விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு32இந்திய விக்கிமீடியாப் பிரிவுவிக்கிமீடியாவின் இந்தியப்பிரிவைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைக் கடந்த ஆண்டில் செய்து கொண்டிருந்தோம். இப்போது உடன்படிக்கையை எழுதி முடித்து கருத்து வேண்டி இங்கு வெளியிட்டுள்ளார்கள். உங்கள் கருத்துக்களை அதன் பேச்சுப் பக்கத்தில் பதியும்படி கேட்டுக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 03:49, 10 மார்ச் 2010 (UTC)
நகர்பேசி இடைமுகம்தமிழ் விக்கிப்பீடியாவுக்கான நகர்பேசி இடைமுகத்தை மொழிபெயர்த்துள்ளேன். இங்கு சென்று சரி பாருங்கள். அளிப்புரிமைச் செய்தியை இன்னமும் மொழிபெயர்க்கவில்லை. வெறும் 25 செய்திகளே என்பதால் உடனடியாக மெய்ப்பார்த்து தேவையான மாற்றங்களைச் செய்தால் நகர்பேசிகளில் தமிழ் விக்கிப்பீடியா வலம் வரும். :) -- சுந்தர் \பேச்சு 08:01, 10 மார்ச் 2010 (UTC)
முதல் பக்கத்தில் போட்டிக்கான தொடுப்பு ஏற்படுத்தி வைத்தல்முதல் பக்கத்தில் போட்டிக்கான தொடுப்பு ஏற்படுத்தி வைத்தல் தேவை அல்லவா? ஏற்கனவே உள்ளதா? யாரேனும் இதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வது நல்லது. அறிவிப்பு வந்தபின் உடனே செய்யும் படி இருக்க வேண்டுமல்லவா?--செல்வா 04:16, 15 மார்ச் 2010 (UTC)
கட்டுரைகளைப் பதிவேற்றும் தளம் இன்னும் உருவாகவில்லை. இதில் அரசு துறையினர் ஈடுபட்டுள்ளார்கள். போட்டிக்கான விளம்பர அறிவிப்பு வெளியாகவும் ஓரிரு நாட்கள் ஆகலாம். இதற்குப் பின் முதற்பக்க அறிவிப்பு, மேற்பகுதி அறிவிப்பு இடுவது நல்லது. எந்நேரமும் இதனைச் செயற்படுத்தும் அளவு பின்னணியில் தேவையான வேலைகளைச் செய்ய வேண்டும். நன்றி--ரவி 19:37, 15 மார்ச் 2010 (UTC)
Please provide input for the strategic planning process!This message is posted by Philippe, on behalf of Tyler, from the Bridgespan Group:
You can leave comments for me here, or on my talk page on the strategy wiki, or by emailing strategy@wikimedia.org. Thanks in advance for your help! Tyler PS - please translate and distribute this message to anyone who may be interested! மேற்கண்ட செய்தியின் தமிழாக்கம்: Tamil translation by --மணியன் 04:59, 19 மார்ச் 2010 (UTC) தொலைநோக்கு திட்டமிடல் செயற்பாட்டிற்கு கருத்துக்கள் தெரிவித்து உதவுங்கள்! இந்த செய்தியை டைலர் சார்பாக பிரிட்ஜ்ஸ்பான் குழுவின் Philippe பதிந்துள்ளார்: தமிழ் உரை: எனது பெயர் TylerT. நான் பிரிட்ஜ்ஸ்பான் குழுவில் விக்கிமீடியா நிறுவனத்துடன் தொலைநோக்கு திட்டமிடல் செயலபாட்டில் தொடர்ந்து பணியாற்றிவரும் அணியின் உறுப்பினர்.நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இந்த செயல்பாட்டின் பங்காக விக்கிமீடியா நிறுவனம் விக்கிமீடியாவின் அனைத்து திட்டங்களிலும் மொழிகளிலும் சில உயர்நிலை முன்னுரிமை இடங்களில் படிப்பவர் மற்றும் பங்களிப்பவர் எண்ணிக்கையைக் கூட்டிடும் வகையில் களத்தில் பணியாளர்களை வேலைக்கு எடுக்க குறைந்த கால நிதித்திட்டம் மூலம் சோதனைகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.இந்த வெள்ளோட்டத் திட்டத்தின் நோக்கம் எவை வேலை செய்கின்றன, எவை வேலை செய்வதில்லை என அறிந்து அவற்றை ஆவணப்படுத்துதல் ஆகும். இந்தியா முன்னுரிமை இடங்களில் ஒன்றாகும், கீழ்கண்டவற்றை குறித்த புரிதலுக்கு உதவி புரிந்தால் நாங்கள் மகிழ்வோம்:
உங்கள் கருத்துக்களை எனக்காக இங்கு இடலாம் , அல்லது எனதுப் பேச்சுப் பக்கம் on the strategy wiki இடலாம், அல்லது இம்முகவரிக்கு strategy@wikimedia.org மின்னஞ்சல் செய்யலாம். உங்கள் உதவிகளுக்கு முன்கூட்டியே நன்றி! Tyler பி.கு - மொழிபெயர்ப்பில் ஏதேனும் பிழைகள்/தவறுகள் இருப்பின் பிற விக்கிப்பக்கங்களைப் போன்றே இதனையும் தொகுக்கலாம். விரும்பும் அனைவரின் கவனத்திற்கும் இதனை கொண்டு செல்வீராக! The Future of PunjabiEncyclopedia on Astronomy in Malayalam;a voyage through the wonders of UniverseEncyclopedia on Astronomy in Malayalam;a voyage through the wonders of Universe Singapore-area contributors? 2010 Youth Summer OlympicsHello: If you are in the Singapore area, I am hoping to get some people accredited as reporters, for the 2010 Summer Youth Olympics. Visit Wikinews' project area to submit your name, and be considered for our official bid. -- Zanimum 14:53, 22 மார்ச் 2010 (UTC) கூகுள் மொழிபெயர்ப்பு நெறிப்படுத்தல்கூகுளுடன் தொடர்ந்து மடலாடி வந்தபின்னர் இன்னும் இரண்டு நாட்களில் (வியாழன் இந்திய நேரம் 17:00) வலைத்தொடர்புப் பட்டறை ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இரவியும் நானும் கூகுள் தொடர்பாளரிடம் நமது விக்கி நடை பற்றி விளக்க உள்ளோம். அதற்கு முன்னதாக அவர்கள் மொழிபெயர்த்த ஏதாவது ஒரு கட்டுரையைத் தேர்வு செய்து முழுமையாக விக்கிப்படுத்திக் காட்டினால், அவர்களுக்கு விளக்க ஏதுவாகும். இதுவரை கட்டுரை தேர்வுக்குழுவில் உடனுக்குடன் உதவிய கார்த்தி, கலை, குறும்பன், அராப்பத் ஆகியோருக்கு மிக்க நன்றி. நடைப்பிறழ்வுகள் தொடர்பில் புரிந்துணர்வு ஏற்படுத்தியபின் அந்தப் பணியைத் தொடர்வோம். -- சுந்தர் \பேச்சு 14:12, 23 மார்ச் 2010 (UTC)
ஆக மொத்தம் - 50% - 50% என்ற அளவில் ஓரளவு நம்பிக்கை அளிக்கும் உரையாடலாக இதனைக் கருதலாம். நாம் விரும்பும் அளவு முழுக் கட்டுப்பாடும், தரமும் கிடைக்காமல் போகலாம். அதே வேளை, இப்போது உள்ளதோடு நிலைமை மேம்படவும் வாய்ப்பு உண்டு. மிகப் பெரிய அளவில் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்கான திட்டம் உள்ளது என்று புரிந்து கொள்ள முடிகிறது. உறுதியான தகவல்களைப் பெற இயலவில்லை. அவர்கள் செயற்பாட்டில் மாற்றம் காண ஒன்றிரண்டு மாதம் ஆகலாம். அதனைப் பொறுத்து இத்திட்டத்தை ஏற்பதா வேண்டாமா, எப்படித் தொடர்வது என்று அடுத்த கட்ட உரையாடல், மீளாய்வு செய்யலாம்.--ரவி 12:18, 26 மார்ச் 2010 (UTC) கட்டுரைப் போட்டி விளம்பர அறிவிப்பு ஒட்டிகள்ஓரிரு நாளில் கட்டுரைப் போட்டிக்கான விளம்பர அறிவிப்பு ஒட்டிகள் வெளியாகலாம். யாருக்கேனும் தங்கள் பணியிடம் / கல்லூரி முதலிய இடங்களில் இதனை வெளியிட்டு விளம்பரப்படுத்த விருப்பம் என்றால் தேவைப்படும் ஒட்டிகள் எண்ணிக்கை, தங்கள் முகவரியைக் குறிப்பிட்டு ravidreams at gmail dot com என்ற முகவரிக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைப்பது சிரமம் :( ஒட்டிக்கான படிமம் வெளிவந்த பின் அதனைத் தாங்களே அச்சிட்டு எடுத்துக் கொள்வது உகந்ததாக இருக்கும். நன்றி--ரவி 05:33, 24 மார்ச் 2010 (UTC) விக்கிமீடியாவுக்கு நன்றிதனிப்பெரும் மதிப்பிற்குரிய விக்கிபீடியா நிறுவனத்தாருக்கு அன்பு வணக்கம்! அண்மையில்தான் தமிழ் விக்கிபீடியாவில் நுழைந்தேன். எத்தனை கட்டுரைகள்! எவ்வளவு ஆழமான ஆராய்ச்சிப் பதிவுகள்! தமிழில் இதுவரை நூலாக வெளிவராத பல தகவல்கள் கூட இங்கே காணக் கிடைக்கின்றன. மலைப்பாக இருக்கிறது! இந்தப் பதிவுகளெல்லாம் தமிழர்களால் எழுதப்பட்டவைதாம் என்றாலும் எழுதக் களம் அமைத்துக் கொடுத்தவர் தாங்கள்தாமே! இதுவரை எவ்வகையிலும் பதிவு செய்யப்படாத, தமிழ் பற்றிய இத்தகைய கட்டுரைகள், இன்று உலகில் யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன எனில் அதற்குக் காரணம் தாங்கள் எங்களுக்கென அமைத்துக் கொடுத்திருக்கும் இந்தத் தமிழ் விக்கிபீடியாதானே! ஆங்கிலேயர்களான தாங்கள் எங்கள் மொழி மீது இவ்வளவு அக்கறை கொண்டு, தமிழுக்கென இவ்வளவு பெரிய ஒரு பன்னாட்டுக் களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களே அதற்குத் தமிழ் உலகத்தின் சார்பில், தமிழன் எனும் முறையில் என் உயிரார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனச் சொல்வதைத் தவிர வேறெப்படி நன்றி செலுத்துவதென்று எனக்குத் தெரியவில்லை. உயிரார்ந்த நன்றிகள்!! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன்\உரையாடு 2:10PM, 26 மார்ச் 2010.
Wikimania ScholarshipsThe call for applications for Wikimania Scholarships to attend Wikimania 2010 in Gdansk, Poland (July 9-11) is now open. The Wikimedia Foundation offers Scholarships to pay for selected individuals' round trip travel, accommodations, and registration at the conference. To apply, visit the Wikimania 2010 scholarships information page, click the secure link available there, and fill out the form to apply. For additional information, please visit the Scholarships information and FAQ pages: Yours very truly,
Cary Bass கட்டுரைப் போட்டி அறிவிப்பு
கல்லூரி மாணவர்களுக்கான விக்கிபீடியா தகவல் பக்க போட்டி செய்தி --Theni.M.Subramani 01:20, 26 மார்ச் 2010 (UTC)
தமிழ் விக்கி மடற்குழுமம்தமிழ் விக்கி மடற்குழுமத்தில் அனைவரும் இணைந்தால் நன்றாக இருக்கும். விக்கியில் இட்டு உரையாடுவதை விட மடற்குழுவில் உரையாட உகந்த விசயங்களை இங்கு பேசலாம். நன்றி--ரவி 12:08, 26 மார்ச் 2010 (UTC) ஆங்கிலத்திலும் பதிவேற்றலாம்உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மற்றும் அதனுடன் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் விக்கிப்பீடியா இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி குறித்த தகவல்களை ஆங்கில மொழியிலான விக்கிப்பீடியாவில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு பக்கங்கள் உருவாக்கி அங்கிருந்து வலைவாசல்: கட்டுரைப் போட்டிப் பக்கத்திற்கு வருவது போல் இணைப்பு கொடுக்கலாம்.--Theni.M.Subramani 02:27, 27 மார்ச் 2010 (UTC) கட்டுரைப் போட்டி வலைவாசலுக்கான இணைப்புஎல்லாப் பக்கங்களிலும் வரும் இந்த இணைப்பை இன்னும் கொஞ்சம் தெளிவாகத் தெரியும் படி செய்யலாமா? இந்த இணைப்பை எவ்வாறு செய்வது? மயூரநாதன் 08:59, 27 மார்ச் 2010 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia