விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு44தமிழ் விக்சனரி - உலகின் முதல் பத்து விக்சனரிகளில் ஒன்றுதமிழ் இணைய கல்விக்கழகம் அளித்த 70,000+ சொற்களை ஏற்றியதை அடுத்து, தமிழ் விக்சனரி உலகின் முதல் 10 விக்சனரிகளில் ஒன்றாக முன்னேறி உள்ளது. http://www.wiktionary.org/--இரவி 08:05, 16 நவம்பர் 2010 (UTC)
விக்கி மூலம் - அடுத்த கட்டம்தற்போது தமிழ் விக்கி மூலம் திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. தமிழ் விக்சனரியைப் போல், தமிழ் விக்கி மூலத்தில் மட்டும் பங்களிக்கும் ஆர்வலர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலரும் இணைய ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். எனினும், இது வரை, அங்கு நூல்களைப் பக்கம் பிரித்து முறையாக இடுவதற்கான வழிகாட்டல் இல்லை. முதலிலேயே இதனைச் சரி செய்வது நன்று. அடுத்த சில வாரங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியர் பலரும் அங்கு வந்து பங்கு பெற்று ஒருங்கிணைக்க உதவினால் நன்றாக இருக்கும். பார்க்க: விக்கிமூலம் பக்கவடிவமைப்பு உரையாடல் பக்கம்--இரவி 08:09, 16 நவம்பர் 2010 (UTC) நபர்கள்/ பிரபலங்கள் பற்றிய கட்டுரைகளைக் கண்காணித்தல்த.வி வில் கட்டுரைகள் சுயசரிதைகளாகவோ அல்லது தமது உறவினர் பற்றி அமைத்தலையோ எழுதுபவர்கள் பொறுப்புடன் தவிர்ப்பது நல்லது. நபர்கள் பிரபலங்கள் பற்றிய இத்தகைய குறைபாடுள்ள செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான ஏதாவது சாத்தியமான உத்திகள் பற்றியும் சிந்திக்கலாம். --சஞ்சீவி சிவகுமார் 09:57, 16 நவம்பர் 2010 (UTC)
இவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:29, 16 நவம்பர் 2010 (UTC) இத்தகைய திட்டப்பக்கங்களை உடனே மொழிபெயர்ப்பது அவசியமே. ஒரு திட்டப்பக்கத்தை மொழிபெயர்க்கத் தொடங்குகிறேன். மண் தொட்டியில் இடுகிறேன். சகலரும் பங்களிக்கக் கோருகிறேன்.
அருள் கூர்ந்து கருத்து கூறுங்கள்இக்கட்டுரையை நான் விக்கி மாரத்தானில் தொடங்கி வைத்தேன். இன்று முழுமையாக முடித்துள்ளேன். இக்கட்டுரை பற்றிய கருத்து தேவை. அது மேலும் மேலும் என் எழுத்தாற்றலை அதிகரிக்கும். என்னை இன்னும் ஆர்வத்துடன் எழுதத் தூண்டும் என்றும் எண்ணுகிறேன். ஆகவே அருள் கூர்ந்து கருத்து கூறுங்கள்.
கூகுள் அடுத்த சுற்றுகூகுள் மொழிபெயர்ப்பு அடுத்த சுற்று தொடங்கியுள்ளது. நாம் கொடுத்த 25 கட்டுரைத் தலைப்புகளில் முதல் தலைப்பு இன்று மொழி பெயர்க்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் இங்கே--சோடாபாட்டில் 07:42, 17 நவம்பர் 2010 (UTC)
விக்கியில் மேலும் சில கட்டுரைகள் பதிவேற்றப்பட்டுள்ளன, விக்கி அன்பர்கள் அவற்றை வாசித்து விரைவில் கருத்துகளைத் தெரிவித்தால், ஏதேனும் திருத்தங்கள் தேவைப்படும்பட்சத்தில் அவற்றைச் செய்ய எளிதாக இருக்கும். நன்றி! அன்புடன் ---சாந்த குமார் 08:29, 1 திசம்பர் 2010 (UTC) மாவட்ட வார்ப்புருஒவ்வொரு மாவட்டத்திற்கான செய்தியிலும் மேலே வலது புறம் இடம் பெற்றுள்ள மாவட்டங்களுக்கான வார்ப்புருவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. இதில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பெயரும் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கவனிக்க வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 14:26, 17 நவம்பர் 2010 (UTC)
மாற்றத்தில் ஏமாற்றம்தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுள்ள சில செய்திகளில் மாற்றம் கோரி நான் ஆலமரத்தடி பக்கத்தில் பதிவு செய்த சில கருத்துக்கள் நண்பர் இரவியால் விக்கிப்பீடியா:இடைமுகப்பு எனும் புதுப்பக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இங்கிருந்த கருத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதே தவிர இதுவரை பிழைகள்/தேவைகள் மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இது எனக்கும் என் கருத்துக்கும் ஏமாற்றமே... விக்கிப்பீடியா:இடைமுகப்பு பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் முடிவும் மாற்றமும் கண்டால் நல்லது. தவறுகள் தொடராமல் இருக்கும். --தேனி.எம்.சுப்பிரமணி. 01:34, 20 நவம்பர் 2010 (UTC)
National Identity and Minority Languages
விக்கிமீடியா திட்டம் : இந்திய விக்கிக்கு பங்களியுங்கள்தற்பொழுது நிதி திரட்டுவதற்கு ஜிம்மி வேல்ஸ் கொண்ட விளம்பர படம் அனைத்து பக்கங்களிலும் செய்தி வருகின்றது.இது டிசம்பர் வரை வரும். இதனை அடுத்து விக்கியை பயன்படுத்துவோரை பங்களிப்போராக மாற்ற ஓர் செய்தி வரவுள்ளது. இப்பொழுது விக்கிமீடியாவின் இந்தியா உத்தியினால் இந்திய விக்கிகளுக்கு தனி கவனம் கொடுக்க படுகின்றது. இந்த பக்கத்தில் உங்கள் கருத்துக்கள் / யோசனைகளை பகிர்ந்துகொள்ளவும். ரவி, பெங்களூர் சந்திப்பின் பிறகு தேடுபொறி முன்னேற்றங்கள் குறித்து நீங்கள் கூறிய கருத்துக்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும். ஸ்ரீகாந்த் 09:18, 21 நவம்பர் 2010 (UTC) நாடு வாரியாக, நாடுகள் வாரியாகத்
எது சரி? --Natkeeran 16:14, 21 நவம்பர் 2010 (UTC) {நாடு நாடுகள்} வாரியாகத் தமிழ் (வழக்குகள்) என்பது சரியாக இருக்கும். "ஆக" என்று முடிந்தால் பொதுவாக ஒற்று மிகும். எ.கா சரியாகச் சொன்னான், தெளிவாகக் கூறினான்.. எனவே வாரியாகத் தமிழ் (வழக்குகள்) என்பது போல வர வேண்டும். நாடுவாரியாக அல்லது நாடுகள் வாரியாக என்ற இரண்டுமே சரியானதாகத்தான் எனக்கும் படுகின்றது.--செல்வா 20:52, 21 நவம்பர் 2010 (UTC) Chinese regions fight back against surge of Mandarin
--Natkeeran 01:59, 23 நவம்பர் 2010 (UTC) Flagged Revisions feature update: November 23(apologies in advance for using English here) - We are currently planning to roll out a new version of the FlaggedRevs extension to all wikis on Tuesday, November 23 starting roughly 3:15pm PST (23:15 UTC). See the announcement for more information. -- RobLa-WMF 07:39, 23 நவம்பர் 2010 (UTC)
மணற்கேணி- 2010
தமிழ் இலக்கியம், மொழி பிரிவில் தமிழ் இணையம் சார்ந்து உள்ள ஒரே தலைப்பு தமிழ் விக்கிப்பீடியா மட்டுமே. பிற தலைப்புகள் ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் விக்கிப்பீடியா பல வகைகளிலும் கவனிப்புக்குள்ளாகி வருகிறது என்பதை நாம் கவனித்துச் செயற்பட வேண்டும் ;)--இரவி 11:38, 24 நவம்பர் 2010 (UTC)
tell us about your wikipediaமெட்டா விக்கியில் tell us about your Wikipedia எனும் பகுதியில் திராவிட மொழிகள் பிரிவில் மலையாளம் மற்றும் தெலுங்கு விக்கிப்பீடியாக்களைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி இன்னும் சொல்லப்படவில்லை. இங்கு[[2]] அழுத்தி அங்கு செல்லலாம்.--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 17:19, 23 நவம்பர் 2010 (UTC)
சற்று திருத்தி, விரிவாக்கியுள்ளேன்.--இரவி 11:20, 24 நவம்பர் 2010 (UTC) Indian states keen to help teach mother tongues in SAஇந்திய விக்கி தரவுகள்http://stats.wikimedia.org/EN_India/Sitemap.htm - வருகை அடிப்படையில் தமிழ் இரண்டாம் இடத்தில் உள்ளது நன்று. ஒரு மணிநேரத்துக்கு மூவாயிரத்துக்கு மேலாகத் தமிழ் விக்கிப் பக்கங்கள் பார்க்கப்படுகின்றன. ஒரு மில்லியன் தமிழர்களுக்கு ஒரு தமிழ் விக்கிப்பீடியர் என்ற அளவு தான் இருப்பதை நோக்கலாம். சமக்கிருதம், மலையாளம், சிங்களம் முதலியன நமக்கு முன்னே உள்ளன. -- சுந்தர் \பேச்சு 09:19, 24 நவம்பர் 2010 (UTC)
மொத்த பைட் அளவு, மொத்த வார்த்தை அளவு இவ்விரண்டும் கூகுள் குப்பையாக்கம் திட்டம் நடந்துள்ள / நடைபெற்றுள்ள விக்கிகளின் தரவுகளை கொஞ்சம் ஏற்றிக் காண்பிக்கின்றன். எ.கா. இந்தியிலும், கன்னடத்திலும் இன்னும் கூகுள் அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த மொத்த பைட்/அளவை கொஞ்சம் விட்டுவைப்பது நல்லது. மலையாள விக்கி எல்லாவற்றிலும் முன்னிற்பதுக்கு காரணம் இரண்டு - 1) சராசரி பைட் அளவு 2) ஒரு கட்டுரை எவ்வளவு முறை எவ்வளவு பயனர்களால் தொகுக்கப்படுகிறது என்பது (கூட்டு முயற்சியின் அடையாளமாக). ஆள் பலத்தில் நாமும் மலையாளமும் சரிநிகர் அளவில் உள்ளோம். தொடர் பங்காளிப்பாளர் பட்டியல்கள் இங்கே. இந்தி, மராத்தி , தெலுங்கு விக்கிகள் தமிழ் மலையாளம் அளவுக்கு ஆள்பலம் கொண்டவை அல்ல. நம்மில் பாதி தான் அங்கே பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள். அதுவும் மராத்தி விக்கியில் வெறும் தலைப்புடன் ஒரு பத்தாயிரம் கட்டுரைகள் இருக்கின்றன. (ஒரு வரி கூட கிடையாது). வெறும் தலைப்பு மட்டுமே. சமூகத்தை வளர்ப்பதில் தமிழும், மலையாளமும் கொண்டுள்ள வெற்றி அவர்களுக்கு கிட்டவில்லை என நினைக்கிறேன். கன்னடம் இதில் எல்லாவற்றிலும் பின் தங்கி உள்ளது. ஒரு கட்டுரைக்கு எவ்வளவு தொகுப்புகள் / எத்தனை பேர் என்பதில் மலையாளம் நம்முடன் இருமடங்கு உள்ளார்கள். கட்டுரைகளை திட்டமிட்டு கூட்டு முயற்சியுடன் உருவாக்குகிறார்கள் என்று நினைக்கிறேன். இது ஒரு சரியான அளவுகொலல்ல என்பது என் கருத்து. ஏனென்றால் த. விக்கியில் இத்தகைய கூட்டு முயற்சி இல்லாதது கட்டுரைகளில் டைவர்சிட்டியியை கூட்டியுள்ளது (பெரும்பாலும் நாமனைவரும் தனித் தனித் கடைகளில் டீ ஆற்றிக் கொண்டிருப்பது பல துறைக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளது). மேலும் விக்கியாக்கத்தில் நமது தொடர்பங்காளிப்பாளர்கள் கொண்டுள்ள தேர்ச்சி, முழு கட்டுரையையும் ஒரே கிளிக்கில் சேர்ப்பது போன்ற வேலைகளால் நமது ஆழம் குறைந்தள்ளது போன்ற தோற்றமுள்ளது. --சோடாபாட்டில் 04:38, 25 நவம்பர் 2010 (UTC)
சோடாபாட்டில் சொன்ன மாதிரி நாம் பலரும் ஒரே சொடுக்கில் முழுமையான கட்டுரைகளை ஏற்றுகிறோம் (கூகுள் திட்டம் உட்பட). தவிர, Depths above 300 for Wikipedias below 100 000 articles have been automatically dismissed as irrelevant என்று http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias பக்கத்தில் குறிப்பிடுகிறார்கள். எனவே, தரவு குறிப்பிடும் ஆழம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால், மலையாள விக்கி பயனர் சமூகம் நம்மை விட 3 மடங்காவது பெரிதாகவும், முனைப்புடையதாகவும், பல்வேறு திறன் பொருந்தியதாகவும் இருப்பது கண்கூடு. கணிசமானோர் இளைஞர்கள், மாணவர்கள். கேரள அரசுடன் இணைந்து மாவட்டம் தோறும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துகிறார்கள். தொலைநோக்கில், இது அவர்கள் விக்கியின் வளர்ச்சியில் பெரிதும் உதவும். தமிழ் விக்கியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு: 1. பயனர் சமூகத்தை வளர்ப்பது 2. ஏற்கனவே இருக்கிற அறிவு மூலங்களை விக்கியில் இணைப்பது ஆகிய இரண்டு நடவடிக்கைகள் மிகவும் உதவும்--இரவி 12:05, 25 நவம்பர் 2010 (UTC)
மேலோட்டமாகப் பார்த்தால் தரவுகளில் இருந்து ஓரளவு உண்மைகளை மட்டுமே அறிந்து கொள்ள முடியும். முக்கியமாக "ஆழம்" பல்வேறு வழிகளில் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு. தமிழ் விக்கியில் இப்போதிருக்கும் நிலையில் தமிழ் விக்கியில் உடனடியாக 1000 கட்டுரைகளைக் கூட்டினால் "ஆழம்" 2.5 புள்ளிகள் இறங்கிவிடும். ஆனால் கட்டுரை எண்ணிக்கையை மாற்றாமல் இதே ஆயிரம் பேச்சுப் பக்கங்களைத் திறந்து விட்டால் அல்லது 1000 வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கினால் "ஆழம்" 1.0 புள்ளி கூடும். இதே ஒரு புள்ளியைத் தொகுப்புக்கள் செய்வதன் மூலம் கூட்ட வேண்டின் 18,000 தொகுப்புக்கள் செய்யவேண்டியிருக்கும். எனவே இந்த ஆழம் என்னும் அளவீடு நியாயமானதாக எனக்குத் தெரியவில்லை. திட்டமிட்டுக் குறுக்கு வழியிலும் கூட இதை அதிகரிக்க முடியும். மலையாள விக்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அங்கே பல பயனர்கள் சிறப்பாகப் பணியாற்றுவதும் இதற்குக் காரணம் எனலாம். இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு கிழமையில் 6 விக்கிப் பட்டறைகள் கேரளா முழுவதும் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு பட்டறையிலும் சராசரியாக 50 பேர் வரை கலந்து கொள்வதாகவும் அறிந்தேன் சில இடங்களில் 70-75 பேர் வரை ஆர்வமாகக் கலந்து கொள்கிறார்களாம். இவ்வாறான ஒரு பரவலான மக்கள் விழிப்புணர்வு தமிழ் விக்கிப்பீடியா குறித்து இன்னும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழ் உணர்ச்சி தமிழர்களுக்கு அதிகம். ஆனாலும் அதைப் பயனுள்ள வகையில் வெளிப்படுவது குறைவு. இந்த ஒப்பீடுகளில் நாம் சிங்கள விக்கியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் வேகமாக வளர்ந்து வருகிறது. சென்ற மாதம் மட்டும் 43 புதிய பங்களிப்பாளர்கள் இணைந்திருக்கிறார்கள். தொகுப்புக்கள் 82% அதிகரித்துள்ளது. தமிழிலும் அண்மைக் காலங்களில் சற்று வேகமான வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை ஆனாலும் புதிய பங்களிப்பாளர்கள் இணையும் வேகம் போதாது. கல்லூரி மாணவர்கள் மட்டத்தில் பல பங்களிப்பாளர்கள் தேவை. பலருக்குத் தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்க்கவே முடியாதிருப்பதாக மலையாள விக்கியர் சிஜு ஒருமுறை சொன்னார். பலர் தமிழ் விக்கி பற்றித் தெரிந்து கொள்ளாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். புள்ளிவிவர அடிப்படையிலும் தமிழ் தலை நிமிர்ந்தே நிற்கிறது எனினும் புள்ளிவிவரங்களுக்கும் அப்பால் சென்று நல்ல தரமான பல கட்டுரைகளைக் கொண்டதாகத் தமிழ் விக்கி வளர வேண்டும். --மயூரநாதன் 11:42, 26 நவம்பர் 2010 (UTC) குறுந்தட்டில் தேர்ந்தெடுத்த கட்டுரைகளும் தமிழ் விக்சனரியும்தேர்ந்தெடுத்த தமிழ் விக்கி கட்டுரைகளையும் விக்சனரிப் பக்கங்களையும் தொகுத்து மாணவர்களுக்கான குறுந்தட்டு ஒன்றை வெளியிடுவதற்கு விக்கிமீடியா அலுவலர் Jessie Wild உதவ விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உரையாடல்களைக் காண http://lists.wikimedia.org/pipermail/wikita-l/2010-November/thread.html#12 என்ற மடலிழையைப் படியுங்கள். ஏற்கனவே இலினக்சு குழுமத்தினர் உதவியுடன் இதற்கான திட்டத்தைத் தொடங்கியிருந்தோம், நற்கீரனுடைய நண்பர் ஒருவரும் பண உதவி அளிக்க இசைந்திருந்தார். அதனால், இத்திட்டத்தை முடுக்கி விட இது சரியான நேரமாகும். இத்திட்டத்துக்கு பொறுப்பாளராக எவரேனும் முன் வர வேண்டும். அதன்பின், ஒரு திட்டப்பக்கத்தை உருவாக்கிப் ப்பணிகளைத் தொடரலாம். -- சுந்தர் \பேச்சு 03:01, 25 நவம்பர் 2010 (UTC)
விக்கிமூலத்திலிருந்து பழந்தமிழ் இலக்கியங்கள் சேர்த்தல் நன்றாக இருக்கும். அனைத்து நூலகங்களிலும் இவை இருக்குமா என்பது சந்தேகம். இதன் மூலம் அரசையே கூட பண உதவி கேட்கலாம். ஸ்ரீகாந்த் 08:58, 25 நவம்பர் 2010 (UTC)
சுந்தர், இது ஒரு தமிழ் விக்கி அடையாளமாக இருக்கக்கூடிய படைப்பாக (flagship product?) என்பதால் சற்று பொதுவான தொகுப்பாக, அதே வேளை மாணவர்களுக்கும் உகந்ததாக உருவாக்கினால் போதும். எனவே, தமிழ்நாடு என்ற எல்லைக்குள் சுருக்கிக் கொள்ளத் தேவை இல்லை. தொகுப்பை உருவாக்கி விட்டால், பிறகு ஆதரவாளர்களின் விருப்பம் / வசதியைப் பொறுத்து அவரவர் பகுதிகளில் அச்சிட்டு வழங்கலாம். 500 கட்டுரைகள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவற்றைப் பதிப்புக்கு ஏற்றவாறு பிழை திருத்தி, இற்றைப்படுத்துவது மிகப் பெரும் பணி. 3 மாதம் காலம் போதுமா என்பது ஐயமே. தரத்தை உறுதிப்படுத்த கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளலாம். விக்கி மூலத்தில் இருந்து இலக்கியங்களைச் சேர்ப்பது நல்ல யோசனை--இரவி 11:44, 25 நவம்பர் 2010 (UTC)
தமிழ்த் தட்டச்சுப் பொறி சேர்ப்புவேறு எந்த மென்பொருளும் இல்லாமல், தமிழ் விக்கி தளத்தில் இருந்தே தமிழில் எழுதும் தட்டச்சுப் பொறி சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்99, தமிங்கில முறைகள் உள்ளன. அடுத்து இலங்கை சீர்தர முறையைச் சேர்க்க உதவி தேவைப்படுகிறது. தமிழ் விக்கி செய்திகள் தளத்திலும் இவ்வசதி சேர்க்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்துக்குப் பிறகு பிற தமிழ் விக்கித் திட்டங்களிலும் சேர்க்கலாம். இதன் மூலம் விக்கித் தேடலில் தமிழில் தேடவும், புதிய பயனர்கள் தமிழில் தொகுக்கவும் கூடுதல் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். இத்திட்டத்தின் விவரங்களை இங்கு காணலாம். அண்மைய தமிழ் விக்கி மாரத்தான் / சென்னை விக்கிச் சந்திப்பை அடுத்து மலையாள விக்கியர்களான சிச்சு அலெக்சு, சுனாயித் ஆகியோர் மலையாள விக்கியில் இருந்த நிரலைத் தமிழ் விக்கிக்கு மாற்றித் தர பெரு முயற்சி எடுத்தனர். அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்--இரவி 13:25, 25 நவம்பர் 2010 (UTC)
நற்கீரன், தாப், தாம், திசுக்கி ஆகியவை குறிமுறைகள். ஒருங்குறி போல. விக்கிப்பீடியா ஒருங்குறியிலேயே இயங்குகிறது. தவிர, நாம் இப்போது சேர்த்திருப்பன விசைப்பலகை அமைப்புகள். அதற்கும் குறிமுறைக்கும் தொடர்பு இல்லை. பாமினி (இலங்கை சீர்தர விசைப்பலகை) கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். அதை அறிந்தோர் உதவி தேவை. விக்கிக்கு வெளியே உள்ள நண்பர்களிடமும் கேட்டுப் பார்க்கிறேன். --இரவி 04:29, 26 நவம்பர் 2010 (UTC)
தட்டச்சு வசதி அருமை. அற்புதம். புகுபதிகை செய்யும் இடத்தில் இவ்வசதி இயங்கவில்லை. அதனால் புகுபதிகை செய்ய, தேடு சாளரத்தில் தட்டச்சி, அதையெடுத்து புகுபதிகை செய்ய வேண்டியுள்ளது. இவ்வசதி மூலம் உபுண்டுவிலும் தட்டச்ச எளிமையாக இருக்கிறது. பல நேரங்களில் தட்டச்சும் போது, ஏற்கனவே தட்டச்சிய வரிகள் துடித்து மறைந்து, பிறகு வருகிறது. இயல்பிருப்பாக சிறந்த தமிழ்99தட்டச்சும் வசதி, தெரிவு செய்து இருப்பின் நன்றாக இருக்கும். தமிழ்99 இருப்பின் நன்றாக இருக்கும். தட்டச்சுப் பலகையும் தோன்றுமாறு செய்தால், பலருக்கும் கற்க ஏதுவாகும். இவ்வசதிக்காக உழைப்பவர்கள் அனவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரியப் படுத்தவிரும்புகிறேன். --த* உழவன் 07:24, 29 நவம்பர் 2010 (UTC)
விக்கி குறுஞ்சுட்டி சேவை![]() நாம் விக்கிப்பக்கத்தின் சுட்டியை வெளியே பகிர்ந்துகொள்ளும் போது சுட்டியிலுள்ள தமிழ் எழுத்துக்கள் ஒருங்குறி இலக்கங்களாக மாற்றி அவற்றை நீளப்படுத்தி அசிங்கப்படுத்துகின்றன.சில மாதங்களுக்கு முன்னர் en:User:Mountain, இதற்காக ஓர் சேவை தொடங்கினார். நான் இப்போது தான் அவர் தூதரகத்தில் விட்ட செய்தியை பார்த்தேன்.ஒரு வரி நிரலை பயன்ர்வேளியிலுள்ள vector.js கோப்பில் போட்டால் பக்கத்திற்கான குறுஞ்சுட்டி தானாக வந்துவிடும். பக்கத்தில் மேற்புறம் வேண்டுமானால்(1) பயனர்:Logicwiki/shorturl.js யும், தலைப்பிற்கு அருகில் வேண்டுமானால்(2) பயனர்:Mountain/shorturl.js யும் உங்களின் vector.js கோப்பில் பயன்படுத்தினால் இந்த சேவையை பயன்படுத்தலாம். இது அனைவருக்கும் பயன்படுமேயானால் தள அளவில் கூட இந்த மாற்றத்தை செய்யலாம்.வேண்டுமானால் நாமும் ஆங்கில விக்கி போல் tawp.org போன்ற பெயரை வாங்கி இதனைப் பயன்படுத்தலாம். ஸ்ரீகாந்த் 15:52, 26 நவம்பர் 2010 (UTC)
இது எல்லா விக்கிமீடியா திட்டங்களுக்குமே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், பேசாமல் விக்கிமீடியாவே எல்லா திட்டங்களிலும் இதை நிறுவுமாறு வேண்டினால் நல்லது--இரவி 18:11, 29 நவம்பர் 2010 (UTC) |
Portal di Ensiklopedia Dunia