விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு14குரோம் உலாவியில் Firefox 3 உலாவியைக் காட்டிலும் த.வி பார்க்க, தொகுக்க கூடுதல் வேகமாக இருப்பது போல் தோன்றுகிறது. அனைவரும் பயன்படுத்திப் பார்க்கலாம்.--ரவி 02:16, 3 செப்டெம்பர் 2008 (UTC)
தமிழில் உள்ளிடுவது எப்படி? நான் பயர்பாக்சில் தமிழ்விசை பயன்படுத்துகிறேன். --சிவக்குமார் \பேச்சு 14:25, 4 செப்டெம்பர் 2008 (UTC) NHM writer, எ-கலப்பை போன்றவை நிறுவிப் பயன்படுத்துவது தான் ஒரே வழி. அதுவும் NHM writerல் மட்டுமே phonteic முறையிலும் உள்ளிடலாம். எ-கலப்பை தமிழ்99 முறை மட்டும் வேலை செய்யும். இது குரோமில் உள்ள வழு. வருங்காலத்தில் firefox நீட்சிகளையும் பயன்படுத்த ஏற்பு தருமானால் நன்றாக இருக்கும். --ரவி 14:42, 4 செப்டெம்பர் 2008 (UTC)
வலைச்சமுதாயங்களில் பங்களிப்பு விகிதம்வலைச்சமுதாயங்களில் பங்களிப்பு விகிதம்--ரவி 23:09, 6 செப்டெம்பர் 2008 (UTC) Clay Shirky: Institutions vs. collaboration
விக்கிப்பீடியா முழுமைக்குமான கலைச்சொல் மாற்றங்கள்விக்கிபீடியா - > விக்கிப்பீடியா என்று பெயர் மாற்றிய பிறகு தளம் முழுக்க இம்மாற்றங்களைச் செய்ய வேண்டி வந்தது. இது போல் கலைச்சொல் பயன்பாடுகளிலும் ஒரு புரிந்துணர்வுக்குப் பிறகு தளம் முழுக்க மாற்ற வேண்டி வரலாம். எடுத்துக்காட்டுக்கு, தபால் - > அஞ்சல் என்று தளம் முழுக்க மாற்றலாம் என்றால் இதைத் தானியக்கமாக எப்படிச் செய்வது? இதற்கு ஒரு நிலையான தானியங்கி செய்து, வேண்டிய சொல் மாற்றங்களை விண்ணப்பித்து பொது இணக்கத்துக்குப் பிறகு மாற்றுமாறு அமைத்தால் நன்றாக இருக்கும். வருடம் - > ஆண்டு போன்ற ஒரே வகை உரை திருத்த்ததைப் பல கட்டுரைகளிலும் திரும்பத் திரும்ப கைப்பட செய்ய வேண்டி உள்ளதால் இத்தகைய ஏற்பாடு மிகவும் உதவும்--ரவி 05:08, 11 செப்டெம்பர் 2008 (UTC) சொல் இலக்கணம்நிர்வாகம் - > நிருவாகம்; கர்நாடகம் - கருநாடகம்; செர்மனி - > செருமனி என்று எழுதும் வழக்கம் இருப்பது ஏன்? சொல்லின் இடையில் ர் போன்ற மெய்கள் தனியே வரலாகாதா? இதற்கான இலக்கணம் என்ன?
மேற்கண்டவை போன்ற இலக்கண வழிகாட்டுக் குறிப்புகளைத் தொக்குதால் நடைக்கையேட்டில் இட்டு வைக்கலாம்--ரவி 05:09, 11 செப்டெம்பர் 2008 (UTC)
அவன்மன்னர்கள், புலவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் போன்றோரை அவன், இவன் என்று விளிக்கும் பேச்சு வழக்கில் உண்டு. எழுத்து வழக்கிலும் மன்னர்கள், புலவர்களுக்கு இது பயன்படுகிறது. விக்கிப்பீடியாவைப் பொறுத்த வரை என்ன நிலைப்பாடு எடுக்கலாம்? இது வரை மன்னர்கள் குறித்த கட்டுரைகளில் மட்டும் அவன் என்று குறிப்பிடுகிறோம். எல்லாரையும் அவர் என்றே குறிப்பிட்டு விடலாம் என்பது என் பரிந்துரை --ரவி 05:35, 11 செப்டெம்பர் 2008 (UTC) தரக் கண்காணிப்புஇது வரை த.வி தரக்கண்காணிப்பு என்பது பிற இந்திய விக்கிகளோடு ஒப்பிட்டும், கட்டுரை அளவு, ஆழம் போன்ற அடிப்படைகளிலுமே இருக்கி்றது. அண்மையில் கட்டுரைகளின் முக்கியத்துவம் குறித்த வார்ப்புருகளை தெரன்சு உருவாக்கினார். கட்டுரைகளின் முக்கியத்துவம் அடிப்படையில் தரக் கண்காணிப்பு வார்ப்புருகளை பேச்சுப் பக்கங்களில் இடுவதன் மூலம் நம் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் காலம் வந்து விட்டதோ எனத் தோன்றுகிறது. அனைவருக்கும் உடன்பாடு என்றால் கொஞ்சம் கொஞ்சமாக இப்பணிகளைத் துவக்கலாம். ஒரு சிறு வரையறையை முன்வைத்து இணங்கி, ஆர்வமுடையோ முக்கியத்துவ வார்ப்புருகளை இடத் துவங்கலாம்--ரவி 05:38, 11 செப்டெம்பர் 2008 (UTC)
ஆங்கில விக்கி நோக்கில் தமிழ், தமிழ்நாடு கட்டுரைகள் இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கலாம். ஆனால், நம் நோக்கில் இவை முதல் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, தரக்கண்காணிப்பு தமி்ழர் நோக்கிலும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். அப்புறம், இந்திய ஊர்கள், தமிழ்த் திரைப்படங்கள் என்று ஒரே போன்று ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் உள்ளன. இவற்றின் முக்கியத்துவம் கிட்டத்தட்ட ஒரே போல் தான் இருக்கும். இவற்றுக்கு கைப்பட முக்கியத்துவ வார்ப்புரு இடுவதை விட, பகுப்பின் முக்கியத்துவத்தை உரையாடி அறிவித்து விட்டு, பகுப்பு முழுமைக்கும் தானியக்கமாக வார்ப்புருக்கள் இட்டால் வேலை இலகுவாக முடியும். நற்கீரன், சுந்தர், தெரன்சு முதலியோர் இத்தகைய தானியங்கி உருவாக்கத்தில் உதவினால் நன்று.--ரவி 20:35, 11 செப்டெம்பர் 2008 (UTC) AWBயில் தரக் கண்காணிப்பிற்கான வார்ப்புரு இடுவதற்கான ஒரு நிரல் உண்டு. இதில் சிறு மாற்றங்களைச் செய்தால் தவியில் பயன்படுத்தலாம். ஆங்கில விக்கியின் முக்கியத்துவங்கள் ஐரோப்பிய அமெரிக்க நோக்கு கொண்டவையே. எனினும் உலக நோக்குள்ள முக்கியத்துவங்களை அங்கிருந்து பெறலாம்.--Terrance \பேச்சு 00:28, 12 செப்டெம்பர் 2008 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய முக்கிய கட்டுரைகளுக்கான பட்டியல்களான விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2, விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் ஆகியன இன்னமும் முழுமையாகத் தமிழாக்கப்படாமல் இருக்கின்றன. அவற்றை முழுமையாகத் தமிழாக்கி அனைத்துச் சிவப்பு இணைப்புக்களுக்கும் கட்டுரைகள் எழுதுவதோடு அந்த ஏறத்தாழ ஆயிரம் கட்டுரைகளையும் தம்மளவில் முழுமையானவையாக விரித்து எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோபி 02:19, 12 செப்டெம்பர் 2008 (UTC) Carl Sagan - A thousand years of darkness--Natkeeran 19:57, 13 செப்டெம்பர் 2008 (UTC) இந்திய மொழிகளுக்கான தமிழ் எழுத்துப்பெயர்ப்பு கருவி--Natkeeran 17:58, 15 செப்டெம்பர் 2008 (UTC) மீடியா விக்கி quiz நீட்சிமீடியா விக்கி quiz நீட்சியை (http://www.mediawiki.org/wiki/Extension:Quiz) பயன்படுத்தி கேள்வி விடைகளை உருவாக்கினால் நன்றாக இருக்கும். இந்த நீட்சி வேறு இடத்தில் பரிசோதனை செய்து பார்த்தேன். இலகுவாக வேலை செய்கிறது (http://tamilscitech.org/wiki/index.php5?title=Main_Page#quiz0). இதை தமிழ் விக்கி Folders சேர்க்க வேண்டும். பின்னர் LocalSettings.php சிறு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு அனுமதி உண்டா. இருந்தால் எப்படி நிறைவேற்றலாம். --Natkeeran 20:10, 15 செப்டெம்பர் 2008 (UTC) இணைப்பு பற்றிபெரிங் நீரிணை கட்டுரையில் வலைப்படக்கருவிகான இணைப்பை கொடுத்தேன்; வேலை செய்யவில்லை. ஏன் என்று தெரியவில்லை. உதவி தேவை --கார்த்திக் 19:07, 17 செப்டெம்பர் 2008 (UTC)
தமிழ்க் கலைக்களஞ்சியம் வரலாறு--Natkeeran 01:33, 19 செப்டெம்பர் 2008 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவை தெளிவு படுத்தல் எளிமைப் படுத்தல்
இந்த தகவல்களை சற்று இறுக்கமாக வரையறை செய்ய வேண்டும். பல பக்கங்களில் தகவல்களை சிதறடிக்காமல் இருப்பதும் நன்று. --Natkeeran 01:32, 20 செப்டெம்பர் 2008 (UTC)
கருவி, உபகரணம், சாதனம், பொறி, ஆயுதம்இதில் வடி, அரிதட்டு என்பவற்றை utensils என்கிறார்கள். தமிழ் என்ன? உரல், அம்மி போன்றவற்றை சமையல் கருவிகள் எனலாமா? உபகரணம் என்பது சமஸ்கிருத சொல்லா? மாற்று தமிழ் சொல் உண்டா? --Natkeeran 21:46, 20 செப்டெம்பர் 2008 (UTC) உபகரணம் என்பது கருவி என்ற பொருள் தருவது இல்லையா? --குறும்பன் 20:24, 24 செப்டெம்பர் 2008 (UTC) தமிழ் உச்சரிப்பு
விக்கிப்பீடியா வருகையும் பயன்பாடும்தரக்கண்காணிப்புடன் வருகையையும் அவ்வப்போது நோக்க வேண்டும். ஐம்பத்தேழாயிரத்துக்கும்
விக்சனரி தமிழ் விக்கிப்பீடியா மீது விமர்சனம்Micro-corpus codification in the Hebrew Revival--Natkeeran 00:34, 25 செப்டெம்பர் 2008 (UTC) கட்டுரைகள் எண்ணிக்கை - வழுகட்டுரைகள் எண்ணிக்கை சில நாட்களாகவே இற்றைப்படுத்தப்படுவது இல்லை. ஏன்? மயூரநாதன் 04:10, 27 செப்டெம்பர் 2008 (UTC)
தமிழ் விக்கிபீடியாவுக்கு அகவை 5
தெரியுமா உங்களுக்குமுதற்பக்கத்தில் ஆங்கில விக்கியில் இருப்பது போல் தெரியுமா உங்களுக்கு பகுதியைத் தொடங்கப் பரிந்துரைக்கிறேன். சில கட்டுரைகள் சிறிதாயிருப்பினும் சுவை மிக்க செய்திகள் இருக்கக் கூடும். அவற்றை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவது பயனர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தலாம். இது போன்ற பட்டியலை உருவாக்கி ஒவ்வொன்றாக காட்சிப் படுத்தலாம். மற்ற பயனர்களின் கருத்தை வேண்டுகிறேன். முதற்பக்கத்தை அடிக்கடி இற்றைப்படுத்தும் கனகர், நற்கீரன் ஆகியோரின் கருத்தையும் அறிய ஆவல். --சிவக்குமார் \பேச்சு 18:18, 30 செப்டெம்பர் 2008 (UTC) ஒரு கட்டுரைக்கு பதிலாக, இரு துணுக்குகளை இடலாம். முன்னர் இப்படி செய்தோம். மீண்டும் செய்யலாம். --Natkeeran 12:56, 2 அக்டோபர் 2008 (UTC) ஆம் நல்லதோர் விடயமே, தலைப்பை உங்களுக்குத் தெரியுமா? என்றவாறு வைக்கலாமே--உமாபதி \பேச்சு 13:07, 2 அக்டோபர் 2008 (UTC)
கோவை - expression ?? கோவை ?? - arrayசரியான தமிழ் தேவை! --Natkeeran 00:20, 9 அக்டோபர் 2008 (UTC)
Featured article mouse-over textWhen you mouse-over interwiki links to featured articles in other languages, it shows a little pop up box that says "This is a featured article in another language." For example if you go here: கூடைப்பந்தாட்டம் and mouse over the interwiki language links to Croatian, Italian, etc. (the ones with yellow stars) you will see this pop up box. Is there a way to translate that into Tamil so it displays in Tamil when you mouse over? Not really a big deal, but I figured since everything else has been translated to Tamil in Tamil Wikipedia it makes sense for that to be translated too...Werklorum 04:07, 10 அக்டோபர் 2008 (UTC) இலங்கைத்தமிழ் - இந்தியத்தமிழ்இலங்கைத்தமிழ் - இந்தியத்தமிழ் கையேடு உண்டா? சில இடங்களில் பிழைகளை (எனக்கு பிழையாக தெரிபவை) திருத்தலாம் என்றால் அது இலங்கைத்தமிழாக இருக்குமோ என்று தயக்கமாக இருக்கிறது. --குறும்பன் 15:52, 10 அக்டோபர் 2008 (UTC)
சனாதிபதி - குடியரசு தலைவர்பல கட்டுரைகளில் சனாதிபதி என குறிப்பிடப்பட்டுள்ளது, அதை குடியரசு தலைவர் என மாற்றலாமா? நாடு குடியரசாக இருக்கும் போது அதன் தலைவரை சனாதிபதி என்பதற்கு பதில் குடியரசு தலைவர் எனலாம். --குறும்பன் 16:06, 10 அக்டோபர் 2008 (UTC)
அண்மைய ஆக்கங்கள்அண்மையில் சிவா, மயூரநாதன், கனகு, செல்வா, உமாபதி, வெர்க்குலோரம், கனகு, குறும்பன், தெரன்சு உட்பட பலரும் வரிந்து கட்டிக் கொண்டு கட்டுரைகளை ஆக்கி வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. :-) -- சுந்தர் \பேச்சு 01:53, 17 அக்டோபர் 2008 (UTC) முக்கிய அறிவிப்புசில நாட்கள் முன்பாக விக்கிமீடியா சார்பாக விக்கிக்கு வரும் பயனர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தும் திட்டத்தைத் துவக்கினர். அதைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் மயூரநாதனும் செல்வாவும் நானும் அவர்களுக்கு உதவினோம். இப்போது அந்தத் தகவல் சேர்ப்புக் கருத்துக்கணிப்பு துவங்குகிறது. அனைவரும் தவறாமல் மேலே பின்வருவதுபோல் உள்ள இணைப்பைச் சொடுக்கித் தகவல்களைத் தாருங்கள். நன்றி. -- சுந்தர் \பேச்சு 09:36, 17 அக்டோபர் 2008 (UTC) |
Portal di Ensiklopedia Dunia