விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு24சில கருத்துகள்கடந்த வார இறுதி கூட்டம், பட்டறை மூலம் புரிந்து கொண்ட சில கருத்துகள்: 1. தமிழ் விக்கிப்பீடியாவின் உதவிப் பக்கங்களை மேம்படுத்த வேண்டியது மிக முக்கியம். ஒலி, ஒளிக் கோப்புகள்,படங்கள், வரை படங்கள் மூலம் இதைச் செய்ய வேண்டும். பங்களிக்க விரும்புவோரும் இயலாதவாறு தமிழ் விக்கி கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. ஒரு பட்டறையில் அருகில் இருந்து சொல்லித் தரும் போது எளிமையாகப் புரிந்து கொள்வோரால் ஏன் தளத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறது? 2. புதியவர்கள் தரும் பங்களிப்புகளில் கடுமையான திருத்தங்கள் செய்வது, தொடர் கருத்துகள் தெரிவிப்பது, நீக்குவதைத் தவிர்க்கலாம். மனதளவில் இது அவர்கள் பங்களிப்பு தொடர்வதைத் தவிர்க்கிறது. தாங்கள் விக்கிப்பீடியாவுக்கு எழுதும் அளவு தகுதி இல்லாதவர்களோ என்று எண்ண வைக்கிறது. ஒரு ஆறு மாத காலமாவது அவர்கள் சேவையில் சிறக்க நாம் துணைபுரிய வேண்டும். அதற்குள் விக்கிப்பீடியா முறைகளை அறிந்து கொள்ள, மற்ற பயனர்கள் மேல் நன்னம்பிக்கை வளர உதவும். தமிழ் விக்கியின் எழுத்து நடை, கொள்கைகள், கூட்டாக்கச் செயல் முறை தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் புதிது. அவர்கள் இதற்குப் பழகுவதற்கான வாய்ப்பை நாம் நல்க வேண்டும். புதியவர்களின் கட்டுரைகளில் நாம் கூடுதல் தகவல் சேர்ப்பது, நல்ல மாற்றங்களைச் செய்வது நம் மதிப்பைப் பெரிதும் உயரச் செய்கின்றது. நாம் நம் ஆர்வப் புலங்களில் மட்டும் எழுதாமல் புதியவர்களின் கட்டுரைகளில் பெரும் பங்கு செலுத்த வேண்டும். 3. சிலர் ஒரு கட்டுரை எழுதுகிறார்கள். நாம் ஏதாவது காரணத்தால் நீக்கினால், அதை அறியாமல் புரிந்து கொள்ள முடியாமல் விலகி விடுகிறார்கள். தான் எழுதிய கட்டுரையைக் காணவில்லை என்பது பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. இயன்ற அளவு, அவர்களுக்கு தகவல்கள் சென்று சேரச் செய்யலாம். தொலைப்பேசி, மின்மடல் மூலம் பேசிவிடுவதும் புரிதல், நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றது. பேச்சுப் பக்கச் சச்சரவுகளைத் (சண்டைகளைத்) தீர்க்கவும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம் :) நற்கீரன் போன்றோர் பரிந்துரைக்கும் உள்வாங்கும் (inclusionist) கொள்கையை நாம் கொஞ்ச காலத்துக்கேனும் பின்பற்றலாம். கட்டுரைகளை நீக்குவதில் சற்று பொறுமை காட்டலாம். 4. ஆழமற்ற பல குறுங்கட்டுரைகள், ஒரே துறை சார் கட்டுரைகள் தமிழ் விக்கியின் மதிப்பைக் குறைத்துக் காட்டுகிறது. விரிவான பல் துறை சார் அடிப்படை கட்டுரைகள் எழுதுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 5. ஏதோ ஒரு ஊரில் தடுப்பூசியால் பிரச்சினை என்றால் அது தடுப்பூசி நன்றாக இருக்கும் மற்ற ஊர்களிலும் பதற்றத்தை உண்டு செய்கிறது. அது போல ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள பிரச்சினைகளால் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய தவறான புரிதல் வருவது இயல்பே. இது branding காலம். தமிழ் விக்கிப்பீடியாவின் நலனை முன்னிட்டாவது, தமிழ் விக்கிப்பீடியர்களாகிய நாம் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள தமிழ் சமூகம் சார் கட்டுரைகளை எப்படி மேம்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். 6. அதிகாரி, நிர்வாகி, admin, bureaucrat போன்ற பெயர்கள் விக்கியின் பயனர் செயல்பாடு குறித்து பிழையான மனநிலையைத் தோற்றுவிக்கின்றன. "என்னை அதிகாரம் செய்ய நீ யார்? நிருவாகிகள் வைத்தது தான் சட்டமா? நாங்கள் எல்லாம் குறைவா?" என்பது போன்ற எண்ணங்கள். வேறு பொருத்தமான பெயர்கள் ஏதும் இருந்தால் சிந்திக்கலாம். நிருவாகப் பொறுப்பின் மூலம் துப்புரவுப் பணிகளையே மேற்கொள்கிறோம். பேசாமல் குப்பை கூட்டும் பயனர் (sysop), ரொம்ப நாளாக குப்பை கூட்டும் பயனர் (bureaucrat) பயனர் என்று பெயரை மாற்றலாமோ ;) --ரவி 05:02, 16 ஜூன் 2009 (UTC) இலக்கண மாற்றம்உருசியா, இராமன் போன்ற சொற்களில் “இலக்கணத்திற்க்காக” , உ, இ என்ற எழுத்துகள் போடப்படுகிறன. தற்காலத்தில் மக்கள் பெச்சிலும், எழுத்துலும் அந்த நியதியை பெரும்பான்மையினர் கடை பிடிப்பதில்லை. அதனால் இ,உ (எ.கா. உருசியா) என்ற கற்பனை நியதியை தவிர்க்க பரிவு. அதனால் 13ம் நூற்றாண்டிலிருந்து 21ம் நூற்றாண்டுக்கு முன்னேறுவோம். முன் நன்றிகள்--Ginger 19:52, 16 ஜூன் 2009 (UTC)
விக்சனரிஒரு சொல்(cryptography)லின் தமிழாக்கத்தை பார்க்க விக்சனரி சென்றேன். அதற்கு தொடர்பில்லாமல் ஒரு பொருள் இருக்கு. அது தமிழ் இணைய பல்கலைகழகத்திலிருந்து இறக்குமதி செய்தது போலிருக்கு http://ta.wiktionary.org/wiki/cryptography cryptography: மருத்துவம். நீர்ப்பை வரைவியல் கிரிப்டாக்ரபி என்பது தகவலை ஒளித்து அனுப்புவதன் உபாயம். நீர்ப்பைக்கு தொடர்பற்றது. இதைப் போல் எவ்வளவு தவறுகள் உள்ளனவோ. அதை தமிழில் கிரிப்டாக்ரபி அல்லது தகவலொளியியல் எனலாம்--Ginger 16:02, 17 ஜூன் 2009 (UTC) Ginger நீங்கள் சொன்னதை மாற்றி விட்டேன். விக்சனரிக்கு மென்மேலும் உங்கள் பங்களிப்பை அளியுங்கள்--பரிதிமதி
சுட்டிக்காட்டியதற்கு நன்றி, ginger. விக்சனரியின் பல பக்கங்கள் தமிழ் இணையப் பல்கலை அகரமுதலியில் இருந்து எடுக்கப்பட்டவை. அவற்றிலும் சில பிழைகள் உள்ளன. உறுதியாக பிழை தான் எனத் தெரிந்து, சரியான சொல்லும் உறுதியாகத் தெரிந்தால், நீங்களே நேரடியாக மாற்றிவிடுங்கள். அல்லது, சொல்லின் பொருள் சரிபார்க்க வேண்டிய தேவை இருப்பின் {{சரிபார்} பக்கத்தின் மேல் இடுங்கள். பிறகு, உங்கள் கருத்தை அந்தந்த பேச்சுப் பக்கங்களிலேயே தெரிவித்து விடுங்கள். நன்றி--ரவி 18:40, 17 ஜூன் 2009 (UTC) விக்கிப்பீடியா உரையாடல் ஒலிப்பதிவுசூன் 13, 2009 அன்று வலைப்பதிவர்களுக்கு விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்திய உரையாடல் ஒலிப்பதிவு தூய தமிழ் என்று கதைக்கும் சிலர் தூய தமிழில் ஆங்கிலம் கலாக்காமல் பேசாதது ஏனோ என்று தெரியவில்லை. "சோ" போடாமல் சோறு இறங்காதவர்கள் வாய்கிழிய பேசுகிறார்கள். . ஆங்கிலம் கலக்காமல் பேசத்தெரியாதவர்கள் தமிழை காக்க புறப்படுவதாக காட்டிக்கொள்வது கொடுமையிலும் கொடுமை. அட.. ஆமாம்.. சமசூகிறதம் மீது தானே உங்கள் வெறுப்பும், நச்சு உமிழும் செயலும். சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள் ஊருக்குத்தான் உபதேசம் என்று !!! −முன்நிற்கும் கருத்து 66.197.149.15 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஒருவரின் தட்டச்சை வீணாக்காமல் பக்கங்களை திருத்த முடியுமா?மேற்கூறிய கேள்விக்கு பதில் முடியும். இதுதான் எடிட்டிங், சீரமைப்பு. கட்டுரையாளர் அவர் மனநிலையில் உருவாக்குகின்றார். அந்த தட்டச்சில் சிலவற்றை மாற்றினாலே மாறிவிடும். நீக்கும் பொழுது சிலவற்றை நாமும் உள்ளிட்டால் கட்டுரை குறையாது வளர்ந்து கொண்டே இருக்கும். கட்டுரையை உருவாக்கியவருக்கும் ஒரு திருப்தி இருக்கும். நாம் துவங்கிய கட்டுரை நன்றாக வளருகின்றது என்ற மனநிலை உருவாகும். இதை சிலர் பின்பற்றுகின்றனர். பலர் பின்பற்றுவதில்லை. மாறாக குறை சொல்லுவதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான பேச்சு பக்கத்திலும் இம்மாதிரி குறைகள்தான் சொல்லப்பட்டிருக்கின்றது. அதில் அவரே பங்கெடுத்து சீர்செய்ய முயற்சிக்கலாம் மேற்கோளுடன், சரியான முறைகளில். வேண்டுமென்றே.........உள்ளிடப்பட்டுள்ளது என்ற வாசகங்கள் முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்.
கட்டுரை என்பது குழந்தை அது வளருவதை காண அதை உருவாக்கியவருக்கும் சரி வாசிப்பவருக்கும் சரி ஆவல் மிகும். இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும் இது தகவ்ற் களஞ்சியம் சில சமயசார்பற்றவர்களுக்கும் அவர்கள் சமயத்தையும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது தவறில்லை. அது தகவல் அதற்குத்தான் தகவற் பெட்டி. அதில் இதைக் குறிப்பிடவேண்டும் இதைக் குறிப்பிடக்கூடாது என்றில்லை. ஒரு தளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் அது இன்னொரு தளத்தில் தவறு என்று எப்படி ஆகும். இது குறித்து ஏதோவொரு மாநிலத்தில், அல்லது நாட்டில் இருப்பவருக்கு வசிப்பவருக்கு ஒரு போட்டித்தேர்வு எழுதும் ஒரு தமிழருக்கு தகவல் தேவைப்பட்டால் இதைப் பார்த்துக்கொள்ளலாம். ஒரு வரி நீக்கினால் நாம் குறைந்தது ஐந்து வரிகளாவது உள்ளிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நமக்கு நாமே விதித்துக் கொள்ளவேண்டும் (இது சாத்தியமா? என்பது வேறு விடயம்).
திருத்தங்களுக்கான உதாரணம்ஒருவர் சுமார் 200 திருத்தங்கள் உள்ள கட்டுரையில் ஒருவர் முயன்றால் அவரால் 50 திருத்தங்களை மேற்கொள்ள முடியும் அதில் 10 திருத்தங்கள் மீண்டும் திருத்தக்கூடியவையாக அல்லது பொருந்தாதவைவாக கூட இருக்கும் அடுத்து வருவர் (கட்டுரையாளராக் கூட இருக்கலாம்)மீதமுள்ள 150+10 திருத்தங்களில் ஒரு 75 திருத்தங்களை மேற்கொள்வார். அதிலும் 10, 20 திருத்தங்கள் பொருந்தாதவையாக இருக்கும். அடுத்து வருபவர் 100 இலிருந்து 110 வரை மேற்கொண்டு கடைசியில் 20 திருத்தங்களை பொருந்தாதவையாக நிறுத்துவார் அதன்பின் அதை இறுதி திருத்தமாக மேற்கொண்டு கட்டுரையை முழுமையான கட்டூரையாக ஆக்கிவிடலாம். இதனிடையே உள்ளீடும் செய்யலாம். அதுவும் திருத்தப்படலாம். நாம் திருத்தியதை அவர் திருத்திவிட்டாரே என்று எண்ணத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கு ஒருசில விடயங்களை மட்டுமே கண்ணில் படும் (அவர்கள் கண்ணில் அந்த கட்டூரை மட்டுமே இருப்பதால்-இதுவும் தியரி). பிழைதிருத்துநர் முறையில் பின்பற்றப்படும் முறை (தியரி) எழுதியவருக்கே எல்லா பிழையும் கண்ணில் படாது. இது அனைத்து கட்டுரையாளருக்கும் பொருந்தும். ஆனால் இது தவறுதலாக பின்பற்றல் கூடாது (இது எழுத்திற்கு செய்யும் துரோகம் எனக் கருதப்படுகின்றது). பத்திரிகை துறையில் பின்பற்றப்படும் முறை அவர் திருத்தியதை வேறொருவர்,மற்றொருவர், என்று நான்கு முறைப் போய் இறுதி செய்யப்படும். சில முக்கிய கட்டுரைகள் ஐந்து ஆறு முறை கூட போகும். அதன்பின்னே அச்சில் ஏற்றப்படும். செய்தி ஆசிரியர் கட்டுரை மட்டுமே எழுதுவார், மொழிபெயர்ப்பார். அவர் திருத்தமாட்டார், திருத்தக்கூடாது தலையங்கம் உட்பட இங்கு அப்படி பின்பற்றத்தேவையில்லை, அது பணி. சில நேரங்களில் எந்திரத்தை நிறுத்திக்கூட பிழையை திருத்தி மீண்டும் அச்சிடுவர். அதுவரை அச்சிட்டவை வீண்தான் (ஒரளவிற்க்கு பின்பற்றினால் போதும். ஏனென்றால் பத்திரிகை துறையில் ஏதாவது பிரச்சினை என்றால் பிழைதிருத்துநர் மேல் பழியைப் போடுவதற்காக கையாளும் முறை. (அப்படிதான் எடுத்துக் கொள்ளவேண்டும், நான் சந்தித்தவை-உண்மையில் கட்டுபாடுக்காக அதேப் பணியை மேற்கொள்வதால்) பல நேரங்களில் செய்தி ஆசிரியர்கள் தன்னிச்சையாக பிழையைத் திருத்தி சர்ச்சை வரும்பொழுது பிழைதிருத்துநர் மேல் பழியை போட்டுவிடுவார்கள். பிழைதிருத்துநர்களுக்கு மட்டுமே திருத்தும் உரிமை உண்டு. பத்திரிகைத் துறையில் மிக கடுமையாக பின்பற்றப்படும் முறை.) கட்டுரை புத்தகங்களும் அணிந்துரைக்காக அப்படித்தான அனுப்பபடுகின்றன. அவர்கள் கொடுக்கப்படும் அறிவுரையின் படி சிலநேரம் கட்டுரையாளர் மாற்றுகின்றார். அதுமட்டுமில்லாமல் நூலகத்துக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க வேண்டும் எந்த புத்தகம் யார் எழுதினாலும். இது சட்டம். (தமிழகத்தில் இப்படி பிற நாடுகளில் மாநிலங்களில் தெரியாது) அந்த புத்தகங்களை நூலகர் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதன்பின் மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். (அது வாசகர் பயன்படுத்தும் கால குறிப்பில் இருந்து தெரிந்து கொள்வர்). அது மக்களால் விரும்ப படவில்லையெனில் அந்த புத்தகம் நூலகத்தில் இருந்து நீக்கப்பட்டு கிடங்கில் வைக்கப்படும். மக்கள் கருத்துக்கேற்ப அரசுக்கு நூலகமும் பரிந்துரைக்கும். (தடை செய்ய வேண்டுமா? வேண்டாமா?) மேற்கூறியவை இங்கு பின்பற்றலுக்கான உதாரணத்துக்காக குறிப்பிட்டேன். (வழக்கமான எழுத்துப்பிழைகள், வார்த்தைப்பிழைகள், முரண்பாடான வார்த்தைமாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும், கருத்து முரண்பாடுகளுக்கு, இதர எழுத்து மாற்றங்களுக்கு (அவைகுறித்து தீர்வு வரவில்லை) பொருந்தாது) இதனால் பலருக்கும் முரண்பாடு வராது என்பதால் குறிப்பிட்டேன். தவறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (விக்கி பட்டறைகளில் இது பற்றி வாதம் வந்தது அதற்கும் சேர்த்து.....) நன்றி--செல்வம் தமிழ் 08:36, 24 ஜூன் 2009 (UTC)
குங்குமம் இதழில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய செய்திசூலை 2, 2009 குங்குமம் இதழில் பக்கம் 24-26ல் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய செய்தி வந்துள்ளது. செய்திப் படம்1, செய்திப் படம்2. விக்கிப்பீடியா:செய்திக்_குறிப்பு பக்கத்தையே அனுப்பி வைத்திருந்தேன். எனினும் பல பெயர்கள் விடுபட்டுள்ளன. சென்னை நிகழ்வுக்கு வந்தவர்கள் தவிர பிறர் படங்களை இடம்பெற வைக்க இயலவில்லை. இதற்கு வருந்துகிறேன். அடுத்தடுத்த ஊடகத் தொடர்புகளில் இயன்ற அளவு அனைவரின் பெயர்களையும் குறிப்பிட வேண்டி முயல்வேன். --ரவி 14:34, 24 ஜூன் 2009 (UTC) ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள்பூவுலகு போன்ற துறை சார் இதழ்களில் தமிழ் விக்கி கட்டுரைகளைப் பயன்படுத்த / வெளியிடக் கேட்டுப் பார்க்கலாமா? பல அச்சு இதழ்களின் மூலம் புதிய துறை சார் ஆர்வலர்களைச் சென்று அடைவதின் மூலம் புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க இயலலாம். இது பற்றிய விக்கிப்பீடியா திட்டப் பக்கம் - விக்கிப்பீடியா:அச்சு இதழ்களில் விக்கிப்பீடியா கட்டுரைகள் --ரவி 08:25, 25 ஜூன் 2009 (UTC) a comptetive translation software for tamil wikipediaDheeraj kumar என்ற மாணவர் எனக்கு ஒரு மடல் அனுப்பி இருந்தார். உங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். விக்கிப்பீடியாவைக் காட்டிலும் விக்சனரிக்கு அல்லது விக்கிக்கு வெளியேயான ஒரு தமிழ்த் திட்டத்துக்கு இம்மென்பொருள் கூடுதலாக உதவ இயலும் என்று எண்ணுகிறேன். Google Image labeler போன்ற தளங்கள் கிட்டத்தட்ட இதே போன்ற செயல்பாட்டைக் கொண்டுள்ளன. --ரவி 03:12, 26 ஜூன் 2009 (UTC) I am Dheeraj Kumar, a computer science student from Chennai. I'm interested in developing the tamil Wikipedia, and I propose a new method to do it. The problem we face can be summarized as:
So, I suggest translating the english Wikipedia to tamil. However, the problems still exist. I came to realize a way to rope in more people for translation, which solves all the problems we face.
I also add a points system to the software.
The advantages of this system are:
The competitive model is the key to involving a large no. of people in translation. Here are some examples of people spending time doing practically nothing for the sake of competition:
This is not an easy project, but I am a good programmer, and can contribute to it. If you like this idea, we can rope in other students and software professionals who would be willing to help.
--Natkeeran 21:01, 27 ஜூன் 2009 (UTC) கார்த்திக், நீங்கள் சொன்ன ப்ரச்சனைக்கு என் சார்பில் ஒரு யோசனை: இந்த திட்டத்தில் பங்கேர்க்கும் ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்த துறையில் மொழிபெயர்ப்பு செய்யலாம். உதாரணமாக, நோய்கள் பற்றி மருத்துவ வல்லுனர்கள் எழுதலாம், கணினி பற்றி அதை சார்ந்தவர்கள் எழுதலாம், மேலும், Mammalia பற்றி தெரிந்தவர்கள் அதை எழுதலாம். நடைமுறைச் சிக்கல்கள் பற்றி, பங்கேர்ப்பவர்களின் மொழிபெயர்ப்பு நேரடியாக விக்கிபீடியாவில் இடம்பெறாது. ஒரு பத்திரிக்கையை போல, நிருபர்களின் எழுத்துக்கள் எடிட்டர்களால் திருத்தப்பட்டு அதற்கு பிறகே வெளிவரும். ஒரு article முழுவதும் பங்கேர்ப்பவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டால், உங்களை போல ஒரு எடிட்டர் அதை முழுதாக பிழைதிருத்தம் செய்து, ஒவ்வொரு வரியும் அடுத்ததுடன் இணையும்படி சிறு திருத்தங்கள் செய்து, அதன் பின் விக்கிபீடியாவில் அதை ஒரு கருத்துருவாக்கலாம். எனக்கு தோன்றுகின்ற இன்னொரு யோசனை என்னவென்றால், ஒவ்வொரு வரியாக ஒரு முழு சொட்ற்றொடர் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிறகு, அதை பங்கேர்ப்பவர்கள் முழுதாக பிழைதிருத்தலாம். செய்ய நேரம் இருப்பவர்கள் சொட்ற்றொடர்களை பிழைதிருத்தலாம், நேரம் இல்லாதவர்கள் வரிகளை மொழிபெயர்க்கலாம்.
கட்டாயம் முயற்சித்துப்பார்க்க வேண்டும்.
உங்கள் எல்லாருடைய ஊக்கபடுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி, உங்கள் முடிவுக்கு காத்திருப்பேன்.--Dheeraj Kumar 07:03, 28 ஜூன் 2009 (UTC) முதற் பக்கம் இன்றைப்படுத்தல், பிறர் பொறுப்பெடுத்தல்பல மாதங்களாக முதற் பக்க கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா, சிறப்புப் படம் போன்றவற்றை நானே இன்றைப்படுத்தி வந்திருக்கிறேன். பலரும் கருத்துக் கூறக் கூடியவாறு அமைக்கப்பட்டிருந்ததலும் அது நடைமுறையில் அவ்வளவு இல்லை. பிற நிர்வாகிகள்/பயனர்கள் இதை பொறுப்புடன் செய்ய முன்வந்தால், நான் இடம் தர விரும்புகிறேன் (அடுத்த கிழமையில் இருந்து !). ஒருவரே தொடந்து செய்தால் தெரிவுகளில் பல்வகைத்தன்மையை குறையும். அத்தோடு தொலைநோக்கிலும் இந்த முறை சரிவராது. குறைந்தது ஒரு சுழற்சி முறை நன்று. மிக்க நன்றி. --Natkeeran 00:16, 28 ஜூன் 2009 (UTC)
சாதிப் பெயர்கள் மற்றும் பட்டப் பெயர்கள்தலைப்புகளில் சாதிப்பெயர்கள் இருக்கின்றது. பலருக்கு இல்லை இது குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா? அப்படியென்றால் அனைவருக்கும் குறிப்பிடலாமே? இதுவும் தவறில்லை? பட்டப் பெயர்களும் குறிப்பிட்டிருக்கலாமே இதுவும் தவறில்லை? 3 வருடங்களாக அப்படியே உள்ளது. இது வேறுபாட்டுணர்வை ஏற்படுத்தும் என்பது எப்படி நமக்குத் தெரியாமல் போனது? இப்படி போட்டுவிட்டு மற்றவர்களை எப்படி வலியுறுத்திச் சொல்லமுடியும். இதற்கு உடனே ஆவண செய்யுமாறு வேண்டுகின்றேன். இது இங்கே இல்லை என்று பெருமையடைந்திருந்தேன். இப்பொழுது இது அதிர்ச்சியாக உள்ளது.--செல்வம் தமிழ் 05:50, 28 ஜூன் 2009 (UTC)
நீங்கள் சொல்வது உண்மைதான் இதை காரணமாக வைத்து அனைவரையும் ஒன்று படுத்த முடியாது. உ.வே.சாமிநாதையர் என்ற தலைப்பை உ.வே.சா என்று மாற்றி எழுதி கட்டுரையாக்கியுள்ளனர். இது மாதிரி நிறைய கட்டுரைகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவே அனைவரையும் ஒன்றுபடுத்த முடியும். இங்கேயும் உ.வே.சா என்று மாற்றாலாம். அல்லது உ.வே.சாமிநாதன் என்று மாற்றாலாம். சாமிநாதர் என்றும் மாற்றி எழுதி சர்ச்சை எழாமல் பார்த்துக்கொள்ளலாம். நன்றி--செல்வம் தமிழ் 07:56, 28 ஜூன் 2009 (UTC)
ஒரு கட்டுரைத் தலைப்பை பார்த்துதான் சாதிப்பெயரே இடுகின்றார்கள். இ.பத்மாநாபன்....., பெரியார்...... எனக்கு வேண்டியவர்..... வேண்டாவதவர்..... ஒரளவுக்கு கட்டுப்பாடு இருக்கவேண்டும்.......--செல்வம் தமிழ் 13:54, 28 ஜூன் 2009 (UTC)
தீக்கதிர் இதழில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்சூன் 28, 2009 தீக்கதிர் நாளிதழுடன் வரும் வண்ணக்கதிர் நூலில் பக்கம் 4,5ல் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகக் கட்டுரை வந்துள்ளது. நாளை ஒளிவருடி பதிவேற்றுகிறேன்.--ரவி 06:21, 28 ஜூன் 2009 (UTC)
நன்றி, சிவா--ரவி 04:36, 1 ஜூலை 2009 (UTC) விருதெழுத்துதமிழ் விக்கிபீடியாவிற்கு விருதெழுத்தாக (motto) “எழுதியது கைம்மண் அளவு, எழுதாதது உலகளவு” என்பதை பரிந்துரைக்கிரேன். அதை `கட்டற்ற கலைக்களஞ்சியம்’ கீழ் வைக்கலாம்.--Ginger 11:58, 29 ஜூன் 2009 (UTC)
தவறுவைத்தீசுவரன் கோயில் கட்டுரையின் முக்கால் பகுதி எழுதியப் பிறகு அதை ஒரு மூன்று வரிக்கட்டுரையுடன் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடாமல் இணைப்பது தவிர்க்கப்படவேண்டுகிறேன். தேவையென்றால் மூன்று வரிக்கட்டுரையை நீக்கியிருக்கலாமே?. கனக் வழக்கமாக குறிப்பிடுபவார் ஏன் குறிப்பிடவில்லை என்றுத் தெரியவில்லை. ஆனால் கோபி குறிப்பிட்டிருக்க வேண்டும் மிக வருத்தத்திற்குரியது.--செல்வம் தமிழ் 17:12, 30 ஜூன் 2009 (UTC)
சார் சார் இதற்கெல்லாம் விளக்கம் வேண்டாம் சார். இது பண்பாடு சம்பந்தபட்ட விடயம். நான் செய்தாலும் தவறுதான். நீங்கள் கேட்டிருந்தால் நான் கொடுத்திருக்கும் பதில் சார் வருந்துகின்றேன். என்ற மதில் மட்டும் தான் எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிருக்கிறீர்கள் இந்த பதில் தெரியாதா? இதெல்லாம் நாம் உருவாகிக்யது தானே? யாரயிருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டுவிட்டுதான் மாற்றவேண்டும். உங்கள் மூன்று வரி கட்டுரை இருந்தால் நான் ஏன் எழுதப் போகின்றேன். சில விடயங்களில் கொஞ்சம் யோசித்து பதில் எழுதுங்கள். செல்வம் இதற்கு நீங்களே ஆலோசனை வழங்குங்கள். ஏற்கனைவே குறிப்பிட்டு வார்ப்புரு இடுவது வழாக்கம் தானே? அதை ஏன் செய்யவில்லை? நீங்கள் குறிப்புட்டுஇருந்தால் நான் மேற்கொண்டு தொகுத்து இருக்க மாட்டேன். இது அவர்கள் உழைப்பு சம்பந்த பட்ட விடயம். மனது சம்பந்த பட்ட விடயம். கொள்கை சம்பந்த பட்ட விடயம் காமாண்ட் பண்ண முடியாது. செல்வாஈ நீங்கள் சிலவற்றுக்கு நீங்களே இது தவறு என்று சொல்லுவீர்கள் இதற்கு கனகிடம் சொல்ல்லாமே? இதற்கு பதில் இதுவல்ல என்று? இதுதான் இணையத்தில் எதிர்பார்க்கின்றேன்.--செல்வம் தமிழ் 01:01, 1 ஜூலை 2009 (UTC) கோபி புள்ளிருக்குவேளூர் என்று எழுதியிருக்கின்றார். நீங்கள் வார்ப்புரு இட்டு விட்டுதான் மாற்றியிருக்க வேண்டும். இதுமாதிரி 3 வரி கட்டுரை ஆயிரம் எழுத முடியும். நான் ஒரு வேளை எழுதியிருந்தாலும் இதை விரும்பியிருக்க மாட்டேன். நான் எழுதிய மூன்று வரிக்கட்டுரையைத்தான் நீக்க சொல்லியிருப்பேன். அதுவும் முதுநிலைப் பயனர் அதுவும் நிர்வாகியாக இருக்கின்றார் என நீனைக்கின்றேன். கனக் மறந்துவிட்டிருப்பார் அல்லது அந்த கட்டுரை இருப்பது அவர் அறிந்திருக்க மாட்டார். இவருக்கு கட்டுரை தெரிந்திருக்கின்றது எழுதியவரும் இவர் தான். வரலாறு பார்த்துவிட்டுதன் கட்டுரைத் தொகுக்கின்றேன். இதற்கு விளக்கம் எதிர்பார்க்கின்றேன்.--செல்வம் தமிழ் 01:13, 1 ஜூலை 2009 (UTC)
சார் ஆலமரத்தடியில் சராசரியாக உரையாடலாம் சார். இதில் ஒன்றும் தவறில்லை விக்கி முறைகள் என்பது எனக்கு புரியவில்லை. தமிழ் முறைகள் தான் எனக்கு தெரியும். நான் என்ன குறிப்பிட்டிருக்கின்றேன் அதில் என்ன முறை தவறியிருக்கின்றது. பண்பாடு பொதுவானது செல்வா. இதை அனைவரையும் பின்பற்ற வேண்டும் விக்கி முறை என்று கூறுவதே எனக்கு புரியவில்லை. தமிழருடைய பண்பாட்டையே விக்கியா கற்று கொடுத்தது. நம்மை நோக்கி வினா வைத்தாளே தவறு என்று ஆகி விடாது. நாம் மனிதர்கள் தவறு செய்வது இயற்கை தவறு செய்யாதவர்கள் யார். குறையில்லாத மனிதன் ஏது? நாளடைவில் இது ஒரு தமிழாக பயனபாட்டுக்கு வந்து விடும். 3 வரிக்கட்டுரையை இவ்வளவு நாள் குறிப்பிடாமல் இருக்கலாமா? நான் ஏறகனவே கட்டுரை எழுதியிருக்கின்றேன் என்று குறிப்பிட வேண்டுமா வேண்டாமா? அதோடு இணைக்கின்றேன் என்று தெரிவிக்க வேண்டுமா? வேண்டாமா? தமிழர்கள் பழையவர்கள் விக்கிதான் புதிது. எல்லாவற்றுக்கும் விக்கி விக்கி என்று கூறுவது விளங்கவில்லை. இதை யாரிடம் வேண்டுமானாலும் நடுநிலைவாதியிடம் கேளுங்கள். இங்கு அனைவரும் சமம். --செல்வம் தமிழ் 02:11, 1 ஜூலை 2009 (UTC) ஆரம்பத்திலேயே கனக் செய்வார் என்றுதான் பண்பாட்டுடன் ஆரம்பித்திருக்கின்றேன். அவர் 3 வரிக்கட்டுரை........... இந்த பதிலைத் தான் ஆரம்பிப்பார் என்று என்க்குத் தெரியும் அதைதான் எதிர்க்கின்றேன் தமிழ் ஒரே மாதிரி எல்லாருக்கும் அர்த்தத்தை உருவாக்குவதில்லை. இதற்கு ஆமாம் அப்படித்தான் மாற்றிருக்கவேண்டும் மறந்து விட்டார்கள் இனி இது வராமால் பார்த்துக் கொள்வோம் இந்த மறமொழி கொடுத்தால் கோபியும் மறுமொழி அல்லது விளக்கம் கொடுக்கலாம் என்று குறிப்பிட்டால் அடுத்த கட்டத்திற்கு நகராது. சுருக்கமாக முடியவேண்டியதை எப்பொழுதுமே வளர்ப்பது..........--செல்வம் தமிழ் 02:27, 1 ஜூலை 2009 (UTC)
இல்லை சுந்தர் 2006 இல் ஆரம்பித்திருக்கின்றார் புள்ளிருக்குவேளூர் என்று ஆரம்பித்திருக்கின்றார். தலைப்பு மாறியவுடன் அந்த தலைப்புடன் தான் வரும் என நின்க்கின்றேன். இது குறித்து பல இடங்களில் அலசப்பட்டு வருகின்றது. அதில் தலையிட வரும்பவில்லை. அவரும் புள்ளிருக்கு வேளுர் என்று மாற்றி மீண்டும் சீ.வை.கோ என்று மாற்றியிருக்கின்றார் என்பது உங்களுக்கும் தெரியும். அதைத்தான் பேச்சு பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என சொல்கின்றேன். 2006 க்கு அப்புறம் அவர் கட்டுரையை ஆங்கில கட்டுரையுடன் இணைத்திருக்க வேண்டும் இணைக்கவில்லை. கனக் பெயர் மாற்றியிருக்கின்றார். இவர் அந்த மூன்று வரி கட்டுரையை இணைத்திருக்கின்றார். முடிந்து விட்டது. இதெல்லாம் எதனால் வருகின்றது என்று சொன்னால் விக்கி.......... என்றால் ஒரு பெரிதாக வெடிக்கத்தான் செய்யும் அவர் கட்டுரை எழுதியிருக்கின்றார் என்று தெரிந்தால் நான் ஏன் எழுதப்போகின்றேன் அதை முடிவெடுப்பது நான் தானே. முக்கால் வாசி முடிந்த பிறகு ஏன் அந்த 3 வரி கட்டுரை சரி இணைக்கவேண்டுமென்றால் குறிப்பிடுங்கள். இதை யார் வேண்டுமானாலும் எழுப்புவார்கள். இது எதனால் ஆயிரமா.......இரண்டா....... இதன் விளவுதான். அதை இங்கு நன்றாக வெளிப்படுத்துகின்றது. அதை அறிந்து கொண்டபிறகு எழுப்பித்தான் ஆகவேண்டும் இல்லையேல் மறுபடியும் இது தொடரும். தெரிந்து நானே தொகுப்பது வேறு. நான் இறையியல் கட்டுரைகளில் சில முறைகளை என்னுள் வைத்திருப்பேன் இவர் எழுதியது என்றால் விலகியிருப்பேன் இல்லையேல் தொடர்ந்தும் இருப்பேன். அது என் மனது சம்பந்தபட்ட விடயம் அதில் கட்டுப்பாடு விதிக்கமுடியாது. கட்டுரைகளை தேர்ந்தெடுப்பது கட்டுரையாளர் முடிவு. இதைக்கூட இங்கு வெளியிடத் தேவையில்லை. வெளிப்படையாக ஏதோ ஒன்றை உணர்த்துகின்றது. ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டது போல் குறிப்பிட்டால் முடிந்த்து. இதுதான் பண்பாடு என்ன காரணம் வேண்டுமென்றாலும் இருக்கலாம். இங்கு பல நேரங்களில் ஒரே மாதிரியான உரையாடல்கள் பின்பற்றப்படுவது தவறான கருத்தையே உருவாக்கும். ஒருவர் ஒரு கருத்தை சொன்னால் வேண்டாம் இது முரண்பாடாக இருக்கின்றது பின்வாங்கலாமே? என்று குறிப்பிட வேண்டும் அப்படி குறிப்பிடப்படுவதில்லை. வரிசையாக தாக்குதல் தொடுக்கப் படுவது தவிர்க்கப்படவேண்டும். இவ்விடயத்தில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும். எதற்கு போய் கட்டுரைகளை பாராட்டுகின்றோம் அதற்குதான் ஏற்று கொண்டால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் விட்டு விடுங்கள். இரண்டு வரிகளில் முடிக்கவேண்டியதை இவ்வளவு இழுக்க ...........அவசியமென்ன? நம்மையே எதிர்த்து கேள்வி கேட்டு விட்டாரே என்றால் உங்கள் பதில் எனக்கு...... என் கேள்வி உங்களுக்கு.......தவ.... அவ்வளவுதான். இங்கு அனைவரும் சமம் சமம் சமம். எவ்வளவு உயரிய படிப்பு படித்திருந்தாலும் அப்படித்தான் பட்டறைகளில் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். சுயமரியாதையை விக்கி தடுக்கவோ, கற்று கொடுக்கவோ முடியாது.--செல்வம் தமிழ் 04:09, 1 ஜூலை 2009 (UTC) செல்வம், வைத்தீசுவரன் கோயில் கட்டுரை முக்கால் பகுதி எழுதியப் பிறகு அதை ஒரு மூன்று வரிக்கட்டுரையுடன் இணைக்கப்படவில்லை. தயவுசெய்து பின்வரும் மாற்றத்தைப் பாருங்கள் [1] புதிய கட்டுரை ஏற்கனவே இருந்த மூன்று வரியினை பிரதியீடு செய்துள்ளது. உண்மையில் ஏற்கனவே இருந்த கட்டுரையின் வரலாறு மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. ஒன்றாக எழுதப்பட வேண்டியது இரண்டு கட்டுரைகளாக இருந்தால் அவற்றை இணைக்க முன்னர் வார்ப்புரு இட்டு கால அவகாசம் கொடுத்து இணைக்க வேண்டும். ஆனால் ஒரே விடயம் இரு தடவை எழுதப்பட்டால் இரண்டாவது கட்டுரையை நீக்கி முதற்கட்டுரையுடன் இணைப்பது வழக்கம். ஆனால் வைத்தீசுவரன் கோயில் கட்டுரையில் புதியது நீக்கப்படவில்லை. பழையது நீக்கப்பட்டு அதன் வரலாறு மட்டுமே புதியதுடன் இணைக்கப்பட்டது. இவ்வாறு ஏன் வரலாறு இணைக்கப்பட வேண்டும்? ஏற்கனவே இருந்த மூன்று வரியை நீக்கி விட்டுப் புதியதை வைத்துக் கொண்டால் மூன்று வரி எழுதியவர்களின் பங்களிப்பு நீக்கப்பட்டு விடும். நாளை இன்னொருவர் வந்து 300 பக்கங்களில் மூன்றாவதாக ஒன்றை எழுதிவிட்டுச் செல்வம் எழுதியதை நீக்கினால் முத இரு கட்டுரைகளுக்குப் பங்களித்த வரலாறுகளும் அழிந்து விடும். பலரும் இணைந்து பங்களித்து வளர்த்தெடுக்கும் விக்கிப் பண்புக்கு இது ஏற்புடையதல்ல. ஆதலாலேயே கட்டுரை வரலாறுகள் இணைக்கப்படுகின்றன. நன்றி. கோபி 04:18, 1 ஜூலை 2009 (UTC) //அவரும் புள்ளிருக்கு வேளுர் என்று மாற்றி மீண்டும் சீ.வை.கோ என்று மாற்றியிருக்கின்றார்// செல்வம், அம்மாற்றம் கட்டுரை வரலாறுகளை இணைப்பதற்காகச் செய்யப்பட்டதாகும். இரண்டு கட்டுரைகளின் வரலாறுகளை இணைப்பதற்கு அவ்விரு கட்டுரைகளும் ஒரே பக்கத்தில் வைத்து நீக்கப்பட்டு பின்னர் மீட்டெடுக்கப்பட வேண்டும். அவ்வகையில் கட்டுரை வரலாறுகளை நீக்குவதற்காக முதலில் புள்ளிருக்கு வேளூர் பக்கத்தை நீக்கினேன். பின்னர் சீ. வை. கோ பக்கத்தை பு. வே பக்கத்துக்கு நகர்த்தினேன். பின்னர் அதனையும் நீக்கினேன். பின்னர் அனைத்தையும் மீட்டெடுத்தேன். அவ்வகையில் நீக்கப்பட்ட இரு கட்டுரை வரலாறுகளும் மீட்கப்பட்டன. பின்னர் கட்டுரையை சீ. வை. கோ பக்கத்துக்கு நகர்த்தினேன். பு. வே பக்கத்துக்கு நகர்த்தியமை வரலாறுகளை இணைப்பதற்கு மட்டுமே. நன்றி கோபி 04:25, 1 ஜூலை 2009 (UTC)
சுந்தர், சர்ச்சை எழுவதற்கு முன் குறிப்பிடவேண்டியதை எழுந்தபின் குறிப்பிடுகிறீர்கள் அதற்காகத் தான் அந்த வார்ப்புரு உங்களுக்கு "ஆட்சேபணை உள்ளதா? கருத்துரைக்கவும்" என்று கேட்கும் வார்ப்புரு. தவறு நடப்பது இயற்கைதான் அதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும் அந்த எண்ணம் வராதவரை இது நிகழ்ந்து கொண்டே இருக்கும். வெளியே பிரச்சினை வெடித்துகொண்டே இருக்கும். நான்குறிப்பிடுவது வேறு நீங்கள் குறிப்பிடுவது வேறு. அவர் தொடங்கிய கட்டு................பாருங்கள் (பக்கத்தை) புரியும். இல்லையென்றால் இத்துடன் விட்டு விடுங்கள். அவருக்கு என்ன தெரியப்போகின்றது என்ற எண்ணம் வள............. விமர்சனம் தான் வளரும். *தொடங்கிய கட்டுரைகள் இதைப்பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இந்த மனப்போக்கை இனிமேலாவது விடவேண்டும் என்பது என்அவா. எல்லாம் வைத்தீசுவரனுக்கு வெளிச்சம். அவர் பார்த்து கொள்வார். அப்படித்தான் விட்டு வடவேண்டும். (கடவுள் கட்டுரையிலே இப்படி) நன்றி--செல்வம் தமிழ் 06:22, 1 ஜூலை 2009 (UTC)
கோபி 17:01, 1 ஜூலை 2009 (UTC) முத்துகமலத்தில் த வி பற்றி கட்டு்ரைமுத்துகமலம் இணைய இதழில் த வி பற்றி கட்டு்ரை --கார்த்திக் 06:50, 1 ஜூலை 2009 (UTC) Tamil WikinewsSorry I am not writing in Tamil. Tamil Wikinews was proposed for closure some months ago. See this for a link to the votation. Regards. --81.38.38.140 09:24, 1 ஜூலை 2009 (UTC)
Hi 81.38.38.140, thank you for informing us. I have notified this now sitewide in tamil wiktionary and tamil wikipedia--ரவி 14:43, 1 ஜூலை 2009 (UTC)
கோபி, வளங்கள் சிதறுகின்றன என்பது குறுகிய கால பார்வையாகத் தான் இருக்க முடியும். தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்தில் இருந்து தமிழ் விக்கி மேற்கோள் இருக்கிறது. அதில் பங்களிக்க ஆர்வம் இருந்தவர்களுக்கு விக்கிப்பீடியாவில் ஆர்வம் இல்லை. தமிழ் விக்சனரியில் பெருத்த பங்களிப்பு அளித்திருக்கும் தகவல் உழவனுக்கு விக்கிப்பீடியாவைக் காட்டிலும் அங்கு தான் கூடுதல் ஆர்வம். திட்டத்தை ஓரளவு கட்டிக் காத்து வைத்தால், அத்திட்டத்தில் பெரும் ஆர்வமுடையவர் வந்து தொடர்ந்து செல்வர் என்று நம்புகிறேன். தமிழில் இரு திட்டங்களுக்கான தேவையும் கண்டிப்பாக உள்ளன. எத்தனை நடுநிலையான, நம்பத் தகுந்த செய்தி ஊடகங்கள் உள்ளன? மேற்கோள்கள் திட்டத்தின் முக்கியத்துவத்தை பரிதிமதி சுட்டியுள்ளார். திட்டத்தை மூடுவது இலகு. திரும்ப கொண்டு வருவது எவ்வளவு நீளமான நடைமுறை என்று உங்களுக்குத் தெரியும். சும்மாவேனும் கொஞ்சம் கொஞ்சம் பங்களிப்புகள் செய்து அத்திட்டங்களை உயிருடன் வைத்திருப்போமே?--ரவி 18:40, 1 ஜூலை 2009 (UTC)
ரவி, த.வி.பீ தொடங்கிய காலத்திலிருந்து இருக்கும் த.வி. மேற்கோளில் எந்தப் பயனுள்ள உள்ளடக்கமும் இல்லை. விக்கி செய்திகள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படவில்லை. விக்கி நூல்களில் கூட அதிக உள்ளடக்கமேதுமில்லை. இந்த விக்கித் திட்டங்கள் பயனில்லாதவை என்று நான் சொல்ல வரவில்லை. அவற்றுக்கு ஒதுக்க எம்மிடம் வளங்கள் இல்லை என்கிறேன். யாருக்காவது ஆர்வம் வந்து அங்கு சென்றால் கூட அது த.வி.பீடியாவுக்கு இழப்பாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய பார்வை குறுகியதாக இருக்கலாம். ஆனால் நாம் எதனைச் சென்றடையப் போகிறோம் என்பதில் தெளிவில்லாமல் எவ்வளவு நீண்ட தொலைவு பார்த்தாலும் பயனில்லை என்பதே என் தாழ்மையான அபிப்பிராயம். விகடன் வெளியிட்ட பிரிடானிகா தகவல் களஞ்சியம் பார்த்தேன். அந்த நூல் அளவுக்குப் பயன்படுவதாக த.வி.பீ எப்பொழுது வளர்ச்சியடையும் என்றும் எண்ணிப் பார்த்தேன். ஏப்ரல் 2007 இல் புதிதாகத் தொடங்கப்படும் கட்டுரை எண்ணிக்கையே ஏப்ரல் 2009 இலும் தொடங்கப்படுகிறது. த.வி.பீ ஒரு முழுமையாகப் பயனுடைய கலைக்களஞ்சியமாக எத்தனை கட்டுரைகள் தேவை? ஒரு 100,000 தேவை எனக் கொண்டால் இன்னும் 81,000 தேவை. நாளொன்றுக்கு 20 எழுதப்பட்டாலும் 11 ஆண்டுகள் தேவை. இப்பொழுது நாளொன்றுக்கு உள்ள 15 ஆனது ஒவ்வோராண்டும் 20, 25, 30 என அதிகரித்துச் செல்வதாகக் கொள்வோம். அவ்வாறு சென்றாலும் 7 ஆண்டுகள் தேவை. இதைவிடவும் வேகமாக ஓர் ஐந்தாண்டுகளில் 100,000 பயனுள்ள கட்டுரைகளை எழுத வேண்டுமானால் தேவையான உழைப்பு என்ன? அதற்கு எத்த்னை பயனர்கள் தேவை? விக்கிப்பீடியாவுக்கு ஏறத்தாழப் பங்களிக்காத நிலையில் இருக்கும் நான் இக்கேள்விகளைக் கேட்கும் தகுதியற்றவன்தான். ஆனால் ஐந்தாண்டுகள் என்பது குறுகிய காலம் அல்ல. செய்திகளாகப் பதிவு செய்ய வேண்டிய உள்ளடக்கங்களின் தகவல்களைப் போதிய அளவு விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் பதிவு செய்யலாம். தமிழின் நீதிநூல்கள் இன்ன பிறவற்றை விக்கிமூலத்தில் பதிந்து கொள்ளலாம். வலைப்பதிவர்கள் போன்றோர் விக்கிப்பீடியாவை விட விக்கிநூல்களில் கவனம் செலுத்தலாம் என்ற வகையில் அதனை வளர்க்க ஆட்களைத் தூண்டலாம். ஆனால் ஆறு விக்கித்திட்டங்கள் என்பது எமக்கு மிக அதிகம். விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிய இரண்டுக்கும் கூடிய கவனம் கொடுப்பதோடு விக்கிமூலம், விக்கிநூல்கள் ஆகியவற்றை அவ்வப்போது துப்பரவுசெய்து கொண்டிருப்பது பொருத்தமாயிருக்கும் என்பது என் நிலைப்பாடு. இரு விக்கித்திட்டங்களை மூடுவதென்பதை உணர்வுபூர்வமாக அணுக வேண்டியதில்லை. பல பிரிவுகளைக் கொண்ட பெருவணிக நிறுவனங்கள் காலத்துக்குக் காலம் தங்கள் பிரிவுகளின் பயனை கணக்கெடுத்து அதிகப் பயனில்லாத பிரிவுகளை மூடிவிடுவார்கள். காரணம் அப்பிரிவுகளில் செலவிடும் வளங்களை பயனதிகமுள்ள பிரிவுகளுக்குச் செலவிடுவதற்கே. இல்லை, பயனர்கள் வருவார்கள் வருவார்கள் வருவார்கள் என்று பார்த்துக் கொண்டு குப்பை கூட்டிக் கொண்டிருந்தோமென்றால் நாம் எதனையும் சென்றடையப் போவதில்லை. இணையத் தமிழ் உள்ளடக்கம் சார்ந்து,
ஆகிய கேள்விகளுக்குத் தெளிவான பதில்களுடன் வளங்களைக் குவித்து முன்னேறுவது காலத்தின் தேவை. அடம்பன் கொடியும் திரண்டால் தான் மிடுக்கு. சிதறிச் சென்றால் கூகிளில் 20,000 முடிவு வருகிறது; ஊடகங்களில் இப்படித்தான் எழுதுகிறார்கள் போன்ற கருத்துக்களுக்குக் காலம் முழுக்கப் பதில் சொல்லிக் கொண்டிருப்போம். இவை எனது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டும். நன்றி. கோபி 05:17, 2 ஜூலை 2009 (UTC)
விக்கியில் உள்ள குறிப்பிட்ட தலைப்பிலான படிமங்கள்விக்கி திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட தலைப்பு குறித்த படிமங்களை மட்டும் பெறுவது எப்படி? எடுத்துக்காட்டுக்கு, ஒரு வலைப்பதிவர் ஈழம் தொடர்பான படிமங்களைப் பெற விரும்பினால் எப்படி பெறுவது? ஒவ்வொரு திட்டமாக போய் பகுப்பு பகுப்பாக பார்க்க வேண்டுமா அல்லது குறுக்கு வழி உண்டா? இக்கேள்வி வலைப்பதிவர் சந்திப்பில் கேட்கப்பட்டது. ஆனால், விடை தெரியவில்லை--ரவி 11:36, 1 ஜூலை 2009 (UTC)
நன்றி சுந்தர். கூகுள் அறிமுகப்படுத்தி இருக்கும் commons படிமத் தேடலும் உதவலாம். எடுத்துக்காட்டுக்கு, black kittens படிமங்கள்.--ரவி 03:58, 10 ஜூலை 2009 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆக்கப் போட்டிதமிழ் வலைப்பதிவுகளிலும், அச்சு இதழ்களிலும் சிறுகதைப் போட்டிகள் மிகுந்த வரவேற்பை பெறுகின்றன. இது போன்ற ஒரு போட்டி மூலம் தமிழ் விக்கிப்பீடியா குறித்த விளம்பரம், விழிப்புணர்வைப் பெறலாம் என்று பல முறை தனிப்பட்ட உரையாடல்களில் பேசி இருக்கிறோம். இந்த ஆண்டுத் தொடக்கம் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால், இதனை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்கும். சுந்தர்,
இத்தகைய ஒரு போட்டியை எப்படி நடத்தலாம், வழிமுறைகள் என்னவாக இருக்கலாம் என்று பங்களிப்பாளர்கள் கருத்தை வரவேற்கிறேன்.--ரவி 11:45, 1 ஜூலை 2009 (UTC)
நல்லது சுந்தர். விக்கிப்பீடியா:கட்டுரை ஆக்கப் போட்டி பக்கத்தில் தொடர்ந்து உரையாடுவோம்--ரவி 05:24, 10 ஜூலை 2009 (UTC) மின்மடலில் விக்கி கட்டுரைகள், விக்சனரி சொற்கள்இங்கு உள்ளது போல் தேர்ந்தெடுத்த தமிழ் விக்கி கட்டுரைகள், விக்சனரி சொற்களை நாள் ஒரு முறையோ வாரம் ஒரு முறையோ மின்மடலில் அனுப்பி வைக்க வழி உண்டா? தமிழுக்கு இவ்வசதி இல்லா நிலையில் wikimedia.orgக்கு வெளியே இருந்து இதைச் செய்யலாமா?--ரவி 11:43, 3 ஜூலை 2009 (UTC)
வாரத்துக்கு ஒன்றாகவே அனுப்பலாம். சுந்தர், மேல் விக்கி மூலம் இதை செய்வதில் சிரமம் என்றால் கூகுள் குழுமம் தொடங்கலாமா? அனைவருக்கும் ஒப்புதல் என்றால் இதனை உடனடியாகச் செயற்படுத்துகிறன். இக்குழுமத்தில் மற்ற உரையாடல்கள் ஏதும் இருக்காது. வாரா வாரம் கட்டுரை மட்டும் அனுப்புவோம். (அல்லது, தமிழ் விக்கிக்கான செய்தி இதழாகவும் இதைச் செய்வோமா? பட்டறைகள் போன்ற அறிவிப்புகளை வெளியிட உதவும்)--ரவி 04:30, 10 ஜூலை 2009 (UTC)
தமிழ் விக்கி தேர்ந்தெடுத்த கட்டுரைகள் நூல்இணையத்துக்கு வெளியே உள்ள வாசகர்களையும் சென்றடையும் வகையில் தமிழ் விக்கியில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளை ஒரு சிறு நூலாக வெளியிடலாமா? விலங்குகள், பறவைகள் போன்று சிறந்த, தனித்துவ உள்ளடக்கம் உள்ள கட்டுரைகள், 365 நாட்களுக்கும் உள்ள கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா துணுக்குச் செய்திகள் போன்றவற்றைக் கூட தொகுத்து வெளியிடலாம். இது குறித்து அனைவரின் கருத்தையும் அறிய விரும்புகிறேன். உடன்பாடென்றால், இத்தகைய ஒரு முயற்சியை எப்படி முன்னெடுக்கலாம் என்று சிந்திக்கலாம்--ரவி 11:48, 3 ஜூலை 2009 (UTC)
நல்லது செல்வா, கார்த்திக். விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா நூல்கள் பக்கத்தில் தொடர்ந்து உரையாடுவோம்--ரவி 05:15, 10 ஜூலை 2009 (UTC) பயனர் கணக்குகள் 10,000 ஐ எட்ட இருக்கின்றோம்பயனர் கணக்குகள் இன்றளவில் 9713. --செல்வா 17:05, 3 ஜூலை 2009 (UTC) பாடசாலை மாணவர்களுக்கிடையில் விக்கிபீடியாவை அறிமுகம் செய்யலாமே? --Shameermbm 06:44, 7 ஜூலை 2009 (UTC)
கட்டுரைகளில் கவனம் செலுத்துவோம்செல்வா, மயூரனாதன் போன்று மதிப்புக்குரியவர்கள் சிறிதளவும் அடிப்படை நேர்மையற்ற, திறந்த மனதற்ற, தமிழுணர்வற்ற, தகுதியற்ற, முகமற்ற, உள்நோக்கும் காழ்ப்பும் கூடியவர்களின் பேச்சுகளைக் கேட்க வேண்டி இருப்பது வருத்தம் அளிக்கிறது. நியாயமற்ற விமர்சனங்களைப் புறக்கணித்து நமது நேரத்தை கட்டுரையாக்கத்திலும் வழமையான விக்கி பணிகளிலும் செலவிட உறுதி பூண்டிருக்கிறேன். மற்ற பங்களிப்பாளர்களிடமும் இதையே வேண்டுகிறேன். பல அடிப்படை துறைகளில் தரமான, தகவல் செறிவான கட்டுரைகளை இலட்சக்கணக்கில் வளர்த்து எடுப்போம். ஒரு சிறிய குழு தான்தோன்றித்தனமாக கொள்கைகளை வகுத்துக் கொண்டது என்ற பழிச்சொல் வரக்கூடாது என்றே இத்தனை ஆண்டுகள் கொள்கை முடிவுகளில் பொறுமை காட்டினோம். ஆனால், இந்த நன்னோக்கே நமக்கு எதிரான விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது. தமிழ் விக்கி தொடங்கி 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இனியும் கொள்கை முடிவுகள், வழிகாட்டல்கள் வகுப்பதில் சுணங்காமல் இந்த ஆண்டின் முக்கிய வேலைத்திட்டமாக இதை முன்னெடுப்போம். தேவையான கொள்கை பக்கங்கள், வழிகாட்டல்கள், உதவிப் பக்கங்களை முழுக்க தமிழில் வடிப்போம். நன்றி--ரவி 17:10, 3 ஜூலை 2009 (UTC)
தமிழ், ஆங்கில இலக்கணம்மார்ச் 25, 2009 அன்று முத்தமிழ் என்னும் கூகுள் குழுமத்தில் கீழ்க்கண்ட செய்தியைக் குறித்திருந்தேன்.
முழுச்செய்தியை அங்கு பார்க்கவும்.
இங்கு ஆக்ஃசுபோர்டு அகரமுதலி கூறுவதை மட்டும் குறிப்பிடுகிறேன்:
நாடுகளுக்கு ஈரெழுத்து குறுக்கங்கள் தேவைஐ.எசு.ஓ 639 போன்று ஒவ்வொரு நாட்டிற்கும் இரு தமிழ் எழுத்துகள் கொண்டு பட்டியல் வைத்துக்கொண்டால் நீளமான மொழி பெயர்களை தவிர்க்கலாம். எடுத்துக்காட்டாக மலையாளம்..ஆங்கிலத்தில் ml: என முடிந்துவிடுகிறது. அதேபோல நாணயங்களுக்கும்: $ என்ற குறியீடு அமெரிக்கா மட்டுமன்றி வேறுசில நாடுகளிலும்(ஆத்திரேலியா,சிங்கை..) பாவனையில் உள்ளதால் ஆங்கில இணையத்தில் US$ என குறிக்கப்படுகிறது. தமிழில் அமெரிக்க $ என நீளமாக குறிப்பிடாது ஐ.அ $,ஆத்தி.$,சி$ என சீர்படுத்திக்கொள்ளலாமா ? நாணய குறுக்கங்களை ஒரு பக்கத்தில் தெரியபடுத்தலாம். -- 05:07, 6 ஜூலை 2009 (UTC)−முன்நிற்கும் கருத்து Rsmn (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நுட்பக் குறிப்புகள்
தமிழ் இணைய மாநாடு 2009ல் தமிழ் விக்கிப்பீடியா பங்கேற்புதமிழ் இணைய மாநாடு 2009ல் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக மு. மயூரன் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான ஆய்வுக் கட்டுரை, பிற பங்களிப்புகளை நாம் கூட்டாகவே அளிப்பது நன்றாக இருக்கும். என்ன தலைப்பில் எழுதலாம்? சுந்தர், விக்கிப்பீடியா:Tamil Wikipedia: A Case Study கட்டுரையை அப்படியேவோ, அதை ஒட்டி தமிழாக்கியோ அளிப்பது இரு நிகழ்வுகளின் விதிகளுக்கும் பொருந்தி வருமா தெரியவில்லை?--ரவி 05:30, 10 ஜூலை 2009 (UTC)
தமிழ் கட்டுரையை ஏற்பார்களா?தமிழ் இணைய மாநாடுதான், ஆனால் மாநாடு பற்றி முழுக்க (ஒரு செய்திக் குறிப்பைத் தவிர்த்து) ஆங்கிலத்தில் இருக்கிறது. எனவே இங்கு தமிழ்க் கட்டுரை சமர்க்க முடியுமா என்று அறிய வேண்டும். மயூரன் செல்வது குறித்து மகிழ்ச்சி. அத்தோடு சந்திரவதனா அவர்களும் போக இருப்பதாக அறிகிறேன். இருவரும் செல்ல முடிந்தால் சிறப்பு. --Natkeeran 02:30, 11 ஜூலை 2009 (UTC)
தமிழ் இணையம் குறித்த நூலில் தமிழ் விக்கிபீடியாதமிழ் இணையம் குறித்து நூல் எழுதும் நண்பர் ஒருவர் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய சில கேள்விகளைக் கேட்டுள்ளார். விக்கிப்பீடியா:தமிழ் இணையம் நூலில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் என்ற பக்கத்தில் உங்கள் பதில்களை அளிக்கலாம்--ரவி 05:37, 10 ஜூலை 2009 (UTC) தொலைவுக்கு எந்த அலகைப் பயன்படுத்துவது?புதுச்சேரி கட்டுரையில் ‘170 கல்’ என்று சென்னைக்கும் புதுவைக்கும் இடையிலான தொலைவு தரப்பட்டுள்ளதை கண்டேன். ‘கல்’ என்பது எந்த தொலைவிற்கும் வரையறுக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் இது குறித்து கி.மீ. என்று அனுமானம் செய்தே படிக்கவேண்டும். ’மைல்’-இல் தொலைவைக் குறிக்கும் நாட்டில் வசிப்பவர்கள் இதனை மைல் என அனுமானம் செய்யலாம். எனவே மெட்ரிக் அளவான கி.மீ.ஐயே தமிழ் விக்கியி முழுவது பயன்படுத்துவது சிறந்தது.−முன்நிற்கும் கருத்து Mageshsai (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நற்கீரன், படிமம்:Shanaathanan.jpg பக்கள் உரையாடல் இங்கே ...படிமங்கள் நீக்கப்படுவது பற்றிஇந்தப் படிமம் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தரவும். நீங்கள் முன்னெடுக்கும் பணியை விபரித்து மேற்கொள்வது நல்லது. சில படங்கள் வரலாற்றுத் தகவல்களுக்காக இருக்க வேண்டியவை. அத்தோடு ஒரு குறிப்பிட்ட தொகுதிப் படங்களை மட்டும் நீக்குவது போலவும் தெரிகிறது. --Natkeeran 13:42, 11 ஜூலை 2009 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia