்கி மாரத்தான் ஒன்றை ஏற்பாடு செய்யலாம். பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். அதிக பங்களிப்பு செய்யும் பயனருக்கு ஏதேனும் ஒரு பரிசு கூட வழங்கலாம்! பிற பயனர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:21, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]
விருப்பம். சமீபத்தில் விக்கிமீடியாவில் நடந்த #100விக்கிநாட்களில் கூட தமிழிலிருந்து அதிகப் பங்களிப்புகள் இல்லை. தமிழ் விக்கியில் ஏற்பட்டுள்ள தொய்வை நீக்கவும் பங்களிப்பாளர்களை கொஞ்சமே கொஞ்சம் உசுப்பவும் விக்கி மராத்தான் உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.--இரா.பாலா (பேச்சு) 11:08, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]
மாரத்தான் ஓடுவதென்றால் #100விக்கிநாட்கள் ஓடுவோம் :) தமிழ் விக்கிப்பீடியர்களின் முனைப்புக்குப் பரிசு எல்லாம் பொருட்டு இல்லை :) சூலை 1 முதல் நான் அணியம். குறைந்தது 10 தமிழ் விக்கிப்பீடியர்களால் இவ்விலக்கை உடனடியாக அடைய முடியும். நமக்குக் கொடையாக கிடைத்த கலைக்களஞ்சியத் தலைப்புகளை முன்வைத்துச் செயற்பட்டால் முக்கியமான தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியதாகவும் இருக்கும். இது போல் மேலும் பல ஆக்கங்களைப் பெறவும் உதவும். --இரவி (பேச்சு) 11:35, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]
100 விக்கி நாட்கள் என்பதை சற்று கடினமான ஒன்றாகவே நான் பார்க்கிறேன், தொலைநோக்கு பார்வையில் நிச்சயமான நல்லதொரு திட்டமே. ஆயினும், விக்கி மாரத்தான் போன்று அது எளிதாகவும், புதுப்பயனரை ஈர்ப்பதாக இராது என்பதே என் கணிப்பு. நான் ஏற்கனவே கூறியது போல, விக்கிமாரத்தான் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி, நம் தமிழ் விக்கிப்பீடியர்கள் இருக்கும் அனைத்து ஊர்களிலும் சிறு அளவில் செய்தாலே பல புதிய பயனர்களுக்கு வாய்ப்பளிக்கும் இடமாக இருக்கும் என்பதை கூற விழைகிறேன். பல நாட்கள் ஓய்வில் இருக்கும் பயனர்கள் மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஒரு வாய்ப்பு உருவாக்குவதாகவே இருக்கும். 2010-ம் ஆண்டிற்குப் பிறகு எனக்குத் தெரிந்து விக்கி மாரத்தான் நடைபெறவில்லை. 2012-2013 ஆண்டுகளில் நிறைய இடங்களில் பயிற்சி பட்டறைகள் நடைபெற்றுள்ளன, அக்கூட்டத்தில் பங்குபெற்றவர்களை மீண்டும் வரவேற்க நாம் தவறிவிட்டதாகவே எண்ணுகிறேன். நமது 10-ஆண்டுகள் கொண்டாட்டத்திற்குப் பிறகு ஒரு சரியான பாதையில் தமிழ் விக்கிப்பீடியா செல்லவில்லை என்பதே ஒரு விக்கிப்பீடியா பங்களிப்பாளராக வருந்தச் செய்கிறது. ஏதேனும் ஒரு நாள் (விடுமுறை நாளாக) தேர்ந்தெடுத்து அன்றைய தினம் அனைத்து விக்கிப்பீடியர்களும் தங்களால் முடிந்த அளவு பங்களிப்புகளும், தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள், இன்ன பிறருடன் இணைந்து இதனை செய்ய வேண்டும். இதுநாள் வரையிலும் இல்லாத அதிக அளவில் சமூக வலைத்தளங்களையும், தமிழ் ஆர்வலர்களையும், கட்டற்ற முறையில் பகிர்வதை விரும்புபவர்களையும் இணைக்கும் பாலமாக இது அமைய வேண்டும். ஒரு திட்டமாக முன்னெடுத்தால் என்னால் ஆன உதவிகளை செய்யமுடியும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:21, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]
மிகவும்விருப்பம் 2010 ஆம் ஆண்டில் நான் விக்கியில் இணையவில்லை; எனவே அப்போது நடந்த மாரத்தானில் கலந்துகொள்ளவில்லை. இந்தத் திட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது! இதனைச் செய்தால், Get-together போன்றதொரு உணர்வு ஏற்படும் என நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:03, 26 சூன் 2015 (UTC)[பதிலளி]
100விக்கிநாட்கள் திட்டத்தைத் தொடங்கி ஈடுபட்டு வருகிறேன். ஆர்வமுடைய மற்ற பயனர்களும் இணைய வேண்டுகிறேன். மற்றபடி, இது போன்ற திட்டங்கள் / பெயர்கள் ஏதும் இல்லாமலேயே பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல கட்டுரைகளை எழுதிக் குவித்து வரும் முனைப்பான பங்களிப்பாளர்கள் எங்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன் :)--இரவி (பேச்சு) 04:01, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தமிழ்ப்பரிதி மாரிக்கு வாழ்த்துகள்
தமிழ்ப்பரிதி மாரி, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் உதவி இயக்குநர் (இணைய மேலாண்மை) பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களுக்கும் நல்லாதரவு அளித்து வரும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் விக்கிப்பீடியர் ஒருவரே பொறுப்பில் இருப்பது நல்வாய்ப்பு. தமிழ்ப்பரிதியின் பணி சிறக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 09:42, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]
விருப்பம் தமிழிணையக் கல்விக்கழகத்தின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் நக்கீரன் அவர்களும் தமிழ் விக்கிக்குப் பல உதவிகளைச் செய்தார். தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இயக்குனரும் சிறந்த தமிழ்ப் பற்றாளர் என்றும், தமிழ் விக்கிப்பீடியா தொடர்பில் அவருக்கு ஆர்வம் உண்டு என்றும் அவரை அறிந்தவர்கள் சொல்லக் கேள்விப்பட்டேன். கூடவே உதவி இயக்குனராக ஒரு விக்கிப்பீடியரும் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்ப்பரிதி மாரிக்கு எனது வாழ்த்துக்கள்.-- மயூரநாதன் (பேச்சு) 08:55, 3 சூலை 2015 (UTC)[பதிலளி]
என்னுடையை கணித்தமிழ் செயல்பாடுகளுக்கு அடிப்படை விக்கியூடகமே. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. நம் இணைந்த செயல்பாடுகளால் படைப்பாக்கப் பொதுமங்கள், தமிழ்க்கணிமை ஆகிய தளங்களில் மேம்பாடு காண்போம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:51, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பொதுக்கருத்து வலுவாகும் வகையில் பல்வேறு விக்கிப்பீடியர்களும் பல்வேறு களங்களில் பங்களித்து வருகிறோம். இதன் நல்விளைவாக தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பெரும் வாய்ப்புகளைப் பற்றி அறிய வந்துள்ளோம். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய மாநிலம் தழுவிய பரப்புரை, தமிழ் இணையப் பயிற்சி, புதிய கட்டுரைகளைத் துறை சார் அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்டு எழுதுவிப்பது, பல்வேறு நூல்களைக் படைப்பாக்கப் பொதுமங்கள் உரிமத்தில் பொதுவகத்தில் பதிவேற்றுவது, விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்புகளை ஈர்க்கும் வண்ணம் போட்டிகளை நடத்துவது முதலிய பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. பன்னாட்டுத் தமிழ் விக்கிப்பீடியர்களும் இதற்கான முதற்கட்ட உரையாடலில் ஈடுபட்டு வருகிறோம். தமிழ்நாடு தழுவிய இத்திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியர்கள் இயன்ற அளவு களப்பணியில் இறங்கிச் செயற்படுவதன் மூலமே திட்டத்தைப் பயனுடையதாக மாற்ற முடியும். இதற்கான தயாரிப்புப் பணிகளில் இணையம் ஊடாகவும் தங்கள் தற்போதைய இருப்பிடங்களில் இருந்தும் பங்களிக்க முடியும். திட்டம் குறித்து இன்னும் மேல் விவரங்கள் அறிய வரும்போது இன்னும் விரிவாக இங்கு பதிவு செய்கிறோம். அப்போது செய்ய வேண்டிய பணிகளுக்கு ஏற்ப தங்கள் ஆர்வத்தைப் பதிந்து திட்டத்தில் இணைந்து செயற்பட வேண்டுகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 05:10, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]
ஏறத்தாழ 12 ஆண்டுகளாகத் தமிழ் விக்கிப்பீடியா தொய்வில்லாமல் இயங்கி வந்திருக்கிறது. இந்தக் காலகட்டத்திலே நாம் பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகள், ஊடக நேர்காணல்கள், பத்திரிகைக் கட்டுரைகள் போன்ற பல்வேறு வழிகளில் நமது இருப்பை இடைவிடாது வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி வந்துள்ளோம். இவ்வாறான செயற்பாடுகளின் வாயிலாகவும், தமிழ் விக்கியை இன்றைய நிலைக்கு வளர்த்து எடுப்பதில் நமது பயனர்கள் வழங்கிய அயராத உழைப்பின் காரணமாகவும், இன்று நம்மைச்சுற்றிப் பல நலம் விரும்பிகளையும், நம்மீது நம்பிக்கை கொண்டுள்ள பலரையும் நாம் உருவாக்கியுள்ளோம். இது ஒருபுறம் இருக்க, உலக அளவில் அறிவு உருவாக்கம், அறிவுப் பரவல் என்று பேசும்போது விக்கிப்பீடியாவையும் ஏனைய விக்கித் திட்டங்களையும் குறிப்பிடாமல் பேசமுடியாது என்ற நிலை இன்று உள்ளது. நாம் இந்தத் திட்டத்தின் பங்குதாரர்கள் என்ற அளவிலும் நம்மீது மற்றவர்களுக்குப் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. பொதுவாகத் தமிழ் மொழி வளர்ச்சி, சிறப்பாகத் தமிழில் அறிவுத் திரட்டல் போன்ற விடயங்கள் பற்றிச் சிந்திப்பவர்களுக்குத் தமிழ் விக்கித் திட்டங்களும் இதற்கான ஒரு சிறந்த வழியாக ஞாபகத்துக்கு வருவதை நாம் பார்க்கக்கூடியதாக உள்ளது. எனவே இந்த நிலைமையையும், இதனால் எழுகின்ற வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொண்டு தமிழ் விக்கித் திட்டங்களை நாம் அடுத்த நிலைக்கு வீறுடன் எடுத்துச்செல்ல வேண்டும். இந்த வகையில், இரவி மேலே கோடிட்டுக் காட்டிய விடயங்கள் பெரிய திருப்பு முனையாக அமையக்கூடியவை. இந்த வாய்ப்புக்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் தமிழ் விக்கித் திட்டங்களின் வளர்ச்சி வரலாற்றில் ஒரு பெரிய பாய்ச்சலாக இவை அமையும் என்பதில் ஐயம் இல்லை. ---மயூரநாதன் (பேச்சு) 14:59, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]
விக்கிமீடியா இந்தியக் கிளை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் என்பவற்றினூடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கு கிடைக்கும் இத்தகைய வாய்ப்புகளைப் பயனுறுதி மிக்கதாகப் பயன்படுத்த வேண்டும். முழுமையான திட்டம். செயலொழுங்கு என்பன தீர்க்கமான பின் இவைபற்றி மேலும் பேசமுடியும். தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கிய கலைக்களஞ்சியத் தொகுப்பு முதலானவற்றை ஒரு வதிவிடச் செயலரங்கு மூலம் ஒரு நாளில் காலை 8.00 மணிமுதல் பிற்பகல் 5.00 மணிவரை ஒரு முழுநேரச் செயலங்காக 10-15 பேர் ஒரே இடத்தில் இணைய வசதிகளுடன் கூடி முழுமூச்சுடன் தொகுப்பது மாதிரியான செயற்பாடுகளையும் ஒழுங்கு படுத்தலாம். செயலரங்கின் முடிவில் இத்தனை கட்டுரைகள் முடித்தோம் என்ற அடைவு நமக்குக் கிடைக்கும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:50, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
இந்திய விக்கிமீடியாவின் நிதி உதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், இச்செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.--த♥உழவன்(உரை)04:48, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]
உங்களுக்குத் தெரியுமா?
முதற்பக்கம், உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் தொகுத்தலை இன்னும் சிறப்பாகச் செய்தல், தொகுப்பு பற்றி குறித்த கட்டுரைகளில் குறிப்பிடுதல், மற்றும் கட்டுரையின் பங்களிப்பாளர்களுக்கு செய்தியிடல் என்பவற்றில் இன்னும் ஒரு சீரான செயற்பாடு இல்லாதிருக்கின்றது. பயனர்கள் இதில் ஒத்துழைக்க வேண்டுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:36, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]
விக்கிமேனியா 2015ல் தமிழ் விக்கிப்பீடியர்கள்
வரும் சூலை 15 முதல் 19 வரை மெக்சிக்கோ நகரில் நடக்கும் 2015 விக்கிமேனியாவில் தமிழ்ப்பரிதி மாரி, தினேசு ஆகியோருடன் நானும் கலந்து கொள்கிறேன். மூவரும் விக்கிமீடியா அறக்கட்டளை'யின் உதவித் தொகை பெற்று தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாகச் செல்கிறோம். சூரியாவுக்கும் உதவித் தொகை கிடைத்தது. ஆனால், விசா கிடைக்கவில்லை :( இந்த வாய்ப்பின் மூலம் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகத்தை உலக அளவில் தந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் மேலும் பல புதிய வளங்களைக் கொணர முனைகிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 10:54, 13 சூலை 2015 (UTC)[பதிலளி]
tener Un Buen Viaje ! பயணம் இனிதே அமைய வாழ்த்துகள் !! தமிழ் விக்கிப்பீடியா குறித்த பரப்புரையை உலகளவில் வெற்றிகரமாக நிகழ்த்திடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு, வாழ்த்துகள் !! --மணியன் (பேச்சு) 11:30, 13 சூலை 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் -- மூன்று தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்துகொள்வது குறித்து மகிழ்ச்சி. இது உங்கள் மூவருக்கும் நல்ல அனுபவத்தையும், தமிழ் விக்கியின் வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தையும் அளிக்கும் என நம்புகிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 14:01, 13 சூலை 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்து தெரிவித்த அனைவருக்க்கும் நன்றி. இந்நிகழ்வில் பங்களித்ததில் பல்வேறு சமூகத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது; தமிழ் விக்கியின் சார்பில் கலந்துகொண்ட தமிழ்ப்பரிதி மாரியை முதன்முதலில் இந்நிகழ்வில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நமது தமிழ் விக்கி சமூகத்தின் முன்னோடிகள் செய்த அளப்பெரிய சாதனைகளை அறிந்து கொள்ள இனியதொரு வாய்ப்பாக இது அமைந்தது. இரவி என்னும் இனிய நண்பருடன் பழக அதிக நேரம் அமைந்தது. தமிழ் விக்கிசமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல தமிழ்ப்பரிதி மாரியும் இரவியும் விக்கிமீடியா ஊழியரான ஆசப் பர்டோவுடன் கலந்துரையாடும் போது நானும் உடனிருந்தேன். கிட்டத்தட்ட அனைத்து விக்கிமீடியா ஊழியர்களும் தமிழ் விக்கி சமூகத்தின் மீது ஆர்வமும், பெருமதிப்பும் கொண்டுள்ளனர். விக்கிமேனியா குறித்து இன்னுமதிக கருத்துகள் உள்ளது, விரைந்து இது குறித்த நீண்ட நெடிய அறிக்கைதயாரிக்க உள்ளேன் தயாராக உள்ளது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:26, 23 சூலை 2015 (UTC)[பதிலளி]
இவருக்கான விக்கிப்பயிற்சியை நான் அலைப்பேசி வழித்தர விரும்புகிறேன். வேறுயாரேனும் இதற்குமுன் உதவ உள்ளனரா? எனது மின்னஞ்சல் tha.uzhavan அட் ஜிமெயில்.காம் என்பதற்கு தொடர்பு கொள்ளவும்--த♥உழவன்(உரை)07:06, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]
Proposal to create PNG thumbnails of static GIF images
The thumbnail of this gif is of really bad quality.How a PNG thumb of this GIF would look like
There is a proposal at the Commons Village Pump requesting feedback about the thumbnails of static GIF images: It states that static GIF files should have their thumbnails created in PNG. The advantages of PNG over GIF would be visible especially with GIF images using an alpha channel. (compare the thumbnails on the side)
பக்கத்தில் உள்ள படங்களைப் பார்க்கும்போது முன்மொழிவில் உள்ள மாற்றம் வரவேற்கத்தக்கது என்றே தோன்றுகிறது. ஆங்கில விக்கியில் உள்ள திட்டப்பக்கத்திலும் இதுவரை எல்லோரும் ஆதரவே தெரிவித்துள்ளனர். தமிழ் விக்கியின் நிலையில் இருந்து பார்க்கும்போது தொழில்நுட்ப அடிப்படையிலான சிக்கல்களோ அல்லது நடைமுறைச் சிக்கல்களோ இருக்கக்கூடுமா என்று தொழில்நுட்பம் சார்ந்த தமிழ் விக்கிப் பயனர்கள் யாராவது தெளிவாக்கினால் இவ்விடயத்தில் நமது ஆதரவையோ எதிர்ப்பையோ தெரிவிக்க வசதியாக இருக்கும். --மயூரநாதன் (பேச்சு) 06:00, 24 சூலை 2015 (UTC)[பதிலளி]
மயூரநாதன், இது அனைத்து மொழியினருக்கும் தேவையான ஒன்றே, GIF படிமங்களை பக்கத்தில் இணைக்கும் போது அதன் எழுத்துக்களும், படிமங்களும் சரிவரத்தெரியாது (படிமங்களை பார்க்க). அதை PNG படிமங்களாக மாற்றும் போது சரியாக தெரியும். இதில் தொழில்நுட்ப சிக்கலோ அல்லது நடைமுறை சிக்கலோ இல்லை. இம்முன்னெடுப்பிற்கு என் ஆதரவை தெரிவித்துள்ளேன்.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:28, 28 சூலை 2015 (UTC)[பதிலளி]
விக்கி விரும்புதே உணவை - சமூக விருதுக்கான வாக்கெடுப்பு
வணக்கம். விக்கி விரும்புதே உணவை ஒளிப்படப் போட்டியின் சமூக விருதுக்கான வாக்கெடுப்பு இங்கு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறந்த படத்தைத் தேர்ந்தெடுக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:04, 24 சூலை 2015 (UTC)[பதிலளி]
நம்மில் பலரை அப்பக்கத்தில் கண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோல பிற விக்கிகளில் நாம் கலந்து கொள்வதில்லை என்ற ஏக்கம் இனி வராது என்றே எண்ணுகிறேன். வணக்கம்.--த♥உழவன்(உரை)01:58, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]
கணித்தமிழ் வளர்ச்சி - கலந்துரையாடலுக்கான அழைப்பு
வரும் ஆகத்து 1, 2 8, 9 ஆகிய தேதிகளில் தமிழ் இணையக் கல்விக்கழகம் கணித்தமிழ் வளர்ச்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்துகிறது. இதில் தமிழில் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சி, கட்டற்ற மென்பொருள் வளர்ச்சி குறித்த அமர்வுகளும் இடம்பெறுள்ளன. இவ்வமர்வுகளில் நேரடியாகவும் இணையம் வழியாகவும் பல்வேறு தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்து கொள்கிறோம். இக்கலந்துரையாடல் மூலம் உருவாகும் செயல்திட்டம் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள், தமிழில் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இனங்காண உதவும். எனவே, இயன்றோர் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கிறோம். இணைப்புகள்: அழைப்பிதழ். நிகழ்ச்சி நிரல். நன்றி.--இரவி (பேச்சு) 16:22, 27 சூலை 2015 (UTC)[பதிலளி]
(எண்ணிமப்படுத்தல் தொடர்பாக ஏற்பட்டு இருக்கும் விழிப்புணர்வு வரகேற்கத்தக்கது.) இதற்கு முன் நாம் ஒரு கருத்துதிர்ப்பு (brainstorm) செய்து சில எண்ணக்கருக்களை ஆவணப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 16:37, 27 சூலை 2015 (UTC)[பதிலளி]
நிகழ்ச்சி நிரலில் முதல்நாள் இடம்பெறும் வெவ்வேறு அமர்வுகள் குறித்த விபரங்களும் பங்குபற்றுபவர்கள் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. அழைப்பிதழ் பொதுவாக எல்லோருக்கும் வெளியிடப்பட்டது என்று எண்ணுகிறேன். எனவே நிகழ்ச்சி நிரலில் பெயர் இல்லாதவர்களும் கலந்துரையாடலில் பங்குபற்ற வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி ஏதாவது தகவல் உண்டா? அழைப்பிதழின்படி இரண்டாம் நாள், செயற்திட்டங்களை உருவாக்குதல், அதுகுறித்துக் கலந்துரையாடுதல் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பங்குபற்றுபவர்கள் யார் என்பது குறித்த விபரங்கள் எதையும் காணவில்லை. ஏதாவது தகவல் தெரியுமா?
இத்தகைய கலந்துரையாடல்களில் முடிவுகள் அவசர அவசரமாக எடுக்கப்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. எனவே, கலந்துரையாடலுக்கு முன்பே தமிழ் விக்கிச் சமூகம் செயற் திட்டங்கள் குறித்து தெளிவான கருத்தை உருவாக்கிக்கொள்வது நல்லது. சில வாரங்களுக்கு முன்பே இது குறித்த கலந்துரையாடலுக்காகத் தொடங்கப்பட்ட பக்கத்தில் அதிகம் பயனர்கள் பங்குபற்றியதாகத் தெரியவில்லை. தயவுசெய்து பயனர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தால், பயனுள்ள, நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டங்களை உருவாக்க வாய்ப்பு ஏற்படும். -- மயூரநாதன் (பேச்சு) 03:02, 28 சூலை 2015 (UTC)[பதிலளி]
கலந்தாய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக செயற்படுத்தப்படவுள்ள விடயங்கள் குறித்த கருத்துதிர்ப்பு சந்திப்பு ஒன்றைச் செய்வது நக்கீரன் குறிப்பிட்டது போல் அவசியமாகும். கலந்தாய்வில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கும் கருத்துச் சொல்லமுடியும். அது எழுத்தாவணமாக பகரப்பட்டால் அல்லது நிகழ்நேரத்தில் கருத்திடக் கூடியதாக இருந்தால் இலகுவாயிருகும். தவிர இதுவரை குறிப்பிட்டளவு பயனர்கள் மட்டுமே கருத்துக்களைப் பகர்ந்துள்ளனர். மற்றவர்களது பங்கேற்பையும் எதிர்பார்க்கின்றோம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:23, 28 சூலை 2015 (UTC)[பதிலளி]
இந்த நிகழ்ச்சி நிரலில் பெயர் இல்லாதவர்கள் கலந்துரையாடலில் பங்குபெற வாய்ப்பு இல்லை என தமிழ்ப்பரிதி மாரி தெரிவித்தார். எனினும் நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் கருத்தரங்கு குறித்த விவரங்களையும், விக்கித்திட்டங்களைக் குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். என்னுடைய பெயர் ஒரு கலந்துரையாடலில் உள்ளது, நான் பிற கலந்துரையாடலில் பங்குபெற இயலாது.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:19, 28 சூலை 2015 (UTC)[பதிலளி]
சஞ்சீவி சிவகுமார், Natkeeran, மயூரநாதன் - எதிர்வரும் ஆகத்து 8 சனிக்கிழமை அன்று நடைபெறுவது வழமையான கருத்தரங்குகள், மாநாடுகள் போன்று முறையான நெறிப்படுத்திய நிகழ்வாகும். நடைமுறைக் காரணங்களை முன்னிட்டு இதில் ஒரு சிலர் தான் பேச முடியும். மொத்த நாள் நிகழ்வே ஆறு மணி நேரங்களே. இதில் இரண்டு மணி நேரங்கள் விக்கிமீடியா, கட்டற்ற மென்பொருள் திட்டங்கள் தொடர்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. நான் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களை ஒப்பிட்டுத் தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் வளர்ச்சி பற்றி கருத்துகளை முன்வைக்கிறேன். இது ஏற்கனவே நாம் எடுத்துள்ள கொள்கை முடிவை முன்வைத்தே அமையும். பார்வதி, தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பெண்கள் பங்களிப்பைக் கூட்டுவது பற்றி கருத்துகளை முன்வைக்க உள்ளார். இது போல், மயூரநாதன், சஞ்சீவி சிவக்குமார் முதலிய ஏனைய பங்கேற்பாளர்களும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் தங்கள் உரையை முன்வைக்கலாம். இளையவர்கள், மூத்தவர்கள், நெடுநாள் பங்களிப்பாளர்கள், பெண்கள், நுட்பப் பங்களிப்பாளர்கள், பன்னாட்டுப் பங்களிப்பாளர்கள் ஆகிய பலரையும் உள்ளடக்கி உரைகள் அமைய வேண்டும் என்ற நோக்கில் இப்பங்கேற்பாளர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. பேசும் வாய்ப்புடையோர் ஒரு சிலரே என்றாலும், இங்குள்ள கலந்துரையாடலின் அடிப்படையில் சமூகத்தின் கருத்துகளை உள்வாங்கி பேச முடியும். இது, புதிதாக விக்கிமீடியா திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வோருக்கான அறிமுகமாக மட்டுமே இருக்கும். ஆகத்து 9 ஞாயிறு அன்று தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரு பணிக்குழுவாகக் கூடி தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கான செயற்றிட்டங்களுக்கான வரைவை உருவாக்கலாம். இது ஓர் அறையில் அனைவரும் உரையாடும் வகையிலேயே அமைந்திருக்கும். இதில் சென்னையில் உள்ள, நிகழ்வுக்கு வந்து கலந்து கொள்ளக்கூடிய அனைத்து விக்கிப்பீடியர்களும் கலந்து கொள்ளலாம். உலகம் முழுக்க இருக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களும் IRC, Google Hangout முதலியன மூலம் பங்கேற்கலாம். இவ்வுரையாடலின் தொகுப்பைத் தொடர்ந்து etherpadல் இற்றைப்படுத்தி வரலாம். சென்ற ஆண்டு இந்திய விக்கிமீடியா சமூகங்கள் கூடிய நிகழ்வில்இந்திய விக்கிமீடியா திட்டங்களை வளர்ப்பதற்கான இவ்வாறான ஒரு வரைவு உருவானது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட செல்வா, சோடாபாட்டில், சிபி முதலியோர் இம்முறை பற்றி எடுத்துரைக்கலாம். கூடுதல் நேரம் தேவையென்றால் சனி மாலை தொடங்கியே இப்பணிக்குழு வேலைகளைத் தொடங்க முடிகிறதா என்று பார்ப்போம்.--இரவி (பேச்சு) 18:07, 2 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஒத்திவைப்பு
அன்புடையீர்,
வணக்கம்.
மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏழு நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழையும், தொழில்நுட்பத்தையும் அளவு கடந்து நேசித்த, தமிழ்த்தாய் பெற்றெடுத்த அரும்புதல்வர் அமரர் அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஆகத்து 1 மற்றும் 2ம் திகதிகளில் தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்தில் நடைபெறுவதாக இருந்த கணித்தமிழ் வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் நிகழ்வு ஒத்தி வைக்கப்படுகிறது.
கலந்துரையாடல் வரும் ஆகத்து 8 மற்றும் 9ம் திகதிகளில், சென்னை, தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்தில் நடைபெறும். நிகழ்ச்சி நிரலில் எவ்வித மாற்றமும் இல்லை.
தங்கள் வருகையினை எதிர்நோக்கும்,
த. உதயச்சந்திரன், இ.ஆ.ப..
என மேற்கண்டவாறு அரசுத்தகவல் வந்துள்ளது.--த♥உழவன்(உரை)06:26, 29 சூலை 2015 (UTC)[பதிலளி]
Hi,
The Community Engagement department at the Wikimedia Foundation has launched a new learning campaign. The WMF wants to record community impressions about what makes a healthy online community.
Share your views and/or create a drawing and take a chance to win a Wikimania 2016 scholarship!
Join the WMF as we begin a conversation about Community Health. Contribute a drawing or answer the questions on the campaign's page.
Why get involved?
The world is changing. The way we relate to knowledge is transforming. As the next billion people come online, the Wikimedia movement is working to bring more users on the wiki projects. The way we interact and collaborate online are key to building sustainable projects. How accessible are Wikimedia projects to newcomers today? Are we helping each other learn?
Share your views on this matter that affects us all!
We invite everyone to take part in this learning campaign. Wikimedia Foundation will distribute one Wikimania Scholarship 2016 among those participants who are eligible.
More information
All participants must have a registered user of at least one month antiquity on any Wikimedia project before the starting date of the campaign.
All eligible contributions must be done until August 23, 2015 at 23:59 UTC
Hi,
The Community Engagement department at the Wikimedia Foundation has launched a new learning campaign. The WMF wants to record community impressions about what makes a healthy online community.
Share your views and/or create a drawing and take a chance to win a Wikimania 2016 scholarship!
Join the WMF as we begin a conversation about Community Health. Contribute a drawing or answer the questions on the campaign's page.
Why get involved?
The world is changing. The way we relate to knowledge is transforming. As the next billion people come online, the Wikimedia movement is working to bring more users on the wiki projects. The way we interact and collaborate online are key to building sustainable projects. How accessible are Wikimedia projects to newcomers today? Are we helping each other learn?
Share your views on this matter that affects us all!
We invite everyone to take part in this learning campaign. Wikimedia Foundation will distribute one Wikimania Scholarship 2016 among those participants who are eligible.
More information
All participants must have a registered user of at least one month antiquity on any Wikimedia project before the starting date of the campaign.
All eligible contributions must be done until August 23, 2015 at 23:59 UTC
முதல் விக்கிமாநாடு இந்தியா 2011-ஆம் ஆண்டு மும்பையில் நடந்தது அனைவரும் அறிந்ததே. கடந்த 14 ஆண்டுகளில் இந்திய அளவில் நடந்த ஒரே கருத்தரங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிமாநாடு இந்தியா 2016 (WikiConference India 2016 அல்லது WCI 2016) என்பது இந்தியாவில் பேசப்படும் மொழிகள் குறித்த மாநாடு ஆகும். விக்கிமேனியா 2015-ல் நடைபெற்ற இந்திய விக்கிமீடியர்களின் சந்திப்பில், 2019-ம் ஆண்டு விக்கிமேனியாவை இந்தியாவில் நடத்த அனைத்து மொழி சமூகத்தினரும் விரும்பினோம்.
இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களும் ஒன்று கூடவும், இந்திய விக்கிமீடியர்களின் ஒற்றுமையை வளர்க்கவும், பிற சமூகத்திலுள்ள தன்னார்வலர்களை இணைக்கவும் ஒரு முன்னோட்டமாக "விக்கிமாநாடு இந்தியா 2016" நடத்த விரும்பினோம். அதற்கான முன்மொழிவை ஆர்வமுள்ளவர்கள் ஒன்றுகூடி உருவாக்கியுள்ளோம்.
2019-ம் ஆண்டு விக்கிமேனியாவை ஒருங்கிணைப்பை சீராக்கவும், சிறப்பாகவும் செய்ய இது ஒரு வாய்ப்பு. இது இந்தியாவில் பேசப்படும் மொழிகள் குறித்த கருத்தரங்கு என்பதால், இதனை முன் எடுத்துச் செல்வது நமது விக்கிமீடியர்களின் கடமையாகவே பார்க்கிறோம்.
அன்புடன்,
விக்கிமாநாடு இந்தியா 2016 தன்னார்வலர்கள் சார்பாக தினேசு.
நடைமுறைக் காரணங்களுக்காக பெயரில் இந்தியா என்று இருந்தாலும், இது இந்தியாவில் பேசப்படும் மொழி விக்கிமீடியாக்களுக்கான மாநாடே ஆகும். உருது, பஞ்சாபி, வங்கள மொழி, தமிழ் போன்ற மொழி விக்கிப்பீடியாக்களுக்கள் நாட்டு எல்லைகள் கடந்து செயற்படுவதையும் நன்றாக உணர்ந்திருக்கிறோம். பங்கேற்பாளர்களுக்கான பங்கேற்பு உதவித் தொகை வழங்கும் போது, குறைந்தபட்சம் இலங்கை முதலிய அண்டை நாடுகளில் உள்ள பங்களிப்பாளர்களின் பங்கேற்பையும் உறுதி செய்ய முனைவோம். அதே போல், இணையம் மூலம் இதற்கான தன்னார்வப் பணிகளில் ஈடுபடுதற்கும் அனைவரையும் வரவேற்கிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 17:25, 2 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
Wikidata: Access to data from arbitrary items is coming
(Sorry for writing in English)
When using data from Wikidata on Wikipedia and other sister projects, there is currently a limitation in place that hinders some use cases: data can only be accessed from the corresponding item. So, for example, the Wikipedia article about Berlin can only get data from the Wikidata item about Berlin but not from the item about Germany. This had technical reasons. We are now removing this limitation. It is already done for many projects. Your project is one of the next ones. We will roll out this feature here on August 12.
We invite you to play around with this new feature if you are one of the people who have been waiting for this for a long time. If you have technical issues/questions with this you can come to d:Wikidata:Contact the development team.
A note of caution: Please be careful with how many items you use for a single page. If it is too many pages, loading might get slow. We will have to see how the feature behaves in production to see where we need to tweak and how.
How to use it, once it is enabled:
Parser function: {{#property:P36|from=Q183}} to get the capital from the item about Germany
மலேசியா தொடர்பான முக்கிய கட்டுரைகள் துவங்கப்படாமல் இருக்கிறது. புதிய கட்டுரைகளுக்கு பங்களிப்பாளர்களைப் பெற அண்மைய மாற்றங்கள் பக்கத்தின் மேலே சிகப்பு இணைப்புகளை கொடுக்க விரும்புகிறேன். வார்ப்புரு:மலேசியத் தலைப்புகள். ஒருமாதம் மலேசியா தொடர்பான கட்டுரைகளுக்கு பயணர்களின் பங்களிப்பை கோரலாமா? கருத்துக்களை பகிரவும். (அப்பக்கத்தில் மாற்றம் செய்வது எப்படி என்பது மறந்துவிட்டது) நன்றி --மாகிர் (பேச்சு) 16:17, 5 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
வணக்கம். தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இருநாள் நிகழ்வினூடாக நிறைவேறத்தொடங்கியுள்ள நெடுங்காலக் கனவைப் பற்றி உரையாடுவதற்காக இந்தப் பிரிவு. ஆயிரம் நாட்களில் லட்சம் கட்டுரைகள் என்று பேசினோம். நாள் சார்ந்த இலக்கு ஒரு பக்கம் இருந்தாலும், உகந்த கால அளவில், தரத்துக்கு எ்நத குறைவும் இல்லாமல், விரிவாகவும் ஆழமாகவும் ஒரு இலட்சம் கட்டுரைகளை கொண்டுவருவதற்கான திட்டம் குறித்த நமது செயல்பாடுகளை பதிந்துவரவும் அது குறித்து உரையாடவும் இந்த உரையாடல் சரம் நிலவட்டும்.
இன்று 3 முக்கிய வாய்ப்புகள் குறித்து பேசத்தொடங்குவோம்:
ஊர்கள்
தமிழகத்தின் அனைத்து ஊர்களையும்பற்றிய (மாநகராட்சி முதல் ஊராட்சி அலகு வரை) ஏறத்தாழ 15000 கட்டுரைகளை கொண்டுவருவது குறித்த ஒரு உரையாடல் கல்விக்கழக இயக்குநர் திரு த.உதயசந்திரன் இஆப தமிழ்நாடு மினஆளுகைத் திட்ட இயக்குநர் திரு. நாகராஜன் இஆப ஆகியோருடனான சந்திப்பு ஒன்றில் பேசப்பட்டது.
இங்கே ஒரு முன்கதைச் சுருக்கம். 1999 இல் இணையகம் என்ற பெயரில் thamizh.com என்கிற இணையதளத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு இணையப்பக்கம் என்கிற திட்டமாக இதைத் தொடங்கினோம். ஓராண்டில் சுமார் 50 ஊர்கள் வரை அதில் இடம்பெற்றன. பின்பு thamizh.com நிதியின்றி சுருண்டபோது அவை நின்றுபோயின. இப்போது இந்தியா டுடேயில் இது குறித்து ஒரு கட்டுரை வந்தது. பின்பு நீண்ட காலம் கழித்து 2011 இல் ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு நூல் என்கிற வடிவில் ஆழி பதிப்பகம் சார்பாக எட்டு நூல்களைக் கொண்டுவந்தோம். வேலூரில் எங்கள் முன்முயற்சியில் நடைபெற்ற நூலாறு புத்தகக் கண்காட்சியில் அன்று அந்த நூல்களை வெளியிட்டது அப்போது அங்கே மாவட்ட ஆட்சியராக இருந்த திரு நாகராஜன்தான் என்பது குறிப்பிடத்தக்கது! இப்போது அவரோடு மீண்டும் சேர்ந்து செயல்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது வெளியிட்ட எட்டு நூல்கள்: வேலூர், குடியாத்தம், ஆரணி, ஆர்க்காடு, திருப்பத்தூர், ஆம்பூர், சோலையார்பேட்டை/ஏலகிரி, திருவண்ணாமலை. இந்த நூல்களின் ஆசிரியர்களோடு பேசி இவற்றை இப்போது படைப்பாக்க பொதுமத்துக்குள் கொண்டுவந்து, அவற்றின் தரவுகளை மாற்றி, விக்கிப்பீடியாவுக்கு கொண்டுவரலாம் என நம்புகிறேன்.
மீண்டும் இன்றைய நாளுக்கு: ஆக, திரு நாகராஜன் அவர்களுடனும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரகம் (திரு உதயச்சந்திரன், திரு நாகராஜன் ஆகியோர் இதன் பொறுப்புகளில் முன்பு இருந்திருக்கிறார்கள்), தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை, நூலகத்துறை, பள்ளிக்கல்வித்துறை என பல துறைகளின் கூட்டுச்செயல்பாடுகளாக இந்த 15000 கட்டுரைகளை "மெல்ல மெல்ல முகிழவைப்பது"தான் நமது கடமையாகும். இது குறித்து இந்த வார இறுதிக்குள் ஒரு பதிவு இடுகிறேன்.
கலை, இலக்கியம்
விக்கிப்பபீடியாவின் the arts and the culture பிரிவில் கலை, இலக்கியம் ஆகிய இரு பகுப்புகளுக்குள் வரக்கூடிய வகையினங்களுக்கான தமிழ்ப் பதிப்பைத் (அசல், மொழிபெயர்ப்பு) திட்டமிட ஆகஸ்ட் மாதத்துக்குள் முதல் வரைவு உருவாக்கப்படும். இதுவரை பத்து பேரிடம் பேசியிருப்பேன். திரு.தேவதாஸ், திரு. இந்திரன், திரு.டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட பலரிடம் பேசப்பட்டிருக்கிறது. குழந்தைகள் இலக்கம் பற்றி அதில் சிறந்துவிளங்குபவரும் இந்து அறநிலையத்துறை அதிகாரியும் திரு ச.சிவக்குமார், பசுமை உள்ளடக்கம் தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் திரு சுந்தர், இடதுசாரி வரலாறு மற்றும் இலக்கியம் தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினரும் நாவலாசிரியருமான திரு சு.வெங்கடேன், சங்க இலக்கியம் குறித்து பேராசியர் திரு மாதையன் ஆகியோருடன் இந்நிகழ்வின்போது பேச வாய்ப்பிருந்தது.
2. தமிழ்ப் பல்கலைக்கழகம்: நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் திரு பாஸ்கரன் அவர்களிடம் மிகக்சுருக்கமாக பேசியிருக்கிறேன். அழைப்பு விடுத்திருக்கிறார். வாழ்வியல் களஞ்சியம் உள்ளிட்ட தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடுகள் குறித்தும் அவை விக்கியூடகத்தோடு எவ்வாறு இணைய/இசைய முடியும் என்பதைப் பற்றி விரிவாக பேச நேராக செல்லவுள்ளேன். விக்கிப்பீடியர்கள் யாரேனும் என்னோடு இணைந்து வந்தால் நல்லது.
3. கோவை வேளாண் பல்கலையின் அக்ரிடெக் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. சுமார் 60000 பக்கங்கள் அவர்கள் வேளாண் அறிவை இணையம் வழியாக வழங்கியிருக்கிறார்கள். தமிழில்: http://agritech.tnau.ac.in/ta/index.html - இவர்களுடன் பேசி வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் வேளாண்மை அமைப்புகள், பசுமை விகடன், நவீன வேளாண்மை இதழாளர்கள் ஆகியோருடன் இணைந்து இவற்றில் பொருத்தமானவற்றை விக்கிப்பீடியாவுக்கு கொண்டுவரலாம். பல்கலைக்கழகத்தின் அக்ரிடெக் உள்ளடக்கத்தை பொதுமத்தில் கொண்டுவருவது தொடர்பாக த.இ.க.க இயக்குநரிடம் பேசவுள்ளேன். இது வெற்றிபெற்றால் வேளாண்மை தொடர்பாக சில ஆயிரம் கட்டுரைகள் நிச்சயம்
4. நெடுங்காலமாக வெளிவந்திருக்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடங்கிய தென்மொழி இதழ்களை பொதுமத்தில் வெளியிடுவது குறித்தும் திரு. மா.பூங்குன்றன் உள்ளிட்டோர் தற்போது செயற்படுத்திவரும் செந்தமிழ்ச்செொற்பிறப்பியல் அகரமுதலியை பொதுமத்துக்கு கொண்டுவருவது குறித்தும் பேசினேன். விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம் ஆகிய அனைத்தும் பயன்தரத்தக்க ஒன்றாக இவை இருக்கும். இது குறித்தும் அவர்களுடனான உரையாடல்களை தொடர்ந்து பகிர்கிறேன்.
தொடரும்
குறிப்பு: புதிய திட்டங்களின் வழியாக வெளிவரும் கட்டுரைகள் அனைத்துக்கும் 'இலக்கு ஓர் இலக்கம்' என்கிற அடையத்தை (tag) செய்யலாமா? இது இத்திட்டத்தைக் கண்காணிக்க உதவும். அத்துடன் "இலக்கு ஓர் இலக்கம்" அல்லது "லட்சம் பதிவுகள் லட்சியம்" என்பது போன்ற முழக்கத்தை உருவாக்கி பிரபலப்படுத்தலாமா,. யோசித்து்ச்சொல்லுங்கள்.−முன்நிற்கும் கருத்து Zsenthil (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை ஒருங்குறி வடிவில் வழங்க முடியுமாயின், இன்னுஞ் சிறப்பு. இதனால், சொற்களை இலகுவாகத் தேட முடிவதுடன், பக்கங்களும் விரைவாக ஏற்றப்படும். இலக்கு ஓர் இலக்கம் என்று கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் சுட்டுவது சிறந்ததே. இதற்கென ஒரு வார்ப்புருவை உருவாக்கி, இத்திட்டத்தின் மூலம் உருவாக்கும் அல்லது மேம்படுத்தும் கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் இடலாம். ஏற்கெனவே கட்டுரைகள் இருக்குமிடத்தில், பழைய தகவல்களைப் பேணிக்கொண்டே, புதிய தகவல்கள் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கூகிள் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் நிகழ்ந்தது போல்[1] மீண்டும் நிகழாதிருக்க வேண்டும். தொடக்கத்தில் கட்டுரைகளை மெதுவாக ஏற்றுதல் நன்று. கட்டுரைகளைக் கண்காணிப்பதற்கு (விக்கிநடை, வடிவமைப்பு, தொடரியற் பிழைகள் முதலியன) உதவியாகவும் இருக்கும். இதனையும் பார்க்க: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு11 --மதனாகரன் (பேச்சு) 02:55, 10 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
செந்தில்நாதன், உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. 1000 நாட்களில் ஒரு இலட்சம் கட்டுரைகள் என்பது உரிய முறையில் திட்டமிட்டு இயங்கினால் எட்டக்கூடியதுதான். கட்டுரை எழுதுவதை மட்டும் சிந்திக்காமல், அதோடு தொடர்புடைய எல்லா அம்சங்களையும் கவனத்துக்கு எடுத்துத் திட்டங்களை வகுக்கவேண்டும். எந்தத் திட்டமும் விக்கிப்பீடியாவின் இயல்புகள், அது இயங்கும் முறை என்பவற்றைத் தெளிவாக உள்வாங்கி வகுக்கப்பட வேண்டும். இதன் மூலம்தான் விக்கிப்பீடியாவைத் தாங்கு வளர்ச்சி கொண்டதாக (sustainable) நகர்த்திச்செல்ல முடியும்.
விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது என்பது ஒற்றைப் பணி அல்ல. அது பல விடயங்களை உள்ளடக்கியது. பலருடைய கூட்டு முயற்சியை வேண்டி நிற்பது.
கட்டுரைகள் விக்கிக் கொள்கைக்கு அமைய உள்ளனவா என்பதை உறுதிசெய்தல்
கட்டுரைகள் விக்கிக்குரிய வடிவத்தில் உள்ளதை உறுதிசெய்தல்
கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையில் இருப்பதை உறுதிசெய்தல்
கட்டுரைகளை உரிய பகுப்புக்களில் சேர்த்தல்
ஒரே விடயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்படுவதைத் தவிர்த்தல்.
பிழை திருத்தம்
மேற்கோள்கள் சேர்த்தல்
படிமங்கள் சேர்த்தல்
உள்ளிணைப்புக்களை உருவாக்குதல்
விக்கியிடை இணைப்புக்களை உருவாக்குதல்
தேவை ஏற்படும்போது இற்றைப்படுத்துதல்
போன்ற பணிகள் இவற்றுட் சில. வழமையான சூழ்நிலைகளில் கட்டுரைகள் உருவாகும்போது மேற்காட்டிய பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. பல பயனர்கள் இப்பணிகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் பல பயனர்களின் பங்களிப்பு நேரத்தில் பெரும்பகுதி மேற்சொன்ன பணிகளில் செலவிடப்படுவதையும் காணலாம். எனவே அதிகரிக்கும் பணிச்சுமையை எவ்வாறு கையாள்வது என்பது திட்டமிடலில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கவேண்டும். மேற்படி பணிகளுக்கான தேவையை மூலத்திலேயே குறைத்தல், இத்திட்டத்தின்கீழ் கட்டுரை எழுதுபவர்களில் ஒரு பகுதியினராவது தொடர் பங்களிப்பாளர்களாக உருவாவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், புதிய பயனர்களைச் சேர்ப்பதற்கான திட்டமொன்றைச் சமகாலத்தில் செயற்படுத்துதல் போன்றவற்றைக் கவனத்தில் கொள்ள முடியும். கூடிய வரை ஒரே விடயத்தில் (எ.கா ஊர்களைப்பற்றிய 15,000 கட்டுரைகள்) ஒரேயடியாக ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது. பல விடயங்களிலும் கட்டுரைகள் கலந்து வரும் வகையில், வெவ்வேறு விடயங்கள் சார்ந்த கட்டுரைகள் ஒரே நேரத்தில் பகுதி பகுதியாக உருவாக்கப்படலாம். மேலும் கருத்துக்களை இன்றிரவு பதிவு செய்கிறேன். --மயூரநாதன் (பேச்சு) 04:01, 10 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
திரு.மயூரநாதன், வணக்கம். தாங்கள் முன்மொழிந்திருக்கும் பல கருத்துகளை ஏற்கனவே சிந்தித்துமிருக்கிறோம். நான் இது குறித்து பேசியவை அனைத்தையும் ஒரே இடத்தில் தர இயலவில்லை. தொடர்ந்து உரையாடுவோம். ஆழி செந்தில்நாதன்
வணக்கம் செந்தில்நாதன், உங்கள் அறிமுகமும் தமிழார்வமும் மனநிறைவைத் தந்தது. இந்த உரையாடல்களை இங்கு கொண்டு செல்லலாம். மேலே மதனாகரன் கூறியதைப் போல இதனை விக்கிதிட்டமாக (WikiProject) செய்யலாம். இலக்கும் இலக்கியமும் இலட்சியம் போன்ற தரத்தை உள்ளடக்கிய முழக்கங்கள் எங்களுக்கு நம்பிக்கைத் தரும். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல சோதனையோட்டமாக முதலிரு கட்டுரைகள் வந்தபின்னர் விரைவுபடுத்துப் பல்லிணையை முடுக்கலாம். முதற்கட்ட நகர்வாக பயிற்றுப் பொருட்களும் பயிற்சிகளும் இருத்தல் வேண்டும்.--மணியன் (பேச்சு) 05:12, 10 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
பல தரப்பட்ட பங்களிப்பாளர்களிடம் தமிழ் விக்கியை அறிமுகப்படுத்தல், பங்களிப்பைப் பெறுதல் ஆகிய இலக்குகளை ஊர்கள் கட்டுரைத்திட்டத்தில் முக்கிய இலக்குகளாகக் கொள்ளலாம். எ.கா 1000 புதிய பயனர்களுக்கு அறிமுகப்படுத்தல், 50 புதிய தொடர் பங்களிப்பாளர்களைப் பெறுதல். பிற களங்களில் உள்ள உள்ளடக்கங்கள் விக்கிக்கு வரவதில் சிரமம் இருந்தாலும் அவை இணையத்துக்கு வர வேண்டும் என்ற இலக்கே, தமிழ் விக்கிக்கு உதவும். குறிப்பாக அறிவியல் களஞ்சியம், வாழ்வியற் களஞ்சியம் மற்றும் மருத்துவக் களஞ்சியம் ஆகியவை இணையத்துக்கு வந்தால், அது அறிவியல் தமிழுக்கு ஒரு பெரிய பாச்சலாக அமையும். குறிப்பாக அறிவியல் களஞ்சியம். பல்துறைகளில் தமிழில் எப்படி எழுதுவது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களை வழங்குகிறது. மேற்கோள்களைத் தருகிறது. இணையத்தில் தமிழ் உள்ளடக்கத்துக்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு: http://agritech.tnau.ac.in/ta/index.html. அதனை தமிழ் விக்கியில் மேற்கோளாகப் பயன்படுத்தி கட்டுரைகள் எழுத முடியும். முந்தி கட்டுரைப் போட்டி நடந்த போது, கணிசமான கட்டுரைகள் http://agritech.tnau.ac.in/ta/index.html தழுவி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தொடர்பாக பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இணையத்தில் தமிழ் உள்ளடக்க ecosystem என்று நோக்கி, அதில் தமிழ் விக்கி, http://agritech.tnau.ac.in/ta/index.html, த.இ.க போன்ற தளங்கள் ஊடாக அதை விரிவாக்குவதை நாம் இலக்காக் கொள்ளலாம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு, நாம் திறந்த பாடத்திட்டங்கள், தமிழில் பல்துறை இணையவழிக் கல்வி ஆகிய இலக்குகளை நோக்கி நகர வேண்டும். --Natkeeran (பேச்சு) 13:43, 10 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
வகைகளை ஆங்கில விக்கியின் வகைப்பாடுகளுடன் பொருந்தச் செய்வது நல்லதுதான். அதுபோல, பொது விடயங்களைப் பொறுத்தவரை கட்டுரைகளின் தலைப்புக்களும், உள்ளடக்கப் பரப்பும் ஓரளவுக்குப் பொருந்திவருவதும் நல்லது. இது பிறமொழிக் கட்டுரைகளுக்கு இணைப்புக்கொடுப்பதை இலகுவாக்கும். அரசியல் சார்ந்த கட்டுரைகளைக் குறித்த ஒரு கொள்கை சார்ந்தோரைக்கொண்டு எழுதுவிக்கும்போது நடுநிலை நோக்கிலிருந்து வழுவாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.
agritech தளத்திலுள்ள உள்ளடக்கங்கள் கட்டற்ற உரிமங்களின் கீழ் கிடைக்குமானால் வேளாண் துறையில் ஏராளமான கட்டுரைகளை எழுத வழிபிறக்கும். முக்கியமாகப் படிமங்கள் கட்டற்ற வகையில் கிடைக்கவேண்டும். இத்தளத்தில் இருக்கக்கூடிய வேளாண் கலைச்சொற்களைப் பட்டியலிட முடிந்தால் அதுவும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அறிவியல் களஞ்சியம், வாழ்வியல் களஞ்சியம் போன்ற பெரிய தொகுதிகள் கட்டற்ற உரிமங்களில் கிடைப்பது தமிழ் விக்கித்திட்டங்களின் இலக்கை நோக்கிய முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்குமெனினும், எந்த அளவு விரைவாக இவற்றை விக்கித்திட்டங்களில் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரியவில்லை.
கட்டுரை எழுதும் வல்லுனர்கள் தமிழ் விக்கியில் பதிவு செய்துகொண்டு பிற பயனர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட ஊக்குவிக்கவேண்டும். இதன்மூலம் விக்கிச் செயற்பாடுகள், நடைமுறைகள் குறித்த புரிந்துணர்வு ஏற்பட வழிபிறக்கும்.
ஆர்வமுள்ள பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களை ஒரு குறிப்பிட்ட தொகையில், உரிய வழிகாட்டல்களுடன், குறிப்பிட்ட காலத்துக்கு ஈடுபடுத்துவதன் மூலம் பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்த கட்டுரைகளை விரைவில் எழுதக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படலாம். எனவே இதற்குரிய வழிவகைகள் குறித்து ஆராய்வது பயன்தரும்.
தானியங்கிகள் மூலம் கட்டுரை எழுதும் எண்ணம் இருக்குமானால். இதைக் குறைந்த அளவுக்கு வைத்துக்கொள்வது நல்லது.
வணக்கம் மயூரநாதன், உங்களுடைய கருத்துகள் அனைத்தும் கருதப்படவேண்டியவை. இவை குறித்து பல உரையாடல்கள் நடந்துமிருக்கின்றன. புதிய வல்லுநர்களை அணுகுவதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் எப்படி என்பது பற்றி ஒரு வினாவிடைமாலை எழுதி அளிக்குமாறு விக்கிப்பீடியர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இலக்கு பெரியதுதான், ஆனால் அவசரம் காட்டவில்லை. - ஆழி செந்தில்நாதன்
நேற்று காஞ்சிபுரம் அருகே பிரம்மதேயம் என்கிற இராசராசசோழன் இறுதிமூச்சை அடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரில் மாமன்னன் அரியணை ஏறிய 1000 ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டேன். நிகழ்வில் காஞ்சிபுரம் பகுதி வரலாற்று ஆய்வாளர்களைக் கண்டேன். விக்கிப்பீடியா திட்டம் குறித்து விரிவாக பேசினோம். பச்சையப்பன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் திரு. பாலன் தமிழக வரலாறு பற்றி நான்கு தொகுதி கலைக்களஞ்சியத்தை வெளியிட்டவர். அவர் மிகுந்த உற்சாகமாக இருக்கிறார். சைவசித்தாந்தத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இருக்கும் ஒரு ஆய்வாளரும் வந்திருந்தார். காஞ்சியில் அவர்களுக்குப் பயிற்சி அளித்தால் குறைந்தபட்சம் 3-5 விக்கிப்பீடியர்களை விரைவில் பெறலாம். தொடர்வோம். ஆழி செந்தில்நாதன்
சென்ற வாரம் த. இ. க. வில் நடந்த கலந்துரையாடல், அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவான குறிப்புகளை இங்கு பகிர்ந்துள்ளேன். அங்கு தனித்தனித் தலைப்புகளின் கீழ் உரையாடுவது கூடுதல் தெளிவைத் தரும். எனவே, தொடர்ந்து அங்கு உரையாடக் கோருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:37, 13 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
Wikidata: Access to data from arbitrary items is here
(Sorry for writing in English)
Hi everyone,
As I have previously announced here we have now enabled the arbitrary access feature here. This means from now on you can make use of data from any Wikidata item in any article here. Before you could for example only access data about Berlin in the article about Berlin. If you want to find out more or have questions please come to d:Wikidata:Arbitrary access. I hope this will open up great possibilities for you and make your work easier.
Cheers Lydia Pintscher (WMDE) 13:32, 12 ஆகத்து 2015 (UTC)
முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன். இதை நீங்களே செய்திருக்கலாமே மாகிர்? முழுதும் நீல இணைப்புகள் உள்ள வார்ப்புருகளைத் தயங்காது முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவோம். --இரவி (பேச்சு) 16:13, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
How can we improve Wikimedia grants to support you better?
My apologies for posting this message in English. Please help translate it if you can.
Hello,
The Wikimedia Foundation would like your feedback about how we can reimagine Wikimedia Foundation grants, to better support people and ideas in your Wikimedia project. Ways to participate:
தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு விக்கிப்பீடியா நூலகக் கிளை!
விக்கிப்பீடியா நூலக ஆந்தை உங்கள் சமூகம் நம்பகமான வளங்களை அணுக ஒரு திறந்த ஆராய்ச்சி மையத்தை உருவாக்க உதவி செய்ய விரும்புகிறது!
வணக்கம் தமிழ் விக்கிபீடியர்களே! எங்கள் திட்டத்தில் விக்கிப்பீடியா நூலகத்தின் கிளை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். உங்களுக்கு இதுபற்றி ஏற்கனவே தெரியாது இருப்பின், சிறு விளக்கம். விக்கிப்பீடியா நூலகக் கிளைகள் என்பது உயர்தரமான கட்டுரைகள் எழுதவதற்குத் தேவையான ஆய்வுக் கருவிகளையும் வளங்களையும் ஆசிரியர்கள் அணுகுவதற்கு உதவி செய்யு முகமாக தொண்டர்களால் அமைக்கப்பட்ட ஆய்வு மையங்கள் ஆகும்.
சமுதாய கலந்தாலோசனை
தயவுசெய்து, இச் சமூகத்திற்கு சிறப்பான செயற்படக்கூடியது என நீங்கள் நினைப்பது பற்றி உங்கள் கருத்துக்களை அளியுங்கள்.
ஏற்கனவே ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்ய உதவும் நம் சமூகத்தில் உள்ள வளங்கள் என்ன? அவை பலன் உள்ளவையா? இந்த திட்டங்களுக்காக அதிக ஆதரவை எம்மால் வழங்க முடியுமா?
உங்கள் பதிலை இணையுங்கள்
எம் சமூகத்தில் ஆராய்ச்சிக் கருவிகளுக்கான மிகப்பெரிய தேவைகள் என்ன? உங்கள் வேலையை வலுப்படுத்துவனவான குறிப்பிட்ட ஆராய்ச்சி தரவுத்தளங்கள், பத்திரிகைகள், வெளியீடுகள் அல்லது அச்சு பொருட்கள் உள்ளனவா?
உங்கள் பதிலை இணையுங்கள்
ஏற்கனவே நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், கலாச்சார நிறுவனங்கள் அல்லது காப்பகங்கள் ஆகியவற்றுடன் நாம் செய்யும் சென்றடைவதற்கான திட்டங்கள் என்ன?
உங்கள் பதிலை இணையுங்கள்
இலவச, திறந்த வெளி ஆராய்ச்சி பொருட்கள் எங்கே உள்ளதெனக் கண்டுபிடிக்கத் தேவையான போதுமான வழிகாட்டலை நாம் கொண்டுள்ளோமா?
உங்கள் பதிலை இணையுங்கள்
நம்பகமான வளங்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த நமக்கு உதவக்கூடிய ஏனைய ஆராய்ச்சி சேவைகள் அல்லது கருவிகளின் உள்ளனவா?
உங்கள் பதிலை இணையுங்கள்
விக்கிப்பீடியா நூலகக் கிளையை இத்திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும் என்ற யோசனையை நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் பகிர விரும்பும் வேறு ஏதும் எண்ணங்கள், கருத்துக்கள், அல்லது குறிப்புக்கள உள்ளனவா?
உங்கள் பதிலை இணையுங்கள்
உங்களுக்கு உதவி தேவையா?
நீங்கள் உதவி செய்யவும் எவ்வாறு இதில் இடுபடலாம் எனவும் எங்களுக்குச் சொல்ல விரும்பினால், புகுபதிகை செய்யுங்கள்:
பக்கங்கள் அமைத்தல், நன்கொடை தேடல், அணுகல் விநியோக மேலாண்மை, மற்றவர்கள் ஆய்வு செய்ய உதவுதல், பேச அல்லது நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தல், கருவிகள் உருவாக்கல், அளவீட்டைத் தொடர்தல்...
விருப்பம், தமிழ் விக்கிப்பீடியாவில் 50% அதிகமான கட்டுரைகளில் மேற்கோள்கள் / சான்றுகள் / ஆதாரங்கள் போன்றவை இணைக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே, இத்திட்டத்தினை பயன்படுத்தி அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், கலாச்சாராம் போன்ற கட்டுரைகளுக்கு சான்றுகள் கிடைத்தால் பலனுள்ளதாக இருக்கும். 7-நாட்கள் இதற்காக அனைத்துப் பயனர்களும் ஒரு மாரத்தான் போன்று ஈடுபட்டால 20-30% கட்டுரைகளுக்கு ஆதாரங்கள் இணைக்கப்பட்டுவிடும். பிற பயனர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:44, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
விருப்பம் , சான்றுகள் கொண்ட விக்கிக்கட்டுரைகளைக் காண எனக்கும் ஆசைதான். விக்கிப்பீடியாவை நம்பமுடியாது என்று கேட்டு அலுத்துவிட்டது. சான்றுகளைச் சேர்க்கும் வகையில் ஒரு வாரம். :) அனைத்துப் பயனர்களும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கூட்டுமுயற்சி சான்று சேர்க்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தலாம். :) --♥ ஆதவன் ♥。◕‿◕。♀ பேச்சு ♀16:50, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
புதுப் பயனர் தடை தொடர்பாக
ஆலமரத்தடிப் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகள், நுட்ப விடயங்கள், கொள்கைகள், புதிய சிந்தனைகள், கலைச்சொற்கள், உதவிக் குறிப்புகள் போன்றவை உரையாடப் பயன்படுகின்றன. ஆகையால், இங்கு (பயனர் பேச்சு:AntanO ) நகர்த்தப்பட்டுள்ளது. --AntanO18:05, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
அவசியம் இது ஆலமரத்தடியில் உரையாடத்தக்க விடயம் என்பதால் தான் இங்கு தருகிறேன்.குறிப்பிட்ட பயனரின் பதில் திருப்தியளிக்காத பட்சத்தில் வேறு எங்கு முறையிடுவது என்று விளக்கவும்.
பயனர் தடைக்கு முன் அவருக்கு எச்சரிக்கப்பட்டதா? மீறி இவ்வாறு நடந்துகொண்டால் தடை செய்யப்படுவோம் என்று அவருக்கு தெரிவிக்கபட்டதா? (natural justice?). அவர் புதுப்பயனர் அல்ல என்று கூறுவதை ஆன்டன் தான் நிரூபிக்கவேண்டும்.
பதிப்புரிமை பிரச்சினைகளில் ஆங்கில விக்கியில் சொல்லியுள்ளபடி, நீக்கல் வார்ப்புரு, கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் விளக்கம் கோரவேண்டும், கால அவகாசம் தரவேண்டும். இவைகள் மீறப்படுகிறது. இது தொடர்பில் கொள்கைகள், வழிகாட்டுதல் என்ன?
அ, ஆ என்று அறுதியிட்டு முன்மொழிந்து கொள்கைகள் உருவாக்கப்படுவதில்லை. பிரச்சினைகளின் அடிப்படையிலும் கொள்கைகள் மேம்படுத்தபடலாம். கட்டுரைகளின் பேச்சுப்பக்கங்களில் கலந்துரையாடாமல் துப்புரவு என்று நீக்கம் செய்யும் போக்கு விக்கிக்கு நல்லதல்ல. -- மாகிர் (பேச்சு) 07:42, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நான் சுட்டுவது தனி ஒரு நிர்வாகியின் அணுக்கத்தை திரும்பப் பெறுவது தொடர்பானது அல்ல. பயனர் தடையில் நிர்வாகி தொடர்புபட்டிருந்தாலும், பதிப்புரிமை தொடர்பான எனது விவாதத்திலும் நடைமுறைகள் மேம்படுத்தப்படவேண்டும் என்பதும் தான் எனது முறையீடு. அதனால் தான் அவரது பக்கத்தில் உரையாடாமல் இங்கு உரையாட துவங்கினேன். -- மாகிர் (பேச்சு) 08:48, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நான் கூறியதும் நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல் தொடர்பாக அன்று. எந்தப் பயனர் தொடர்பிலும் மேற்கூறிய நடைமுறையைக் கடைப்பிடித்தல் நன்று. ஆலமரத்தடியில் இதனைக் கொண்டு வரவேண்டாம். --மதனாகரன் (பேச்சு) 09:20, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நேர்மறையான, வளர்முகமான தமிழ் விக்கிப்பீடியா நோக்கி
அண்மையில் பல்வேறு தமிழ் விக்கிப்பீடியர்களுடன் நேரிலும் தொலைப்பேசியிலும் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் தென்பட்ட சில முக்கியக் கூறுகளை முன்வைக்கிறேன்.
பலருக்கும் சான்று கோரல், பதிப்புரிமை மீறல், குறிப்பிடத்தக்கமை போன்ற பல்வேறு பராமரிப்பு வார்ப்புருக்கள் இடுவது கடும் உளைச்சலை அளிக்கிறது. குறிப்பாக, "கட்டுரை நீக்கப்படும்" என்ற சொற்றொடர்.
இவற்றில் பல வார்ப்புருக்கள் என்ன செய்தியைச் சொல்கிறது என்றே அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அல்லது, தங்கள் கட்டுரையில் ஏன் இது இணைக்கப்பட்டது என்று புரியவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டாக சிறப்பாகப் பங்களிக்கும் ஒரு பயனருக்கு நான் உடன் இருந்து இரு வார்ப்புருக்கள் குறித்து விளக்கிய பின்பே அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
பெரும்பாலும், நாம் பராமரிப்பு வார்ப்புருக்களையும் உதவிக் குறிப்புகளையும் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிபெயர்ப்பதால் ஒரு வறட்டுத்தன்மை நிலவுகிறது.
இவ்வாறு அதிருப்தியுற்ற பலர் தங்களுக்குள் பேசிக் கொள்வதால் புரிதல் இன்மையும் பயனர் சமூகத்தில் விரிசலும் கூடி வருகிறது. தவறான புரிதல் உடைய பலர் விக்கிப்பீடியர் சமூகத்துக்கு வெளியேயும் இத்தகைய பிழையான புரிதலையும் கசப்புணர்வையும் பரப்புவதால் நமது திட்டம் தொடர்பான நல்லெண்ணம் பாழாகி வருகிறது. குறைந்தபட்சம், அவர்கள் தங்கள் பங்களிப்புகளைக் குறைத்துக் கொள்வதும் நிறுத்திக் கொள்வதும் உடனடி தீவிளைவுகள்.
எந்த வகையில் பார்த்தாலும் இது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலத்துக்கு நல்லதன்று. இதனை எப்படி எதிர்கொள்வது என்று அனைவரின் கருத்துகளையும் நாம் எடுக்க வேண்டிய தக்க நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
பராமரிப்பு வார்ப்புருக்கள் இடுவோர் தங்கள் வழமையான துப்புரவுப் பணியையே செய்கிறார்கள். ஆனால், நாம் இடும் வார்ப்புருக்கள் தகவலைச் சரியாக கொண்டு செல்லும் வகையில் இவற்றைத் திருத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, எளிய சொற்களில், சுருக்கமாக, நேர்மறையாக, கனிவுடன் சொல்ல வேண்டி இருக்கிறது. மேற்கோள் இல்லை என்றோ போதவில்லை என்றோ நாம் எந்தக் கட்டுரையையும் அவ்வளவு இலகுவில் நீக்கி விடாத போது, "கட்டுரை நீக்கப்படும்" என்பது போன்ற மிரட்சியான சொற்றொடர்களை எடுத்த உடன் குறிப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
இப்பராமரிப்பு வார்ப்புருக்கள் கோரும் விசயங்கள் ஏன் விக்கிப்பீடியா இயக்கத்துக்கு அடிப்படையானவை என்பது குறித்த போதுமான புரிதல் பல பங்களிப்பாளர்களிடம் இல்லை. இவற்றை விளக்கி நேரடிப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாம்.
பராமரிப்பு வார்ப்புருவைக் கட்டுரையில் இட்டாலும் சரி, பயனர் பக்கத்தில் இட்டாலும் சரி இது கிட்டத்தட்ட ஒரு மானப்பிரச்சினையாகவே :) பார்க்கப்படும் நிலை உள்ளது. ஏன் தாங்கள் எழுதிய கட்டுரைகளில் (மட்டும்!) இடுகிறார்கள், அதே போன்ற வேறு சில கட்டுரைகளில் இட மாட்டேன் என்கிறார்கள் என்ற குழப்பம் இருக்கிறது. வார்ப்புரு இடுபவர்களே சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இவ்வாறான எதிர்பார்ப்புகளை அணுகுவது எப்படி?
நம்முடைய உதவிக் குறிப்புகள், செயற்பாடுகள் அனைத்தையும் ஒரு புதிய பயனரின் பார்வையில் இருந்து மீளாய்வு செய்து பயனர்களிடையே நல்லுறவு மேம்படுமாறு மாற்ற வேண்டிய தேவை உள்ளது.
இவை அனைத்தும் பெரும் பணிகள். படிப்படியாகச் செய்யலாம். ஆனால், உடனடியாகவேனும் சில இடங்களில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
அடிப்படையில் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே உழைக்கிறார்கள் என்பதால், இச்சிக்கலை எப்படி வளர்முகமாகத் தீர்க்கலாம் என்று சிந்திப்போம்.
ஆ.வி யில் Don't bite the newcomers என்பதை அழுத்தமாக வலியுறுத்துவார்கள். புதியவர்களுக்கு மட்டுமன்றி பழையவர்களுக்கு பராமரிப்பு வார்ப்புருகள் இடும் போது கூட இயன்றவரை (கட்டாயமாக:)) குறித்த பயனரின் மனதைப் புண்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில இடங்களில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் (எ.கா-"கட்டுரை நீக்கப்படும்") கடும் உளைச்சலை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கும் போதிலும் சில சமயங்களில் அவசியமாகிவிடுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் (குறிப்பாகப் பயனர் பேச்சுப் பக்கங்களில்) இத்தொடர்களை கனிவுடன் எடுத்துக்கூறும் வண்ணம் மாற்ற வேண்ட்டும். அதே வார்ப்புருவில் (அல்லது வார்ர்ப்புருவை இட்டதன் கீழ்) குறித்த பயனருக்கு உற்சாகமூட்டக்கூடிய / ஆறுதல்படுத்தக்கூடிய சொற்றொடர்களை இணைப்பது (கையாள்வது) பயனர்களுக்கிடையிலான நல்லுறவையும், கொள்கைத் தெளிவையும் ஏற்படுத்தும்.(பயனுள்ள இணைப்பு:Wikipedia:Assume good faith)--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}}13:12, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
அவதானிப்புகள் சரியானாகவே எனக்கும் படுகின்றன. சில பரிந்துரைகள்:
சில வார்ப்புருக்களில் தவிர, கட்டுரை நீக்கப்படும் போன்ற கடுமையான சொற்றொடர்களை மாற்றி எழுதல்.
வார்ப்புரு இடும் போது, கூடிய விளக்கத்தை பேச்சுப் பக்கத்தில் சேர்த்தல்.
ஒரு pattern தெரியும் போது, Shrikarsan சுட்டியது போன்று, உரையாடல் ஊடாக கணிவுடன் எடுத்துக்கூறல்.
ஒரு புதிய கொள்கையை அமுல்படுத்தும் போது, பழைய கட்டுரைகள் தொடர்பாக இளகிய தன்மையைக் கையாழுதல். ஒரு transition திட்டம் வைத்திருத்தல்.
வார்ப்புரு குறைப்பு போட்டிகளை நடத்தல்.
புறவயமான சீர்தரங்களை கூடுதலாக வைத்திருத்தல்: எ.கா மேற்கோள் இல்லை என்பது மேற்கோள் சரி இல்லை என்பதிலும் பார்க்க இலகுவான சீர்தரம். அதை அமுல்படுத்துவதை பெரும்பாலனவர்கள் ஏற்பர். அதே போன்று, குறைந்த பட்டம் உள்ளடக்கம் என்னும் போது, அதை ஒருவரின் தனிப்பட்ட மதிப்பீட்டுக்கு வைக்காமல், வசனங்கள் அல்லது பத்திகள்/வார்ப்புருக்கள்/மேற்கோள்கள் போன்ற சீர்தரங்கள் ஊடாக முன்வைத்தல்.
ஒருவருடைய பங்களிப்பு வீண் போகாமல் இருக்கும் வண்ணம் செயற்படுத்தல்.
மேற்கோள் சேர்ப்பதை இலகுவாக்கல் (மேற்கோள்களுக்கான ஒரு விக்கி தரவு)
சில விடயங்களுக்கு உறுதியான தீர்வு இல்லை, அது ஏற்புடையதே என்பதை தெளியவைத்தல்.
சில விடயங்களில் உங்களுக்கு ஏற்பு இல்லாத முடிவை விக்கிச் சமூகம் எடுக்கும், அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பொது இலக்குகள்/நல்நோக்கு/நட்பு ஊடாக வளர்த்தல். --Natkeeran (பேச்சு) 15:43, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நமது பார்வைக்கு சில:
தமிழ் விக்கிப்பீடியாவில் வார்ப்புருக்களை திருத்த வேண்டியதா என்பது குறித்து ஆலோசனை அவசியமாகிறது. ஏற்கனவே உள்ள Refimprove, Unreferenced போன்றவைகள் சரியான முறையில் உள்ளதாகவே கருதுகிறேன். விக்கிப்பீடியா பற்றிய அறிமுகத்தில் சான்றுகள் குறித்த அறிமுகம் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. ஒரு வருடமாக பங்களிக்கும் பயனர் சான்றுகள் குறித்து அறியாமலிருப்பது வியப்பளிக்கக்கூடிய ஒன்றே. அதிகமான தமிழ் விக்கிப்பீடியர்கள் தேவை எந்த அளவிற்கு அவர்கள் சரியான முறையான வழிகளை பின்பற்றுவதும் தேவையே. விக்கிப்பீடியாவின் புகழுக்கும் பெருமைக்கும் முக்கியக் காரணமே அவை உண்மையானவை, ஆதாரமுள்ளவை, நடுநிலையான கருத்துகளை உடயவை என்பதே. மிகக் குறைந்த எண்ணிக்கையில் கட்டுரை இருந்தாலும் அவை தரமுள்ளவையாக இருக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கட்டுரை நீக்கப்படும் என்ற வரி அவசியமே, புதியதாக கட்டுரை துவங்கும்போது அவை தவறான தகவலென்றால் நீக்கப்பட்டுவிடும் என்பது அவருக்கு தெரியவேண்டும். நம்பகத்தன்மையை உறுதிபடுத்துவதற்கு பல்வேறு விக்கிசமூகங்கள் உரிய கொள்கைகளை வரையறுத்துள்ளன. சமூகத்தின் தன்னார்வலர் எண்ணிக்கைக்கு ஏற்ப அவை மிகுந்த கடுமையான கொள்கைகளை கொண்டுள்ளனர்.
புதுப்பயனர்கள் பயனர் பெயர்வெளியில் கட்டுரை எழுத ஊக்குவிக்க வேண்டும்.
வழமையாக பங்களிக்கும் பயனர்கள், முறையாக சரிபார்த்து பொதுவெளிக்கு நகர்த்த வேண்டும்.
அனைத்து பயனர்களுக்கு சான்றுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சான்றுகள் குறித்த கொள்கைகள் வரையறுக்கப்பட வேண்டும்.
மேலே கூறிய இந்த நான்கு விசயங்களை பின்பற்றும் போது தமிழ் விக்கியின் தரத்திலும், புதுப்பயனர்கள் வருவதிலும் எந்த ஒரு தடையும் இருக்காது. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு இலட்சம் தன்னார்வலர்கள் இருக்கும் தருவாயிலும் இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதை செயற்படுத்துவது மிகவும் எளிது. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:25, 31 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்
//Translations of copyrighted text, even from other Wikimedia projects, are derivative works, and attribution must be given to satisfy licensing requirements.//
பிறமொழி விக்கிப்பீடியாக்களிலிருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்கும்போதும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றுதல் நன்று. உள்ளடக்க மொழிபெயர்ப்புக் (Content Translation) கருவியைப் பயன்படுத்தும்போது வருவது போல், புதிய கட்டுரையை உருவாக்கும்போது தொகுப்புச் சுருக்கத்தில் en:ஆங்கிலக் கட்டுரையின் பெயர் என்ற ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையிலிருந்து இப்பக்கத்திலுள்ள உள்ளடக்கம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; அக்கட்டுரையின் வரலாற்றில் ஆக்குநர்சுட்டைக் காண்க. என்பது போல் இடும்படியும் முன்பே உருவாக்கிய மொழிபெயர்த்த கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் {{Translated page}} என்ற வார்ப்புருவைப் (இவ்வார்ப்புருவைத் தமிழில் உருவாக்க வேண்டும்.) பயன்படுத்தும்படியும் கேட்டுக் கொள்கின்றேன். பார்க்க: en:Wikipedia:Copying_within_Wikipedia#Translating_from_other_language_Wikimedia_projects --மதனாகரன் (பேச்சு) 13:08, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
இத்தனை ஆண்டுகளாக நாம் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்தும், வேறு எந்த விக்கிப்பீடியா பங்களிப்பாளரோ பொறுப்பாளரோ சுட்டிக் காட்டாத ஒரு முக்கிய விடுபடலைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்பவே உங்களுக்கு ஒரு பதக்கம் காத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் பரிந்துரையை முற்றிலும் வழிமொழிவதோடு இது பதிப்புரிமைச் சட்டதின் படி இன்றியமையாத தேவை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். --இரவி (பேச்சு) 13:14, 25 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நான் இதுவரை உருவாக்கிய பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில விக்கியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டவையே. ஒவ்வொரு கட்டுரைக்கும் இது தேவையா ? அல்லது தானியங்கி மென்பொருள் மூலம் செய்யப்பட்டவைக்கு மட்டுமா ? மேலும் Translations of copyrighted text என்றுள்ளதால் ஓர் ஆங்கிலக்கட்டுரையில் இருந்து எடுக்கப்படும் Quote போன்ற காப்புரிமை உள்ள அடக்கங்களுக்கு மட்டுமா என தெளிவுபடுத்த வேண்டுகின்றேன். படிமங்களுக்கு இதனை தற்போது இடுகின்றேன்.--மணியன் (பேச்சு) 04:55, 27 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள் அனைத்துக்கும் இட வேண்டும். நியாயப் பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்ட காப்புரிமை உள்ள அடக்கங்களுக்கு (மேற்கோள்களைக் (Quote) குறிப்பிடுகின்றேன். படிமங்களுக்கு ஏற்கெனவே நியாயப் பயன்பாட்டு வார்ப்புரு இடும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.) மட்டுமென்றில்லை. கட்டற்ற உள்ளடக்கங்களுக்கும் மூலத்தைக் குறிப்பிட வேண்டும். மொழிபெயர்க்கப்பட்ட பழைய கட்டுரைகளுக்கு வார்ப்புரு இடுவதைத் துப்புரவுப் பணி போல் சிறிது சிறிதாகத் தொடர்ந்து செய்து வரலாம். --மதனாகரன் (பேச்சு) 09:56, 1 செப்டம்பர் 2015 (UTC)
2015 மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் புத்தகக் திருவிழாக்களில் முதன் முறையாக, மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழ் விக்கிப்பீடியாவிற்காக ஒரு அரங்கு திறக்கப்பட்டுள்ளது. 28, ஆகத்து 2015 அன்று மாலை, மதுரை புத்தகத் திருவிழா 2015 தொடங்கியது. 29 ஆகத்து 2015 முதல் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான அரங்கு திறக்கப்பட்டுள்ளது. பார்க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:01, 31 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
இந்த வாரம்- கலாரசிகன் - தினமணியில் வெளியான கட்டுரை ஒன்றில், விக்கிப்பீடியா அரங்கு குறித்தான ஒரு தகவல் வெளியாகியுள்ளது (பக்கத்தின் அடியில் உள்ளது; Zoom செய்து படிக்கவும்). - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:51, 6 செப்டம்பர் 2015 (UTC)
விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 08:43, 6 செப்டம்பர் 2015 (UTC)
பணத்துக்காக தகவல் கட்டுரைகள்
விக்கிப்பீடியாவில் பணத்துக்காக விளம்பரரீதியிலான தகவல் கட்டுரைகள் எழுதிய பலர் விக்கிப்பீடியாவில் தடை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் விக்கியில் அண்மைக்காலத்தில் இவ்வாறு யாராவது எழுதியுள்ளனரா? --Kanags\உரையாடுக 10:45, 2 செப்டம்பர் 2015 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் புதியதாக உருவாக்கப்படும் கட்டுரைகளுக்கு அடையாளங்கள் தானியக்கமாக அளிக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே புதிய பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகளில் சில அடையாளங்கள் இடப்பட்டு வருகிறது. இவற்றில் வெளி இனைப்புகள், சான்றுகள் இல்லாத கட்டுரைகளுக்கு அதற்கேற்ப அடையாளம் உருவாக்க எண்ணுகிறோம். இது குறித்து நானும் மதனாகரனும் உரையாடினோம். இதுகுறித்து பிறபயனர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறோம். நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:12, 2 செப்டம்பர் 2015 (UTC)
நல்ல முயற்சி. ஆனால் புதிதாக உருவாக்கிய கட்டுரைகளுக்கு ஒருவாரம் அல்லது சில காலம் கழித்து வார்ப்புரு இடுவது சரியாக இருக்கும். அதேபோல் ஏற்கெனவே மேற்கோள்கள் இல்லாமல் உள்ள கட்டுரைகளை கண்டறிந்து தானியக்கமாக /தானுலவி மூலமாக மேற்கோள் தேவை வார்ப்புரு இடுவதைப் பற்றியும் யோசிக்கலாம். -- Mdmahir (பேச்சு) 15:43, 2 செப்டம்பர் 2015 (UTC)
@Mdmahir: மேற்கூறிய அடையாளங்கள் தொகுப்புச் சுருக்கத்தில் வருபவை. மாகிர் கூறியது போல், விக்கிப்பீடியர்கள் ஆதரவு தெரிவித்தால் ஏற்கெனவே மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளுக்குத் தானியக்கமாக வார்ப்புரு சேர்த்து விட்டு, சான்று சேர்க்கும் விக்கி மாரத்தான் நடத்தலாம். @Dineshkumar Ponnusamy: இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அனைவரும் ஒரேயடியாகக் கட்டுரையை எழுதுவதில்லை. என்னைப் போல் படிப்படியாக எழுதுபவர்களும் உள்ளனர். இவ்வாறான கட்டுரைகளுக்குச் சான்றுகள், வெளியிணைப்புகள் போன்றன இல்லை என்றவாறு அடையாளத்தை இடுவதென்பது சிக்கலானதாகும். வெளியிணைப்புகள், சான்றுகள் போன்றவற்றைச் சேர்க்கும்போதும் நீக்கும்போதும் வர வேண்டிய தொகுப்புச் சுருக்கத்தைப் பற்றிக் கூற வந்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 09:09, 3 செப்டம்பர் 2015 (UTC)
மதனாகரனும் நடைமுறைச்சிக்கலை கலையவே இந்த முயற்சி, ஒரு <ref></ref> கூட இல்லாத கட்டுரைகளில் அடையாளத்தில் சான்று/மேற்கோள் இல்லை என்ற குறிப்பை நிறுவினால் (வார்ப்புரு தற்போதைக்குத் தேவையில்லை), கட்டுரையை மேற்பார்வையிடுபவர்கள் சான்று சேர்க்கவோ கூறவோ இயலும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளிலும் ஒரு <ref></ref> கூட இல்லாத கட்டுரைகளை ஒரு பகுப்பில் இட்டுவிட்டால் சான்று சேர்க்கும் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திவிடலாம். ஒன்று அல்லது இரண்டு பயிற்சிப்பட்டறைகள் இது குறித்து நடத்தப்பட்டால் அனைத்துக் கட்டுரைகளிலும் சான்று சேர்த்து விடலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:54, 3 செப்டம்பர் 2015 (UTC)
தொகுப்புச் சுருக்கத்தில் இடுவதை விட, சான்றில்லாக் கட்டுரைகளுக்குத் தானியக்கமாக வார்ப்புரு இடலாம். தானியக்கமாக இடுவதில் உடன்பாடில்லாவிடின், ஒரு தனிப்பக்கத்தில் சான்றில்லாக் கட்டுரைகளின் பட்டியலைத் தானியங்கி மூலம் வரிசைப்படுத்தி, இற்றைப்படுத்தலாம். ஆனால், பின்னைய வழிமுறையில் தேவையில்லாமல் வலு விரயமாக்கப்படும். இது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படக்கூடியது என்பதும் சிக்கலானது. --மதனாகரன் (பேச்சு) 14:12, 7 செப்டம்பர் 2015 (UTC)
Introducing the Wikimedia public policy site
Hi all,
We are excited to introduce a new Wikimedia Public Policy site. The site includes resources and position statements on access, copyright, censorship, intermediary liability, and privacy. The site explains how good public policy supports the Wikimedia projects, editors, and mission.
தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் எழுத்துக்களை பயன்படுத்த முயற்சிக்கலாமா? (தேங்க்சு கட்டுரையில் தமிழில் எண்களை குறிப்பிட்டிருந்தேன்.) இதுகுறித்து ஏதேனும் கொள்கை முடிவுகள் எடுக்க ஏற்கனவே முயற்சிகள் நடந்துள்ளனவா? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:56, 3 செப்டம்பர் 2015 (UTC)
நாம் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தவே முன்னிற்பதில்லையே. இது குறித்து ஏற்கெனவே உரையாடியதாய் நினைவு. இணைப்பை இடுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 17:24, 3 செப்டம்பர் 2015 (UTC)
நிதி, பொருளாதாரம், இராணுவம், இருதரப்பு உறவுகள் தொடர்பான கட்டுரைகள்
1997 ஆசிய நிதி நெருக்கடி என்னும் கட்டுரை துவங்கிய போது கவனிக்க நேர்ந்தது, தவியில் நிதி, பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகள் மிகவும் குறைவாக இருப்பதாக உணர்கிறேன். அதுபோல் பல்வேறு நாட்டு இராணுவம் தொடர்பான கட்டுரைகள், இருநாட்டு, இருதரப்பு உறவுகள் தொடர்பான கட்டுரைகள் போன்றவை மிகவும் குறைவு அல்லது இல்லை. கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். --Mdmahir (பேச்சு) 15:34, 4 செப்டம்பர் 2015 (UTC)
இவ்வாங்கிலப் பகுப்புக்களின் கீழ் உள்ள பக்கங்களை உருவாக்கலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:41, 4 செப்டம்பர் 2015 (UTC)
Open call for Individual Engagement Grants
My apologies for posting this message in English. Please help translate it if you can.
Greetings! The Individual Engagement Grants program is accepting proposals until September 29th to fund new tools, community-building processes, and other experimental ideas that enhance the work of Wikimedia volunteers. Whether you need a small or large amount of funds (up to $30,000 USD), Individual Engagement Grants can support you and your team’s project development time in addition to project expenses such as materials, travel, and rental space.
வணக்கம். நாம் அனைவருமே நம்மால் முடிந்ததை தமிழுக்கும், தமிழ் விக்கிபீடியாவிற்கும் செய்ய வேண்டும் என்று தன்னார்வலர்களாக வந்தவர்களே. எனவே, அனைவரும் தயவு செய்து பொறுமையாக உரையாடுங்கள். நாம்தான் நம் இளையத் தலைமுறைக்கு எடுத்துகாட்டுகளாகத் திகழ வேண்டும். இங்கு நாம் பதிவிடுவதை அனைவரும் படிக்கிறார்கள். எனவே, யாரும் உணர்ச்சிவயப்படாதீர்கள். அனைவரும் ஒன்று கூடி பங்களிப்போம். அனைவரும் அமைதி கொள்ளுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 05:03, 11 செப்டம்பர் 2015 (UTC)
விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 10:23, 11 செப்டம்பர் 2015 (UTC)
தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி
விக்கிமீடியா அறக்கட்டளை உதவியுடன் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான முன்மொழிவினை இட்டுள்ளேன். அனைவரும் கண்டு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏதேனும் கருத்துகள் இருந்தால், அவற்றையும் தொகுத்து, வாக்கெடுப்பு முடிந்தவுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விக்கிமீடியா அறக்கட்டளைக்கு அனுப்பி வைப்போம். நன்றி.--இரவி (பேச்சு) 16:28, 16 செப்டம்பர் 2015 (UTC)
New Wikipedia Library Database Access (September 2015)
Hello Wikimedians!
The TWL OWL says sign up today!
The Wikipedia Library is announcing signups today for free, full-access accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for new accounts and research materials from:
EBSCOHost - this is one of our largest access donations so far: access to a wide variety of academic, newspaper and magazine sources through their Academic Search Complete, Business Source Complete and MasterFILE Complete
Newspaperarchive.com - historical newspapers from the United States, Canada, UK and 20 other countries, and includes an Open Access "clipping" feature (1000 accounts)
IMF Elibary- a digital collection of the IMF's reports, studies and research on global economics and development (50 accounts)
Sabinet - one of the largest African digital publishers, based in South Africa, with a wide range of content in English and other European and African languages (10 accounts)
Numérique Premium - a French language social science and humanities ebook database, with topical collections on a wide range of topics (100)
Al Manhal - an Arabic and English database with a wide range of sources, largely focused on or published in the Middle East (60 accounts)
Jamalon - an Arabic book distributor, who is providing targeted book delivery to volunteers (50 editors)
We need help! Help us coordinate Wikipedia Library's distribution of accounts, communication of access opportunities and more! Please join our team at our new coordinator signup.
Only one week left for Individual Engagement Grant proposals!
(Apologies for using English below, please help translate if you are able.)
There is still one week left to submit Individual Engagement Grant (IEG) proposals before the September 29th deadline. If you have ideas for new tools, community-building processes, and other experimental projects that enhance the work of Wikimedia volunteers, start your proposal today! Please encourage others who have great ideas to apply as well. Support is available if you want help turning your idea into a grant request.
படிமங்களின் பதிப்புரிமை பற்றிய விழிப்புணர்வு இங்கு போதியளவு இல்லை என்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. "முன்னர் பழக்கப்பட்ட" முறையில் பல படிமங்கள் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் அவை எல்லாம் சரியானவையா என்பதை மீளாய்வுக்குட்படுத்துவது நன்று. இது தொடர்பில் நான் அவதானித்தவற்றின் சுருக்கம் பின்வருமாறு:
சொந்தமாக உருவாக்காத படிமங்கள் எல்லாமே பதிப்புரிமை அற்றவை என்பது பலருக்கும் தெரியும். அதேவேளை இன்னொருவரின் படிமத்தை நியாயப் பயன்பாட்டின் கீழ் பதிவேற்றல் அல்லது சொந்தத் படைப்பாகப் பதிவேற்றுவதும் பதிப்புரிமை மீறலே.
பிளிக்கர் போன்ற தளத்தில் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் அடிப்படையில் பதிவேற்றப்பட்டிருந்தாலும், உண்மையில் அப் படிமத்தின் உண்மையான உரிமையாளர் வேறு ஒருவராக இருக்கலாம். ஆகவே இவ்வாறான படிமங்களை பதிவேற்றுவதும் பதிப்புரிமை மீறலாகும்.
நியாயப் பயன்பாடு எல்லா இடத்திலும் சரியாகாது. படிமத்தின் வகை, தன்மை, குறித்த நாட்டின் பதிப்புரிமைச் சட்டம் என்பன இங்கு பார்க்கப்பட வேண்டும். பல படிமங்கள் நியாயப் பயன்பாடு என்பதன் கீழ் பதிவேற்றப்பட்டிருப்பினும், அவற்றை மீளாய்வுட்படுத்துவது நன்று.
நியாயப் பயன்பாடு படிமங்கள் கட்டாயம் சரியான மூலத்தைக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிடின் மூலத்தை இணைக்க குறித்தகால அவகாசம் கொடுத்து, சரியாயின் பயன்படுத்தலாம் அல்லது நீக்கப்படலாம்.
"இப்படிமத்தைப் பயன்படுத்து அவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்" போன்ற குறிப்புக்கள் ஆதரமற்றவை. Open-source Ticket Request System என்ற முறையூடாக இதனைச் செய்யலாம். நான் அறிந்த வரை தமிழ் விக்கியில் இது தொடர்பான செயற்பாடு இல்லை. ஆகவே, பொதுவகத்தை அல்லது மேல் விக்கியை அணுக வேண்டும்.
சொந்தப் படிமமாய் இருப்பினும் "தேவையில்லாவிட்டால்" இங்கு பதிவேற்ற முடியாது. பல படிமங்கள் சோதனை முயற்சியாக, நோக்கம் பற்றியும் பதிப்புரிமை பற்றியும் விழிப்புணர்வின்றி பதிவேற்றப்பட்டுள்ளன.
என்ன செய்யலாம்?
பதிப்புரிமை மீறல் படிமங்கள் நீக்கப்பட வேண்டும். இதற்கு சுற்றுக்காவல் செய்வோரும் வார்ப்புரு இட்டு உதவலாம்.
சரியான வார்ப்புருக்களை இணைக்கலாம்.
பொதுவகத்திற்கு படிமங்களை நகர்த்தி பரவலான பயன்பாட்டிற்கு உதவலாம்.
முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இது குறித்து ஆவன செய்ய வேண்டும்.--Kanags\உரையாடுக
விருப்பம்--மணியன் (பேச்சு) 06:20, 24 செப்டம்பர் 2015 (UTC)
விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:39, 24 செப்டம்பர் 2015 (UTC)
மென்பொருள் சுதந்திர தினம் 2015 - தமிழ் விக்கிப்பீடியா
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு ஒரு தன்னார்வ அமைப்பு.இவ்வமைப்பு 2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் கட்டற்ற மென்பொருள் பற்றிய பல நிகழ்வுகளில் பங்கு கொள்கிறது , நடத்தி வருகிறது .இந்த ஆண்டு மென்பொருள் சுதந்திர தினம் சென்னையில் தமிழ் நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் சார்பாக LICET - நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
பல்வேறு கடைகள் இந்த நிகழ்வில் உள்ளன.அந்த தினத்தன்று தமிழ் விக்கிப்பீடியா சார்பாக ஒரு கடையை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Come read about the findings and next steps as WMF’s Community Resources team begins to implement changes based on your feedback. Your questions and comments are welcome on the outcomes discussion page.
First of all, my apologies for writing in English. I know nothing about reading/writing Tamil. I would love it if someone can translate the following and/or move this message to a more appropriate page, if applicable.
I have proposed an individual project here to increase awareness of and participation in Tamil wikipedia content (among other Indic languages) creation by a very resourceful segment of the population. I will appreciate it if you review it, give feedback and/or endorse my proposal.