விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு37நினைவில் நிற்கும் நேர்காணல்கள்![]() அண்ணா கண்ணன் தொகுத்த அவரது நேர்காணல்கள் அடங்கிய நூல் ஒன்றை "நினைவில் நிற்கும் நேர்காணல்கள்" என்னும் தலைப்பில் திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் முன்னர் நான் "சென்னை ஆன்லைன்" இணைய இதழுக்குத் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக வழங்கிய நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.--மயூரநாதன் 13:39, 18 ஜூன் 2010 (UTC)
விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டதுஅனைவருக்கும் வணக்கம்!
வாழ்த்துகள் பரிதிமதி --குறும்பன் 20:39, 18 ஜூன் 2010 (UTC) தமிழ் விக்கி சார்பில் நிகழ்வில் கலந்து கொண்டதற்கு நன்றி, பரிதிமதி. --கலை 23:23, 18 ஜூன் 2010 (UTC) உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியாகோயம்புத்தூரில் வருகிற சூன் 23 முதல் சூன் 27 வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் விக்கிப்பீடியா குறித்த எனது பங்களிப்புகள் இரண்டு நாட்கள் இடம் பெற்றுள்ளன.
வாழ்த்துகள் தேனி சுப்பரமணி --குறும்பன் 20:39, 18 ஜூன் 2010 (UTC) கட்டுரைப் போட்டி முடிவுகள்
விக்கிப் பயனர்களுக்கும் நடுவர்களுக்கும், அரசினருக்கும் நன்றியும் பாராட்டுகளும்இரவுபகல் எனப் பாராது அயராது உழைத்து, போட்டிக்கான ஒருங்கிணைப்பு வேலைகளை மிகச் சிறப்பாக செய்த கலையரசி, இரவி ஆகிய இருவருக்கும் அவர்களுக்கு உற்ற துணையாக நின்று மிக உதவிய பெரியண்ணன், குறும்பன், சிறீதரன், மயூரநாதன், அராபத், இபயத்துல்லா, சுந்தர், பரிதிமதி, நற்கீரன் ஆகியோருக்கும், குறுகிய காலத்தில் மதிப்பீடு செய்து பேருதவி புரிந்த வெளி நடுவர்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பிலும் என் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றி, உளமார்ந்த பாராட்டுகள். விக்கிப்பீடியாவுக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்து ஊக்கம் அளித்த தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு திருவாட்டி பூங்கோதை ஆலடி அருணா அவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி டேவிடார் இ.ஆ.ப அவர்களுக்கும், முனைவர் அருள் நடராசன் அவர்களுக்கும், திரு மதன் குமார் (அண்ணா பல்கலைக்கழகம்), போட்டிக்கட்டுரைகளைப் பதிவு செய்து வலைத்தளத்தைப் பராமரித்த திரு. யுவராசுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக. --செல்வா 05:34, 19 ஜூன் 2010 (UTC
பவுல் வறுவேல் (George46) ஐயா, உரிமை மீறல் ஏதும் இராது, ஏனெனில், விக்கிப்பீடியாவுக்கான கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமத்தின் கீழேயே பதிவாகும்; நாம் அனைவரும் கட்டாயம் கூட்டாக திருத்தியும், மேலும் சேர்த்து வளர்த்தெடுக்கவும் இயலும். மேலே சுந்தர் சொன்னது யாவும் செய்ய வேண்டியனவே. சுந்தரின் விக்கித்தேர் குறிப்பு (ஊரார் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடித் தேரை இழுக்க வேண்டியதில்லை) களிப்பூட்டிய சிறப்பான ஓர் உண்மை! வறுவேல், நீங்கள் வெளி நடுவராக இருந்து உதவியதும் அல்லாமல், மிகச் சிறந்த முறையில் வழிகாட்டுமுகமாக நேர்த்தியாக விக்கியில் ஆக்கங்கள் செய்துவருவது காண மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.--செல்வா 16:33, 19 ஜூன் 2010 (UTC) பயிற்சி நிகழ்படங்கள்வணக்கம். சூன் 23 - 27 தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சியில் விக்கிப்பீடியா, விக்சனரி பற்றி விளக்குவதற்காக கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தத் தக்க வகையில் பயிற்சி நிகழ்படங்கள், powerpoint கோப்புகள் தேவை. நேர நெருக்கடியாக இருப்பதால் யாராவது இவற்றைத் தயாரித்து அளித்தால் உதவும். எடுத்துக்காட்டுக்கு, http://ravidreams.net/tamil-wikipedia-intro-flash.zip . camtasia studio மென்பொருள் கொண்டு இதனைச் செய்யலாம். கடவுச் சொல் விவரம் தேவைப்பட்டால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும். நன்றி--ரவி 14:43, 21 ஜூன் 2010 (UTC)
முயற்சிக்குப் பாராட்டு"தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்" என்ற கட்டுரையை எழுதியுள்ள பயனரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதையவர் எழுதியுள்ள விதம் நன்று! உலகத் தமிழர் அனைவர்க்கும் புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டியது அவசியம்! அவர்க் குறிப்பிட்டுள்ள பல்பெயர்களை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை! அரசு இச்செம்மொழி மாநாட்டின் இறுதியில் வெளியிடப்போகும் தீர்மாணங்களிலொன்றாக இதுவுமிருக்க விக்கியிலுள்ளோர் ஆவண செய்ய வேண்டுகிறேன்! தமிழ் இணையப் பயிலரங்குதமிழ் இணையப் பயிலரங்கு - http://tamil-internet-workshop.blogspot.com/--ரவி 20:35, 25 ஜூன் 2010 (UTC) TVU Donated Dictionary to WikiIn the Tamil Internet conference validictory function, IT Minister Poongathai Aladi aruna handed over Tamil Virtual University's Kalaichol agarathi CD to Tamil Wikipedia teams for Tamil Wiktionary (http://ta.wiktionary.org/). IAS officers Davidar, Soman Babu(Elcot), Prof Anandakrishnan and Infitt Chair, ED were present. Initially they called for Prof Selva, he was not present so me and Mauran Received on behalf of Tamil Wikipedia. I thanked Prof. Nakeeran on behalf of Wikipedia. He told he will give another 6 chapters too in future. This is for your kind info - மாஹிர் 10:18, 27 ஜூன் 2010 (UTC)
செய்திக்கு நன்றி, மாகிர். இது குறித்து முன்பே அறிந்திருந்தால் அனைவரும் அங்கு இருந்திருக்கலாம். தமிழ் இணையப் பயிலரங்கு களைப்பு காரணமாக பலரும் இன்று அரங்குக்கு வராமல் இருந்து விட்டோம். நீங்கள் இருவரும் இணைந்து பெற்றுக் கொண்டது மகிழ்ச்சி. (மு. மயூரன் இலங்கையில் இருந்து வந்திருந்தார்) மற்ற விவரங்கள் இது வரை நான்கு பேருக்கு மேல் தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரே இடத்தில் கூடியது இல்லை :) இந்த முறை மாகிர், மு. மயூரன், செல்வா, சுந்தர், த. உழவன், அருநாடன், பரிதிமதி, பழ. கந்தசாமி, சோடா பாட்டில், சிவக்குமார், நான், தேனி எம். சுப்பிரமணி, பாலாசி கணேசன் ஆகியோர் கண்டு மகிழ்ந்தோம்.கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 25 தன்னார்வலர்கள் முன்னின்று இரண்டரை நாட்கள் நடத்திய தமிழ் இணையப் பயிலரங்கு மிகுந்த பயன் தந்தது. இதில் கணினியில் தமிழ்99 விசைப்பலகை வழி தமிழ்த் தட்டச்சு, செல்பேசியில் தமிழ் பயன்பாடு, விக்கித்திட்டங்கள், வலைப்பதிவுகள், கட்டற்ற மென்பொருள்கள், உபுண்டு பற்றிச் சொல்லிக் கொடுத்தோம். ஆங்கில விக்கிப்பீடியா பயன்படுத்தும் பலருக்குக் கூட தமிழ் விக்கிப்பீடியா என்று ஒன்று இருப்பது தெரியாமல் இருந்தது. ஆர்வத்துடன் தமிழ் விக்கிப்பீடியா பற்றி கேட்டுக் கொண்டார்கள். தமிழ் இணையப் பயிலரங்கு பற்றி இந்து நாளிதழில் வந்த செய்தியைக் காணலாம் இணைய மாநாட்டில் வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடந்தது. இதில் தேனி எம். சுப்பிரமணி, சுந்தர், நான் கலந்து கொண்டோம். தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியில் பரிசு பெற ஆறு பேர் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஒரு நிகழ்பட உரையாடலும் நிகழ்த்தினோம். மிகுந்த களைப்பாக இருப்பதால் பிற விவரங்கள், படங்களைப் பிறகு தரவேற்றுகிறேன். --ரவி 11:16, 27 ஜூன் 2010 (UTC) விக்கிமீடியா நிர்வாகிகள் பேச்சில் இரண்டு தமிழ் விக்கிப்பீடியர்கள்![]() விக்கிமேனியா 2010 மாநாட்டின் முதல் நாள் தொடக்கத்தில் விக்கிமீடியாவின் சூ கார்டினர் விக்கிமீடியா திட்டங்களை முன்வைத்துப் பேசினார். அப்போது, தனது பயணங்களின்போது சந்தித்த சிலரது படங்களையும் திரையில் காட்டினார் அதில் ஒருவர் நமது சுந்தர். இறுதி நாளில் சிறிய விக்கிப்பீடியாக்கள் தொடர்பாக விக்கிமீடியா நிறுவனர் சிம்மி வேல்சு பேசினார். அப்போது ஆறு விக்கிப்பீடியா ஆர்வலர்களுடன் இசுக்கைப்பு வழியாக அவர் நடத்திய பேட்டிகளின் நிகழ் படங்களின் பகுதிகளையும் போட்டுக் காட்டினார். அதில் நமது நற்கீரன் இரண்டு முறை வந்தார். நற்கீரன் இடம்பெற்ற படத்தை அருகில் பாருங்கள் படம் தெளிவாக வரவில்லை. சுந்தருடைய படம் எதிர்பாராமல் வந்ததால் எடுக்கமுடியவில்லை. இ. மயூரநாதன்.
மகிழ்ச்சியான செய்தி. தலைமறைவாக இருந்த நற்கீரன் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் ;)நம்மில் பலரும் பல்வேறு களங்களில் தமிழ் விக்கியின் சார்பாளர்களாகச் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது நமது திட்டத்துக்கு கிடைத்த நற்பேறு. --ரவி 11:32, 13 ஜூலை 2010 (UTC) செருமனியின் முன்னணி இதழான Spiegel லும் http://www.spiegel.de/netzwelt/web/0,1518,706001,00.html தமிழ் விக்கி பற்றிய சிறிய குறிப்பு வருகிறது. tamil wikipedia என்று கூகுள் செய்திகளில் தேடிக் கொண்டிருக்கிறேன் :) சிறிய விக்கிகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக நமது விக்கி மனதில் பதிந்து வருகிறது என்பது மட்டும் புலப்படுகிறது! --ரவி 11:44, 13 ஜூலை 2010 (UTC)
மிக இனிப்பான செய்திகள் :) முன்பினும் ஊக்கத்துடன் உழைப்போம். அண்மையில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பல கட்டுரைகளில் தமிழ் விக்கிப்பீடியாவைப்ப் பற்றி உயர்வாகப் பேசினர். இது தவிர பல மிகச் சிறந்த எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் தமிழ் விக்கியில் பங்களிப்பதாக வாக்களைத்துள்ளனர். பேரா. தெய்வசுந்தரம், முனைவர் உலோ செந்தமிழ்க்கோதை, முனைவர் இராசுகுமார், பல கல்வெட்டாய்வாளர்கள், பற்பல அறிஞர்கள் உதவ முன்வருவதாகக் கூறினர். இந்த எழுச்சியுந்தத்தை தக்க முறையில் வளர்த்தெடுப்போம். தமிழ் விக்சனரிக்கு தமிழக அரசின் தொழில்நுட்பச் செயலர் திரு டேவிதாரும் முனைவர் நக்கீரனும் (தமிழ் இணைய பல்கலைக்கழக இயக்குனர்)ஆறு தொகுதிகளில் உள்ள அத்தனை சொற்களையும் கொடையாக தந்துள்ளார்கள் (மென்படிவத்திலும் தந்துள்ளார்கள்). இன்னும் பல நன்மைகள் வர உள்ளன. தரத்தைத் தளர்த்தாது, சீரான முறையில் வளர்ந்த்தெடுத்தால் பெரும் பயன் விளையும். --செல்வா 22:54, 13 ஜூலை 2010 (UTC) பல வழிகளிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியும், அதில் தமிழ் விக்கிப்பீடியர்களின் பங்களிப்பையும் கண்டு மகிழ்ச்சி. முன்னேற்றத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.--கலை 06:01, 16 ஜூலை 2010 (UTC) |
Portal di Ensiklopedia Dunia