விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு13கட்டாயம் செய்ய வேண்டியதுநம் வாசகர்களைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு - m:General Survey Translation. நம்மில் சிலராவது இதில் இணைந்து கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். நான் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 04:53, 18 ஜூன் 2008 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவின் தடங்கள்...சில சிந்தனைகள்தமிழ் மொழி இலக்கிய மொழியாக, சிறப்பாக இன்ப இலக்கிய மொழியாகவே நெடுங்காலம் இருந்து வந்தது என்ற ஒரு குறை பலரால் முன்வைக்கப்படுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம், சித்தர்கள் ஆக்கங்கள் போன்றவை விதி விலக்குகளாக இருந்தாலும், தமிழ் மொழியில் நேரடியாக தகவல்களை சேர்த்து தரும் முயற்சிகள் அரிது என்றே சொல்லலாம். அதன் நீட்சியாக என்னவே அறிவியல் தமிழும், நுட்ப விடியங்களைப் பகிரும் தமிழும் இன்றும் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளன. தமிழில் அறிவியல் ஏடுகள் இன்னும் விருத்தி பெறாமை ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவே. இந்த நிலையில் இன்றைய இணைய உலகில் சில ஆக்கபூர்வமான மாற்றங்களை அவதானிக்கலாம். பல இணையத்தளங்களில் அறிவியல் ஒரு பகுதியாக நிரந்தரமாக இடம்பெற்றுவருவதை காணக்கூடியதாக உள்ளது. ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் எடுத்தாண்ட நுட்ப எழுத்து துறை இன்று சற்று விரிந்து பலரும் முயற்சி செய்யும் பங்களிக்கும் துறையாக மாறி வருகிறது. இந்த சூழலில்தான் தமிழ் விக்கிப்பீடியாவும் வளர்ந்து வருகிறது. இயல்களின் பரப்பை கண்டறிதல்தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பணி நாம் பல இயல்களின் பரப்பை கண்டறிந்து அவற்றைப் பற்றிய குறிப்பை சேர்த்து வருவதுதான் எனலாம். இதை ஆங்கிலத்தில் Mapping of Human Knowledge or Subject Fields என்று சொல்லாம். தமிழில் எல்லாத் துறைகளைப் பற்றியும் எழுத முடியும், இந்த இந்த துறைகளில் கூடிய கவனம் தந்தால் நன்றாக இருக்கும் என்று இந்த செயற்பாடு சொல்ல முனைகிறது. கலைச்சொற்களை கருத்துக்களத்தில் பயன்படுத்தல், தரப்படுத்தல்இதுவரை கலைச்சொற்கள் அகரமுதலியாகவோ, அலல்து பட்டியலாகவோ மட்டும் தொகுக்கப்பட்டன. அது ஒரு பாரிய பணி என்பதில் சந்தேகமில்லை. எனினும் கருத்துக்களை அவற்றின் பயன்பாட்டுச் சூழலில் வைத்து, இணைத்து பார்க்க கூடிய சாத்தியக் கூறு தமிழி விக்கிப்பீடியாவில் சிறப்பாக இருக்கிறது. பல நாட்டு பயனர்களும் பங்கு கொள்வதால் கலைச்சொற்கள் தரப்படுத்தல், அல்லது ஒரு புரிந்துணர்வை நோக்கி நகரக் கூடியதாக இருக்கிறது. இது ஒரு முக்கிய செயற்பாடு. தமிழ் விக்கசனரியில் 100 000 சொற்களைச் சேர்த்திருப்பது தமிழ் நுட்ப எழுத்துலகில் ஒரு சிறு புரட்சியே. ஆழமான கட்டுரைகள்தமிழ் விக்கிப்பீடியாவில் இப்போதே பல ஆழமான கட்டுரைகள் உண்டு. குறிப்பாக கணிதத் துறையில் Pvk ஆக்கித் தந்த கட்டுரைகள், மற்றும் பலர் தமது அனுபவ கல்வி துணைகொண்டு தொடர்ந்தும் ஆக்கி தருகின்றார்கள். இவ்வாற கட்டுரைகள் காலப்போக்கில் பெருகும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. இது அறிவியல் தமிழில் ஒரு முக்கிய திருப்பு முனை. சிறு சிறு துணுக்குகளின் தொகுப்பு அல்லது இயல் அறிமுகங்கள் மட்டுமே அறிவியல் தமிழ் என்ற தோற்றப்பட்டை இது முறியடிக்கின்றது. பார்வைகள்பல சமூக இயல்கள் கருத்துருக்கள் சமூகத்தால் கட்டமைக்கப்படும் கருத்துருக்கள் (social constructs). இவை வேறு சமூகப் பிண்ணியில் வைத்துப் பார்க்கும் பொழுது பொருந்தி வராமல் போகலாம். அதனால், நாம் இவை பற்றி சற்று கூடிய விழிப்புணர்வுடன் கட்டுரைகளை எழுத வேண்டும். குறிப்பாக ஐரோப்பிய மையப் பார்வையை, வர்க்க பார்வைகளை அடையாளம் கொண்டு கொள்ளுதல் நன்று. இடம் சார் சமூகம் சார் கட்டுரைகள்ஆங்கில விக்கியில் National என்றால் US குறிப்பது போன்றும், Best என்றால் ஆங்கில உலகின் உற்பத்திகள் மட்டும் போன்ற ஒரு ஏற்பாடு இயல்பாக ஏற்படுகிறது. எ.கா Best Movies List என்றால் ஆங்கில படங்கள் மட்டுமே அங்கு இருக்கின்றன. தமிழில் ஒரு சில திரைப்படங்களாவது பாக்க கூடிய அளவில் இருக்கின்றன. எனவே, அவற்றைப் பற்றி அறிய தமிழர்களுக்கு ஆவலாக இருக்கலாம். இப்படி பல எடுத்துக்காடுகளை தரலாம். 1960 கள் என்றால் ஒரு சில புரிதல்கள் ஆங்கில உலகில் வரும், தமிழ்நாட்டு வரலாற்றிலோ, தமிழீழ வரலாற்றிலோ அதே மாதிரியான புரிதல்கள் வருவதில்லை. தொலை தூரப் பார்வைதமிழ்நாட்டில் 3 மில்லியன் இணைப்புகள், அதில் அனேகருக்கும் தமிழ் கணிமை தெரியாது. இந்த நிலை முன்னேறும் என்றே அனுமானிக்கலாம். இயந்திர மொழிபெயர்ப்பு வரலாம், ஆனால் இப்பொதைய நிலைமையும் இழுப்பறியையும் பார்க்கையில் அது 10-20 ஆண்டுகளுக்கு மேலாகலாம். கோபி முன்னர் சுட்டியது போல, அந்த நுட்பத்துக்கு தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளவே தமிழில் தரவுகள் தேவையாக இருக்கலாம். மேலும் இயந்திரம் கருத்துக்களை ஆக்கி தராது. அதை மனிதர், அவர்களின் சிந்தனைகள், கதையாடல்களே ஆக்கி தரும். அதற்கு த.வி ஒரு முக்கிய தளம். --Natkeeran 17:22, 5 ஜூலை 2008 (UTC)
விளையாட்டுபயனர்கள் இந்தக் கட்டுரைகளுக்கு சற்று கவனம் தந்தால் நன்றாக இருக்கும். --Natkeeran 18:16, 9 ஜூலை 2008 (UTC) விக்கிப்பீடியாவில் பயனர் பங்களிப்பு..ஒர் அலசல்...சற்று பழையது
தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா? ஜெயமோகன்ஆம், பல தேவையற்ற சொற்கள் வரும். அதை தவிர்க்க முடியாது. சுருக்கம், பொருட்செறிவு, ஒலியிசைவு, விரிவாக்கப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் சொற்கள் நிலைபெறுகின்றன, அழிகின்றன. சிற்றிதழ் சூழலில் தினமும் கலைச்சொற்கள் பிறக்கின்றன. உலக சிந்தனைகளில் ஒரு முக்கிய பகுதி இங்கு பேசப்படுகிறது. அதற்கேற்ப கலைச்சொற்கள் பிறந்தபடியே இருக்கின்றன. நான் எப்போதுமே ஆங்கிலச்சொல்லை பயன்படுத்துவதில்லை. சொற்கள் இல்லையென்றால் நானே கண்டடைவேன், தமிழின் பழமரபில் அது இருக்கும். அப்படி நான் உருவாக்கிய 50 சொற்களேனும் இப்போது பரவலாக புழக்கத்தில் உள்ளன. [பட்டியலிட இரும்பவில்லை. என் ஏராளமான எதிரிகள் உடனே அச்சொற்களை தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.] அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்கள் தமிழில் குறைவே. காரணம் அவற்றை புழங்கும் சூழல் இங்கு இல்லை. ஆனால் அரசியல், இலக்கிய சித்தாந்த தளங்களில் எதையுமே சொல்லுமளவுக்கு கலைச்சொற்கள் உள்ளன. உண்மையில் சிற்றிதழ் சூழலின் வலிமையும் சிக்கலும் இதுவே. ஒரு தீவிர வாசகன் இரண்டு வருடம் இடைவெளி விட்டால் கூட சிற்றிதழ்களை புரிந்துகொள்வது கடினமானதாகிவிடும். புதியவர் ஒருவர் கலைச்சொற்களை புரிந்துகொண்டு உள்ளே நுழைவது அதற்குரிய உழைப்பிற்கு பிறகே சாத்தியமாகும். எத்தனையோ உலகியல் விஷயங்களில் கடுமையான உழைப்பையும் சிரத்தையையும் செலுத்தும் தமிழ் வாசகர்கள் இலக்கியத்தில் மட்டும் அதற்கு தயாராக இருப்பதில்லை. ஐம்பது வருடங்களாக சீரான வளர்ச்சி அடைந்துள்ள ஒரு துறைக்குள் சாதாரணமாகப் புகுந்து குழம்பி, மனம் புண்படுகிறார்கள். ‘எனக்கே புரியலை சார்!’ என்ற குற்றச்சாட்டை தமிழ் வாசகர்களிடமிருந்து சிற்றிதழ் எழுத்தாளர்கள் அனேகமாக தினமும் சந்திக்கிறார்கள். தாழ்வுணர்ச்சியின் விளைவான நக்கல் எரிச்சல் போன்றவை சாதாரணம். ஆனால் பலவிதமான பிழைகள், சிக்கல்கள் ஆகியவற்றைத் தாண்டி மிக ஆக்கபூர்வமான பணிகள் நடக்கும் தளம் இது. விளையாட்டுப் போட்டிகள் பெயரிடல் ஒழுங்கு...பரிந்துரை
அன்றாடப் பக்க வருகைகள்இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் பக்க வருகைகளின் புள்ளிவிவரங்கள்:
கட்டுரை எண்ணிக்கைக்கும் வருகைகளுக்கும் இடையில் ஓரளவு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. மயூரநாதன் 17:30, 18 ஜூலை 2008 (UTC) மகிழ்ச்சி. தமிழ் இணையத்தளங்களைப் பொருத்த வரை இது குறிப்பிடத்தக்கது., தரவுகள் எங்கிருந்து?--ரவி 19:14, 18 ஜூலை 2008 (UTC)
தரப்படுத்த வேண்டிய சொற்கள்
--Natkeeran 16:28, 20 ஜூலை 2008 (UTC) தமிழ் விக்கிப்பீடியா செயற்பாடுகளை எளிமைப்படுத்தல்
--Natkeeran 23:08, 20 ஜூலை 2008 (UTC) அரபிய விக்கிப்பீடியாவின் பிரச்சினைகள்
எகிப்து விக்கிமேனியாவை ஒட்டி அரபிய விக்கிப்பீடியாவின் பிரச்சினைகளைப் பற்றிய குறிப்புகள். ஆங்கிலமல்லா வளரும் நாட்டு மொழிகளுக்குப் பொதுவாக நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன போலும்..--ரவி 20:30, 23 ஜூலை 2008 (UTC)
கவலைக்குரிய விசயம் என்னவென்றால், விக்கிபீடியா வளரவில்லை என்பது குறியீடு தான். பிரச்சினை இம்மொழிகளின் ஒட்டுமொத்த வருங்காலம் குறித்து. ஏதாவது ஒரு நாட்டின் தேசிய மொழியாக இல்லாத மொழிகள், வளரும் / வளரா நாட்டு மொழிகள், மருத்துவம்-பொறியியல் என்று அனைத்து துறையின் உயர் படிப்பு, ஆராய்ச்சியிலும் பயன்படாத மொழிகளின் வருங்காலம் கேள்விக்குறியே :( --ரவி 20:40, 25 ஜூலை 2008 (UTC) ஆவார், ஆகும்எல்லா கட்டுரைகளிலும் ஒவ்வொரு வரியிலும் ஆவார், ஆகும் என்று வருவது அலுப்பாக இருக்கிறது. இவற்றை விடுத்து எழுதுவது ஏற்புடையதா? பாடநூல் நடையில் இது போல் ஆகும், ஆவர் என்று முடிவது வழக்கம். ஆனால், நவீன இதழ்களில் அதை விடுத்தும் எழுதுகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு,
எப்படி எழுதுவது சரி, ஏற்புடையது?--ரவி 20:32, 23 ஜூலை 2008 (UTC)
கூகுள் knolவிக்கிப்பீடியாவுக்குப் போட்டியாக ஊடகங்களால் வர்ணிக்கப்படும் கூகுள் knol (தமிழில் நால் என்று எழுதலாமா?) பொதுப் பார்வைக்கு வந்துள்ளது :) --ரவி 20:35, 23 ஜூலை 2008 (UTC)
கூகுள் X Knol--ரவி 17:40, 24 ஆகஸ்ட் 2008 (UTC) Prof. V. Krishnamurthy (Profvk) வாழ்த்துக்கள்பயனர்:Profvk 150 கட்டுரைகளுக்கு மேலாக ஆக்கி பகுப்பு:கணிதம் வளர்த்து தந்தவர். அவர் மீண்டும் தமிழ் விக்கியில் பங்களிக்கு உள்ளார். அவருடன் மின்னஞ்சல் தொடர்பு கொண்ட போது பினவரும் வாழ்த்து செய்தி தந்தார்.
- Profvk --Natkeeran 14:30, 25 ஜூலை 2008 (UTC)
புதுப் பயனர்களை அணுகுவது எப்படி
--Natkeeran 22:38, 25 ஜூலை 2008 (UTC) Clay Shirky: Institutions vs. collaboration--Natkeeran 00:36, 26 ஜூலை 2008 (UTC) காலத்தை குறிப்பிடுதல் - தரப்படுத்தல்
--Natkeeran 20:05, 26 ஜூலை 2008 (UTC) புள்ளிவிவரங்கள்த.வி வாசகர் வரத்து குறித்து விரிவாக அறிந்து அதன்படி செயல்படுவதற்காக google analytics நிரல் போன்றவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் தானியக்கமாகச் சேர்க்கலாமா? விக்கிப்பீடியா கொள்கைகள் இதை அனுமதிக்கும் பட்சத்தில் சுந்தர், வினோத் போன்றவர்கள் தானியக்கப் பணிக்கு உதவினால் நன்றாக இருக்கும்--ரவி 16:33, 27 ஜூலை 2008 (UTC) கூட்டு முயற்சிக் கட்டுரைகள்த.வி தொடக்கத்தில் நிறைய கூட்டு முயற்சிக் கட்டுரைகள் எழுதினோம். அதன் விளைவாகச் சில சிறப்புக் கட்டுரைகளும் பெற்றோம். தற்போது இரண்டு ஆண்டுகளாக இம்முயற்சிகள் இல்லை. முதற்பக்கக் கட்டுரைகளுக்குப் பிறகு சிறப்புக் கட்டுரைகள் உருவாக்கத்தில் கவனம் இல்லை. இவற்றை மீண்டும் கொண்டு வந்தால் பங்களிப்பாளர்களும் ஒருங்கிணைந்து பங்களிக்க உற்சாகமாக இருக்கும்.
மேற்கண்ட திட்டங்களைக் கூட்டு முயற்சியாகச் செய்யலாம்--ரவி 19:55, 30 ஜூலை 2008 (UTC)
மயூரனாதனுக்குப் பாராட்டுகடந்த 4 ஆண்டுகளாக மயூரனாதன் பல வகையான கட்டுரைகள் எழுதினாலும் அவருடைய கட்டிடக்கலை துறை குறித்து பல கட்டுரைகள் எழுதி உள்ளார். குறுகிய காலத்தில் நம்மால் அனைத்துத் துறைகளுக்குமான ஒரு முழுமையான கலைக்களஞ்சியத்தை உருவாக்க இயலாது. ஆனால், ஒரு சில புதிய துறைகளிலாவது இது போல் ஒரு அடிப்படையான கலைக்களஞ்சியத்தை உருவாக்குதல் சாத்தியமே. நான் உட்பட, அனைவரும் அவரவர் ஆர்வம், அறிவுக்கு ஏற்ப ஒரு துறையை எடுத்துச் செயல்படுத்த வேண்டும். பெரும்பாலும் குறுங்கட்டுரைகளாக இருந்தால் கூட பரவாயில்லை. --ரவி 19:57, 30 ஜூலை 2008 (UTC)
கண்டிப்பாக செய்வோம் மயூரனாதன். தானியங்கி செயற்பாட்டுக்கு உரிய கட்டுரைகள், தகவல் மூலங்களை விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கப் பரிந்துரைகள் பக்கத்தில் குறித்து வைப்போம்--ரவி 20:47, 30 ஜூலை 2008 (UTC) இந்து நாளிதழ் கட்டுரை...தமிழ், தாய்மொழிக் கல்வி இழிவுIt’s Tamil medium, yet learning proves a challenge - The Hindu வினோத்☯ラージャン 01:30, 31 ஜூலை 2008 (UTC) எதிர்க் கருத்துக்கள்
--சிவக்குமார் \பேச்சு 02:41, 31 ஜூலை 2008 (UTC)
மேம்படுத்த வேண்டிய கட்டுரைபெயர்க் குழப்பங்கள்தமிழ்த் திரைப்படம் என்ற பகுப்பு பொதுப் பகுப்பு போன்று இருக்கின்றது. அதாவது தமிழ்த் திரைப்படத்துறையை குறித்து நிற்கின்றது. தமிழ்த் திரைப்படங்கள் என்ற பகுப்பில் தனி தனி திரைப்படங்கள் இருக்கின்றன. இவை இரண்டும் பொருள் குழப்பத்தை தருகின்றன. பகுப்பு:நாடு வாரியாக திரைப்படத்துறை என்று பகுக்க போனால் பொது பகுப்பை திரைப்படத்துறை என்பது கூடிய பொருத்தமாக இருக்கும். எனினும் இதுவரை பகுப்பு:திரைப்படம் என்று இருப்பதாலும், அத்வே எளிமையாக பொதுப் பயன்பாட்டில் இருப்பதாலும் திரைப்படம் என்பதை திரைப்படத்துறை போன்றும் பயன்படுத்தலாம். மேல் நிலையில். ஆனால் தமிழ்த் திரைப்படத்துறை என்பது கூடிய பொருத்தமாகப் படுகிறது. --Natkeeran 14:00, 1 ஆகஸ்ட் 2008 (UTC) கட்டுரைக்கு ஒரு படம்குறுங்கட்டுரையாக இருந்தாலும் அதில் ஒரு படம் இருப்பது அழகு தான். படமில்லா கட்டுரைகளில் படங்கள் சேர்ப்பதை ஒரு திட்டமாகக் கொண்டு செய்யலாம். த.வி தரம் உயரவும் உதவும்--ரவி 18:12, 6 ஆகஸ்ட் 2008 (UTC) 108 கணினி துணைகள் :)https://translate.fedoraproject.org/POT/comps.HEAD/comps.HEAD.ta.po வினோத்☯ラージャン 06:19, 10 ஆகஸ்ட் 2008 (UTC) சிறுவர் கலைக்களஞ்சியம்என்னுடைய பத்து வயது அக்கா மகள் தன்னுடைய எல்லா ஆர்வங்களுக்கும் விக்கிப்பீடியாவையே நாடுகிறாள். அவளைப் பொருத்தவரை கூகுள், விக்கிப்பீடியா இரண்டும் தான் இணையம் :) சிறுவர்கள் பயன்படுத்தக்கூடிய, அவர்களுக்குப் புரியக்கூடிய அடிப்படைக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கினாலே நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தில் பெருமளவு முன்னேற்றம் கண்டு விடுவோம். சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் நல்ல இலக்கு வாசகர்களாக இருப்பார்கள். ஏனெனில் அவர்களின் ஆங்கில அறிவு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தமிழே முதன்மை தகவல் அறியும் மொழியாக இருக்கும். சிறு வயதில் ஒருவருக்கு ஒன்றின் மேல் வரும் ஈடுபாடு வயதான பின்னும் தொடர்வதைக் காணலாம். சிறுவர்களை நாம் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் ஈர்ப்போமானால் அவர்கள் வளர்ந்த பின்னும் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்த, பங்களிக்க முன்வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். விலங்குகள், பறவைகள், விளையாட்டுகள் போன்று சிறுவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய துறைகளில் கூடிய முன்னுரிமை கொடுத்து நாம் கட்டுரை ஆக்கலாம். --ரவி 12:20, 10 ஆகஸ்ட் 2008 (UTC)
ஒரு நாளைக்கு 30 புதிய கட்டுரைகள் வேண்டும்எண்ணிக்கை மட்டுமே தமிழ் விக்கிக்கு முக்கியம் இல்லை, ஆனால் மற்ற தரம்கூட்டும் தன்மைகளைப் பெருக்குவது மட்டுமல்லாமல், கட்டுரை ஆக்க விரைவைக் கூட்டுதல் வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தது 30 கட்டுரைகளாவது நாம் ஆக்குதல் வேண்டும். நாம் ஒரு நாளைக்கு 7-10 கட்டுரைகள்தான் எழுதுகிறோம். மார்ச் 2007ல் நாளொன்றுக்கு 51 கட்டுரைகளும், ஏப்பிரல் 2007ல் நாளொன்றுக்கு 44 கட்டுரைகள் எழுதியது விதிவிலக்கு. விக்கி ஆர்வலர்களே, கட்டுரை ஆக்க எண்ணிக்கையை, தரம் தளரவிடாமல் முடுக்கி விடுங்கள்!--செல்வா 22:06, 11 ஆகஸ்ட் 2008 (UTC)
Manual for new and small WikipediasHello, at Meta there are pages created to help new and small Wikipedias: Manual and Wikipedia and help pages. You are welcome to have a look and comment. Kind regards --Ziko 22:57, 15 ஆகஸ்ட் 2008 (UTC) 15,000 கட்டுரைகளை எட்ட இருக்கின்றோம்இன்னும் ஓரிரு நாட்களில் 15,000 கட்டுரைகளை எட்ட இருக்கின்றோம்! நவம்பர் 7, 2007 அன்று 12,000 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியா எட்டியது என்று கருதும்பொழுது, நாம் சற்று மெதுவாகவே நகர்வதாக உணர்கிறேன். அதாவது பங்களிப்புகள் செய்வதை விட்டுப் போவோரைக் காட்டிலும் வந்து சேர்வோர் எண்ணிக்கை கூடுதலாகவும், ஆளொருவருக்கான சராசரி கட்டுரை ஆக்க எண்ணிக்கையும் ஓரளவுக்குக் கூடுதல் ஆக வேண்டும். மலையாள விக்கியில் ஏறத்தாழ 50 கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகளாக அறிவித்து இருக்கின்றார்கள். நெடிய கட்டுரைகளாகவும் (80-100 கிலோபைட் போன்ற அளவில்) அவை இருக்கின்றன. உள்ளடக்கத்தின் சிறப்பை ஓரளவுக்கு உணரமுடிந்தாலும், எழுத்துநடையின் சிறப்பு என்னவாக உள்ளது என்பதை நான் அறியேன். பொதுவாக மலையாளமும், அண்மையில் இந்தியும் மிக நன்றாக முன்னேறி வருவதாக உணர்கிறேன். இதுகாறும் தமிழ் விக்கி அடைந்துள்ள முன்னேற்றம், தரம் பெருமை உடையதாக உள்ளது. பங்களித்த யாவரும் உண்மையிலேயே பெருமை கொள்ளலாம். வரும் ஓராண்டில் குறைந்தது 7,000 புதிய கட்டுரைகளும் (முடிந்தால் 10,000மும்), பெருமை சேர்க்கும் ஒரு 100 அருமையான நடுநீள (30-50 கி'பைட்), அல்லது நெடிய (>50 கி 'பைட்) கட்டுரைகளும் நம் பங்களிப்பாளர்கள் ஆக்க முற்பட வேண்டும் என்பது என் அவா! பங்களிப்பாளர்களுக்கு என் வாழ்த்துகள்!--செல்வா 15:02, 16 ஆகஸ்ட் 2008 (UTC)
15,000 கட்டுரைகளை எட்டும்போது நாம் அவற்றில் எத்தனை கலைக்களஞ்சியக் கட்டுரையாகக் கருதப்படக் கூடியன என்பதையும் நோக்க வேண்டியுள்ளது. கட்டுரை அளவு 2 கி'பைட் என்றாலும் 20 கி'பைட் என்றாலும் ஒவ்வொரு கட்டுரையும் தன்னளவில் முழுமையாக இருப்பது முக்கியமென நினைக்கிறேன். முக்கிய கட்டுரைத் தலைப்புக்கள் அனைத்திற்கும் குறைந்தது 2 கி'பைட் அளவிலேனும் கட்டுரைகள் வேண்டும். அவற்றில் பல தொடங்கப்படாமலேயே உள்ளன. (பொருத்தமான இணைய இணைப்பின்மையால் பங்களிக்க முடியாதுள்ளேன். இனிவரும் காலங்களில் அவ்வப்போதேனும் பங்களிக்க முயல்கிறேன்.) நன்றி. கோபி 16:59, 16 ஆகஸ்ட் 2008 (UTC) திருகோணமலையில் தங்கியிருக்கும் இடத்தில் ஒழுங்கான இணைப்பு இல்லை. டயல்-அப் இணைப்பில் தான் பங்களித்து வருகின்றேன். மோசமான ஆமைவேக இணைப்பால் பெரும்பாலும் இரவு காத்திருந்தே பங்களிக்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கின்றேன். திருகோணமலையில் அகலப்பட்டை இணைப்பை வழங்க ஆரம்பித்து விட்டனர். தற்போது அலுவலகங்களுக்கு மாத்திரமே வழங்கிவருகின்றனர். தொடர்ந்து வீடுகளுக்கு வழங்குவார்கள் என திடமாக நம்புகின்றேன். இணைப்பு ஒழுங்காகியுடன் நிச்சமாயாக என்பங்களிப்பை அதிகரிக்க முயல்கின்றேன். --உமாபதி \பேச்சு 17:05, 16 ஆகஸ்ட் 2008 (UTC) SUL requestDear bureaucrat. This is joseph from Turkish Wikipedia. I want to usurp the account named locally as "joseph" for SUL merge. Here is confirmation Thanks. (any message here please) --88.227.206.227 16:59, 17 ஆகஸ்ட் 2008 (UTC) புதிய விக்கி சின்னம்[[படிமம்:புதிய விக்கி சின்னம்.png]] புதிய விக்கி சின்னம் ஒன்றை பதிவேற்றியுள்ளேன் உங்கள் கருத்துக்களைக் கூறினால் தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.பின்னர் உத்தியோகபட்ச சின்னத்தை மாற்றீடு செய்யலாம்.--Terrance \பேச்சு 00:27, 19 ஆகஸ்ட் 2008 (UTC) நன்றி டெரன்சு. எழுத்துக்களை சற்று பெரிதாக்கி, sharpen செய்ய முடியுமா. இல்லாவிட்டால் இதுவே நன்றாக இருக்கின்றது. --Natkeeran 01:01, 19 ஆகஸ்ட் 2008 (UTC) [[படிமம்:புதிய விக்கி சின்னம் 2.png]] இன்னொரு பதிப்பு.--Terrance \பேச்சு 01:21, 19 ஆகஸ்ட் 2008 (UTC)
டெரன்ஸ், விக்கிப்பீடியா என்பதில் இருக்கும் "வி" ஐயும், "யா" வையும், சற்றுப் பெரிதாக்கினால், ஏனைய விக்கிச் சின்னங்களில் உள்ளதுபோல் இருக்கும். சரிந்த எழுத்துக்களுக்குப் பதிலாக நேரான எழுத்துக்களைப் பயன்படுத்தியும் ஒன்று வரைந்து பாருங்களேன். மயூரநாதன் 02:35, 19 ஆகஸ்ட் 2008 (UTC) டெரன்சு, பாராட்டுகள்! இரண்டுமே நன்றாக உள்ளன. மயூரநாதன் கூறியுள்ளது போல வி, யா ஆகிய எழுத்துக்களைப் பெரிதாக்கவேண்டுமா என்பது தெரியவில்லை. இலத்தீன் எழுத்து முறையல்லா இந்திய மொழிகள், பல பிற மொழிகளில் அப்படி முதல், கடைசி எழுத்துக்கள் பெரியனவாக இல்லை, எனவே எனது ஐயம். கீழே உள்ள "கட்டற்ற கலைக்களஞ்சியம் " என்பது சிவக்குமார் கூறியதுபோல கட்டாயம் சற்று பெரிதாக இருக்கலாம் என்று நானும் நினைக்கிறேன். மயூரநாதன் கூறியதுபோல எழுத்துக்கள் சாய்வெழுத்துக்களாக இல்லாமல் நேர் எழுத்துக்களாக இருக்கலாம். மீண்டும் பாராட்டுகள், நன்றிகள், டெரன்சு! --செல்வா 03:23, 19 ஆகஸ்ட் 2008 (UTC)
பதிவேற்றலாம் என்றுதான் நினைக்கிறேன். பிறர் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.--செல்வா 02:02, 20 ஆகஸ்ட் 2008 (UTC) Digital, Analog தமிழ் என்ன?
--Natkeeran 21:35, 19 ஆகஸ்ட் 2008 (UTC) digital - எண்மயம் எனப் பயன்படுத்தலாமா? எண்மயமாக்கம் (digitalisation), எண்மய இடைவெளி (digital divide).... கோபி 01:00, 20 ஆகஸ்ட் 2008 (UTC) dDgital என்பதற்கு எண்மியம் எனலாம், ஆனால் octal என்பதுடன் இது முரண்படும். எண்ணி அறியப்படுவது என்பதால் எண்ணிமம் எனலாம். Digital Camera என்பதை எண்ணிம ஒளிப்படக் கருவி எனலாம். எண்ணிமிய என்றும் கூறலாம் ஆனால் அது சற்று கடினமானது. Digitalization என்பதை எண்ணிமமாக்கல், எண்ணிமப்படுத்தல். Digital System = எண்ணிம ஒருங்கியம். அல்லது எண்ணிம சமைதியம். System என்பதற்கான பரிந்துரையை இங்கு காணலாம். Analog என்பதை இரு விதமாக பெயர்க்கலாம். அளவிடக்கூடிய பண்பு ஒன்று தொடர்ந்து மாறுபடுவது என்னும் கருத்தில் தொடர்மிய, தொடரொழுஙகு எனலாம், ஆனால் உண்மையான பொருள் ஒன்றோடு ஒப்பிட்டு அறிவது என்பதாகும். எனவே ஒப்பளவிய (ஒப்புஅளவு +இயம்) எனலாம். Analog meter = ஒப்பளவிய மானி, Analog computer = ஒப்பளவிய கணினி, Analog Circuit = தொடரொழுங்கு மின்சுற்று அல்லது தொடர்மிய மின்சுற்று. Analog devices = தொடர்மியக் கருவிகள். தொடர்ச்சியாக மாறும் இயல்புகள் அல்லது பண்புகளின் அடிப்படையில் இயங்கும் ஒன்றை தொடர்மியம் எனலாம் என்று நினைக்கீறேன்.--செல்வா 02:32, 20 ஆகஸ்ட் 2008 (UTC) தாய்ப் பகுப்புகள்இந்த வார்ப்புருவை எல்லா தாய்ப் பகுப்புகளிலும் இடவா. navigate பண்ண இலகுவாக இருக்கும். --Natkeeran 22:07, 19 ஆகஸ்ட் 2008 (UTC) Suggestions from Shijualex about EmbassyGo to/பார்க்க: விக்கிப்பீடியா:தமிழ்த் தூதரகம் (Tamil Embassy) கரடி கட்டுரைகரடி கட்டுரையை படித்தேன். இக்கட்டுரை மிகவும் பொதுவானதாக இருக்கிறது. கரடிகளில் பல்வேறு பேரினங்களும் பல உள்ளினங்களும் உண்டு மற்றும் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பண்புகள் உண்டு. இந்தியா மற்றும் இந்தியாவின் சற்றுப்புற நாடுகளில் காணப்படுவது Melursus ursinus என்ற சிற்றினவகையாகும் (http://en.wikipedia.org/wiki/Sloth_Bear) இவ்வினத்தை பற்றி விரிவாக எழுத நினைக்கிறேன். முன் எழுதியுள்ளதை என்ன செய்ய? அழித்துவிட்டு புதிதாய் எழுதவா? உதவி தேவை --கார்த்திக் 17:53, 21 ஆகஸ்ட் 2008 (UTC)
கார்த்திக், வேண்டியவாறு விரிவுபடுத்துங்கள். முன் எழுதியுள்ளதை தேவை இருந்தால் முற்றிலும் அழித்தும் எழுதலாம், ஆனால் கூடியமட்டிலும், ஒருசிலவாவது அதில் இருக்கச்செய்யுங்கள். ஆனால் முழுவதுமே மாற்றி எழுதினால்தான் நன்றாக இருக்கும் என்றால் அப்படியே செய்வதில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை, மற்ற பயனர்களின் கருத்தையும் அறிந்து கொள்ளுங்கள். எல்லா வரிகளையும் நீக்கி எழுதினாலும், கட்டுரையின் வரலாறு அங்கு இருக்கும். முன்னுள்ள பதிவுகளையும் யாரும் பார்க்கவும் இயலும். இது விக்கியில் உள்ள ஓர் அருமையான பண்புகளில் ஒன்று. --செல்வா 19:17, 21 ஆகஸ்ட் 2008 (UTC) நன்றி:) முடிந்தவரை தற்போது இருக்கும் விவரத்தை வைத்திருக்கிறேன். Melursus ursinusசை பற்றி புதிய கட்டிரையை ஆரம்பித்தால் அது பெயர் குழப்பத்திற்கு வழிவகுக்கலாம் தோழரே ! நான் ஆரம்பிக்கும் கட்டுரைகளில் முடிந்தவரை பெயர் குழப்பத்தை தவிர்க்க விரும்புகிறேன். பின்பொரு நாள் இவற்றையெல்லாம் ஒன்றாக் பார்க்கும் பொழுது குழப்பம் ஏற்படுத்தக்கூடாது. தற்போது தமிழ் நாட்டு பறவைகள் இக்குழப்பத்தில் முழ்கியுள்ளது :( ஒவ்வொருவரும் ஒவ்வொரு பறவைக்கும் தங்கள் விருப்பம்போல் பெயர் வைத்ததன் விளைவு. பல பெயர்கள் வெறும் ஆங்கிலத்தின் மொழி/ஒலி பெயர்ப்பு (எ. கா:எழுத்தாணி குருவியின் ஆங்கில பெயர்: Hoopee தமிழில் : ஹீப்பி!
googleblog.blogspot.com/2008/08/google-in-tamil.html--Natkeeran 18:39, 21 ஆகஸ்ட் 2008 (UTC) தங்களைப் பற்றிய கட்டுரைகள்தமிழ் விக்கிப்பீடியாவில் அண்மைக் காலத்தில் தங்களைப்பற்றித் தாங்களே கட்டுரைகள் எழுதிக் கொள்ளும் பழக்கம் பெருகி வருவதுபோல் தெரிகிறது. சுமார் ஓராண்டுக்கு முன்னரே இப்படியான கட்டுரை ஒன்று வந்தபோது இது பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்நிலை தொடர்ந்தால் இதற்கு எல்லையே இல்லாமல் போகும். தமிழ் எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் தங்களைப்பற்றிக் கட்டுரைகள் எழுதி தமிழ் விக்கியில் மில்லியன் கணக்கில் கட்டுரைகளை எழுதிவிடுவார்கள். சிலவேளை ஆங்கில விக்கியின் கட்டுரை எண்ணிக்கையை மிஞ்சிவிடவும் கூடும். இந்தப் போக்கைப் பயனர்கள் நிறுத்தவேண்டும் என்பது எனது கருத்து. இதைத் தொடர்ந்து அநுமதித்தால் பிற்காலத்தில் இதை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாமல் போகும். ஒரு கதை, கவிதை எழுதியவர்கள், ஒருபடம் நடித்தவர்கள் பற்றி எல்லாம் கட்டுரைகள் வரும்போதே நான் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இவ்வாறு முன்னுதாரணங்கள் இருப்பதால் என்னைப்பற்றி என் நண்பரைக் கொண்டும், என் நண்பரைப் பற்றி நானும் கட்டுரை எழுதினால் எப்படித் தடுக்கமுடியும். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பற்றிக் கட்டுரை எழுதும் போது சில கட்டுப்பாடுகள் இருக்கவேண்டும் என்பது எனது கருத்து. தயவு செய்து தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சியில் அக்கறை உள்ள பயனர்கள் ஒத்துழைக்கவேண்டும். மயூரநாதன் 12:10, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
தங்களைப் பற்றி எழுதியாவது விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கிறார்களே என்று எண்ண வேண்டி இருக்கிறது. தவிர, தங்களைப்பற்றிய விரிவான தகவல்களுக்கு மூலமகாவும்விளங்குகிறார்கள். இந்த வகையில் K. S. பாலச்சந்திரன் போன்றவர்கள் சேர்த்த கட்டுரைகள் ஏற்புடையவையே. எனவே, தமிழ் விக்கிப்பீடியா தொடக்க நிலையில் இருப்பதால் அறியப்பெற்றவர்கள் தங்களைப் பற்றி, தங்கள் ஆக்கங்களைப் பற்றி தாங்களே எழுதுவதை அவ்வளவாக எதிர்க்க முடியவில்லை. ஆனால், யார் எழுதினாலும் ஒவ்வொரு கட்டுரையின் கலைக்களஞ்சியக் குறிப்பிடத்தக்க தன்மையில் விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் உடன்படுகிறேன். --ரவி 12:50, 22 ஆகஸ்ட் 2008 (UTC) நூல்களை பற்றிய கட்டுரைகள்தமிழ்ச் சூழலில் வெளி வரும் நூல்களைப் பற்றிய கட்டுரைகள் எழுதுவது நன்றே. போதிய உரையாடல் இல்லாமல் நீக்கு என்ற வார்ப்புரு இட்டது அவ்வளவு பொருந்தமாக இல்லை. அண்மையில் நூல்கள் குறுங்கட்டுரைகள் இட்ட பயனர் எமது நடைமுறைகள் பற்றி முற்றும் அறிந்து இருக்க இயலாது. ஒரு கட்டுரையைத் தவிர மற்றய அனைத்து நல்ல குறுங்கட்டுரைகளே. இப்படி புதுப் பயனர்களை சலிக்க செய்வது எமது நீண்ட நோக்க வளர்ச்சிக்கு பயனளிக்கா. --Natkeeran 13:56, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
நூல்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதுவது வரவேற்கப்படவேண்டியதே. ஆனால் நீக்குவதற்கான வார்ப்புரு இடப்பட்ட பக்கங்கள் நூல்களுக்கான விளம்பரங்களே ஒழிய கட்டுரைகள் அல்ல. கிழக்கு, காலச்சுவடு பதிப்பகங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ள விளம்பரங்கள் இவற்றைவிடக் கட்டுரைத்தன்மை வாய்ந்தவை. ஒரு பக்கம் விக்கிப்பீடியாவில் இருப்பதற்கு அடிப்படைத் தகைமைகளாவது இருக்க வேண்டும். அவ்வாறற்ற பக்கங்கள் ஏனைய எல்லாப் பக்கங்களையும் மதிப்பிறக்குவனவாகும். நன்றி. கோபி 00:58, 23 ஆகஸ்ட் 2008 (UTC) தமிழ்ச் சொற்றொடர் அமைப்புஆங்கிலச் சொற்றொடர்களைத் தமிழாக்கும்போது, ஆங்கிலத்திலேயே சிந்தித்து தமிழாக்கி எழுதும்போது, தமிழ்ச் சொற்றொடர் அமைப்புகளுக்கு முரணாக எழுதுகிறோமோ என்று எண்ணுகிறேன். எடுத்துக்காட்டுக்கு,
???--ரவி 14:55, 22 ஆகஸ்ட் 2008 (UTC) கடைசி நல்லா இருக்கு! --Natkeeran 14:59, 22 ஆகஸ்ட் 2008 (UTC) நற்கீரன், அவர்கள் சேர்த்து எழுதுவது மரியாதை பொருட்டான ஒரு தமிழ் மரபு. எனினும், தமிழ் விக்கிப்பீடியாவில் நடுநிலைமை பேணல் பொருட்டு எல்லாரையும் "அவர்கள்" என்று சேர்த்து குறிப்பிடாமல் விடலாம். கொலைகாரர் முனுசாமி அவர்கள் 20 பேரைக் கொன்றார் என்று எழுத முடியாது அல்லவா? :) சில சொற்றொடர் அமைப்புகள் படிக்க நன்றாக இருப்பது போல் இருக்கின்றன. ஆனால், எது தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்ட அமைப்பு என்பதில் குழப்பமாக இருக்கிறது. யாராவது தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். --ரவி 15:08, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
என்னும் தொடரே சிறந்ததாக நான் கருதுகிறேன். வேறு ஒரு சிலவும் ஏற்கக் கூடியன. --செல்வா 15:44, 22 ஆகஸ்ட் 2008 (UTC) லக்குமி என்பது சரியல்ல என்று கருதுகிறேன், இலக்குமி மிட்டால், லட்சுமி மிட்டால் எது சரியானது? தவியில் லக்ஸ்மி என்று உள்ளது, அதை வழிமாற்றிவிடலாமா? --குறும்பன் 16:42, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
சமகால அரசியல் பதிவுகள்அளவுக்கு அதிகமாக நிகழ்கால அரசியலை உள்ளிடுவது தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என ஏற்கெனவே இணங்கியுள்ளோம். அண்மைக் காலத்தில் இப் போக்கு மீண்டும் அதிகரித்து வருகிறது. தயவு செய்து நிலைமையைக் கவனித்துச் செயல்படவும். அரசியல் பதிவதற்கு நூற்றுக்கணக்கில் தளங்களும் களங்களும் உள்ளன. தமிழ் விக்கிபோன்ற நோக்கங்களுடன் கூடிய தளம் தமிழருக்கு விக்கி மட்டும்தான் அதைக் நாம் கைநழுவவிடக்கூடாது. தமிழ் விக்கியை முதலில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய நிலை இருக்கவேண்டும். இந்த நிலை தொடர்ந்தும் இருக்க வேண்டுமானால் பயனர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மயூரநாதன் 15:33, 23 ஆகஸ்ட் 2008 (UTC)
சமகால அரசியல், ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள் குறித்த கட்டுரைகளால் தமிழ் விக்கிப்பீடியா எங்கு என்னவிதமான பிரச்சினைகள், சிக்கல்கள், தடைகளை எதிர்நோக்கக்கூடும் என்று தெளிவுபடுத்தினால் இத்தகைய கட்டுரைகளை எழுதுவோர் சிந்தித்துச் செயற்படக்கூடும். இக்கட்டுரைகள் குறித்த வழிகாட்டிக் கையேடும் தரலாம்--ரவி 16:59, 23 ஆகஸ்ட் 2008 (UTC)
மாவீரர்கள் பற்றிய ஆக்கங்களை விக்கி மூலத்தில் சேர்க்கலாம்மாவீரர்கள் பற்றிய கட்டுரைகளை விக்கி மூலத்தில் எந்த வித நடையிலும் பகிரலாம். இவை போராட்டத்தின் ஒரு வகை வரலாற்று ஆவணங்களே. எனவே அங்கு ஏதும் சிக்கல்கள் இருக்காது என்று நினைக்கிறேன். --Natkeeran 01:19, 24 ஆகஸ்ட் 2008 (UTC) விக்கி மூலத்தில் என்னென்ன சேர்க்கலாம் என்று தெளிவில்லை. GNU FDLல் கிடைக்கும் எந்த தகவலையும் விக்கி மூலத்தில் சேர்க்கலாமா? இல்லை படைப்பின் வயது, அறியப்பெற்றமை, குறிப்பிடத்தக்க இதழில் பதிப்பித்திருமை போன்றவை தேவையா? யார் வேண்டுமானால் கதை, கவிதை, கட்டுரை என்று எழுதி விக்கி மூலத்தில் சேர்க்கலாமா? ஒரு படைப்பு நேரடியாக விக்கி மூலத்தில் மட்டுமே இடம்பெறுவது குறித்து எனக்குத் தயக்கங்கள் உண்டு. இது குறித்து நாம் வழிகாட்டல்களை வகுக்க வேண்டும். எப்படி விக்கிப்பீடியாவில் நேரடியாக ஆய்வுக் கட்டுரைகளை எழுத முடியாதோ அதே போல் விக்கி மூலத்திலும் நேரடியாக படைப்புகளைச் சேர்க்கக்கூடாது என்று நினைக்கிறேன். விக்கி மூலம் ஒரு நூலகம் போன்றதே. அங்கு ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட ஆக்கங்களையே சேர்க்க வேண்டுமே அன்றி நேரடியாக படைப்புகளைச் சேர்ப்பது சரியாக இருக்காது. --ரவி 04:29, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
நற்கீரன், நான் விடுதலைப் புலிகள், ஈழப் போராட்டம் என்ற நோக்கில் மட்டுமே சொல்லவில்லை. எந்த ஒரு விசயம் குறித்தும், எங்கு எப்படி சேர்க்க வேண்டும் என்பது குறித்து நாம் தெளிவு கொள்ள வேண்டும். எந்த ஒரு திட்டத்துக்கும் ஏதாவது ஒரு வரைமுறை தேவை. விக்கிப்பீடியாவில் கூட கலைக்களஞ்சியக் கட்டுரை தகைமை, குறிப்பிடத்தக்கமை இருக்கிறதா என்று பார்க்கிறோம் அல்லவா? விக்கி மூலம் திட்டத்தை மதுரைத் திட்டம், நூலகம் திட்டம், கூட்டன்பெர்க் திட்டம் போன்று ஒரு ஆவணக்காப்பகமாகவே நோக்க இயலும். எல்லாவற்றையும் சேர்ப்போம் என்று சேர்த்தால் விக்கிமூலம் திட்டம் ஒரு வலைப்பதிவு போலவோ வலையிட வழங்கி போலவோ ஆகிவிடும். சட்ட நோக்கிலும் இவற்றைப் பார்க்க வேண்டி இருக்கிறது. முன்பு உங்கள் தொடர்பில் உள்ள ஒரு எழுத்தாளர் மூலம் திரட்டிய ஆக்கங்களை விக்கிமூலத்தில் சேர்ப்போமா என்று எண்ணினோம். ஆனால், விக்கி மூல ஆக்கங்கள் பொதுக்களத்தில் காப்புரிமை அற்று இருக்கின்றன. நாளை யாராவது இவ்வாக்கங்களைப் பதிப்பித்து விலை வைத்து விற்கவும் இயலும். இப்படி செய்வது அவ்வெழுத்தாளர்களுக்கு உவப்பாக இருக்குமா என்று முன் கூட்டியே அறிய வேண்டும். தவிர, விக்கி மூல ஆக்கங்கள் மூலப் படைப்புகள். அவை ஒருவராலோ விரும்பிச் சேர்ந்த ஓரிருவராலோ மட்டும் ஏற்கனவே ஆக்கி முடிக்கப்பட்ட, மூடப்பட்ட, மாற்ற இயலாத ஆக்கங்கள். விரிவான ஆக்கங்களைக் கூட்டு முயற்சியில் நிகழ்நிலையில் உருவாக்க அக்களம் உதவாது. எந்த விசயம் குறித்தும் விக்கி நூல்கள் தளத்தில் கூட்டு முயற்சியில் (கருத்துச் சாய்வுகளுக்குட்பட்டும் கூட) எழுதலாம் என்று நினைக்கிறேன். எனினும், விக்கி நூல்கள் தளத்தின் முதன்மை நோக்கமும் கூட பாடநூல்கள் போன்றவற்றை உருவாக்குவது தான். அரசியல் ஆக்கங்களை அங்கு உருவாக்குவது குறித்து தெளிவில்லை. தமிழ் இணையத்தில் இருக்கிற எல்லாவற்றையும் மீடியாவிக்கி திட்டங்களிலேயே குவிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்க இயலாது. அது மையப்படுத்துவதாகவும் விக்கிமீடியா திட்டங்களின் நோக்கங்களை மிகவும் இளக்குவதாகவும் இருக்கும். மீடியாவிக்கி கூட்டு முயற்சிகளுக்கு உதவுமே ஆனால், நம் நோக்கங்களுக்கு ஏற்ப அம்மென்பொருளைப் பயன்படுத்தி தனி வலைமனைகள் துவங்கலாம். இங்கிருந்து ஆர்வமுடையோர் கூட அங்கு சேர்ந்து கொள்ளலாம். --ரவி 16:43, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
"தமிழ் இணையத்தில் இருக்கிற எல்லாவற்றையும் மீடியாவிக்கி திட்டங்களிலேயே குவிக்கவேண்டாம்." என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்வது ஏன் என்று தெரியவில்லை. அப்படி தமிழ் இணையத்தில் எதுவும் கொட்டி கிடக்க வில்லை, கொண்டு வந்து குவிப்பதற்கு. இருப்பதை எப்படி எப்படி பயன்படுத்தலாம் என்றுதான் நாம் நோக்குகிறோம். இருக்கும் விக்கியில் எழுதலாம் என்றால் ஏன் ஒரு தனி தளம் எடுத்து நேரத்தை வளங்களை வீணடிக்க வேண்டும். --Natkeeran 21:02, 24 ஆகஸ்ட் 2008 (UTC) //Wikisource collects and stores in digital format previously published texts; including novels, non-fiction works, letters, speeches, constitutional and historical documents, laws and a range of other documents. All texts collected are either free of copyright or released under the GNU Free Documentation License. Texts in all languages are welcome, as are translations. Wikisource does not host "vanity press" books or documents produced by its contributors.// - விக்கிமூலம் குறிக்க ஆங்கிலக் கட்டுரையில் இருந்து Wikisource inclusion policyயும் பார்க்கவும். தமிழ்ச் சூழலில் வளங்கள் குறைவு பற்றிய உங்கள் கவலையை நாம் அனைவருமே பகிர்கிறோம். அதே வேளை உலகாளவிய திட்டங்களின் ஒரு பகுதியாக நாம் செயல்படுகிறோம் என்பதையும் நினைவில் கொண்டு, அத்திட்டங்களின் நோக்கங்களை ஒரேயடியாக இளக்காமல் இருப்பதும் அவசியம் என்று நினைக்கிறேன்.--ரவி 22:57, 24 ஆகஸ்ட் 2008 (UTC) போராளிகள் பற்றி முன்னர் அச்சு பதிக்கப்பட்டவை பதிவேற்றலாம். சரியா. மேலும் "உலகளாவிய திட்டங்களின் நோக்கங்களை" இதுவரை எந்த அளவுக்கு இளந்து இருக்கிறோம் என்று விபரித்தாலும் நன்று. --Natkeeran 01:44, 25 ஆகஸ்ட் 2008 (UTC) நற்கீரன். விசயம் போராளிகளைக் குறித்தல்ல. எதைப் பற்றிய ஆவணமாக இருந்தாலும்,
குறைந்தது, இந்த இரண்டு விசயங்களில் நாம் விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது விக்கிமூலத்தில் உள்ள சில ஆவணங்கள் மேற்கண்ட எதிர்ப்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை. அல்லது, தெளிவாக குறிப்பிடவில்லை. எடுத்துக்காட்டுக்கு, செயமோகன், வெங்கட் சாமினாதன் போன்றோரின் ஆக்கங்கள். இதனால், விக்கிமூலத்துக்குப் பெரிய ஆபத்து என்று சொல்ல வரவில்லை. ஆனால், விக்கிப்பீடியாவில் காப்புரிமை விலக்கு அற்ற படங்களை நீக்குவது போல, விக்கிமூலத்துக்கும் நாம் சில அடிப்படைக் கொள்களைகளையேனும் முடிவு செய்ய வேண்டும். --ரவி 02:20, 25 ஆகஸ்ட் 2008 (UTC)
நிரோஜன் கருத்துநிரோஜன் என்னுடைய பயனர் பக்கத்தில் பதிந்துள்ளவற்றை கீழே தந்துள்ளேன். இது பற்றி நான் விளக்கம் தர விரும்பவில்லை. தமிழ் விக்கியின் வளர்ச்சியை விரும்பும் பயனர்களுக்கு இது சமர்ப்பணம். மயூரநாதன் 16:03, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
நிரோ, போராளிகள், இயக்கம் குறித்து விக்கிப்பீடியாவில் எழுத வேண்டாம் என்று யாரும் தடை போட இயலாது. எனினும், நியாயமான நடைமுறை காரணங்கள், கவலைகளை முன்வைத்து ஒரு வேண்டுகோளாக விடுக்க இயலும். எவ்வளவு கவனமாக, நடுநிலையாக எழுத இயலுமோ எழுதுங்கள். இது விசயத்தில் நியாயமான சில கவலைகள் உண்டு: புலிகள் இயக்கம் இரு நாட்டிலும் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற சட்ட உண்மையைக் கருத்தில் கொள்கையில்,
தமிழ் இணையத்தில் இருக்கிற எல்லாவற்றையும் மீடியாவிக்கி திட்டங்களிலேயே குவிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்க இயலாது. அது மையப்படுத்துவதாகவும் விக்கிமீடியா திட்டங்களின் நோக்கங்களை மிகவும் இளக்குவதாகவும் இருக்கும். மீடியாவிக்கி மென்பொருள் கூட்டு முயற்சிகளுக்கு உதவுமே ஆனால், நம் நோக்கங்களுக்கு ஏற்ப அம்மென்பொருளைப் பயன்படுத்தி தனி வலைமனைகள் துவங்கலாம். இங்கிருந்து ஆர்வமுடையோர் கூட அங்கு சேர்ந்து கொள்ளலாம். இது விசயத்தில் மயூரனாதனின் கருத்தையோ மற்ற பலரின் கருத்தையோ தடை என்பது போல் நோக்க வேண்டாம். பழமை வாய்ந்த சிந்தனைகள் உடைய எவரும் விக்கிப்பீடியா என்று புரட்சிகரமான திட்டத்துக்காக தங்கள் உழைப்பைத் தருவர் என்று எதிர்ப்பார்க்கவில்லை. நம் எல்லோருடைய தனிப்பட்ட கருத்துகளும் நிச்சயம் முற்போக்கானவையாக இருக்கலாம். ஆனால், பெரும் உழைப்பைச் செலுத்தி முன்னெடுக்கும் ஒரு கூட்டு முயற்சித் திட்டத்தை, நடைமுறைச் சூழல்களைக் கருத்திற் கொண்டு காப்பதும் நம் பொறுப்பாகும். இது விசயத்தில் அறிவு, அனுபவம், முதிர்ச்சி கூடியோரின் கருத்துகளையும் நாம் கவனிக்க வேண்டும். --ரவி 17:04, 24 ஆகஸ்ட் 2008 (UTC) நிரோ, உங்கள் கருத்தும் விருப்பமும் எனக்கு நன்றாக விளங்குகின்றது. நடுநிலைமையுடன் (இது உங்கள் கருத்துக்கு எதிரானதல்ல) வலுவான சான்றுகோள்களுடன் தக்க நடையில் கட்டுரைகள் இருப்பதை வரவேற்கிறேன். மேலே சுந்தர், ரவி கூறியுள்ளவற்றைப் பொறுமையாகப் படித்துப் பார்த்து எப்படிச் செய்தால் நல்லதோ அப்படிச் செய்யுங்கள். ஆங்கிலத்திலே Reginald Dyer என்பாரைப் பற்றியும், மகாத்மா காந்தியைப் பற்றியும், உத்தம் சிங்கைப் பற்றியும் கோட்சேயைப் பற்றியும் கட்டுரைகள் இருப்பது போலவும், நெல்சன் மண்டெல்லா பற்றிப் பல மொழிகளில் இருப்பதுபோலவும், கட்டாயம் கட்டுரைகள் இருக்கலாம். வரலாற்றில் அறியத்தக்க எல்லோரைப்பற்றியும் கட்டுரைகள் இருக்கலாம். மாவீரர் என்றும் கூறலாம், ஆனால், புலிகளின் மாவீரரகள் என்று கூறுங்கள், சிறீலங்காவின் ஜெனரல் என்று கூறுங்கள். சிறீலங்கா அரசின் படையாளி, படைவீரர் என்று கூறுங்கள், அதாவது எதிர்க்கருத்து உள்ளவரும் மறுக்கமுடியாதவாறு நடையும் கருத்துப்போக்கும் இருப்பது நல்லது. வெளியிணைப்புகள் தருவதாயின், எதிர்-எதிர் கருத்துக்கள் என்று கூறித்தாருங்கள். நீங்கள் விரும்பும் கருத்துள்ள கட்டுரைகள் இருப்பதில் தவறில்லை என்றுதான் நினைக்கிறேன், ஆனால் ரவி, சுந்தர், மயூரநாதன் கூறிய கருத்துக்களை உள்வாங்கி பங்களிக்க வேண்டுகிறேன். பிறர் வந்து திருத்தினால், சொற்களை மாற்றினால், மனம் வருந்தாமல், உங்கள் மறுப்புகளை முன்வைத்து, எப்படி எழுதினால் இருபக்கத்த்துக் கருத்துடையவர்களும் இணங்கி ஏற்பார்கள் என்னும் போக்கில் பங்களிக்க வேண்டுகிறேன். இது இயலும். அருள்கூர்ந்து இங்கு முன்வைத்துள்ள கருத்துகளை சற்று ஊன்றி எண்ணிப்பாருங்கள்.--செல்வா 18:40, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
நிரோ, சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதற்காகச் சொல்லவில்லை. சட்டம் நம்மை ஒட்டு மொத்தமாக கட்டிப் போட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையே. இந்த முன்னெச்சரிக்கைக்கு ஏற்ப நம் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ளலாம் தானே? நன்றி--ரவி 23:00, 24 ஆகஸ்ட் 2008 (UTC) விக்கிப்பீடியாவை சீனா தடை செய்ததுஇலங்கையிலோ அல்லது தமிழ்நாட்டிலோ விக்கி தடை செய்யப்பட்டால் என்ற ஒரு case scenario இங்கு முன்வைக்கப்பட்டது. அப்படி செய்தால் அந்த நாடுகளில் இருக்கும் கருத்து சுதந்திரதுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே அது அமையும். நடுநிலையை வேண்டுவது சரி. ஆனால் ஒரு தலைப்பை தவிர் என்ற கருத்துப்பாடு சரியல்ல. இருப்பினும் நடுநிலைமை மிச்சம் மீறிய கட்டுரைகளை due process பின்பு நீக்கி விடலாம். விக்கிப்பீடியாவை சீன தடை செய்த போது அதன் உள்ளடக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று முடிவெடுக்க வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. --Natkeeran 21:23, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா குறித்த விமர்சனங்கள்
நான் ஒன்றைச் சொல்லிக்கொள விரும்புகிறேன். தமிழ் விக்கிப்பீடியா இன்னும் மிகுந்த சீரோடும் சிறப்போடும் மிக நன்றாகவும் விரைவாகவும் கட்டாயம் வளரும். விக்கிப்பீடியாவின் தொழில்நுட்பம் இதுகாறும் இல்லாதவாறு மிகவிரிவாயும் துல்லியமாகவும் வரலாற்றுப் படிவுகளைக் காட்டும் ஒன்று. எனவே பொய்யுரைகள் ஒருபோதும் செல்லுபடியாகாது. எல்லோருக்கும் புரியும் வகையில் நல்ல தமிழில், கூடியமட்டிலும் எளிய நடையில் நாம் தொடர்ந்து எழுதிவருவோம். காலம் சொல்லும் இதன் பயனை, விளைவை. உமாபதி சொல்வதுபோல தவம் செய்வர் தம் கருமம் செய்வார் என்றவாறு நாம் நமது திட்டத்தை முன்னேடுப்பதே நல்லது. இன்முகத்துடன் இயன்றவாறு நாம் இதனைச் செய்வோம்! --செல்வா 17:26, 27 ஆகஸ்ட் 2008 (UTC) சொற்கள் பயன்பாடு
--Natkeeran 18:04, 31 ஆகஸ்ட் 2008 (UTC)
Date of the Tolkappiyam |
Portal di Ensiklopedia Dunia