விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு18பொங்கல் வாழ்த்து! தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!![]() பொங்கலோ பொங்கல்!, எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! திருவள்ளுவர் 2040 ஆம் ஆண்டு உலகில் உள்ள எல்லோரும் நலமுடன் வாழ நல்வாழ்த்துகள். தமிழர் திருநாளாம், உழைப்பாளிகளின் திருநாளாம், உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்! உலகெங்கும் நிகழும் கொடுமைகள் மறைந்து மக்கள் வாழ்வில் அமைதியும், இன்பமும் பெருக நெஞ்சார இறைஞ்சுகிறேன். கூட்டுழைப்பு நல்கும் தமிழ் விக்கி நண்பர்களுக்கு சிறப்பான நல்வாழ்த்து! அன்புடன் --செல்வா 02:46, 14 ஜனவரி 2009 (UTC)
சொல்லொண்ணா வருத்தம் தரும் உண்மை, நற்கீரன்! வெறும் சொல்லும் பேச்சும் பொருளிழக்கும் துன்பம். எனினும், உள்ளழியாமை என்பார்களே அது போல அடங்காத் துயரத்தையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொள்ளும் நிலைமையிலேயே ஈழத்தமிழ் மக்கள் உள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். வழி பிறக்கும் என நம்புவோம்! என் நண்பர் பெரி. சந்திரசேகர்,
ஐங்குறுநூற்றின் மருதத்திணையின் முதற்பத்தில் இருந்து ஒரு வாழ்த்து அனுப்பினார். அதில் கூறுவது போல
பகைவர் புல் ஆர்க (பகைவர் புல்லை உண்பார்களாக!) முழுப்பாட்டும்:
"வாழியாதன்! வாழியவினி! திருவருளால் துன்பங்கள் நீங்கி மீண்டும் நல்வாழ்வு பெற வேண்டுவோம்! தீது இல்லாகுக! --செல்வா 18:37, 14 ஜனவரி 2009 (UTC)
நம் சோகங்களும் வலிகளும் அழிந்து புது வாழ்விற்கு இந்த தை வழிகாட்டட்டும். தமிழர் வாழ்வு தரணியெல்லாம் செழிக்கட்டும். தற்காலிக சோகத்தை விரைவில் விரட்டுவோம்.--கார்த்திக் 18:42, 14 ஜனவரி 2009 (UTC) அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் & புத்தாண்டு வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும், இத்தை அனைவருக்கும் நலங்களை கொண்டு வரட்டும் --குறும்பன் 19:56, 14 ஜனவரி 2009 (UTC) ஆம், தை பிறந்துள்ளது, வழி பிறக்கும் என்று நம்புவோம். -- சுந்தர் \பேச்சு 06:04, 17 ஜனவரி 2009 (UTC) பெங்களூரில் தமிழ் விக்கிப்பீடியா கருத்தரங்கம்பெங்களூரில் இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு 2-3 மணி நேர தமிழ் விக்கிப்பீடியா - ஒரு முன்னுரை என்ற கருத்தரங்கத்திற்கு அனுமதி கோரியிருந்தேன், இன்று அனுமதி கிடைத்துவிட்டது :). இந்த கருத்தரங்கம் இவ்வளாகத்தில் இருக்கும் சுமார் 60 தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை பற்றியும் மற்றும் அவர்கள் பங்களிப்பை எப்படி செய்யவேண்டும் என்ற விடயங்களை தெரிவிக்க வேண்டி நடத்த திட்டமிட்டுள்ளேன். இதை பற்றி திரு சுந்தரிடமும் உரையாடினேன், இதில் பங்கு பெற அவருடைய ஆவலை தெரிவித்ததுடன் மேலும் சிவகுமார், ரவி மற்றும் பெங்களுரில் இருக்கும் மேலும் சிலரையும் அழைக்கலாம் எனக்கூறியிருந்தார். இந்நிகழ்ச்சி பிப்ரவரி திங்களில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் (பெரும்பாலும் 3/4 சனியில்) நடக்கும். இதில் முக்கியமாக ஒலி ஒளியுடன் உரையாட நபர்கள் தேவை.இது சம்பந்தமாக அனைவரது கருத்துகளை பெறவிருப்புகின்றேன். --கார்த்திக் 17:59, 16 ஜனவரி 2009 (UTC)
பெங்களூர் தமிழ் விக்கிப்பீடியா கருத்தரங்கம் சிறப்பாக அமைய பாராட்டுக்கள் கார்த்திக். இந்திய அறிவியல் கழகத்தில் இருப்பவர்கள் பங்களித்தால் துறை சார் கட்டுரைகள் அதிகமாகவும் ஆழமாகவும் இருக்கும். --குறும்பன் 02:17, 17 ஜனவரி 2009 (UTC)
காமில் சுவெலிபில் மறைவுசனவரி 17-ல் தமிழியல் முன்னோடி காமில் சுவெலிபில் மறைந்தார். (ஆங்கில விக்கிப் பக்கம், தமிழ் நேசன் வாழ்க்கைக் குறிப்பு) -- சுந்தர் \பேச்சு 10:19, 18 ஜனவரி 2009 (UTC) சனவரி 18, சென்னை தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை
இன்னும் முனைப்பான விக்கிப்பீடியா உதவி, பயிற்சிபுதுப்பயனர்களை ஈர்ப்பதிலும், வருபவர்களுக்கு உதவுவதிலும் நாம் இந்த ஆண்டு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும்.
sitenoticeல் உதவி அறிவிப்பு வெளியிடுவதைப் பற்றி பயனர்களின் கருத்தை வேண்டுகிறேன். சோதனை முயற்சியாக என்னுடைய தொலைப்பேசி எண்ணையே இட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இதன் விளைவுகளைக் கண்டு தொடர்ந்து என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கலாம்--ரவி 12:55, 21 ஜனவரி 2009 (UTC) பெங்களூர் விக்கிப்பீடியா அறிவகம்http://thamizha.com முகுந்த் அவர்கள் பெங்களூரில் ஒரு விக்கிப்பீடியா அறிவகம் அமைக்க முன்வந்துள்ளார். அவருடைய அலுவலகத்தில் 7 கணினிகள், 15 பேர் அமரத்தக்க இடம் உண்டு. கூட்டம் அதிகமானால் வேறு இடம் ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறார். மாதம் இரு முறை ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சிகள் ஏற்பாடு செய்யலாம். முதலில் விக்கிப்பயிற்சி. தேவை இருப்பின் அதே இடத்தை பிற தமிழ் இணையத் திட்டங்கள், கட்டற்ற இயக்கப் பயிற்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெங்களூரில் இருந்து நம்மில் யாராவது ஒருவர், இயன்றால் இருவர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க இயலுமானால் வரும் சனவரி 25 அன்றே பட்டறையை அறிவிக்கலாம்--ரவி 08:25, 19 ஜனவரி 2009 (UTC) விக்கிப்பீடியா:பெங்களூரு தமிழ் விக்கிப்பீடியா அறிவகம்--ரவி 11:41, 23 ஜனவரி 2009 (UTC) விக்கிப்பீடியாவை இணைய களங்கள் ஊடாக அறிமுகப்படுத்தல்யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் த.வி என கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இவற்றுள் யூடியூப் கவனம் தரப்பட்டு அவ்வப்போது இன்றைப்படுத்தப்படும். அனைத்து நிர்வாகிகளுக்கும் கணக்கு விபரம் அனுப்பிவைக்கப்படும். மற்ற பயனர்கள் கணக்கு விபரங்கள் வேண்டி, இங்கே குறிப்பிடுக. இது த.வி அறிமுகப்படுத்தலின் ஒரு பாகம் ஆகும்.
--Natkeeran 22:06, 21 ஜனவரி 2009 (UTC) அருமையான கட்டுரை: அறிவியலும் தமிழ்ச்சமூகமும்த. செந்தில்பாபு. (2008). அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை.[1] --Natkeeran 02:09, 23 ஜனவரி 2009 (UTC)
தமிழாக்கம் தேவைMadras Crocodile Bank Trust என்பதற்கு தக்க தமிழாக்கம் தேவை. Centre for Herpetology என்பதற்கு "ஊர்வனவியல் மையம்" என்பது தகுந்ததா?. நன்றி--கார்த்திக் 19:30, 25 ஜனவரி 2009 (UTC)
வரைபடம் தமிழாக்கம்http://en.wikipedia.org/wiki/File:Indian_Kadamba_Empire_map.svg இந்த வரைபடத்தை தமிழாக்கம் செய்வது எப்படி? உதவி பக்கம் ஏதேனும் உண்டா? உதவி தேவை--கார்த்திக் 06:14, 27 ஜனவரி 2009 (UTC)
வெளி இணைப்புகள்வெளி இணைப்புகளை விளம்பர நோக்குடன் இணைப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். நல்ல அறிவார்ந்த கட்டுரையாக, வலுவான சான்றுகோள்களுடன், குறிப்பிடத்தக்கவாறு விரிவு தருவதாக அமைந்திருந்தால் வெளியிணைப்பாக கட்டுரைகளைத் தருவது நல்லதே. தமிழ் விக்கியை விளம்பரப் பலகையாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். --செல்வா 17:35, 27 ஜனவரி 2009 (UTC)
படம் JPG vs jpgபடம் .JPG ஆக இருந்தால் படத்திற்கு கீழ் எழுதும் குறிப்பு தெரிவதில்லை, .jpg ஆக இருந்தால் தெரிகிறது. ஆவி-யிலும் இவ்வலு உள்ளதா என்று தெரியவில்லை--குறும்பன் 20:59, 5 பெப்ரவரி 2009 (UTC)
கபினி ஆறு, செனாப் ஆறு இவை இரண்டிலும் படம் .JPG ஆக இருப்பதால் படத்திற்கு கீழ் எழுதிய குறிப்பு தெரியவில்லை. தார் பாலைவனம் படம் jpg ஆக இருப்பதால் படத்திற்கு கீழ் எழுதிய குறிப்பு தெரிகிறது. --குறும்பன் 23:15, 5 பெப்ரவரி 2009 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia