விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு31தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல் பற்றி தமிழ்நாடு அரசு அறிவிப்புA competition would be launched next week for college students and their contributions in Tamil on different topics would be uploaded on the Wikipedia. Currently, only 22,000 articles were available in Tamil on the Wikipedia. About 30,000 more articles would be uploaded through the competition. நாம் எதிர்பார்த்திருந்த நற்செய்தி. விக்கி நண்பர்களே இதில் நாம் அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். உதவி செய்த ரவி, சுந்தர், மயூரநாதன், சிறீதரன், நற்கீரன், தேனி சுப்பிரமணி, பரிதிமதி மற்றும் பலருக்கும் நன்றி. தக்க பக்கங்களை அழகுடன் அமைத்து நெறிப்படுத்த வேண்டும்.--செல்வா 06:12, 6 மார்ச் 2010 (UTC)
ஆர்வத்துடன் நல்வாழ்த்தும் கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் (சிறீதரன் கனகு, மயூரநாதன், பரிதிமதி, வத்சன், தேனி சுப்பிரமணி, கலை), மிக்க நன்றி. இப்பொழுது இது சிறப்பாக நிறைவேற நாம் அனைவரும் ஒன்றுகூடி ஒத்துழைப்போம். இன்னும் இரண்டொரு நாட்களில் அரசின் அறிவிப்புகள் வரும் என எதிர் பார்க்கின்றேன். --செல்வா 17:59, 6 மார்ச் 2010 (UTC)
நன்றி -- மகிழ்நன் 17:38, 7 மார்ச் 2010 (UTC) தினமணி செய்திதினமணி நாளிதழில் செம்மொழி மாநாடு எனும் தலைப்பின் கீழ் "விக்கிப்பீடியா தமிழ் இணைய தளத்துக்கு கட்டுரை அளிக்க மாணவர்களுக்குப் போட்டி" எனும் தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் இணைப்பு முகவரியில் அந்த செய்தி உள்ளது. மாநாடு: "விக்கிபீடியா தினமணி நாளிதழில் வந்த செய்தி இனி கட்டுரைப் போட்டிக்கான பணிகளை நாம் விரைவுபடுத்தலாம்.--Theni.M.Subramani 01:56, 7 மார்ச் 2010 (UTC)
கட்டுரைப் போட்டிப் பணிகள்கட்டுரைப் போட்டியை முன்னிட்டு உள்ள சில அவசரப் பணிகள்: 1. மாணவர்களுக்கு வழிகாட்டும் வண்ணம் எடுத்துக்காட்டுத் தலைப்புகள் பட்டியல்கள் உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே சில பட்டியல்கள் இருந்தாலும் முழுக்க சிகப்பு இணைப்பு பட்டியல்களாக அனைத்துத் துறைகளிலும் சேர்த்து குறைந்தது ஆயிரம் தலைப்புகளாவது சேர்க்க வேண்டும். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் 2. நல்ல விக்கி கட்டுரையின் நடையை உணர்ந்து பின்பற்றுமாறு சில எடுத்துக்காட்டுக் கட்டுரைகளைச் சுட்ட வேண்டும். இவை பல துறைகளைச் சேர்ந்தவையாகவும் உரை திருத்தப்பட்டவையாகவும் இருக்க வேண்டும். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/மாதிரிக் கட்டுரைகள் 3. போட்டி தொடக்கத்தை முன்னிட்டு பல புதிய உறுப்பினர்கள் வரத்து இருந்தால் அவர்களுக்கு உதவுதல், நெறிப்படுத்தல். 4. போட்டி விதிகள், கட்டுரையாக்கம் போன்றவற்றுக்கான வழிகாட்டுப் பக்கங்கள் உருவாக்கல். ஏற்கனவே விக்கியில் உள்ள பக்கங்கள் மிக விரிவாகவும் பிற தேவைகளை உள்ளிட்டும் இருப்பதால் மாணவர்களைக் குழப்பலாம். எனவே, சுருக்கமான பக்கங்கள் புதிதாக உருவாக்கப் பட வேண்டும். இவற்றை முன்னிட்டு நாம் அனைவருமே வழமையை விட சற்று கூடுதலாக விக்கியில் பங்கு கொள்ள வேண்டும். மற்ற வழக்கமான அவசரமில்லாத விக்கிப்பணிகளை சற்று நிறுத்தி வைத்து விட்டு, போட்டிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தலாம். மேலும் உதவி நல்க, விடுமுறையில் உள்ள விக்கிப்பீடியர்களையும் உதவச் சொல்லிக் கேட்கலாம். --ரவி 18:16, 6 மார்ச் 2010 (UTC) ரவி மேலே சொன்னவை யாவும் முக்கியமே.
தமிழ் விக்கிப்பீடியா போட்டி அறிவிப்பு வெளியானவுடன் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியா தளத்திற்கு அதிக அளவில் வருகை தரலாம். அதற்கு முன்பாக நாம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு செய்தியுடன் கூடிய பக்கங்களை விக்கிப்பீடியாவில் உருவாக்கி விட வேண்டும். அரசு செய்திகள் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பச் செயலாளர் மூலம் பத்திரிகைச் செய்தியாக வெளியாகி விட்டது. எனவே முறையான அறிவிப்புக்கு முன்பாக அனைத்தையும் பார்வைக்குக் கொண்டு வந்து விட வேண்டும். போட்டிக்கான விதிமுறைகள் ஒன்றைத் தவிர அனைத்தையும் காட்சிப்படுத்தி விடுவது சிறப்பு. முதற்பக்கத்தின் மேல் பகுதியில் முதற்பக்கக் கட்டுரை, விக்கி செய்திகளுக்கு மேலுள்ள பகுதியில் போட்டி குறித்த செய்தியும் அங்கிருந்து குறிப்பிட்ட வலைவாசல் பக்கத்திற்கும் இணைப்பு செய்வது சிறப்பாக இருக்கும். --Theni.M.Subramani 18:17, 7 மார்ச் 2010 (UTC)
கட்டுரைப் போட்டிக்கென தனியான பகுப்புகட்டுரைப்போட்டிக்கென எழுதப்பட்ட பல உதவிக் குறிப்புப் பக்கங்கள் ஆங்காங்கே பகுப்புகள் எதுவும் இல்லாமல் காணப்படுகின்றன. அவை அனைத்தும் ஒரு தனிப் பகுப்புக்குள் இடுவது நல்லது. கட்டுரைப் போட்டி அல்லது அதற்கொத்த புதுப் பகுப்பை உருவாக்கி அவற்றினுள் அனைத்தையும் இடுவது நல்லது.--Kanags \உரையாடு 12:13, 8 மார்ச் 2010 (UTC) கட்டுரைப் போட்டிக்கான படிமம்கட்டுரைப் போட்டிக்கான சில படிமங்களை நான் இத்துடன் இணைத்துள்ளேன். படிமம்1
படிமம்3 படிமம்4 தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம். --Theni.M.Subramani 13:19, 8 மார்ச் 2010 (UTC)
கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டிசெல்வா! கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி பக்கம் பார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் செய்யவும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஒரு மாணவர் த.வி.யின் முதற்பக்கத்திற்கு வந்தவுடனேயே முதல் சொடுக்கிலேயே இப்பக்கம் வர வேண்டும். (பல சொடுக்குகள் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, முக்கிய பக்கத்திற்கு வராமலேயே போய்விடச் செய்துவிடலாம்.) இப்பக்கத்திலும் இரண்டே உட்தலைப்புகள் உள்ளவாறு அமைத்துள்ளேன். அவை 1. தலைப்புகள் 2. விதிகள். மேலும் பேசுவோம். அமைச்சர், செயலாளர் சந்திப்பின் சாரத்தை உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். தயந்து பார்க்கவும். நன்றி. பரிதிமதி நன்றி பரிதிமதி! மார்ச்சு 7 ஆம் நாள் அன்றும் அதற்கு முன்னருமே இங்குப் பலரும் முதல் பக்கத்தில் இருந்தே இணைப்பு இருக்க வேண்டும் என்றும், அங்கிருந்தே பிற இடங்களுக்கு இட்டுச்செல்லும் என்று கூறிவந்துள்ளோம். அரசிடம் இருந்து அறிவிப்பு வர இருக்கும் சற்றுமுன் அதனைச் செயல்படுத்தலாம் என்றுதானே இருக்கின்றோம். ஆலமரத்தடியில் கூறியது இதோ:
ஆகவே பல சொடுக்குகள் செய்து மாணவர்கள் வழிதவறக்கூடாது என்பதை முதலில் இருந்தே நாம் அனைவருமே அறிந்திருப்பதால், அப்படியேதானே செய்வதாக இருந்தோம். இதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லையே. இரண்டே உட்தலைப்புகள் இருப்பதும் சரியே. இது பற்றி மேலும் கூறுகிறேன். --செல்வா 15:47, 10 மார்ச் 2010 (UTC)
பயனர் ரவியின் விக்கிப்பணி - ஐந்தாண்டுகள் நிறைவு - ஆறாம் ஆண்டு தொடக்கம்ரவி! தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பணி இந்த மார்ச்சு 11 அன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெற்று ஆறாவது ஆண்டு தொடங்குகின்றது! மேலும் மேலும் உங்கள் பணி தமிழ் விக்கிப்பீடியாவில் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! --செல்வா 03:20, 11 மார்ச் 2010 (UTC)
ரவியின் விக்கிப்பயணத்தில் ஐந்தாண்டுகள் கடந்து விட்டன. ஆறாவது ஆண்டு காலத்தில் கடந்த ஆண்டுகளை விட அதிக பங்களிப்பு செய்வதுடன், பல புதிய பயனர்களை விக்கிக்குக் கொண்டு வந்திட மேலும் பல முயற்சிகள் செய்தும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் (நிலை) முன்னேற்றமடைய பங்காற்றும்படி அனைத்துப் பயனர்களின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறேன். --Theni.M.Subramani 04:48, 11 மார்ச் 2010 (UTC)
ரவி, நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாப் பணியில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையிட்டு எனது வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்களின் பணி நீண்ட காலம் விக்கிப்பீடியாவுக்குத் தேவை. உங்கள் சொந்த முன்னேற்றத்தையும் கவனித்துக்கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் தோள் கொடுங்கள். இரண்டிலும் நீங்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மயூரநாதன் 18:10, 11 மார்ச் 2010 (UTC)
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. வரும் ஆண்டுகளில் இயன்ற வரை இன்னும் சிறப்பாக விக்கிப்பணிகளில் ஈடுபட விரும்புகிறேன். நன்றி--ரவி 11:49, 13 மார்ச் 2010 (UTC)
இரவி இரவி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் இரவி ஒருவனும் அல்லன் த.வி.யில் ஐந்து ஆண்டு நிறை புரவலனே! இரவி, வாழ்த்துகள். உங்கள் பங்களிப்பின் அருமை, பெருமை பற்றி எனக்குத் 'தகவல்' வந்தவண்ணமே இருக்கிறது. இணையத்தின் கற்காலத்தில் பலர் எங்கெங்கோ உலாவிக்கொண்டிருந்தபோதே தமிழ் விக்கியில் அடியெடுத்து வைத்த முன்னோடி மூதாதை நீங்கள். உங்களைப் போன்றோரின் வெளிச்சத்தில், வழிகாட்டுதலில், பங்களிப்புகளில் தமிழ் விக்கியில் பங்களிப்புகள் மேலும் மேலும் செழிக்கட்டும், சிறக்கட்டும். ஐந்து மாதங்களே நிறைவு செய்துள்ள 'இளைஞன்' Pazha.kandasamy 01:02, 14 மார்ச் 2010 (UTC) கூகிள் மொழிப்பெயர்பு கட்டுரையை பார்க்கவும்தயவு செய்து சுந்தரவனக்காடுகள் கட்டுரையையும் அதன் பேச்சு:சுந்தரவனக்காடுகள் பக்கத்தையும் பார்க்கவும். --கார்த்திக் 06:48, 11 மார்ச் 2010 (UTC)
Petunia வுக்குத் தமிழ்ப்பெயர் என்ன?Petunia என்னும் செடிக்கு தமிழ் பெயர் தெரியுமா? தெரிந்தால் எனக்கு அறிய தரவும். நன்றி -- மகிழ்நன் 20:07, 11 மார்ச் 2010 (UTC)
நன்றி செல்வா எனது ஆர்.என்.ஏ குறுக்கீடு என்ற கட்டுரையில் இச்செடியெய் பற்றி எழுதி உள்ளேன். முதலில் காகித பூ என தவறாக நினைத்து எழுதி விட்டேன். கருத்துக்கு நன்றி -- மகிழ்நன் 00:03, 12 மார்ச் 2010 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா போட்டி அறிவிப்புஇன்றைய தினமணி நாளிதழில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கொடுத்துள்ள தமிழ் விக்கிப்பீடியா போட்டி குறித்த அறிவிப்பு செய்தி இடம் பெற்றுள்ளது. மகிழ்ச்சியான இச்செய்தியைக் கவனிக்கவும். --Theni.M.Subramani 01:23, 13 மார்ச் 2010 (UTC) மாணவர்களுக்கு தனி பகுப்புதமிழ் விக்கிப்பீடியாவிற்கு கட்டுரை அளிக்கும் போட்டிக்கென தனி பகுப்பு ஒன்றை உருவாக்கி அதில் மாணவர்களை கட்டுரைகளை நேரிடையாக பக்கத்தைச் சேமிக்கும்படி செய்தால் நன்றாக இருக்கும். மேலும் அந்தப் பக்கங்களை போட்டி முடிவுகளுக்குப் பின்பு விக்கிக் குறியீடுகள் மற்றும் தேவையான மாற்றங்கள் செய்து தமிழ் விக்கிப்பீடியாவின் உரிய பகுப்புகளில் சேர்த்துக் கொள்ளக்கூடாதா?--Theni.M.Subramani 01:48, 13 மார்ச் 2010 (UTC)
போட்டி ஏற்பாடுகள் குறித்து அறிந்த வரையில், கட்டுரைகள் தனியாக இன்னொரு வலைத்தளத்தில் ஏற்றப்பட்டு, கட்டுரைத் தெரிவு அங்கே நடைபெற வாய்ப்புள்ளது. இவ்வலைத்தளத்தை உருவாக்கும் பணியில் ஒரு பல்கலை ஈடுபட்டு வருகிறது. மேல் விவரங்கள் அறிந்தபின் இற்றைப்படுத்துகிறேன்.--ரவி 11:46, 13 மார்ச் 2010 (UTC) யோர்க் பல்கலைக்கழக தமிழியல் மாணவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 5, 2010) ரொறன்ரோ நேர்த்யோர்க்கில் அமைந்துள்ள யோர்க் பல்கலைக்கழக தமிழியல் மாணவர்களுக்கு தமிழ் கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, நூலகம் பற்றி அறிமுகப்படுத்துவதில் நானும், செல்வாவும் கலந்து கொண்டோம். இந்த வாய்ப்பை ஆசிரியை பார்வதி கந்தசாமி வழங்கியிருந்தார். இவரை கனடா தமிழ் சொற்கோவைக் குழுவின் ஊடாக அறிமுகம் ஆகியவர். 15 - 20 வரையான தமிழில் பேச, வாசிக்க, எழுத வல்ல இந்த மாணவர்கள் எமது அறிமுகத்தை ஆர்வத்துடன் கேட்டனர். சில கேள்விகளையும் முன்வைத்தனர். சுமார் இரண்டரை மணிநேரம் நாம் விரிவான ஒரு விளக்கத்தை தரக் கூடியதாக இருந்தது. நெடும்பயணம் செய்து வந்திருந்த செல்வாவுக்கு நன்றிகள். எமது நிகழ்த்தல் தயாரிப்பில் மு. இளங்கோவன் அனுப்பிய பிபிடி பயன்பட்டது, அவருக்கு நன்றிகள். --Natkeeran 02:32, 13 மார்ச் 2010 (UTC)
நல்ல செய்தி. தமிழர் மிகுந்து இருக்கும் சிங்கை, மலேசியா மற்ற பிற நாடுகளில் இருந்து அங்கேயே பிறந்து வளரும் தற்காலத் தலைமுறையினர் எவரும் த.விக்குப் பங்களிக்காமல் இருப்பது இந்நாடுகளில் தமிழின் எதிர்காலம் குறித்து கவலையளிக்கும் போக்காகவே உள்ளது. --ரவி 11:47, 13 மார்ச் 2010 (UTC)
மகிழ்நன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தேர்வுஅன்பின் நண்பர்களுக்கு, வணக்கம். எனக்கு மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணி கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறிய தருகிறேன். ஒரு மாதத்தில் பல்கலைகழகத்தின் பணிக்கான விளம்பரம், நேர்முகம் , உடனடியான சேர்வதற்க்கான வேண்டுகோள் என அனைத்தும் முடிந்து விட்டது. நான் எதிர்பார்க்காத முடிவு, விரும்பமுடன் மறுபடியும் தீ நுண்ம ஆய்வோடு குறு ஆர்.என்.ஏ க்களை பற்றி ஆய்வு செய்ய விழைகிறேன். நன்றி -- மகிழ்நன் 22:44, 18 மார்ச் 2010 (UTC)
உங்களைப் போன்ற தமிழ் ஆர்வம் மிக்கோர் இளம் வயதில் பல்கலைப் பொறுப்புகளுக்கு வருவது நற்செய்தி. எனது செருமன் நாட்டுப் பேராசிரியர் அறிவுறுத்தியபின்னே விக்கிப்பீடியா என்று ஒன்று இருப்பது அறிந்தேன். (செருமனியில் விக்கி ஈடுபாடுகள் மிகுதி ). அது போல் உங்கள் பல மாணவர்களையும் விக்கி, கூட்டு முயற்சி பக்கம் ஈர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்--ரவி 01:32, 19 மார்ச் 2010 (UTC)
நன்றி, நன்றி,மிக்க நன்றி. பெரியோர்களின் வாழ்த்துகள் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிகிறது. இந்த சிறு அகவையில் இப்பணியேய் ஏற்ப்பது கொடையே. இதற்க்கு கரணியமான நெறியாளர் உசா (MKU), திதி (இசுரேல்) மற்றும் தற்போது நெறியாளர் ரகு , பெற்றோர், நண்பர்கள் அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். தற்போது உள்ள ஆய்வகத்தில் மூளை காயங்களில் குறு ஆர்.என்.ஏ க்களின் பணிகள் என்ன, குறு ஆர்.என்.ஏ க்களின் அளவுகளில் எவ்வாறு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை முதன் முறையான, புதிய முறையில் கண்டுபிடித்துள்ளோம். இதை நிறைவாக முடிப்பதற்கு இரு திங்கள்கள் (மாதம்) தேவை. பல்கலைகழகமோ ஏப்ரல் 21 கடைசி நாள் என்றும், இல்லையேல் வேலை மற்றவருக்கு அளிக்கப்படும் என்கிறது. நெறியாளரிடம் கலந்து ஒரு நல்ல முடிவை எடுக்க எண்ணியுள்ளேன். பல்கலையில் நமது விக்கியெய் பற்றி உறுதியாக பரப்புரையும், மிகையான நேரமும் செலவு செய்வேன். என்னால் முடிந்த அளவு உழைத்து, நமது விக்கியெய் மேம்படுத்த பாடுபடுவேன். -- மகிழ்நன் 02:50, 19 மார்ச் 2010 (UTC)
நன்றி. வாழ்த்துகளுக்கும் , கருத்துகளுக்கும் நன்றி. -- மகிழ்நன் 17:08, 19 மார்ச் 2010 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia