விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு114அனைத்துலக அளவீடுகளைக் குறிக்க ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா?![]() பல கட்டுரைகளில் சர்வதேச அலகுகளுக்கான குறியீடுகள் தமிழில் மாற்றப்பட்டு உள்ளன. உதாரணமாக கேண்டெலா என்ற கட்டுரையில் சர்வதேச அலகுகளென சில தமிழ்ச் சொற்கள் அல்லது குறியீடுகள் உள்ளன. இவை பொருத்தமற்றவை எனவே எண்ணுகின்றேன். ஏனெனில் சர்வதேச அலகுகள் என்பன அனைத்துப் பிரதேசத்திலும் ஒன்றாகவே இருக்க வேண்டும். இது பற்றிய பிரதான கட்டுரையிலும், மறை வெப்பம் போன்ற கட்டுரைகளிலும் இத்தவறுகள் உள்ளன. உதாரணமாக கேண்டலா கட்டுரையில் Cd எனக் குறிப்பிடாமல் கேண்டா என உள்ளது. சர்வதேச விதி முறைகளை மாற்றியமைக்க எமக்கு அதிகாரமில்லை. இங்கு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேன் என எண்ண வேண்டாம். ஆங்கில மொழி கூட உயிரினங்களின் சர்வதேசப் பெயர்களை இலத்தீனிலேயே வைத்துள்ளது. எனவே நாமும் சர்வதேச விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்க முடியாதோருக்காக தமிழில் அக்குறியீடுகளுக்கான பேச்சுப் பிரயோகத்தை இணைத்து விடலாம். இக்கட்டுரைகளில் சர்வதேசக் குறிச்சொல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளவை ஆங்கில உச்சரிப்பின் தமிழ் வடிவமாகவே உள்ளது. எனவே இவற்றை சர்வதேச விதிக்கமைய மாற்றுவதில் தவறேதுமில்லை என்றே எண்ணுகின்றேன். எனவே இது பற்றி ஒரு தீர்க்கமான முடிவொன்றை எட்ட வேண்டியது மிகவும் அவசியம். அடுத்த விடயம் கூகில் தமிழாக்கக் கட்டுரைகள் பற்றியது. இவற்றில் சில பின்னாளில் திருத்தப்பட்டவற்றைத் தவிர ஏனையவை வாசிக்க முடியாதபடி உள்ளன. எனவே சூரியக் குடும்பம் போன்ற திருத்தப்பட்ட கட்டுரைகளைத் தவிர ஏனையவற்றின் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கி புதிதாகத் தொடங்குவது நன்றாயிருக்கும் என எண்ணுகின்றேன்.--G.Kiruthikan (பேச்சு) 04:05, 27 சனவரி 2014 (UTC)
ஆமாம்!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:09, 27 சனவரி 2014 (UTC) அனைவரும் அறிந்திராத அனைத்துலக முறை அலகுகள் ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் தரப்பட வேண்டும். மீட்டர் போன்ற அனைவரும் அறிந்த அலகுகள் தமிழிலேயே தரப்படலாம் என எண்ணுகிறேன். ஆங்கிலப் பெயரைத் தமிழில் மாற்றுவோர் அருள்கூர்ந்து அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தைத் தரவும். கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் பயனர்கள் தத்தெடுத்துத் தங்கள் பயனர் வெளியில் வைத்திருந்து முழுவதும் திருத்திப் பின்னர் மூலக்கட்டுரையை நீக்கிவிட்டுத் தங்கள் பெயரில் பதிவேற்றும் நடைமுறை முன்னர் இருந்தது. தங்கள் பெயர் தேவையில்லை என்று நினைப்போர் அப்படியே இணைத்து விடலாம்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 10:24, 27 சனவரி 2014 (UTC) அப்படியென்றால் அடைப்புக்குள் ஆங்கிலப் பெயரை இட்டு விடுவோம். இலங்கையில் எவ்வாறென்று உறுதியாகக் கூற இயலாது. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு விதமாக உள்ளன. எனவே இரண்டு வகையான குறியீட்டையும் இடுவதே நல்ல முடிவென நினைக்கின்றேன்.--G.Kiruthikan (பேச்சு) 12:13, 27 சனவரி 2014 (UTC)
சாதாரண தரத்தின் பின்னர் பெறுபேற்றுக்காகக் காத்திருக்கின்றேன். நான் சாதாரண தரத்தை ஆங்கில மொழியிலேயே கற்றேன். எனினும் தற்போது உயர்தர வகுப்புகளில் தற்போது படித்த மட்டும் எந்த ஒரு தமிழ்க் குறியீடும் கற்பிக்கப்படவில்லை. எனினும் தமிழ் மொழி மூல சாதாரண தர விஞ்ஞானப் புத்தகத்தில் இவ்வாறான முறையே உள்ளது:- ![]() --G.Kiruthikan (பேச்சு) 03:51, 29 சனவரி 2014 (UTC) அனைத்துலக முறை அலகுகளை உரோமன் எழுத்திலே கொடுக்கவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. உரோமன் எழுத்துமுறையைக் கொள்ளாதவர்கள் தங்கள் மொழி எழுத்துகளில் தரலாம். செல்சியசு என்பதையும் செண்டிகிரேடு என்பதையும் °C என்றுதான் குறிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துபவர்கள் உண்டு. °செ என்று எழுதுவதில் பிழை இல்லை. உருசிய மொழியைப் பாருங்கள். அவர்கள் சிரிலிக்கு எழுத்தில் எழுதும் வழக்கம் கொண்டிருக்கின்றார்கள். சீனர்களும் கிலோமீட்டர் என்பதை 千米 (சியான் மீ; 千 = சியான் என்றால் ஆயிரம், 米 என்றால் மீ (மீட்டர் என்னும் அளவு)). என்று குறிக்கின்றார்கள். சாலைகளில் எழுதுவதைக் கொண்டு ஒரு முடிவுக்கு வர இயலாது. கிலோமீட்டர் என்பதற்கு ஈடான சீனமொழி விக்கிப்பக்கத்தைப் பாருங்கள். --செல்வா (பேச்சு) 02:48, 26 பெப்ரவரி 2014 (UTC) கட்டுரை இல்லாத பேச்சுப்பக்கங்களை நீக்கலாமா?பேச்சு:அப்பளம் தயாரிப்பு போன்ற கட்டுரை இல்லாத பேச்சுப்பக்கங்களை (முதன்மைப்பெயர் வெளியில் மட்டும்) தானியங்கி கொண்டு நீக்கலாமா? இதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா? இதுகுறித்து முன்னரே ஒருவர் கேட்டது நினைவில் இருக்கின்றது. அதுகுறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 02:53, 25 பெப்ரவரி 2014 (UTC)
இதனை சரிபார்த்து நீக்கவோ அல்லது நகர்த்தவோ வேண்டுகின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:39, 25 பெப்ரவரி 2014 (UTC)
நூல்கள் தொடர்பாக குறிப்பிடத்தக்கமை
--Natkeeran (பேச்சு) 13:47, 24 மார்ச் 2014 (UTC) unrefernece வார்ப்புருதூக்கம் (விலங்கியல்) போன்ற பொதுக் தகவல்கள் கண்ட கட்டுரைகளுக்கு, குறிப்பாக பிறமொழி இணைப்புக் கொண்ட கட்டுரைகளுக்கு unrefernece என்ற வார்ப்புரு தேவையா என்று தெரியவில்லை. மேற்கோள்களை முறைப்படி சேர்க்கும் வழக்கு தமிழ் விக்கியில் உருவாக வேண்டும் என்ற உங்கள் அவா புரிகிறது. இதை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று விரிந்து பார்க்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 18:50, 16 மார்ச் 2014 (UTC)
தினேசு, தானியங்கி மூலம் வார்ப்புரு இடல் குறித்து பயனர்கள் கலந்துரையாடிய பின் கொள்கை முடிவு எட்டப்பட வாய்ப்புண்டு. அறியாமை, அனுபவமின்மை, சோம்பல், நேரமின்மை, பிற பயனர்கள் செய்து விடுவார்கள் என்ற எண்ணம் போன்ற காரணங்களால் மேற்கோள்கள் தரப்படாமல் இருக்கலாம். மேற்கோள் தேவை வார்ப்புருவைக் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இடலாம் என எண்ணுகிறேன். கட்டுரைப் பக்கத்தில் இடுவதால், விக்கியரல்லாத வெளியாட்களின் பார்வையில் தமிழ்விக்கியின் நம்பகத்தன்மையைக் குறைக்குமோ என்று தோன்றுகிறது. மற்றப் பயனர்களின் கருத்துரை தேவை. நன்றி.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 06:17, 18 மார்ச் 2014 (UTC)
மன்னிக்கவும். குறிப்புத் தர மறந்துவிட்ட்னே. வார்ப்புரு இடுவதனினால் மேற்கோள்கள் தானாக இணைக்கப்படப்போவதில்லை. அவ்வாறு வார்ப்புரு இடுவதன் நோக்கங்கள், பலன்கள், பக்க விளைவுகள் எவை என்று பார்க்க வேண்டும். நோக்கங்கள்/பலங்கள்
பாதிப்புகள்
எமது நோக்கம், நெடுங்கால பயனர்கள் அனைவரும் தகுந்த மேற்கோள்களைச் சேர்ப்பதை வழமையாக கொள்ளல். எப்படிச் செய்யலாம்:
மேற்சுட்டிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். வார்ப்புரு இணைப்பதுவே சிறந்த வழிமுறை என்று கருதினால், சிறிய வார்ப்புருவாக, பக்கத்தின் அடிப் பக்கத்தில் சேர்த்தல். --Natkeeran (பேச்சு) 02:16, 20 மார்ச் 2014 (UTC) விக்கிப்பீடியா:கொள்கை வகுத்தல் வழிகாட்டல்
விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவை - கேள்விக்கு உட்படுத்தல்பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கவை --Natkeeran (பேச்சு) 17:10, 24 மார்ச் 2014 (UTC) வலைத்தளங்கள்கிறிஸ்தவ இணைப்பகம், கிறிஸ்தவ திரட்டி, பைபிள் அங்கிள் அருட்பனி ஊடகம் இவ்வாறான வலைத்தளங்கள் மட்டில் எப்படி செயற்படுவது? கட்சிக்கும், சமய நிலையங்களுக்கும் என இருக்கும் வலைத்தளங்களை தனிக் கட்டுரையாக அனுமதிக்கலாமா? இவ்வாறான வலைத்தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனவே? இவற்றை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --AntonTalk 19:33, 4 ஏப்ரல் 2014 (UTC)
பதிப்புரிமை மீறல்பயனரின் பதிப்புரிமை மீறல் குறித்த தெளிவற்ற தன்மையினால் இங்குள்ள ஏறக்குறைய எல்லா படிமங்களும் (1300+) பதிப்புரிமை மீறலைக் கொண்டிருக்கின்றன. என்ன செய்யலாம்? --AntonTalk 16:41, 8 ஏப்ரல் 2014 (UTC)
--Natkeeran (பேச்சு) 16:43, 8 ஏப்ரல் 2014 (UTC) இது தொடர்பாக பயனர் பதில் தந்துள்ளமையால் ஒரு கட்டுரைக்கு ஒரு நியாயப் பயன்பாட்டுப் படிமத்தை ஏற்று மற்ற பதிப்புரிமை தெளிவில்லாத படிமங்களை நீக்கலாம். --இரவி (பேச்சு) 10:54, 13 ஏப்ரல் 2014 (UTC) விளக்கத்திற்காகஇரவி, நீங்கள் சான்றிதழ் தொடர்பில் கேட்ட கேள்விக்கு பலருக்கும் பயன்படும் என்ற வகையில் இங்கு பதிலளிக்கிறேன். இவற்றைப் பாருங்கள்:
இவ்வாறான பல நுணுக்கமாக சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதனால்தான், ஆ.வி பழைய முறையிலான பதிவேற்றத்தை மாற்றீடு செய்துள்ளது. சொந்தமில்லாத படிமங்களை பதிவேற்ற முடியாதவாறு ஆ.வி.யின் புதிய முறை செயற்படுகின்றது. நியாயப் பயன்பாட்டுப் படிமம் கூட முன்புபோல் பதிவேற்ற முடியாது. கட்டாய உள்ளீடுகளை வழங்காதவரை பதிவேற்ற முடியாது. அதன்பின் பின் நிர்வாகி "உகந்தது" என்று குறிக்காத வரை நீக்கப்படலாம். File Upload Wizard - இந்த முறை இங்கு இல்லாததும், பதிப்புரிமை பற்றிய விழிப்புணர்வு இன்மையும் படங்களை இங்கு குவிய வைக்கிறது. த.வி.யாது ஆ.வி போல் வளராவிட்டாலும் சட்டம் தொடர்பில் அவதானமாக இருப்பது நல்லதே. --AntonTalk 13:02, 13 ஏப்ரல் 2014 (UTC) அன்டன், விளக்கத்துக்கு நன்றி. சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறதே என்பதே ஆதங்கம். இது எந்த வகையிலும் படைப்பூக்கத்தையும் சுதந்திரத்தையும் அளிப்பதாக இல்லை. இது தொடர்பாக https://en.wikipedia.org/wiki/Free_Culture_%28book%29 என்ற நூலைப் படிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பிட்ட சான்றிதழைப் பொருத்தவரை, அந்த வடிவமைப்புக்கு உரிமையுள்ள தமிழக அரசு விக்கிமீடியாவின் மீது வழக்கு தொடுக்கும் வாய்ப்பு எல்லாம் மிகவும் குறைவு என்பதால், அதனை நியாய பயன்பாட்டுப் படிமமாக ஏற்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:52, 14 ஏப்ரல் 2014 (UTC)
கைப்பாவைகள் குறித்த கொள்கையில் சேர்க்கைபார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:கைப்பாவை#கைப்பாவையின் பேச்சுப் பக்க உரையாடல்கள் பற்றிய கொள்கை. --இரவி (பேச்சு) 10:57, 13 ஏப்ரல் 2014 (UTC) வெளியிணைப்புகள் குறித்த கொள்கையில் சேர்க்கைபார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:வெளி இணைப்புகள்#மேற்கோள்கள், உசாத்துணைகளில் வணிக வெளியிணைப்புகளைத் தவிர்த்தல்--இரவி (பேச்சு) 11:04, 13 ஏப்ரல் 2014 (UTC) நூல்கள் குறித்த குறிப்பிடத்தக்கமை வழிகாட்டல் உரையாடல்பார்க்க: பகுப்பு பேச்சு:நூல்கள்--இரவி (பேச்சு) 11:29, 13 ஏப்ரல் 2014 (UTC) துடுப்பாட்டக்காரர்கள் குறித்த குறிப்பிடத்தக்கமை வழிகாட்டல் உரையாடல்பார்க்க: பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள்--இரவி (பேச்சு) 12:32, 13 ஏப்ரல் 2014 (UTC) ஒருகிழமைக் கொள்கை அமுலாக்கம்ஒரு பரிந்துரை முன்வைக்கப்படுகிறது. அப் பரிந்துரைக்கு எக் கருத்தும் 1 கிழமைக்குள் கருத்துக் கூறாது விடத்து அப் பரிந்துரை அமுலாகிவிடும். ஒரு கிழமை என்பது மிகவும் குறைவான காலம். தொடர்ந்து செயற்படும் பயனர்கள் கூட ஒவ்வொரு கிழமையும் விக்கியைப் பார்ப்பார் என்று கூற முடியாது. குறைந்தது 2 கிழமைகள் அவகாசம் வேண்டும். சிக்கலான விடயங்களுக்கு மேலும் கூடிய அவகாசம் தேவைப்படலாம். --Natkeeran (பேச்சு) 18:28, 13 ஏப்ரல் 2014 (UTC)
எடுத்தவுடன் எல்லாவற்றையும் ஆலமரத்தடியில் குவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ் விக்கிப்பீடியா வளர வளர எண்ணற்ற உரையாடல்கள் பெருகும் போது இது சிக்கல் ஆகும். அண்மைய மாற்றங்கள், கவனிப்புப் பட்டியல் ஆகியவற்றை இன்னும் திறம்பட பயன்படுத்த பயனர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். என்னைப் பொருத்த வரை, எத்தனை நாட்கள் கழித்து வந்தாலும் அண்மைய மாற்றங்களில் பேச்சுப் பக்க பெயர் வெளிகளை மட்டும் தெரிவு செய்தும், விக்கிப்பீடியா பெயர்வெளியைத் தெரிவு செய்தும் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வேன். எனினும், உங்கள் வேண்டுகோளை ஏற்று கொள்கை உரையாடல்களை முதலிலேயே இங்கு தெரிவித்து விடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:47, 14 ஏப்ரல் 2014 (UTC) Deletionism and inclusionism in Wikipedia - தமிழ் விக்கியில் வலுப்பெறும் நீக்கல் இயக்கம்In 2009, Wikipedia began to see a reduction in the amount of edits to the site, which some called a result of user frustration due to excessive deletionism.[1] இக் கட்டுரையைப் பாருங்கள்: en:Deletionism and inclusionism in Wikipedia. அண்மைக் காலமாக, தமிழ் விக்கியில் நீக்குவோர் இயக்கம் வலுப்பெற்று வருகிறது. காப்புரிமை விடயங்கள் மீறப்பட்டவையோ, வணிக/பிரச்சார நோக்கிலான உள்ளடக்கங்களை நீக்குவதையோ இங்கு நான் குறிப்பிடவில்லை. குறிப்பிடத்தக்கமை என்பதன் நுணுக்கங்களை அறிந்து விக்கியர்கள் செயற்படாவிடால், தமிழ் விக்கி அரும்பிலேயே பெரும் பின்னடைவைச் சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். அச்சில் வெளிவந்த ஆக்களின் அடிப்படையில் மட்டும் தமிழ்க் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்று கூறினால், பல விழிம்புநிலைத் தலைப்புகளை நாம் தொட முடியாது. பல அழியும் கலைகளைப் பற்றி கட்டுரைகள் எழுத முடியாது. ஆங்கில சூழல் போல் அன்றி. தமிழ்ச் சூழலில் நிகழும் ஒட்டுமொத்த சினிமா ஆதிக்கத்தைத் தாண்டி படைப்புகள் தொடர்பாக நாம் விரிவான பதிவுகளையும் செய்ய முடியாது. எந்த ஒரு மொக்கைப் படம் என்றாலும் பத்து வலைத்தளங்களில் விளம்பரங்கள் மதிப்பீட்டுரை என்ற பெயரில் வரும். அவற்றை "ஆதாரங்களாகக்" கொண்டு எந்த ஒரு தமிழ்ப் படத்துக்கும் ஒரு கட்டுரை எழுத முடியும். ஆனால் பிற தலைப்புகளில் அப்படிச் செய்ய முடியாது. எ.கா தமிழ் ராப். ஒரு தமிழ் நூல், ஆய்வுக் கட்டுரை கிடைக்குமா. ஆகத் தோண்டினால் சில வலைப்பதிவுகள் கிடைக்கும். வலைப்பதிவுகளை மேற்கோளாகக் காட்டுவதும் அவ்வளவு விரும்பப்படுவது இல்லை (இது கூட தமிழ்ச் சூழலுக்கு பொருந்தாத ஒரு வழிகாட்டலே. தமிழில் பேராசியர்கள், எழுத்தாளர்கள் கூட வலைப்பதிவுகள்தான் வைத்துக்கின்றார்கள். அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் கூட வலைப்பதிவுகளில்தான் கிடைக்கிறது.) ஆனால் தமிழ் ராப் இல்லையா? அக் கலைஞர்கள், அவர்களின் படைப்புகள் பற்றி குறுங்கட்டுரைகள் அமைவது தவறா? நான் குறிப்பிடத்தக்கமையை யார் வரையறை செய்வது என்ற அரசியல் நிறைந்த வாதத்துக்குள் போகவே இல்லை. ஒரு தலைப்பில் மிக நீண்ட கட்டுரை இருப்பதால், அது முக்கியமானது என்றோ, ஒரு குறுங்க் கட்டுரை இருப்பதால் முக்கியம் இல்லை என்றோ எப்படி முன்முடிவு செய்ய முடியும். மஞ்சரி (கனடா இதழ்) என்ற கட்டுரையை எடுத்துக் கொள்வோம். அது ஒரு குறுங்கட்டுரை. பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. சான்று இல்லை என்பது நியாமான விமர்சனம். ஆனால் அது முக்கியத்துவம் இல்லை என்று தீர்க்தரசி மாதிரி முடிவுசெய்து, எல்லாவற்றையும் ஒரு நீண்ட பட்டியலில் சேர்த்தல் பொருத்தமானதா? தமிழ் விக்கியையே ஏன் நாம் ஒரு நீண்ட பட்டியலாத் தொகுக்க முடியாது. யாரும் இது முக்கியம் இல்லை என்று எளிதில் வார்ப்புரு சேர்த்துவிடலாம். ஏன் என்றா முக்கியம் என்று நிறுவுவதற்கான முழும் பொறுப்பும் கட்டுரையாளரைச் சார்கிறது. "நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்" (beyond a reasonable doubt) சான்றுகள் இருந்தால் மட்டுமே கட்டுரையைத் தொடங்குகள் போன்று அறைகூறுவது ஆங்கில விக்கிக்கும் சரிவராது. சிறிய விக்கியான தமிழ் விக்கிக்கு நிச்சியம் சரிவராது. ஆங்கில விக்கியில் குறிப்பிடத்தக்கமை உண்மையில் சரிவர நிறைவேற்றப்படுகிறதா. இல்லை. எ.கா பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள். அது எப்படி அந்தளவு மிகச் சீரிய, உயரிய கொள்கைகளை நூல்களுக்கு வைத்துக் கொண்டு, திரைப்படத்துக்கு மிகவும் அடிமட்டமான சீர்தரத்தைக் கொண்டு இருக்கலாம். இது யாருக்காவது விரிவாக சிந்தித்து முன்மொழியப்பட்ட கொள்கையாகத் தெரிகிறதா? அப்படி இருக்கையில் மிகவும் அவசரமாக தமிழ் விக்கியில் இந்தக் கொள்கையை மிகவும் இறுக்கமாக அமுல்படுத்த வேண்டுமா. இது ஒரு பெரும் பிரச்சினையாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதா? இவை ஒரு புதுப் பயனரை, ஏற்கனவே பங்களிப்புக்கள் செய்த பயனரை எப்படிப் பாதிக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். அனுபப்பட்ட என் போன்ற பயனர்களே இது பெரும் அளவு அழுத்தத்தைத் தருகின்றது என்றால் மூத்த பயனர்களை இது எவ்வாறு பாதிக்கும். நாம் கொண்டாடும் சங்கைப் பொதுவனின் ஆக்கங்கள் எமக்கு கிடைத்துருக்குமா. (நிச்சியமாக இல்லை. அவரின் ஆக்கங்கள் எதிர்காலத்தில் விக்கியில் இருக்குமா என்பதையும் கடினமாக நீக்கல் இயக்க கொள்கை முனைப்பு கேள்விக்கு உட்படுத்துகின்றது.). நிச்சியமற்ற தன்மை, நீண்ட வறண்ட உரையாடல்கள் நிச்சியம் நிலைக்கும். ஆகவே, குறிப்பிடத்தக்கமையும், அதை நிறைவேற்ற பல அவதாரங்களாக (6 வரிகள், கட்டுரை இணைப்பு) எடுக்கும் கொள்கைகளும் மிகவும் அவதானமாக வடிவமைக்கப்பட வேண்டும். பதிப்புரிமை, மேற்கோள்கள் தொடர்பாக நாம் கூடிய சிரத்தையுடன் செயற்படுவதை வரவேற்கிறேன். குறிப்பிடத்தக்கவை என்ற பெயரில் மிகவும் உயர்ந்த தடைகளை கட்டுரை ஆக்கத்துக்கு, இருப்புக்கு விடுவது நல்லதல்ல, நல்லதல்ல, நல்லதல்ல. --Natkeeran (பேச்சு) 19:16, 13 ஏப்ரல் 2014 (UTC) "Deletionists rule Wikipedia. Ironically, they're constrained by print-era thinking. What harm does it do if an online reference has a long tail of articles that are only interesting to a few people, so long as everyone can still find whatever they're looking for? There is room to do to Wikipedia what Wikipedia did to Britannica." - Paul Graham "There are some people on Wikipedia now who are just bullies, who take pleasure in wrecking and mocking people's work – even to the point of laughing at non-standard 'Engrish'. They poke articles full of warnings and citation-needed notes and deletion prods till the topics go away." - Nicholson Baker --Natkeeran (பேச்சு) 20:05, 13 ஏப்ரல் 2014 (UTC) தொடர்ந்து மாறும் கட்டுரை அளவீடுகள் - மூன்று வரிகள் - போதிய உள்ளடக்கம்அண்மையில், பல மொத்தப் பகுப்புகளே பட்டியலாகத் தொகுத்து விடலாம் என்று. எ.கா பகுப்பு பேச்சு:ஈழத்து சஞ்சிகைகள். போதிய உள்ளடக்கம் இல்லை, ஆகையால் ஒரு பட்டியலில் இடுங்கள் என்று கோரப்பட்டு இருந்தது. எ.கா சுட்டப்பட்ட கட்டுரைகள் மூன்று வரிகளைக் கொண்டு இருந்தன. ஆக, மூன்று வரிகள் இருந்தாலும், யாராவது "போதிய உள்ளடக்கம்" என்ற கருதாவிட்டால், அவற்றை நீக்கிவிட்டு, ஒரு பட்டியலில் தொகுக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, போதிய உள்ளடக்கம் என்றால் என்ன? இதை யார் தீர்மானிப்பது? ஏன் இக் கட்டுரைகள் விரிவுபெற முடியாது என்று முன்கூட்டியே சாத்திரம் கூறப்படுகிறது. இந்த முன்மொழிவை முன்வைத்தவருக்கு ஈழத்துச் சஞ்சிகைகள் தொடர்பாக எந்தளவு பரிச்சியம் உள்ளது. அல்லது எதாவது மூன்றைப் பொறுக்கி எடுத்துகாட்டுத் தரப்பட்டுள்ளதா? அவ்வாறானல், அந்த அணுகுமுறையை என்னவென்று கூறுவது. இந்தமாதிரிக் கொள்கைகள், அணுகுமுறைகள் எப்பொழுது உருவாக்கப்பட்டன? (மேற்கோள் தரப்பட வேண்டும் என்ற விதி அண்மைக் காலமாகவே தமிழ் விக்கியில் கூடிய சிரத்தையுடன் கவனப்படுத்தப்படுகிறது. அதையும் சாட்டாக் கொண்டு, பல கட்டுரைகளை நீக்கும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க முடிகிறது.) இன்னும் சிறுது காலத்துக்கும் பின், ஒரு வரா காலம் யாரும் கருத்துக் கூறாதால், எல்லாவற்றையும் இணைக்கிறேன், நீக்குகிறேன் என்று செயற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. ஆகையால்தான், மிக உறுதியாக இந்தன் போதாமைகளை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். --Natkeeran (பேச்சு) 19:38, 13 ஏப்ரல் 2014 (UTC)
விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு கொள்கையின் அடிப்படையிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. // ஏன் இக் கட்டுரைகள் விரிவுபெற முடியாது என்று முன்கூட்டியே சாத்திரம் கூறப்படுகிறது.// பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் from November 2012 பகுப்பில் மட்டும் இதழ்கள் தொடர்பான 124 கட்டுரைகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு மேற்கோள் கூட சேர்க்க முடியாமல் தேங்கி உள்ளன. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இதழ்கள் தொடர்பான கட்டுரைகளில் இன்னும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. // இந்த முன்மொழிவை முன்வைத்தவருக்கு ஈழத்துச் சஞ்சிகைகள் தொடர்பாக எந்தளவு பரிச்சியம் உள்ளது.// கட்டுரைகளின் குறிப்பிடத்தக்கமை பற்றி உரையாடவே துறை சார் அறிவு தேவை. அதுவும் கூட புறவயமான, நடுநிலையான, நம்பகமான ஆதாரங்கள் தந்தால் எவரும் ஒப்பிட்டு முடிவெடுக்கலாம். //ல்லது எதாவது மூன்றைப் பொறுக்கி எடுத்துகாட்டுத் தரப்பட்டுள்ளதா? // உங்களுக்கு எத்தனை எடுத்துக்காட்டுகள் வேண்டும்? :) 50? 100? //இன்னும் சிறுது காலத்துக்கும் பின், ஒரு வரா காலம் யாரும் கருத்துக் கூறாதால், எல்லாவற்றையும் இணைக்கிறேன், நீக்குகிறேன் என்று செயற்படுத்தி விடும் அபாயம் உள்ளது.// என்ன எழுதினார்கள் என்றே தெரியாதவர்களை எல்லாம் எழுத்தாளர்களாக கருதி கட்டுரையில் தரவுகளைச் சேர்த்து வைத்திருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவில் இது தேவையற்ற அச்சம். --இரவி (பேச்சு) 07:40, 14 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், குறும்பக்கங்களை ஒவ்வொன்றாக ஆய்ந்து மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நேற்று நான் மேம்படுத்திய இரண்டு கட்டுரைகள் இதோ: விழித்திரை நோய், உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய். இத்தகைய குறும்பக்கங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளள:
எடுத்துக்காட்டு: சோமனூர் - இங்கு ஒரு தொடர்வண்டி நிலையம் உள்ளது என்பது ஒரு வரி. ஒரு ஊரைப்பற்றி இருக்க வேண்டிய அடிப்படை விவரங்கள் இங்கு இல்லை. எடுத்துக்காட்டுக்கு, இந்த ஊரின் புவியிருப்பிடம் என்ன, மக்கள் தொகை என்ன, ஊராட்சி நிலை என்ன போன்ற விவரங்கள் இல்லை. மூன்று வரியில் இருந்தாலும் இந்த ஊரின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விவரங்கள் இல்லை. இதே அடிப்படையில் அம்மாப்பட்டி என்று ஒரு கட்டுரை எழுதிக் காட்டியுள்ளேன். இவ்வாறான கட்டுரைகளை எழுதத் தான் ஊக்குவிக்கிறோமா? பால்டிக் கடல் என்ற கட்டுரை 2006ல் எழுதப்பட்ட வடிவத்தில் இருந்து பெரிய முன்னேற்றம் ஏதும் காணவில்லை.இதிலும் மூன்று வரிகள் உள்ளன. ஆனால், //இதனைச் சுற்றி ஸ்கான்டினேவிய நாடுகள் உள்ளன. டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இக்கடலைத் தொட்டுக்கொண்டுள்ளன.// ஆகிய இரண்டு வரிகளும் ஒரே விசயத்தைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றனது. மூன்று வரி இருக்கிறது என்பதற்காக இதனை எப்படிப் போதுமான உள்ளடக்கம் என்று கருத முடியும்? Inclusionism, incrementalism, separatism, eventualism என்று பல இசங்களைச் சுட்டிக் காட்டும் நீங்கள் ஆங்கில விக்கியில் பல ஆண்டுகளாக இது போல் தேங்கி நிற்கும் ஒரு முக்கிய கட்டுரையைக் காட்ட முடியுமா? தலைப்பை விளக்கும் பல்வேறு கட்டுரைகளுக்கு எடுத்துக்காட்டாக கழுதைப் புலி கட்டுரையை எழுதிக் காட்டியுள்ளேன். இது மூன்று வரி இருக்கிறது என்பதற்காக விட்டு விடலாமா? வெற்றி தரும் மேலாண்மை உத்திகள் (நூல்) என்று ஒரு நூல். இதில் நூலாசிரியர் குறிப்பு, அணிந்துரை, வாழ்த்துரை, மதிப்புரை, மகிழ்வுரை (!), உள்ளடக்கம் என்று 7000 பைட்டுகளுக்குக் கட்டுரை செல்கிறது. ஆனாலும் நூல் விலையையும் பக்கத்தையும் தவிர குறிப்பிட அங்கு ஒன்றுமில்லை. எங்கள் பள்ளியில் ஒரு எடுத்துக்காட்டு சொல்வார்கள். மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், தென்னை மரத்தைப் பற்றி விரிவாக எழுதிவிட்டு அத்தகைய தென்னை மரத்தில் பசு மாட்டைக் கட்டியிருந்தார்கள் என்று எழுதுவார்களாம். இது போன்ற வெற்றுக் கட்டுரைகளை வைத்துக் கொண்டு என்ன சாதிக்கிறோம்? இதே போல் மு. கணேசன் (தள்ளுவண்டி கடைக்காரர்) என்று ஒரு கட்டுரை எழுதினேன். இது கலைக்களஞ்சியத்தில் இருக்கக்கூடாத ஒரு கட்டுரை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அதனை நீக்குவது என்றால் பேச்சு:மு. கணேசன் (தள்ளுவண்டி கடைக்காரர்) பக்கத்தில் சுட்டியுள்ள வழிமுறைகளைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். செங்கைப் பொதுவன் ஐயா போன்றோரின் பங்களிப்புகளை அரவணைக்க வேண்டும் என்ற நோக்கில் நாம் இளக்கும் கொள்கைகள் வேறு சிலரின் பொறுப்பற்ற செயல்பாடுகளுக்கும் விளம்பர நோக்குகளுக்குமே உதவுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவில் நாம் புதிதாக ஏதும் கொள்கை இயற்றவில்லை. ஆனால், இருக்கிற கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே போராட வேண்டி இருக்கிறது. Inclusionism பேசி தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு கலைக்களஞ்சியத்துக்கான அடிப்படைத் தரம் கூட இல்லாமல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்போது ஏன் இந்த அவசரம் என்றால், இப்போது செய்யாவிட்டால் எப்போதும் செய்ய இயலாது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு, ஏன் முன்பே சுட்டிக் காட்டவில்லை, ஏன் அனைத்துப் பிரச்சினைகளையும் ஒன்றாக குவிக்கிறீர்கள் என்று கேள்வி வருகிறது. எனவே, துப்புரவுப் பணியை இயன்ற போதெல்லாம் அன்றன்றே செய்து முடிப்பதே சிறப்பாகத் தோன்றுகிறது. குறித்த கால நீக்கல் வேண்டுகோள் இடுவது, ஒன்றிணைப்பு வேண்டுகோள் இடுவது ஆகியன எல்லாம் வழக்கமான துப்புரவுப் பணிகள் தான். இவற்றுக்கும் விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு கொள்கைக்கும் தொடர்பில்லை. அக்கொள்கை தொடர்பாகவே இணக்க முடிவு அடிப்படையைச் சுட்டிக் காட்டி இருந்தேன். இன்னொன்று, விக்கிப்பீடியாவில் நான் எழுதிய கட்டுரை, நீங்கள் உருவாக்கிய கொள்கை என்று ஏதும் இல்லை. அனைத்துமே சமூக ஏற்பு பெற்றுத் தான் செயல்படுத்தப்படுகின்றன. பொதுவாக, எந்த ஒரு தொகுப்பினைப் பற்றிய மாற்றுக் கருத்தையும் பேச்சுப் பக்கத்தில் குறித்தால் பேசி இணக்க முடிவுக்கு வரலாம். எந்தக் காரணமும் சொல்லாமல் வார்ப்புருக்களை மீள்விப்பதும் தொகுத்தல் போர்களில் ஈடுபடுவதும் உங்களைப் போன்ற நெடுநாள் பயனருக்கு அழகன்று. தற்போது வார்ப்புரு இடும் பல கட்டுரைகள் வேறு கட்டுரைகளில் இருந்து இணைப்புகளோ கூடுதல் பக்கப் பார்வைகளோ பெறுவன அன்று. இவ்வாறு வார்ப்புரு இட்டால் ஒழிய அவற்றின் இருப்பே யார் கவனத்துக்கும் வராது. நேற்று வார்ப்புரு இட்ட பிறகு கோபி ஒரு கட்டுரையை மேம்படுத்தினார். நீங்கள் இரு கட்டுரைகளில் பிழை திருத்தினீர்கள். அடுத்த ஒரு மாதத்தில் இன்னும் சிலர் பங்களிக்க வாய்ப்புண்டு. வார்ப்புருவே இட வேண்டாம் என்று கோருவதன் மூலம் இத்தகைய மேம்பாடுகளுக்கான வாய்ப்புகளைத் தடுக்க வேண்டாமே? தமிழ் விக்கிப்பீடியாவில் மிகச் சிலரே துப்புரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களை வேண்டா விருந்தாளிகள் போல் நோக்காமல் போதிய ஒத்துழைப்பைத் தர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 04:39, 15 ஏப்ரல் 2014 (UTC)
கடந்த மூன்று நாட்களின் உருவாக்கப்பட்ட புதுப் பக்கங்களில் பெரும்பானவை குறுங்கட்டுரைகள், பல புதுப் பயனர்களால் உருவாக்கப்பட்டவை:: குறுங்கட்டுரைகள், எற்கனவே உள்ள கொள்கைகளுக்கு (3 வரிகள்) ஏற்ப உருவாக்கப்பட்டு இருந்தால் அவற்றை நீக்கவேண்டாம். மேம்படுத்துக, விரிவாக்குக என்ற ஒரு புதுப் பகுப்புக்குள் சேர்க்கவும். 3 வரிக் கட்டுரைகள் ஏற்கப்படுவதில்லை என்று கொள்கை வகுப்பதாயின், வழமை போல இணக்க முடிவு எடுத்துச் செய்யவும். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 19:00, 15 ஏப்ரல் 2014 (UTC) 6:50, 15 ஏப்ரல் 2014 பால்டிக் கடலை சூழவுள்ள நகரங்கள் பட்டியல் (வரலாறு) [11,525 பைட்டுகள்] Maathavan (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("[[Darłowo]] File:Stockholm old town..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 14:25, 15 ஏப்ரல் 2014 எர்ணாகுளம் மக்களவைத் தொகுதி (வரலாறு) [1,634 பைட்டுகள்] தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்) முதலில் "எறணாகுளம் மக்களவைத் தொகுதி" என உருவாக்கப்பட்டது 14:20, 15 ஏப்ரல் 2014 சாலக்குடி மக்களவைத் தொகுதி (வரலாறு) [1,867 பைட்டுகள்] தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்) 14:13, 15 ஏப்ரல் 2014 திருச்சூர் மக்களவைத் தொகுதி (வரலாறு) [1,804 பைட்டுகள்] தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்) 14:03, 15 ஏப்ரல் 2014 ஆலத்தூர் மக்களவைத் தொகுதி (வரலாறு) [1,725 பைட்டுகள்] தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்) 12:33, 15 ஏப்ரல் 2014 பாலக்காடு மக்களவைத் தொகுதி (வரலாறு) [1,782 பைட்டுகள்] தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்) 12:31, 15 ஏப்ரல் 2014 கிளீசு 667 (வரலாறு) [16,081 பைட்டுகள்] Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Starbox begin | name=கிளீசு 667 எ /பி /சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 12:20, 15 ஏப்ரல் 2014 பொன்னானி மக்களவைத் தொகுதி (வரலாறு) [2,554 பைட்டுகள்] தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்) 12:07, 15 ஏப்ரல் 2014 மலப்புறம் மக்களவைத் தொகுதி (வரலாறு) [1,852 பைட்டுகள்] தமிழ்க்குரிசில் (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (துவக்கம்) 09:27, 15 ஏப்ரல் 2014 சிராய்ப்பு (வரலாறு) [3,078 பைட்டுகள்] Velprakash2 (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("சிராய்ப்பு என்பது "ஒரு ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (Tag: குறும் பக்கம்) 08:58, 15 ஏப்ரல் 2014 வார்தா கல்வித் திட்டம் (வரலாறு) [3,058 பைட்டுகள்] Semmal50 (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("'''வார்தா கல்வித் திட்டம்'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 04:46, 15 ஏப்ரல் 2014 எச்டி 163376 (வரலாறு) [948 பைட்டுகள்] Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{starbox short |constell= விருச்சிக விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 04:14, 15 ஏப்ரல் 2014 எச்டி 163145 (வரலாறு) [945 பைட்டுகள்] Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{starbox short |constell=விருச்சிக விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 02:58, 15 ஏப்ரல் 2014 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (2014) (வரலாறு) [1,044 பைட்டுகள்] Selvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (*துவக்கம்*) 16:09, 14 ஏப்ரல் 2014 நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் (வரலாறு) [4,956 பைட்டுகள்] Drpalanichamy (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("சிவகங்கையிலிருந்து எட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) (Tag: விக்கிப்படுத்த வேண்டிய கட்டுரை) 14:32, 14 ஏப்ரல் 2014 பில்லி கிரஹாம் (வரலாறு) [3,100 பைட்டுகள்] Yesappa Pillai (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (பில்லி கிரஹாம் உலகின் மிகப் பிரபலமான சுவிசேஷகர் ஆவார்.) (Tag: விக்கிப்படுத்த வேண்டிய கட்டுரை) 13:52, 14 ஏப்ரல் 2014 ரோ விருச்சிக விண்மீன் (வரலாறு) [1,604 பைட்டுகள்] Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Starbox short | name=ரோ விருச்சக விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் "ரோ விருச்சக விண்மீன்" என உருவாக்கப்பட்டது 13:43, 14 ஏப்ரல் 2014 நினைத்து நினைத்து பார்த்தால் (வரலாறு) [12,653 பைட்டுகள்] Dineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{தொகுக்கப்படுகிறது | 15 நி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் "நினைத்து நினைத்துப் பார்த்தால்" என உருவாக்கப்பட்டது 12:11, 14 ஏப்ரல் 2014 குழிய வன்கூடு (வரலாறு) [10,862 பைட்டுகள்] G.Kiruthikan (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("அனைத்துக் உயிரணு|கலங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 11:36, 14 ஏப்ரல் 2014 எச்டி 161840 (வரலாறு) [950 பைட்டுகள்] Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{starbox short |constell= விருச்சிக விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 11:28, 14 ஏப்ரல் 2014 நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோவில் (வரலாறு) [57 பைட்டுகள்] Drpalanichamy (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("நாட்டரசன் கோட்டை"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 11:18, 14 ஏப்ரல் 2014 எச் டி 146624 (வரலாறு) [1,042 பைட்டுகள்] Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{starbox short |constell= விருச்சிக விண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 10:45, 14 ஏப்ரல் 2014 கேட்டை விண்மீன் (வரலாறு) [10,355 பைட்டுகள்] Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Starbox begin | name=கேட்டை விண்மீன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 04:57, 14 ஏப்ரல் 2014 சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை (வரலாறு) [5,085 பைட்டுகள்] Sengai Selvi (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("பத்துப்பாட்டும் எட்டுத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 18:49, 13 ஏப்ரல் 2014 பூங்காற்று திரும்புமா (திரைப் பாடல்) (வரலாறு) [2,183 பைட்டுகள்] Mayooranathan (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("'''பூங்காற்று திரும்புமா''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 16:28, 13 ஏப்ரல் 2014 தூக்குத் தூக்கி (திரைப்படம், 1954) (வரலாறு) [2,674 பைட்டுகள்] Saranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ((edited with ProveIt)) 15:22, 13 ஏப்ரல் 2014 லலிதா (வரலாறு) [4,464 பைட்டுகள்] Saranbiotech20 (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Infobox person | name = லலிதா | image = | caption =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 11:03, 13 ஏப்ரல் 2014 ஸ்டுடியோ கிரீன் (வரலாறு) [1,970 பைட்டுகள்] Thilakshan (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Infobox company |name = ஸ்டுடியோ க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 10:18, 13 ஏப்ரல் 2014 பரவுர் (வரலாறு) [3,379 பைட்டுகள்] Coppercholride (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (new.) 10:16, 13 ஏப்ரல் 2014 பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் (வரலாறு) [4,139 பைட்டுகள்] Thilakshan (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Infobox company |name = பாக்ஸ் ஸ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 09:41, 13 ஏப்ரல் 2014 விருச்சிக விண்மீன் குழாம் (வரலாறு) [7,752 பைட்டுகள்] Vbmbala (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("{{Infobox Constellation | name = Scorpius | symbolism = தே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) 09:16, 13 ஏப்ரல் 2014 மீனாட்சிசுந்தரம் (வரலாறு) [4,600 பைட்டுகள்] Saba rathnam (பேச்சு | பங்களிப்புகள் | தடு) ("''திருமங்கலம் புலி மீனாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) முதலில் "திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்" என உருவாக்கப்பட்டது ஆக, இந்தக் குறுங்கட்டுரைகளுக்கு எதிரனா நீக்கல், இணைத்தல் போக்கு, தமிழ் விக்கியை மிகவும் பாதிக்கும். இதனால்தான் குறுங்கட்டுரைகள் வேண்டாம் என்று வாதம் முன்வைக்கப்படக் கூடும். என்னத்தைச் சொல்ல.--Natkeeran (பேச்சு) 21:40, 15 ஏப்ரல் 2014 (UTC)
Inclusionism/Separatism/Eventualism/Incrementalism எதிர் Deletionism/Exclusionism
--Natkeeran (பேச்சு) 19:52, 14 ஏப்ரல் 2014 (UTC) இணைப்பு வார்ப்புருவின் புதிய பயன்பாடுபொதுவாக இணைப்பு வார்ப்புரு ஒரே தலைப்பில் இரண்டு கட்டுரைகள் அமையும் போதே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அது தொடர்புடைய கட்டுரைகளை இணைக்கப் இடப்பட்டு வருகிறது. எ.கா பாடல்கள் தொடர்பான கட்டுரைகள் படத்துடன் இணைக்க வேண்டப்பட்டுள்ளன. இதே போன்று பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் இதழ்கள், பல பகுப்புகள் இவ்வாரு இலக்கு வைக்கப்பட்டுள்ளன. தயந்து இப்படி அணுக வேண்டாம். இது ஒரு மரபுவழி கலைக்களஞ்சியம் இல்லை. தேடல் வசதி கொண்ட இணையக் களஞ்சியம்.
இந்த லோயிக்கின் படி எல்லாக் குறுங்கட்டுரைகளும் ஒரு பெரிய பட்டியலில் இணைக்கப்பட்டக் கூடியனவே. ஒரு விடயத்தைப் புதைக்க வேண்டும் ஆயின், இப்படிச் செய்யலாம். கட்டுரைகளை இணைப்பது போல, பிரிப்பதற்கும் ஒரு கொள்கை எழுதி, தானியங்கி மூலம் நிறைவேற்ற முடியும்.
--Natkeeran (பேச்சு) 16:22, 17 ஏப்ரல் 2014 (UTC)
இதழ்கள் தொடர்பான தனிக் கட்டுரைகள்இதழ்கள் தொடர்பான தனிக் கட்டுரைகள் இருப்பது ஏன் பொருத்தம் இல்லை? தற்போது, குறிப்பிடத்தக்க எனபதற்கு ஒரு படி மேல் போய், எல்லா தமிழ் இதழ் குறுங்கட்டுரைகளையும் இணைகக வேண்டும் என்று வார்ப்புரு இடப்படுகிறது. இவற்றை ஒன்றிணைக்க வேண்டும் என்ற வேட்கை விக்கிச் சமூகத்தில் உள்ளதா?. அல்லது பயனர்கள் தாம் விரும்பியபடி ஒரு பகுப்பில் உள்ள கட்டுரைகளை "இணைக்கலாமா". இணைக்க முடிவு என்று ஒரு பக்கம் கூறுக் கொண்டு, தனிமுடிவுகளை செயற்படுத்துவதை தமிழ் விக்கிச் சமூகம் எப்படி எதிர்கொள்வது. குறுங்கட்டுரைகளை விரிவாக்குவதில் பங்ககெடுப்பதில் தாம் பங்கெடுப்பதாக் கூறிய பயன்ர்கள், அவ்வாரு தொடர்ந்து பங்களிப்புச் செய்யாமல் வார்ப்புரு சேர்ப்பது பயன்மிக்கதா?--Natkeeran (பேச்சு) 13:50, 2 மே 2014 (UTC)
குறுங்கட்டுரைக் குற்றவாளிகள்முக்கியம் இல்லை, விரிவாக்க முடியாது, ஒருங்கிணைப்போம் என்று பல்வேறு வழிகளில் குறுங்கட்டுரைகள், குறுங்கட்டுரை ஆக்கர்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதாக நான் உணர்கிறேன். தேடலில் கிடைக்கும், விரிவாக்குவது இலகு, பகுப்பில் இடலாம், பட்டியலில் இடலாம். உள்/வெளி இணைப்புக்கள் சேர்க்கலாம், ஊக்கம் தரும், இது ஒரு மரபுவழி காகித கலைக்களஞ்சியம் இல்லை, உள்வாங்கும் பண்பு விக்கிக்கு வளமானது என்று பல வலுவான வாதங்கள் முன்வைக்கப்படாலும் ( விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை ஒன்றிணைப்பு) வழிகாட்டலில் மாற்றாம் இல்லை.
பொதுவான விதி என்று, மிக இறுக்கமான குறிப்பிடத்தக்கமை கொள்கையைக் கொண்டு வருதலும் எமக்குச் சாதகாமக இருக்காது. தமிழ் விக்கியின் ஒரு முக்கிய தருணம் என்று இதனைக் கருதுகிறேன். உள்வாங்கும் (meta:Inclusionism), எதிர்காலத்தில் நம்பிக்கை உள்ள (meta:Eventualism), மரபுவழிக் கலைக்களஞ்சியம் போல் அல்லாத (தளர்வான குறிப்பிடத்தக்க கொள்கை, meta:Separatism) தமிழ் விக்கி தெரிவு செய்யப் போகிறதா, இல்லை இறுக்கமான, meta:Deletionism, meta:Mergism நிலைப்பாடுகளை எடுக்கப் போகிறோமா. இடைப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பது பொருத்தம் போன்று தோன்றலாம். ஆனால் அந்த இடைப்பட்ட நிலைப்பாடு பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட, சாய்வுகளை உடைய, குறைபாடுகளைக் கொண்ட மரபுவழிக் கலைக்களஞ்சியத்தின் பக்கம் சாயும் ஆனால் நாம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வோம். ஆங்கில விக்கியில், சிம்மி வேல்சு கூட Deletionism ஒரு பெரும் சிக்கலாக அடையாளம் கண்டுள்ளனர். ஆங்கில விக்கியில் எந்த ஒரு obscure தலைப்பில் எழுதினாலு, அதற்கு சான்று காட்ட முடியும். அதற்கான வாதாட ஒரு படை இருக்கும், அங்கேயே இந்த நிலை என்றால் ஒரு தலைப்பைப் பற்றி விரித்துத் தேடினாலும் ஒரு வரி இல்லாத தமிழ்ச் சூழலில் நீக்கல் இயக்கமும், இறுக்கமான குறிப்பிடத்தக்கமை கொள்கையும் எந்தளவு உதவும்?
தமிழ் சிற்றிதழ்கள் குறிப்பிடத்தக்கமைபார்க்க: பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் இதழ்கள்--இரவி (பேச்சு) 18:48, 11 மே 2014 (UTC) தமிழ் திரைப்படப் பாடல்கள் குறிப்பிடத்தக்கமைபார்க்க: பகுப்பு பேச்சு:தமிழ்த் திரைப் பாடல்கள்--இரவி (பேச்சு) 18:48, 11 மே 2014 (UTC) தமிழ் எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கமைபார்க்க: பகுப்பு பேச்சு:தமிழ் எழுத்தாளர்கள்--இரவி (பேச்சு) 12:25, 16 மே 2014 (UTC) புதிய நிருவாகிகள் தேர்தல் குறித்த கொள்கை உரையாடல்பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்பு குறித்த அணுகுமுறை--இரவி (பேச்சு) 10:43, 16 சூன் 2014 (UTC) குறிப்பிடத்தக்கமையை முன்வைத்த துப்புரவுப் பணிகள் தொடர்பான வழிகாட்டல் தேவைபார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை#குறிப்பிடத்தக்கமையை முன்வைத்த துப்புரவுப் பணி தொடர்பான கேள்விகள்--இரவி (பேச்சு) 11:40, 16 சூன் 2014 (UTC) கைப்பாவை - ஒரே IP-ஐ பகிர்தல்கைப்பாவை என்ற கொள்கையின் கீழ் ஒரே IP-ஐ பகிர்தல் என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துக்களை வழங்குங்கள். இதனை மொழிபெயர்த்துத் தொகுத்த ஜெயரத்தின மாதரசனுக்கு நன்றிகள். --AntonTalk 03:36, 15 சூலை 2014 (UTC) விக்கிபீடியாவின் கொள்கை பற்றி விளக்கம் தேவை: சில மாதங்களுக்கு முன் " திருக்குறள் " பற்றிய பக்கத்தில் external reference ஆக என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்கான தொடுப்பைச் சேர்த்தேன் . அந்தக் கட்டுரை கீதை குறள் இரண்டையும் ஒப்பிட்டு எழுதப் பட்டது . கட்டுரையில் ஒப்பீட்டின் முடிபாக குறளின் கருத்துக்கள் கீதையின் கருத்துக்களுக்கு அடிப்படை என எழுதியுள்ளேன் . அந்தக்கருத்து உடனடியாக நீக்கப்பட்டது .நான் குழப்பவாதி என எச்சரிக்கை வந்தது . நான் விக்கியின் வளர்ச்சியின் ஆர்வலன் . ஆதலின் குறள் பற்றிய கருத்துக்கள் வெளியிடுமுன் பொறுப்பாளர்களின் முன் அனுமதி பெறும் வழி கூறுங்கள். கட்டுரை நடை - கொள்கைபள்ளிக் கல்வி மட்டும் முடித்தோரும் கூட புரிந்து கொள்ளத் தக்க வகையில் கட்டுரையின் மொழி நடை இயன்ற அளவு எளிமையானதாக இருத்தல் வேண்டும் என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கையாக இருப்பின், பல கட்டுரைகள் மற்றும் அவற்றின் தமிழாக்கம் நன்கு பயின்றவருக்கே புரிந்துகொள்ள கடுமையாக பெருவாரியான நடைக்கு புறம்பாக இருக்குமாறு அமைக்கப்பட்டிருப்பது ஏன்? எடுத்துக்காட்டிற்கு,
திரும்பவும் முதல்ல இருந்தா? இப்பவே கண்ணைக் கட்டுதே :)--இரவி (பேச்சு) 09:36, 31 மார்ச் 2015 (UTC)
//தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கையாக இருப்பின்// அது ஒரு வழிகாட்டல். மேலும் அது தமிங்கிலத்தில் எழுதப் பரிந்துரைக்கவில்லை என்பதையும் கவனிக்க. --AntonTalk 11:22, 31 மார்ச் 2015 (UTC)
ஒன்றிணைத்தல் மற்றும் தலைப்பு மாற்றலுக்கான கால அளவு வரையறைகட்டுரையின் தலைப்பு மற்றும் ஒன்றிணைத்தல் (article merge) மாற்றம் தொடர்பானவற்றில் வார்ப்புரு:speed-delete-on போன்ற ஒன்றை கொள்கை அளவில் வரவேண்டும் என்று கருதுகிறேன். கட்டுரை உள்ளடக்கங்களில் கவனம் செலுத்துவதற்கு பதில் தலைப்புகள் மாற்றப்படுவதால் பயனர்களின் கவனம் சிதறலாம் அல்லது அயர்ச்சியை ஏற்படுத்தும். விக்கிப்பீடியாவில் தலைப்பு, உள்ளடக்கம் இரண்டும் சரிசமமான அளவிலேயே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தும் அமையும். அதேபோல், ஒரு கட்டுரையின் உள்ளடக்கம் குறைவாக இருக்கிறது என்பதால், வேறொரு தலைப்பில் கட்டுரை துவங்க வேண்டாம் என்றும் பயனர்கள் வலியுறுத்துவதும் (அதனால் அவற்றை முதல் கட்டுரையுடன் இணைப்பது) பற்றிய கருத்துக்களைப் பற்றியும் விவாதிக்கப்பட வேண்டும். நன்றி -- மாகிர் (பேச்சு) 17:45, 11 ஏப்ரல் 2015 (UTC)
முன்னிலையாக்கர், உரோந்திடுபவர் அணுக்கங்கள்முன்னிலையாக்கர், உரோந்திடுபவர் போன்ற அணுக்கங்களை யாருக்கு, எந்நியதிகளின் கீழ் வழங்கலாம் என்பது தொடர்பில் கொள்கை முடிவை எடுத்தல் நன்று. விசமத் தொகுப்புகளை மீளமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொடர்பங்களிப்பாளர்களுக்கு முன்னிலையாக்கர் அணுக்கத்தை வழங்குவது அவர்களுக்கு உதவியாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 09:04, 10 ஆகத்து 2015 (UTC) @Ravidreams, Sundar, Natkeeran, and Mayooranathan: --மதனாகரன் (பேச்சு) 16:57, 11 ஆகத்து 2015 (UTC)
முன்னிலையாக்கர்
கருத்துகள்
-Antan, ஏற்கனவே விசமத் தடுப்பில் ஈடுபாடு உள்ளோருக்கு இவ்வணுக்கத்தை வழங்குவது சிறப்பே. தொடர்ச்சியாக அண்மைய மாற்றச் செயற்பாடுகளைக் கவனித்து வருவோர் அத்தகையோரை இனங்கண்டு முன்மொழிய வேண்டுகிறேன். ஆனால், நம்பிக்கைக்கு உரிய விக்கிப்பீடியர்கள் பலருக்கும் இவ்வணுக்கத்தை அளித்து விசமத் தடுப்பில் ஈடுபடுமாறு ஊக்குவிக்க வேண்டும். இவ்வணுக்கத்தைப் பொருத்தவரை, பயன்படுத்தாமல் இருப்பது பெரிய பிரச்சினை இல்லை. தவறாகப் பயன்படுத்துவதே பிரச்சினை. அப்படிப் பிரச்சினை வந்தால் கவனித்து அணுக்கத்தை மீள்விக்கலாம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக நான் கண்ட அனுபவத்தில் வாய்ப்பும் பொறுப்பும் கொடுத்தால் மட்டுமே நாம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவோரைக் கண்டுள்ளேன். ஐந்து பேருக்குத் தந்து ஒருவர் இவ்வாறு செயற்பட்டாலேயும் கூட மிகு பயன் விளையும். ஐவருக்கும் அணுக்கம் இல்லை என்றால் அந்த ஒருவரும் கிடைக்க மாட்டார். எனவே, நம்பிக்கைக்கு உரிய பங்களிப்பாளர்களை நாமே முன்மொழிந்து இப்பணியில் ஈடுபட வேண்ட வேண்டும். இதே கருத்து சுற்றுக்காவலுக்கும் பொருந்தும். பல ஆயிரம் பங்களிப்பாளர்கள் உள்ள ஆங்கில விக்கிப்பீடியாவில் நமக்குத் தேவையான பராமரிப்பாளர்கள் தாமாக அணுக்கம் கோரும் வழக்கம் உண்டு. ஆனால், தமிழ் விக்கிப்பீடியா சூழலைப் பொருத்தவரை, புதியவர்களை நாம் தான் இனங்கண்டு வளர்த்தெடுக்க வேண்டிய தேவை உண்டு.--இரவி (பேச்சு) 07:41, 14 ஆகத்து 2015 (UTC)
சுற்றுக்காவலர் (உரோந்திடுபவர்)
கருத்துகள்
கிரந்த எழுத்துப் பயன்பாடுதமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்துப் பயன்பாடு தொடர்பான கொள்கையைத் திட்டமாக வரையறுப்பது நன்றென உணர்கிறேன். இது தொடர்பான வரைவு கீழே:- விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு/கொள்கை வரைவு --மதனாகரன் (பேச்சு) 15:22, 24 ஆகத்து 2015 (UTC) அணுக்கங்களை வழங்கும் வரிசைமுன்னிலையாக்கர், தற்காவல் ஆகிய அணுக்கங்களை வழங்குவதற்கு ஒரு குறித்த ஒழுங்கைப் பேண வேண்டியதில்லை என்பது எனது கருத்து. பொதுவாக, சுற்றுக்காவல் அணுக்கத்தை இறுதியாக வழங்கலாம். தற்காவல் அணுக்கம் வழங்கப்படாத (அண்மைய மாற்றங்களைக் கவனித்து வரும்) நீண்ட நாள் பயனர்களுக்கும் முன்னிலையாக்கர் அணுக்கத்தை வழங்கலாம். --மதனாகரன் (பேச்சு) 11:58, 10 செப்டம்பர் 2015 (UTC)
விக்கிப்பீடியா கொள்கைகள், வழிகாட்டல்கள்விக்கிப்பீடியா கொள்கைகள், வழிகாட்டல்கள் என்பன பல ஆங்கில விக்கிப்பீயாவில் உள்ளதுபோல் இல்லாமல் அல்லது இற்றைப்படுத்தப்படாமல் உள்ளன. பலவற்றுக்கு ஆ.வி.யை மேற்கோளாகக் கொள்கிறோம். ஆகவே, முக்கியமாகத் தேவையானவற்றை இங்கு பட்டியலிட்டு, பொருத்தமான இடத்தில் உரையாடலாம். சிக்கல் அற்று இருப்பின் உருவாக்கலாம் அல்லது இற்றைப்படுத்தலாம். கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
--AntanO 12:55, 19 நவம்பர் 2015 (UTC)
குறுக்குவழி தொடர்பான வழுதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள குறுக்கு வழிகள் WP: முன்னொட்டுடன் அமைந்த முதன்மை வெளியிலுள்ள வழிமாற்றுப் பக்கங்களாக உள்ளன (பட்டியல்). ஆனால் அவை விக்கிப்பீடியா பெயர்வெளியில் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக WP:VP பக்கம் விக்கிப்பீடியா:ஆலமரத்தடிக்கு வழிமாற்றப்படுகின்றது ஆனால் ஆவியில் en:WP:VP என்றபெயரில் ஒரு பக்கம் இல்லை அது தானாகவே en:Wikipedia:VP பக்கத்தை சென்றடைந்து பின் வழிமாற்றப்படுகின்றது. ஆவியில் விக்கிப்பீடியா Server மூலம் தானாகவே WP: → Wikipedia: ஆகவும் WT: → Wikipedia talk: ஆகவும் மொழிமாற்றப்படுகின்றது. விபரங்களுக்கு இங்கு பாருங்கள். இது தொடர்பாக ஆவியில் நடந்த உரையாடல் (வாக்கெடுப்பு) பப்ரிகேட்டரில் பதியப்பட்ட வழு phab:T8313 என்பவற்றைப் பாருங்கள். இங்கு வாக்கெடுப்பு நடத்திய பின் பப்ரிகேட்டரில் வழு பதிந்து தவியிலும் இவ்வாறு மாற்றவேண்டும். ஆவியில் 2007 இல் இருந்தே செயற்பாட்டிலுள்ளது இவ்வளவுகாலமும் எவ்வாறு கவனிக்கப்படாது விடப்பட்டது எனத் தெரியவில்லை. அண்மைக்காலமாக அதிகளவான குறுக்கு வழிகள் தேவைக்காக உருவாக்கப்படுவதால் விரைந்து செயற்படுவது நன்று. கவனிக்க @Ravidreams, AntanO, Kanags, மதனாஹரன், and Shanmugamp7:--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 09:13, 21 சனவரி 2016 (UTC)
கருத்து
பப்ரிகேட்டரில் வழு (phab:T126604) பதிந்துள்ளேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 14:17, 11 பெப்ரவரி 2016 (UTC)
மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இப்போது பலரால் எழுதப்பட்டு வருகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு திட்டமாக இது இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது போல் தெரிகிறது. அனேகமாக இவை கூகுள் போன்ற கருவி கொண்டே மொழிபெயர்க்கப்படுகின்றன போல் தெரிகிறது. ஆனாலும், அனேகமானவை நல்ல தரத்தில் உள்ளன. இருந்தாலும், கட்டுரைகளை மொழிபெயர்ப்பவர்கள் கட்டுரைகளில் மேற்கோள்களை இணைப்பதில்லை. ஆங்கிலக் கட்டுரைகளில் மேற்கோள்கள் இருந்தாலும், அவற்றைத் தமிழ்க் கட்டுரைகளில் இணைக்கிறார்கள் இல்லை. இதனால், இவை மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகளாக இனங்காணப்பட்டு, பிற்காலத்தில் நீக்கப்படவும் வாய்ப்புண்டு. இத்திட்டத்தை முன்னெடுப்பவர்கள் இது குறித்துக் கவனமெடுக்க வேண்டும். @Ravidreams:--Kanags \உரையாடுக 11:05, 22 ஏப்ரல் 2016 (UTC)
முக்கிய அறிவிப்பு: தனிநபர் அச்சுறுத்தல், தணிக்கை அச்சுறுத்தலை எதிர்கொள்ளல் தொடர்பான கொள்கைவிக்கிப்பீடியாவின் உள்ளடக்கமும் செயற்றிட்டங்களும் திறந்த முறையில் கூட்டாக்கமாக பயனர்களால் உருவாக்கப்படுவன. விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் செயற்பாடுகளை மேம்படுத்த பல்வேறு கொள்கைகளும் அமைவுகளும் உள்ளன. தரமான மேற்கோள்கள் சுட்டுதல், நடுநிலை நோக்கு, பன்முகப் பார்வைகளுக்கு ஏற்கத்தகு இடம் தருதல் உட்பட்ட கொள்கைகள் உள்ளடக்கங்கள் மேம்பட உதவுகின்றன. நன்னோக்கு, கண்ணியம், கூட்டுச் செயற்பாடு, இணக்க முடிவு, முழுமையான தணிக்கை எதிர்ப்பு ஆகியன செயற்பாடுகள் மேம்பட உதவுகின்றன. உள்ளடக்கமும் செயற்பாடுகளும் தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு உட்பட்டவையே என்பது விக்கியின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றாகும். எந்த ஒரு கட்டுரை குறித்தும் விக்கிப்பீடியா தனிப்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதோ, வலியுறுத்துவதோ, நடைமுறைப்படுத்துவதோ, தலையிடுவதோ இல்லை. எந்த ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்துக்கும் தனிப்பட்ட விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களோ, நிருவாகிகள்/அதிகாரிகள்/மேலாளர்கள் போன்ற தளப் பராமரிப்பு உதவி செய்யும் பயனர்களோ விக்கிப்பீடியா அறக்கட்டளையின் ஊழியர்களோ பொறுப்பாக மாட்டர்கள். விக்கிப்பீடியா எந்த வகையிலும் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவதையோ, துன்புறுத்தப்படுத்தப்படுவதையோ, விக்கிப்பீடியா தணிக்கை அல்லது தடை செய்யப்படும் என்று அச்சுறுத்தப்படுவதையோ, தணிக்கை அல்லது தடை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையோ ஏற்றுக்கொள்வதில்லை; பொறுத்துக்கொள்வதும் இல்லை. இத்தகைய செயற்பாடுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய செயற்பாடுகள் நோக்கில் விக்கிப்பீடியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறது. இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பயனர் கணக்குகள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தடை செய்யப்படும். பார்க்க:
இக்கொள்கையின் படியினை இங்கு காணலாம். --இரவி (பேச்சு) 15:25, 11 ஆகத்து 2016 (UTC) கட்டுரைகளின் உரையாடல் பக்கங்கள்...கட்டுரைகளின் உரையாடல் பக்கங்களில் நடக்கும் கண்ணியக் குறைவான பேச்சுகளை நாம் யாரும் கண்டுகொள்வது இல்லை. இது ஆரோக்கியமானது அன்று. பிறரை இழிக்கும் வகையில் எழுதுபவர்களிடத்து கனிவான முறையில்கூட நாம் நமது வருத்தத்தைத் தெரிவிப்பதில்லை. புவியெங்கும் பரவியிருக்கும் இந்தக் கலைக்களஞ்சியத்தின் பக்கங்களில் பதிவாகும் பண்பற்ற உரைநடைகள், பெருமை சேர்ப்பதில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:16, 20 செப்டம்பர் 2016 (UTC)
இந்த வழிமுறையை இனிமேல் கடைப்பிடிக்கிறேன்; நன்றி, இரவி.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:56, 22 செப்டம்பர் 2016 (UTC) செய்தியுடன் தொடர்புபட்ட கட்டுரைவார்ப்புரு பேச்சு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்#செய்தியுடன் தொடர்புபட்ட கட்டுரை - இதனைக் கவனித்து கருத்திடுக. நன்றி. --AntanO 03:08, 7 அக்டோபர் 2016 (UTC)
த இ க க தளத்திலிருந்து பிரதி எடுக்கப்படும் கட்டுரைகள்தமிழ் இணையக்கல்விக்கழக தளத்திலிருந்து பிரதி எடுக்கப்படும் கட்டுரைகளுக்கு பேச்சுப்பக்கத்தில் ஏதாவது வார்ப்புரு இடலாமா? த இ க க தனது ஆக்கங்களை கிரியேடிவ் காமன்சில் கொடுத்தது அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியுமா? தெரியாதவர்கள் காப்புரிமை மீறல் என நீக்கிவிட வாய்ப்புண்டு. அதனால் இது பற்றி சில உரையாடல்கள் தேவை. பயனர்:Ravidreams, பயனர்:AntanO --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:49, 1 நவம்பர் 2016 (UTC)
தகவல் பெட்டி: இனம், மதம்இனம், மதம் தொடர் கொண்ட தகவல் பெட்டியில் அல்லது கட்டுரையில் தெரிந்தெடுத்த சில பிரபலங்களின் படங்களை இடுவதை தவிர்ப்பது நல்லது. தமிழர் கட்டுரையில் அவ்வாறு நீக்கியுள்ளேன். ஆளாளுக்கு யார் படம் இருக்க வேண்டும் என்ற கருத்து வேறுபாடு இருப்பதால் தவிர்ப்பது ஏற்றது. சிக்கல் இல்லாத அல்லது தனிநபர் வேறுபாடு இல்லாத கட்டுரைகளுக்கு அது ஏற்புடையதல்ல. மாற்றுக் கருத்து இருந்தால் இதனை கொள்கையாக ஏற்றுக் கொள்வதா எனப் பரிசீலிக்கலாம். தொடர்புடையது: Proposal for the deletion of all the galleries of personalities from the infoboxes of articles about ethnic groups --AntanO 01:59, 11 திசம்பர் 2016 (UTC)
யாழ்ப்பாண மாணவர்களின் பங்களிப்புவணக்கம், இலங்கையின் வடக்கில் இருந்து பல மாணவர்கள் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார்கள். இவர்கள் தமது கல்லூரியில் கொடுக்கப்பட்ட project ஒன்றுக்காக எழுதுகிறார்கள் என நம்புகிறேன். இவை பெரும்பாலும் கலைக்களஞ்சிய நடையில் இருப்பதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவற்றை முழுமையாக நீக்காமல், அவர்களின் பயனர் பக்கவெளிக்கு வழிமாற்றின்றி மாற்றி விட்டு அவர்களுக்கு அது பற்றித் தெரியப்படுத்துங்கள். அவர்களது project முடிந்தவுடன் அவற்றை நீக்குவதா அல்லது பொதுவெளிக்கு மாற்றுவதா என்பதைத் தீர்மானிக்கலாம். பயனர்களைத் தடை செய்வது அவ்வளவு நல்லதல்ல. உங்களுக்கு வேறு கருத்து இருந்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:03, 5 சனவரி 2017 (UTC)
தற்போதைய நிலைஇதுவரைக்கும் எந்தளவிற்கு சக விக்கிப்பீடியர்கள் உதவினீர்கள் என்று தெரியாது. ஒருசிலர் உதவியுள்ளீர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டுரைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. பராமரிப்பு வார்ப்புருக்கள் நீக்கப்படுகின்றன. கலைக்களஞ்சியத்திற்கு ஏற்பற்ற கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. எ.கா: தலையாழி ஞான வைரவர் ஆலயம் என்ற கட்டுரையைக் கவனியுங்கள். இங்கு கிட்டத்தட்ட 30,000 பைட்டுகளில் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிடத்தக்கதா? வலிந்து தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கோயில்கள் ஆயிரக்கணக்கில் உள்ளதை அறிவீர்கள். அவற்றுக்கெல்லாம் கட்டுரை உருவாக்கலாமா? ஒரு சிலர் முகநூல் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டனர். நான் உதவுவதற்கு எவ்வளவே முயன்றும், அவர்கள் தங்கள் கருத்தில்தான் கரிசனையாக உள்ளனர். அவர்களுக்கு குறிப்பிடத்தக்கமை, உசாத்துணை, விக்கி வழிகாட்டல், கொள்கை பற்றியெல்லாம் கவலையில்லை. தங்கள் கட்டுரை இங்கு இடம்பெற வேண்டும். அவ்வளவே! ஒரு சிலர் இன்னும் கொஞ்சம் மேலே சென்று, நான் இரு கணக்குகள் வைத்திருக்றேன் அதனால் தாங்களும் பல கணக்குகள் வைத்திருக்கின்றார்களாம். எனக்கொரு நீதி, தங்களுக்கொரு நீதி இருக்க முடியாதாம். "மட்டக்களப்புத் தமிழிலும்" என்னுடன் கருத்துச் சொல்கின்றனர். இவ்வாறு தங்கள் அறிவுக்கெட்டியபடி நியாயப்படுத்தல்களும், என் மீது வசைபாடல்களும் தொடர்கின்றன. விக்கி சமூகம் அறிக்கை விடாது நடடிவடிக்கை எடுக்குமாறு கேட்கிறேன். --AntanO 04:10, 20 சனவரி 2017 (UTC) பரிந்துரைகள்
கட்டுரைகளை ஒன்றிணைத்தல்விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்#எதனை முதன்மைப்படுத்துவது? என்பது தொடர்பில் கருத்துக்கள் தேவைப்பகிறது. --AntanO 09:09, 26 பெப்ரவரி 2017 (UTC) வாய்மொழி வரலாற்றுத் தகவல்களை கட்டுரையில் பயன்படுத்தல்பழங்குடிமக்கள், ஆப்பிரிக்கா, இந்தியா, தமிழ்ச் சூழல்களில் பல கலைகள், நுட்பங்கள், வாழ்வியல் அம்சங்கள் வாய்வழியாகவே கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுத நாம் எழுத்தாவணங்களோடு முறைப்படி உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்ட வாய்மொழி வரலாறுகளை, பல்லூடக ஆவணங்களை சான்றுகளாக பயன்படுத்துவது உதவும். வாய்மொழி வரலாறுகள் ஒன்றோடு ஒன்று cross check செய்யக் கூடியவாறு உருவாக்க முடியும். ஒரு நூலில் இருந்து மேற்கோள் காட்டுவது போன்றே, வாய்மொழி வரலாற்றில் இருந்து மேற்கோள் காட்ட சீர்தரங்கள் (http://guides.library.uwa.edu.au/c.php?g=325241&p=2178600) உண்டு. வாய்மொழி வரலாறுகலை supplementary ஆதாரங்களாவும் பயன்படுத்த முடியும். வாய்மொழி வரலாறுகளை தமிழ் விக்கியில் சான்றுகளாக ஏற்கலமா? ஏற்கலாம் என்றால் எத்தகைய வாய்மொழி வரலாறுகளை நாம் ஏற்கலாம்? இந்த விடயங்கள் பற்றி பயனர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் உதவியாக அமையும். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 19 மே 2017 (UTC) வாய்மொழி வரலாறுகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமின்றி, தமிழ் விக்சனரிக்கும் உதவும் என்று நம்புகிறேன். எ.கா: http://aavanaham.org/islandora/object/noolaham%3A1811 என்ற வாய்மொழி வரலாற்றில் கொம்பறை, பட்டறை என்ற நெல் சேமிக்கும் முறைகள் பற்றி விபரிக்கிறார். இது ஒரு தனிமனித subjective view தான். ஆனால் அதில் பொதிந்துள்ள தகவல்களை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஆய வேண்டும். @Arulghsr, கி.மூர்த்தி, உலோ.செந்தமிழ்க்கோதை, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, Ksmuthukrishnan, Kanags, சா அருணாசலம், Selvasivagurunathan m, Semmal50, Drsrisenthil, and Rselvaraj: --Natkeeran (பேச்சு) 14:53, 29 மே 2017 (UTC)
தமிழ் விக்கியர் சீனிவாசன்(Tshrinivasan) தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெறுகிறார்கூகிள் எழுத்துணரியைப் பயன்படுத்துவதற்கான கருவியாக்கம் மூலம் தமிழ் விக்கிமூலத்தில் 400,000 மேலானா பக்கங்களை பதிவேற்ற உதவிய சீனிவாசன் அவர்களுக்கு 2016 ஆன தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது கிடைத்துள்ளது. பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள். தமிழில் கட்டற்ற இயக்கத்தை கொள்கையிலும் செயலிலும் முன்நகர்த்திச் செல்வதில் முதன்மையான ஒரு பங்களிப்பாளரான சீனிவாசனுக்கு இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சியே. கடந்த ஆண்டு இந்த விருதை நீச்சல்காரன் பெற்றார். இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழ் விக்கியர்கள். முகுந்தராஜ் சுப்பிரமணியன் சேர்ந்து, மூன்றாவது தமிழ் விக்கியர் இந்த விருதைப் பெறுகிறார் என்று எண்ணுகிறேன். --Natkeeran (பேச்சு) 16:19, 30 மே 2017 (UTC)
வாழ்த்துகள், சீனிவாசன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 04:16, 31 மே 2017 (UTC) தமிழ் விக்கியர் சீனிவாசனின் ஆக்கமான பங்களிப்பு தொடரட்டும்.வாழ்த்துகள்.--Semmal50 (பேச்சு) 14:56, 31 மே 2017 (UTC) வாழ்த்துகள், --Arulghsr (பேச்சு) 15:01, 31 மே 2017 (UTC) வாழ்த்துக்கள் சீனிவாசன்--குறும்பன் (பேச்சு) 15:04, 31 மே 2017 (UTC) அருமை நண்பரே --Sriman.kandeepan (பேச்சு) 09:17, 1 சூன் 2017 (UTC) வாழ்த்துக்கள் சீனிவாசன் -- Sgvijayakumar (பேச்சு) 21:38, 2 சூன் 2017 (UTC) பள்ளிகளின் குறிப்பிடத்தக்கமைபள்ளிகளின் குறிப்பிடத்தக்கமை தொடர்பான கொள்கை உரையாடலை இங்கு முன்னெடுத்துள்ளேன். அனைவரின் கருத்துகளும் தேவை. --இரவி (பேச்சு) 07:30, 16 சூன் 2017 (UTC) பள்ளிப் பாடநூல்களில் இருந்து மேற்கோள் சுட்டுதல்அண்மைக் காலங்களில் பல ஆசிரியப் பயனர்கள் பள்ளிப் பாடநூல்களில் இருந்து மேற்கோள் சுட்டி எழுதுகிறார்கள். குறிப்பாகப் போட்டிக் கட்டுரைகளில் ஏறத்தாழ முழுப் பகுதியும் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்து எழுதுகிறார்கள். இது குறித்து ஒரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடப்பட்டுள்ளது. பள்ளிப் பாடநூல்களில் எழுதப்படுவது பொதுவான கருத்து என்றும், வேறு நம்பகமான துறைசார்ந்த மேற்கோள்களும் சுட்டப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயனர்கள் முடிவு எடுக்க வேண்டும். @Ravidreams, Mayooranathan, Kalaiarasy, Natkeeran, Selvasivagurunathan m, AntanO, and Drsrisenthil:--Kanags \உரையாடுக 09:29, 30 சூலை 2017 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia