Hi everyone, I wanted to inform everyone about the ongoing Contribute campaign for this year's fundraiser. As part of the campaign, we want to drive up participation on the Indian language Wikipedias, We have created a page on Meta where we can discuss and brainstorm Ideas on what we can do to improve Indian Language Wikipedias. I would like to invite anyone who is interested in contributing to join in, and share their thoughts. Thank you.
[1]Theo (WMF)17:55, 30 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
கட்டுரைத் தலைப்பு சிறு வேண்டுகோள்
தமிழ் விக்கிப்பீடியாவில் பொதுவான தலைப்புகள் தவிர திரைப்படம், நூல் போன்ற பிற கட்டுரைகளுக்கு தலைப்பிடும் போது தலைப்புடன் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்ட பிரிவைச் சேர்த்து விடுவது நல்லது. உதாரணமாக; வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் கட்டுரை பொதுவானது. இதை வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பொதுவான தலைப்பு வைக்கலாம். வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்த நூலாக இருந்தால் வீரபாண்டிய கட்டபொம்மன் (நூல்) என்றும், வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்த திரைப்படமாக இருந்தால் வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்) என்றும் முன்பே கட்டுரைப் பெயர் வைத்து விட்டால் நல்லது. இதற்கென விக்கிப்பீடியாவில் சில குறிப்புகள் தரப்பட்டிருந்தாலும் சிலர் கவனிக்காமல் உள்ளனர். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் பல திரைப்படங்கள் குறித்த கட்டுரை சேர்க்கப்பட்டு வருகிறது. இதைத் தொடக்கத்திலேயே திரைப்படப் பெயர் (திரைப்படம்) என்று பிரித்து விடுவது நல்லது என நான் கருதுகிறேன். நான் சொல்வது சரியா? கருத்தளித்திட வேண்டுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி.15:55, 1 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
உண்மைதான், இப்பொழுது தமிழ் விக்கியில் உள்ள பல திரைப்படக் கட்டுரைகள் வேறு பொதுவான விடயங்களைக் குறிக்கும் பெயர்களில் உள்ளன. அவற்றையும் கவனித்து அடைப்புக்குறிக்குள் "திரைப்படம்" என்பதையும் சேர்க்கவேண்டும். ---மயூரநாதன்18:14, 1 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
தேனியார் அனைத்துத் திரைப்படக் கட்டுரைகளுக்கும் (திரைப்படம்) என்பதைச் சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டத்தட்ட 2500 திரைப்படக் கட்டுரைகள் உள்ளன. இவையனைத்தையும் மாற்றுவது கடுமையான காரியம். பொதுவான தலைப்புகள் இருந்தால் அவற்றை மாற்றி விடுங்கள்.--Kanags\உரையாடுக20:26, 1 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
ஒரே தலைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் குறித்த கட்டுரைகள் இருக்கக்கூடும் என்றால் மட்டும் அடைப்புக்குறிகள் பயன்படுத்துவது நல்லது. தேவையில்லாமல் முன்கூட்டியே அடைப்புக்குறிகள் பயன்படுத்துவது தேடுவதற்கும், பிற இடங்களில் இருந்து இணைப்பு தருவதற்கும், உலாவி முகவரிப் புலத்தில் இருந்து நேரடியாக கட்டுரையைப் பார்க்க முயல்வதற்கும் உகந்தது அல்ல.--இரவி07:13, 2 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவில் முன்பே இடம் பெற்றுள்ள திரைப்படம், நூல் குறித்த கட்டுரைகள் பார்வைக்கு வரும் பொழுது தலைப்பை மாற்றம் செய்யலாம். ஆனால் இனிவரும் திரைப்படம், நூல் போன்ற கட்டுரைகளின் தலைப்பில் அடைப்புக் குறிக்குள் குறிப்பிடுவதே நல்லது. அடைப்புக் குறிக்குள் திரைப்படம், நூல் பெயர்கள் குறிப்பிட்டாலும் தேடுதலில் வரும். மேலும் ஏதாவது பொதுவான தலைப்பில் தேடி அந்தத் தலைப்பிலான கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிறது என்கிற எண்ணத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வந்து, அவர்கள் தேடி வந்த தகவல் இல்லாமல் திரைப்படம் குறித்த தகவல் இருப்பது சரியானதுமல்ல. எனவே இனி வரும் காலங்களில் திரைப்படம், நூல் போன்ற கட்டுரைகளில் அடைப்புக் குறிக்குள் அவை குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருபவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க வேண்டும். வணிக நோக்கில் செயல்படும் இணையதளங்கள் எப்படியாவது தங்கள் பக்கத்திற்கு வரவேண்டும் என்கிற நோக்கில் செயல்படலாம். ஆனால் தமிழ் விக்கிப்பீடியா....?--தேனி.எம்.சுப்பிரமணி.14:24, 2 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
disambiguation -அடைப்புகளுள் கொடுத்தல் என்பது பொதுப் பெயர்களில் உள்ள நூல்களுக்கும்/திரைப்படங்களுக்கும் மட்டும் போதும். அனைத்து திரைப்படங்களுக்கும், நூல்களுக்கும் அடைப்பு கொடுப்பது தேவையற்றது. எத்தலைப்புக்கும், அப்பெயரில் வேறு கட்டுரைகள் ஏற்படக் கூடும் என்ற வாய்ப்பிருந்தால் மட்டுமே அடைப்புகள் தேவை. இல்லையெனில் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் அடைப்பு வேண்டுமென்ற கொள்கை நிறைய வேலைகளை உருவாக்கும். உள்ளிணைப்புகள் கொடுப்பதிலும் இது சிக்கல்களை ஏற்படுத்தும். ஏற்கனவே உள்ளிணைப்புகள் மிகக் குறைவாக உள்ள த. விக்கியில் இது மேலும் குழப்பத்தையே உருவாக்கும். தேடி வருபவர்களின் எதிர்பார்ப்புகள் என்று பொதுவாகச் சொல்ல முடியாது. தேடு பொறியில் கட்டுரையின் முதலிரண்டு வரிகள் தெளிவாகத் தெரிகின்றன. அதிலிருந்தே அவை நூலா, திரைப்படமா, என்று அவர்களால் தெரிந்து கொள்ள முடியும். அவற்றையும் மீறி இங்கு வருபவர்கள் அவசரத்தில் வருபவர்கள். அனைவரையும் திருப்திப் படுத்துவது என்பது இயலாத காரியம். எனவே பொதுப்பெயரில் இருக்கும் நூல்களுக்கும், திரைப்படங்களுக்கும் மட்டும் போதுமானது. மற்றைவைக்கு அடைப்புகளுக்குள் கொடுக்கத் தேவையில்லை.--சோடாபாட்டில்14:47, 2 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
தானியங்கிக் கட்டுரைகள்
மாதங்கள் சிலவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டுவிட்டதால் தானியங்கி கட்டுரைகள் (குறிப்பாக முதற் பக்கத்தில் இடம்பெறும் சில கட்டுரைகள்) தொடர்பற்று சிவப்பு இணைப்பாகத் தெரியலாம். அவற்றைக் கவனித்து புதிய பெயருக்கு மாற்றப்படவேண்டும். மாற்றும் போது தயவு செய்து பழைய கட்டுரையை நீக்காதீர்கள். டிசம்பரைத் தவிர வேறு எந்த மாதங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன? --Kanags\உரையாடுக07:25, 2 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா தனது பத்தாவது ஆண்டு நிறைவை வரும் சனவரி திங்கள் 15ஆம் நாள் கொண்டாட உள்ளது. இதில் நாள் முழுதும் உலகம் முழுதும் பல இடங்களில் பல விதமான நிகழ்வுகள் (விக்கிப்பீடியா அறிமுகம், கட்டுரை மாரத்தான் போன்ற பல) நடைபெற உள்ளதை இந்த இணைய தளத்தின் மூலம் அறிந்தேன். இதில் ஆசியக் கண்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் நாடுகள் வரிசையில் நமது சென்னை இடம்பெறவில்லை. (நாம் இடம்பெறச் செய்யவில்லை!) எனவே நிர்வாகிகளும் இன்ன பிற விக்கி முன்னோடிகளும் இங்கு கலந்தாலோசித்து என்னென்ன மாதிரியான நிகழ்வுகள் நடத்தலாம் என்று முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அந்நாள் தமிழகத்தில் பொங்கல் விடுமுறை என்பதால் நம் அனைவராலும் ஒன்றாகப் பங்கேற்க முடியாமலும் போகலாம். (?) எவ்வாறேனும் அந்த நாளில் சென்னையில் ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால் த.வி. மேலும் பிரபலமடையும் என்று சிறுவன் கருதுகிறேன். எனவே நாம் ஆவன செய்ய வேண்டும். அந்நாளை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.
சூரிய பிரகாசு, கருத்துக்கு மிக்க நன்றி, நாமும் பயனுடைய சிலவற்றைச் செய்யலாமே. விக்கிப் பட்டறை நடத்தலாம், தமிழ் விக்கியைப்பற்றியும் பரப்புரை செய்யலாம். ஒரு மாத காலம் உள்ளதால், சில நிகழ்ச்சிகளை நடத்த முயலலாம். இங்கே கனடாவிலேயும் பிற நாடுகளிலும் நடத்தலாம். 10 ஆம் ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாட முயலுவோம்.--செல்வா01:51, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் சுப்பிரமணி. இலங்கைப் பயனர் புண்ணியாமீன் இது போன்று ஒரு நூலைத் தேடிக் கொண்டிருப்பதாக அவர் பயனர் பக்கத்தில் இட்டிருந்தார். தமிழகத்து வெளியே இதை எப்படிப் வாங்குவது என்ற விவரத்தையும் இங்கு தாருங்கள். பயனுள்ளதாக இருக்கும்.--சோடாபாட்டில்07:49, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் சுப்பிரமணி. இந்நூல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிய பங்களிப்பாளர்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம். இன்று துபாயில் விக்கிமீடியா பவுண்டேசன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சூ கார்ட்னருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த நூல் பற்றிச் சொன்னேன். எங்கே வாங்கலாம் என்று கேட்டார். ---மயூரநாதன்18:30, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் தேனி சுப்பிரமணி! மிகவும் எடுப்பான முகப்பு, விற்பனையிலும் விளையும் நற்பயனிலும் சிறப்பான வெற்றி பெற நல்வாழ்த்துகள். எங்கே கிடைக்கும் என மேலே சிலர் கேட்ட கேள்விகளுக்கு, தேனி சுப்பிரமணி தனி மடலில் எழுதியிருந்த தகவலைக் கீழே தருகின்றேன்:
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001 (தொலைபேசி: 04144-230069)
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108 (தொலைபேசி: 044-25361039)
6, சிவஞானம் தெரு, தி.நகர், சென்னை - 600 017 (தொலைபேசி: 044-24357832)
110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001 (தொலைபேசி: 0452-2622853)
15, ராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001 (தொலைபேசி: 0422-2397155)
296/134, செரி சாலை, சேலம் - 636 007 (தொலைபேசி: 0427-3207722)
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002 (தொலைபேசி: 0431-2706450)
வாழ்த்துகள் சுப்பிரமணி. விரைவில் வாங்கிப் படிக்கிறேன். இதன் வழியாகப் பலரும் தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிந்து நம் தளத்துக்கு வர வேண்டும். -- சுந்தர்\பேச்சு06:24, 6 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
இன்று விக்கிமீடியா பவுண்டேசனின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சூ கார்ட்னர், நிறைவேற்று உதவியாளர் சேம்சு ஓவென் ஆகியோருடன் ஒரு சந்திப்பு துபாய் ரடிசன் புளு விடுதியில் இடம்பெற்றது. ஐந்து விக்கிப்பீடியர்கள் மட்டுமே கலந்து கொண்டோம். ஒருவர் சிரிய நாட்டவர் விக்கிமீடியா காமன்சுக்குப் பங்களிப்பவர், இன்னொருவர் Qayyum பாக்கிசுத்தானியர் இவர் ஆங்கில விக்கிப் பங்களிப்பாளர். ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆங்கிலம், மலையாளம் இரண்டுக்கும் பங்களிப்பவர். தமிழ் விக்கியிலிருந்து ஹிபாயத்துல்லாவும் நானும் கலந்து கொண்டோம். இரண்டரை மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இச் சந்திப்பின் போது எடுத்த படங்களை அருகில் காணலாம்.
தமிழ் விக்கிப்பீடியா பற்றிப் பல விடயங்களையும் கேட்டு அறிந்தார். கூகிள் மொழி பெயர்ப்புத் திட்டம் தொடர்பான பிரச்சினைகள், தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடத்திய கட்டுரைப்போட்டி போன்ற பல விடயங்களையும் ஆர்வமுடன் கேட்டுக் குறித்துக்கொண்டார். சுந்தரை பெங்களூரில் சந்தித்ததையும் நினைவு கூர்ந்தார்.
செய்திக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி மயூரநாதன். இப்படிப் பல இடங்களில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய கருத்துகளை விக்கிமீடியா பொறுப்பாளர்களிடம் தெரிவித்து வருவது மிகவும் பயனுடையது. கலந்துகொண்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் இபயத்துல்லா, மயூரநாதன் ஆகிய இருவருக்கும் நன்றி. --செல்வா02:20, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி மயூரநாதன். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நம் தளத்தைப் பற்றிய நன்மதிப்பு மிகும். இபயதுல்லாவுக்கும் மயூரநாதனுக்கும் நன்றி. -- சுந்தர்\பேச்சு06:26, 6 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
உதவி
தன்வரலாற்றுக் கட்டுரை ஒன்றை நீக்கியதால் அந்த எழுத்தாளர் (பயனர் பேச்சு:முகில் பதிப்பகம்) கோபம் கொண்டுள்ளார். உரையாடல்களில் சற்று கடுமை தெரிகிறது. இது எனக்கும் அவருக்குமான தனிப்பட்ட பிரச்சனை போல எடுத்துக்கொண்டுள்ளார். வேறு யாரேனும் அவருடன் பேசிப்பார்ப்பதனால் பாருங்களேன்.--சோடாபாட்டில்16:03, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
கவிஞர் வித்யாசாகர் எனது முத்துக்கமலம் இணைய இதழில் தொடர்ந்து பங்களித்து வருபவர்தான் நான் அவருக்கு விக்கிப்பீடியா கொள்கையை விளக்க முயற்சிக்கிறேன். அவருடைய மின்னஞ்சலுக்கு தனிக் கடிதம் அனுப்புகிறேன். விக்கிப்பீடியா கொள்கைகள் அவருக்குப் புரியாமல் இருப்பதால் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை அடுத்து ஏற்பட்டுள்ள எழுத்து வாதங்களை இருவரும் தொடராமல் இருக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி.17:08, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி சுப்பிரமணி. அவருடைய கட்டுரையை நீங்களே கூட உருவாக்கலாம் . நான் இந்த விவாதத்தில் தொடர்புடையவன் என்பதால் நான் உருவாக்க விரும்பவில்லை. --சோடாபாட்டில்17:11, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
பதிப்பகம் அல்லது நிறுவனம் பற்றிய பொதுத் தகவல்களை, விளம்பரம் அற்ற முறையில் இங்கு அவர்களே பதிவது விக்கி முறைகளுக்கு முரணானதா என்பது பற்றி எனக்கும் விளக்கம் போதவில்லை. தனிநபர்கள்க்கு அந்த விதி உள்ளது அறிவேன். --Natkeeran18:54, 5 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
கட்டுரைகளுக்கு வார்ப்புருக்களை உருவாக்குவதில் சில சிரமங்கள் இருப்பதை குறைப்பதற்காக இந்தக் கருவியை ஆரம்பித்திருக்கிறேன். இதனை சோதித்து எந்தெந்த வார்ப்புருக்கள் இந்த கருவியில் சேர்க்கலாம் என்று கருத்து தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கருவியை நிறுவ உங்களது தோலில் (அதாவது பயனர்:பயனர்பெயர்/vector.js பக்கம்) சென்று ஜாவாஸ்கிரிப்ட் திறந்து importScript("User:Mahir78/template_helper.js"); ஒட்டவும், பிறகு ctrl+f5 அல்லது உங்களது கேசை நீக்கியபிறகு, ஏதேனும் கட்டுரையைத் தொகுத்தால் பெட்டிக்கு மேலே Template Helper checkbox வரும் அதனை சொடுக்கினால் கருவி திறக்கும். நன்றி - மாஹிர்18:51, 8 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மாகிர் சிறந்த முயற்சி. தமிழ்நாட்டிலுள்ள long lat கொடுத்தால் தமிழகமாவட்டங்கள் படம் வராமல் இந்திய வரைபடம் தான் தெரிகிறிது. தற்போதுள்ள வார்ப்புருவில் தமிழ்நாட்டு படம் வருகிறது. தொடுவானம், தொடுவானம்_தலைப்பு என்பது அந்த நகரம் தொடர்பான படம் இணைப்பு தொடர்பானது தானே? ஆனால் படிமம் இணைப்பதற்கான வரிகள் இல்லை. தொலைபேசி பற்றிய தகவல் கொடுத்தாலும் அது வார்ப்புருவில் தெரியவில்லை. தமிழக மாவட்ட தகவல்சட்டம், Infobox Film, தகவல்சட்டம் நடிகர், Infobox Indian politician, Infobox Person போன்றவை தேவை. --குறும்பன்01:53, 9 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
குறும்பன், மேற்கண்ட வழுவை வார்ப்புருவில் திருத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்ட வார்ப்புருக்களையும் சேர்த்திருக்கிறேன். -- மாஹிர்07:24, 14 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
குறும்பம், மாநிலம் = தமிழ் நாடு (இடைவெளி தேவை) என்று கொடுத்தால் சரியாக காட்டுகிறது. (இந்த கருவி கொண்டு விரைந்து சோதிக்க உதவியது)-- மாஹிர்08:17, 19 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
இதை எப்படிப் பயன்படுத்துவது என்று சற்றே விளக்கமாகக் கூற வேண்டும். எனக்குப் புரியவில்லை. எங்கு ஒட்ட வேண்டும் என்று தெரியவில்லை! அருள் கூருந்து அதற்கான பதில்களை இங்கு தாருங்கள் அல்லது அதற்கான screen shot சேர்க்கவும்.
மாகிர், நல்ல முயற்சி. நான் உங்கள் நீட்சியைப் பயன்படுத்த முயன்றபோது, செயலி வரவில்லை. குறிப்பிட்ட மீடியாவிக்கி தோல்களில் மட்டும்தான் அது வேலை செய்யுமா? Taxobox வார்ப்புருவும் மிகத் தேவையான ஒன்று. -- சுந்தர்\பேச்சு11:53, 16 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
சுந்தர், நமக்குத் தேவையான வார்ப்புருக்களை இப்படி சேர்த்துக்கொள்ளலாம். நமது vector.js அல்லது monobook.js (இன்னும் சோதிக்கவில்லை) பக்கங்களுக்கு சென்று
var UserTemplates=["Taxobox","NewTemplate1","New Template2"];//etc.. இரண்டு வார்ப்புருக்களுக்கிடையில் கமா சேர்க்கவும்
importScript('User:Mahir78/template_helper.js');
பதிந்தால் மேற்கண்ட வார்ப்புருக்களின் கருவியில் இணைந்துவிடும். ஒரு திருத்தமாக நீங்கள் உங்களது வார்ப்புவில் துணைப்பக்கமாக default என்கிற பக்கத்தை புதிதாக உருவாக்கவேண்டும். உதாரணமாக, வார்ப்புரு:Taxobox/default சென்று வார்ப்புருவின் structure <pre></pre> or <nowiki></nowiki> tag கொண்டு பதியவேண்டும். -- மாஹிர்08:17, 19 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
சென்னை விக்கி மடற்குழு
சென்னையில் தொடர்ந்து விக்கிமீடியா சந்திப்புகள் நடைபெற / விக்கி சமூகம் கலந்துரையாடுவதற்கு எதுவாக ஓர் மடற்குழு தொடங்கப்பட்டுள்ளது.நீங்கள் சென்னையில் / அருகில் இருந்தால் அவசியம் சேர்ந்து பங்களிக்க அழைக்கிறேன். நன்றி ஸ்ரீகாந்த்02:37, 9 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நான் இந்த மடற்குழுவில் இணைந்துள்ளேன். சனவரி 15/16 நாட்களில் விக்கிப்பீடியாவின் பத்தாவது ஆண்டுதினக் கொண்டாட்டங்களின் அங்கமாக ஓர் விக்கி சந்திப்பு/பட்டறை நடத்த எண்ணி | இந்தப் பக்கம் உருவாக்கியுள்ளோம். சென்னை விக்கிப்பீடியர்கள் இந்த மடற்குழுவில் இணைந்து உரையாடினால் ஒருங்கிணைக்க உதவியாக இருக்கும்.--மணியன்05:03, 15 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவின் மேல்பகுதியில் "டிசம்பர் 28, 2010 இலங்கை கிழக்குப் பலகலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை" என்று இருப்பதை "இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்- தமிழ் விக்கிப்பீடியா பட்டறை (திசம்பர் 28, 2010) " என்று மாற்றம் செய்யலாம். அல்லது பலகலைக்கழகம் என்கிற எழுத்துப் பிழை இல்லாமலாவது செய்யலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி.05:53, 11 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
10வது விக்கிப்பீடியா பிறந்த நாளுக்கு உங்கள் கதை
உலகெங்கும் விக்கிப்பீடியாவின் 10வது பிறந்தநாள் சனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதன் ஓர் பகுதியாக விக்கிமீடியா உங்கள் கதையை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. விக்கிப்பீடியாவும் நம் வாழ்வில் எப்படி ஓர் அங்கமாய் திகழ்கிறது,நம் கொள்கைகள்,நோக்கம்,பயன்பேற்ற விதம்,நம் பங்களிப்புகள் போன்ற அனுபவத்தை ஓர் சுவையான கதை போல் எழுதி வலைப்பூ மற்றும் நம் கதைகள் போன்ற இடங்களில் பதிவு செய்யலாம்.தமிழில் கட்டுரை இருப்பின்,நாம் ஊடகங்களுக்கும் அனுப்பி மக்களுக்கு விக்கிப்பீடியா பற்றி ஓர் புரிதலை ஏற்படுத்தலாம்.இதன் மூலம் விக்கி சமூகம் தழைக்கும் ஸ்ரீகாந்த்07:41, 12 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
திருத்தினோம் என்பது சரியா?
ஒவ்வொரு கட்டுரையிலும் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்யப்பட்ட பின்பு அந்தக் கட்டுரையின் கீழ் இப்பக்கத்தைக் கடைசியாக திசம்பர் 12, 2010, 08:32 மணிக்குத் திருத்தினோம். என்று இடம் பெறுகிறது. இந்த இடத்தில் இப்பக்கம் கடைசியாக திசம்பர் 12, 2010, 08:32 மணிக்குத் திருத்தப்பட்டுள்ளது. என்று இருப்பதுதான் சரியென எனக்குத் தோன்றுகிறது. மாற்ற இயலுமா...?--தேனி.எம்.சுப்பிரமணி.11:12, 12 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
இங்கு திருத்தினேன். ஏன் மாற்றம் தெரியவில்லை எனத் தெரியவில்லை. விக்கிப்பீடியா தவிர ஏனைய திட்டங்களில் மாற்றம் தெரிகிறது. திருத்தப்பட்டது, திருத்தப்பெற்றது எது சிறப்பானது என அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.--Kanags\உரையாடுக03:02, 18 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
எனக்கு திருத்தப்பட்டது என்பது சரியாகப்படுகிறது. தமிழகத்தில் சில நல்ல செயல்கள் குறித்த தகவல்களை எழுதும் போது பட்டது என்கிற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. பட்டது என்பது மரம் செடிகள் பட்டுப் போவதை (அழிவைக்) குறிக்கும் என்கிற மூடநம்பிக்கையில் பட்டது பயன்பாட்டைத் தவிர்த்து வருகிறார்கள். முட்டுவாஞ்சேரி நடராஜன் இந்த அடிப்படையில் சொல்லியிருக்கலாமோ...?--தேனி.எம்.சுப்பிரமணி.04:55, 18 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
திருத்தினோம் என்ற பயன்பாடு விக்கிபீடியாவின் கொள்கை, நடைமுறைகளை உணர்த்துவதற்கானதாக இருக்குமோ? நாமே இதனை உருவாக்குகிறோம்; நாமே திருத்தினோம் என்ற எண்ணம் வரும்படி இச்சொல்லாட்சி உள்ளதாகவே படுகிறது. --மு.மயூரன்20:15, 20 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மயூரன், கட்டுரையை நாம் எல்லோரும் சேர்ந்து உருவாக்குகிறோம். நம்மில் பலரும் அதை மாற்றுகிறோம் அல்லது திருத்துகிறோம். இங்கு கட்டுரையின் கீழ் இடம் பெறும் இப்பக்கம் கடைசியாக என்ற சொல் கடைசி மாற்றம் அல்லது திருத்தத்தையே குறிக்கிறது. இந்தக் கடைசி மாற்றம் யாராவது ஒருவரால் செய்யப்பட்டதுதான். எனவே இங்கு இப்பக்கம் கடைசியாக **** மணிக்குத் திருத்தப்பட்டது. என்பதே சரியானது என்பது என் கருத்து.--தேனி.எம்.சுப்பிரமணி.02:23, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
தங்கள் கருத்தோடு எனக்கு முரண்பாடு எதுவுமில்லை. தற்போது இருக்கும் வடிவத்தின் காரணம் இதுவாக இருக்கலாம் என்று சொன்னேன். அவ்வளவுதான் :) --மு.மயூரன்21:11, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மயூரன், இதை முரண்பாடாக நானும் எடுத்துக் கொள்ளவில்லை, தாங்களும் எடுத்துக் கொள்ள வேண்டாம். கட்டுரையின் பக்கங்களை ஒரே நாளில் பலர் திருத்தம் அல்லது மாற்றம் செய்திருந்தாலும் கடைசியாக செய்த மாற்றம் மட்டுமே கீழே செய்தியாக இடம்பெறுகிறது. இது ஒருமையாக இருப்பதால் இப்பக்கம் கடைசியாக **** மணிக்குத் திருத்தப்பட்டது. எனபது சரியானது. ஒரு கட்டுரை பலரால் மாற்றம் செய்யப்பட்டு கடைசியாக செய்யப்பட்ட ஒன்றிற்கு மேற்பட்ட மாற்றங்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றால் கூட, கடைசியாகச் செய்யப்பட்ட ஐந்து மாற்றங்கள் இடம் பெற்றாலும் ஒவ்வொரு மாற்றமும் இப்பக்கம் கடைசியாக **** மணிக்குத் திருத்தப்பட்டது. என்கிற வரிசைப்படி இடம் பெறலாமே தவிர இப்பக்கத்தைக் கடைசியாக **** திருத்தினோம். என்கிற செய்தி பொருத்தமற்றதே. --தேனி.எம்.சுப்பிரமணி.01:51, 22 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
இப்பக்கத்தைக் கடைசியாக **** திருத்தினோம். என்று நான் தான் எழுதினேன் என நினைக்கிறேன். தமிழில் கூடுமானவரை செயப்பாட்டு வினைகளைத் தவிர்ப்பது நன்று. திருத்தினோம் என்று சொல்வதன் மூலம் இது நமது திட்டம் என்ற உணர்வு வரும் என்று நினைக்கிறேன். இப்பக்கம் கடைசியாக **** மணிக்குத் திருத்தப்பட்டது. என்று இருப்பது சரியே. எனவே, மாற்றத்தை மீள்விக்க வேண்டாம்.--இரவி09:15, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நாம் ஒற்றுமையாகச் செயல்படும் உணர்வு இருக்க வேண்டியதுதான். நானும் வரவேற்கிறேன். ஆனால் இங்கு உணர்வை விட தவறு இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து தவறு சரி செய்யப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி.11:18, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மாற்ற(ம்) வேண்டும்
தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கங்களில் சில இடங்களிலுள்ள செய்திகள் மாற்ற(ம்) வேண்டியதாய் உள்ளது. சில இடங்களில் எழுத்துப் பிழையும், ஒற்றுப் பிழையும் உள்ளன. இவற்றையும் மாற்ற(ம்) வேண்டும். விக்கிப்பீடியா:இடைமுகப்பு பக்கத்தில் சில மாற்றங்கள் குறித்து தெரிவித்துள்ளேன். ஒரு சில மாற்றங்கள் சோடாபாட்டிலால் செய்யப்பட்டுள்ளது. கனக்ஸ், இந்தப் பக்கத்தில் சொல்லப்பட்ட, செய்யப்படாத மாற்றங்களை முடிந்தால் செய்யுங்களேன்...--தேனி.எம்.சுப்பிரமணி.11:56, 12 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
சிறந்த முயற்சிகள் / பங்களிப்புகள்
இந்திய விக்கி திட்டங்களில் சிறந்த திட்டங்கள் / கூட்டு முயற்சிகள் / தனி நபர் பங்களிப்புகளை ஒன்று திரட்ட ஓர் முயற்சி துவங்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கித்திட்டங்களின் சிறந்த முயற்சிகளை மூத்த தமிழ் விக்கியர்கள் தொகுத்தால் நன்றாக இருக்கும். ஸ்ரீகாந்த்19:28, 12 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
முகப்பு பக்கத்தில் எதோ சிக்கல், அது உருவாக்கப்படவில்லை என்ற பக்கம் வருகிறது.
முதற் பக்கம்?முகப்பு பக்கத்தில் எதோ சிக்கல், அது உருவாக்கப்படவில்லை என்ற பக்கம் வருகிறது. யாராவது இடைமுகத்தில் மாற்றாம் செய்தீர்களா? முதற் பக்கம் என்ற பக்கம் சரியாக வருகிறது. --Natkeeran05:08, 20 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
முகப்பு என்னும் பக்கத்தை தற்காலிகமாக “முதற் பக்கம்” என்னும் பக்கத்துக்கு வழிமாற்ற முடியுமா என்று பார்க்கலாம். மீடியாவிக்கியில் மாற்றி விட்டேன். நாளை இங்கு வந்து விடும்.--சோடாபாட்டில்06:05, 20 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
முகப்பு நல்ல சொல் என்பதால் அதைத் தேர்வு செய்தால் மாற்றுவழிக்குப் பதிலாக அந்தத் தலைப்பிலேயே உருவாக்குவது நலம். இல்லையெனில் முதல் பக்கம் உலாவியில் தோன்றுவதில் நேரம் பிடிக்கும். (இப்போதைக்கு இந்த மாற்றுவழித் தீர்வு பரவாயில்லை.) -- சுந்தர்\பேச்சு07:12, 20 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
தொகுத்தல் சாளரத்தில் அமைந்துள்ள தட்டச்சு வசதியில், நான் தமிழ்99 பின்பற்றுகிறேன். ஏற்கனவே நம் தமிழ் விக்கிபீடியாவிலிருக்கும் கட்டுரைகளோடு, இணைப்பைத் தரவல்ல (internal link facility- the third icon of our edit window) வசதியில், தமிழைத் தட்ட இயலவில்லை. இதனை சீர்படுத்த இயலுமா? அங்கும் தமிழைத் தட்டச்ச, வேறொரு முறையை பயன்படுத்த வேண்டியுள்ளது. --த* உழவன் 01:17, 25 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி. பயனுடைய அலசல், ஆவணம். தமிழ் மொழியாளர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள் உள்ளன. (சோடாபாட்டில் நீங்கள் இட்டதா?) --செல்வா01:15, 22 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
படம்
தற்போது தமிழகத்தில் நல்ல மழை பெய்திருப்பதால் படிம்ம் இல்லாத வைகை ஆறு, பவானி ஆறு, அமராவதி ஆறு, தாமிரபரணி, அவற்றின் அணைகள் போன்றவற்றின் படத்தை எடுத்து கட்டுரையுடன் இணைக்கலாம். --குறும்பன்19:42, 21 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மொழி விடயத்தில் சீனாவின் அணுகுமுறை மிக மோசமானது. பல சிறு மொழிகளை அழிவு நிலைக்குத் தள்ளி உள்ளது. இவர்களின் இந்த நிலைப்பாடு இவர்களின் சர்வதிகாரத்தின் ஒரு வெளிப்பாடே. --Natkeeran00:49, 23 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
அண்மைய கூட்டங்களும் சந்திப்புகளும்
அண்மையில் விக்கிமீடியா துணை இயக்குனர் எரிக்கு மோயலரும் தலைமை நுட்ப அலுவலர் டேனிசு கூப்பரும் இந்தியா வந்திருந்தனர். இவர்களைத் தனியாக ஒருமுறை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடைய பணிகளில் இந்திய விக்கித்திட்டங்கள் முன்னுரிமை பெற்றுள்ளது தெளிவாகத் தெரிந்தது. பல நுட்பச் சிக்கல்களைக் கேட்டறிந்தனர். (என்னைத் தவிர மேலும் சிலரையும் சந்தித்துள்ளனர்.) விரைவில் இந்தியாவில் மீடியாவிக்கிப் பணிகள் முடுக்கி விடப்படும் வாய்ப்புள்ளது. சிரீகாந்து, மாகிர், உமாபதி போன்றோர் இன்னும் கூடுதல் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என நினைக்கிறேன். நம் நுட்பப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். நமது தேவைகளையும் முன்னுரிமைகளையும் வரிசைப்படுத்த வேண்டும். (நுட்பப் பங்களிப்புகளில் மலையாள விக்கிப்பீடியர் பங்களிப்புகளைப் பற்றி பெரிய அளவு அறிமுகம் இருந்ததையும் கவனிக்க முடிந்தது.) எரிக்கு ஃவாசு.இன் மாநாட்டில் மீடியாவிக்கி மென்பொருளை அறிமுகப்படுத்தியபோதும் உடனிருந்து அறிந்து கொண்டேன். அதன் பின் நடந்த விக்கிப்பீடியர் கூட்டத்திலும் கலந்து கொண்டேன். -- சுந்தர்\பேச்சு11:44, 23 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
தொழில்நுட்ப மேம்பாடு : தங்களது செய்திக்கீற்று மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் பணிகளோடு, பின்வரும்
தொழில்நுட்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். பல தொழில்நுட்பங்கள் பிற விக்கிகளில், சிதறிக் கிடக்கின்றன. அவை நமக்கும் இருந்தால், மிக நன்றாக இருக்கும். எடுத்துக்காட்டு fr:Basiliscus basiliscus என்ற பிரான்சியக் கட்டுரையில் அமைந்துள்ள Taxoboxஇல் வரும் கட்டங்கள், தொகு வசதி குறுந்தலைப்புக்கு அடுத்தே அமைந்திருப்பது(தற்பொழுது அவ்வசதி கோடியில் இருப்பதால், பெரிய கட்டுரைகளில் இது நன்றாக இல்லை. படமாற்றங்களுக்கு சிறு இடையூறைத் தருகிறது) போன்றவை. ஆவலுடன்..--த* உழவன் 01:03, 25 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
சில சுய வேலைபளுவால் இதில் நேரம் செலுத்த இயலவில்லை. மென்பொருளை ஒரு முறை நம் கட்டுரை பட்டியலை வைத்து ஓட்டிப் பார்த்தேன்.80% அப்படியே வேலை செய்கிறது. பக்கம் வருவதில் அறிமுகமும், சில மேற்கோட்களும் காணாமல் போகிறது.இதனை திருத்த முயல்கிறேன்.பட்டியலில் இப்பொழுது 41 கட்டுரைகள் உள்ளன.கட்டுரை பட்டியலை முழுமையாக்க உதவுங்கள். ஸ்ரீகாந்த்05:38, 25 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
மொழிபெயர்ப்பு உதவி
நாடுகள் தொடர்பான கட்டுரைகளை மொழிபெயர்க்க இந்தக் கருவி உதவும். 16 தூதரகக் கட்டுரைகள் இதனைக் கொண்டு உருவாக்கினேன். படிமம் மற்றும் பத்திகளை சரிசெய்துவிட்டால் போதும். ஐந்து நிமிடத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்கள் கொண்ட கட்டுரை தயாராகிவிடும். உபயோகிக்க விரும்புபவர்கள் importScript("User:Mahir78/translation helper.js"); தங்களது தோலில் இணைத்துவிட்டால் போதும். இதில் சிகப்பு இணைப்புகளை நீக்கும் வசதியும் உள்ளது. இந்தக் கருவியை மேம்படுத்த உதவுங்கள். -- மாஹிர்08:06, 26 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
Unable to create more than 6 accounts from the same IP address i,.e 10.19.48.38 of the Eastern University of Sri Lanka
Can some one unblock Sri Lanka Eastern University's IP address 10.19.48.38 as we are doing a workshop so it's quite likely people need to create the account. Thanks in advance. --உமாபதி\பேச்சு05:00, 28 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
Umapathy, it is a limitation in wikimedia projects to prevent consecutive account creation within a short period from the same IP to prevent spammers. Unfortunately we cannot bypass it in a short period of time. I suggest creating the accounts after an hour or so. I will check what to do about this limitation.--சோடாபாட்டில் 05
30, 28 திசம்பர் 2010 (UTC)
குறும்பர்களைத் (Spammers) தடுப்பதற்காக அது விக்கிப்பீடியாவில் உள்ள கொடாநிலை அமைவாகும். எனவே மற்ற கணினிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்.
நன்றி சோடாப்பாட்டில், அடுத்தமுறை இந்த வழிமுறையைப் பின்பற்றி பயனர் கணக்குகளை உருவாக்குவோம். இந்நிகழ்வில் கலந்து கொண்டோருக்குப் பயனர் கணக்குத் தேவைப்பட்டால் நாம் உருவாக்கி வழங்கலாம். --உமாபதி\பேச்சு18:14, 28 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
விண்டோஸ் எக்ஸிபி சேவைப் பொதி 3 மூன்றில் ர அகரவரிசையில் படி எழுத்துக்கள் ஒழுங்காகத் தெரிவதையும் பின்னர் வந்த இயங்குதளத்தில் வழு உள்ளதுபோலும் தெரிகிறது. ஒப்பீட்டிற்காக இரண்டு ஆவணங்களை மேல் விக்கியில் பதிவேற்றியுள்ளேன். ரவரிசை பின்வருமாறு, ர், ர், ரா, ரி, ரீ, ரு, ரூ, ரெ, ரே, ரை, ரொ, ரோ, ரௌ.--உமாபதி\பேச்சு18:27, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
Infobox Indian Jurisdiction,இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி
வார்ப்புரு:இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி 49 பக்கங்களில் தான் பதியப்பட்டுள்ளதாக இந்தத் தகவல் சொல்கிறது. அதுபோல் [2] 1161 பக்கங்களில் இருப்பதாக தெரிகிறது. இந்தத் தகவல் உண்மையானால் இன்னும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் தவியில் விடுபட்டுள்ளது. இந்த ஊர்களின் தரவுத்தளம் கனேசிடமிருந்து கிடைக்கப்பெற்றால் (அல்லது வேறுயாரிடமும் உள்ளதா?), மொழிபெயர்த்து தானியங்கி உதவியுடன் தரவேற்றலாமா? ஆவியில் இங்கே(12180), இங்கே(16281) தானியங்கி அனுபவம் உள்ளவர்கள் அதிகம் இருப்பதால் சில நாட்களில் முடித்துவிடலாம்.
கனகு, சுந்தர், இந்த வார்ப்புருவை (கவனிக்க கடைசி j) மேம்படுத்தியிருக்கிறேன். அதனால் ஏற்கெனவே உள்ள வார்ப்புருக்களை இந்த வார்ப்புருவிற்கு வழிமாற்றலாம். சில பாராமீட்டர்கள் (=தமிழ்?) சிகப்பிணைப்பாக உள்ளது. கட்டுரை உருவாக்க வேண்டும் அல்லது திருத்தவேண்டும்.
இங்குள்ள தகவல்படி 4699 ல் தமிழில் 783 கட்டுரைகளே உள்ளன. அதனால் இந்தப் பக்கத்தை ஒலிபெயர்த்தால் சில நூறுகட்டுரைகளாவது தேற்றலாம்.
இவற்றை கருத்தில்கொண்டும், மாவட்டங்கள், மாநிலங்கள், தலைநகரங்களின் தகவல்பெட்டிகளை மேம்படுத்த விக்கிமராத்தான் நாள்(வீட்டிலிருந்தே) ஒன்று அறிவிக்கலாமா?. -- மாஹிர்11:42, 7 சனவரி 2011 (UTC)[பதிலளி]
Encyclopedia of Life curates Wikipedia’s species articles
ஆம், நல்ல வழிகாட்டி. ஏராளமான புரவலர்களைப் பார்க்கும்போது பொறாமையாக உள்ளது. இந்த மூன்றுமாத காலப் போட்டி ஓர் மெய்நிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியாக அமைய வாய்ப்பிருந்தால், விழிப்புணர்வு தூண்டப்படும்.--மணியன்04:34, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
கடந்த கட்டுரைப் போட்டி நடத்தி முடிப்பதில் இருந்த நடைமுறைச் சிக்கல்களை நினைத்தால், உடனே இன்னொரு போட்டி நடத்துவதைப் பற்றி நினைக்க தலை சுற்றுகிறது :) மிக வலுவான, முனைப்பான பங்களிப்பாளர் தளம் இல்லாமல் தற்போதைக்கு இது போன்ற போட்டிகளில் ஈடுபடாதிருப்பது நல்லது என்று நினைக்கிறேன். அது வரை, ஒரு சில விக்கிப்பீடியர் மட்டுமே கூட இணைந்து, முழுக்க இணையத்திலேயே நடத்தி முடிக்கக்கூடிய திட்டங்களை வகுத்து செயற்படுத்துவது நன்றாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு, இறுவட்டுத் திட்டமும், நூலாக்கத் திட்டமும் தமிழ் விக்கியின் பெயர் சொல்லும் திட்டங்களாக காலத்துக்கும் நிலைத்து இருக்க வாய்ப்பு உண்டு. --இரவி11:08, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
இரவி சொல்லுவதை நானும் ஆதரிக்கிறேன். (மலையாள விக்கிப்பீடியா ஊடக வழி விளம்பரங்கள் போன்ற எதிலும் ஈடுபடுவது போன்று தெரியவில்லை) இருப்பினும் கருத்துரு நன்றாக . ஆனால் செயல்படு திண்மை இருக்கிறதா என்பதை மனத்திற்கொண்டே இம்முயற்சியில் இறங்க வேண்டும். (ஆனால் கட்டுரைப் போட்டி என்பது வரவேற்கத்தக்க ஒரு ஆலோசனைதான் :)
ஆம் இரவி, ஏற்கனவே இதைப்பார்த்துவிட்டேன். யாராவது இப்புதியமுறையில் பதிவேற்றியிருந்தால் தெரிவிக்கவும். கிழக்குப் பல்கலைக் கழகப் படங்களையும் இம்முறையில் பதிவேற்றிப் பார்க்கலாம். --உமாபதி\பேச்சு05:20, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
உமாபதி, நான் இம்முறையைப் பயன்படுத்திக் கோப்பைப் பதிவேற்றியுள்ளேன். மிகவும் எளிமையாக உள்ளது. தேவையான வழிகாட்டற்குறிப்புகள் தரப்பட்டுள்ளன. முன்பிருந்த முறையை விட வேகமாகவும் உள்ளது. இடைமுகமும் அழகாக உள்ளது. படிப்படியாக நிரல் மூலமாகவே நம்மை வழிநடத்துகின்றனர். உரிமம் கொடுப்பதூஉம் மிகவும் எளிதாக உள்ளது. எனவே நீங்கள் இதனை கிழக்குப் பல்கலைக்கழகப் படங்களை பதிவேற்ற உறுதியாகப் பயன்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை ஒரே நேரத்தில் எளிமையாகத் தரவேற்ற முடிகிறது. அம்முறையில் ஏற்றப்பட்ட ஒரு கோப்பு உங்கள் பார்வைக்கு... இங்கு!
the server returned an error, we did not understand permission denied என்று வருகிறதே. தவிர பத்துக்குமேற்றபட்ட ஒளிப்படங்களை தேர்வுசெய்யவும் இயலாமல் இருக்கிறது. எனது இணைப்பில் தகராறு இருக்கிறதோ அல்லது வழங்கியில் (சர்வரில் இந்தப் பிரச்சினை இருக்கிறதோ தெரியவில்லை). கிழக்குப் பல்கலைக்கழகப் படங்களைப் மேல்விக்கியில் பதிவேற்ற வேண்டும். --உமாபதி\பேச்சு01:12, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நானும் முயற்சித்தேன். இந்தளவில் உகந்ததில்லை. காரணம் வருமாறு;-
நிகழ்படம்-3mb அரைமணிநேரமாகியும் பதிவேற்றம் ஆகவில்லை. 4நிழற்படங்களில்,3படங்கள்(each 1.25mb) பதிவேறியது. குறைவான இணைய வேகத்தில் சரிவர இயங்காது போலிருக்கிறது.மேலும்,
ஒன்றிற்கு மேற்பட்டப் படங்களில் பகுப்பும், வர்ணனைப் பகுதியும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொரு படத்திற்கும் அக்குறிப்புகளைத் தனித்தனியாக இடவேண்டியுள்ளது.
புகுபதிகை செய்தபின் பக்கமொன்றை சேமிக்கும் போது அப்புகுபதிகை தானாகவே வறிதாகி விடுகின்றது. இதே பிரச்சினை புன்னியாமினுக்கும் நிகழ்ந்தது.காரணம்??? சஞ்சீவி சிவகுமார்
வெக்டார் தோலுக்கு மாறியதிலிருந்து இந்த loss of login session பலருக்கும் அவ்வப்பொது நிகழ்ந்து வருகிறது. ஏதேனும் வழு உள்ளதா என்று மீடியாவிக்கியில் தேடிப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில்04:32, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
விக்கிமீடியா நிதி ஒதுக்கீடுகள்
தற்போது விக்கிமீடியா நிறுவனம் பல்வேறு திட்டங்களுக்கும் தாராளமாக நிதி ஒதுக்கத் தொடங்கி இருப்பதை அறிய முடிகிறது. எடுத்துக்காட்டுக்கு, இந்தியாவின் விக்கிச் சந்திப்புகள் நடத்துக்கும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு. தனியாளாகவோ, கூட்டாகவோ, நாட்டு விக்கிமீடியா அமைப்புகள் மூலமாகவும் இவ்வாறான நிதி ஒதுக்கீடுகளைக் கோரலாம். தமிழ் விக்கிப்பீடியாவுக்கான பல்வேறு திட்டங்களை முறையே தீட்டி நிதி ஒதுக்கீடு கோருவதற்கான தகுந்த நேரமாகப் படுகிறது. இந்திய விக்கிமீடியா அமைப்பின் மூலம் கோருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம் என்பதால் (காட்டாக, இலங்கையில் நடக்கும் தமிழ் விக்கி நிகழ்வுகளுக்கு இந்திய விக்கி அமைப்பு பொறுப்பு ஏற்பதில் சிக்கல் இருக்கலாம்..) தமிழ் விக்கிப்பீடியா சார்பாகவே நிதி ஒதுக்கீடு கோரலாம். குறுந்தட்டு உருவாக்கத் திட்டம், நூலாக்கத் திட்டம், விக்கி வள மையம், தமிழ்நாடு முழுக்க விக்கி அறிமுகக் கூட்டங்கள் போன்றவை சில எடுத்துக்காட்டுத் திட்டங்கள். --இரவி11:02, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]