விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு125
தொடர்ச்சியான ஐ.பி தடை
மேலே குறிப்பிட்ட ஐ.பிகள் விசமத் தொகுப்பினை தொடர்ந்தும் செய்து கொண்டிருப்பதால் மேற்குறித்த ஐ.பிகளின் தொடர்களுக்கு தொடர் தடை (Range blocks) விதிக்கலாம் என பரிந்துரைக்கிறேன். உங்கள் கருத்தினையும் தெரிவியுங்கள். @Neechalkaran and Ravidreams: --AntanO (பேச்சு) 16:15, 7 ஏப்ரல் 2020 (UTC)
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்வணக்கம். மயிலாடுதுறை மாவட்டம் அண்மையில் உருவாக்கப்பட்ட பின்னர் Suresh myd என்ற பயனர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் பற்றிய கட்டுரைகளில் சிலவற்றில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் என்ற வகையில் கட்டுரையின் உள்ளடக்கத்திலும், தகவற்பெட்டியிலும் மாற்றங்கள் செய்து வருகிறார். அதனடிப்படையில் அந்தந்த பகுப்பில் சேரும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் என்ற புதிய பகுப்பினை உண்டாக்கி அந்தந்த இடத்தில் மாற்றி அமைத்து வருகிறேன் என்பதைத் தகவலுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:42, 6 ஏப்ரல் 2020 (UTC) நீக்கிய பதிவை முழுமை செய்தும் தவறாகுமா?பாடலாக்கமும் இசையும் (https://ta.wikipedia.org/s/8j3q) என்ற பதிவு நீக்கப்பட்டிருப்பினும் "இசைப்பாவிற்கான இலக்கண அமைவாக..." மீள இணைத்திருக்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். காஜீ (KasiJeeva) மறைக்கப்பட்ட ஐபி – பயன்படுத்த வேண்டிய கருவிகள்![]() ![]() ![]() அனைவருக்கும் வணக்கம் இந்த செய்தி மிகவும் முக்கியமானது. தவறான நோக்கத்துடான திருத்தங்களையும், மற்ற பயனர்கள் மீதான சீண்டல்களையும் தவிர்ப்பதற்கான கருவிகளைப் பற்றியது. 2001ஆம் ஆண்டில் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டதை அறிவீர்கள். அன்றில் இருந்து இன்று வரை, இணையப் பயனர்களின் தனியுரிமைத் தேவைகள் மாறுபட்டு வருவதை காண்கிறோம். எடுத்துக்காட்டாக, பக்கங்களின் திருத்த வரலாற்றிலும் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் உள்நுழையாத பயனர்களின் ஐபி முகவரிகள் காட்டப்படுகின்றன. விக்கிமீடிய நிறுவனம் இந்த ஐபி முகவரிகளை மறைப்பதற்கான திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஐபி முகவரிகளை ஏன் மறைக்க வேண்டும்? ஐபி முகவரிகளை கொண்டு ஒருவரைப் பற்றிய தகவல்களைப் பெற்றுவிட முடியும். நம்முடைய பங்களிப்புகளில் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக இம்முடிவை எடுத்துள்ளோம். பயனர்களின் மீதான சீண்டல்களையும், தவறான நோக்கத்துடனான திருத்தங்களையும் தவிர்ப்பதற்காக சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுவரைக்கும் இதற்காக நாம் எடுத்த நடவடிக்கைகளை இனிமேல் எளிதாக்கவே இவை. இந்த யோசனைகளை பரிசீலிக்க உங்கள் உதவி தேவை. இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றால் ஏற்படும் பயனகள் என்னென்ன? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்? ஐபி தகவல்இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்? பயனர் தொகுத்த போது இருந்த இடத்தை பற்றிய தகவல் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தால், உங்கள் மொழிச் சமூகத்திற்கு பயன் தருமா? இடங்களைப் பற்றிய விவரங்களை மொழிபெயர்த்துத் தரும் கருவிகளை பயன்படுத்துகிறீர்களா? இருப்பின், அவற்றை இங்கே குறிப்பிட முடியுமா? தொடர்புடைய திருத்தக் கருவிகள்இவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்? தொடர்ந்து தவறாக நடக்கும் பயனர்களைப் பற்றிய தகவல் சேமிப்புஇவற்றை செயல்படுத்துவதால் எந்த வகை சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும் என நினைக்கிறீர்கள்? இவற்றால் செலவினங்கள் கூடுமா? இவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம்? இவற்றில் எவை உங்களுக்கு பயன்தரக் கூடியவை, எவை பயன் தராதவை என நினைக்கிறீர்கள்? நாங்கள் குறிப்பிடாத எவ்விதத்திலாவது ஐபி தகவலை பயன்படுத்துகிறீர்களா?m:IP Editing: Privacy Enhancement and Abuse Mitigation, m:IP Editing: Privacy Enhancement and Abuse Mitigation/Improving tools – உங்கள் மொழிச் சமூகம் நாங்கள் குறிப்பிடாத எவ்விதத்திலாவது ஐபி தகவலை பயன்படுத்துகிறதா? எவ்வகையில்? கருவிகளை மேமடுத்துவதற்காகவும், புதிய கருவிகளுக்காகவும் பரிந்துரைகளை வழங்குவீர்களா? /Johan (WMF) (பேச்சு) 16:59, 15 ஏப்ரல் 2020 (UTC)
கோவிட் 19மலையாள விக்கியில் கொரோனோ தொடர்பான பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தமிழாக்கம்,
காளீஸ்வரர் காளையார்கோயில்வணக்கம், காளீஸ்வரர் காளையார்கோயில் மற்றும் காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் என்ற இரு தலைப்புகளில் உள்ளவை ஒரே கோயிலைப் பற்றியதாகும். அடையாளம் தெரியாத பயனர் 2401:4900:4833:90d6::122b:e3ec இரண்டிலும் மாறி மாறி சில மாற்றங்களைச் செய்துள்ளார். சிலவற்றை மீளமைக்க முடிந்தது. சிலவற்றை மீளமைக்க முடியவில்லை. அவை உரிய மேற்கோளுடன் காணப்படவில்லை. உரிய மேற்கோள்களின்றி சில அடையாளம் தெரியாத பயனர் அவ்வப்போது இவ்வாறு பல பதிவுகளில் செய்து வருகின்றனர். (அவ்வப்போது திரு. பயனர்:Gowtham Sampath உள்ளிட்ட பலர் அதனை மீளமைத்து வருகின்றனர். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.) இவ்விரு பதிவுகளில் இந்த அடையாளம் தெரியாத பயனர் செய்த மாற்றத்தை சரிசெய்ய ஆவன செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:41, 30 சூன் 2020 (UTC)
புதுப்பயனர்களைத் தொகுக்கத்தூண்டும் திட்டம்அண்மையில் வியட்டுநாமிய விக்கியர் சிண்டி (இவர் விக்கிமீடியா வளர்ச்சித்திட்டத உறுப்பினர்) புதுப்பயனர் தொகுக்கத்தூண்டும் பணிகளைப் பற்றிக்குறிப்பிட்டார். நான் படித்துப் பார்த்தவரை இவ்வசதியினால் சிறிது பயன் கிடைக்கும்போலிருக்கிறது. இதை வெள்ளோட்டம் விட்ட விக்கிப்பீடியாக்களில் 1.7% கூடுதல் தொகுப்புகள் இதன்வழி வந்துள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பான எனது ஐயங்களை திட்டத்தின் பேச்சுப்பக்கத்தில் கேட்டு வருகிறேன். இதைத் தமிழ் விக்கியில் அறிமுகப்படுத்துவதைப் பற்றி அனைவரது கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:59, 6 ஆகத்து 2020 (UTC) விக்கிப்பீடியா பயிற்சிஅனைவருக்கும் வணக்கம், நான் கடந்த ஒரு வாரமாக கோவை ச்றீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விக்கிப்பீடியா குறித்த பயிற்சியில் பங்கேற்ற புதிய பயனர். தினம் ஒரு பொருண்மையில் பயிற்சியளிக்கப்பட்டவிதம் சிறப்பாக அமைந்தது. விக்கிப்பீடிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. பயிற்சியாளர்கள் பயில்பவர்களின் மட்டத்திற்கு இறங்கிவந்து பயிற்சியளித்தது சிறப்பு. குறிப்பாக தகவலுழவன் அறிமுகத்தினை குறிப்பிட விரும்புகிறேன். எங்களுடைய கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் தந்து விக்கீப்பீடியா பங்களிப்பில் எங்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவிதம் பாராட்டுக்குரியது. எமது கல்லூரியின் (மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி) பெயரானது தவறாக பதிவாகி இருந்ததை நீக்க உதவியற்கு நன்றி. நன்றியுடன் --சத்திரத்தான் (பேச்சு) 01:13, 25 ஆகத்து 2020 (UTC) மொழிபெயர்ப்புக் குறித்த ஐயங்கள்
கட்டுரை தொகுப்பாக்க ஐயங்கள்
பயனர் பெயரை மாற்றுவது எப்படி?
மேல் விக்கியில் பயனர் பக்கத்தை உருவாக்குவது எப்படி?
இவ்வாறான உதவிகளுக்கு விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் ஏற்புடையது. இங்கு புதிய கருத்துக்களை பதிவிடுவது ஏற்புடையது. நன்றி. --AntanO (பேச்சு) 02:25, 7 செப்டம்பர் 2020 (UTC) தொகுத்தல் போர்பிக் பாஸ் தமிழ் 4 கட்டுரையில் தேவையற்ற தொகுத்தல்கள் நடைபெறுகிறது. நிருவாகிகள் தற்காலிகமாக இக்கட்டுரையைப் பூட்டுமாறு கோருகிறேன்.-இரா. பாலாபேச்சு 14:00, 17 சனவரி 2021 (UTC)
பெருநகர் பகுதிபெருநகர் பகுதி (metropolitan / metro) இங்கு அப்படியே மெட்ரோ எழுதப்படுகிறது. எ.கா: சென்னை மெட்ரோ. இதற்கு சரியான வழிகாட்டல் தேவை. காண்க: பேச்சு:சென்னை மெட்ரோ --AntanO (பேச்சு) 02:28, 15 பெப்ரவரி 2021 (UTC)
ஆனால் metro railway station என்று வரும்போது பெருநகர் தொடருந்து நிலையம் அல்லது பெருநகர் பகுதி தொடருந்து நிலையம் எழுதலாமா என்றால் அது சந்தேகத்துக்குரியது தான். தமிழகத்தில் chennai metro என்பதை, அப்படியே தமிழில் சென்னை மெட்ரோ என்றே அனைத்து செய்திதாள்களிலும், இணையதளத்திலும் மற்றும் சென்னை மெட்ரோவின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் எழுதுகின்றனர், அப்படி இருக்கும் போது metro என்பதை தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. metro rail என்பதற்கு விரைவுப்போக்குவரத்து என்று மற்றொரு பெயரும் உள்ளது. -- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 03:49, 16 பெப்ரவரி 2021 (UTC) பார்வை மாற்றுத்திறன் பயனர்களுக்கான உதவி ஆவணம்15 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக விக்கிப்பீடியா வருபவர்களுக்கு எழுத்துரு முதல் பல்வேறு அடிப்படைத் தகவல்களைக் கொண்டதாக நமது வழிகாட்டல் பக்கமிருந்தது. அது போல இன்றைக்குத் தேவையான தகவலைத் தொகுத்து, வளரும் தொழில்நுட்பத்திற்கேற்பவும், பரவலான பயனர்களை அடையும் பொருட்டும் விக்கிப்பீடிய இடைமுக அமைப்பையும், உதவிப் பக்கங்களையும் மேம்படுத்தும் தேவையுள்ளது. பல ஆண்டுகளாகவே கைப்பேசி இடைமுகத்தைப் பயன்படுத்தியும், அது சார்ந்த பயிற்சிகளையும் கொடுத்தும் வருகிறோம். ஆனால் அவைசார்ந்த உதவிப் பக்கங்கள் இல்லை. அவற்றை உருவாக்க வேண்டும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் பயனர் கையேடும், அவர்களுக்கும் ஒத்திசைவான பக்கமாக https://www.w3.org/TR/WCAG20/ இந்தப் பரிந்துரைப்படி இயன்றவற்றை மேம்படுத்த வேண்டும். விக்கியைப் பயன்படுத்தும் போது பொதுவாகக் கைப்பேசியில் அணுகக்கூடிய சிக்கல்கள் என்னென்ன? அவற்றிற்கு மாற்றாக நீங்கள் கையாளும் முறை என்ன? பார்வை மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? அவர்களுக்கான சிறந்த திரைபடிப்பான் எவை? வேறு ஆலோசனைகளையும் வழங்கலாம். இவற்றைக் கொண்டு உதவிப் பக்கங்களை உருவாக்குவோம். -நீச்சல்காரன் (பேச்சு) 18:59, 24 மே 2021 (UTC)
இடக்கரடக்கல்விக்கிப்பீடியாவில் இடக்கரடக்கல் எதுவும் கிடையாதே? இடக்கரடக்கலால் தமிழிலுள்ள பல சொற்களைப் புறந்தள்ள வேண்டி ஏற்படுகிறதல்லவா.--பாஹிம் (பேச்சு) 05:22, 12 சூலை 2021 (UTC)
ஆசிய மாதம் போட்டிஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் ஆசிய மாதம் போட்டி நடத்தப்படும். இந்த முறை ஏன் அது நடத்தப்படவில்லை? --TNSE Mahalingam VNR (பேச்சு) 15:56, 23 நவம்பர் 2021 (UTC) பங்களிப்பாளர் அறிமுகம்முன்னர் முதல்பக்கத்தில் காட்சிப்படுத்திய விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு தொடரவில்லை. இடையில் மிகவும் சிறப்பாகப் பங்களிக்கும் பயனர்கள் பலர் விக்கியில் எழுதி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்த இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப் பரிந்துரைக்கிறேன். @Hibayathullah: நீங்கள் சிறப்பாகச் சில காலம் தொடர்ந்தீர்கள், அதை மீண்டும் செயல்படுத்த இயலுமா? அல்லது என்ன உதவிகள் வேண்டும் என்று குறிப்பிட இயலுமா? பயனர் கி.மூர்த்தி இன்னும் 26 கட்டுரைகளில் 6000 கட்டுரைகளைத் தொடங்கியவர் என்ற இலக்கினை அடையவுள்ளார். இது புதிய மைல்கல். இச்செய்தியுடன் மீண்டும் அறிமுகத் திட்டத்தைத் தொடருவோம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 09:12, 24 திசம்பர் 2021 (UTC)
விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்திற்கு கீழ்காணும் பயனர்கள் பெயரைப் பரிந்துரைக்கிறேன்: --நந்தகுமார் (பேச்சு) 18:22, 17 சனவரி 2022 (UTC)
6000 கட்டுரை தொடங்கியவர்6000 கட்டுரைகளைத் தொடங்கி புதிய இலக்கினை அடைந்துள்ள கி.மூர்த்தி பற்றி எபிபி செய்தி நிறுவனத்தில் கட்டுரையாகவும் நேர்காணலாகவும் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 08:09, 2 சனவரி 2022 (UTC)
முரண்பாடுகள்பிறமொழிச் சொற்கள்தமிழ் விக்கிப்பீடியாவில் பிறமொழிச்சொற்கள் தவிர்க்க முடியாத நிலையில் அதிக பயன்பாட்டில் உள்ளது. பிறமொழிச்சொற்களில் மொழி முதலெழுத்துக்கான விதிமுறைகளை பின்பற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. நபர்கள் தொடர்பான கட்டுரைகளில் எம். எஸ். பாஸ்கர் என்பதை எம். எசு. பாசுகர் என்று மாற்ற வேண்டியுள்ளது. ஸ்டிக்கர், ஸ்டார் என பல சொற்கள் தமிழுக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியுள்ளது. இந்த மாற்றங்களைத் தவிர்த்து அச்சொற்களுக்கென்று தனி நிறமிட வேண்டுகிறேன். --சா அருணாசலம் (பேச்சு) 07:29, 20 பெப்ரவரி 2022 (UTC)
நிர்வாக பகிர்வுநிர்வாகிகள் 34 பேரில் தீவிரமாக நிர்வகிப்பவர்கள் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. புதிய பயனர்கள் பேச்சு பக்கங்களில் பண்பற்று எழுதுகிறார்கள். பயனர் ஒருவரை தடை செய்வதற்கு முன் அவர்கள் தொகுக்குகின்ற கட்டுரையை பூட்டி விடுவது, பின்னர் அவர்களின் பேச்சு பக்கங்களில் அறிவிப்பின்றி தடை செய்வது, போன்று நடைமுறைப்படுத்துங்கள். நிர்வாக பணிகளை முடிந்தவரை நிர்வாகிகள் அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. --சா அருணாசலம் (பேச்சு) 18:26, 5 ஏப்ரல் 2022 (UTC)
ந.ந.ஈ.தி (LGBT) என்னும் பால்புதுமைவிக்கிப்பீடியா இதுவரை LGBT தொடர்பான கட்டுரைகளுக்கு தரப்படுத்தப்பட்ட கலைச்சொற்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதைக்கான பொதுப்புரிதலாக ந.ந.ஈ.தி (நம்பி, நங்கை, ஈரர், திருநர்) என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். இதில் பலருக்கும் மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. ந.ந.ஈ.தி சமூகமும் இச்சொற்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பால்புதுமை தொடர்பான சொற்களுக்கான வழிகாட்டும் கையேடு தொடர்பான ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. விக்கியில் உள்ள பால்புதுமை பக்கங்கள் அனைத்தையும் அக்கையேட்டில் குறிப்பிட்டுள்ள பதங்களுக்கு மாற்றுவதே முறை. மேலே இணைப்பு தரப்பட்டுள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஆணை எண் W.P.No. 7284 of 2021 (தேதி: 18.02.2022)ஐத் தரவிறக்கி அதில் 14ம் பக்கம் முதல் கொடுக்கப்பட்டுள்ள சொற்களஞ்சியத்தின் சொற்களில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து இருப்பின் தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். விக்கியின் பக்கத் தலைப்புகள், பகுப்புகள், கட்டுரையின் சொற்கள் ஆகியவற்றில் பலவாறு பாவிக்கப்படும் ந.ந.ஈ.தி தொடர்பான சொற்கள் அனைத்தையும் அக்கையேட்டில் உள்ளவாறு மாற்றவும் அனைவரின் உதவியை எதிர்பார்க்கிறேன்.
Intersex - ஊடுபால்; gender - பாலினம்; gender identity - பாலின அடையாளம்; gender non conforming person - பாலின அடையாளங்களுடன் ஒத்துப் போகாதவர்; transgender person - திருநர்; transman, transgender man - திருநம்பி; transwoman, transgender women - திருநங்கை; cis gender - ஆதிக்கப் பாலினம், சிஸ்; sexuality - பாலியல்பு; sexual orientation - பாலீர்ப்பு; heterosexuality - எதிர்பாலீர்ப்பு; homosexuality - ஒருபாலீர்ப்பு, தன்பாலீர்ப்பு; bisexuality - இருபாலீர்ப்பு; pansexuality - அனைத்துப் பாலீர்ப்பு, பலபாலீர்ப்பு; asexuality - அபாலீர்ப்பு; queer - பால்புதுமை; LGBTQIA+ - குயர், பால்புதுமையினர். -CXPathi (பேச்சு) 07:33, 8 ஏப்ரல் 2022 (UTC)
துப்புரவுப் பணிவிக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு - இதனை கருத்திற் கொள்ளலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:03, 26 சூன் 2022 (UTC)
பகுப்பு:பகுப்பில்லாதவை என்பதனை பார்வையிட்டு பணி செய்தால், பெருமளவில் துப்புரவு செய்ய இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:00, 3 சூலை 2022 (UTC) மேற்கோளாக காட்டப்படும் இணையத்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள்இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் தொடர்ந்து மாற்றங்கள் அடிக்கடி நடந்துகொண்டே இருக்கும். உள்பக்கங்கள் தொடர்மாறுதலுக்கு உள்ளாகின்றன. எனவே நாம் காட்டியிருக்கும் மேற்கோள்கள் வேலை செய்யாது. இதற்கான தீர்வு குறித்து வழி காண வேண்டும். உதாரணம்: என். கிட்டப்பா --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:46, 15 சூலை 2022 (UTC)
தமிழக ஊராட்சிகள் தொடர்பாக பயனர் ராஜசேகர் எழுதி வரும் கட்டுரைகள் தொடர்பான குழப்பம்பயனர்:Mereraj என்பவர் கடந்த சில தினங்களாக உருவாக்கி வரும் தமிழக ஊராட்சி தொடர்பான கட்டுரைகள் எதற்காக உருவாக்கப்படுகின்றன? முன்னதாக நீச்சல்காரன் தனது தானியக்கக் கருவி மூலம் உருவாக்கிய கட்டுரைகள் ஏற்கெனவே இருக்கும் போது இதன் அவசியமென்ன? ஒரே ஊராட்சிக்கு இரண்டு கட்டுரைகள் ஏன்? நிர்வாகிகள் கவனிக்க.--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:35, 20 ஆகத்து 2022 (UTC) TNSE Mahalingam VNR ஒரு ஊராட்சிக்கு இரு கட்டுரைகள் இருந்தால் அவற்றில் ஒன்று கண்டிப்பாக நீக்கப்படவேண்டும். நான் பார்த்தவரையில் ஒரே பெயரில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சி கட்டுரைகளை அவர் உருவாக்கி வருவதாக தெரிகிறது. என் பார்வைக்கு தவறான கட்டுரை படாமல்கூட இருந்திருக்கலாம். ஒரே ஊராட்சிக்கு இரு கட்டுரைகள் இருந்தால் ஓரிரண்டை இங்கு சுட்டிக் காட்டினால் அதுபற்றி விவாதிக்க சற்று உதவியாக இருக்கும், நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 15:40, 20 ஆகத்து 2022 (UTC) பயனர் ராஜசேகர் தான் ஒரே பெயரில் வெவ்வேறு மாவட்டங்களில் ஊராட்சிகள் இருப்பதாகவும், ஏற்கெனவே உருவாக்கப்படாத விடுபட்ட ஊராட்சிக் கட்டுரைகளை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். தெளிவுபடுத்திக் கொள்வதாகவே இந்த ஐயத்தை எழுப்பினேன். ஒரே தலைப்பிலான இரண்டு கட்டுரைகள் உருவாக்கப்படக்கூடாது என்பதற்காகவே கேட்டேன். நன்றி.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:24, 20 ஆகத்து 2022 (UTC) கூடுதல் கவனக்குவியம் பெற்றுள்ள துப்புரவுப் பணிகள்
உதவிக் காணொளிகள்வணக்கம், விக்கிப்பீடியா தொடர்பான உதவிக் காணொளிகள் இங்கு உள்ளன. இது தவிர வேறு ஏதேனும் பணிகள் காணொளிகளாக இருந்தால் உதவியாக இருக்கும் எனக் கருதினால் அதனை அறியத் தாருங்கள், புதியதாக உருவாக்கலாம். நன்றி மும்பை விக்கிப் பயனர் தேவைமும்பை டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் தமிழ் விக்கிப்பீடியா குறித்துக் கலந்துரையாடவும் வாய்ப்பிருந்தால் பயிற்சியளிக்கவும் ஒரு குழுவினர் உதவி கேட்டுள்ளனர். ஏற்கனவே சில முன்னாள் பயனர்களைத் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. ஆர்வமுள்ள விக்கிப் பயனர்கள் யாரேனும் மும்பையில் இருந்தால் அறியத் தரவும். -நீச்சல்காரன் (பேச்சு) 14:40, 15 செப்டம்பர் 2022 (UTC) அக்டோபர் 2022: அதிக தொகுப்புகள்அக்டோபர் 14 - 10,415 தொகுப்புகள், அக்டோபர் 15 - 24,582 தொகுப்புகள், அக்டோபர் 16 - 4,220 தொகுப்புகள் என நடந்துள்ளது. எவ்வகையான தொகுப்புகள் என அறிய இயலவில்லை. அக்டோபர் 2022 --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:42, 13 திசம்பர் 2022 (UTC)
@Kanags: உதவிக்கு நன்றி! அக்டோபர் 2022 மாதத்தை தேர்ந்தெடுத்துப் பார்ப்பதில் எனக்கு சிரமம் இருந்தது. தொகுப்புகள் குறித்து இப்போது புரிந்துகொண்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:26, 13 திசம்பர் 2022 (UTC) @Aswn: அக்டோபர் 2022 மாதத்தில் AswnBot 40,146 தொகுப்புகளை செய்திருப்பதாக அறிகிறோம். அக்டோபர் 2022இல் செய்யப்பட்ட தொகுப்புகளே ஒரு மாதத்தில் செய்யப்பட்ட அதிகபட்ச தொகுப்புகள் (all time high) என்பதாக தரவுகள் சொல்கின்றன. எனவே, AswnBot மூலம் எவ்வகையான தொகுப்புகளை செய்தீர்கள் என்பதனை அறிய ஆர்வம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:26, 13 திசம்பர் 2022 (UTC)
கைப்பாவை (தகவலுக்காக)Snthilakammarist - சுமார் 20 கைப்பாவை கணக்குகள். இன்னும் உருவாக்கப்படலாம். AntanO (பேச்சு) 04:54, 12 சனவரி 2023 (UTC) மேற்கோள்கள்கோவை மற்றும் மதுரையில் அண்மையில் நடந்த பயனர் சந்திப்புகளில் கட்டுரைகளில் கொடுக்கப்படும் மேற்கோள்கள் குறித்து உரையாடினோம். அதில் சில ஊடகங்களின் பக்கங்களைச் சந்தா இல்லாமல் படிக்கமுடியாது என்பதை யாரோ சுட்டிக் காட்டியும் பேசினார். அச்சிக்கல்களுக்குத் தீர்வளிக்க விக்கிமீடிய அறக்கட்டளையின் https://wikipedialibrary.wmflabs.org/ என்கிற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறக்கட்டளையே ஊடகத்தினரிடம் ஒப்பந்தமிட்டு அந்த வளங்களைப் பயனர்கள் கட்டணமின்றிப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்துகிறார்கள். எனவே கட்டுரை மேற்கோளிற்குத் தேவைப்படும் எந்தெந்த ஊடகங்கள்(உலக அளவில்) கட்டணமுறையில் உள்ளனர் என்று பரிந்துரைக்கக் கோருகிறேன். நான் தி இந்து (ஆங்கிலம் & தமிழ்), விகடன் குழும இதழ்களைப் பயன்படுத்துகிறேன், பரிந்துரைக்கிறேன். அதுபோல உங்களுக்குத் தேவைப்படும் ஊடகங்களைப் பட்டியலிடலாம். ஏற்கனவே இலவசமாக உள்ள ஊடகங்களையோ அச்சில் மட்டும் உள்ள ஊடகங்களையோ பரிந்துரைக்க வேண்டாம். அறிவியல் இதழோ, நாளிதழோ, மாத இதழோ, பதிப்பகமாகவோ இருக்கலாம் அவர்கள் உள்ளடக்கம் இணையத்தில் இருப்பதாக இருக்க வேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:24, 9 பெப்ரவரி 2023 (UTC)
போட்டிகளும், கலைக்களஞ்சியத்தின் தரமும்.உலக அரங்கில் தமிழ் விக்கியை வெளிப்படுத்தவும், கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் போட்டிகள் தேவை. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் பாதிப்பிற்கு உள்ளாகிறது எனும் கவலையை தெரிவிப்பது நமது கடமை. பங்களிப்பாளர்கள் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் என்பது எனது வேண்டுகோள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:24, 3 மார்ச் 2023 (UTC)
கேட்க முற்பட்டதற்கு நன்றி.
குறிப்பு: வெளிப்படையாக எனது கருத்துகளை முன்வைத்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:52, 3 மார்ச் 2023 (UTC)
இது போன்ற போட்டிக் காலங்களில் தான் கட்டுரைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்க இயலும். தரமும் முக்கியம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. பிறமொழிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையினை தொகுப்பு அடைந்தவுடன் அதனை நிறைவு செய்து விடுகின்றனர். ஆனால் தமிழ் போட்டியாளர்கள் பெரும்பாலும் முழு கட்டுரையினையும் மொழிபெயர்த்து வழங்குகின்றனர். குறிப்பிட்ட தரத்திற்கு கீழ் கட்டுரை இருப்பின் நடுவர்கள் அதற்கு ஒப்புதல் தராமல் காரணத்தினை கூறி சரிசெய்ய அறிவுறுத்தலாம்.--சத்திரத்தான் (பேச்சு) 00:47, 4 மார்ச் 2023 (UTC)
பயிற்சி வகுப்புகள்சுமார் 40 பேருக்கும் அதிகமானோர் தமது கணக்கினை இன்று துவக்கியுள்ளார்கள். காண்க:கணக்குத் துவக்கம். தமிழ் நாட்டில் பயிற்சி வகுப்புகள் எவையேனும் நடக்கின்றனவா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:33, 17 மார்ச் 2023 (UTC)
தேவையற்ற தொகுத்தல்கள்பயனர்:Amherst99 என்ற பயனர் கட்டுரைகளில் அடைப்புக் குறிக்குள் உள்ள ஆங்கிலப் பெயரின் முகப்பெழுத்தை மட்டும் சிறிய எழுத்தாக மாற்றிவருகிறார். இதைத் தவிர வேறெந்த தொகுப்புகளையும் இவர் செய்யவில்லை. இதை மட்டுமே தொடர்ந்து செய்துவந்துள்ளார். இதேபோல பல மொழிகளிலும் செய்துவருகிறார். இவர் எதற்காக இ்வாறு செய்கிறார் என்று புரியவில்லை.--கு. அருளரசன் (பேச்சு) 16:04, 19 மார்ச் 2023 (UTC)
செம்மைப்படுத்துதல் இரண்டாம் காலாண்டுவணக்கம், செம்மைப்படுத்துதல் பணிக்கான இரண்டாம் காலாண்டில், தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளை துப்புரவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பாளர்களுக்கு நினைவுப் பரிசு (தண்ணீர் குடுவை, கேடயம், இதர) வழங்கலாமா என்பதற்கும் பணிமனைகளை நடத்தலாமா என்பதற்கும் உங்களது அனைவரது கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது.
HelpHello, I am चक्रपाणी (Chakra-pani(Talk)) from Hindi Wikipedia! Is this the Village Pump of Tamil Wikipedia? If Yes:
In english wikipedia its says this monkey is also known as Wanderoo?
Your help will be greatly appreciated! -----चक्रपाणी (பேச்சு) 03:22, 8 ஏப்ரல் 2023 (UTC) @சத்திரத்தான்: Kindly help on this request. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:29, 8 ஏப்ரல் 2023 (UTC) தேவையற்ற, பெருவாரியான தொகுப்புகள்2231376 என்பது போன்ற பின்னொட்டுகளைக் கொண்ட பயனர் கணக்குகள், தேவையற்ற பக்கங்களை உருவாக்கி வருகின்றனர். எங்கிருந்தோ நகலெடுக்கப்பட்ட உள்ளடக்கங்களை அவர்களின் பேச்சுப் பக்கத்திலும் இட்டு வருகிறார்கள். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் தீக்குறும்புகளைச் செய்யவில்லை. எனினும் அண்மைய மாற்றங்களில், கண்காணிப்பு என்பது கடினமாக உள்ளது. இங்கு ஏதோவொரு இடையூறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, தனி நபரோ அல்லது ஒரு குழுவோ இயங்குவதாக ஐயம் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:00, 13 ஏப்ரல் 2023 (UTC)
ஆர் வி எசு கலை அறிவியல் கல்லூரி தொடர்புபட்ட / தொடர்பானவர்களில் பெயர்களில் அதிக பயனர் கணக்குகளும், தேவையற்ற தொகுப்புகளும் இடம் பெறுகின்றன. ஏதும் பயிற்சிஇடம் பெறுகின்றதா? அல்லது விசமத்தொகுப்பா? @Selvasivagurunathan m and Neechalkaran: --AntanO (பேச்சு) 08:18, 17 ஏப்ரல் 2023 (UTC) @AntanO: எனக்குத் தெரிந்தளவில், நாம் யாரும் அண்மையில்/இப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:06, 17 ஏப்ரல் 2023 (UTC) பதாகை இடுவது குறித்து..."தற்போது நடைபெற்று வரும் செம்மைப்படுத்துதல் பணி குறித்தான தகவலை பதாகையாக இட்டால், கவனத்தை ஏற்படுத்தும்; பயனர்கள் பலர் பங்களிக்கத் தொடங்குவர்" என்பதாக ஒரு பரிந்துரை உள்ளது. இது குறித்து பயனர்கள் தங்களின் கருத்துகளை / ஒப்புதல்களை இந்தப் பக்கத்தில் பதாகை அறிவிப்பு எனும் பகுதியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். -- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:42, 19 ஏப்ரல் 2023 (UTC) பொதுவாக - விக்கிப்பீடியா ஆண்டு விழாக்கள், பயிற்சிப் பட்டறைகள், மாரத்தான் நிகழ்வுகள், புதிய கட்டுரைகளை எழுதுவதற்கான போட்டிகள், ஒளிப்பட போட்டிகள் ஆகியன குறித்தே தமிழ் விக்கிப்பீடியாவில் பதாகைகள் இடுவது வழக்கம். துப்புரவு / செம்மைப்படுத்துதல் குறித்தான பதாகைகளை இதுவரை நாம் கண்டதில்லை. இப்போது தேவையிருப்பதாக நாம் கருதுகிறோம். ஏனெனில், வழக்கமாக பங்களிப்பவர்கள் மட்டுமே இப்பணிகளை செய்ய இயலாது; மற்றவர்களையும் ஈடுபடுத்துவது நன்மை உண்டாக்கும். எனினும், குமுகாயத்தின் ஒப்புதலுடன் இதனைச் செய்ய விரும்புகிறோம். எனவே, பயனர்கள் தமது கருத்துகள்/ஒப்புதல் இவற்றை மேற்குறிப்பிட்டுள்ள இணைப்பில் இடுமாறு வேண்டுகிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:18, 23 ஏப்ரல் 2023 (UTC) புதிய பயனர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான பயிலரங்குகள் (2023)வணக்கம். புதிய பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி, அவர்கள் இங்கு பங்களிக்கும் வகையில் பயிற்சியளிப்பதற்காக திட்டமொன்று வரையப்பட்டுள்ளது. விவரங்களுக்கு, காண்க: விக்கிப்பீடியா:பயிலரங்குகள் 2023. முக்கியக் கூறுகள்:
சூலை, ஆகத்து, செப்டம்பர் 2023 மாதங்களுக்காக திட்டமிடப்பட்டிருக்கும் பயிலரங்குகளை நடத்தத் தேவைப்படும் நிதியை விக்கிமீடியா அமைப்பிடமிருந்து பெறலாம் எனவும், அதற்காக Rapid Funds எனும் அணுகுமுறை உகந்தது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திட்டம், நிதி உதவி கோரல் அணுகுமுறை இவை குறித்தான உங்களின் ஆதரவு / எதிர்ப்பு, கருத்துகள், பரிந்துரைகளை இங்கு பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். -- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:19, 2 மே 2023 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள்தமிழ் விக்கிப்பீடியாவின் 'இருபதாண்டுகள் நிறைவு' தொடர்பாக கருத்தொன்று 'விக்கிப்பீடியர்கள் சந்திப்பு' எனும் தலைப்பின்கீழ் இங்கு இடப்பட்டுள்ளது. பயனர்கள் தமது கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:22, 13 மே 2023 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் 2023 பரிந்துரைக்கப்படுகிறது. பயனர்கள் தமது கருத்துகளை இங்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:30, 6 சூலை 2023 (UTC) தவிர்க்கப்பட வேண்டியவைபயனர்களின் உரையாடல் பக்கத்தில் அறிவிப்புகள் வழங்கும் போது //தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள், அல்லது நிறுத்திக் கொள்ளுங்கள்.// இது போன்று எழுதுவதால் பயனர்கள் மனவருத்தம் அடையவும் தொடர்ந்து எழுதாமல் விக்கிப்பீடியாவிலிருந்து விலகவும் வாய்ப்புள்ளது. இதனால் இதைத் தவிர்த்து தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பில் 1.ஈடுபடாதீர்கள். 2. எழுதாதீர்கள். என்று கூட எழுதலாம். இதற்கு அனைத்துப் பயனர்களும் ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை கருத்துகளை வழங்குங்கள்.-- சா. அருணாசலம் (பேச்சு) 12:07, 12 சூன் 2023 (UTC) கருத்துவணக்கம்,நீங்கள் குறிப்பிட்டுள்ளது ஒரு பயனர் இரண்டாம் முறையாக ஆக்க நோக்கற்ற பங்களிப்பினை வழங்கும் போது விடப்படும் எச்சரிக்கை தானே , அதனால் தானே நிறுத்துங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. முதல்முறை செய்யும் போது பொதுவான அறிவிப்பு (துவிங்கிளில் உள்ளது போல் General Notice) மட்டும் இடலாம்.-- ஸ்ரீதர். ஞா (✉) 17:11, 12 சூன் 2023 (UTC)்்்்் தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அனைவருக்கும் வணக்கம். செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. இச்சிறப்பைக் கொண்டாடும் வகையில் பயிற்சிப் பட்டறை, தமிழ் விக்கிப்பீடியர்கள் நேரில் சந்தித்து உரையாடுதல், மாரத்தான் ஆகிய நிகழ்வுகளை நடத்துவதற்கு பரிந்துரைகள் வைக்கப்பட்டன. விவரங்களுக்கு, காண்க: விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2023 முக்கியக் கூறுகள்:
பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தான உங்களின் ஆதரவு / எதிர்ப்பு, கருத்துகள், கூடுதல் பரிந்துரைகளை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்; நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:23, 12 ஆகத்து 2023 (UTC)
கருத்துவிக்கிப்பீடியா மட்டுமல்லாது அதன் மற்ற திட்டங்களான விக்சனரி, விக்கிமூலம் , விக்கி பொதுவகம் மற்றும் விக்கி நூல்கள் போன்றவைகளை பற்றியும், அந்தந்த திட்டங்களில் முன்னோடிகளாக இருந்து வரும் பயனர்களால், அந்தந்த திட்டங்களைப் பற்றிய அறிமுக மற்றும் பங்களிப்புகளைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன் --பிரயாணி (பேச்சு) 11:00, 15 ஆகத்து 2023 (UTC)
கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் (தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலைக்கழகம்) விக்கிப்பீடியா பயிலரங்கம்இன்று (25 ஆகத்து 2023) ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் (தமிழ்நாடு கால்நடை மருத்து அறிவியல் பல்கலைக்கழகம்) விக்கி ஊடகத்திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழ் விக்கிப்பீடியா பயிற்சி அளிக்க உள்ளேன். தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 05:05, 25 ஆகத்து 2023 (UTC)
விக்கிப்பயணம்விக்கி திட்டங்களில் ஒன்றான விக்கிப்பயணம் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். யாருக்காவது அதைப்பற்றிய தகவல்கள், பங்களிப்பது பற்றிய திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி தெரிந்திருந்தால் கூறவும். தொடர்பு கொள்கிறேன். வங்காள மொழி விக்கிப்பயண பயனர் User:Rangan_Datta_Wiki என்பவரைத் தொடர்பு கொண்ட போது குறைந்தது 10 நபர்கள் இருந்தால் இதைப்பற்றிய பயிற்சி அளிப்பதாக கூறியுள்ளார். நமது தமிழ் விக்கி சமுதாயத்தில் யாராவது இதில் பங்களிக்கும் பயனராக இருந்தால், கூறவும். --பிரயாணி (பேச்சு) 17:41, 5 அக்டோபர் 2023 (UTC)
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல்@Kanags: உங்களின் அதிகார அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னைப் போன்ற புதுப்பயனர் கஷ்டப்பட்டு செய்த தொகுப்பை ஒரே நொடியில் வீணாக்குவது சரியான அணுகுமுறையா? சரி தவறு யோசிக்காமல் இஷ்டத்துக்கு செயல்பட வேண்டாம். 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆப்கானிஸ்தான் அணியின் கொடியும் நாட்டின் கொடியும் வேறு வேறு. நீங்கள் cr வார்ப்புருவை பயன்படுத்தினால் நாட்டுக்கொடியே காட்டும். அதனால் தான் நான் AFGc வார்ப்புருவை பயன்படுத்தினேன். தவிர, கிரந்த வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் தமிழ் மொழியின் ஒரு பகுதியாக கிரந்த எழுத்து மாறிவிட்டது. சரியான உச்சரிப்புக்கு அவை அவசியம். இத்துடன் விக்கிப்பீடியாவில் இருந்து விலகிக் கொள்கிறேன். அதிகார அத்துமீறல் தொடரும் வரை என்னைப்போன்ற புதுப்பயனர்களின் பங்களிப்பு குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றி. ElangoE2 (பேச்சு) 13:03, 13 அக்டோபர் 2023 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களின் கூட்டுழைப்பின் மூலம் குறுகிய காலத்தில் தேவைப்படும் கட்டுரைகளை விரைந்து சேர்த்தல்வருகிற 2023 திசம்பர் அல்லது 2024 சனவரி மாதத்திற்குள் அனைத்து தமிழ் விக்கிப்பீடியர்களின் கூட்டுழைப்பின் மூலம் தமிழில் தேவைப்படும் கட்டுரைகளைச் சேர்ப்பது மற்றும் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை உருவாக்குவது தொடர்பாக ஒரு கட்டுரைப்போட்டி போன்ற நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்த ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இது குறித்து உங்கள் கருத்துகளை அறியத் தாருங்கள். --மகாலிங்கம் இரெத்தினவேலு 02:17, 30 அக்டோபர் 2023 (UTC)
மகிழ்ச்சியும் அச்சமும்நேற்று இந்திய அளவில் உருது மொழிக்கு அடுத்து எண்ணிக்கை அளவில் தமிழ் மொழி இரண்டாமிடத்தை அடைந்துள்ளது. அதற்காக கடந்த சில வாரங்களாகவே பலர் அயராது உழைத்துப் பல புதிய கட்டுரைகளை உருவாக்கினர். அதற்காக உழைத்த @Balu1967, பா.ஜம்புலிங்கம், சத்திரத்தான், கி.மூர்த்தி, உலோ.செந்தமிழ்க்கோதை, Thiyagu Ganesh, Sridhar G, TNSE Mahalingam VNR, and Arularasan. G: மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள். பொதுவாக எண்ணிக்கையை உயர்த்த வேண்டி போட்டிகளோ முயற்சிகளையோ நாம் எடுப்பதில்லை. எந்த மொழியினரும் நான்கைந்து வரிகளில் புதிய கட்டுரையைத் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிவிடமுடியும். எனவே கட்டுரைகளின் எண்ணிக்கையை எப்படியும் உயர்த்த முடியும் ஆனால் கட்டுரையின் செழுமையையும் தரத்தையும் உயர்த்துவதே முக்கியமான சவால். கட்டுரையின் ஆழம் என்கிற அளவீட்டில் நாம் இன்னும் பின்தங்கியுள்ளோம். இயல்பாக, பங்களிக்கும் போது பொதுவான துப்புரவு, கண்காணிப்பு போன்ற இடங்களில் கவனம் செலுத்துவோம். ஆனால் போட்டியின் போது அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற அச்சம் ஏற்படுகிறது. இயல்பான பங்களிப்போ விரைவான பங்களிப்போ வளமான களஞ்சியத்தை உருவாக்கும் நோக்கில் சமரசம் வேண்டாம். இந்த இரண்டாமிடத்தை அடைவதைவிட அதைத் தக்க வைப்பது பெரும்பணி, அதைத் தொடர்ந்து செய்வோம். தொடர்ந்து பங்களிக்கும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:04, 17 நவம்பர் 2023 (UTC)
தாய் (தாய் மொழி) விக்கிப்பீடியாவுடன் ஒரு ஒப்பீடுஒப்பீடு நடத்தப்பட்ட நாள்: 19-நவம்பர்-2023
அறிதல்கள்:
முடிவுரை:
இவையெல்லாம், ஆழம் எனும் அளவீட்டை தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளில் சில ஆகும்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:53, 19 நவம்பர் 2023 (UTC)
புதுப் பயனர்களுக்கான பயிற்சிகள்தமிழ் விக்கிப்பீடியா குறித்து புதுப் பயனர்களுக்குப் பயிற்சியளிக்கும்போது, 'மொழிபெயர்ப்புக் கருவி மூலம் கட்டுரைகள் உருவாக்கும்' விளக்கத்தைத் தரவேண்டாம் என்பது எனது வேண்டுகோள். ஒரு கலைக்களஞ்சியத்தின் கூறுகள் குறித்தான அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாத, முயற்சி செய்யாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. தரமற்ற கட்டுரைகள் உருவாக்கப்படுவதாகவும், பலரின் நேரமும் உழைப்பும் வீணாவதாகவும் உணர்கிறேன். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:33, 24 நவம்பர் 2023 (UTC)
மிக்க நன்றி! ஆதங்கத்தைத் தெரிவித்ததன் வாயிலாக, அறியாத விசயம் ஒன்று குறித்துத் தெரிந்துகொண்டேன். ஜெயரத்னாவின் கருவியை ஆராய்கிறேன். நன்கு புரிந்துகொண்ட பிறகு, இங்கு செயல்படுத்த முயற்சி செய்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:45, 24 நவம்பர் 2023 (UTC) மொழிபெயர்ப்பு பிழைகள்மொழிபெயர்ப்பு கருவியால் மொழிபெயர்த்து கட்டுரை உருவாக்கும் போது
மாதமொரு உரையாடல்பிற இந்திய மொழி விக்கித் திட்டங்களில் அவ்வப்போது இணையம் வழியாகக் கலந்துரையாடல் நடப்பதை அறிந்திருப்போம். ஒருவகையில் சமூகத்தை ஒருங்கிணைக்க இத்தகைய கலந்துரையாடல்கள் பயனளிக்கின்றன. மேலும் புதிய பயனர்கள் சிலரும் பயிற்சிகளைக் கேட்டுவருகின்றனர். இதனடிப்படையில் மாதமொரு கலந்துரையாடலை நடத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். அதில் யாரேனும் ஒரு பயனர் தான் கற்ற ஒரு செயல்பாட்டை விளக்கிப் பயிற்சி அளிக்கலாம், ஒவ்வொரு திட்டம் தொடர்பான நிலைத் தகவல்களை ஒருங்கிணைக்கும் பயனர்கள் அளிக்கலாம். புதிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் இது உதவும். இந்த உரையாடலில் புதியவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறமுடியும். நெடுநாள் பயனர்களும் கற்றுக் கொண்டு தம்மையறியாமல் செய்துவந்த பிழைகளைத் தவிர்க்க உதவும். இந்தப் பரிந்துரையின் பரிச்சார்த்த முயற்சியாக நவம்பர் 26 ஆம் நாள் இணையவழி பயிற்சியினை பயனர்:Selvasivagurunathan m கொடுத்தார். 7 புதிய பயனர்கள் கலந்து கொண்டனர். பலரும் தொடர்ந்து பயிற்சியைக் கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மாதமொரு உரையாடலாக நிகழ்த்துவோமா? பயிற்சியளிக்கவும் முன்னெடுக்கவும் யாரேனும் விரும்புகிறீர்களா? -நீச்சல்காரன் (பேச்சு) 10:07, 27 நவம்பர் 2023 (UTC)
தமிழ் டாட் விக்கி கட்டுரைகள்இன்று சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடன் எழுத்தாளர் தேவிபாரதி பற்றித் தேடினேன். தமிழ் விக்கியில் கட்டுரையில்லை ஆனால் தமிழ் டாட் விக்கி தளத்தில் கட்டுரை இருந்தது. பொதுவாக அச்சில் வெளிவந்த கலைக்களஞ்சியத்தை ஒப்பிட்டுக் குறிப்பிடத்தக்க கட்டுரைகளை நாம் தமிழ் விக்கியில் எழுதிவருகிறோம். அது போல இணையத்தில் உள்ள இந்த தமிழ் டாட் விக்கி களஞ்சியத்தின் மூலமும் குறிப்பிடத்தக்க/ஆவணப்படுத்த வேண்டிய தலைப்புகளை அடையாளம் காணலாம் என நினைக்கிறேன். அத்தளத்தில் உள்ள 3600 தமிழ்க் கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள தமிழ் கட்டுரைத் தலைப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் சுமார் 2170 கட்டுரைகள் இங்கில்லை எனத் தெரிகிறது. சிலவேளை எழுத்துக்கள் மாறி கட்டுரையிருக்கலாம், குறிப்பிடத்தக்கமை இல்லாமலுமிருக்கலாம். இருந்தாலும் அவற்றில் கணிசமானவை இங்கே கட்டுரையாக்க வேண்டியவை என நினைக்கிறேன். அந்த வகையில் விருப்பமுள்ளவர்கள் விக்கி நடைமுறைக்குட்பட்டுக் கட்டுரையாக்க இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. -நீச்சல்காரன் (பேச்சு) 17:23, 11 திசம்பர் 2023 (UTC)
ஆங்கில மாதங்களின் பெயரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் திருத்த வரலாற்றைக் காணும்போது, ஆங்கில மாதங்களின் பெயரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, தமிழ் கட்டுரை. இடைமுகத்தில் இத்தகைய மாற்றங்களைச் செய்யும்போது அதனை தமிழ் விக்கிப்பீடியா குமுகாயத்தில் உரையாடி, தீர்வு பெற்ற பிறகு செய்யவேண்டும். இதற்கென ஒரு நெறிமுறையை ஏற்படுத்த வேண்டும். செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:39, 16 திசம்பர் 2023 (UTC)
இன்னொரு பயனர் எழுப்பியுள்ள கேள்வி - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:23, 17 திசம்பர் 2023 (UTC)
கனகு தேவையில்லாத மீள்விப்புகளைச் செய்திருப்பதைக் காண்கிறேன். இங்கே தமிழில் நாம் பயனர் இடைமுகத்தின் ஏவல் வினைகளைக் கணினி இயந்திரத்துக்கும் அதன் முறைமைக்குமே செய்கிறோம். அவை கட்டாயமாக அஃறிணையில் ஒருமையில் வந்தாக வேண்டும். ஏவல் வினையில் கணினியை நோக்கி செய்க என்பதும் ஆடு மாடுகளைப் பார்த்து வருக என்பதும் தமிழ் முறையல்ல.--பாஹிம் (பேச்சு) 01:31, 17 திசம்பர் 2023 (UTC)
இன்று முதல், வேண்டுகோள் வைத்தல் அல்லது மாற்றம் செய்ய விழைதல் ஆகியனவற்றிற்கு விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள் எனும் பக்கத்தில் உரையாடுவோம். அனைவருக்கும் நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 23 திசம்பர் 2023 (UTC) நீர்வழிப் படூஉம் மற்றும் தேவிபாரதி தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப் பக்கத்தில் செய்திகளில் காட்சிப்படுத்த வேண்டுதல்எழுத்தாளர் தேவிபாரதி தனது நீர்வழிப் படூஉம் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள செய்தியை தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப் பக்கத்தில் செய்திகளில் காட்சிப்படுத்த வேண்டுகிறேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 00:11, 28 திசம்பர் 2023 (UTC)
விக்கிப்பீடியாவின் மொழிக்கொள்கை என்பது தமிழின் பொதுவழக்கை அப்படியே கையாள்வதாக இருக்க வேண்டுமா? அல்லது, பொதுவழக்கிற்கு மாறான விக்கிப்பீடியாவிற்கு மட்டுமான குழூஉக் குறிகள் கொண்டனவாக இருக்க வேண்டுமா? ஏனெனில், விஜயகாந்தின் மரணச் செய்தியை வெளியிட்ட எந்த ஊடகமும் அவர் பெயரை 'விசயகாந்து' என எழுதவில்லை. மேலும், ஸ்டாலின், ஜெயலலிதா முதலிய பெயர்களை நாம் கிரந்தத்துடனேயே பயன்படுத்துகிறோம். குறைந்தபட்சம், விக்கிப்பீடியாவிற்குள்ளாவது ஒரே விதிகளைப் பின்பற்றுவோமா? - CXPathi (பேச்சு) 14:29, 28 திசம்பர் 2023 (UTC)
ஒற்றெழுத்து(த, ய, ற) இந்த எழுத்துகளில் முடிகின்ற-- சிறந்த, உயர்ந்த போன்ற முற்றுப் பெற்ற சொற்களுக்கு ஒற்றெழுத்து வராது. இதுபோலவே இந்திய, தேசிய, ஒன்றிய போன்ற சொற்களின் கடைசியிலும் ஒற்றெழுத்து வராது என்று நம்புகிறேன்.-- சா. அருணாசலம் (பேச்சு) 17:54, 31 திசம்பர் 2023 (UTC)
புதிய பங்களிப்பாளர்களை உருவாக்க கலந்துரையாடுகபுதிய பயனர்களை எப்படி தக்க வைப்பது? என்ற கேள்வி, ஒவ்வொரு மொழி விக்கித்திட்டங்களிலும் முன்னணி கேள்வியாக உள்ளது. இது குறித்து முதலில் நான் அறிந்து கொண்டது, பெர்லின் நகரில் நடைபெற்ற 2030 வரை விக்கிமீடியா கையாள வேண்டிய உத்திகள் விக்கிக்கூடலிலும், எனது செலவில் சிங்கப்பூரில் நடைபெற்ற விக்கிமேனியாவில் கலந்து கொண்ட போதும்; இது குறித்து பிற மொழியினரின் எண்ணங்களையும் அறிந்தேன்.
த♥உழவன் (உரை) 03:25, 4 சனவரி 2024 (UTC)
எண்ணிக்கை > கட்டுரை ஆழம்100விக்கிநாட்கள் திட்டம் பல கட்டுரைகளை த.விக்கு அளித்தாலும், இவ்வாறான விரைவான கட்டுரையாக்கம் எந்தளவிக்கு காத்திரமானவை என்பதில் கேள்விகள் உள்ளன. எ.கா: பகுப்பு பேச்சு:பார்லேரியா AntanO (பேச்சு) 13:13, 19 சனவரி 2024 (UTC) 2-நாள் பயிலரங்கு ஒன்றிற்கான முன்மொழிவுதமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். புதிய பயனர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களை தொடர் பங்களிப்பாளர்களாக மாற்றும் ஒரு முயற்சியாக... முன்மொழிவு ஒன்று விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (சோதனைத் திட்டம்) எனும் உரையாடல் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கூறுகளை மேம்படுத்த உங்களின் கருத்துகள் / எண்ணங்கள் / பரிந்துரைகளை அதே உரையாடல் பக்கத்தில் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். திட்டத்தில் இணைந்து, ஒருங்கிணைப்பாளராக செயல்பட விரும்பினால், உங்களின் பெயரை விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (சோதனைத் திட்டம்) எனும் பக்கத்தில் பதிவுசெய்யுங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:26, 26 சனவரி 2024 (UTC) முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திட்டம் குறித்தான உங்களின் ஆதரவு அல்லது எதிர்ப்பை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்திட்டத்திற்கு எதிராக கருத்துகள் இருப்பின், அவற்றை இங்கேயே பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:06, 28 சனவரி 2024 (UTC)
பரணிட என்ன கால எல்லை வைக்கலாம்?இங்கு உங்களின் எண்ணங்களை தெரியபடுத்துங்கள். விக்கிப்பீடியா பேச்சு:ஆலமரத்தடி (தொழினுட்பம்) த♥உழவன் (உரை) 02:22, 1 பெப்பிரவரி 2024 (UTC) உலோ. செந்தமிழ்க்கோதை மறைவுபிப்ரவரி 1 பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை மறைந்தார். சில நுட்பக் காரணங்களால் சில நாட்கள் விக்கிக்குள் நுழையமுடியாததால் உடனே இங்கே அறிவிக்க இயலவில்லை. இருப்பினும் இதர சமூகத்தளங்களில் அறிவிக்கப்பட்டு விக்கிப் பயனர்கள் உட்படப் பொதுச் சமூகத்தினரில் இரங்கல் செய்தியினைப் பகிர்ந்து வருகின்றனர். அன்னாரினை நினைவுகூரும் வகையில் விக்கிமீடிய வலைப்பதிவும் இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளது. இணையவழியாக இப்பயனருக்கு ஒரு நினைவேந்தல் கூட்டம் நடத்தினால் சிஐஎஸ்சும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தனர். யாரேனும் முன்னெடுக்க விரும்பினால் அறியத்தரலாம். நடைபெறவுள்ள கணித்தமிழ் மாநாட்டில் நமது காட்சி அரங்கில் நேரடியாக நினைவஞ்சலி செலுத்தப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 17:06, 5 பெப்பிரவரி 2024 (UTC)
மேற்கோள் பெட்டிதுன்பேர்சியா கட்டுரையில் 150 மேற்கோள்கள் உள்ளன. அதனால், இதுபோன்ற கட்டுரையின் அடிப்புறத்தினையும், முன்தோற்றத்தினையும் விரைந்து, எளிதாகக் காண, மேற்கோள்களுக்கு பெட்டிவசதியைப் புதிதாக ஏற்படுத்தி உள்ளேன். உங்களின் எண்ணமிடுக. த♥உழவன் (உரை) 23:47, 14 பெப்பிரவரி 2024 (UTC) |
Portal di Ensiklopedia Dunia