விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு12monobookhttp://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:NewPages&limit=500&offset=0 பக்கத்தில் நிர்வாகிகள் அல்லா பயனர்கள் உருவாக்கிய கட்டுரைகள் மஞ்சள் பின்னணியில் தெரிவது வசதியாக இருக்கிறது. அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் இது போல் வருமாறு யாராவது monobook கோப்பில் மாற்றித் தந்தால் அண்மைய மாற்றங்களை இன்னும் இலகுவாகக் கண்காணிக்கலாம்--ரவி 01:58, 12 ஏப்ரல் 2008 (UTC) விக்சனரிக்கு துப்புரவாளர் தேவைஒரு இலட்சம் சொற்சேர்ப்புக்குப் பிறகு விக்சனரியில் வாசகர் வரத்தும். பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஆனால், பல பக்கங்களில் பிழைகள் மிகுந்த காணப்படுகின்றன. புதிய பங்களிப்பாளர்களை வழிப்படுத்தவும் அனுபவமுள்ள விக்கியர்கள் தேவை. எனவே, விக்சனரி துப்புரவுப் பணியாளர் தேவையை நிறைவு செய்ய அலைகடலென திரண்டு ஒருத்தர் ரெண்டு பேராச்சும் வாரீர் என்று கேட்டுக் கொள்கிறேன் :) --ரவி 18:39, 16 ஏப்ரல் 2008 (UTC) பதிவேற்றத்தை மாற்றியமைத்தல் வாக்கெடுப்புவிக்கிபீடியாவில் படிமங்களைப் பதிவேற்றுவதை எதிர்காலத்தில் Wikipedia:பதிவேற்றம் என்ற பக்கத்தூடாக செய்யலாம் என பரிந்துரைக்கிறேன். இம்முறை மலையாள, ஆங்கில விக்கிகளிலும் (எனக்கு தெரிந்த வரை) பொதுக்கோப்பகத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பக்கத்தின் அமைப்பு வேலைகள் இன்னமும் முடிவடையவில்லை. இதன் போது Local.php யில் மாற்றமொன்று செய்யவேண்டும். இது தொடர்பான பொதுக்கோப்பகத்திலிருந்தான அறிவுரை //Some wikis report that the MediaWiki:licenses message (the list of the licenses in the drop-down box) fails to work properly and always just shows the default. This is bugzilla:11695. To make this work on your wiki, you will need to set this in LocalSettings.php: அடுத்த முதற்பக்க இன்றைப்படுத்தல் - ஏப்ரல் 20, 2008 அன்று
நம் தளத்திற்கு வரும் வாசகர்கள்
-- சுந்தர் \பேச்சு 09:53, 19 ஏப்ரல் 2008 (UTC)
ஃவுளூரின் - 120 முதல் பக்கத்தில் இணைப்பு பெற்ற அறிவியல் பகுப்பில் இரண்டாவதாக உள்ள கட்டுரை. ம் ... படிக்க மக்கள் காத்திருக்கிறார்கள். முதல் பக்கத்திலிருந்து பல தரமான கட்டுரைகள் நேரடியாகவோ, பட்டியல்கள், பகுப்புகள், பிற கட்டுரைகள் வழியாகவோ இணைப்பு பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 10:12, 19 ஏப்ரல் 2008 (UTC)
அற்புதம் சுந்தர்!! மிகவும் பயனுடைய மென்மியக் கருவி! பல வழிகளில் பயனுடைய அளவீடுகள் செய்யலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளே ஒரே தலைப்பில் உள்ள கட்டுரைகளின் பாரவையீடுகளின் எண்ணிக்கையை நோக்கினால் ஆங்கில விக்கியில் தமிழ் விக்கியைப்போல நூறுபங்கு, ஆயிரம் பங்கு என்னும் அளவில் அதிகமுறை பார்க்கப்படுகின்றது. ஆனால், டாய்ட்சு மொழி, பிரான்சிய மொழி, சீன மொழி என்று பார்க்கும் பொழுதும், பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுதும் விகிதங்கள் (=பிற/தமிழ்) குறைகின்றன. தனித்தனி நாட்களுக்கான புள்ளிக்குறிப்புகள் இருப்பதால், இன்னும் துல்லியமாக சில செய்திகள் தெரியவருகின்றன. எதிர்பாரா விதமாக நாள்மீன்பேரடை 140 முறை பார்க்கப்பட்டுளது, ஆனால் எக்காரணத்தாலோ மார்ச் 16 ஆம் நாள் மட்டும் 58 முறை பார்க்கப்பட்டுளது. தனிமங்கள், அறிவியலாளர்கள், பறவைகள், வேதிப்பொருள்கள், என்று பல துறை தலைப்புகளில், தமிழ்மொழிக் கட்டுரைகளைப் பிறமொழிக் கட்டுரைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் பல உண்மைகள் புலப்படுகின்றன. ஒரு மாதத்தில் 50 முறைக்கு மேலாக இருந்தால் மட்டுமே ஒரு சிலராவது பார்க்கிறார்கள் என்று பொருள். திருத்தங்கள் செய்வோரும், விக்கியைப் பின்பற்றி அமைக்கும் துணைக் கலஞ்சியங்களும், தேடுபொறி தானியங்கிகளின் கைவேலை என்று பல காரணங்களுக்காக பார்வை எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 30-50 என்னும் கணக்கில் இருக்கலாம் என்று எண்ணுகிறேன். எப்படியாயினும், மிகவும் பயனுடைய ஒரு மென்மியக் கருவி. மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சுந்தர்! --செல்வா 23:29, 19 ஏப்ரல் 2008 (UTC)
செல்வா, நீங்கள் குறிப்பிட்டதுபோல் பொதுவாக ஆ.வி. கட்டுரைகளின் பார்வையீடுகள் ஒத்த த.வி. கட்டுரையைக் காட்டிலும் ஆயிரம் பங்கு என இருப்பினும் சோழர் கட்டுரைக்கு இவ்விகிதம் 20 என்ற அளவில் உள்ளது சிறப்பு. அது சிறப்புக் கட்டுரையாக இருப்பதால் ஆ.வி. கட்டுரையின் இடது சட்டத்தில் நாள்மீன் குறி சுவீடன் மற்றும் த.வி. கட்டுரை இணைப்புகளுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவும் பயனர்களின் கவனத்தை ஈர்த்திருக்கக் கூடும். தவி கட்டுரை ஒன்றிற்கான பார்வையீடுகளை அதன் கூறுகளாகப் பிரித்து என்றெழுதி பல கட்டுரைகளுக்கான புள்ளிகளை இதிலடைத்துப் பார்த்தால் கூறுகள் (ஆ.வி. கட்டுரைக்கான பார்வைகள், நமது முதல் பக்கத்திலிருந்து இணைப்பு முதலியன) மற்றும் அவற்றின் மதிப்பும் புலனாகும். -- சுந்தர் \பேச்சு 03:19, 20 ஏப்ரல் 2008 (UTC)
கல்வித்திட்டத்தில் விக்கிப்பீடியா
-- சுந்தர் \பேச்சு 04:25, 20 ஏப்ரல் 2008 (UTC) தமிழில் அறிவியல் தேவையா? அது சாத்தியமா?தமிழில் அறிவியல் முடியமா என்பதைப் பற்றி தமிழ் வழி மருத்துவக்கல்வி - சில கருத்துக்கள் என்ற இடுக்கையில் பயனர்:Mariano Anto Bruno Mascarenhas சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் ஒரு தமிழ் ஆர்வலரே. எனினும் யதார்த்தாமக பாக்கையில் தமிழ் மருத்துவக்கல்வி மாணவனுக்கு ஏன் நல்லதல்ல என்பதை விளக்கியுள்ளார். எ.கா மேற்படிப்பு செய்வது கடினம். மருத்துவம் ஒரு அறிவியல் துறை. இந்தக் கேள்வி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இதைப்பற்றிய ஒரு புரிந்துணர்வு எமக்கும் தேவை என நினைக்கிறேன். இன்று உலகில் அறிவியல் ஆங்கிலத்திலேயே பெரிதும் வளர்கிறது என்பது நாம் அறிவோம்.
மருத்துவம் மட்டுமல்ல, எந்தக் கல்வித்துறை அறிவும் தம் தாய்மொழியிலேயே இருப்பது சிறந்தது மட்டுமல்ல, அடிப்படைத் தேவை. ஆய்வுநிலையில், அறிவுத்துறையைப் பொறுத்து ஆங்கிலம் உட்பட பிற மொழிகளின் தேவை இருக்கலாம். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது 10,000 இல் ஒருவருக்குத்தான் தேவை. அதுவும் எப்பொழுதும் ஆங்கிலமாகவும் இருக்காது. ஆங்கிலேயராகிய நியூட்டன் கூட இலத்தீன் மொழியில் ஒரு காலத்தில் எழுதினார். காலத்திற்கு காலம் ஒரு சில மொழிகள் செல்வாக்கு பெற்று இருக்கும். மிக அண்மையில் கூட பிரான்சிய மொழி முதன்மை வாய்ந்த மொழியாக இருந்தது. அதே போல டாய்ட்சு மொழியும் மிகுந்த செல்வாக்குடைய மொழியாக இருந்தது. வருங்காலத்தில் சீன மொழி செல்வாக்கு உடையதாக வளர்ந்து எழலாம் . ஆனால் இதற்காக தம் கல்வியை தங்கள் தாய்மொழியில் இருந்து மாற்றிக்கொண்டு இருக்க முடியாது. தம் தாய் மொழியில் இயலுமா என்ற கேள்விக்கு ஒரு சிறிதும் இடமே கிடையாது, அதிலும் தமிழ் மொழி போன்ற செம்மொழிகளில், 75 மில்லியன் மக்களுக்கு மேலானவர்கள் தங்கள் தாய்மொழியாகக் கொண்ட மொழியில் இயலுமா என்று கேட்பதா!! கட்டாயம் இயலும் என்பது மட்டுமல்ல, எம்மொழிக்கும் இளைக்காத வழியில் சிறப்பாக அனைத்து அறிவுச்செல்வங்களையும் ஆக்கலும் வளர்த்தெடுத்தலும் இயலும். ஆக்குவதும் வளர்த்தெடுத்தலும் அம்மொழியாளர்களின் கடமை. அவர்கள் ஆக்கவில்லை என்றால் அம்மொழியாளர்களின் இயலாமையே தவிர மொழியின் இயலாமையோ, தேவையின் இன்றியமையாமையோ அல்ல. கல்வி கற்கும் பொழுது மேலோட்டமான அறிவு (passive learning), கிளர்வுறும் உள்ளறிவு, இயங்கறிவு (operative, inner creative learning called active learning) என்றும் கூறுவதுண்டு. தாய்மொழியில் கற்கும் பொழுது அறிவு ஊறும். அறிவு ஆழம் பெறும். குறைந்த ஆற்றலில் அதிக அறிவு பெறுதல் இயலும். இவற்றையெல்லாம் விளக்கி இங்கு எழுதினால் மிக விரிந்துவிடும். நெடுங்காலமாக தாய்மொழிவழிக் கல்வியின் உயர்வு நன்கு உணர்ந்தறியப்பட்ட ஒன்று. யுனெஸ்கோ (UNESCO) வை சேர்ந்த ஜான் டேனியல், கல்வித்துறையின் துணைச் செயலாளர்-இயக்குனர் (John Daniel, Assistant Director-General for Education) கீழ்காணுமாறு ஒரு செய்தி ஊடகத்திலே கூறுகிறார்:
பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு பன்னாட்டு மொழியாக இருந்தது. பின்னர் ஜெர்மன் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டது. ஆனால் அதிக காலம் நீடிக்கவில்லை. ஆங்கிலம் அந்த இடங்களைப் பிடித்துக் கொண்டது. இரசிய மொழி குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்று முன்னேறிவந்த போதும் சோவியத்தின் வீழ்ச்சி அதனைப் பாதித்துள்ளது. மண்டறின் இப்பொழுது மிக முக்கிய மொழியாக மாறி வருகிறது. பல வட்டார வழக்குக்களையும் பேசும் சீனர்கள் மண்டறினைத் தம் முதன்மை மொழியாகக் கற்கிறார்கள். சீனர்கள் இருவர் சந்தித்தால் எப்பொழுதும் சீனமொழியிலேயே பேசிக் கொள்கிறார்கள். //தானியங்கி-வழி பெரும்பாலானவை மொழி பெயர்க்கவும் கூடும்.// ஆம், இது நிச்சயம் நடக்கும். அந்த வகையில் எண்மிய உலகில் நுழையாத மொழிகள் அனைத்தும் இன்னும் 200 ஆண்டுகளில் காணாமற் போய்விடும். இன்னும் நூறாண்டுகளின் பின்னர் ஆங்கிலத்துக்கு இருக்கும் குக்கியத்துவம் குறைந்து விடும். ஏனெனில் தானியங்கி மொழிபெயர்ப்புக்களின் மூலம் உடனுக்குடன் அவரவர் தத்தம் மொழிகளில் மாற்றிக் கொள்வார்கள். தானியங்கி மூலம் ஒரு சொடுக்கலில் மொழிமாற்றலாம் எனும் நிலையில் மூலங்களை உருவாக்கியவர்களுக்கான கொடுப்பனவைச் செலுத்தும் பொருளாதார வலிமையுடைய மொழிகள் மிகப் பலமான நிலையில் இருக்கும். இதுவே சீனத்துக்கு வரக்கூடிய பலம். மிக வேகமான முன்னேற்றங்களுடனான கால கட்டத்தில் வாழ்கிறோம். சற்றே சிரமப்பட்டுத்தான் தாக்குப் பிடிக்க வேண்டும்.\ இந்தத் தானியங்கியைச் சாத்தியப்படுத்த பெருமளவு திருத்தமான உள்ளடக்கம் எண்மிய வடிவத்தில் வேண்டும். இந்த உள்ளடக்கத்தை வைத்துக் கொண்டுதான் தானியங்கிக்கான உள்ளீடு நடைபெறும். அதனால் திருத்தமான உள்ளடக்கம் என்பது முக்கியம்; அதே நேரம் அதிக அளவிலும் வேணும். கலைச்சொல்லாக்கம் மிக மிக மிக முக்கியமானது. ஏற்கனவே உள்ள உள்ளடக்கங்களை எண்மிய வடிவத்துக்கு மாற்றுதல், எல்லாத் துறைகளிலுமான கலைச்சொல்லாக்கம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவமளிக்க வேண்டிய தேவை உணரப்பட வேண்டும். ஒரு கட்டுரையைப் புதிதாக எழுதுவது எவ்வளவு முக்கியமோ அந்தளவு முக்கியம் ஏற்கனவே இருக்கும் உள்ளடக்கங்களை அறிவதும் அவற்றை ஒட்டி மேலதிக அறிவை தமிழாக்குவதுமாகும். ஈழ- தமிழக கலைச்சொல் ஒப்பீடுகளும், ஆய்வு உள்ளடக்கங்களும், கலைக்களஞ்சியங்களும் இணையத்தில் மிக அவசியமானவை. இதற்கான முயற்சிகளை இப்பொழுதே மேற்கொள்ளாமற் தாமதித்தாற் தவிக்க நேரிடலாம். ஏற்கனவே உள்ள உள்ளடக்கங்களுகான முக்கியத்துவம் தொடர்பில் நான் முன்னரும் தெரிவித்த கருத்துக்களை நினைவு கூருகிறேன். நன்றி. கோபி
தமிழில் அறிவியல் தேவையா, அது சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் - ஆம். ஆம் அதே போல் தமிழில் மருத்துவக்கல்வி தேவையா என்றால் - தேவைதான் தமிழில் மருத்துவக்கல்வி சாத்தியமா என்றால் - சாத்தியம் தான். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் இத்துறை குறித்த சில விளக்கங்களை நான் தருகிறேன் ஆய்வுநிலையில், அறிவுத்துறையைப் பொறுத்து ஆங்கிலம் உட்பட பிற மொழிகளின் தேவை இருக்கலாம். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அது 10,000 இல் ஒருவருக்குத்தான் தேவை என்பது சில துறைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர மருத்துவத்துறைக்கு பொருந்தாது. தற்பொழுது தமிழகத்தில் உள்ள இளங்கலை இடங்கள் - சுமார் 1600 முதுகலை இடங்கள் - 914. இது 1: 10,000 அல்ல :) அதே போல், இந்த 914லை 1600 உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். வளர்ந்த நாடுகளில் மருத்துவத்தை பொருத்த வரை இளங்கலை : முதுகலை = 1: 1 எனவே ”இந்தக் கேள்வி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இதைப்பற்றிய ஒரு புரிந்துணர்வு எமக்கும் தேவை என நினைக்கிறேன்.” என்றால் தயவு செய்து மருத்துவத்துறையை ஒரு மாதிரியாக எடுக்க வேண்டாம். அதே போல் நான் கூறிய (மருத்துவத்துறைக்காக நான் கூறிய கருத்துக்களை) பிற துறைகளுக்கு பொருத்த வேண்டாம் என்பது என் வேண்டுகோள் ஏனென்றால் மற்ற (பெரும்பாலான) துறைகளுக்கு இத்துறைக்கும் பாரிய வேறு பாடு நடைமுறையில் உள்ளது (விஞ்ஞான ரீதியாக வேறுபாடு இல்லாவிட்டாலும் கூட) 1. பிற துறைகளைப்போலன்றி நான் ஏற்கனவே கூறிய இளங்கலை : முதுகலை 1:1 (தற்பொழுது அது 5:3 ஆக இருந்தாலும் கூட அதை 1:1 ஆக்க வேண்டும் 2. முதுகலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 38 வகை இருக்கின்றது. அதற்கு மேல் சுமார் 20 சிறப்பு (டி.எம், எம்.சி.எச்) இருக்கிறது தமிழக தவிர்த்த பிற இடங்களில் இன்னும் ஒரு 20 வகைப்படிப்புகள் இருக்கிறது வேறு எந்த துறையிலும் இந்த அளவு இருக்குமா என்பது சந்தேகம். 3. மற்ற துறைகளைப்போலன்றி இதில் கற்ற வேண்டிய பாடங்களின் அளவு சிறிதல்ல. உதாரணமாக இளங்கலை பொறியியல் கணினி படிப்பவர் 4 வருடங்களும் படிக்கும் மொத்த பக்கங்கள் (என் அறைநண்பனின் தம்பி படித்தது அது தான். அவன் புத்தகங்களை நான் பார்த்ததை வைத்து கூறுகிறேன்) மருத்துவத்துறையில் முதல் வருடமே படிக்க வேண்டும். 4. மற்ற துறைகளைப்போலன்றி (கணினி விதிவிலக்கு) மருத்துவத்துறையில் ஒரு புத்தகம் 5 வருடங்களுக்கு மேல் உபயோகப்படாது. (உடற்கூற்றியல் போன்றவை 15 வருடங்கள் வரலாம். மருந்தியல், உடலியக்கவியல் 3 வருடங்கள் கூட அந்த புத்தகத்தை உபயோகிக்க முடியாது. எனக்கு தெரிந்த வரை 1980ல் உள்ல சரித்திர புத்தகத்திற்கும், 2008ல் உள்ள சரித்திர புத்தகத்திற்கும் 1 சதவிதம் கூட வேறு பாடு இல்லை - காந்தி சுடப்பட்டது மாத்திரம் இடையில் எடுக்கப்பட்டது :) :) :) - அதே போல் 1980ல் உள்ள கணக்கு புத்தகத்திற்கும் இன்று உள்ள கணக்கு புத்தகத்திற்கும் 5 சதம் கூட வித்தியாசம் கிடையாது மருத்துவத்துறையில் இது நடக்காது. 5. மேற்படிப்பில் சில பாடங்களில் 1 இடம் அல்லது இரு இடங்கள் மட்டும் தான். இப்படி இருக்க சுமார் 25000 பக்கங்களை மொழிபெயர்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த புத்தகம் 5 வருடங்களுக்கு மேல் உபயோகப்படாது. அதாவது ஒரு வருடத்தில் 25000 பக்கங்களை மொழிபெயர்த்தால் 4 வருடம் உபயோகிக்கலாம். அதன் பிறகு 4 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு வருடத்திற்குள் 25000 பக்கங்களை மொழி பெயர்க்க வேண்டும் அந்த துறையில் 20 பேருக்கு குறைவாக இருக்கும் பொழுது யார் மொழி பெயர்க்க போகிறார். சரி அவர் மொழி பெயர்க்கிறார் என்றே வைத்துக்கொள்ளுவோம். அவ்வாறு மொழி பெயர்க்கும் நேரத்தில் அவர் அறுவை சிகிச்சை செய்தால் எத்தனை அறுவை சிகிச்சை செய்ய முடியும் ??? எனவே ”இந்தக் கேள்வி அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். இதைப்பற்றிய ஒரு புரிந்துணர்வு எமக்கும் தேவை என நினைக்கிறேன்.” என்றால் தயவு செய்து மருத்துவத்துறையை ஒரு மாதிரியாக எடுக்க வேண்டாம். அதே போல் நான் கூறிய (மருத்துவத்துறைக்காக நான் கூறிய கருத்துக்களை) பிற துறைகளுக்கு பொருத்த வேண்டாம் என்பதும் என் வேண்டுகோள் தமிழ் வழி மருத்துவக்கல்வி என்பதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன. அவை இத்துறைக்கே உள்ள சில பிரத்தியேக பிரச்சனைகள ஆகும். எனவே மற்ற துறைகளுக்கு சொல்லப்படும் கருத்துகளை வைத்து அந்த பிரச்சனைகள் தீராது. (மேலும் வளரலாம்). நடை முறை சிரமங்கள் என்னவென்று பார்த்தால் நேரமின்னை ஆட்கள் இல்லாதது இரண்டும் தான்
முதுகலை உடலியக்கவியல் புத்தகங்களை படிப்பவர்களை விட அதிகம் பேர் மொழிபெயர்க்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அப்படி மொழி பெயர்க்க கூடி அளவு போதுமான நபர்கள் இல்லை என்பது (வருதப்பட வேண்டிய) ஆனால் நிஜ செய்தி
என்று பார்த்தால் நான் கூற வருவது புரியும் மற்றபடி, இதில் நான் கூறிய கருத்துக்கள் மருத்துவத்துறைக்கு மட்டும்தான். அதுவும் மேலே உள்ள கணக்கினால் (arithmetic of number of pages vs number of students) மட்டுமே இதை எடுத்து பள்ளிக்கல்வியில் தமிழுக்கு எதிராக உபயோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் புருனோ மஸ்கரனாஸ் 20:27, 21 ஏப்ரல் 2008 (UTC)
பிற சுட்டிகள்இவற்றையும் பாக்க--Natkeeran 16:47, 20 ஏப்ரல் 2008 (UTC) --Kanags \பேச்சு 03:25, 21 ஏப்ரல் 2008 (UTC) அறிவியல் தமிழ் - சில கருத்துக்கள்பல்மொழிக் கல்வி தாய்மொழிக் கல்வியை விட சிறந்ததுதாய்மொழ்க் கல்வி நன்று என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல இருமொழிக் கல்வி நன்று என்றும் ஆய்வுகள் சுட்டுகின்றன. உலகமயமாதல் சூழலில் பல்மொழிக் கல்வியே சிறந்தது. தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு பெரும் தடைகள் இருக்கின்றன. தமிழ், ஆங்கில பிற மொழிகளை நாம் கற்க வேண்டும். அந்த விடயத்தில் நாம் சமரசம் செய்ய கூடாது. அது தற்போதைய யதார்த்தம் இல்லை என்றால் யதார்த்தை மாற்ற வேண்டும். தாய்மொழி எது?இயற்கையாகவே ஒரு குழந்தை அதூ கேட்கும் மொழியை தானும் பேச முற்படுகிறது. பெற்றோர்கள் ஆங்கிலம் அவ்வப்பொழுது பேசினாலோ, அல்லது ஊடகங்கல் ஆங்கில மயமாக இருக்கும் பொழுது ஒரு குழந்தையின் தாய் மொழி எதுவாக இருக்கும். ஆங்கில சூழலில் வளரும் ஒரு தமிழ் குழந்தையிம் தாய் மொழி தமிழா ஆங்கிலாம்? இந்த விடயத்தையும் தாய்மொழிக் கல்வியை பரிந்துரைப்போர் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழா, ஆங்கிலாம் என்பது ஒரு தலைமுறைப் பிரச்சினையா? (கனடாவில் அம்மாக்களுக்கு ஆங்கிலம் தெரியும், அம்மாவுக்கு தமிழ் தெரியும், பிள்ளைக்கு ஆங்கிலம் என்று ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டார். அதாவது ஈழத்தில் முதலில் ஆங்கில கல்வி இருந்தது, பின்னர் அது தாய்மொழிக் கல்வியாக மாறியது, தற்போது பிள்ளை கனடாவில் ஆங்கிலச் சூழலில் வாழ்கிறாள்.) ஏழைகளுக்கு/அல்லது தாழ்த்தப்பட்டோருக்கு தமிழ், மத்திய/மேல் வர்க்கத்துக்கு ஆங்கிலம், ஆக மேல் வர்க்கத்து ஆங்கிலமும் தமிழ் இலக்கியம்தமிழ்நாட்டில் யாருக்கு ஆங்கிலம் எட்டுவதில்லை என்பது கருத்தில்கொள்ளப்பட வேண்டிய விடயம். ஏழைக்கு இல்லை. தாழ்த்தப்பட்டோருக்கு அந்த சூழல் இல்லை. அதாவது தாழ்த்தப்பட்டோர் ஆங்கில கல்வி எட்டினாலும், திறனாக பேச எழுத சிரமங்கள் இருக்கும். ஏன் என்றால் ஆங்கில தொடர்பு அல்லது வாய்ப்புக்கள் அரிதாக அவர்களுக்கு கிடைக்கிறது. எனவே தாய்மொழிக் கல்வி என்று இந்த மக்களுக்கு தமிழை திணிக்க கூடாது. தமிழ்க் கல்வி பற்றி அரச முடிவு அனைத்து மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக அமைய வேண்டும். ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் கூடிய உதவி தர வேண்டும். தமிழக அரசின் இணையத்தளங்கள் அனேகமானவை ஆங்கிலத்தில் மட்டும்தமிழ்நாட்டில் அரச அலுவல் மொழியாக தமிழ் என்றுதான் அறிய முடிகிறது. ஆனால் அனேக இணையத்தளங்கள் ஆங்கிலம் மட்டுமே. ஆங்கிலத்திலாவது இருக்கின்றது எனபது ஒரு நல்ல விடயம்தான். ஆனால் ஏன் தமிழில் இல்லை? பொறி மூல மொழிபெயர்ப்புஇது சாத்தியமானதே. பல மொழிகளில் இவை உண்டு. மேற்கில் Real Time Translation கருவிகளே தற்போது ஆய்வில் உள்ளன. ஆனால் ஆங்கில-தமிழ் பொறி மூல மொழிபெயர்ப்புக்கு இன்னும் 15 வருடங்களுக்கு மேலே பொறுக்க வேண்டும். தமிழ்க்கணிமை மிகவும் மந்த நிலையில் இருக்கிறது. எ.கா 2004 பின்னர் உத்தம மாநாடுகள் நடைபெறவில்லை. ஒருங்குறியிலும் சொதப்பி இருக்கிறோம். ஆங்கிலம் உலக மொழி என்பது முடிந்த கதை அல்லஇன்று ஒப்பீட்டளவில் ஆங்கில அறிவியல், அரசியல், வணிகவியல், பயண மொழியாக இருக்கின்றது. ஆனால் இது முடிந்த கதை அல்ல. மொத்த பேச்சாளார்களில் சீனமே முதல். ஆசியாவில் 4( இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிங்கப்பூர்) மட்டுமே அது அரச அலுவல் மொழி. எனினும் நாம் எல்லோரும் நமது தாய்மொழிகளைப் புறக்கணித்து ஆங்கிலத்துக்கு மாறினால் அதை சர்வதிகார உலக மொழியாக்கலாம். கொரியன், கேர்பிறூ, யப்பானிஸ், யேர்மன்இன்று இங்கிருக்கு பல இலத்திரனியல் உறுப்புகள் கடைக்கு போனால் அங்கு இருக்கும் பல பொருட்களில் கொரியனும் ஆங்கிலமும் வேறு மொழிகளும் இருக்கும். சில வேளைகாளில் கொரிய மொழி மட்டும் இருக்கும். கொரியாவின் பொருளாதார நுட்ப எழுச்சி மகத்தானது. ஆனால் அவர்கள் தங்கள் மொழியை தக்கவைத்து உள்ளார்கள். இப்படி பல மொழிகள் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றன. மொழி துறந்து மேம்பாடு உண்டா?இதற்கு ஆபிரிக்கர்களையோ, ஆபிரிக்க அமெரிக்கர்களையோ, அல்லது அமெரிக்க முதற்குடிகளையோ எடுத்துகொள்ளலாம். இவர்கள் விரும்பி தமது மொழிகளை இழந்தவர்கள் இல்லை. காலனித்துவத்தால் பிற மொழி திணிக்கப்பட்டார்கள். இருப்பினும் இவர்களின் இன்றைய நிலை விரும்பத்தகக்து இல்லை. தமிழர்கள் தமிழை துறந்தால், அது அவர்களின் பூரண சுதந்திர முடிவாகா இருக்க செய்யும். விழைவுகள் ஏற்புடையாதக இருக்கமாட்ட என்பதே, வரலாறு சொல்லி தரும் பாடம். தமிழில் முடியுமா?விடை எளிது. நிச்சியம். பலர் கூறியது போல் தமிழிரால் முடிந்தால், தமிழால் முடியும். இருப்பினும் தமிழகம் அறிவியல் மயப்படுத்தப்படாமல், தமிழ் நிச்சியம் அறிவியல் மயப்பட முடியாது. ஆனால் தமிழகம் அறிவியல் மயப்படுத்தப்பட அறிவியல் தமிழ் உதவும். விக்கிப்பீடியா சமூகமும் அறிவியல் தமிழும்விக்கிப்பீடியாவில் பங்களிப்போர் பலரும் தமிழிலும் அறிவியல் தமிழிலும் நம்பிக்கை உடையவர்களே. இதில் என்ன சந்தேகம். ஆனாலும் பரந்த சமூகத்தில் எழும் கேள்விகளுக்கு நாம் திடமாக பதில் சொல்ல வேண்டும். நன்றி. --Natkeeran 20:00, 21 ஏப்ரல் 2008 (UTC) கோப்பைப் பதிவேற்று Not Working--Natkeeran 22:51, 21 ஏப்ரல் 2008 (UTC)
தமிழ் இணையம் / விக்கிப்பீடியாவில் தனித்தமிழ்ப் போக்குஅதீத தனித்தமிழ்ப் போக்கு --ரவி 00:34, 27 ஏப்ரல் 2008 (UTC) ரவி, வேறு ஒரு நண்பர் சுட்டிக் காட்டினார். படித்தேன். சில கருத்துக்களை இங்கு வைக்க விரும்புகிறேன். விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் வினோத், "நாசிசம்" "மொழி நாசிசமே அன்றி வேறில்லை." என்றெல்லாம் மிகக்கடுமையாக தாக்கியுள்ளார்.
--செல்வா 02:46, 27 ஏப்ரல் 2008 (UTC)
இங்கே நிர்வாக பொறுப்பிலிருக்கும்ஒருவர் தவியை நாசிசமாக எடுத்துகூறியிருப்பது வேதனைக்குறியதாக உள்ளது. இணையத்தில் தவியைப் போன்ற மக்களாட்சி நிலவும் இடத்தை காண்பது அறிது. பொது இணக்கப்பட்டுடனேயே எல்ல விதயங்களையும் மேற்கொள்கிறோம். இது அவருக்கும் தெரியும். தெரியாதவருக்கு விளங்கப்படுத்தலாம் தெரியாததைப் போல நடிப்பவருக்கு என் செய்ய? நல்ல தமிழ்ச் சொற்களை ஆக்கி ஆளவேண்டியது காலத்தின் கட்டாயம். இது தமிழ் வரலாற்றில் தொடர்ந்து எற்பட்டுவந்த ஒன்றாகும். முன்னர் அரசவையிலும் தமிழ்ச்சங்களிலும் செய்தவற்றை இங்கே செய்கிறோம். தன்னை வளர்த்துக்கொள்ளாத எந்த மொழியும் அழிந்துவிடும் என்பதில்சந்தேகமில்லை. --Terrance \பேச்சு 03:34, 27 ஏப்ரல் 2008 (UTC)
--இரா. செல்வராசு 04:30, 27 ஏப்ரல் 2008 (UTC)
அனைவருக்கும், வினோத் விக்கிப்பீடியாவுக்கு வெளியில் இதைப் பற்றி எழுதியதில் தவறில்லை. தவிர, இதை தமிழ் விக்கிப்பீடியா குறித்த விமர்சனமாக கருதாமல் பொதுவாக தமிழ் இணையத்தில் பெருகி வரும் நல்ல தமிழ்ப் போக்கு, தனித்தமிழ்ப் போக்கு குறித்த விமர்சனமாக கொள்வோமே? எதைப் பற்றியும் தன்னுடைய கருத்துகளை தன் வலைப்பதிவில் அவர் எழுதலாம். அங்கு தனக்கு இயல்பான நடையில் அவரால் எழுத இயலும். என்னால் இயன்ற அளவு தமிழ் விக்கிப்பீடியாவின் உண்மை நிலையை அங்கு விளக்க முற்பட்டுள்ளேன். அதை மட்டுமே நம்மால் செய்ய இயலும். வினோத், நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள "தமிழ் விக்கிப்பீடியா - இவை அன்று" கொள்கைகளை எழுதியதே நான் தான். 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவை. அதற்குப் பிறகான தமிழ் இணைய அனுபவத்திலும் எண்ண வளர்ச்சியிலும் அந்தக் கொள்கைகளில் இறுக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நல்ல தமிழ் எதிர்ப்பாளர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: ஆங்கிலம் முதன்மையாகப் பேசப்படாத நாடுகளில் ஓரிரு ஆண்டுகளாவது படித்து /பணியாற்றிப் பாருங்கள். உங்கள் கருத்துகளில் பெருமளவு மாற்றம் வரும் என்று உறுதியாக நம்புகிறேன். --ரவி 11:07, 27 ஏப்ரல் 2008 (UTC) தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
தமிழ் மொழி வழியான அனைத்து துறை சிந்தனைகள், தகவல்களை குவிப்பது தமிழ் விக்கிபீடியாவின் அடிப்படை நோக்கம் தான் என்றாலும், இது ஒரு தமிழ் வளர்ச்சி மையம் அன்று என்பதை நினைவில் கொள்ளலாம். இம்மாதிரியான பங்களிப்புகளை மட்டும் தர விரும்புவோர், தமிழ் விக்சனரிக்குப் பங்களிக்கலாம். அளவுக்கு மிஞ்சிய தூய தமிழ் நடையை கட்டுரைகளில் திணிப்பதைத் தவிர்க்கலாம். இது குறித்த அளவுக்கு அதிகமான கலந்துரையாடல்கள் சில நேரங்களில் கட்டுரைகளுக்கு பங்களிப்பதிலிருந்து, பயனர்களை திசை திருப்பக் கூடும்.
எழுத்துச் சீர்மை, மொழிச் சீர்மை போன்றவற்றின்பால் தனிப்பட்ட விக்கிபீடியர்கள் பலருக்கு ஈடுபாடு இருக்கலாம். ஆனால், விக்கிபீடியாவின் அடிப்படைக் கொள்கையின்படி அதற்கென்று எந்த ஈடுபாடும் கிடையாது. பொதுவழக்கில் உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழில் தட்டச்சு செய்வதற்கு ஏற்றவாறு தமிழ் எழுத்துக்களை எளிமைப்படுத்த வேண்டும் என பலர் கருதலாம். இது சரியாகினும், தவறாயினும், யூனிகோடு நிர்வாக அமைப்பு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு முதலிய பிற அமைப்புகளிடம்தான் முறையிட வேண்டுமே தவிர, தமிழ் விக்கிபீடியாவில் முதலில் அறிமுகப்படுத்தக் கூடாது. இதுபோன்ற சீர்திருத்தங்கள் பொது வழக்கில் வந்தபின் இங்கு செயல்படுத்தலாம். சில சிக்கல்கள் மீடியாவிக்கி மென்பொருள் காரணமாகவோ அல்லது பிற காரணங்களினாலோ தமிழ் விக்கிபீடியாவிற்கு மட்டும் ஏற்படலாம். அவற்றிற்கான தீர்வை விக்கிபீடியர்கள் கூடி முடிவு செய்யலாம். 121.247.218.159 06:03, 27 ஏப்ரல் 2008 (UTC) (வினோத்) 3000 விக்கிப்பீடியர்கள்தற்பொழுது 3000 விக்கிப்பீடியர்கள், விக்கிப் பயனர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்! இது ஒரு குறிப்பிடத்தக்க நிலை. பதிவு செய்பவர்களில் ஒரு 10% பங்களித்தாலும், நாம் ஆகா ஓகோ என்னும் அளவில் வளர்வோம். வேண்டாம், ஒரு 1% பங்களித்தாலும் பெரும் முன்னேற்றம் அடைவோம். நானறிய பயனர்களில் ஓரளவிற்கு பங்களிப்பவர்கள் ஒரு 10-15 பேரே. மயூரனாதன் ஒருவரே 1700 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கி எழுதியுள்ளார். புது முனைப்போடு கட்டுரை ஆக்கத்தில் கருத்தைச் செலுத்துவோம். கட்டுரைகளை சீர்படுத்துவதில் கருத்தைச் செலுத்துவோம். ஒரு கணிசமான தொலைவு கடந்து வந்திருக்கின்றோம். பங்களித்த யாவருக்கும் நன்றிகள். --செல்வா 13:53, 28 ஏப்ரல் 2008 (UTC) Gadgetsஆங்கில விக்கியிலிருந்து தேவைப்படும் எனக்கருதிய Gadgets(கருவிகள்?)ஐ தவியில் இணைத்துள்ளென். இவற்றை சிறப்பு:Preferences இல் உள்ள Gadgets என்னும் டப் மூலம் உங்கள் கணக்கிற்கு முடுக்கிவிடலாம். அவற்றை பயன்படுத்தி மகிழவும். ஜாவாநிரலில் இயங்கக்கூடிய தமிழ் தட்டச்சு செயலி இருந்தால் இங்கே இணைக்கலாம்.--Terrance \பேச்சு 15:37, 2 மே 2008 (UTC)
பயனர்களின் பங்களிப்புகள்தமிழ் விக்கிப்பிடியாவில் ஒரே ஓரெழுத்தைத் திருத்தி பங்களித்தவர்களுக்கும் நன்றி, ஆனால் பேராக்கம் தந்தவர்களை நினைத்து நாம் எல்லோருமாக ஊக்கம் பெறுவது இன்னும் இனியது. தொடங்கிய கட்டுரை எண்ணிகை மட்டுமே முக்கியமானதல்ல என்பதை நாம் யாவருமே உணருவோம்; பல பயனர்கள் பல அடிப்படையான வளம் சேர்க்கும் களப்பணிகளும் பின்புல ஆக்கங்களும் தந்து தமிழ் விக்கிப்பீடியாவை இன்றளவும் வளர்த்து, இந்திய மொழிகளில் ஒரு முன்னணி விக்கிப்பீடியாவாக நிலைநிறுத்தி வந்திருக்கின்றார்கள். எல்லோருக்கும் நன்றி. கீழே சில முன்னணி பயனர்கள் தொடங்கிய கட்டுரைகளின் எண்ணிக்கைகளைப் பதிவு செய்கிறேன்:
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள மொத்தம் 13, 675 கட்டுரைகளில், மேற்கண்ட விக்கிப்பயனர்களில் 20 பேர் மொத்தம் 11,150 கட்டுரைகள் தொடங்கியுள்ளார்கள். இன்னும் ஒரு 10-15 பேர்கள் நல்ல முறையில் பங்களித்துள்ளார்கள். அண்மையில் சேர்ந்துள்ள சில விக்கிப்பயனர்கள் மிக அருமையாக ஆக்கங்கள் செய்து வருகின்றார்கள். புதிய ஊக்கத்துடன் இன்னும் விரைந்து முடுக்கதுடன் பணியாற்றுவோம்.--செல்வா 22:28, 3 மே 2008 (UTC) --செல்வா 22:13, 3 மே 2008 (UTC)
நான் ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு முன் பங்களிக்கத் தொடங்கிய பொழுது, தமிழ் விக்கிப்பீடியா, உலக மொழிகளின் வரிசையில் 68 ஆம் இடம் முதல் 71 ஆம் இடம் வரை அலைந்து கொண்டிருந்தது, பயனர்:நிரோஜன் சக்திவேல் புயல்வேகத்தில் பங்களித்து ஓரு முறை தமிழ் விக்கிப்பீடியாவை 61 ஆவது இடத்திற்கு நகர்த்தினார், ஆனால், மீண்டும் நாம் பழைய இடத்திலேயே இருக்கின்றோம். பயனர்கள் இன்னும் சுறுசுறுப்பாக பங்களிக்க வேண்டும். --செல்வா 23:25, 3 மே 2008 (UTC)
சுந்தர், நான் உங்களுக்கு "உவமைப் பயனர்" என்ற பட்டத்தை வழங்குகிறேன் :) செல்வா, விவரங்களை நேரம் எடுத்துத் தொகுத்துத் தந்ததற்கு நன்றி. நான் எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் 2005ல் எழுதியவை. 200வர் பதக்கம் கிடைக்காது என்பதால் :) நானும் மற்றவர்களைப் போல பெரும் பங்களித்து ஆயிரவர் பதக்கம் வாங்க வேண்டும் என்று தூண்டுதலாக இருக்கிறது. நன்றி--ரவி 08:34, 4 மே 2008 (UTC)
பார்க்கவும். எந்த ஓர் இந்தியமொழிக்கு வந்தாலும், தமிழில் எளிதாக மாற்றிவிடலாம். இந்திய மொழிகள் எல்லாம், தமிழ்/திராவிட சொற்றொடர் அமைப்பு கொண்டவையே. ஆனால் பங்களிக்கும் பயனர்கள் எண்ணிக்கை பன்மடங்கு விரிவடைய வேண்டும். அதுவே சிறந்தவழி. விரிவடையும்.--செல்வா 18:14, 4 மே 2008 (UTC)
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் பங்களிப்புஆங்கில விக்கிபீடியாவிற்கு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் பங்களிப்பு பற்றி slashdotல் படித்த நியாபகம். இங்கும் இது போல ஏதாவது முயலலாமே. --V4vijayakumar 12:46, 8 மே 2008 (UTC)
விக்கிப்பீடியா கொள்கைகளும் புதியவர்களும்கிரந்த எழுத்துப் பயன்பாடு போன்ற கொள்கைகளில் தமிழ் விக்கிப்பீடியாவிலேயே தெளிவான இறுக்கமான கொள்கை ஏதும் இல்லாத நிலையில் புதிய பங்களிப்பாளர்களிடம் இவை குறித்து உரையாடுவதைத் தவிர்க்கலாம். ஏனெனில் அதை அவர்களின் ஆர்வப்புலத்துக்கு எதிரானதாகவும் தனிப்படவும் புரிந்து கொள்ளப்பட்டு விக்கிப்பீடியாவுக்கு வெளியில் தவறான புரிந்துணர்வைப் பரப்பவே வித்திடும். வருங்காலத்தில் அவர்கள் வேறு புலங்களில் பங்களிக்கக்கூடிய நல்ல கட்டுரைகளும் நமக்கு கிடைக்காமல் போகக்கூடும். எனவே, புதியவர்கள் எப்படி எழுதினாலும் அவர்களை ஓரிரு மாதம் அப்படியே விட்டு அவர்களை விக்கி நடைமுறைகளைப் புரிந்து கொள்ளச் செய்வோம். தவிர பல கட்டுரைகளிலும் ஒரு ஏற்பில்லாத மாற்று நடை இருக்கும் போது, புதியவரின் ஒரு கட்டுரையில் மட்டும் உரையாடுவது சரியாக இருக்காது. வினோத் வந்த புதிதில் நடந்த மஞ்சுஸ்ரீ உரையாடல் அவரைச் சோர்வடையச் செய்ததும் பிறகு அவர் விக்கி நடைமுறைகள், நம்மைப் புரிந்து கொண்ட பிறகு உற்சாகமாகவும் இணக்கமாகவும் பங்களிக்க முன்வந்ததையும் கவனிக்கலாம். --ரவி 10:37, 16 மே 2008 (UTC)
செல்வா, உங்கள் கருத்தை ஏற்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால், புதியவர்களை வழிப்படுத்தும் முன் அது குறித்து தெளிவான கொள்கையும் அது எல்லா விக்கிப்பீடியா பக்கங்களிலும் செயற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், "அந்தக் கட்டுரையில் மட்டும் சமசுகிருதம் / கிரந்தம் இருக்கு, அதை விட்டுட்டு என் கட்டுரையில மட்டும் கேட்கிறீங்க" என்ற கேள்வி எழுதவது இயல்பு. அதற்குத் தகுந்த விடை நம்மிடம் இருக்காது. கடைசியில் ஒரு பங்களிப்பாளரைச் சோரச் செய்தது மட்டுமே மிஞ்சும். கிரந்த எழுத்து தவிர்த்து எழுதுதல், அல்லது குறைத்து எழுதுதல் போன்ற கொள்கைகள்,வழிகாட்டல்கள் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டு செய்ய வல்லவை. அத்தகைய முடிவெடுப்பில் பெரிய அளவிலான பங்களிப்பாளர்கள் கலந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதியே ஏதேனும் ஒரு கொள்கை முடிவெடுப்பதைத் தாமதப்படுத்தி வருகிறோம். இல்லாவ்விட்டால், "முதலில் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய 4,5 பேர் சேர்ந்து தங்கள் மொழி நடையை மற்றவர் மேல் திணிக்கிறார்கள்" என்ற குற்றச்சாட்டு வரும். எத்தனை பங்களிப்பாளர்கள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும், இன்னும் எவ்வளவு காலம் பொறுப்பது என்று தெரியவில்லை. ஆனால், நாம் இன்னும் கொஞ்சம் பொறுக்கலாம் என்றே தோன்றுகிறது.--ரவி 17:08, 16 மே 2008 (UTC) பன்மொழிகளின் வரிசையில் தமிழ் விக்கிப்பீடியா ஓரிடம் முன்நகர்வு!13,803 கட்டுரைகள் எழுதி 75 மில்லியன் மக்களுடைய தமிழ்மொழி விக்கிப்பீடியா 68 ஆவது இடத்தில் இருந்து 67 ஆவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. யாரைத் தாண்டி நாம் 67 ஆவது இடத்தைத் தற்பொழுது (!) பிடித்தோம்? இந்தோனேசியாவில் உள்ள சாவாத் தீவில் மேற்கே சுந்தா என்னும் மக்கள் பேசும் சுந்தனீசு அல்லது சுண்டனீசு மொழி விக்கிப்பீடியாவைத் தாண்டி வந்துள்ளோம். யார் நம் முன்னே இருக்கிறார்கள்? 1.6 மில்லியன் மக்கள் பேசும் லாத்வியன் மொழி விக்கிப்பீடியா. அதற்கும் முன்னே நிற்கும் மொழி? இத்தாலியின் வடமேற்கே 2 மில்லியன் மக்கள் பேசும் பீடெமாண்டெயீசு மொழி விக்கி நம்மைவிட 1600 கூடுதலான கட்டுரைகளுடன். அதற்கும் முன்னே சில ஆயிரம் மக்களே பேசும் செயற்கை மொழியாகிய ஈடோ என்னும் எசுபராண்ட்டோ செயற்கை மொழியின் கிளை மொழி!! இப்படியாக மிகச் சிறு தொகையாக உள்ள பிற மொழியாளர்கள் நம் முன்னே உள்ளனர். இக்கட்டுரை எண்ணிக்கை ஒரு பெரும் பொருட்டல்ல என்பது உண்மைதான். கட்டுரைகள் பயனுடைய கருத்துக்களைத் தாங்கி நல்ல தமிழ் நடையில் இருக்கவேண்டும் என்பதே நம் குறிக்கோள். என்றாலும் சிறிது போட்டி மனப்பான்மையுடன் முன்னேறவும் முனையலாம். விரைவில் 20,000 கட்டுரைகளை அடைய வேண்டும்!!----செல்வா 16:32, 16 மே 2008 (UTC) பொதுவான உரைநடைப் பிழைகள்பல கட்டுரைகளை உரை திருத்தும் போது சில உரைநடைப் பிழைகளைப் பரவலாகக் காண இயல்கிறது. இது பற்றி ஏற்கனவே சுட்டி இருந்தாலும் நினைவூட்டலுக்காக இன்னொரு முறை:
கிரந்தம் தவிர்க்க எளிய வழிமுறைகள்
இஷ்டம் -> விருப்பம். சந்தோஷம் - > மகிழ்ச்சி கஷ்டம் - > துன்பம், முடை, இடர், இடர்ப்பாடு, இன்னல், தடை, இடைஞ்சல் ஸ்மைல் - > புன்னகை
வருஷம் - > வருடம்; வருசம். ஆண்டு (ஆண்டுவிழா, ஆண்டுநிறைவு என்னும் வழக்குகள் நோக்குக) விஷயம் - > விசயம், விதயம், விடயம். (இது இன்னதென்று பொருள் புரியாது பயன் படுத்தும் ஒரு சொல். பெரும்பாலான இடங்களில் செய்தி ("சேதி",) குறிப்பு, நிகழ்வு என்று பொருள்படும் விசேஷம் - > விசேசம், விசேடம், சிறப்பு, கொண்டாட்டம் விஷம் - > விசம், விடம் (விசம், விடம் என்று ஒலிப்பைத் திரித்துச் சொன்னாலும் பாம்பு கொத்தினால் உயிர் போவது உறுதி :) ) நஞ்சு ஷாந்தி -> சாந்தி ஷங்கர் - > சங்கர் ஹனுமான், ஹிந்தி, ஹிந்து, ஹோட்டல், ஹொகேனக்கல் - > அனுமான், இந்தி, இந்து, ஓட்டல், ஒகேனக்கல் (ஹகரத்தை விடுத்து அதை அடுத்து வரும் உயிர் ஒலியைக் கொள்ள வேண்டும்) ராஜா, ரோஜா, ஜாதி, ஜோதிடம், ஜோதி - > ராசு, ராசா, ரோசா, சாதி, சோதிடம், சோதி. (முதல் சகரத்தை வல்லினமாக பலுக்கினால், ஒலித்திரிபு குறைவே) மேல் உள்ள எடுத்துக்காட்டுகளைக் கொண்டு, கிரந்தம் தவிர்த்துத் தமிழில் எழுதுவது தற்போதும் பெரு ஊடகங்களிலும் வழக்கில் உள்ளதே என அறியலாம். சில சொற்களைக் கிரந்தம் தவிர்த்தும் சிலவற்றில் கிரந்தம் தவிர்க்காமலும் எழுதுவதற்கு போதிய தமிழாக்க முயற்சிகளும் பழக்கமும் இல்லாததே காரணம். எனவே, கிரந்தம் தவிர்த்து எழுதுவதை ஏதோ புதிய நடைமுறையாகக் கருதத் தேவை இல்லை.
உரை திருத்தக் குழுஉரை திருத்தும் ஆர்வலர் குழுவுக்கு ஆட்கள் தேவை. கோபி விடுப்பில் இருக்கிறார். சிவா, கனகு உரை திருத்தங்கள் செய்வதைக் காண இயல்கிறது. இன்னும் கூடுதலானோர் தங்கள் பெயரைத் தந்து அவ்வப்போது உதவினால், உரை திருத்தக் குழுவுக்கு என்று ஒரு பக்கம், திட்டம், வழிமுறை உருவாக்கலாம். --ரவி 23:34, 16 மே 2008 (UTC)
செல்வராசு, விக்கிப்பீடியாவில் எல்லாரும் எல்லா பணிகளையும் தாராளமாகச் செய்யலாம். எந்தக் குழுவிலும் பதிந்து கொண்டவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால், வார்ப்புரு திருத்த, பகுப்புகள் சேர்க்க, அழகுபடுத்த, விசமக்காரர்களைத் தடுக்க என்று குட்டிக் குட்டிப் பணிகளுக்குத் தனித்தனிக் குழுக்கள் அமைத்து, வழிகாட்டுப் பக்கங்கள் தருவது இந்தப் பணிகள் நோக்கிய உழைப்பைப் பெருக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவும். இது எல்லா விக்கிப்பீடியாக்களிலும் உள்ள வழமையே. எல்லா தகவல்களையும் ஆலமரத்தடியில் இடுவதற்குப் பதில் அந்தத் திட்டப் பக்கங்களில் இட உதவும். தமிழ் விக்கிப்பீடியாவிலேயே கூட ஏற்கனவே நாடுகள் திட்டம், மொழிகள் திட்டம் என்று பல திட்டக்குழுக்கள் உள்ளன.--ரவி 11:08, 17 மே 2008 (UTC) Account created automatically ??அண்மையில் இப்படி Account created automatically என்று பல பயனர் கணக்குகள் உருவாகுகின்றனவே, இவை எதனால் என்று யாருக்கும் தெரியுமா? ஒரே பயனர் கணக்கைக் கொண்டு பல மொழி விக்கிகளில் பங்களிக்கலாம் என்னும் திட்டத்தின் பயனாக ஒருக்கால் இப்படி உருவாகின்றனவே என்று ஒரு ஐயம். தெரிந்தவர்களை விளக்க வேண்டுகிறேன். நன்றி.--செல்வா 20:09, 27 மே 2008 (UTC)
Wikipedia என்னும் இப்பகுப்பை (?) விக்கிப்பீடியா என தமிழில் மாற்ற வேண்டும்Wikipedia என்னும் இப்பகுப்பை (?) விக்கிப்பீடியா என தமிழில் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். பயனர்களும், நிருவாகிகளும் என்ன நினைக்கிறார்கள். ஆங்கிலத்தில் சுருக்கமாக குறிக்க WP என்று இடுவதுபோல, நாமும் இங்கு "விப்பீ" (= விக்கிப்பீடியா) என்று குறிக்கலாம் என்ரு நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.--செல்வா 20:16, 27 மே 2008 (UTC)
ஆம், நிறைய மொழிகளில் அவரவர் மொழியில் தான் பெயர்வெளிகள் உள்ளன, தமிழில் மட்டும் விக்கிப்பீடியா,விக்சனரி என்று எல்லா இடங்களிலும் இந்த வழுக்கள். விரைவில் களைய வேண்டும். குறுக்குவழி என்பதால் வி என்று மட்டும் கூட அழைக்கலாம். வி என்று தொடங்கும் வேறு பெயர்வெளி ஏதும் இல்லை. வி என்று எழுத பெரும்பாலான விசைப்பலகைகளில் இரண்டு விசை அழுத்தங்கள் தேவை. விப்பீ என்று எழுதினால் 6 அழுத்தங்கள் தேவைப்படுகின்றன !!--ரவி 22:17, 27 மே 2008 (UTC) இது பற்றிய வழு பதியப்பட்டு பல நாட்கள் ஆகிறது ஒரு முன்னேற்றத்தையும் காணோம். இங்கே சென்று நீங்களும் ஒரு முறை எடுத்துக் கூறினால் விரைப்படுமோ என்னவோ?--Terrance \பேச்சு 06:57, 1 ஜூன் 2008 (UTC)
நன்றி terrance. http://tamilwikipedia.blogspot.com/2008/06/blog-post.html இல் அறிவித்திருக்கிறேன். tamil wiktionary, wikibooks, wikisource தளங்களிலும் பெயர்வெளிகளைத் தமிழில் மாற்ற வழு பதிய வேண்டும்--ரவி 09:04, 7 ஜூன் 2008 (UTC) மிக்க டெரன்சு! உங்கள் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஆக்கம் தருகின்றது. நன்றி.--செல்வா 12:33, 7 ஜூன் 2008 (UTC) ஒரு தவறு நடந்துவிட்டது. விக்கிப்பீடியா பேச்சு என்ற பெயர்வெளிக்கு மாறாக விக்கிப்பீடியா பேச்ச என்றாகியுள்ளது. -- சுந்தர் \பேச்சு 15:39, 7 ஜூன் 2008 (UTC) இன்று (ஜூன் 2, 2008) 14,000 கட்டுரைகளை எட்டுவோமா?நவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியது. இன்றோ நாளையோ நாம் 14,000 கட்டுரைகளை எட்டுவோம். இப்படி 6 மாதங்களில் 2,000 கட்டுரை எழுதியிருப்பது மகிழ்ச்சியை அளித்தாலும், இந்த விரைவு போதாது (அதற்காக செயற்கையாக, கட்டுரை எண்ணிக்கையை கருத்தில் கொண்டு எழுதவேண்டாம்.). சராசரியாக நாம் ஒரு நாளைக்கு 7-10 கட்டுரைகள்தாம் எழுதுகிறோம். இது குறைந்தது நாளொன்றுக்கு 30 கட்டுரைகளாக உயர்தல் வேண்டும். பல நல்ல புதிய பங்களிப்பாளர்கள் வந்து ஆர்வமாய் ஆக்கம் தருகிறார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. Werklorum, செல்வராசு (இவர் புதியவர் அல்ல :) ), கார்திக், முகுந்த் குமார், வேந்த அரசு போன்று இன்னும் பலர் வரவேண்டும். மதிபாலா, சிவமணியன், நகுலன், இமலாதித்தன், கார்த்திகேயன், Srihari (இவர் புதியவர் அல்ல!) , Srkris, போன்ற இன்னும் பலரும் வரவேண்டும். நிரோஜன் மீண்டும் களத்தில் இறங்கி இருக்கின்றார். எப்படியாவது நாளொன்றுக்கு 30 கட்டுரைகள் வீதம் எழுத முயலவேண்டும். அடுத்த 2,000 கட்டுரைகளை 3 மாதத்தில் முடிக்க முயலலாமா?--செல்வா 12:31, 2 ஜூன் 2008 (UTC) 14,000 கட்டுரைகள்ஜூன் 4, 2008 அன்று தமிழ் விக்கிப்பீடியா 14,000 கட்டுரை இலக்கை அடைந்துள்ளது.--செல்வா 03:54, 4 ஜூன் 2008 (UTC)
சீன மொழிச் சொற்களுக்கு ஒரு சீரான முறை தமிழில் வேண்டும்சீன மொழிச் சொற்களை எப்படி தமிழில் ஓரளவுக்கு சீர் செய்து எழுதுதல் என்று எங்காவது கருத்தாட வேண்டும் (ஆலமரத்தடி?). ஏனெனில், ஒரு சீனக் கருத்தெழுத்தை ஓரிடத்தில் ஒருவாறு எழுதினால், எல்லா இடங்களிலும் அப்படியே எழுதுவது நல்லது. சீன மொழி இவ்வகையில் எளிதானதே (ஆங்கிலம் போல் இடத்துக்கு இடம் மாறுவதல்ல). சீன மொழியில், ஓரொலி குறைந்தது 4 வகையான துடி அல்லது ஆரோசையுடன் (pitch) வருவது ஒன்றுதான் புதிதாக கற்பவர்களுக்குக் கடினம். கீழிருந்து மேலோசை, மேலிருந்து கீழோசை, தாழ் ஓசை, உயர் ஓசை ஆகிய நான்கினையும் தமிழில் குறிக்க ஒரு வகை வகுக்கவேண்டும். நான் செய்து தர இயலும், ஆனால், வரவேற்பு இருக்குமா என அறியேன். புதிதாக ஒன்றை நுழைக்கிறேன் என்று எதிர்ப்பும் கிளம்பலாம். இவற்றின் தேவையை இன்னும் பலர் உணரவில்லை!--செல்வா 16:13, 5 ஜூன் 2008 (UTC)--செல்வா 16:15, 5 ஜூன் 2008 (UTC)
dopdfபுதிய dopdf பதிப்பு வெளிவந்துள்ளது பீட்டாநியூஸ் தளத்தூடாகப் பதிவிறக்கம் செய்யலாம். ஏற்கனவே நான் அனுப்பிய Bug Report இற்கு ஏற்பத் தமிழ் மெய் எழுத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் எனக்கு அறிவித்துள்ளனர். வேறேதேனும் தமிழ் எழுத்துக்களை மாற்றுவதில் பிரச்சினை இருந்தால் தயவுசெய்து ஆலமரத்தடியில் அறியத்தரவும். அவர்களை மீண்டும் நான் தொடர்பு கொள்கின்றேன். --உமாபதி \பேச்சு 18:44, 5 ஜூன் 2008 (UTC)
செல்வராசு, பீடிஎப் ஒருங்குறியில் அமைந்த தேடல்கள் திருப்தி அளிக்கவில்லை. தமிழில் பெயருள்ள கோப்புக்களை அக்ரோபாட் றீடர் 7 திறக்கவில்லை ஆயினும் அக்ரோபாட் 8 இல் பிரச்சினை இல்லை. தமிழ்ப் பெயருள்ள கோப்புறையிலும் டூபீடிஎப் வேலை செய்கின்றது அக்ரோபாட் றீடர் 8 இருந்தால் சரி. பீடிஎப் ஒருவழிமுறையிலான மாற்றீடு போலவே தெரிகின்றது. புதிய வரவிருக்கும் பதிப்பில் எதாவது மாறுதல்கள் இருக்குமா தெரியவில்லை (பார்க்க http://www.betanews.com/article/Adobe_to_unveil_its_second_edition_of_PDF_Print_Engine/1212100052). நாள் மீண்டும் நீங்கள் குறிபிட்ட விடயங்களுடன் தொடர்பு கொள்கின்றேன். --உமாபதி \பேச்சு 17:47, 7 ஜூன் 2008 (UTC)
வாழும் தனி மாந்தர்களின் வரலாறுகள்இக் கொள்கையையும் பார்க்க வேண்டுகிறேன்: வாழும் தனி மனிதர்களின் வரலாறுகள். ஏன் எல்லா நடிகர்கள் நடிகைகள் பற்றியும் கட்டுரைகள் இருக்க வேண்டும்? நாடக, தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் பணியாற்றும் எல்லோருக்கும் தனிக் கட்டுரைகள் இருக்க வேண்டுமா? அப்படியென்றால், ஏன் மின்வாரியாத்தில் பணியாற்றும் ஒருவருக்கோ, பேருந்தில் நடத்துநராக பணியாற்றும் ஒருவருக்கோ தனி கட்டுரைகள் இருக்கலாகாது? தனி நேர்த்தி, தனிச்சிறப்பு ஏதும் எய்தாமல் இருந்தாலும் ஊடகத்துறையில் இருந்தால் மட்டும் தனிக் கட்டுரைகள் இருக்கலாமா? அதுவும் வாழும் தனி மாந்தர்களுக்கு? வேளாண்மைத் தொழிலில் பணியாற்றும் ஒருவர் பலருக்கு உண்மையான வாழ்வளிப்பது மட்டுமல்லாமல், தன் உணவு போக பலருக்கு அடிப்படையான உணவை விளைவித்துக் கொடுத்து உதவுகிறார். ஏன் ஒவ்வொரு வேளாண்மையரைப் பற்றியும் கட்டுரைகள் இருக்கலாகாது? வரும் செய்தியை படிப்பதால் அவர்கள் அரிய செயல்கள் செய்தவர்கள் ஆவார்களா? நான் இது பற்றி அதிகம் கருத்தாட விரும்பவில்லை, ஆனால் இது பற்றிய ஒரு தெளிவான சிந்தனை வேண்டும் என்று மட்டும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். --செல்வா 22:43, 9 ஜூன் 2008 (UTC)
தானியங்கிகளின் செயல்பாடுகள்
சமுதாயம், சமூகம், குலம், குடும்பம் Society, Community, Tribe, Family, குமுகாயம், குமுகம் ???"குமுகம் = சமூகம் (குமுகம் என்பது குமிந்து கிடக்கும் மக்கள் கூட்டம். கும் என்னும் வேர் சம் என்று திரிந்து சமூகம் என்ற இருபிறப்பிச் சொல்லை உருவாக்கும். தமிழ்ச்சொல் இருக்கும் போது கூடியமட்டும் இரு பிறப்பிச் சொல்லைத் தவிர்ப்பது நல்லது." "குமுகங்களின் ஆயம் குமுகாயம்; (பல குமுகங்களின் தொகுதி குமுகாயம்) இதைச் சமுதாயம் என்று இருபிறப்பிச் சொல்லாய் அழைப்பதையும் தவிர்க்கலாம்." http://valavu.blogspot.com/2006/07/blog-post.html முன்னரும் பலர் பல இடத்தில் உரையாடி இருந்தாலும், குமுகம் என்ற சொல்லை Community ஈடாக பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அப்படியானால், குமுக வாசல் என்றல்வா வரவும். சிக்கல் என்னவென்றால், தற்போது சமூகம் சமுதாயம் society குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.
விக்சனரி பயனர்களுக்கு பாராட்டுக்கள், நன்றிநான் இன்று தேடிய பல சொற்கள் விக்சனரியிலேயே சிக்கின. சில பொருந்த விட்டாலும், என்றுமில்லாத வாறு இப்போது கூடிய சொற்கள் சிக்குகின்றன. நன்றி. --Natkeeran 15:11, 14 ஜூன் 2008 (UTC) பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Citizendiumபிற கலைக்களஞ்சியங்களில் என்ன நடக்கிறது என்று ஒரு முறை சென்று பாருங்கள்.
விக்கியிடை இணைப்புகள்என்னால் சுந்தர்பாட்டை அடிக்கடி இயக்க முடியவில்லை. (இரவி, அதை இயக்க முன்வந்துள்ளார்.) நல்ல வேளையாக யாரோ (வெர்க்குலோரம்?) புதுக்கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியிலிருந்து இணைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு இறுதித் தீர்வு வரவுள்ளது என நினைக்கிறேன். இந்தப் பக்கத்தைப் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 04:12, 18 ஜூன் 2008 (UTC) கட்டாயம் செய்ய வேண்டியதுநம் வாசகர்களைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு - m:General Survey Translation. நம்மில் சிலராவது இதில் இணைந்து கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். நான் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 04:53, 18 ஜூன் 2008 (UTC) தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைதமிழ் விக்கிப்பீடீயா என்ற பக்கம் முதற்பக்கத்து செல்கிறது. அதை ஒரு கட்டுரையாக ஆக்கவது கூடிய பொருத்தமாக இருக்கும். என்னிடன் ஏற்கனவே சில பந்திகள் உண்டு. பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran 19:00, 26 ஜூன் 2008 (UTC)
அரசாட்சி, பொருளாதாரம், சட்டம், சமூகம், சமயம், கருத்தியல்
மேலே சுட்டப்பட்ட கருத்துருக்கள் பல கட்டுரைகளுக்கு அடிப்படையாக அமைவதால், இயன்றவரை முக்கியத்துவம் தந்து தொடங்கி விரிபுபடுத்தவும். இவை சமூகம், பண்பாடு ஆகிய தாய்ப் பகுப்புகளுக்குள் வருகின்றன. இவ்வாறே பிற தாய்ப் பகுப்புகளுக்கும் அடிப்படைக் கருத்துக்கள் உண்டு என்பதும் இங்கு சுட்டத்தக்கது. --Natkeeran 15:54, 28 ஜூன் 2008 (UTC) |
Portal di Ensiklopedia Dunia